பயனர் பேச்சு:Drsrisenthil/தொகுப்பு 1
வாருங்கள், Drsrisenthil/தொகுப்பு 1! உங்களை வரவேற்கிறோம்.
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
- பங்களிப்பாளர் கவனத்திற்கு
- தொகுத்தல் உதவிப் பக்கம்
- விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி
- விக்கிப்பீடியா:பயனர் பக்கம்
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். கட்டுரைப் பக்கங்களில் உங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.
--Theni.M.Subramani 08:07, 4 மே 2010 (UTC)
வணக்கம், உங்களைப் போன்ற துறைசார் வல்லுநர்கள் விக்கிப்பீடியாவில் பங்களிக்க முன்வருவது மகிழ்ச்சிக்குரியது. ஏதேனும் உதவி தேவைப்படின் தயங்காமல் கேளுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 23:05, 16 ஜூலை 2010 (UTC)
உங்களை தமிழ் விக்சனரியின் வழி அறிந்தேன். விக்கிப்பீடியாவுக்கு வருக என வரவேற்பதில் மகிழ்கிறேன். மருத்துவத் துறையில் எழுத நிறைய உள்ளது. உங்கள் பங்களிப்புகள் மிகவும் பயனுடையதாக அமையும் நல் வாய்ப்பு உள்ளது. பல்கலைக்கழகம் என்னும் வலைப்பதிவில் நீங்கள் எழுதுவதைப் பார்க்கும்பொழுது இங்கு விக்கியில் விளையக்கூடிய பயன் பெரிதென்று எண்ணி மகிழ்கிறேன். வேண்டிய உதவிகள் செய்யக் காத்திருக்கின்றோம். --செல்வா 03:15, 17 ஜூலை 2010 (UTC)
உருசியமொழி
தொகுநீங்கள் உருசிய மொழியும் நன்கு அறிந்தவர்கள் என அறிந்து மகிழ்ச்சி! பயனர் கனகு (Kanags) அவர்களும் நன்கு அறிவார்கள். நான் என் ஐ.ஐ.டி மும்பையில் முதுகலை படிக்கும் பொழுது உருசிய மொழியை என் தொழில்சார்ந்த வேற்று மொழிப் பாடமாகப் பயின்றேன். ஓரளவுக்கு மெள்ள படிக்க இயலும், பேச இயலாது, பேசுவதும் ஒரு 10-20% புரியும். நாளும் இவ்வறிவு தேய்ந்து வருகின்றது (பயன்படாததால்). விக்சனரியில் உருசியச் சொற்களை ஏற்றி அதற்குத் தமிழில் பொருள் எழுதும் பொழுது ஓரளவுக்கு உருசிய சொற்புலத்தை (vocabulary) பெருக்கிக்கொள்ளலாமே என்றும் நினைப்பேன்...நடப்பதில்லை..--செல்வா 03:08, 17 ஜூலை 2010 (UTC)
- நான் தற்பொழுது பெலாருஸ் நாட்டில் தான் வசிக்கின்றேன். --சி. செந்தி 03:40, 17 ஜூலை 2010 (UTC)
விக்சனரியில் உருசிய - தமிழ் பகுதி இல்லை அல்லவா? அதனை உருவாக்கலாமா?
