வாருங்கள், பரிதிமதி/தொகுப்பு 1!

வாருங்கள் பரிதிமதி/தொகுப்பு 1, உங்களை வரவேற்கிறோம் ! :D
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

வருக! --செல்வா 03:29, 28 ஏப்ரல் 2009 (UTC)

நல்வரவு பரிதிமதி தொகு

பரிதிமதிக்கு தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நல்வரவு. நீங்கள் பங்களிக்க தொடங்கியிருப்பது கண்டு மகிழ்ச்சி. பின்வருவது உங்கள் தகவலுக்கு. நல்நோக்கில் எடுத்துக் கொள்ளவும். நன்றி.


ஆங்கிலத் தலைப்பில் தொடங்கப்பட்டு ஒரு சிறு வாக்கியமே இருந்த Avg. Orbital Speed என்ற பக்கம் நீக்கப்பட்டுள்ளது. சொல்லுக்கு பொருள் தருவதற்கு தமிழ் விக்சனரி (http://ta.wiktionary.org/w )மிகப் பொருத்தம். நீங்கள் அதை கட்டுரையாக்க எண்ணியிருந்தால், குறைந்தது மூன்று வசனங்களாவது சேர்த்தால் நன்று. தலைப்பையும் தமிழில் தர வேண்டும். நீங்கள் தொடங்கிய தலைப்புக்கு இணையாக ஆங்கில விக்கியில் இந்தக் கட்டுரை உள்ளது: en:Orbital speed. தமிழில் சுற்றுப்பாதை வேகம் என்று மாதிரித் தலைப்பில் ஒரு புதுக் கட்டுரையைத் தொடங்கலாம். --Natkeeran 01:26, 30 ஏப்ரல் 2009 (UTC)

Natkeeran அவர்களுக்கு நல்வணக்கம்! தொகு

மிகச்சிறந்த Wikipedia குழுமத்தில் ஒரு அங்கமான விக்கிபீடியாவில் என் பங்களிப்பு ஏற்றப்பட்டது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி. உங்கள் வரவேற்பு மேலும் கட்டுரைகளை எழுதும் ஆவலைத் தூண்டுகிறது. அதன்படி orbital speed குறித்து எழுதியுள்ளேன். விக்சனரியிலும் என் பங்களிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

இருப்பினும், விக்சனரி, விக்கிபீடியாவின் மக்கள் செல்வாக்கு குறித்து எனக்கு ஐயம் உள்ளது. எனக்குத் தெரிந்த பொறுப்பான இணையப் பயனர்களிடம் இவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி தெரிவிப்பது என முடிவு செய்துள்ளேன். நன்றி.-- பயனர்: பரிதிமதி

வணக்கம் பரிதிமதி, Barycenter என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய கட்டுரையை பொது நிறை மையம் என்ற தலைப்பிற்கு மாற்றியுள்ளேன். ஆங்கிலத்தில் தலைப்பிடுவதில்லை.--Kanags \பேச்சு 07:48, 30 ஏப்ரல் 2009 (UTC)


Kanags அவர்களுக்கு நல்வணக்கம்! தொகு

உங்கள் பின்னூட்டம் கிடைத்தது. மேலும் நான் ஏற்றும் கட்டுரைகளைப் பார்த்து உங்கள் திட்டமான பின்னூட்டங்களை அளிக்கவும். நன்றி.-- பயனர்: பரிதிமதி

உங்களுக்கு ஈடுபாடு இருக்கக்கூடிய தலைப்புகள் பட்டியல்கள் தொகு

உங்களுக்கு ஈடுபாடு இருக்கும் என்று கருதிய பட்டியல் சுட்டிகளை மேலே தந்துள்ளேன். இந்தப் பட்டியல்கள் முழுமை பெற்றவை அல்ல. ஏணைய விக்கி ஆக்கங்களைப் போல நீங்கள் மேம்படுத்தலாம்.

