வாருங்கள்!

வாருங்கள், சாயீஸ்வரி பத்மசீலன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- இரவி 12:48, 29 சூன் 2015 (UTC)Reply

பயனர் பக்கம் தொகு

உங்கள் பயனர் பக்கத்தை மீள்வித்திருக்கிறேன். பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றிய தகவல்களை மட்டும் தாருங்கள். கட்டுரை எழுதிப் பழகுவதற்கு உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 21:21, 2 சூலை 2015 (UTC)Reply

வணக்கம் சாயீசுவரி, தங்களைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியாவில் இலங்கையில் இருந்து மற்றுமொரு மாணவர் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. உங்கள் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம். உதவி தேவைப்படின், இங்குள்ள பயனர்கள் யாரிடமாவது தயங்காமல் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 04:08, 11 சூலை 2015 (UTC)Reply
உங்கள் பயனர் பக்கம் பயனர்:சாயீஸ்வரி பத்மசீலன். ஒருவருக்கு ஒரு பயனர் பக்கம் தான் அனுமதிக்கப்படும். நீங்கள் புகுபதிகை செய்த பயனர் பெயரிலேயே பயனர் பக்கம் இருக்கலாம். வேறு பெயர்களில் புதிய பயனர் பக்கங்களைத் தொடங்க முடியாது. உங்கள் பாடசாலை பற்றி கட்டுரை ஒன்று எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 23:51, 11 சூலை 2015 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு தொகு

 
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:10, 11 சூலை 2015 (UTC)Reply

விருப்பம் panvila shaaima*** (பேச்சு) 12:45, 16 சூலை 2015 (UTC)Reply

தமிழ் விக்கிக்கு வரவேற்பு தொகு

தமிழ் விக்கிப்பீடியாவுக்கு பள்ளிமாணவரான தங்களை அன்போடு வரவேற்கின்றேன்....!!!!

  வணக்கம்! சாயீஸ்வரி பத்மசீலன் அவர்களே! பள்ளி மாணவர்கள் குழுமம் தங்களை அதன் புதிய உறுப்பினராக ஏற்றுகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது! ஏதேனும் ஐயம் எழுந்தால் இங்கே கேட்கலாம்! நன்றி!

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:27, 13 சூலை 2015 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியாவுக்கு இன்னொரு மாணவியை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கு உங்கள் சிறப்பான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 05:10, 14 சூலை 2015 (UTC)Reply

மற்றொரு இலங்கைப் பயனர். வரவேற்கின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:10, 14 சூலை 2015 (UTC)Reply

என்னை வரவேற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!என் பணி மென்மேலும் தொடர தங்கள் அனைவரின் உதவிகளையும்,அறிவுரைகளையும் பணிவன்புடன் எதிர் பார்க்கின்றேன். panvila shaaima*** (பேச்சு) 12:46, 16 சூலை 2015 (UTC)Reply

பதிப்புரிமை மீறல் படிமம் தொகு

 

வணக்கம், சாயீஸ்வரி பத்மசீலன்!

தமிழ் விக்கிப்பீடியாவில் படிமங்களைப் பதிவேற்ற முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் பதிவேற்றிய படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு பதிவேற்ற இயலாது. நீங்கள் பதிவேற்றும் படிமங்கள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 06:08, 14 சூலை 2015 (UTC)Reply

கட்டுரை வடிவமைப்பு தொகு

கட்டுரைகளில் தலைப்பை மட்டுமே தடித்த எழுத்துகளில் குறிப்பிட வேண்டும். ஏனைய இடங்களில் தடித்த எழுத்துகளைப் பயன்படுத்த வேண்டாம். அவர்கள் என்ற சொல்லாட்சியைப் பெயர்களுக்குப் பின் பயன்படுத்த வேண்டியதில்லை. திரு, திருமதி, செல்வி போன்ற முன்னொட்டுகளையும் பயன்படுத்துவதில்லை. அவற்றைத் தவிர்க்கவும். போதுமான அளவு சான்றுகளை இணைப்பது கட்டுரையின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் உயர்த்த உதவும். மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரி என்ற கட்டுரையில் திருமதி அபேசேகரவின் (அவருடைய சொந்தப் பெயர் தெரிந்தால் இணைத்து விடவும்.) ஆண்டில் குழப்பம் இருந்தது. அதனால், ஆண்டை நீக்கியுள்ளேன். சரிபார்த்து விடுங்கள். இதனையும் பார்க்கவும். விக்கிப்பீடியா:பக்க வடிவமைப்பு கையேடு --மதனாகரன் (பேச்சு) 08:36, 14 சூலை 2015 (UTC)Reply