- கட்டாயம்! :) நானும் உதவுவேன். --செல்வா 00:11, 8 ஆகஸ்ட் 2010 (UTC)
மருத்துவ கலைச்சொற்கள்
தொகுஎந்தவொரு விஞ்ஞானிகள் கூடிய நாட்டினை (உதாரணத்திற்கு இரசியா, யேர்மனி) எடுத்துக் கொண்டால் அவர்கள் கற்றது தமது சொந்த மொழியிலே! தற்போது பல்வேறு துறைகளும் தமிழுக்கு மாற்றப்பட்டு வருகின்றபோதிலும் மருத்துவம் மாற்றப்படுவதில் சிக்கல்கள் உள்ளன, முறையான சொற்பத அகரமுதலி உருவாக்கப் படவேண்டும். தமிழ் இணையப் பல்கலைகழகத்தில் உள்ள பெரும்பாலான மருத்துவச் சொற்கள் சரியான பதத்தைக் குறிப்பதில்லை. பெரும்பாலான மருத்துவச் சொற்கள் இலத்தீன் அல்லது கிரேக்க மொழியில் இருந்து பிறந்தவை, எனவே அந்தச் சொற்களின் வேர்(root) அறிந்து மொழி பெயர்க்கும் போது வருங்காலத்தில் அதனைப் படிப்பவருக்கு இலகுவில் புரியும். எனினும் மருத்துவத்தைத் தமிழில் மாற்ற என்னால் முடிந்தவரையில் முயற்சிக்கிறேன். --சி. செந்தி 03:40, 17 ஜூலை 2010 (UTC)
- செந்தி, ஏனோ, இக்குறிப்பை இப்பொழுதுதான் பார்க்கின்றேன். நூறாயிரம் சொற்கள் எனினும், தக்க முறையில், தக்க விளக்கங்களோடு நல்ல தமிழில் எளிமையாகவும் சீராகவும் செய்தல் கூடும். தமிழில் அறிவும், ஆர்வமும், மிக நல்ல மருத்துவ அறிவும் பெற்றவர்கள் மிக ஏராளமாக உலகெங்கும் உள்ளனர். வட அமெரிக்காவிலேயே கூட பன்னூற்றுகணக்கானவர் உள்ளனர். இந்தியாவிலும் இலங்கையிலும் கேட்கவே வேண்டாம், நிறைய பேர் உள்ளனர். ஆனால் இவர்களை முறைப்படி ஈடுபடுத்தி அகரமுதலிகளையும், மருத்துவக் கலைக்களஞ்சியங்களும் உருவாக்க அரசோ மற்ற நிறுவனங்களோ முயலவேண்டும். இங்குதான் தேவை உள்ளது. ஏன் தமிழில் இருக்க வேண்டும், என்ன பயன் என்பதைப் பலரும் உணராததாலேயே இந்நிலை. --செல்வா 18:04, 25 திசம்பர் 2010 (UTC)
- இந்த நிலை வருங்காலத்தில் கட்டாயம் மாற்றப்படவேண்டும், தற்பொழுது ஏனைய துறைகள் தமிழில் படிப்பது என்பதே பெரும்பாலான இளைய சமூகத்தினருக்குத் தயக்கமாக உள்ளது. பி.பி.சியில் "கோரிக்கையற்றுப் போகுமோ தமிழ்க் கல்வி? " எனும் ஒலிக்கட்டுரை பார்த்தீர்களா?, நாம் எவ்வாறு இதனை நிறைவேற்றலாம் என்பதனை சிந்திக்கவேண்டும்.--சி. செந்தி 18:13, 25 திசம்பர் 2010 (UTC)
எப்படி நடந்தது?
தொகுநேற்று மனித எலும்புகள் பட்டியல் என்னும் பக்கத்தை மேம்படுத்தி, அடுத்த தொகுப்பில் வேற்று மொழிகளுக்கான வார்ப்புருக்களை இணைத்தேன், உடனே எல்லாம் சரியாக இருந்தது, ஆனால் இன்று உள்ளடக்கம் முற்றிலும் மாற்றப்பட்டு உள்ளது, யாராவது மாற்றினார்களா என்றால் அதுதான் இல்லை, எனது நேற்றைய தொகுப்பிலேயே உள்ளடக்கம் மாற்றப்பட்டுள்ளது, அதுவும் அரிசில் கிழாரைப் பற்றி நான் புகுத்தவில்லையே......எப்படி நடந்திருக்கும்...?
