பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்/2011
வாருங்கள்!
வாருங்கள், தென்காசி சுப்பிரமணியன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 06:37, 15 சூலை 2011 (UTC)
தகவல்களை இணைத்தல்
தொகுதயந்து, குமரிக்கண்டம் கட்டுரையை மேற்கோள்கள் தந்து விரிவாக்கவும். நன்றி. --Natkeeran 15:20, 16 சூலை 2011 (UTC)
கட்டுரையில் பெயர் விவரம்
தொகுசுப்பிரமணியன், விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுபவரின் பெயர் விவரங்களை கட்டுரையில் இடுவதில்லை. யார் எழுதினார் என்ற விவரம், கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தில் தானாகப் பதிவாகி விடும். எனவே கட்டுரைப் பக்கத்தில் உங்களைப் பற்றிய விவரங்களைத் தரவேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 18:16, 16 சூலை 2011 (UTC)
- இன்னொரு வேண்டுகோள். கட்டுரை இணைப்பு பற்றி இடப்படும் அறிவிப்புகளை நீக்க வேண்டாம், உங்கள் கருத்தினை கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 18:38, 16 சூலை 2011 (UTC)
பதிப்புரிமை
தொகுSodabottleக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகளுக்கு பதிப்புரிமை பெறுவது பற்றி உங்களால் விளக்க முடியுமா ? *
- விக்கிப்பீடியா ஒரு கூட்டு முயற்சி. பலர் செய்யும் பங்களிப்புகள் இணைந்து உருவாவது. ஒரே கட்டுரையில் ஒன்றுக்கும் மேற்பட்டவரின் பங்களிப்புகள் இருக்கின்றன. நாம் செய்யும் பங்களிப்புகள் அனைத்தும் creative commons share alike 3.0 என்ற உரிமத்தின் கீழ் வருகின்றன. அதாவது நாம் செய்யும் அனைத்தையும் பிறர் மாற்றம் செய்யலாம், எடுத்து வணிக நோக்கத்துக்கு விற்கலாம். (விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்தது என்று குறிப்பிட வேண்டும்). அதே போல விக்கிப்பீடியாவில் ஏற்கனவே உள்ளனவற்றை, நாம் மாற்றம் செய்யலாம், எடுத்து விற்கவும் செய்யலாம். இது பற்றிய விரிவான கையேடு en:Wikipedia:Copyrights என்ற பக்கத்தில் உள்ளது. ஏதேனும் ஐயம் இருப்பின் கேளுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 18:58, 16 சூலை 2011 (UTC)
- இரு கட்டுரைகளை இனைப்பதெப்படி?இணைக்கப்படும் என் கட்டுரையில் என் பெயரிடம் பெறுவதெப்படி?
- இரு வகையில் இணைக்கலாம். நீங்களே “குமரிக்கண்டம்” கட்டுரையைத் தொகுத்து உங்கள் உள்ளடக்கத்தை அதில் இடலாம். இல்லையெனில் என்னைப் போன்ற நிருவாகி இன்னொரு வகையில் இணைக்கலாம். (நீங்கள் செய்வது எளிது, நான் இணைப்பது கொஞ்சம் வேலை அதிகம். நீங்களே செய்து விட்டால் வேலை குறைவு). இணைத்த பின்னர், நீங்கள் தான் பங்களித்தீர்கள் என்பது வரலாற்றுப் பக்கத்தில் பதிவாகும். இது குமரிக் கண்டத்தின் வரலாற்றுப் பக்கம். இதில் இக்கட்டுரைக்குப் பங்களித்தவர்களின் பெயர்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.--சோடாபாட்டில்உரையாடுக 19:20, 16 சூலை 2011 (UTC)
கட்டுரையில் பெயரிடல்
தொகுமீண்டும் கேட்டுக் கொள்கிறேன். அருள் கூர்ந்து கட்டுரைகளில் உங்கள் பெயரினை இடுவதைத் தவிருங்கள். விக்கிப்பீடியாவில் இப்பழக்கம் கிடையாது. எக்கட்டுரையிலும் பங்களித்தோர் பெயர்கள் இடம் பெறா.--சோடாபாட்டில்உரையாடுக 06:02, 17 சூலை 2011 (UTC)
- கட்டுரையில் என் பெயரிடல் இனி தவிர்க்கப்படும்.நன்றி.சோடாபாட்டில்உரையாடுக
- மிக்க நன்றி--சோடாபாட்டில்உரையாடுக 08:21, 17 சூலை 2011 (UTC)
வேண்டுகோள்