உங்களுக்கு ஏதாவது நுட்ப உதவிகள் தேவை என்றால், விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம் விக்கிப்பீடியா:ஆலமரத்தடி நீங்கள் கேள்விகளைக் கேக்கலாம். இயன்றவரை பயனர்கள் உதவ முற்படுவார்கள். நன்றி. --Natkeeran 23:39, 30 ஏப்ரல் 2009 (UTC)

வருக! தொகு

பரிதிமதி, வாருங்கள். உங்கள் வரவு நல்வரவாகுக! உங்களுடைய விக்கிப்பீடியா பணிகள் சிலவற்றைக் கண்டும், உங்கள் பின்புலமும் ஆர்வமும் கண்டு மிக மகிழ்ச்சி. நீங்கள் ஓர் எழுத்தைத் திருத்தினாலும் திருத்தியவர் நீங்கள்தான் என்னும் பதிவுஇருக்கும் தொழில்நுட்பம் விக்கி. உங்களுக்கு ஆர்வமான துறைகளில் நீங்கள் அருமையாக ஆக்கங்கள் செய்யலாம். ஏதும் உதவி வேண்டின் தயங்காமல் கேளுங்கள். புதிதாக கட்டுரை தொடங்கினால் குறைந்தது 2 கிலோ 'பைட் நீளம் இருக்குமாறு கூடியமட்டிலும் பார்த்துக்கொள்ளுங்கள். எங்கெல்லாம் படங்கள் சேர்க்க முடியுமோ அங்கெல்லாம் படங்கள் சேருங்கள். குறைந்தது 3-4 புதிய தகவல்கள் இருக்கவேண்டும். கட்டுரைகளின் தரம் மிக முக்கியம். எழுத்து நடையும் நல்ல தமிழில் தெளிவாக இருக்க முயல வேண்டும். உங்களுக்கு ஆர்வமான, நீங்கள் குறிப்பிட்ட தலைப்புகள் யாவும் எனக்கும் இங்குள்ள பல பயனர்களுக்கும் மிகவும் விருப்பமானதே. உங்கள் நல் ஆக்கங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். --செல்வா 13:37, 1 மே 2009 (UTC)Reply

அருமையான தொகுப்பு தொகு

பரிதிமதி, பறவைகள் கட்டுரையில் தங்களின் தொகுப்பு மிக அருமையாக உள்ளது. எங்கிருந்து எடுத்தீர்கள் இத்தகைய அரிய அற்புதமான பெயர்களை. தங்களின் பங்களிப்புகள் தொடரட்டும்--கார்த்திக் 17:34, 26 மே 2009 (UTC)Reply

பரிதிமதி முக்குளிப்பான் கட்டுரையில் சில மாற்றங்கள் செய்துள்ளேன், உங்களுக்கு என்னுடைய மாற்றங்களில் உடன்பாடில்லை எனில் தெரிவிக்கவும். அருமையா வள்ர்கிறது முக்குளிப்பான்--கார்த்திக் 20:21, 26 மே 2009 (UTC)Reply

தங்களுடைய அண்மைய கட்டுரையான கண்ணாடி விரியன் நான் நெடுநாட்களாக எழுத நினைத்து எழுதாமல் இருந்த ஒன்று. கட்டுரையைத் துவங்கியதற்கு நன்றி பரிதிமதி. எனக்கும் விருப்பமான விலங்கியலில் நீங்கள் கட்டுரைகள் எழுதிவருவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. --சிவக்குமார் \பேச்சு 15:35, 8 ஜூன் 2009 (UTC)

நல்லா போகுது தொகு

நல்லா போகுது ;)--ரவி 10:42, 14 ஜூன் 2009 (UTC)


சில யோசனைகள் தொகு

பரிதி நீங்கள் எழுதிய அயகரம் கட்டுரையை பார்த்தேன். பெயர் மிக்க அருமை. இப்படி பல அரிய தமிழ் பெயர்கள் அகராதிகளிலேயே முடங்கிகிடக்கின்றன. நீங்கள் உயிரியல் தொடர்பாக கட்டுரை எழுதுவது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தாங்கள் தொடங்கு கட்டுரைகளின் தரம் மேம்பட சில யோசனைகளை இங்கு கூறுகிறேன்.