தொகுப்பு : 21:16, 6 ஆகஸ்ட் 2010 இல் நிலவும் திருத்தம்
ஓரே மாயமாக உள்ளது..!--சி. செந்தி 23:48, 7 ஆகஸ்ட் 2010 (UTC)
மறு: நன்றி
தொகுநல்லது மரு.செந்தி. நீங்கள் பயனுள்ள கட்டுரைகளை ஆக்கி வருவது கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள். -- சுந்தர் \பேச்சு 02:54, 6 செப்டெம்பர் 2010 (UTC)
வெற்றுப் பகுப்புகள்
தொகுஏற்கனவே கட்டுரைகள் இருப்பனவற்றுக்கே பகுப்புகள் உருவாக்குவது நன்று. வெற்றுப் பகுப்புகள் நல்லதல்ல. ஆனால் ஒரு பக்கத்தில் பகுபுக்கள் பெயர்களை பின்வருமாறு ஒழுங்கு செய்யலாம். பகுப்புகள உருவாக்கிப் பின்னர் உள்ள கட்டுரைகளைச் சேர்ப்பது என்றால் நான் மேற்கூடிய கருத்தை கருத்தில் எடுக்க வேண்டாம். நன்றி.
- நோய்கள்
- கண் நோய்கள்
- * கண் குறைபாடுகள்
- இருதய நோய்கள்
--Natkeeran 14:50, 10 அக்டோபர் 2010 (UTC)
- நன்றி. நோய்கள் பகுப்புகள் முக்கியமானவை, விரிவாக்கப்படக்கூடிவை. எனவே அப்படியே செய்யலாம். --Natkeeran 14:58, 10 அக்டோபர் 2010 (UTC)
முதற்பக்க அறிமுகம்
தொகுவணக்கம் செந்தில். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/Drsrisenthil பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி --இரவி 18:52, 21 நவம்பர் 2010 (UTC)
- முதற்பக்கத்தில் அறிமுகம் இணைக்க விரும்பியதற்கு நன்றி, எனது கட்டுரைகளின் எண்ணிக்கை குறைந்தது ஐம்பது ஆகியவுடன் சேர்க்கலாம் என்று நினைக்கின்றேன்..தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.--சி. செந்தி 21:20, 23 நவம்பர் 2010 (UTC)
ஐயம் பற்றி
தொகு(என் பயனர் பேச்சுப் பக்கத்தில் உங்களுக்காக் மதிவு செய்த குறிப்பு) ஒரு குழந்தையின் உயிரைக் காக்க, தக்க பண்புகள் மட்டுமே உடைய மற்றொரு குழந்தையைப் தேர்வு முறையில் புறக்கருவுறச்செய்து அக்குழந்தையிடமிருந்து (அல்லது தொப்புள் கொடியில் இருந்து?) பெறும் உயிரணுவைக்கொண்டு நோயுற்ற குழந்தையின் உயிரைக்காக்கும் மருத்துவ முறை அல்லவா இது. ஆகவே எளிமையாக savior sibling என்பதை உயிர்காக்கும் உடன்பிறப்பு என்றும், savior sibling treatment என்பதை உயிர்காப்பு உடன்பிறப்பு அணுமருத்துவம் எனலாம். உங்கள் குறிப்பை இப்பொழுதுதான் பார்த்தேன். காலத்தாழ்வுக்கு வருந்துகிறேன். --செல்வா 17:50, 25 திசம்பர் 2010 (UTC)
பாராட்டுகள்
தொகுஉயிர்காப்பு உடன்பிறப்பு என்னும் கட்டுரையை மிக அருமையாக ஆக்கியுள்ளீர்கள், செந்தி!. இதுவே இத்தலைப்பில் தமிழில் எழுதிய முதல் கட்டுரை என்று எண்ணுகின்றேன்! நெஞ்சார்ந்த பாராட்டுகள். நான் 10 நாட்களாக சான் பிரான்சிசிக்கோவில் இருந்ததால் உடன் பார்த்து கருத்துரைக்க முடியவில்லை. சிறுசிறு திருத்தங்கள் செய்யலாம். செய்யவும் உள்ளேன். --செல்வா 02:06, 5 சனவரி 2011 (UTC)
- புதுமையான செய்திகளை உள்ளடக்கிய அருமையான கட்டுரை! மேன்மேலும் இது போன்ற பங்களிப்புகள் தொடர வாழ்த்துகள்! --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 06:41, 5 சனவரி 2011 (UTC)
- நன்றி செல்வா, கார்த்திகேயன். உங்கள் பாராட்டுக்கள் புத்துணர்வை அளிக்கிறது.--சி. செந்தி 19:55, 5 சனவரி 2011 (UTC)
படப் பிழை
தொகுசெந்தில் ஆலமரத்தடியில் நடக்கும் விக்கிப்பீடியா இலச்சினை குறித்த உரையாடலைத் தற்போது பார்க்கவும். மேலும் ஒரு பிழை உள்ளது.