தொகுவிக்கிப்பீடியாவிற் பங்களிக்கும் உங்களது ஆர்வத்தை வரவேற்கிறேன். எனினும், நீங்கள் குறிப்பிடும் விபரங்கள் உங்களுடைய சொந்தக் கருத்தோ அல்லது குமரிக்கண்டம் போன்ற கட்டுரைகளுக்கான அறிவியல் ஆதாரமற்ற செய்திகளாகவோ இருந்தால், குறித்த கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் அது பற்றிக் கூறுங்கள். மாறாக, நீங்கள் அவற்றைக் கட்டுரையிற் குறிப்பிடுவதாயின், அது குறித்து எழும் கேள்விகளுக்குப் பொருத்தமான பதிலளியுங்கள். இங்கு கட்டுரைகளில் ஊகங்களோ, கற்பனைகளோ இடம்பெறுவது கூடாது. அது பற்றி உங்களுக்கு ஏற்கனவே சோடாபாட்டில் விளக்கியுள்ளார். விக்கிப்பீடியா என்பது குறித்த ஒரு சாராரின் அல்லது சமயத்தினரின் அல்லது இனத்தினரின் அல்லது சாதியினரின் தனியுடைமையன்று.--பாஹிம் 12:48, 17 சூலை 2011 (UTC)
மேற்கோள் சுட்டுதல்
தொகுவணக்கம் தென்காசி சுப்பிரமணியன். விக்கிப்பீடியாவில் நாம் பின்வருமாறு மேற்கோள் சுட்டலாம்.[1]. மேலும் சீரிய முறையில் தகுந்த வார்ப்புருக்களைப் பயன்படுத்தி பின்வருமாறு செய்யலாம் [2]. இதன் குறியீடுகளைப் பார்க்க மூலத்தைப் பார்க்கவும். கட்டுரையின் கீழே மேற்கோள்கள் என்ற பகுதி உருவாக்கி அதன் கீழ் <references /> என்று சேர்க்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் என்ற பக்கத்தைப் பார்க்கவும். உங்கள் பங்களிப்புகள் வரவேற்றக்கப்படுகின்றன. விக்கி முறைகளை அறிய சிறிய காலம் பிடிக்கலாம். தயந்து பொறுமை தந்து பங்களிப்பைத் தொடருமாறு வேண்டுகிறேன். இயன்றவரை நாம் உதவுவோம். நன்றி. --Natkeeran 17:05, 17 சூலை 2011 (UTC)
எ.கா மேற்கோள்கள்
தொகு- ↑ இங்கே மேற்கோளை இடவும்
- ↑ சிலப்பதிகாரம். p. 190.
{{cite book}}
:|first=
missing|last=
(help)
புறவய நோக்கு
தொகுபார்க்க: பேச்சு:குமரிக்கண்டம்
விக்கி நூல்கள்
தொகுதமிழ் விக்கிப்பீடியா என்பது கூட்டாக ஆக்கப்படும் ஒரு கலைக்களஞ்சியம். இது மீடியாவிக்கி மென்பொருளைப் பயன்படுத்துகிறது. இதே முறைமைப் பயன்படுத்தி பிற உறவுத் திட்டங்களும் உள்ளன. அவற்றுள் விக்கி செய்திகள், விக்சனரி ஆகியவை தமிழில் வளர்ச்சி பெற்ற திட்டங்கள். விக்கி செய்திகள் செய்திக் கட்டுரைகளையும், விக்சனரி சொற்களுக்கு பொருள் விளக்கத்தையும் தருகின்றன. இவை போன்றே விக்கி நூல்கள், விக்கி மூலம், விக்கி மேற்கோள் ஆகிய திட்டங்களும் உள்ளன. விக்கி நூல்களில் ஒரு தலைப்பைப் பற்றி ஒரு விக்கி நூலை உருவாக்கலாம். அங்கு நாம் கூடிய தகவல்களை, செய்முறை விளக்கங்களை, எ.காட்டுக்களை விரிவாக இணைக்க முடியும். விக்கி மூலம் என்பது ஒரு காப்புரிமை அற்ற ஆக்கத்தில் மூலத்தை (source) இடும் இடம் ஆகும். எ.கா பழைய தமிழ் இலக்கியங்களை அங்கு சேர்க்க முடியும். அந்த மூலங்கங்களின் உள்ளடக்கத்துக்கு நாம் மாற்றாங்கள் செய்ய இயலாது. விக்கி மேற்கோள்கள் என்பது Quotes சேகரிப்புத் திட்டம் ஆகும். மேலும் சந்தேகங்கள் இருப்பின் தெரிவிக்கவும். --Natkeeran 00:36, 20 சூலை 2011 (UTC)
இயந்திரவியல், தானுந்து தலைப்புகள் பட்டியல்
தொகுஉங்கள் துறை சார் கட்டுரைகளை எழுதி உதவுமாறு வேண்டுகிறேன். நிச்சியம் அதில் அதிக சர்ச்சைகள் இருக்காது. --Natkeeran 23:07, 21 சூலை 2011 (UTC)
அட்டவணை எ.கா
தொகுஎ.கா1 | எ.கா1 |
எ.கா2 | எ.கா2 |
தமிழ் | ஆங்கிலம் |
எ.கா | எ.கா |
ஐ.பி முகவரி பதிந்தது பரவாயில்லை. அதை மாற்ற முடியாது. --Natkeeran 22:36, 25 சூலை 2011 (UTC)
படங்கள் தொடர்பான உதவிகள்
தொகு- விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி
- விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்
- விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/படம் சேர்ப்பது எப்படி?
