புர்க்கினா பாசோ

(புர்க்கினா ஃபாசோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புர்க்கினா பாசோ (Burkina Faso)[9] என்பது மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நிலம்சூழ் நாடு ஆகும். இது ஏறத்தாழ 274,200 சதுரகிமீ பரப்பளவைக் கொண்டது. இதன் எல்லைகளாக வடமேற்கில் மாலி, வடகிழக்கில் நைஜர், தென்கிழக்கில் பெனின், தெற்கில் டோகோ, கானா, தென்மேற்கில் கோட் டிவார் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. ஐக்கிய நாடுகள் அவையின் சூலை 2019 மதிப்பீட்டின் படி இதன் மக்கள்தொகை 20,321,378 ஆகும்.[10] முன்னர் மேல் வோல்ட்டா குடியரசு (1958–1984) என அழைக்கப்பட்ட இந்நாடு, 1984 ஆகத்து 4 இல் அரசுத்தலைவர் தோமசு சங்காராவினால் "புர்க்கினா பாசோ" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வாகடூகு இதன் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும்.

புர்க்கினா பாசோ
Burkina Faso
கொடி of புர்க்கினா பாசோ
கொடி
சின்னம் of புர்க்கினா பாசோ
சின்னம்
குறிக்கோள்: "Unité–Progrès–Justice" (பிரான்சியம்)
"ஒற்றுமை–முன்னேற்றம்–நீதி"
நாட்டுப்பண்: Une Seule Nuit/Ditanyè
ஒரு ஒற்றை இரவு / வெற்றிப் பண்
தலைநகரம்வாகடூகு
12°22′N 1°32′W / 12.367°N 1.533°W / 12.367; -1.533
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)பிரான்சியம்
இனக் குழுகள்
(2010 மதிப்பு)[1]
  • 51% மோசி
  • 8.4% பூலா
  • 2.4% லோபி
  • 4.9% போபோ
  • 0.8% தியூலா
  • 4.5% சனுபோ
  • 4.6% குருன்சி
  • 7% குர்மா
  • 1.9% துவாரகு
சமயம்
(2006)[2]
மக்கள்
  • புர்க்கினபே
  • புர்க்கினீசு
அரசாங்கம்ஒருமுக இடைக்கால அரசு (இராணுவ ஆட்சி)
• தலைவர்
பவுல்-என்றி சண்டாகோ தமீபா
• பிரதமர்
வெற்றிடம்
சட்டமன்றம்தேசியப் பேரவை
வரலாறு
• மேல் வோல்ட்டா குடியரசு அறிவிப்பு
11 திசம்பர் 1958
• பிரான்சிடம் இருந்து விடுதலை
5 ஆகத்து 1960
• 1966 இராணுவப் புரட்சி
3 சனவரி 1966
• 2014 எழுச்சி
28 அக்டோபர் – 3 நவம்பர் 2014
• 2022 இராணுவப் புரட்சி
23–24 சனவரி 2022
பரப்பு
• மொத்தம்
274,200 km2 (105,900 sq mi) (74-வது)
• நீர் (%)
0.146%
மக்கள் தொகை
• 2020 மதிப்பிடு
21,510,181[3] (58-வது)
• 2006 கணக்கெடுப்பு
14,017,262
• அடர்த்தி
64/km2 (165.8/sq mi) (137-வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2020 மதிப்பீடு
• மொத்தம்
$45.339 பில்லியன்
• தலைவிகிதம்
$2,207[4]
மொ.உ.உ. (பெயரளவு)2020 மதிப்பீடு
• மொத்தம்
$16.226 பில்லியன்
• தலைவிகிதம்
$926[5]
ஜினி (2020) 38.9[6]
மத்திமம்
மமேசு (2019)Increase 0.452[7]
தாழ் · 182-வது
நாணயம்மேற்காப்பிரிக்க CFA பிராங்கு[8] (XOF)
நேர வலயம்ஒ.அ.நே (கிரீனிச் நேரம்)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+226
ஐ.எசு.ஓ 3166 குறியீடுBF
இணையக் குறி.bf
இங்குள்ள தரவு, 2005 ஏப்ரலில் பன்னாட்டு நாணய நிதியத்தால் தயாரிக்கப்பட்ட 2005 மதிப்பீடாகும்.
புர்கீனா பாசோவில் பாரம்பரியக் குடிசைகள்

