புஞ்சாக் போர்னியோ மக்களவைத் தொகுதி
புஞ்சாக் போர்னியோ மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Puncak Borneo; ஆங்கிலம்: Puncak Borneo Federal Constituency; சீனம்: 婆罗洲高原国会议席) என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் பிரிவு; செரியான் பிரிவு ஆகிய 2 பிரிவுகளில்; கூச்சிங் மாவட்டம்; தெபெடு மாவட்டம்; சிபுரான் மாவட்டம் ஆகிய 3 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P198) ஆகும்.[5]
புஞ்சாக் போர்னியோ (P198) மலேசிய மக்களவைத் தொகுதி சரவாக் | |
---|---|
Puncak Borneo (P198) Federal Constituency in Sarawak | |
புஞ்சாக் போர்னியோ மக்களவைத் தொகுதி (P198 Puncak Borneo) | |
மாவட்டம் | கூச்சிங் மாவட்டம் தெபெடு மாவட்டம் சிபுரான் மாவட்டம் |
வட்டாரம் | கூச்சிங் பிரிவு செரியான் பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 79,969 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | புஞ்சாக் போர்னியோ மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கூச்சிங்; இலுண்டு |
பரப்பளவு | 1,328 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2018 |
கட்சி | சரவாக் கட்சிகள் கூட்டணி |
மக்களவை உறுப்பினர் | வில்லி மோங்கின் (Willie Mongin) |
மக்கள் தொகை | 80,780 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2018 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
புஞ்சாக் போர்னியோ மக்களவைத் தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2018-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2018-ஆம் ஆண்டில் இருந்து புஞ்சாக் போர்னியோ மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
செரியான் பிரிவு
தொகுசெரியான் பிரிவு (Serian Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். 2015 ஏப்ரல் 11-ஆம் தேதி சரவாக், சமரகான் பிரிவில் இருந்து பிரிக்கப்பட்டது. இப்போது தனி பிரிவாகச் செயல்படுகிறது.[7]
1860-ஆம் ஆண்டில் சரவாக் மாநிலத்தில் தொடங்கப்பட்ட இந்த பிரிவு (Division) முறை இன்றும் நீடிக்கிறது. முன்பு சரவாக்கில் ஐந்து பிரிவுகள் மட்டுமே இருந்தன. அவற்றுள் அப்போதைய இரண்டாம் பிரிவில், இப்போதைய பெத்தோங் பிரிவு; மற்றும் செரி அமான் பிரிவு ஆகியவை பிரிவுகளும் அடங்கும்.
செரியான் நகரம்
தொகுகூச்சிங் மாநகரில் இருந்து சுமார் 40 மைல் (64 கி.மீ.) தொலைவில் செரியான் பிரிவு அமைந்துள்ளது. மக்கள் தொகையில் 65% பிடாயூ பழங்குடி பூர்வீக மக்கள். மற்ற முக்கிய இனக்குழுக்கள் இபான், சீனர் மற்றும் மலாய்க்காரர்கள். செரியான் நகரம் அதன் வளமான நிலப் பகுதியுடன்; சாலை மற்றும் நீர் போக்குவரத்துகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
காடுகளில் கிடைக்கும் அனைத்து வகையான காட்டுப் பொருட்களையும் இங்கு காணலாம். அண்மைய காலமாக, இந்த விளைபொருட்களில் பெரும்பாலானவை இந்தோனேசியாவின் கலிமந்தான் காடுகளில் இருந்து கொண்டு வரப் படுகின்றன. விலையும் குறைவு என அறியப்படுகிறது.
புஞ்சாக் போர்னியோ மக்களவைத் தொகுதி
தொகுபுஞ்சாக் போர்னியோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2018 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
புஞ்சாக் போர்னியோ தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
14-ஆவது மக்களவை | P198 | 2018-2020 | வில்லி மோங்கின் (Willie Mongin) |
பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) (PKR) |
2020-2022 | பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி) (BERSATU) | |||
2022 | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) (ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
தேர்தல் முடிவுகள்
தொகுவேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
வில்லி மோங்கின் (Willie Mongin) | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) | 29,457 | 57.58 | 57.58 | |
தியோக் தியோஸ் (Diog Dios) | பாக்காத்தான் அரப்பான் (PH) | 16,119 | 31.51 | 23.14 ▼ | |
தாம்சன் அங்கோ (Tomson Ango) | சரவாக் ஐக்கிய கட்சி (PSB) | 5,578 | 10.90 | 10.90 | |
மொத்தம் | 51,154 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 51,154 | 98.28 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 895 | 1.72 | |||
மொத்த வாக்குகள் | 52,049 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 79,969 | 63.97 | 12.13 ▼ | ||
Majority | 13,338 | 26.07 | 14.47 | ||
சரவாக் கட்சிகள் கூட்டணி கைப்பற்றியது | |||||
மூலம்: [9] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 28 ஆகஸ்ட் 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Serian town is one of the busiest towns especially during festive seasons". Visit Sarawak 2022 #BounceBackBetter. Archived from the original on 28 June 2022. பார்க்கப்பட்ட நாள் 24 May 2022.
- ↑ "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
- ↑ "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.