--Natkeeran 00:01, 28 சூலை 2011 (UTC)
- வணக்கம் சுப்பிரமணியன், படிமம்:மயன் முக்கோன விதி.png என்ற தலைப்பில் நீங்கள் தரவேற்றிய படிமத்தில் சில பிழைகள் உள்ளன. முதலில் முக்கோணம் என்றிருக்க வேண்டும். மற்றும் படத்தில் உங்கள் பெயரைத் தரவேண்டாம். இப்படிமத்தை நீக்க இருக்கிறேன். பிழை திருத்தி மீண்டும் தரவேற்றுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 22:55, 29 சூலை 2011 (UTC)
Kanags, அப்படிமத்தில் எத்தனை பிழைகள் இருக்கின்றன. நீங்கள் கேட்கும் படிமம் எவ்வாறு இருக்க வேண்டும். மேலும் நான் கட்டுரையில் கூறியதிலும் ஏதெனும் மாற்றம் தேவையெனில் கூறவும்.தென்காசி சுப்பிரமணியன்
- படிமத் தலைப்புத் தவிர படிமத்திலும் முக்கோனம் என எழுதப்பட்டுள்ளது. அதனைத் திருத்துங்கள். மேலும் படிமத்தில் உங்கள் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அதனை நீக்குங்கள். இவற்றைத் திருத்தி விட்டு மீண்டும் படிமத்தைத் தரவேற்றுங்கள். கட்டுரையில் உள்ள தகவல்கள் எனக்குப் புதியது. இதனைப் பற்றிக் கருத்துக் கூற முடியாது. செங்கைப் பொதுவன் ஐயா சங்ககால ஆய்வுகள் நடத்தியவர். அவருக்குத் தெரிந்திருக்கலாம்.--Kanags \உரையாடுக 04:54, 30 சூலை 2011 (UTC)
Kanags, தற்போது படிம ஏற்றம் மயன்சரியா என்று பார்க்கவும்.தென்காசி சுப்பிரமணியன்
bose படம்
தொகுநீங்கள் பதிவேற்றிய bose படம், முன்னர் இருந்த ஒரு படத்தை அழித்து விட்டது (பெயர் ஒன்றாக இருப்பதால்). எனவே அதனை பழைய படத்துக்கு மாற்றியிருக்கிறேன். உங்கள் படத்தை இன்னொரு பெயரில் (எ.கா bose1 or bose2) மீண்டும் பதிவேற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 14:30, 4 ஆகத்து 2011 (UTC)
தொடங்கிய கட்டுரைகள்
தொகுபொதுவாக இந்தக் கருவியைப் பயன்படுத்தி நீங்கள் ஒருவர் தொடங்கிய கட்டுரைகளைப் பார்க்கலாம். தற்போது நீங்கள் நாங்கு கட்டுரைகள் தொடங்கி உள்ளதாகக் காட்டுகிறது.