தங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி அண்ணா!தாங்கள் கூறிய தவறுகளை நிச்சயம் சரிபார்க்க முயல்கிறேன். panvila shaaima*** (பேச்சு) 12:48, 16 சூலை 2015 (UTC)Reply


கையொப்பமிடும்போது --~~~~ என்று இட்டால் திகதியும் சேர்ந்து வரும். --மதனாகரன் (பேச்சு) 08:56, 14 சூலை 2015 (UTC)Reply

இவ்வாறா? panvila shaaima*** (பேச்சு) 12:48, 16 சூலை 2015 (UTC)Reply

பார்க்க: விக்கிப்பீடியா:கையொப்பம் --மதனாகரன் (பேச்சு) 09:16, 14 சூலை 2015 (UTC)Reply

மிக்க நன்றி! panvila shaaima*** (பேச்சு) 12:48, 16 சூலை 2015 (UTC)Reply

கலைக்களஞ்சியக் கட்டுரை தொகு

 

வணக்கம், சாயீஸ்வரி பத்மசீலன்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--மதனாகரன் (பேச்சு) 12:02, 14 சூலை 2015 (UTC)Reply

நன்றி! panvila shaaima*** (பேச்சு) 12:48, 16 சூலை 2015 (UTC)Reply

நீக்கல் தொகு

நீங்கள் தரவேற்றிய படிமங்களை ஏதோ ஒரு காரணத்துக்காக நீக்க வேண்டும் என்றால் அப்பக்கத்தின் ஆரம்பத்தில் {{நீக்குக|ஆசிரியர் வேண்டுகோள்}} என்ற வார்ப்புருவை சேர்த்து விட்டு சேமியுங்கள். நிருவாகிகள் அதனைக் கவனிப்பார்கள்.--Kanags \உரையாடுக 11:11, 14 சூலை 2015 (UTC)Reply

பேச்சுப்பக்கங்களில் கருத்திடல் தொகு

ஆர்வத்துடன் பங்களிக்கின்றமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். பேச்சுப்பக்கங்களில் கருத்திடும் போது மேலுள்ள தலைப்பைச்சேர் என்பதை அழுத்தி, எழுதி பின் சேமிக்கவும். இது பக்கத்தின் அடியிலே கருத்தை இடுவதுடன் கவனிக்கவும் இலகுவாயிருக்கும் நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 12:54, 16 சூலை 2015 (UTC) Reply

தலைப்பை சேர் என்பது என்ன என்று விளங்கவில்லை! panvila shaaima*** (பேச்சு) 12:58, 16 சூலை 2015 (UTC)Reply

பேச்சுப்பக்கங்களிலும் வேறு சில பக்கங்களிலும் தொகு எனும் விசைக்கு அருகில் காணப்படும். --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:02, 16 சூலை 2015 (UTC)Reply

நன்றி! panvila shaaima*** (பேச்சு) 13:04, 16 சூலை 2015 (UTC)Reply

கட்டுரைகைள் தொகு

மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை ஆகிய கட்டுரைகளில் மற்றவர்கள் கட்டுரையை வடிவமைக்கச் செய்த மாற்றங்களைக் கவனித்து அதற்கேற்ப கட்டுரைகளை உருவாக்கித் தொகுங்கள். தொகுப்பதில் சிக்கல் எனில் இதனைப் பயன்படுத்துங்கள். அல்லது, மற்றவர்களிடம் கேட்கலாம் அல்லது இங்கும் கேட்கலாம். இவற்றை வாசித்து மேலதிக விளக்கம் பெறலாம்:

நன்றி. --AntanO 01:54, 19 சூலை 2015 (UTC)Reply

தங்களின் அறிவுரைக்கு நன்றி ஐயா! panvila shaaima*** (பேச்சு) 07:33, 19 சூலை 2015 (UTC)Reply

உளங்கனிந்த நன்றி! தொகு

 

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:47, 25 சூலை 2015 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு தொகு

 

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு தொகு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:25, 16 மார்ச் 2017 (UTC)