தமிழகச் சிறைத் துறை

(தமிழக சிறைத் துறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)


தமிழக சிறைத் துறை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சமூகத்தில் உள்ளவர்களை சட்டமுறைக்கு எதிரானவர்களிடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டும், சட்டமுறைக்கு எதிரான செயல்களினால் சிறை வாசத் தண்டனைக்குள்ளானவர்களை மனிதநேயத்துடன் நல்வழிப்படுத்தும் பொருட்டும், சிறைவாசத்துக்குப்பின் விடுதலையின் பொழுது முழுமையான, சமுதாயத்துக்கு உகந்தவராக, அவர் விடுதலை பெறவேண்டும் என்ற நோக்கத்திறகாக உருவாக்கப்பட்டதாகும்.

தமிழகச் சிறைத் துறை
{{{logocaption}}}
அதிகார வரம்பு அமைப்பு
ஆட்சிக் குழுதமிழ்நாடு அரசு
செயல்பாட்டு அமைப்பு
தலைமையகம்
அமைச்சர்
துறை நிருவாகி
 • அமரேஷ் புஜாரி IPS, சிறைத் துறை தலைமை இயக்குநர்
இணையத்தளம்
https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/wicket/page?20

தமிழக சிறைத் துறை, இந்தியக் காவல் பணி, பயிற்சி பெற்ற தமிழக சிறைத் தலைமை இயக்குநரின் மேற்பார்வையில் இயங்குகின்றது.

சிறையின் வரலாறு தொகு

சிறைச்சாலை (பிரிசன்) அ சிறை என்பது சிறைக்கூடம்(ஜெயில்)அல்லது பிராயசித்தம் அல்லது தவறுக்காக வருந்துகின்ற (பெனிடென்டியரி)[1] என்ற பொருளை கொண்ட அல்லது உணர்த்துவற்கான செயல் முறைகள் நடைபெறுகின்ற இடம் ஆகும். சட்டமுறைமைகளுக்கு எதிரான செயல்களினால் தண்டணை பெற்றோர் மற்றும் சட்டவிசாரணையின் தீர்ப்புக்காக காத்திருப்போர் பாதுகாப்புடன் தங்கியிருக்கும் இடம் என்றப் பொருளை உணர்த்துவது ஆகும்.

சுல்தான்களின் ஆட்சி காலத்தில் தொகு

முந்தைய சுல்தான்களின்[1] ஆட்சி காலத்தில் சரியான சிறைச்சாலைகள் பராமரிக்கப்படவில்லை. அன்றைய காலகட்டங்களில் பெரிய கோட்டைகளைய்யும், சிறிய அரண்மணைகளையும் சிறைச்சாலைகளாகப் பயன்படுத்தி வந்தனர்.

அக்பர் காலத்தில் தொகு

அக்பர் காலத்தில் இரண்டு வகையான சிறைச்சாலைகள் [1]உருவாக்கப்பட்டன. ஒன்று மிகக் கொடூரமான குற்ற செயல் புரிந்தவர்களை அடைப்பதற்காகவும், மற்றொன்று சாதரணை குற்றக் கைதிகளை அடைப்பதற்காகவும் உருவாக்கிப் பயன்படுத்தி வந்தனர். முக்கிய பிரமுகர்கள், இளவரசர்கள், அரசர்கள், இராசத் துரோகம் (இராஜத்துரோகம்) புரிந்தவர்கள், கிளர்ச்சியாளர்கள் (கலகக்காரர்கள்) போன்றவர்களை நாட்டின் பல் இடங்களில் எற்படுத்தபெற்ற படையரண்களில் (போர்ட்ரஸ்)[1] அடைத்து வந்தன்ர்.

பிரித்தானியர் (பிரிட்டீஷார்) காலத்தில் தொகு

சிறைக்கென்று முறையாக அமைப்பை, கட்டடத்தை உருவாக்க எத்தனித்தவர்கள் பிரித்தானியர்கள்[1] (பிரிட்டிஷார்) மட்டுமே. அவர்கள் அரசுக் காலத்தில்தான் இதற்கு வடிவம் கொடுக்கப்பட்டது.