இன்றைய புர்கினா பாசோவில் உள்ள மிகப் பெரிய இனக்குழுவானது 11 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதியில் குடியேறிய மோசி இனத்தவர் ஆவர். இவர்கள் ஊகடோகோ, தெங்கோடோகோ, யாத்தெங்கா போன்ற பலம்வாய்ந்த இராச்சியங்களை நிறுவினர். 1896-இல், இது பிரான்சிய மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியாக பிரான்சின் குடியேற்றநாடாக்கப்பட்டது. 1958 திசம்பர் 11 இல், மேல் வோல்ட்டா பிரான்சிய சமூகத்திற்குள் ஒரு சுயமாக ஆளும் குடியேற்ற நாடாக மாறியது. 1960 ஆகத்து 5 அன்று முழுமையான விடுதலை அடைந்து மோரிசு யமியோகோ அரசுத்தலைவரானார். இதன் ஆரம்ப ஆண்டுகளில், நாடு உறுதியற்ற தன்மை, வறட்சி, பஞ்சம் மற்றும் ஊழல்களுக்கு உட்பட்டிருந்தது. நாட்டின் வரலாற்றில் 1966, 1980, 1982, 1983, 1987, 1989, 2015, 2022 ஆம் ஆண்டுகளில் பல்வேறு இராணுவப் புரட்சிகளும் ஆட்சிக்கவிழ்ப்புகளும் நடந்துள்ளன. தோமசு சங்காரா 1982 முதல் 1987 ஆம் ஆண்டு பிலாசே கொம்போரே தலைமையிலான ஆட்சிக் கவிழ்ப்பில் கொல்லப்படும் வரை நாட்டை ஆண்டார். கொம்போரே 2014 அக்டோபர் 31 அன்று பதவியிலிருந்து நீக்கப்படும் வரை நாட்டை ஆட்சி செய்தார். சங்காராவின் தலைமையின் கீழ், அவர் நாட்டின் பெயரை புர்கினா பாசோ என்று பெயரிட்டார், அத்துடன் தேசிய அளவிலான எழுத்தறிவு பிரச்சாரம், விவசாயிகளுக்கு நிலம் மறுபங்கீடு, தொடருந்துப் பாதை, சாலைக் கட்டுமானம் மற்றும் சட்டத்திற்கு புறம்பான பெண் உறுப்பு சிதைப்பு, கட்டாயத் திருமணம், பலதுணை மணம் ஆகியவற்றை நீக்கல் உள்ளடக்கிய சமூக பொருளாதார திட்டங்களைத் தொடங்கினார்.[11][12][13][14][15][16][17]

2010களின் நடுப்பகுதியில் இருந்து இசுலாமியத் தீவிரவாத எழுச்சியால் புர்கினா பாசோ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. "இசுலாமிய அரசு" (IS) அல்லது அல் காயிதாவுடன் ஓரளவு இணைந்த பல போராளிகள், மாலி, நைஜர் வரையிலான எல்லைகளைத் தாண்டி செயல்படுகின்றனர். நாட்டின் 21 மில்லியன் மக்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளார்கள். 2022 சனவரி 24 அன்று இராணுவமும் அதன் "பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான தேசபக்தி இயக்கம்" அதிகாரத்தில் இருப்பதாக அறிவித்தது. முன்னதாக, அரசுத்தலைவர் ரோச் மார்க் கபோரேயிற்கு எதிராக இராணுவம் சதிப்புரட்சியை நடத்தியது.

16.226 பில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் புர்கினா பாசோ உலகின் மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த நாடாக உள்ளது. அதன் மக்கள்தொகையில் 63% இசுலாத்தையும், 22% கிறித்தவத்தையும் பின்பற்றுகிறார்கள். பிரான்சியக் குடியேற்றம் காரணமாக, நாட்டின் அரசு மற்றும் வணிக மொழி பிரான்சியம் ஆகும். புர்கினாவில் 59 பூர்வீக மொழிகள் பேசப்படுகின்றன, இவற்றில் மிகவும் பொதுவான மொழியான மூரே நாட்டின் 50% மக்களால் பேசப்படுகிறது.[18][19] நாடு நிறைவேற்று, சட்டமன்ற மற்றும் நீதித்துறை அதிகாரங்களைக் கொண்ட அரை-சனாதிபதிக் குடியரசாக ஆளப்படுகிறது. புர்கினா பாசோ ஐக்கிய நாடுகள் அவை, மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம், ஆப்பிரிக்க ஒன்றியம், பிரான்கோபோனி, இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.