செந்தில் PNG படத்தில் கலைக்களஞ்சியம் என்ற சொல் திருத்தப்படாமல் உள்ளது. அதையும் திருத்திக் கொடுத்து விடுங்களேன்! அப்படத்தை இறுதி செய்து பதிவேற்றிவிடலாம்.
- செந்தில் இறுதியாக இவ்விலச்சினை தேர்வு செய்யப்பட்டுள்ளது. http://vladimiranichkin.com/tawiki/Wikipedia-logo-v2-ta.svg ஆனால், இவ்விலச்சினையில் கட்டற்ற கலைக்களஞ்சியம் எனும் சொற்றொடர் சற்றே தெளிவில்லாமல் உள்ளது. எனவே தயவுசெய்து அச்சொற்றொடருக்கு மட்டும் ஓரிரண்டு புள்ளிகள் கூட்டி தெளிவு படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். (உங்களுக்கு அதிகம் தொல்லை தருகிறேன் என்று நினைக்கிறேன்!)
--சூர்ய பிரகாசு.ச.அ. 13:22, 27 பெப்ரவரி 2011 (UTC)
பதக்கம்
தொகுஅரிய பணிகள் பதக்கம் | ||
தமிழ் விக்கிப்பீடியா சின்னத்தினை இற்றைப்படுத்துவதில் உங்கள் பெரும்பணியைப் பாராட்டி இப்பதக்கத்தை தங்களுக்கு வழங்குகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:40, 7 மார்ச் 2011 (UTC) |
- நன்றி சோடாபாட்டில் :)
பதக்கம்
தொகுசிறப்புப் பதக்கம் | ||
நான் கொடுத்த அத்தனை தொந்தரவுகளையும் பொருத்துக் கொண்டு, அழகான இலச்சினையை வடிவமைத்துக் கொடுத்ததற்கு உங்களுக்கு இச்சிறப்புப் பதக்கம் மருத்துவரே!!! சூர்ய பிரகாசு.ச.அ. 18:00, 31 மார்ச் 2011 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
நன்றி சூர்ய பிரகாசு! :) --சி. செந்தி 18:17, 31 மார்ச் 2011 (UTC)
முதற் பக்க அறிமுகம்
தொகுசெந்தி, முதல் பக்க பங்களிப்பாளர் அறிமுகத்தில் இடம் பெற உங்களைப் பற்றிய குறிப்புகளை பின்வரும் பக்கத்தில் சேர்க்க வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:52, 14 ஏப்ரல் 2011 (UTC) செந்தி, யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். பெலருசில் மருத்துவப் பட்டமும் பின்னர் இதயவியலில் சிறப்பு மருத்துவமும் பயின்று உள்ளார். மே 2010 இல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகின்றார். மருத்துவம், உயிரியல், வானியல் தொடர்பான கட்டுரைகள் ஆக்கம், உயிரியல் மற்றும் மருத்துவக் கலைச்சொல்லாக்கம், உரைதிருத்தம், படங்கள் உருவாக்கி இணைத்தல், கட்டுரை விரிவாக்கம் போன்ற பணிகளைச் செய்து வருகின்றார். தமிழ் விக்சனரியில் உருசியச் சொற்களைப் பதிவேற்றம் செய்வதிலும் மருத்துவக் கலைச்சொற்கள் திருத்தத்திலும் ஈடுபட்டு வருகின்றார். உயிர்ச்சத்து, கடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறி, இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய், விண்மீன் உயிரி, பெரிபெரி, பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில. தமிழ் மூலம் மருத்துவக் கல்வியை ஊக்குவிப்பதும், மருத்துவத்தைத் தமிழ் மொழி மூலம் அறிந்துகொள்ள தமிழ் விக்கிபீடியாவை ஒரு முதன்மைத் தளமாக உருவாக்குவதும் இவரின் குறிக்கோள்கள்.