- தென்காசி_பாண்டியர்
- உருளுருவாக்கி_இயந்திரம்
- இயந்திரங்களின்_வகைப்படுத்தல்
- மயன்
--Natkeeran 00:41, 5 ஆகத்து 2011 (UTC)
- இக்கருவிகளின் பட்டியல்கள் இற்றையாவதற்கு சில நாட்களிலிருந்து ஒரு வாரம் வரை ஆகலாம். எனவே நீங்கள் புதிதாக உருவாக்கிய கட்டுரைகள் அவற்றில் சில நாட்கள் கழித்து தானாக இடம் பெறறுவிடும்--சோடாபாட்டில்உரையாடுக 12:02, 5 ஆகத்து 2011 (UTC)
Sodabottle,நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் 12:11, 5 ஆகத்து 2011 (UTC)
பட்டியல்கள்
தொகுநூல்கள் பற்றிய பட்டியல்களில் கட்டுரைகளின் ஆரம்பத்தில் அந்நூல்களை யார் எழுதியது போன்ற விபரங்களைத் தாருங்கள். உ+ம்: புலிப்பாணி நூல்கள் பல உள்ளன எனத் தொடங்கி நூல்களைப் பட்டியலிட்டிருக்கிறீர்கள். புலிப்பாணி என்றால் என்ன என்பதைக் கட்டுரையின் ஆரம்பத்தில் தாருங்கள். யார் இயற்றியது? எக்காலத்தில் இயற்றப்பட்டது போன்ற விபரங்கள் தெரிந்தால் அவற்றையும் தருவது நல்லது. வெறுமனே பட்டியலைத் தருவது நல்லதல்ல.--Kanags \உரையாடுக 21:46, 5 ஆகத்து 2011 (UTC)
- நூல்களைத் தனிக் கட்டுரையாகப் பட்டியலிடாமல், அந்தந்தச் சித்தர்கள் பற்றிய விபரங்களைத் தந்து நூல்களை அவற்றில் பட்டியலிடலாம். உ+ம்: காகபுசுண்டர் நூல்கள் கட்டுரைத் தலைப்பை காகபுசுண்டர் என மாற்றி அவரைப் பற்றிய தெரிந்த தகவல்களைத் தந்து அவர் எழுதிய கட்டுரைகளையும் கீழே படியலிடலாம். அவ்வாறே பெரியவர்கள் பற்றிய கட்டுரைகள் விக்கியில் எழுதப்பட்டுள்ளன. நன்றி.--Kanags \உரையாடுக 21:50, 5 ஆகத்து 2011 (UTC)
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 |
---|
வணக்கம் தென்காசி சுப்பிரமணியன்,
முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |
வார்ப்புரு
தொகுஇப்பயனர் மருத்துவர் என்னும் வார்ப்புருவில் ஒரு படமுள்ளதே அது என்ன? அது மருத்துவ குறியீடு என்றால் ஏன் அவ்வாறு இருக்கிறது?--தென்காசி சுப்பிரமணியன் 16:04, 8 ஆகத்து 2011 (UTC)
நன்றி,கார்த்திகேயன்--தென்காசி சுப்பிரமணியன் 18:11, 8 ஆகத்து 2011 (UTC)
Invite to WikiConference India 2011
தொகுHi தென்காசி சுப்பிரமணியன்,
The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011. But the activities start now with the 100 day long WikiOutreach. Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)
We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |
---|
பார்செக்.png
தொகுஅருமையான படம். இரு சிறு திருத்தங்கள் செய்ய வேண்டுகிறேன்.
1) “முக்கோனவியல்” என்றுள்ளது. “முக்கோணவியல்” என்று மாற்ற வேண்டும்.
2) படத்துக்கு உரிமம் சேர்க்க வேண்டும். (ஆக்குனராகிய நீங்கள் பிறர் அப்படத்தை எவ்வாறு பயன்படுத்த உரிமம் அளிக்கிறீர்கள் என்று தெளிவுபடுத்த. படப் பக்கத்தைத் தொகுத்து {{PD-self}} அல்லது {{Cc-by-sa-3.0}} இரண்டில் ஏதேனும் ஒரு வார்ப்புருவை சேர்த்து விடுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 08:06, 16 ஆகத்து 2011 (UTC)
முதல் நிலைப் பகுதி
தொகுசுப்பிரமணியன், ஒரு = கொண்ட தலைப்புகளை முதல் நிலைப்பகுதியைக் குறிக்க பயன்படுத்துவதற்கு பதில் இரண்டு ( ==) பயன்படுத்துங்கள். ஒரு = தலைப்பு சில காரணங்களால் கட்டுரைகளில் பயன்படுத்தபடுவதில்லை (புதிரான பயன்பாடு :-))--சோடாபாட்டில்உரையாடுக 14:31, 20 ஆகத்து 2011 (UTC)
இன்னொரு வேண்டுகோள்
தொகுபடுவேகமாக வானியல் கட்டுரைகள் வளருகின்றனவே :-). கட்டுரையில் தன்மை நடையைத் (நம்/நாம் இன்னபிற) தவிர்க்க வேண்டுகிறேன். முடிந்தவரை படர்க்கை நடையில் எழுதுங்கள். (நடை impersonal ஆக இருக்க வேண்டும் என்பதால்)--சோடாபாட்டில்உரையாடுக 09:25, 23 ஆகத்து 2011 (UTC)
சக்திச்சொட்டு குறித்தது...