  • ஒரு குடும்பத்திற்கென்று ஒரு குறிப்பிட்ட உப(உட்) தலைப்புகளை கொள்ளுங்கள். உதாரணமாக: உடலமைப்பு, படிவளர்ச்சி, பரவல், சூழியல், இனப்பெருக்கம், உணவு முறைகள் காப்புநிலை, ....
  • முடிந்த அளவிற்கு ஒரு வரி விவரம் கொடுப்பதை தவிர்த்து ஒரு பத்தியாவது கொடுத்தால் படிப்பவர்களின் ஆர்வத்தை தூண்டும்.

வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள் பரிதி. ஆங்கில விக்கியின் உட்தலைப்பு முறையையும் நாம் பின்பற்றலாம்.--கார்த்திக் 18:26, 16 ஜூன் 2009 (UTC)

விக்கிசெய்திகள் தொகு

பார்க்க: Wikinews:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள். நன்றி.--Kanags \பேச்சு 10:29, 27 ஜூலை 2009 (UTC)

வார்ப்புரு ஆக்கம் தொகு

இரண்டொருநாட்களில் தேவையான வார்ப்புருவை ஆக்கித் தருகிறேன். --Terrance \பேச்சு 03:55, 29 ஜூலை 2009 (UTC)

நட்பு விரிவாக்கம் தொகு

 
Mr.Shyamal in Tamilnadu

இவர் தங்களைப்போன்றே பறவையியல் ஆர்வலர். தமிழகம் வந்தவர். உலகக் கறையான்புற்றினைப் பற்றிய படங்களைச் சேகரித்து கொண்டிருக்கும் போது, தற்செயலாகக் கண்டேன். உங்களுக்கு பயன்படக் கூடிய நட்பாகலாம்.  த* உழவன்

தகவலுழவன், இந்த படத்தில் இருப்பவர் சியாமள் இல்லை. இந்த படத்தை எடுத்த்து வேண்டுமெனில் சியாமள் இருக்கக்கூடும். சியாமள் என் நண்பர்தான் பெங்களூரில்தான் உள்ளார்.--கார்த்திக் 18:46, 30 ஜூலை 2009 (UTC)

புதிய திட்டம் தொகு

பரிதி. விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்ட பாலூட்டிகள் திட்டபக்கத்தை பாருங்கள் உங்களின் கருத்துக்களை கூறுங்கள். இத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பு மிகவும் தேவை--கார்த்திக் 19:40, 3 ஆகஸ்ட் 2009 (UTC)

விக்கித் திட்டம் இயற்பியல் தொகு

நீங்கள், செல்வா, புதுப் பயனர் இராஜ்குமார், மணியன், கனகு, டெரன்சு போன்றோர் சேர்ந்து விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இயற்பியல் தொடங்கினால் சிறப்பாக இருக்கும். ஆங்கிலத் திட்டம் en:Wikipedia:WikiProject Physics நன்கு வளர்ச்சி பெற்ற திட்டம். துறை சார்ந்து திட்டங்கள் இருந்தால், வெளியே இருக்கும் துறைசாரைக் கவரவும் உதவும்.