2022 இராணுவப் புரட்சி

தொகு

2022 சனவரி 24 அன்று நடத்தப்பட்ட ஒரு வெற்றிகரமான இராணுவப் புரட்சியில், கலகம் செய்த இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து அரசுத்தலைவர் ரோச் மார்க் கிறித்தியான் கபோரே கைது செய்யப்பட்டார்.[20] இராணுவமும், அதன் "பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான தேசபக்தி இயக்கமும்" (MPSR) லெப்டினன்ட் கர்னல் பால்-என்றி தமீபா தலைமையிலான[21][22] அதிகாரத்தில் இருப்பதாக அறிவித்தது.[23] இவ்வாட்சிக் கவிழ்ப்பிற்கு ஐக்கிய நாடுகளும் அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்தன.[24]

மேற்கோள்கள்

தொகு
  1. "Africa: Burkina Faso The World Factbook – Central Intelligence Agency". cia.gov. 2019. பார்க்கப்பட்ட நாள் 22 December 2019.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; RGPH2006a என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2016-12-21. Retrieved 2016-02-18.CS1 maint: archived copy as title". 16 November 2021.
  4. "Report for Selected Countries and Subjects".
  5. "World Economic Outlook Database, October 2021". IMF.org. அனைத்துலக நாணய நிதியம். October 2021. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
  6. "Distribution of family income – Gini index". The World Factbook. CIA. Archived from the original on 13 June 2007. பார்க்கப்பட்ட நாள் 1 September 2009.
  7. Human Development Report 2020 The Next Frontier: Human Development and the Anthropocene (PDF). United Nations Development Programme. 15 December 2020. pp. 343–346. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-1-126442-5. பார்க்கப்பட்ட நாள் 16 December 2020.
  8. CFA Franc BCEAO. Codes: XOF / 952 ISO 4217 currency names and code elements பரணிடப்பட்டது 7 ஏப்பிரல் 2014 at the வந்தவழி இயந்திரம். ISO.
  9. "burkina-faso noun – Definition, pictures, pronunciation and usage notes | Oxford Advanced Learner's Dictionary at OxfordLearnersDictionaries.com". www.oxfordlearnersdictionaries.com. பார்க்கப்பட்ட நாள் 20 November 2017.
  10. "Burkina Faso Population 2021 (Demographics, Maps, Graphs)". worldpopulationreview.com.
  11. "Violent Protests Topple Government in Burkina Faso". The New York Times. October 31, 2014. https://www.nytimes.com/2014/10/31/world/africa/burkina-faso-protests-blaise-compaore.html. 
  12. Tens of thousands attend Burkina Faso protest, Protesters voice opposition to referendum that would allow Blaise Campaore to extend his presidential term, Al Jazeera (Reuters). Last updated: 1 June 2014 01:34.
  13. Burkina Faso Salutes "Africa's Che" Thomas Sankara by Mathieu Bonkoungou, ராய்ட்டர்ஸ், 17 October 2007
  14. Thomas Sankara: the Upright Man by California Newsreel
  15. Commemorating Thomas Sankara by Farid Omar, Group for Research and Initiative for the Liberation of Africa (GRILA), 28 November 2007
  16. "Burkina Faso coup: military says it now controls country after arresting leaders". த டெயிலி டெலிகிராப் (Online edition) (United Kingdom). 17 September 2015 இம் மூலத்தில் இருந்து 19 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150919023742/http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/burkinafaso/11870962/Burkina-Faso-coup-military-says-it-now-controls-country-after-arresting-leaders.html. 
  17. "Burkina Faso coup: Michel Kafando reinstated as president". BBC News. 23 September 2015. பார்க்கப்பட்ட நாள் 23 September 2015.
  18. Brion, Corinne (November 2014). "Global voices Burkina Faso: Two languages are better than one". Phi Delta Kappan. பார்க்கப்பட்ட நாள் 12 October 2020.
  19. "Africa :: Burkina Faso – People and Society – The World Factbook – Central Intelligence Agency". cia.gov. CIA. பார்க்கப்பட்ட நாள் 11 March 2020.
  20. Ndiaga, Thiam; Mimault, Anne (2022-01-24). "Burkina Faso President Kabore detained at military camp, security sources say" (in en). Reuters. https://www.reuters.com/world/africa/burkina-faso-president-kabore-detained-military-camp-sources-tell-reuters-2022-01-24/. 
  21. "ZEIT ONLINE | Lesen Sie zeit.de mit Werbung oder im PUR-Abo. Sie haben die Wahl". www.zeit.de. பார்க்கப்பட்ட நாள் 2022-01-25.
  22. "Burkina Faso military says it has seized power" (in en-GB). BBC News. 2022-01-24. https://www.bbc.com/news/world-africa-60118993. 
  23. "Burkina Faso coup: New leader Damiba gives first speech" (in en-GB). BBC News. 2022-01-28. https://www.bbc.com/news/world-africa-60164531. 
  24. "Soldiers Seize Power in Burkina Faso, Drawing International Ire". பார்க்கப்பட்ட நாள் 26 சனவரி 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புர்க்கினா_பாசோ&oldid=3715955" இலிருந்து மீள்விக்கப்பட்டது