பஞ்சாபில் கல்வி

இந்தியப் பஞ்சாபில் கல்வி

பஞ்சாப் நீண்டநெடிய கல்வி வரலாறு உடையதாகும்.

முதனிலை, உயர்நிலைக் கல்வி

தொகு
 
பஞ்சாபில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்

இந்திய அரசு பதினான்கு அகவை வரையிலான முதனிலைக் கல்விக்குச் சிறந்த அக்கறை செலுத்துகிறது. இது தொடக்கநிலைக் கல்வி எனப்படுகிறது.[1] பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்வதைத் தடுக்க இந்திய அரசு குழந்தைகள் வேலைக்குச் செல்வதையே தடை செய்துள்ளது.[1] என்றாலும் சமூகச் சூழலாலும் பொருளியல் வேறுபாட்டாலும், இலவசக் கல்வியை நடைமுறைப்படுத்துவதும் குழந்தைகள் வேலைக்குச் செல்வதைத் தடுத்து நிறுத்துவதும் கடைபிடிப்பதற்கு அரிதாக உள்ளது.[1] அனைத்து அங்கீகரிக்கப்பட்ட துவக்கநிலைப் பள்ளிகளில் 80% அரசால் அல்லது அரசு சார்ந்து இயங்குகின்றன; இதன்மூலம் நாட்டில்கல்வி வழங்கும் மிகப்பெரும் அமைப்பாக அரசு விளங்குகின்றது.

 
பள்ளிப் பயிற்சியரங்கு

அரசியல் பற்றுறுதி இல்லாமையாலும் வளக்குறைவாலும்,அக்க்கட்டமைப்பு இல்லாமை, மட்டன ஆசிரியர் பயிற்சி, உயர் மாணவர்- ஆசிரியர் விகிதம் உட்பட்ட பல பேரளவு குந்தகங்களைக் இக்கல்விமுறை கொண்டுள்ளது. இந்திய அரசு வெளியிட்ட 2011 ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, 5,816,673 ஆசிரியர்கள் இந்தியாவில் தொடக்கநிலைப் பள்ளிகளில் அடிப்படைக் கல்வி கற்பிக்கின்றனர்.[2] மார்ச் 2012 வரை இந்தியாவில் 2,127,000 மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர்.[3] சிறுவருக்கு 6 முதல் 14 அகவை வரை, அதாவது எட்டாம் வகுப்பு வரை, இந்தியக் கல்வி உரிமைச் சட்டம் 2009 கீழ்[4] அனைவருக்கும் கட்டாயக் கல்வி இலவசமாகத் தரப்படல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.[1]

கல்வித் தரத்தை உயர்த்த அரசுதரப்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக, 994 இல் மாவட்டகல்விப் புத்துயிர்ப்பு திட்டம் முதனிலைக் கல்வியைப் பரவலாக்க உருவாக்கிச் செயல்படுத்தப்பட்ட்து. இத்திட்ட்த்தின் வாயிலாக நடப்பில் உள்ள முதனிலைக் கல்வி சீர்திருத்தி புதுமைப்படுத்தப்பட்ட்து.[5] இத்திட்டம் 160000 புதிய பள்ளிகளையும் 84000 மாற்றுவழிப் பள்ளிகளையும் உருவாக்கி, தோராயமாக 3.5 மில்லியன் குழந்தைகளுக்குக் கல்விதர ஏற்பாடு செய்யப்பட்ட்து. இது பன்னாட்டவையின் யூனிசெஃப் (UNICEF) உதவியுடன் பல பன்னாட்டுக் கல்வித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.[5] கடந்த மூன்றாண்டுகளில் இதன்வழி சில மாநிலங்களில் 93–95% அளவுக்கு மொத்த உயர்சேர்க்கை விகிதம் எட்டப்பட்டுள்ளது.[5] இத்திட்ட்த்தின் கீழ் கணிசமான ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டதோடு பெண்குழந்தைகளும் பேரளவில் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.[5] கல்வியை அனைவருக்கும் பொதுவாக்கும் அனைவருக்கும் கல்வி இயக்கம் எனும் நடப்புத் திட்டம் உலகிலேயே மேற்கொள்ளபட்ட சிறந்த முனைவு ஆகும். இதில் சேர்க்கை கூடியுள்ளபோதிலும் கல்வித் தரம் தாழ்வாகவே உள்ளது.