- நிச்சயம் விரைவில் தருகின்றேன்...:)--சி. செந்தி 12:01, 15 ஏப்ரல் 2011 (UTC)
- செந்தி அடுத்தது உங்களை முதற்பக்கத்தில் காட்சிபடுத்தும் திட்டம் இருப்பதால் :-) இதைக் கொஞ்சம் கவனிக்க வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 03:48, 11 மே 2011 (UTC)
- 2 - 3 நாட்களுக்குள் தருகின்றேன்.:)--செந்தி//உரையாடுக// 18:32, 11 மே 2011 (UTC)
- நன்றி செந்தி. இதனை இறுதி வரைவாக எடுத்துக் கொண்டு முதற்பக்கத்தில் இட்டுவிடவா?--சோடாபாட்டில்உரையாடுக 18:16, 13 மே 2011 (UTC)
- பிழைகள் ஒன்றும் இல்லையா? அப்படியாயின் இட்டுவிடுங்கள்.--செந்தி//உரையாடுக// 18:21, 13 மே 2011 (UTC)
- முதற்பக்கத்தில் இட்டுவிட்டேன்--சோடாபாட்டில்உரையாடுக 18:58, 13 மே 2011 (UTC)
- :) நிறைய இருக்குமாப்போல தோற்றமளிக்கின்றது, பரவாயில்லையா?--செந்தி//உரையாடுக// 19:06, 13 மே 2011 (UTC)
- சரியான அளவு தான். அதற்கு மேலிருக்கும் செய்திகள் பகுதி சற்று நீளமாகியுள்ளதால், இது கொஞ்சம் கீழே வந்துள்ளது போல ஒரு தோற்றம் உருவாகியுள்ளது. அது இரண்டொரு நாட்களில் குறைந்துவிடும் போது சரியாகிவிடும்--சோடாபாட்டில்உரையாடுக 19:23, 13 மே 2011 (UTC)
தமிழ்ச் சொற்கள் தேவை
தொகுபேச்சு:புற்றுநோய் இல் இருக்கும் சொற்களுக்குச் சரியான தமிழ்ச்சொற்களை சொல்வீர்களா? அத்துடன் biopsy என்ற சொல்லுக்கும் சரியான தமிழ்ச் சொல் தேவை. It is the medical removal of tissue from a living subject to determine the presence or extent of a disease என்ற கருத்தில் வரும்போதும், A specimen obtained from a biopsy என்ற கருத்தில் வரும்போதும் அதனை எவ்வாறு வேறுபடுத்திக் காட்டலாம்? A specimen obtained from a biopsy is also called biopsy தானே?--கலை 00:22, 17 ஏப்ரல் 2011 (UTC)
பேச்சு:புற்றுநோய் : இங்கு பதில் இட்டுள்ளேன். biopsy என்பதற்கு துணித்தாய்வு என்று விக்சனரியில் உள்ளது, ஆனால் அது எதைக் குறிப்பிடுகின்றது என்பது தெரியவில்லை. இந்தி விக்கிபீடியாவில் அவர்கள் "இழையச் சோதனை" என்று மொழிபெயர்த்துள்ளார்கள். செல்வா போன்றவர்களிடம் கேட்டுப்பார்க்கலாம்.--சி. செந்தி 19:22, 17 ஏப்ரல் 2011 (UTC)
