பயனர் பேச்சு:Theni.M.Subramani/தொகுப்பு 2
குன்றுவாரங்கோட்டை காசி விசாலாட்சி விசுவனாதர் கோயில
தொகுகுன்றுவாரங்கோட்டை காசி விசாலாட்சி விசுவனாதர் கோயில இருக்கின்றது. புராண காலத்தில் குன்று- அரண் - கோட்டை என்றழைக்கப்பட்டு, குன்றுவாரங்கோட்டையாக மாறி இன்று கண்ணாப்பட்டி என்றும் அழைக்கப்படுகிறது. May I know the reason why you deleted the reference to this temple and the origin of the temple? I feel that you are removing one of the important historical reference points in this area around 400 years ago. Request you to reply and add the temple reference in this article. Kbala1055 03:07, 16 ஏப்ரல் 2010 (UTC)
- வத்தலக்குண்டு எனும் கட்டுரையிலிருந்து நீக்கி தனித்தலைப்பில் இக்கட்டுரையை உருவாக்கினேன். எனக்கு எதையும் நீக்கியதாகத் தோன்றவில்லை. ஆதாரமான தகவல்கள் இருந்தால் தாங்கள் புதிய கட்டுரையில் மீண்டும் சேர்த்து விடுங்கள்.தவறு ஏற்பட்டிருந்தால் வருந்துகிறேன்.--Theni.M.Subramani 05:36, 16 ஏப்ரல் 2010 (UTC)
இந்த கட்டுரையை மாற்றியதற்கு நன்றி. சில மாற்ற்ங்கள் எதற்காக ? தெரிந்து கொள்ளலாமா?
How to add external references? ஆதாரங்கள் இங்கே ..
- R. Venkataramani. (August 2003. P. 8,9,10,11,12,13). "Sringeri Sarada Peedathin 25th Peetadhipadhi - Mudalam Sachchidananda Bharathi", 'Amman Darisanam', Tamil Periodical
- K. Narayanaswamy, Vidyaranyapuram (Sringeri). (October 2009. P. 074,075,076,077,078,079). "Sringeriyil Olirntha Madurai Maharatnam", Amman Darisanam, Deepavali Special Edition, Tamil Periodical.
- K Venkateswaran, Madurai (March 1-15 2010. P. 38, 39, 40, 41). "Ulaga Naayagan"" தமிழ்: உலக நாயகன், 'Kumudham Bhakthi Special' தமிழ்: குமுதம் பக்தி ஸ்பெஷல், Tamil Periodical. Kbala1055 04:16, 17 ஏப்ரல் 2010 (UTC)
- Re. Ramamurthy. (February 2010. P. 11). "Sri Ramakrishna Paramahamsar Aruliya Inkadhai Kavidai', Saravana Padippagam, Chinmaya Nagar, Chennai-600 092, Collection of Tamil poems and short stories.
பண்டித திரு. ரெ. ராமமூர்த்தி, வித்துவான் ரா. அரங்க கிருஷ்ணன், ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்சர் அருளிய இன்கதை கவிதை, சரவணா பதிப்பகம் Kbala1055 04:22, 17 ஏப்ரல் 2010 (UTC)
கூகுள் திட்டம் குறித்த வாக்கும் கருத்தும் தேவை.
தொகுவணக்கம். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் குறித்து ஆலமரத்தடியில் உங்கள் வாக்கையும் கருத்தையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 03:52, 22 ஏப்ரல் 2010 (UTC)
- இந்த வாக்கெடுப்பு உட்பட எந்த வாக்கெடுப்பிலும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றில்லை. உங்கள் கருத்தை அறியும் முகமாகவே கேட்டேன். நன்றி--ரவி 19:36, 22 ஏப்ரல் 2010 (UTC)
வரவேற்பு
தொகுவணக்கம், புதுப்பயனர்களை வரவேற்பதற்கு {{subst:புதுப்பயனர்}} என்ற வார்ப்புருவை மட்டும் இட்டு உங்கள் கையொப்பத்தையும் சேருங்கள்.--Kanags \உரையாடுக 10:18, 2 மே 2010 (UTC)
- வரவேற்புப் பணியை நீங்கள் பொறுப்பேற்றுச் செய்வது கண்டு மகிழ்ச்சி. வரவேற்பு இடும்போது அதனைச் சிறு தொகுப்பு என குறித்தால் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் நெரிசல் வராமல் இருக்கும். நன்றி--ரவி 11:12, 12 மே 2010 (UTC)
திசைமாற்றம்!
