மணிரத்னம் திரைப்படப் பட்டியல்

மணிரத்னம் இந்திய அளவில் அறியப்படும் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர். தன் பெரும்பாலான படைப்புகளை தமிழில் படைத்துள்ளார். தன் தனி பாணி, நேர்த்தியான தொழில்நுட்பம் மூலம் இந்தியத் திரைப்பட இலக்கணத்தை மறு உருவாக்கி அடுத்த படிக்கு எடுத்து  சென்றவர். தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், என பிற மொழிகளிலும் நல்ல திரைப்படங்களை படைத்துள்ளார். இது நாள் வரை 24 திரைப்படங்களுக்கு மேல்[1] இயக்கியுள்ளார்.

மணிரத்னம்

ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றிருக்கிறார்.

திரைத்துறையில் முறையான பயிற்சி எதுவும் இல்லாமலே தன் முதல் படமான பல்லவி அனுபல்லவி (1983) இயக்கினார். அது கர்நாடக அரசின் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதைப்பெற்றது. இவரின் முதல் சில படங்கள் வருவாய் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும், தமிழில் வெளியிட்ட இதய கோவில் (1985) நல்ல வருவாய் ஈட்டியது. அதற்கு அடுத்த ஆண்டு இவர் இயக்கிய மௌன ராகம் (1986) பெரும் வெற்றி பெற்றது. மறைந்த தன் காதலனை மறக்கமுடியாத ஒரு பெண் தன் பெற்றோர்களின் வற்புறுத்தலால் இன்னொருவனை மணந்து, அவனோடும் வாழ முடியாமல் தவிப்பதும், இவளின் தவிர்ப்பால் தவிக்கும் நல்ல கணவனும், என அருமையான, மனங்கள் பேசும், காதல் திரைப்படமாக மௌன ராகம் இருந்தது. இந்தப் படத்தின் வெற்றி இவரை இந்திய நாடு முழுவதுமாக கவனிக்க செய்தது. தொடர்ந்து கமலஹாசனை வைத்து இவர் இயக்கிய நாயகன் (1987), பெரும் வெற்றி பெற்றது. மும்பையில் வாழ்ந்த வரதராஜ முதலியார் என்ற நிழலுலக தாதாவின் வாழ்க்கையைத் தழுவி இப்படத்தை எழுதியிருந்தார்.இது 60 ஆவது அகாடமி விருதுகளுக்காக இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்டது. டைம் இதழின் "எந்நாளும் சிறந்த 100 படங்களுக்கான பட்டியலில்" இப்படம் 2005 ல் சேர்க்கப்பட்டது.

1989ல் தெலுங்கில் தன் முதல் படமாக, கீதாஞ்சலி யை இயக்கினார். காதல் படமான இது பெரும் வெற்றி பெற்றது. இது தமிழில் இதயத்தைத் திருடாதே என மொழி பெயர்க்கப்பட்டு தமிழிலும் வென்றது. பின் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை மையப்படித்தி அஞ்சலி (1990), தொடர்ந்து மகாபாரதக்கதையின் துரியோதனன், கர்ணன் நட்பை தழுவி ரஜினிகாந்தை வைத்து இயக்கிய தளபதி (1991) அதைத் தொடர்ந்து காதலும் திகிலும் கலந்த ரோஜா (1992) என அனைத்து படங்களும் பெரும் வெற்றியையும் பாராட்டையும் பெற்றன. மூன்று வருடங்களுக்கு பிறகு 1992 - 1993 ல் நடந்த மும்பை கலவரத்தை பின்னனியாக கொன்டு அவர் இயக்கிய பம்பாய் (1995) பெரும் சர்ச்சையை கிளப்பினாலும், பெரும் வருவாயை ஈட்டியது. பாராட்டையும் பெற்றது.

1997ல் இருவர் என்ற படத்தை இயக்கினார். இது இரு பெரும் தமிழக அரசியல் தலைவர்களின் வாழ்க்கை சரிதம் போல உருவாக்கினார். 1998ல் பாலிவுட்டில் தன் முதல் படமாக தில் சே இயக்கினார். உள் நாட்டில் இப்படம் தோல்வி அடைந்தாலும் வெளிநாடுகளில் வெற்றியடைந்தது. ஐக்கிய இராச்சியத்தின் பெரும் வருவாய் தந்த முதல் 10 திரைப்படங்கள் வரிசையில் இடம் பிடித்த முதல் இந்திய படமானது. இலங்கைப்போரை மையமாக வைத்து 2002 ல் கன்னத்தில் முத்தமிட்டால் வெளியிட்டார். வருவாய் ரீதியாக இப்படம் தோற்றாலும், 50 ஆவது தேசிய விருது விழாவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த தமிழ்ப்படம் உட்பட மேலும் ஆறு விருதுகளையும் குவித்தது. 2004ல் இந்தியில் யுவா தமிழில் ஆய்த எழுத்து என வெவ்வேறு நடிகர்களை வைத்து இயக்கி வெளியிட்டார். 2007ல் தொழிலதிபர் மதுபாய் அம்பானியின் வாழ்க்கையைத் தழுவி குரு படத்தை இயக்கினார்.