தொகுபேச்சு:சக்திச்சொட்டு என்ற பக்கத்தைப் பார்க்கவும். உங்கள் கருத்தைக் கூறவும். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 09:25, 28 ஆகத்து 2011 (UTC)
ஐயம்
தொகு”சொழாந்தியம் என்பவை இடைக்காலச் சோழர்களால் பயன்படுத்தப்பட்ட கப்பல்களாகும். இவற்றில் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து பசிபிக் தீவுகள் வரையில் சோழர்களால் பயனங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் கூறுகிறார்.”
- எரித்திரியக் கடல் பெரிப்ளஸ் எழுதியவர் இடைக்கால சோழர் காலத்துக்கு முந்தையவர் ஆயிற்றே (கிபி 1ம் நூற்றாண்டு). இது முரணாக இருக்கிறதே?.--சோடாபாட்டில்உரையாடுக 14:05, 5 செப்டெம்பர் 2011 (UTC)
Sodabottle,அதில் கொடுக்கப்பட்டுள்ள மேற்கோளை ஒரு நூலக புத்தகத்தில் இருந்து குறிப்பெடுத்து வைத்திருந்தேன். இவை இரண்டில் ஒன்றாக இருக்கும். அதை நான் சரிபார்க்கிறேன். ஒருவேளை மேற்கோளில் தவறு இருக்கலாம். நாளை தெரிந்துவிடும்.--தென்காசி சுப்பிரமணியன் 14:41, 5 செப்டெம்பர் 2011 (UTC)
அந்த புத்தகத்தை கண்டாகிவிட்டது. தவறு என்னுடையதே. நான் சொழாந்தியம் கட்டுரை எழுதும் போது சோழர்களின் சீனத் தொடர்பு கட்டுரையையும் எழுதியதால் இரண்டிலுள்ள காலத்தையும் மாற்றி எழுதிவிட்டேன். மேலும் அந்த கட்டுரையில் காட்டப்பட்ட இரண்டாம் மேற்கோளும் சங்க காலம் பற்றிய புத்தகமே என்பதையும் கவனிக்கவில்லை. முக்கியமான தவறை சுட்டிக் கட்டியதற்கு நன்றி. பெரிய தவறை தடுத்துவிட்டீர்கள்.--தென்காசி சுப்பிரமணியன் 14:41, 5 செப்டெம்பர் 2011 (UTC)
முதற்பக்க அறிமுகம்
தொகுசுப்பிரமணியன்,
உங்களைப் பற்றிய அறிமுகக் குறிப்பினை முதற்பக்கத்தில் காட்சிபடுத்த விரும்புகிறேன். பின்வரும் இணைப்பில் உங்களைப் பற்றிய குறிப்பினை சேர்க்க வேண்டுகிறேன்.
- முதற் பக்கத்தில் சேர்த்துள்ளேன். அடுத்த இருவாரங்கள் அங்கிருக்கும்--சோடாபாட்டில்உரையாடுக 15:23, 11 செப்டெம்பர் 2011 (UTC)
தேர்ந்தெடுத்த அனைவருக்கும் என் நன்றிகள்.--தென்காசி சுப்பிரமணியன் 15:27, 11 செப்டெம்பர் 2011 (UTC)
குறுகிய காலத்தில் மிகக் சீரிய பங்களிப்புகளை அளித்துத் திக்குமுக்காட வைத்துள்ளீர்கள். எனது மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும்.--இரவி 16:29, 12 செப்டெம்பர் 2011 (UTC)
- தென்காசி சுப்பிரமணியன் தங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் பார்த்து மகிழ்ந்தேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்!--P.M.Puniyameen 05:32, 21 செப்டெம்பர் 2011 (UTC)
திரு. புன்னிய்யாமீன் அவர்களின் பாராட்டுகளுக்கு என் நன்றிகள்--தென்காசி சுப்பிரமணியன் 05:43, 21 செப்டெம்பர் 2011 (UTC)
விக்கிப்பீடியா முதற்பக்கத்தில் உள்ள விக்கிப்பீடியர் அறிமுகத்தில் தங்களைப் பற்றிய தகவலைக் கண்டு மகிழ்ந்தேன். விக்கிப்பீடியாவில் தங்களது பங்களிப்புகள் மேலும் செம்மைபட வாழ்த்துக்கள். --கிருஷ்ணபிரசாத் உரையாடுக 10:47, 24 செப்டெம்பர் 2011 (UTC)
முதற்பக்க கட்டுரை
தொகு- வாழ்த்துகள் சுப்பிரமணியன். உங்கள் முதற்பக்கக் கட்டுரைப் பரிந்துரை நன்றாக உள்ளது. விரைவில் இடம்பெறும். உங்கள் புதிய பணியில் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 21:32, 25 செப்டெம்பர் 2011 (UTC)
நன்றி கனக்ஸ்--தென்காசி சுப்பிரமணியன் 08:58, 3 அக்டோபர் 2011 (UTC)
உ.தெ.