--Natkeeran 23:38, 12 ஆகஸ்ட் 2009 (UTC)

பங்களிப்பாளர் அறிமுகம் தொகு

வணக்கம் பரிதிமதி, விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் இடம்பெறச் செய்யும் வகையில் உங்களைப் பற்றிய சிறு அறிமுகம், புகைப்படம் தந்து உதவுவீர்களா? நன்றி--ரவி 08:47, 5 அக்டோபர் 2009 (UTC)Reply

தமிழ்99 தொகு

வணக்கம் பரிதிமதி. தாங்கள் தமிழ்த் தட்டச்சுக்குப் புதியவர் என்றால் தமிழ்99 முறையில் தட்டச்சு செய்ய பரிந்துரைக்கிறேன். நீண்ட கட்டுரைகளைக் கைவலி இன்றி விரைவாக எழுதிட இந்த முறை உதவும். முயன்று பாருங்கள். உதவிக்கு: தமிழ்99. நன்றி--ரவி 12:10, 5 அக்டோபர் 2009 (UTC)Reply

ஆங்கில மொழி விக்கி மேற்கோள்கள் தொகு

இரவிசங்கர், பேதை உள்ளான் கட்டுரையை நல்ல முறையின் வளர்த்து வருவது கண்டு மகிழ்ச்சி. விரைவில் முழுமை அடையும் என நம்புகிறேன். எனது சில கருத்துக்கள்: கட்டுரையில் பல இடங்களில் ஆங்கில விக்கியில் இருந்து எடுத்தது என மேற்கோள் காட்டுகிறீர்கள். உதாரணமாக <ref> [http://en.wikipedia.org/wiki/Sandpiper ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து]</ref> எனப் பல இடங்களில் குறிப்பிடுகிறீர்கள். இது தேவையற்றது. வேறு மொழி விக்கியில் இருந்து எடுக்கும் கருத்துக்களை அங்கிருந்து எடுத்தீர்கள் என இங்கு காட்டத் தேவையில்லை. அங்கு வேறு நூல்கள், மற்றும் இதழ்கள், இணையத்தளங்களை அவர்கள் ஆதாரமாகக் குறிப்பிட்டால் அவற்றை இங்கேயும் இணைக்கலாம். நன்றி.--Kanags \பேச்சு 06:59, 25 அக்டோபர் 2009 (UTC)Reply

கனகு! நீங்கள் கூறுவது சரி.
உங்கள் அயராத, தளராத பங்களிப்பு, தரக்கண்காணிப்பு என்னை வியப்பிலாழ்த்துகிறது. தொடர்ந்து செய்யுங்கள். --பரிதிமதி 12:48, 25 அக்டோபர்  2009 (IST)

நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா? தொகு

வணக்கம் பரிதிமதி. நீங்கள் விரும்பினால், உங்கள் பெயரை நிருவாகப் பொறுப்புக்கு முன்மொழிய விரும்புகிறோம். இது மேலும் சிறப்பாகவும் இலகுவாகவும் உங்கள் பங்களிப்புகளை நல்க உதவும். நன்றி--ரவி 09:37, 30 அக்டோபர் 2009 (UTC)Reply

ரவி! ஓய்வுக்குப் பின் புத்துணர்வுடன் திரும்பியிருப்பது கண்டு மகிழ்ச்சி. நிருவாகப் பொறுப்புப்புக்கு என்னை முன்மொழிய விரும்புவது குறித்தும் மகிழ்ச்சி. ஆதரவு இருந்தால், என்னால் இயன்றவரை செய்கிறேன். நன்றி.--பரிதிமதி 06:47, 31 அக்டோபர் 2009 (இந்திய நேரப்படி)

மகிழ்ச்சிங்க. இந்தப் பக்கத்தில் உங்கள் ஒப்புதலைத் தெரிவித்தால் மற்ற பயனர்கள் தங்கள் ஆதரவைத் தருவார்கள். நன்றி--ரவி 09:41, 31 அக்டோபர் 2009 (UTC)Reply

வாழ்த்துகள் தொகு

நிருவாக அணுக்கம் கிடைத்தமைக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும். தங்களது பங்களிப்புகளை இப்பொறுப்பு மேலும் இலகுவாக்கும் என்பதில் ஐயமில்லை.--Kanags \பேச்சு 04:59, 7 நவம்பர் 2009 (UTC)Reply