சிறைச்சாலை மறு சீரமைவு சட்டம் தொகு

இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினராக இருந்த கோமகன் மெக்கௌலே[1] (லார்ட் மெக்கௌலே) என்பவரின் தலையீட்டால் சிறைச்சாலை மறு சீரமைவு திட்டம்[1] என்ற திட்டம் முதன் முதலில் 1835[1] இல் கொண்டுவரப்பட்டு, இந்திய சிறைச்சாலை, 1894,சட்டம்,[1] என்ற சிறைச்சாலை ஒழுங்குமுறை சட்ட வடிவமாக நாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அக்காலத்தில் குடிமையியல் (சிவில்) 43, குற்றவியல் (கிரிமினல்) 75, இதர வழக்குகள் 68 [1]என்ற வகையில் சிறைக்கூடங்கள் அமைந்திருந்தன. அந்த சிறைக்கூடங்கள் மாவட்ட நடுவரின் (டிஸ்டிரிக்ட் மாஜிஸ்டிரேட்)[1] கட்டுப்பாட்டில் இயங்கி வந்தன.

பெண்களுக்கான முதல் சிறைக் கூடம் தொகு

பெண்களுக்கான இராஜதானி சிறைக்கூடமாக வேலூரில் 1830 இல் அமைக்கப்பட்டிருரந்த சிறைக்கூடமே பெண்களுக்காக தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல்[1] சிறைக்கூடம். சென்னை இராஜதானியாக (மெட்ராஸ் பிரசிடன்சி) தமிழகம் இருந்த காலத்தில் அமைக்கப்பட்டதாகும். 1837 ம்ற்றும் அதற்குப் பின் படிப்படியாக பல் சிறைக்கூடங்கள் 1872[1] வரை பிரித்தானியரால் (பிரிட்டீஷாரால)(எழுப்பப்ட்டன) கட்டப்பட்டன.

முதல் மைய சிறைச்சாலை தொகு

இந்திய சுதந்திரத்திற்குப் பின் (எழுப்ப்பட்ட) கட்டப்பட்ட ஒரே (மத்திய சிறைச்சாலை) மைய சிறைச் சாலை 1981 இல் கட்டப்பட்ட சென்னைப் புழல் சிறைச்சாலை[1] மட்டுமே. ஏனையச் சிறைச்சாலைகளின் வயது 150 ஆண்டுகளுக்கு[1] மேற்பட்டவைகளாகும்.

உச்சபட்ச தீர்ப்பை செயல் படுத்துபவை தொகு

சிறைச்சாலைகள் குற்றவியல் நீதிமுறைமைகளின் நிருவாகத்தில் முக்கியப் பங்கு வகிப்பனவாகவும், அவற்றால் வழங்கப்படும் உச்சபட்ச தீர்ப்புகளை (மரண தண்டணை)[1] செயல்படுத்துவனவாகவும் இயங்குகின்றது.

சிறைத்துறை தொகு

தமிழச் சிறைத்துறை காவல் துறை இயக்குநர் படிநிலையில் உள்ளவரால், சிறைத் தலைமை இயக்குநர் என்ற பொறுப்பின் பெயரால் இயக்கப்படுகின்றது. இவருக்குத் துணைபுரிபவர்கள் மற்றும் அமைப்பு விவரம்-;

ஒவ்வொரு மையச் சிறைச் சாலையும் அதன் கீழ் அமைந்துள்ள சிறைகளான கிளைச் சிறைகளின் (சப் ஜெயில்) மீது அதிகாரம் கொண்டுள்ளன. ஒவ்வொரு கிளைச் சிறையும் சிறைக்கண்காணிப்பாளர் படி நிலைக் கொண்ட உதவி சிறை கண்காணிப்பாளரின் (அசிஸ்டன்ட் ஜெயிலர்) மேற்பார்வையில் இயங்குகின்றன.

சிறைவாசிகளின் சீருடை தொகு

தண்டனைக் குற்றவாளிகளுக்குச் சிறைச் சீருடை சிறைச்சாலையில் வழங்கப்படுகின்றது. ஏனைய சிறைவாசிகளுக்கு அவர்களிடைய சொந்த உடைகளை உடுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றது.

நன்னடத்தைப் பிரிவு தொகு

தமிழக சிறைகளின் நன்னைடத்தைப் பிரிவு தலைமை நன்னடத்தை கண்காணிப்பாளரால், குற்றவாளிகளுக்கு நன்னடத்தையை பயிற்றுவிக்கும் பொருட்டு குற்றவாளிகள் நன்னடத்தைச் சட்டம் ,1958, சட்டத்தின்படி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பொருட்டு செயல்படுத்தப்படுகின்றது. இவருக்குத் துணைபுரிபவர்களாக 12 மண்டல நன்னடத்தை அலுவலர்கள் , கிளைகளில் 96 நன்னடத்தை அலுவலர்கள் [2] செயல்படுகின்றனர்.

குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது, அவர்களின் வாழ்வியல் சூழலை விசாரணை செய்வது, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சம்ர்பிப்பது.

(நீதிமன்றம் அழைக்கின்ற பொழுது நன்னடத்தை அலுவலர் முன்னிலையாதல்(ஆஜர் ஆக) வேண்டும் , நீதிமன்றம் நன்னடத்தை அலுவலரின் மேற்பார்வையின் கீழ் குற்றவாளி இருக்கவேண்டும் என்றத் தீர்ப்பின் அடிப்படையிலும் பின்பற்றபடுகின்றது)

மறுவாழ்வு தொகு

மேலும் நன்னடத்தை அலுவலர்க்ள குற்றவாளிகள் நன்னடத்தையின் பெயரால் அல்லது பிணையத்தின் பெயரால் முன்கூட்டியே சீர்திருத்தப் பள்ளியிலிருந்து விடுதலை பெறும் சிறைவாசிகள், மற்றும் இளஞ்சிறைவாசிகளைக் கண்காணிக்கின்றனர்.

நன்னடத்தையின் பெயரால் விடுதலைபெறும் சிறைவாசிகளின் மறுவாழ்விற்காக நிதியுதவிகளை தேசிய வங்கிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் மூலம் விடுதலையடையும் சிறைவாசிகளுக்கு வழங்கி அவர்கள் வாழ்வை மேம்படுத்த உதவுகின்றது.[2]

முதல் மாநிலம் தொகு

தமிழக மாநிலமே நன்னடத்தைச் சட்டத்தை முதன் முதலில் மெட்ராஸ் குற்றவாளிகள் நன்னடத்தைச் சட்டம், 1936.[2]என்ற சட்டத்தின் கீழ் அமல் படுத்திய மாநிலமாக விளங்குகின்றது.

பார்வையாளர்கள் அனுமதி தொகு

கண்காணிப்பாளருக்கு மனு தொகு

சிறையில் இருக்கும் சிறைவாசிகளை பார்வையாளர்கள் சந்திக்க சிறை கண்காணிப்பாளருக்கு அதற்கென அச்சிடப்பட்ட விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க, தினமும் காலை 8 மணி முதல் 1 மணி வரை சிறைவாசிகளின் பார்வையாளர்கள் சிறை வாயில் அருகே இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். மனுக்கள் பின் தனியாக பெட்டியில் வைத்து கோப்புகாளாக பராமரிக்கப்படுகின்றன.

கல்வியறிவு அற்ற பார்வையாளர்களின் வசதிக்காக மனுக்களை பூர்த்தி செய்ய அரசு சாரா தொண்டு நிறுவன அலுவலர்கள் இலவசமாக நியமித்துக் கொள்ள பார்வையாளர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

பார்வையாளர் சந்திக்க அனுமதி தொகு

பார்வையாளர்கள் பின் சிறைவாசிகளை சந்திக்க வார நாட்களில் அரசு விடுமுறை நாட்களைத் தவிர காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஒவ்வொரு பார்வையாளருக்கும் 30 நிமிடங்கள் வரை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

சிறைவாசிகளின் தன்மைக்கேற்ப பார்வையாளர்கள் அனுமதி[3]
வ.எண் சிறைவாசிகள் சந்திக்க அனுமதிக்கப்பட்ட நாள்
1 காவல் மற்றும்
விசாரணைக் கைதிகள்
(காவற் சிறைவாசிகள்)
திங்கள், புதன்
மற்றும் வெள்ளி
2 தண்டணை பெற்ற கைதிகள்
மற்றும் தடுப்புக் காவல் கைதிகள்
(சிறை வாசிகள்)
செவ்வாய் மற்றும்
வியாழன்


 • சிறைவாசிகளின் உறவினர்கள், நண்பர்கள் சிறைவாசிகளை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
 • ஒரு தடவையில் 3 பேர் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
 • ஒருவாரத்தில் 3 முறை மட்டுமே காவற் கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகளை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
 • தடுப்புக்காவற் கைதிகளை சந்திக்க ஒருவாரத்தில் 2 முறை மட்டுமே அனுமத்க்கப்படுகின்றனர்.
 • மாதத்திற்கு இருமுறை மட்டுமே தண்டணைக் கைதிகளை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர். (15 நாட்களுக்கு ஒரு முறை)