தொகுதேனி! உங்கள் பங்களிப்புகளில் நல்ல திசைமாற்றம். உள்ளூரில் காணப்படும் உயிரினங்களைப் பற்றிய தகவல்களை நீங்கள் உள்ளிடத் தொடங்கியுள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி. வனவுயிர் இனங்களும் தாவரங்களும் ஒவ்வொன்றாக (மனித இனத்தால்) அழிக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்தடுத்த தலைமுறையினருக்கு நாம் அவற்றைப் பற்றி இவ்வடிவிலாவது தெரிவித்தல் வேண்டும்; இச்செயல் மிகவும் சிறியதாகத் தெரியலாம்; ஆனால், பின்வருபவர்கள் எத்தகைய இயற்கைச் செல்வங்கள் இந்நாட்டில் இருந்துள்ளன என்று தெரிந்து கொண்டு, உள்ளதையாவது காப்பாற்றிக் கொள்ள ஒரு சிறு உந்துதலாக இச்செயல் இருக்கும் என்பது என் திண்ணமான கருத்து.
ஒரு வேண்டுகோள். இணையத்திலேயே பல இணைப்புகளில் சிறப்பான தகவல்கள் இருக்கின்றன. கூடுமானவரை அவற்றைப் பயன்படுத்தி உங்கள் தகவல் பக்கங்களைச் சிறப்பியுங்கள். நன்றி. --பரிதிமதி 03:41, 13 மே 2010 (UTC)
உங்களது கருத்துக்கு நன்றி. நீங்கள் 169 பக்க விக்கி நூலை வெளியிடப்போவது குறித்து மகிழ்ச்சி. நான் குறிப்பிடும் நூலானது வெறும் 10 பக்கத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு சிறிய கையேட்டளவில் இருத்தல் வேண்டும். இது விக்கியை திறந்து எப்படி பங்களிப்பது மற்றும் எப்படி தகவல் களஞ்சியத்தை பயன்படுத்துவது என்று இருத்தல் அவசியம். உங்களால் உதவ முடியுமா?
கவனிக்கவும்
தொகுநகரியம் இக்கட்டுரையை கவனிக்கவும்.ஹிபாயத்துல்லா17:59, 7 ஜூன் 2010 (UTC)
பரிவேடம் - சோதிடக்குறிப்பு
தொகுசுப்பிரமணி, அறிவியல்-சார் கட்டுரையில் சோதிடக்குறிப்பு இப்போதைக்கு வேண்டாமே! கட்டுரையை நன்கு வளர்த்தெடுத்தபிறகு, இறுதியில் பிற பார்வைகளும் வேண்டும் என்பதால், சோதிடக்குறிப்பு சேர்க்கப்படலாம் என்று எண்ணுகிறேன். --பரிதிமதி 16:31, 12 ஜூலை 2010 (UTC)
கருமுத்து தியாகராசர்
தொகுதியாகராசர் கட்டுரையில் பேச்சுப் பக்கத்தில் உள்ள தகவல்கள் வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன. இவற்றில் கட்டுரைக்குத் தேவையானவற்றை மட்டும் கட்டுரைப் பகுதியில் சேர்த்து விட்டு ஏனையவற்றை பேச்சுப்பக்கத்திலேயே விட்டு வைக்கலாம். அவற்றை அழிக்கத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 02:24, 8 ஆகஸ்ட் 2010 (UTC)
- கருமுத்து தியாகராசர் குறித்த சிறப்பான தகவல்களாக இருந்தால் கட்டுரையிலேயே சேர்த்திருக்கலாம். பேச்சுப் பக்கத்தில் கட்டுரையுடன் தொடர்புடைய தகவல்கள் இல்லை. தாங்கள் விரும்பினால் நீக்கப்பட்ட செய்திகளை மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம். --தேனி.எம்.சுப்பிரமணி. 02:41, 8 ஆகஸ்ட் 2010 (UTC)
நன்றி
தொகுநிருவாகி அணுக்கம் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தமைக்கு மிக்க நன்றி --ஜெ.மயூரேசன் 04:03, 18 ஆகஸ்ட் 2010 (UTC)