நன்றி கனகு!--பரிதிமதி 10:55, 7 நவம்பர் 2009 (இந்திய நேரம்)

நிருவாக அணுக்கத்துடன் தங்களின் தமிழ் விக்கி பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்--கார்த்திக் 06:56, 7 நவம்பர் 2009 (UTC)Reply

புதுப்பயனர் வரவேற்பு தொகு

பரிதிமதி,நிர்வாக அணுக்கம் பெற்றமைக்கு வாழ்த்துகள் !!

புதுப்பயனரை வரவேற்கும்போது அவரது பேச்சுப்பக்கத்தில் {{subst:புதுப்பயனர்}}~~~~ என்று இடவும். இது நமது சீரான வரவேற்பு வார்ப்புருவை அவரது பக்கத்தில் இடும்.பின்னர் உங்கள் கருத்துக்களை இடலாம்.--மணியன் 06:23, 9 நவம்பர் 2009 (UTC)Reply

நன்றி தொகு

வணக்கம் பரிதிமதி, தங்கள் வரவேற்பு, அறிவுரை மற்றும் பாராட்டுக்கு மிக்க நன்றி.

நன்றி

நன்றி தொகு

தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி பரிதிமதி :)--கார்த்திக் 17:44, 16 நவம்பர் 2009 (UTC) நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே--Hibayathullah 17:32, 2 மார்ச் 2010 (UTC)Reply

தயந்து விரிவாக்கவும் தொகு

--Natkeeran 19:04, 21 நவம்பர் 2009 (UTC)Reply

beachelliots தொகு

beachelliots மற்றும் பலர் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படாமல், கூகுள் மொழிமாற்றக் கருவி மூலம் நேரடியாக கட்டுரைகளைச் சேர்த்து வருகின்றனர். இதனால் பல குழப்பங்கள். எப்படி தீர்வு காண்பது எனச் சிந்திக்க வேண்டும். விவரங்களுக்கு விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கம், பேச்சுப் பக்கம் பார்க்கவும்--ரவி 17:10, 13 டிசம்பர் 2009 (UTC)

2010 செயற்திட்டம் தொகு

வணக்கம் பரிதிமதி:

நீங்கள் நிர்வாகிப் பொறுப்பு ஏற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், ஒரு மீளாய்வும் செய்து, அடுத்த ஆண்டு தொடர்பாக ஒரு திட்டமிடல் செய்வோம். 2010 இல் தமிழ் விக்கிப்பீடியாவின், தமிழ் விக்கித் திட்டங்களில் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான உங்கள் எண்ணக்கருக்களை பகிர்ந்தால் உதவியாக இருக்கும். குறிப்பான செயற்படுத்தக்கூடிய பரிந்துரைகளாக இருந்தால் நன்று.

விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review

--Natkeeran 03:21, 19 டிசம்பர் 2009 (UTC)

வணக்கம் நற்கீரன்! விக்கியை மிகவும் செம்மையாகவும் நேர்த்தியாகவும் செழுமைப்படுத்தி வருகின்றீர்கள். உங்கள் நேரத்திற்கும் உழைப்பிற்கும் நன்றி.

உங்கள் வாழ்த்துதலுக்கு நன்றி. சற்று காலநேரம் (அவகாசம்) அளியுங்கள். என் எண்ணங்களை இடுகின்றேன். -- பரிதிமதி 09:25, 19 டிசம்பர் 2009 (இந்திய நேரம்)

நன்றி. பரிதிமதி. --Natkeeran 15:35, 20 டிசம்பர் 2009 (UTC)

விக்கித் திட்டம் இயற்பியல் தொகு

விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இயற்பியல்

துணைத் துறைகளை சரி பாத்து, முழுமைப்படுத்தவும். நன்றி. --Natkeeran 17:26, 3 ஜனவரி 2010 (UTC)