சந்திப்பின் போது சிறைவாசிகளுக்கு அளிக்க பழங்கள், வழுவைகள் (சோப்), வீட்டில் அணியும் உடைகள் போன்றவைகளை பெற்றுக்கொள்ள அனைத்து வகை சிறைவாசிகளுக்கும் பி வகுப்பு தண்டணை குற்றவாளிகளைத் தவிர பொதுவாக அனுமதிக்கப்படுகின்றது.

சந்திப்பின் பொழுது பார்வையாளர்கள் சிறை ஊழியர்களால் சோதித்தப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். பெண்பார்வையாளர்களை பெண் சிறை ஊழியர்கள் பரிசோதனை செய்கின்றனர்.

 • சந்திப்பின்பொழுது குடும்ப விடயங்களை மட்டுமே பேச வேண்டும்.

பிணை விடுவித்தல் தொகு

சிறைவாசிகள் பிணையின் மூலம் அனைத்து நாட்களிலும், சிறை விடுமுறைநாட்களிலும் விடுவிக்கப்படுகின்றனர். பிணைவிடுவிப்பு ஆணை தினமும் மாலை 5 மணி அளவில் நீதிமன்றத் தூதுவரின் மூலம் பெறப்பட்டு அன்றைய நாளிலேயே விடுவிக்கப்படுகின்றனர். 5 மணிக்குப் பிறகுப் பெறப்படும் ஆணைகளுக்கு மறுநாள் காலையில் விடுவிக்கப்படுகின்றனர்.

தண்டனைக் குறைப்பில் விடுவித்தல் (ரெமிசன் ரிலீஸ்) தொகு

சிறைவாசிகளின் தண்டனைகள் அவர்களின் நன்னடத்தை காரணமாகக் குறைக்கப்பட்டு தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்னரே விடுவிக்கப்படுவர். இந்த முறை கடுங்காவல் தண்டணைப் பெற்ற சிறைவாசிகளுக்கும் 90 நாட்களுக்கு மேற்பட்ட சிறைவாசத் தண்டணைக்கு உள்ளானவர்களுக்கும், சிறப்புச் சலுகையாக அளிக்கப்படுகின்றது.

நன்னடத்தைகளை அவர்களின் சிறைவாசத்தின்பொழுது கடைப்பிடிக்கும் ஒழுக்கமுறைகளையும், தொழில் செயல்பாட்டுத் திறனை வைத்தும், இரத்ததானம், தூய்மை போன்ற சிறை விதிகளுக்குட்பட்ட காரணங்களை வைத்தும் நிர்ணயிக்கப்படுகின்றது. தொழில் ஈடுபாடு, நேர்த்தியாக ஆடை அணியும் தன்மை, சிறை நிருவாகத்திற்குத் துணை புரிதல் போன்ற காரணங்களுக்காகச் சிறை கண்காணிப்பாளர், கூடுதல் சிறைத்துறை இயக்குநரின் பரிந்துரையில் விடுவிக்கப்படுகின்றனர்.

மேலும் அரசு கருணை அடிப்படையில் தலைவர்களின் பிறந்தநாளில் அறிவிக்கும் சிறப்பு சலுகையின் படி தண்டனை குறைக்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர்.

தமிழக சிறைகள் தொகு

மையச் சிறைகள் தொகு

பெண்கள் சிறப்பு சிறைகள் தொகு

மாவட்டச் சிறைகள் தொகு

சீர்திருத்தப் பள்ளிகள் (போஸ்டர்ல் ஸ்கூல்) தொகு

புதிய மையச் சிறை தொகு

புதிய மையச் சிறையான புழல் மையச் சிறைச்சாலை தமிழக முதல்வர் மு.கருணாநிதியால்[2] (26.11.2006) நவம்பர் 26, 2006[2]அன்று புழல் நகரத்தில் துவக்கி வைக்கப்பட்டது. இச்சிறைச்சாலை மூன்று சிறைச்சாலைகளை உள்ளடக்கியது.