உயர்நிலைப் பள்ளிக் கல்வி

தொகு
 
பஞ்சாபில் வகுப்பறை

தேசியக் கல்விக் கொள்கை, 1986 சுற்றுச் சூழல் விழிப்புணர்வு, அறிவியல்தொழில்நுட்பக் கல்வி, ஓகம் (யோகா) போன்ற மரபுக் கல்வி ஆகியவற்றை பள்ளி உயர்நிலைக் கல்வியில் புகுத்தியது.[6] 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கின்படி, உயர்நிலைக் கல்வி 14 முதல் 18 வரையிலான அகவையுள்ள 88.5 மில்லியன் சிறுவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்திய உயர்கல்வியின் முதன்மை வாய்ந்த கூறுபாடு என்னவென்றால் சமூகத்தின் வாய்ப்பற்ற மக்களுக்கு கல்வி வாய்ப்பை நல்குவதே எனலாம். தலைசிறந்த நிறுவங்களின் பேராசிரியர்களைக் கொண்டு தொழில்பயிற்சி வழங்கப்படுகிறது. இந்திய உயர்கல்வியின் மற்றுமொரு கூறுபாடு வாழ்க்கைக்காகமாணவ்ர் தேரும் தொழிலைப் புகட்டும் தொழிற்கல்விமுறையாகும்.[7] மிகப் புதிய மற்றுமொரு முயற்சி அனைவருக்கும் கல்வித் திட்டத்தை இடைநிலைக் கல்விக்கும் விரிவுபடுத்தி அனைவருக்கும் அரசு உயர்நிலைக் கல்வித் திட்டம் ஒன்றை உருவாக்கி நடைமுறைப் படுத்தியதாகும்.[8] முதனிலைக் கல்வியில் கவனம் குவித்து மாற்றுத் திறனாளிச் சிறுவருக்கான சிறப்பு ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் 1974 இல் தொடங்கியது.[9] but which was converted into Inclusive Education at Secondary Stage[10] மற்றொரு குறிப்பிட்த் தக்க சிறப்புக் கல்வித் திட்டம் கேந்திரிய வித்யாலயா கல்வித் திட்டமாகும். இது நடுவண் அரசுப் பணியாளர்களுக்காக அவர்கள் நாட்டில் எங்கு வாழ்ந்தாலும் ஒரே பாடத் திட்டம் அமையும்படி உருவாக்கப்பட்ட்து. இதை அரசு 1965 இல் தொடங்கியது. இதில் அடங்கிய அனைத்து நிறுவன்ங்களும் ஒரே பாடத் திட்டத்தின்கீழ் சீரான கல்வியை நட்ய்வண் அரசுப் பணியாளர்கள் எங்கு இடமாற்றம் பெற்றாலும் நாடெங்கிலும் தந்தது.[9]

உயர்கல்வி

தொகு
 
கல்விக் கருத்தரங்கு

பஞ்சாப் பல உயர்கல்வி நிறுவன்ங்கள் அமைந்த மாநிலம் ஆகும். கலை, வாழ்வியல், அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம், கால்நடை மருத்துவம், வணிகம் என பல அறிவுப் புலங்களில் பட்டமும் மேற்பட்டமும் பயிற்றுவித்து உரிய பட்டங்கள் தரப்படுகின்றன. அனைத்து அறிவுப்புலங்களிலும் உயர்நிலை ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் உலகப் பெகழ் வாய்ந்த தாகும். இது பசுமைப்புரட்சிக்குப் பஞ்சாபில் 1960கள்-70கள் கால இடைவெளியில் பெரும்பங்கு ஆற்றியது.

