தெற்கு பீகார் நடுவண் பல்கலைக்கழகம்

தெற்கு பீகார் நடுவண் பல்கலைக்கழகம் என்பது மத்திய பல்கலைக்கழகங்கள் சட்டம், 2009 (பிரிவு 25, 2009) இன் கீழ் இந்திய அரசாங்கத்தால் புதிதாக நிறுவப்பட்ட பதினாறு மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.[2] இந்த பல்கலைக்கழகம் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள கயா நகரின் பஞ்சன்பூரில் அமைந்துள்ளது.[3] இப்பல்கலைக்கழகத்திற்கு 27 பிப்ரவரி 2014 அன்று, மக்களவை தலைவர் மீரா குமார் கயாவில் அடிக்கல் நாட்டினார்.[4] சூலை 2017-ல் பணிகள் முடிந்தநிலையில், பஞ்சன்பூரில் உள்ள 300 ஏக்கர் வளாகத்தில் தற்பொழுது பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகின்றது. இப்பல்கலைக்கழகம் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் 'A' தரப்புள்ளிகள் பெற்ற பல்கலைக்கழகம் ஆகும்.

தெற்கு பீகார் நடுவண் பல்கலைக்கழகம்
வகைநடுவண் பல்கலைக்கழகம்
உருவாக்கம்15/01/2009
வேந்தர்சி. பி. தாக்கூர்
துணை வேந்தர்காமேசுவர் நாத் சிங்[1]
அமைவிடம், ,
இணையதளம்cusb.ac.in

அமைப்பு மற்றும் நிர்வாகம்

தொகு

ஆளுகை

தொகு

இந்தியக் குடியரசுத் தலைவர் பல்கலைக்கழகத்தின் பார்வையாளர் ஆவார். வேந்தர் இந்தப் பல்கலைக்கழகத்தின் சம்பிரதாயத் தலைவராக இருக்கிறார். அதே நேரத்தில் நிர்வாக அதிகாரங்கள் துணைவேந்தரிடம் இருக்கும். நீதிமன்றம், நிர்வாகக் குழு, கல்விக் குழு, கல்வி வாரியம் மற்றும் நிதிக் குழு ஆகியவை பல்கலைக்கழகத்தின் நிர்வாக பிரிவுகளாகும்.

பல்கலைக்கழக பேரவை பல்கலைக்கழகத்தின் உச்ச அதிகாரம் மற்றும் பல்கலைக்கழகத்தின் பரந்த கொள்கைகள் மற்றும் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய மற்றும் பல்கலைக்கழகத்தின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாகும். நிர்வாக சபை என்பது பல்கலைக்கழகத்தின் மிக உயர்ந்த நிர்வாக அமைப்பாகும். கல்விக் குழுவானது பல்கலைக்கழகத்தின் மிக உயர்ந்த கல்வி அமைப்பாகும். மேலும் பல்கலைக்கழகத்தின் கல்விக் கொள்கைகளை ஒருங்கிணைப்பதற்கும் பொது மேற்பார்வை செய்வதற்கும் பொறுப்பாகும். அனைத்து கல்வி விடயங்களிலும் நிர்வாக சபைக்கு ஆலோசனை வழங்குவதற்கு உரிமை உண்டு. நிதிக் கொள்கைகள், இலக்குகள் மற்றும் வரவு செலவுத் திட்டங்களைப் பரிந்துரைக்க நிதிக் குழு பொறுப்பாகும்.[5]

முதல் வேந்தராக இந்திய மக்களவையின் அன்றையத் தலைவர் மீரா குமாரும் முதல் துணைவேந்தராக எச். சி. எசு. ரத்தோரும் பணியாற்றினார். தற்போதைய துணைவேந்தராக காமேசுவர் நாத் சிங் உள்ளார்.[6]

கல்வி

தொகு

பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளில் முதுநிலை மற்றும் இளநிலை கல்வித் திட்டங்களை வழங்குகிறது. தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் நேர்காணல் அல்லது குழு விவாதம் மாணவர் சேர்க்கையின் போது பயன்படுத்தப்படுகிறது.[7] இப்போது பல்கலைக்கழகம் இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் சாத்தியமான தேர்வு மையங்களில் மத்திய பல்கலைக்கழகங்களின் பொது நுழைவுத் தேர்வு என மறுபெயரிடப்பட்ட அகில இந்திய பொது நுழைவுத் தேர்வை நடத்துகிறது.

பள்ளிகள்

தொகு

பல்கலைக்கழகம் பின்வரும் பள்ளிகள் செயல்படுகின்றன:[8]

  1. புமி, உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பள்ளி
  2. மனித அறிவியல் பள்ளி
  3. மொழிகள் மற்றும் இலக்கியப் பள்ளி
    • வெளிநாட்டு மொழிகளுக்கான மையம்
    • இந்திய மொழிகளுக்கான மையம்
  4. கணிதம், புள்ளியியல் மற்றும் கணினி அறிவியல் பள்ளி
  5. ஊடகம், கலை மற்றும் அழகியல் பள்ளி
  6. சமூக அறிவியல் மற்றும் கொள்கை பள்ளி
  7. கல்விப் பள்ளி
  8. சட்டம் மற்றும் ஆளுகை பள்ளி
    • சட்டம் மற்றும் நிர்வாகப் பள்ளி இப்போது மூன்று படிப்புகளை வழங்குகிறது:
      • 5 ஆண்டு ஒருங்கிணைந்த பிஏ எல்எல்.திட்டம்
      • எல்.எல். எம். ஓராண்டு திட்டம் (யுஜிசி 2013 விதிமுறைப்படி)
      • முனைவர் பட்டம்-சட்டம்

9. மருந்தியல் துறை (சுகாதார அறிவியல் பள்ளி)

மேற்கோள்கள்

தொகு
  1. "President Ram Nath Kovind approves appointments of vice chancellors of 12 central universities: Ministry of education". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 13:29 IST. July 23, 2021. https://timesofindia.indiatimes.com/india/president-ram-nath-kovind-approves-appointments-of-vice-chancellors-of-12-central-universities-ministry-of-education/articleshow/84671693.cms. 
  2. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2013-10-02. பார்க்கப்பட்ட நாள் 2013-08-17.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "CUB admission process to begin today". The Times of India.
  4. "Cong-JD (U) clash mars CUB foundation laying ceremony - The Times of India". Timesofindia.indiatimes.com. 2014-02-28. பார்க்கப்பட்ட நாள் 2014-05-29.
  5. Central Universities Act, 2009. 2009-03-20. http://indiacode.nic.in/handle/123456789/2080. 
  6. "Welcome". cusb.ac.in (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.
  7. "Central University of Bihar | Cub.ac.in - Central University of Bihar". Cub.ac.in. 2013-04-23. Archived from the original on 2014-02-09. பார்க்கப்பட்ட நாள் 2014-05-29.
  8. "Home - Central University of Bihar". Cub.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2014-05-29.

வெளி இணைப்புகள்

தொகு