விரதம் என்ற பக்கத்தில் அராபத் இட்ட பதிவால் குழப்பம் அடைந்தேன். இருப்பினும் தங்களின் பக்க வழிமாற்றத்தால் குழம்பம் நீங்கியது. நன்றி. --Sasitharagurukkal 14:09, 19 ஆகஸ்ட் 2010 (UTC)
நன்றிகள்
தொகுஎன்னுடைய பிறந்த நாளையொட்டி நீங்கள் தெரிவித்த வாழ்த்துக்களுக்கு எனது மனம் கனிந்த நன்றிகள். --மயூரநாதன் 16:23, 8 செப்டெம்பர் 2010 (UTC)
நூல்கள் பற்றிய கட்டுரைகள்
தொகுவணக்கம், நூல்கள் சிலவற்றின் கட்டுரைகளில் நூல் விலை விபரம், மற்றும் அதனைப் பற்றிய சொந்த விமரிசனங்களை எழுதுவது விரும்பத்தக்கது அல்ல. குறிப்பாக அம்மா அப்பா ஆகணுமா? (நூல்) என்ற கட்டுரையில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன். உங்களது ஏனைய கட்டுரைகளிலும் இவற்றைத் திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 07:09, 7 அக்டோபர் 2010 (UTC)
விக்கி மாரத்தான்
தொகுநினைவூட்டல்: இன்று விக்கி மாரத்தான் :) --இரவி 09:38, 14 நவம்பர் 2010 (UTC)
சேர்க்கலாமா?
தொகு- தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாகப் பங்களித்து வரும் சுந்தரை எட்டயபுரம் கட்டுரையில் எட்டயபுரத்துக்கு பெருமை சேர்த்தவர்கள் பட்டியலில் சேர்க்கலாமா?--தேனி.எம்.சுப்பிரமணி. 09:56, 25 நவம்பர் 2010 (UTC)
- விளையாட்டாகத்தான் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். வேறு யாரும் உண்மை என்று நினைத்துவிடக்கூடாது என்பதற்காக விளக்கம்: அவ்வாறு செய்வது நமது குறிப்பிடுதன்மைக் கோட்பாட்டை மீறுவதாக அமையும். சூ கார்டனருடைய பெயரிலோ வேறு விக்கிமீடியா உயர் அலுவலர் பெயரிலோ கட்டுரை தொடங்க முயன்றபோது நெடிய உரையாடலுக்குப் பின்னரே ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விக்கிப்பீடியா தவிர வேறு களஞ்சியங்களில் குறிப்பிடும் தகுதி இருந்தால் ஐயம் வேண்டாம். :) -- சுந்தர் \பேச்சு 12:27, 25 நவம்பர் 2010 (UTC)
2010 ஆண்டு அறிக்கை, 2011 திட்டமிடல்
தொகுவணக்கம் Theni.M.Subramani/தொகுப்பு 2:
தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கியூடகங்களுக்கான தங்களின் தொடர் பங்களிப்புகளுக்கு நன்றி. நமது 2010ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கிப்பீடியா அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையில் விடுபட்டதாகக் கருதும் கருத்துக்களைத் தாங்கள் சேர்க்கலாம். மேலும் அதன் பேச்சுப் பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கியூடகத் திட்டங்கள் 2011 ஆம் ஆண்டு முன்னெடுக்கக் கூடிய செயற்பாடுகள் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் நம் திட்டங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவின் குறைகளையும், தடைகளையும் சுட்டிக் காட்டிக் கூட உங்கள் கருத்துக்கள் இருக்கலாம். நன்றி.