நன்றிகள் தொகு

பரிதிமதி, உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்கும் எனது மனம் கனிந்த நன்றிகள். இது போல, சேர்ந்து பணியாற்றும் தமிழ் விக்கிப்பீடியர்கள் அளிக்கும் ஊக்கமும், ஒத்துழைப்புமே தவியில் என்னைத் தொய்வடையாமல் வைத்திருக்கிறன. இந்த ஆதரவு என்னைத் தொடர்ந்து நீண்டகாலம் இயக்கும் என்பது எனது நம்பிக்கை. மயூரநாதன் 15:56, 13 ஜனவரி 2010 (UTC)

பிராட்மன் தொகு

வணக்கம் பரிதிமதி, விக்கியில் ஒரு நபருக்கு இரண்டு கட்டுரைகள் இருக்க முடியாது. பிராட்மன், மற்றும் டொன் பிறட்மன் கட்டுரைகளை இணைத்து விடுங்கள். பொதுவான தலைப்பாக டான் பிராட்மன் என்ற தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம். எப்படி இணைப்பது? தற்போதுள்ள டொன் பிறட்மன் கட்டுரையில் மேலதிக தகவல்களைச் சேருங்கள். பின்னர் அதனை "டான் பிராட்மன்" என்ற தலைப்புக்கு மாற்றிவிடுங்கள். ஏனைய தலைப்புகளையும் புதிய தலைப்புக்கு வழிமாற்றுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 20:13, 20 ஜனவரி 2010 (UTC)

தேவைப்படும் கட்டுரைகள் தொகு

விக்கிப்பீடியா:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/தேவைப்படும் கட்டுரைகள் பக்கத்தில் இயற்பியல் குறித்த சில தலைப்புகளையாவது உடனடியாகச் சேர்க்க முடியுமா? நன்றி--ரவி 19:14, 19 பெப்ரவரி 2010 (UTC)

நன்றி தொகு

உங்களுக்குத் தெரியுமா 21 பெப்ருவரி 2010-ல் நான் அளித்த தகவல்களில் தேவைப்படுமிடங்களில் தகுந்த திருத்தங்கள் செய்தமைக்கு நன்றி. தமிழ் இணைய மாநாட்டுக்கு தமிழ் விக்கிப்பீடியா குறித்து கட்டுரை அனுப்பும் எண்ணம் இதுவரை எனக்கில்லை. இனி முயற்சிக்கிறேன். நல்ல கட்டுரைகள் எழுதக்கூடிய பயனர்கள் தமிழ் விக்கிப்பீடியா குறித்து கட்டுரைகளை எழுதி அனுப்ப முன்வர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் ஆலமரத்தடியில் செய்தியைப் பதிவு செய்தேன். தமிழ் விக்கிப்பீடியா குறித்து பலர் கட்டுரை அனுப்பும் பொழுது ஒரு சில கட்டுரைகளாவது தேர்வாகலாம். அதன் வழியாகவும் தமிழ் விக்கிப்பீடியாவிற்குப் பயனர்களும் பங்களிப்பும் அதிகரிக்கலாம். --Theni.M.Subramani 17:41, 21 பெப்ரவரி 2010 (UTC)

எனக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தங்களுக்கு என் இனிய நன்றிகள்... --Theni.M.Subramani 16:56, 23 பெப்ரவரி 2010 (UTC)
விண்மீன் பதக்கம் நன்றாக இருந்தது. நன்றி.--Kanags \உரையாடு 02:41, 2 மார்ச் 2010 (UTC)


தமிழாக்கம் தொகு

கூகிளில்எவ்வாறு தமிழாக்கம் செய்வது? --Msudhakardce 09:42, 9 மார்ச் 2010 (UTC)


nanpere enathu min-anchal

makizhventhan@gmail.com

Pandi@wisc.edu

-- மகிழ்நன் 20:29, 10 மார்ச் 2010 (UTC)