Biopsy என்பதை இழையப் பிரிப்பு, இழையப் பிரிபொருள், இழைய எடுப்பு என்றவாறு பயன்படுத்தினால் என்ன?--பாஹிம் 01:32, 18 ஏப்ரல் 2011 (UTC)
- துணித்தல் என்றால் அறுத்தல் என்று பொருள். துணி (ஆடை) என்பதே அறுக்கப்பட்டது என்னும் பொருளிலேயே முதலில் தோன்றியது. உடலில் அணியும் துண்டு என்பது, வேட்டி என்பதும் வெட்டுதல் பற்றியே பொருள். தமிழில் அறுவை என்றாலே ஆடை. ஆகவே துணித்தாய்வு என்பது அறுத்தெடுத்து ஆய்வது என்னும் பொருளில் உருவாக்கப்பட்டிருக்கும். biopsy என்பதை உயிர்ச்செதுக்கு (உயிருடலத்தின் செதுக்கு) அல்லது உயிரகச் செய்துக்கு எனலாம். நோய்தேர்வதற்காகச் செய்யும் உயிரகச் செதுக்கு. வேறுவிதமாக நோய்தேர் செதுக்கு என்றும் சொல்லலாம். மருத்துவ வழக்கில், தக்க சூழலில் வெறும் செதுக்கு என்றாலே போதும். Biopsy என்பதைத் துணித்தாய்வு என்பது மிகவும் பொருத்தமானதாகவே எனக்குத் தோன்றுகின்றது. ஆனால் துணித்தல் என்றால் அறுத்தல் என்று முதலில் விளக்கம் தர வேண்டும். அது தவற்கு இல்லை. --செல்வா 02:37, 18 ஏப்ரல் 2011 (UTC)
"துணித்தாய்வு" என்பதற்கான விளக்கம் இப்போதுதான் புரிந்தது. நன்றி செல்வா. 'இழையச் சோதனை', 'இழையப் பிரிப்பு', 'இழையப் பிரிபொருள்', என்பவையும் பொருத்தமனவையாகவே இருக்கின்றது. அவை குறிப்பிட்ட ஒரு பொருளில் வருகின்றதுபோல் தெரிகின்றது. ஆனால் "உயிர்ச்செதுக்கு" அல்லது "உயிரகச்செதுக்கு" என்பது 'ஒரு நோயை ஆய்ந்தறிவதற்காக உயிருடலத்தில் இருந்து செதுக்குதல்', 'உயிருடலத்தில் இருந்து செதுக்கி எடுக்கப்படும் மாதிரி' ஆகிய இரண்டுக்குமே பொருந்தி வருவதுபோல் தோன்றுகின்றது. எனவே "உயிர்ச்செதுக்கு", "உயிரகச்செதுக்கு" ஆகிய இரு சொற்களில் ஒன்றைத் தெரிவு செய்வோமா? எந்தச் சொல் என்பதை இறுதியாக முடிவு செய்தால், அதனைப் பயன்படுத்தலாம். "உயிரகச்செதுக்கு" என்பதைக் கொள்ளலாமா?--கலை 13:34, 18 ஏப்ரல் 2011 (UTC)
நன்றி செல்வா, துணித்தாய்வு என்பது நன்றாக உள்ளது, ஏற்கனவே எவராலோ உருவாக்கப்பட்டுள்ளது, ..நன்றி பாஹிம், நீங்கள் கூறிய இழையப் பிரிப்பு, இழையத்தைப் பிரிப்பது போன்ற அர்த்தம் உண்டாக்கின்றது, இழைய எடுப்பு என்பதை சந்தர்ப்பத்துக்கேற்றவாறு உபயோகிக்கலாம்..