கெண்டை
தொகு- கெண்டை மீன் கட்டுரையைக் கண்டேன். அதில் நூலகத்தில் நான் அமைத்தப் புத்தகத்தின் தொடுப்பினைத் தந்துள்ளேன். கெண்டைமீன் குடும்பத்தினைப்(w:en:Cyprinidae) பற்றி கட்டுரையொன்றை உருவாக்கி வருகிறேன். விரைவில் பதிவேற்றியப் பின்பு, தங்களைத் தொடர்பு கொள்கிறேன். 10விக்கிப்பீடியா விழாவில் தங்களது புத்தகம் கண்டேன். மகிழ்ச்சி. அதனை நூலகத்திற்கு மின்னூலாக தந்துதவ முடியுமா? வணக்கம்.--த* உழவன் 02:35, 21 சனவரி 2011 (UTC).
- மீண்டும் உங்களை சந்திப்பதிலே மகிழ்ச்சி. கெண்டை யையும், கெண்டைமீன் (குடும்பம்) என்பதனையும் இணைக்கலாமென எண்ணுகிறேன். உங்கள் கருத்தறிய ஆவல். தேவையெனில், பகுப்பு:ஒன்றிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பகுப்பில் இணைத்துவிடவும். நூலகம் குறித்து மின்னஞ்சல் அனுப்பியமைக்கு நன்றி. வணக்கம்.--த* உழவன் 12:41, 11 பெப்ரவரி 2011 (UTC)
கட்டுரை உள்ளடக்கம் முழு நீக்கம்
தொகுதேனியாரே, சில கட்டுரைகளின் முழு உள்ளடக்கத்தையும் நீக்குகிறீர்களே, அதற்கான காரணத்தை தொகுத்தல் சுருக்கத்திலோ உரையாடல் பகுதியிலோ பதிவது வரலாற்றிற்கு தேவையானது. விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்புப் பக்கத்தில் இட்டு நீக்கலாமே? ஒரு பக்கத்தை வெறுமையாக விடுவதைவிட அதனை நீக்கி விடலாமே.. நீங்கள் ஏதேனும் உள்ளடக்கம் இடுவதற்கு முன்பாக இவ்வாறு செய்திருக்கிறீர்களா ? --மணியன் 18:25, 30 சனவரி 2011 (UTC)
- விக்கிப்பீடியா ஆலமரத்தடியில் ஒன்றிணைக்கலாமே...? என்கிற என்னுடைய கேள்விக்கு நண்பர் சோடாபாட்டில் அளித்த பதிலின் அடிப்படையில் சில கட்டுரையின் உள்ளடக்கம் அது ஒன்றிணைக்கப்பட வேண்டிய கட்டுரையின் பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. உள்ளடக்கம் முழுவதும் நீக்கப்பட்ட பக்கத்தில் அதற்கான குறிப்புகளை நிர்வாகிகளுக்கு அளிக்க வேண்டியிருந்தார். ஆனால் அது செய்ய இயலாமல் போய்விட்டது. தற்போது அப்பக்கங்களில் அதற்கான குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.--தேனி.எம்.சுப்பிரமணி. 02:24, 31 சனவரி 2011 (UTC)
- இரண்டையும் இணைத்துள்ளேன். பக்கங்களின் உள்ளடக்ங்களை நீக்கி செய்தி விடுவதற்கு பதில், என் பேச்சுப் பக்கத்திலோ/ஆலமரத்தடியிலோ ஒரு குறிப்பு இட்டீர்களென்றால் விரைந்து இணைக்க உதவியாக இருக்கும்--சோடாபாட்டில்உரையாடுக 04:23, 31 சனவரி 2011 (UTC)
- நண்பர் சோடாபாட்டில் ஆலமரத்தடி வேண்டாம். தங்கள் பக்கத்திலேயே செய்திக் குறிப்பை சேர்க்கிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி. 04:27, 31 சனவரி 2011 (UTC)
அரசு இணையதளம்
தொகுhttp://indg.in/india/home-page-ta/view?set_language=ta
என்பது அரசு தளம் என்றே நினைத்தேன். மேலும் இந்திய அரசு சின்னமும் அந்த தளத்தில் இருந்தது. விக்கியில் கட்டுரையை பகிந்து தளத்திற்கு இணைப்பு கொடுத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நினைத்தேன். பயணர்களிடம் கேட்ட பின் அதை செய்திருக்க வேண்டும். என் தவறுக்கு வருந்துகிறேன். இனி இதுபோல் தவறு நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன். நன்றி!.