பல்கலைக்கழகங்கள்

தொகு

நடுவண் அரச

தொகு

மாநில அரசு

தொகு

நிகர்நிலை

தொகு

தனியார்

தொகு
 
தாப்பர் பல்கலைக்கழகம்

பஞ்சாபில் தன்னாட்சிக் கல்லூரிகள்

தொகு

பஞ்சாபில் பல கல்லூரிகள் பல்கலைக்கழக நல்கை ஆணையத்தால் தன்னாட்சி உயர்கல்வி நிறுவன்ங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பெயர்பெற்ற கல்லூரிகள் (தொழில்நுட்பம் /தொழில்முறை)

தொகு

பெயர்பெற்ற மற்ற நிறுவனங்கள் (பொது)

தொகு

மருத்துவக் கல்லூரிகள்

தொகு

பஞ்சாபில் 2015 ஆம் ஆண்டளவில், 920 இளநிலை மருத்துவ,அறுவைஇடங்களும் 1,070 பல்மருத்துவ இடங்களும் இருந்தன.[19]

அரசு மருத்துவக் கல்லூரிகள்

தொகு

தனியார் மருத்துவக் கல்லூரிகள்

தொகு

குறிப்பிடத் தக்க ஆளுமைகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Blackwell, 93–94
  2. flashstatistics2009-10.pdf
  3. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on April 17, 2012. பார்க்கப்பட்ட நாள் February 8, 2016.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 2016-07-14.
  5. 5.0 5.1 5.2 5.3 India 2009: A Reference Annual (53rd edition), 215
  6. India 2009: A Reference Annual (53rd edition), 231
  7. Blackwell, 94–95
  8. Microsoft Word – Framework_Final_RMSA.doc பரணிடப்பட்டது 2009-10-07 at the வந்தவழி இயந்திரம். (PDF). Retrieved on 21 March 2011.
  9. 9.0 9.1 India 2009: A Reference Annual (53rd edition), 233
  10. Secondary Education பரணிடப்பட்டது 2009-07-22 at the வந்தவழி இயந்திரம். Education.nic.in. Retrieved on 21 March 2011.
  11. "Panjab University (PU) cannot be considered a centrally-funded university". http://timesofindia.indiatimes.com/city/chandigarh/PU-not-central-university-HC/articleshow/7631126.cms. 
  12. "ਪੰਜਾਬ ਤਕਨੀਕੀ ਯੂਨੀਵਰਸਿਟੀ ਜਲੰਧਰ ਦਾ ਨਾਂਅ ਇੰਦਰ ਕੁਮਾਰ ਗੁਜਰਾਲ ਦੇ ਨਾਂਅ 'ਤੇ ਰੱਖਿਆ". http://beta.ajitjalandhar.com/news/20140723/1/627869.cms#627869. 
  13. "state technical university will have academic control over the colleges in Bathinda, Barnala, Faridkot, Fatehgarh Sahib, Fazilka, Ferozepur, Mansa, Muktsar, Patiala and Sangrur districts.". http://www.tribuneindia.com/2014/20140723/punjab.htm#8. 
  14. "Maharaja Ranjit Singh State Technical University on the campus of Giani Zail Singh College of Engineering and Technology in Bathinda" இம் மூலத்தில் இருந்து 2016-06-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160617064429/http://www.yespunjab.com/punjab/education/item/49330-punjab-to-have-another-technical-university-cabinet-approves-maharaja-ranjit-singh-state-technical-university. 
  15. 15.0 15.1 Apeejay Institute of Management Technical Campus
  16. "Autonomous Colleges - University Grants Commission" (PDF).
  17. "IIM to be set up in Amritsar" இம் மூலத்தில் இருந்து 2016-01-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160127021925/http://indiatoday.intoday.in/education/story/budget-2014-15-iim-to-be-set-up-in-amritsar/1/370962.html. 
  18. "http://www.aryabhattagroup.com". {{cite web}}: External link in |title= (help)
  19. "Admissions for PMET 2015 on hold, High court issues notices". http://www.hindustantimes.com/. 10 September 2015. Archived from the original on 13 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 10 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help); External link in |website= (help)
  20. "Official MCI website". Archived from the original on 2013-06-07. பார்க்கப்பட்ட நாள் 2016-07-15.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாபில்_கல்வி&oldid=3605955" இலிருந்து மீள்விக்கப்பட்டது