பக்கம் நீக்கப்பட்டது தொகு

தமிழ்நாடு அரசு அறிவிக்கும் முன்பு போட்டிகள் பற்றிய விதிகள் எல்லாம் குறிப்பிடும் கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பக்கங்கள் போட்டி என்னும் பக்கம் இருப்பது முறையாகாது என்பதால் நீக்கியுள்ளேன். இச் செயலின் தேவையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். --செல்வா 05:32, 11 மார்ச் 2010 (UTC)

நன்றி தொகு

  • தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் விக்கிப்பீடியர் அறிமுகம் பகுதியில் என்னைப் பற்றி செய்தி வெளியிட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து வாழ்த்திய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...!--Theni.M.Subramani 17:03, 17 மார்ச் 2010 (UTC)

புதுப்பயனர் வார்ப்புரு தொகு

புதுப்பயனரை வரவேற்க இந்த {{புதுப்பயனர்}} வார்ப்புரு பயன்படும். வெட்டி ஒட்டத் தேவை இல்லை. --Natkeeran 03:21, 23 மார்ச் 2010 (UTC)

நான் அவன் இல்லை தொகு

மதிப்பிற்குரிய நண்பர் திரு.பரிதிமதி அவர்களுக்கு அன்பு வணக்கம்!

தங்கள் மடல் கண்டேன். மகிழ்ந்தேன்! தங்கள் வரவேற்பிற்கு நன்றி!!

ஆனால் சுஜாதா பற்றிய அந்தக் கட்டுரை நான் எழுதியது இல்லை. சுஜாதா என் உளம் கவர்ந்த எழுத்தாளர். ஆகவே அவரைப் பற்றி விக்கிபீடியாவில் படித்துப் பார்த்தேன். படித்தபொழுது அக்கட்டுரையில் இருந்த சில சொற்பிழைகளைத் திருத்தினேன். அவ்வளவுதான்!

ஒருவேளை நான் திருத்தம் மேற்கொண்டதால் அந்தக் கட்டுரை நான் எழுதியது போல் தோற்றமளிக்கிறதோ என்னவோ? அல்லது நான்தான் அந்தக் கட்டுரையை எழுதினேன் என்பதுபோல் தோற்றமளிக்கக் கூடிய வகையில், அந்தக் கட்டுரையில் நான் ஏதாவது செய்திருந்தால் தெரியாமல் செய்த அக்குற்றத்தை அன்பு கூர்ந்து மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!

விக்கிபீடியாவில் என் படைப்புகள் ஓரெழுத்தொருமொழி, பின்னம் ஆகியவை மட்டுமே. அவற்றைப் படித்துப் பார்த்துத் தங்கள் மேலான கருத்துகளைத் தெரிவியுங்கள்!--இ.பு.ஞானப்பிரகாசன் 10:56, 29 மார்ச் 2010 (UTC)

நன்றி தொகு

உங்கள் ஊக்கமொழிகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி. அவை எனது பங்களிப்பை மேலும் சிறப்பாக ஆற்றிட உந்துதல் கொடுக்கின்றன.உங்கள் கட்டுரைகளும் மிகப் பயனுள்ள தலைப்புகளில் அமைகின்றன. ஒத்தக் கருத்துடையோர் கூடி சேர்ந்து செயலாற்றுவது இன்பம் அளிக்கிறது. --மணியன் 05:27, 12 ஏப்ரல் 2010 (UTC)

நான் இரண்டு முறை தான் விக்சனரியில் பங்களித்துள்ளேன். தங்கள் அழைப்பிற்கு பின் எனது பங்களிப்பை சற்று முடக்கி விடுகிறேன் . நன்றி . -- இராஜ்குமார் 07:26, 17 ஏப்ரல் 2010 (UTC)
Return to the user page of "பரிதிமதி/தொகுப்பு 1".