விக்கிப்பீடியா அறிமுகம்
தொகுவிக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/செல்வா என்னும் பக்கத்தில் இணைத்துள்ளேன். இது போதுமானதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.--செல்வா 03:15, 17 மார்ச் 2011 (UTC)
விட்டாச்சு விடுமுறை
தொகுஎன் அப்பா பிறந்த ஊர் (தூத்துக்குடி மாவட்டம், செட்டிமல்லன்பட்டி கிராமம்) கோயில் கொடை விழா (திருவிழா) செல்வதால் இன்னும் ஐந்து நாட்களுக்கு விக்கிப்பீடியாவிற்கு விட்டாச்சு விடுமுறை! (ஆன்மிகத்தில் எனக்கு ஈடுபாடெல்லாம் கிடையாது... ஏதோ மூன்று வருடத்திற்கு ஒரு முறை இந்த கொடை விழா நடக்கிறது... இந்த சமயத்தில்தான் பல உறவினர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது... அவ்வளவுதான்!)--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 18:03, 6 மே 2011 (UTC)
நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?
தொகுவணக்கம் சுப்பிரமணி. தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகப் பொறுப்பு ஏற்க தங்களுக்கு விருப்பம் எனில் பரிந்துரைக்க விரும்புகிறேன். நன்றி--இரவி 16:16, 11 சூன் 2011 (UTC)
- ரவி, தங்கள் அழைப்பை ஏற்கிறேன். நிர்வாகப் பொறுப்பு இருக்கும் நிலையில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு என்னால் மேலும் சில பங்களிப்புகளை அளிக்க முடியுமென நம்புகிறேன். நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:05, 13 சூன் 2011 (UTC)
நன்றி, சுப்பிரமணி. விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் என் பரிந்துரையை முன்வைத்துள்ளேன். உங்கள் சம்மதத்தை அங்கு முறைப்படி தெரிவிக்க வேண்டுகிறேன். --இரவி 16:20, 15 சூன் 2011 (UTC)
வணக்கம் சுப்புரமணி. உங்களுக்கு நிர்வாகி அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. உங்களை நிர்வாகியாப் பெறுவது விக்கிப்பீடியாவிற்குப் வளம் சேர்க்கும். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். --Natkeeran 22:46, 27 சூன் 2011 (UTC)
விக்கியிடை இணைப்புகள்
தொகுநீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் விக்கியிடை இணைப்புகளை சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் ஒரே கட்டுரை இரு முறை உருவாகும் வாய்ப்புகள் குறைகின்றன. மேலும் புதிய கட்டுரையைத் துவங்கும் முன் ஆங்கில விக்கி கட்டுரையில் தமிழுக்கான இணைப்பு உள்ளதா என்று ஒரு முறை சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள் (இங்கு தேடல்களில் சிக்காவிட்டால், அங்குள்ள இணைப்பு மூலம் முன்னரே கட்டுரை உள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம்)--சோடாபாட்டில்உரையாடுக 03:58, 14 சூன் 2011 (UTC)
நன்றிகள்
தொகு- எனக்கு நிருவாக அணுக்கம் வேண்டி வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 03:07, 17 சூன் 2011 (UTC)
கருவி