தொகுஉ.தெ. பதக்கத்திற்கு நன்றி சூர்யபிரகாஷ்--தென்காசி சுப்பிரமணியன் 17:11, 12 நவம்பர் 2011 (UTC)
- தென்காசி சுப்பிரமணியன், முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா பகுதி இன்னமும் இற்றைப்படுத்தப்படவில்லை. நீங்கள் குறித்த கட்டுரைகள் பற்றிய குறிப்புக்களை இட முன்னர் அவற்றை முதற்பக்கத்திற் காட்சிப்படுத்துவது சிறந்ததெனக் கருதுகிறேன்.--பாஹிம் 04:18, 23 நவம்பர் 2011 (UTC)
நிர்வாகிகள் மட்டுமே முதற்பக்கத்தை தொகுக்க முடியும். இனிமேல் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்படுத்திய பின்னர் பயனர் பக்கத்திலும், கட்டுரையிலும் உ.தெ. குறிப்புகளை சேர்த்துவிடுகிறேன். உங்கள் ஆலோசனைக்கு நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் 04:57, 23 நவம்பர் 2011 (UTC)
உரிமம்
தொகுவணக்கம். அந்தப் படிமம் தொடர்பான உரிமம் இன்னும் தெளிவு இல்லை. அதற்கான மூலத்தை நாம் சரியாகக் கண்டடைய வேண்டும். --Natkeeran 01:41, 8 திசம்பர் 2011 (UTC)
லட்சுமி சுவாமிநாதன்
தொகுமேற்படி கட்டுரையை உங்கள் பயனர் வெளிக்கு மாற்றியுள்ளேன். வேறு பயனர்களைத் தொகுக்க வேன்டாம் எனக் கூறுவது விக்கிப்பீடியா முறையல்ல. நீங்கள் மட்டும் தொகுக்க வேன்டிய கட்டுரைகளை முதலில் உங்கள் பயனர் வெளியில் தொகுத்து விட்டுப் பின்னர் முறையான தலைப்புக்கு வழிமாற்றுவதே நல்லது. புரிதலுக்கு நன்றி.--Kanags \உரையாடுக 02:22, 12 திசம்பர் 2011 (UTC)
@Kanags //வேறு பயனர்கலைத் தொகுக்க வேன்டாம் எனக் கூறுவது விக்கிப்பீடியா முறையல்ல.// எனக்கு நீங்கள் கூறியது விளங்கவில்லை. நான் அவ்வாறு கூறவில்லையே..--தென்காசி சுப்பிரமணியன் 03:32, 12 திசம்பர் 2011 (UTC)
- கனக்ஸ் அந்த சுருக்கம் தன்னியக்கமாக இணையும்படி தொடுப்பிணைப்பி கருவியில் இருந்தது. இப்போது அச்சொற்களை நீக்கியுள்ளேன். வேலை நடந்துகொண்டிருக்கிறது வாசகம் தொகுத்தல் முரண்பாடுகளைத் தவிர்க்க என்பதால் தற்காலிகமாகப் பிறருக்குத் தெரிவிக்க இப்படியொரு சுருக்கத்தை சேர்த்திருந்தேன். இவ்வாறு பிறரைத் தொகுக்க வேண்டாம் என்பது போலப் பொருள் வரும் என உணரவில்லை. இப்போது அதனை நீக்கியிருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:17, 12 திசம்பர் 2011 (UTC)
- அந்த வரிகளை நீக்கியமைக்கு நன்றி சோடாபாட்டில்.--Kanags \உரையாடுக 07:56, 12 திசம்பர் 2011 (UTC)