- பொதுவான சொல் எனும்போது நானும் உயிரகச்செதுக்கு என்பது நன்று. துணித்தாய்வு, உயிரகச்செதுக்கு இரண்டையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டு: excisional biopsy = துணித்தாய்வு; incisional biopsy = உயிரகச்செதுக்கு (en:biopsy) .--சி. செந்தி 16:06, 18 ஏப்ரல் 2011 (UTC)
நன்றி செந்தி. மீண்டும் ஒரு கேள்வி. நான் biopsy என்பதற்கான தமிழ் கட்டுரையை எழுதினேன். எனவே தலைப்பை உயிரகச்செதுக்கு என்றே இட்டேன். இப்போது "excisional biopsy", "incisional biopsy" யை எவ்வாறு அழைப்பது? "துணித்தாய்வு" என்பது அறுத்தல் எனப் பொருள் தருவதாயின், excisional, incisional இரண்டுக்கும் பொருந்தும்தானே? அவ்வாறே உயிரகச்செதுக்கும் இருக்கும். Excisional என்பது முழுமையாக அகற்றல் என்ற பொருளையும், incisional வெட்டி, அல்லது கீறி சிறிய பகுதியை மட்டும் அகற்றல் என்ற பொருளையும் தர வேண்டும்.--கலை 22:54, 18 ஏப்ரல் 2011 (UTC)
- சிக்கல்தான், செல்வா கூறியது போல துணித்தல் என்றால் அறுத்தல், அதாவது முழுமையாக அறுத்தெடுத்தல், எனவே excisional biopsy = துணித்தாய்வு, மற்றையது சிறிது துண்டை மட்டும் "செதுக்குதல் (சிற்பம் செதுக்குதல் போல)" incisional biopsy = உயிரகச்செதுக்கு என்று கருதலாம்.--சி. செந்தி 09:06, 20 ஏப்ரல் 2011 (UTC)
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல்
தொகுவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல் திட்டத்தில் உங்கள் பெயரையும் இணைக்கலாமே?--கலை 23:04, 19 ஏப்ரல் 2011 (UTC)
- ஏற்கனவே எனது முழுப்பெயரில் இணைக்கப்பட்டு உள்ளது (சி.செந்திவேல்ராஜ்)--சி. செந்தி 09:06, 20 ஏப்ரல் 2011 (UTC)
- Thrombosis தொடர்பான இந்த கலைச் சொல்லாக்கத்தையும் பார்த்து உங்கள் கருத்தைக் கூறுங்கள்.--கலை 00:02, 3 மே 2011 (UTC)
- thrombo-என்னும் prefix உள்ள அனைத்துச் சொற்களும் சேர்த்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஓரிரு நாளில் எனது கருத்தைக் கூறுகின்றேன்.--செந்தி//உரையாடுக// 00:14, 3 மே 2011 (UTC)
கலைச்சொற்கள் தத்தல்
தொகுவணக்கம் செந்தி. நீங்கள் கலைச்சொல் பக்கங்களுக்கு இடையே பயணிக்க ஒரு மாதிரி முயற்சி ஒன்றைச் செய்து இருந்தீர்கள். விக்சனரி போலனுறு இங்கு அகரவரிசையில் கலைச்சொற்கள் ஒழுங்குபடுத்த வேண்டிய தேவை இராது. துறைவாரியாக செய்வது நன்றே. அதற்கு ஒரு எளிமையான தத்தல்களை செயற்படுத்தி உள்ளேன். உங்களுக்கு ஏற்புடையது என்றால் தெரிவிக்கவும். --Natkeeran 01:07, 6 மே 2011 (UTC)
- "ஆய்ந்து முடிவடைந்த சொற்கள் அகரவரிசைப்படி ஆவணப்படுத்தப்படும்" இதைக் கவனிக்கவில்லை. அதற்கும் ஒரு தத்தல் செய்யலாம்!! --Natkeeran 01:13, 6 மே 2011 (UTC)
- மிக்க நன்றி நற்கீரன், செம்மையாகவும் நேர்த்தியாகவும் உள்ளது. அகரவரிசைப்படி ஆவணப்படுத்த நான் எண்ணியதன் காரணம் என்னவெனின், ஒரு சொல் பற்பல இடங்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் முன்பு ஆராயப்பட்டுள்ளது, புதிதாக வரும் ஒரு நபர் இதனைத் தேடிக் கண்டுபிடிக்க வாய்ப்பில்லை, எனவே அவரால் பயன்படுத்தப்படும் கலைச்சொல் வேறொன்றாக இருக்க வாய்ப்புண்டு. விக்சனரி இதற்கு உள்ளதெனினும் அங்கு உள்ள அறிவியல் கலைச்சொற்களில் வழுக்கள் உள்ளன, இங்கு ஆராய்ந்த பின்னரே அங்கு அவற்றை மாற்றல் உசிதமானது. கலைச்சொல் உருவாக்கும் பயனர்கள் இங்கே பதிதல் மூலம் ஒரு பொதுவான முடிவுக்கு வர இயலும். எனவே "ஆங்கில" அகரவரிசைப்படி உருவாக்குதல் மூலம் இலகுவில் கண்டறியலாம், (இத்திட்டத்துக்குள் தேடல் வசதி இருக்குமாயின் இன்னும் நன்று).