தொகுஅண்மையில் ஒரு IPயால் உருவாக்கப்பட்ட வெற்றுக் கட்டுரைகளுக்கு {{delete}} வார்ப்புரு இட்டது கண்டேன். இவற்றை நீங்கள் manual-ஆக இடுவதற்குப் பதிலாக தொடுப்பிணைப்பி எனும் கருவியை பயன்படுத்தலாமே! எளிதாக வேலை முடியும். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 08:44, 18 சூன் 2011 (UTC)
- இதைப் பார்க்க நேர்ந்தது.வரலாற்றுப்பதிவு. தொடுப்பிணைப்பி தற்போது வேலை செய்கிறதா என்றறிய ஆவல். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:00, 18 சூன் 2011 (UTC)
- சூரியபிரகாசு, தற்போது தொடுப்பிணைப்பிக்கான இணைப்பு கிடைக்கிறது. இன்னும் உபயோகப்படுத்தவில்லை. நான் தொடுப்பிணைப்பிக்கான import script என்பதற்கு அடுத்திருந்த பயனர்: எனுமிடத்தில் என் பயனர் பெயரைப் பயன்படுத்தியதால் தவறு நேர்ந்து விட்டது. பின்னர் அப்படியே பிரதி செய்து ஒட்டிய பிறகு (Copy and Paste) சரியாகி விட்டது. இந்த தொடுப்பிணைப்பியை பயன்படுத்திவிட்டு என் கருத்தை தொடுப்பிணைப்பிக்கான பேச்சு (உரையாடல்) பக்கத்தில் பதிவு செய்கிறேன். நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:13, 18 சூன் 2011 (UTC)
- சரி சுப்ரமணி. இதுபோன்ற பயனர் நிரல்வரிகளைப் (user scripts) பயன்படுத்தும் போது அதில் எத்தகைய மாற்றமும் மேற்கொள்ளக்கூடாது. ஏனெனில் அங்கிருந்த Surya_Prakash.S.A. என்பது என் பயனர் பெயரையும் அதற்குப் பின் இருப்பது என் பெயர்வெளியில் உள்ள நிரலையும் குறிக்கிறது. அந்நிரல் இங்குள்ளது. (http://tawp.in/r/2c78) இதனைத்தான் அப்படி load செய்ய வேண்டும். முன்னர் நீங்கள் Template_helper என்பதையும் அவ்வாறு வைத்திருந்தீர்கள். அதுவும் Mahir78 என்ற பெயரிலேயே பயன்படுத்தப்பட வேண்டும். அது அந்நிரலை load செய்யும். உங்களுக்கு இருந்த குழப்பம் நீங்கியிருக்கும் என்று நம்புகிறேன். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:46, 18 சூன் 2011 (UTC)
ஆதாரம்?
தொகுநேர்காணல் என்ற கட்டுரையைத் தந்ததில் மகிழ்ச்சி. ஆனால், அக்கட்டுரைக்கு மூலம் எங்கிருந்து எடுக்கப்பட்டது? ஆதாரங்கள் எதுவுமே தரப்படவில்லை. மேலும் இக்கட்டுரை இதே நிலையிலிருப்பின் சொந்த ஆராய்ச்சியாகக் (Personal research) கருதப்படலாம். பார்க்க: WP:OR. எனவே உரிய ஆதாரங்களையும் பிறமொழி இணைப்புகளையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 05:29, 21 சூன் 2011 (UTC)
- கட்டுரை இன்னும் முழுமையடையவில்லை. திடீரென ஏற்பட்ட மின் தடையால் கட்டுரையை முழுமைப்படுத்த முடியவில்லை. கட்டுரை முழுமையாக முடிவடைந்த பின்பு ஆதாரம் குறித்த தகவல் சேர்க்கப்படும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:26, 21 சூன் 2011 (UTC)
- மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பயணச் சலுகை கட்டுரைக்கு மேற்கோள்களை சுட்டவும். நன்றி -- மாகிர் 17:59, 1 சூலை 2011 (UTC)