 • புழல் மையச் சிறைச்சாலை ஒன்று- 1250 சிறையறைகளைக் கொண்டது. தண்டணைத் தீர்ப்பு பெற்றக் கைதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. (கன்விக்டட் பிரிசனர்ஸ்)
 • புழல் மையச் சிறைச்சாலை இரண்டு- 1250 சிறையறைகளைக் கொண்டது. காவற் கைதிகளுக்காக (ரிமான்ட் பிரிசனர்ஸ்) ஒதுக்கப்பட்டுள்ளது.
 • மூன்றாவது புழல் சிறப்பு பெண்கள் சிறைச்சாலை- 500 சிறையறைகளைக் கொண்டது. பெண் கைதிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இச்சிறை வளாகம் சுமார் 212 ஏக்கர் [2] நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணியினை தமிழ்நாடு காவல்துறை வீட்டுவசதி வாரியத்தினால் (தமிழ்நாடு போலிஸ் அவுசிங் கார்பரேசன் லிமிடட்) மேற்கொண்டு முடிக்கப்பட்டது.

ஒளிப்பேழை கலந்தாய்வு (வீடியோ கான்பிரன்சிங்) தொகு

ஒளிப்பேழை கலந்தாய்வு (வீடியோ கான்பிரன்சிங்)[2] முறை இச்சிறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒளிப்பேழை கலந்தாய்வு முறையில் 62 நீதிமன்ற வளாகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் 273 நீதிமன்றங்களுடன், 16 மையங்களில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும். மையச் சிறைச்சாலையின் அனைத்து சிறைப்பிரிவினருக்கும் இப்பயன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால்

 • சிறை வாசிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் பொழுது, கொடுக்கப்படும் பாதுகாப்பு, வாகனச் செலவு தவிர்க்கப்படுகின்றது.
 • சிறைவாசிகள் தப்பிச் செல்லும் வாய்ப்பு முற்றிலும் குறைக்கப்படுகின்றது.

இந்த முறை (01.07.2004) ஜூலை 1, 2004[2]அன்று அமல் படுத்தப்பட்டது.

 • இதுவரை இம்முறையினால் சுமார் 2,41,174 [2]

சிறைவாசிகள் பல நீதிமன்றங்களில் ஒளிப்பேழை கலந்தாய்வு முறையில் காவல் நீட்டிப்பு ஆணைகளை பெற்றுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலை பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள் தொகு

:
ஒரு நூலகம் திறக்கப்பட்டால் ஒரு சிறைச்சாலை மூடப்படும்.
-பேரறிஞர் அண்ணா[4]


சிறைச்சாலை என்ன செய்யும்?
:
இளைஞனாக உள்ளே சென்று, வயோதிகனான பிறகே, சிறையினின்றும் வெளியே வந்தவர்கள் எத்தனை பேர்! திடகாத்திரராகச் சிறை சென்று, கண்மங்கி, கைகால் இளைத்து நடை தளர்ந்து, நரையுடன் வெளிவந்தவர்கள் எத்தனைபேர்! குடும்பத்திலே ஒரு மணிவிளக்காக இருந்துவிட்டுச் சிறையினின்று வெளிவந்தபோது குடும்பத்தவரிலே ஒருவருமில்லையே என்ற கதறும் நிலை பெற்றவர் எவ்வளவு?, பூங்காவை விட்டுப் போய்ச் சிறையிலே வாடி, வெளியே வந்து பாலைவனத்தைக் கண்டு பரிதவித்தவர் எவ்வளவு! சீமானாக இருந்து சிறை சென்று, வெளிவந்தபோது, செப்புக் காசுமின்றி, சென்று தங்க இடமுமின்றி, நாடோடியானவர்கள் எவ்வளவு! கருகிப் போன தங்கம்! கசங்கிய மலர்கள்! வறண்டு போன வயல்கள்! சரிந்த சபா மண்டபங்கள்! மண்மேடான மாளிகைகள்! நரம்பொடிந்த வீணை! நதியற்ற நகரம்! எனத்தக்க நிலை பெற்ற நற்குண நாகங்கள் நம் வணக்கத்துக்கு உரியரன்றோ! வாழ்க அவர் நாமம்!.
-பேரறிஞர் அண்ணா[5]

வெளிப்புற இணைப்புக்கள் தொகு

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழகச்_சிறைத்_துறை&oldid=3791572" இலிருந்து மீள்விக்கப்பட்டது