- உயிரியல் எனும் தத்தலும் உருவாக்கிவிடுங்களேன். --செந்தி//உரையாடுக// 10:25, 6 மே 2011 (UTC)
Tumour
தொகுTumour/Tumor தொடர்பாக எங்கேயோ முதலில் உரையாடியதாக நினைவு. ஆனால், அதனை கண்டு பிடிக்க முடியவில்லை. :(. எங்கே என்று தெரியுமா? Tumour என்பதை வெறும் "கட்டி" என்று குறிப்பிடலாமா?--கலை 11:05, 6 மே 2011 (UTC)
- கலைச்சொல் ஒத்தாசைப்பக்கத்தில் பாருங்கள். --செந்தி//உரையாடுக// 12:39, 6 மே 2011 (UTC)
முதற்பக்க அறிமுக வாழ்த்துக்கள்
தொகுமுதற்பக்கத்தில் அறிமுகம் கண்டு மகிழ்கிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 22:56, 13 மே 2011 (UTC)
- செந்தி, தங்களைப் பற்றிய முதற் பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. விக்கியில் தங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.--Kanags \உரையாடுக 23:01, 13 மே 2011 (UTC)
- முதற் பக்க அறிமுகத்தில் தங்கள் குறிப்புக்களைக் கண்டேன், மிக்க மகிழ்ச்சி செந்தி. விக்கியில் தங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். மருத்துவத்தைத் தமிழ் மொழி மூலம் அறிந்துகொள்ள தமிழ் விக்கிபீடியாவை ஒரு முதன்மைத் தளமாக உருவாக்கும் தங்கள் குறிக்கோள் நிறைவேற எம்மால் முடிந்த ஒத்துழைப்பைத் தருவோம் --P.M.Puniyameen 08:32, 15 மே 2011 (UTC)
- அனைவருக்கும் நன்றி...--செந்தி//உரையாடுக// 16:18, 15 மே 2011 (UTC)
- முதற்பக்கத்தில் தங்கள் அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். தரமான மருத்துவ/உயிரியல் கட்டுரைகள் ஆக்கிவரும் உங்கள் பங்கு பாராட்டுக்குரியது. எனது மனமார்ந்த வாழ்த்துகள் !!--மணியன் 12:12, 16 மே 2011 (UTC)
- நன்றி மணியன்--செந்தி//உரையாடுக// 12:30, 16 மே 2011 (UTC)
- உங்களுடைய பங்களிப்பால் தமிழ் விக்கிப்பீடியா பெருமையும், பெறுமதியும் பெறுகிறது. நன்றிகள். --Natkeeran 18:21, 16 மே 2011 (UTC)
- செந்தி, உங்கள் முதற்பக்க அறிமுகத்தை இன்றுதான் பார்த்தேன்!!! மிகச்சிறந்த பங்களிப்பாளராகிய உங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மிக மகிழ்ந்தேன்! என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! தொடர்ந்து பங்களிக்கவும் அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்! --செல்வா 02:33, 27 மே 2011 (UTC)
- வாழ்த்துகள். உங்கள் சீரிய பணி சிறக்க வாழ்த்துகள். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 14:23, 27 மே 2011 (UTC)
- நன்றி நற்கீரன், செல்வா, சூர்யபிரகாசு :)--செந்தி//உரையாடுக// 15:41, 27 மே 2011 (UTC)
உங்களுக்குத் தெரியுமா திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த பாசித்திரள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் 25 மே, 2011 அன்று வெளியானது. |