- மாகிர், தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் குறித்த எனது கட்டுரைகள் பல தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பணியிலிருக்கும் நண்பர் ஒருவர் வழியாகக் கேட்டுப் பதிவேற்றப்பட்ட கட்டுரைகள். இக்கட்டுரைகளில் தவறுகள் ஏதுமிருக்க வாய்ப்பில்லை. இது போன்ற பயனளிக்கும் பல திட்டங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர்கள், மாவட்ட மறுவாழ்வு அலுவலர்கள் அலுவலகங்களில் கேட்டுப் பெறலாம். விக்கிப்பீடியா பயனர்கள் சிலருக்கு அரசு அலுவலகங்களில் தகவல் சேகரிக்க பத்திரிகையாளருக்கான அடையாள அட்டை பெற முயற்சித்தால் மேலும் பல தகவல்களைப் பெற முடியும். கூடவே அரசு பத்திரிகையாளர்களுக்கு அளிக்கும் சில சலுகைகளையும் பெற முடியும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:58, 2 சூலை 2011 (UTC)
வேண்டுகோள்
தொகுநாயக்கர் என்னும் கட்டுரையில் போதிய ஆவணங்களை வேய்துள்ளேன் அதோடு கீழே விஜய் டிவி யால் எடுக்கப்பட்ட சமுதாயம் சார்ந்த ஒன்றையும் இணைத்து உள்ளேன் . எனவே ஆதாரம் இல்லாத கட்டுரை என்ற இதில் இருந்து மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று கூறுகிறேன் . நேற்று சொடபாடில் என்ற ஒருவரும் பரிசீலித்து ஆதாரம் இல்லாத கட்டுரை என்ற வற்றை நீக்கினார், எனவே தாங்களும் நீக்கும் படி கேட்டு கொள்கிறேன் --raja naicker
- குண்டல நாயக்கன் பட்டி என்பது தேனிக்கு அருகிலுள்ள ஊர்தான். எனக்கு அந்த ஊரிலும் இராஜகம்பளம் சாதியைச் சேர்ந்த நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். நீண்ட காலமாக பெண்கள் இங்கு இளம் பெண்கள் கூட மேல்சட்டை (ஜாக்கெட்) அணியாமல் இருந்தனர். தற்போது பத்து வருடங்களுக்குள்ளாகத்தான் இளம் பெண்கள் மேல்சட்டை அணிகிறார்கள். இதுபோல் தேனிப் பகுதியில் சிவலிங்க நாயக்கன்பட்டி, பொட்டிப்புரம், சத்திரப்பட்டி, வடவீரநாயக்கன்பட்டி, சிந்தால்புரம் போன்ற ஊர்களில் இந்த சாதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் குறித்த மேலும் பல தகவல்களைச் சேகரித்து எழுத வேண்டும்.இவை அனைத்தும் ராஜகம்பளம் அல்லது தொட்டிய நாயக்கர் எனும் கட்டுரையில்தான் சேர்க்க வேண்டும். நாயக்கர் என்பது பொதுவான கட்டுரையாக அமையும் என்பதால் அதைப் பொதுவாக மாற்ற வேண்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:40, 27 சூன் 2011 (UTC)
- பலிஜா , கவரா , தொட்டிய நாயக்கர் , ராஜ கம்பளம் என்பது எல்லாம் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் , ஆனால் கம்மவார் , ஒட்டார் போன்றவர்கள் அவ்வாறாக இல்லை அவர்கள் வேற்று இனத்தை சேர்ந்தவர்கள் அதலால் அவர்களை சேர்ப்பது கடினமாக இருக்கும் , இதில் உள்ள பதிவுகள் எல்லாம் பல reference கொண்டும் , இது வரை இம்மக்களின் பழக்க வழக்கம் போன்றவை அவ்வாறாக விக்கியில் எழுதப்படவில்லை , எனவே எழுதி உள்ளேன் . பொதுவாக கம்மவார்கள் தங்களை கம்மவர் என்றே அழைத்து கொள்வர் , அதே போல வன்னியர்கள் , ஒட்டர்கள் தங்களை அந்த அந்த சாதியினராக வே காட்டி கொள்வர் , ஆனால் மேற்குறிப்பிட்ட இனத்தவர்கள் நாயக்கர் என்றே அழைக்க படுகிறார்கள் தமிழ் நாட்டில் பொதுவாக , கம்மவாரையும் , காப்பு இனத்தையும் சேர்க்க இயலாது என்பதால் , இதற்கான சரியான தலைப்பு தாங்களே கூறுமாறு கேட்டு கொள்கிறேன் --raja naicker
நிர்வாக அணுக்கம் பெற்றமைக்கு வாழ்த்துகள்
தொகுதாங்கள் நிர்வாக அணுக்கம் பெற்றமைக்கு வாழ்த்துகள்!! தங்கள் சீரிய பணி இன்னும் சிறக்க இது வகை செய்யும். --மணியன் 06:35, 28 சூன் 2011 (UTC)
- தாங்கள் நிருவாக அணுக்கம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள். தொடர்க பணி.--சஞ்சீவி சிவகுமார் 08:09, 28 சூன் 2011 (UTC)
- வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 10:47, 28 சூன் 2011 (UTC)
- வாழ்த்துகள்! தொடர்க தங்கள் பணியை..--செந்தி//உரையாடுக// 11:28, 28 சூன் 2011 (UTC)
- தாங்கள் நிர்வாக அணுக்கம் பெற்றமைக்கு வாழ்த்துகள் தேனி. எம். சுப்பிரமணி. தங்கள் பணி ஏற்கெனவே உயரியது. மேலும் தமிழ் விக்கியை வளர்த்தெடுக்க இணைந்து உழைப்போம்--P.M.Puniyameen 13:15, 28 சூன் 2011 (UTC)
- வாழ்த்துக்கள், சுப்பிரமணி! தொடர்க உங்கள் நற்பணி.--சிவக்குமார் \பேச்சு 15:03, 28 சூன் 2011 (UTC)
- நல்வாழ்த்துகள் தேனி சுப்பிரமணி! நீங்கள் நல்ல பல ஆக்கங்கள், பங்களிப்புகள் தருவீர்கள் என்பது என் ஆழ்ந்த நம்பிக்கை. தொடர்ந்து நாம் யாவரும் உயர் வளர்ச்சி அடைய இணங்கி உழைப்போம்! --செல்வா 21:43, 28 சூன் 2011 (UTC)
- எனக்கு அளிக்கப்பட்ட நிர்வாக அணுக்கத்தின் உதவியுடன் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் என் பங்கு, பயனர்கள் அனைவரது எதிர்பார்ப்புகளுக்கேற்ப அவசியம் இருக்கும். வாழ்த்து தெரிவித்த மணியன், சஞ்சீவி சிவகுமார், கனக்ஸ், செந்தி, புன்னியாமீன், சிவக்குமார், செல்வா ஆகியோருக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள் பல... --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:16, 29 சூன் 2011 (UTC)
- தேனி. எம். சுப்பிரமணி! பல நாட்களின் பின்னர் விக்கிக்கு பங்களிக்க வந்தமையினால், தங்களுக்கான நிர்வாக அணுக்க வாக்கெடுப்பில் கலந்துகொண்டு எனது ஆதரவைத் தெரிவிக்க முடியாமல் போய் விட்டது. ஆனாலும் நீங்கள் நிர்வாக அணுக்கம் பெற்றமைக்கு தற்போது எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். --கலை 23:02, 29 சூன் 2011 (UTC)
- கலை, எனக்கு நிர்வாக அணுக்க வாக்கெடுப்புக் காலத்தில் தாங்கள் எனக்கு வாக்களிக்கா விட்டாலும், விவரமறிந்து வாழ்த்தளித்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:30, 1 சூலை 2011 (UTC)
சொத்து வரி
தொகுநகராட்சி மன்றப் படம், சொத்து வரி ரசீது படம் போன்றவை பொருந்தி வருமென நினைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 17:20, 1 சூலை 2011 (UTC)