2010ல் ராமயண கதையை சார்ந்து ராவணன் (2010) இயக்கினார். மூன்று வருடங்களுக்கு பிறகு வெளியிட்ட கடல் பெரும் தோல்வியடைந்தது. 2015ல் வெளியிட்ட ஓ காதல் கண்மணி பெரும் வெற்றியடைந்தது. 2017ல் இவர் இயக்கிய காற்று வெளியிடை ஒரு திகில் கலந்த காதல் திரைப்படமாகும்.

திரைப்பட விபரம்

தொகு

தமிழ்

தொகு
வருடம் திரைப்படம் திரைப்பட இயக்குநர் திரைப்பட தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர் குறிப்புகள் மேற்கோள்
ஒ பிரியா பிரியா ஆம் ஆம் கன்னடத்தில் வெளியான பல்லவி அனுபல்லவி திரைப்படத்தின் மொழிமாற்றம் [2]
1985 பகல் நிலவு ஆம் ஆம்
இதய கோவில் ஆம் ஆம்
1986 மௌன ராகம் ஆம் ஆம்
1987 நாயகன் ஆம் ஆம் ஆம்
1988 அக்னி நட்சத்திரம் ஆம் ஆம்
1989 இதயத்தை திருடாதே ஆம் ஆம் தெலுங்கில் வெளியான கீதாஞ்சலி திரைப்படத்தின் மொழிமாற்றம்
1990 சத்ரியன் ஆம் ஆம்
அஞ்சலி ஆம் ஆம்
1991 தளபதி ஆம் ஆம்
1992 ரோஜா ஆம் ஆம்
1993 திருடா திருடா ஆம் ஆம்
1995 பம்பாய் ஆம் ஆம் ஆம்
1995 ஆசை ஆம்
1996 இந்திரா ஆம் ஆம்
1997 இருவர் ஆம் ஆம் ஆம்
நேருக்கு நேர் ஆம்
1998 உயிரே ஆம் ஆம் ஆம் இந்தியில் வெளியான தில் சே திரைப்படத்தின் மொழிமாற்றம்
2000 அலைபாயுதே ஆம் ஆம் ஆம்
2001 டும் டும் டும் ஆம் ஆம்
2002 5 ஸ்டார் ஆம்
கன்னத்தில் முத்தமிட்டால் ஆம் ஆம் ஆம்
2004 ஆய்த எழுத்து ஆம் ஆம் ஆம்
2007 குரு ஆம் ஆம் ஆம்
2010 ராவணன் ஆம் ஆம் ஆம்
2013 கடல் ஆம் ஆம் ஆம்
2015 ஓ காதல் கண்மணி ஆம் ஆம் ஆம்
2017 காற்று வெளியிடை ஆம் ஆம் ஆம்

† - தகவல் கிடைக்கவில்லை

தெலுங்கு

தொகு
வருடம் திரைப்படம் திரைப்பட இயக்குநர் திரைப்பட தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர் குறிப்புகள் மேற்கோள்
1989 ஒ பிரியா பிரியா ஆம் ஆம் கன்னடத்தில் வெளியான பல்லவி அனுபல்லவி திரைப்படத்தின்

மொழிமாற்றம்

[2]
ரோஜா ஆம் ஆம் தமிழில் வெளியான ரோஜா

திரைப்படத்தின் மொழிமாற்றம்

பம்பாய் ஆம் ஆம் தமிழில் வெளியான பம்பாய் திரைப்படத்தின் மொழிமாற்றம்
இத்தரு ஆம் ஆம் தமிழில் வெளியான இருவர்

திரைப்படத்தின் மொழிமாற்றம்

சகி ஆம் ஆம் தமிழில் வெளியான அலைபாயுதேதிரைப்படத்தின் மொழிமாற்றம்
குரு ஆம் ஆம் தமிழில் வெளியான குருதிரைப்படத்தின்மொழிமாற்றம்
பிரேமதோ ஆம் ஆம் தமிழில் வெளியான உயிரேதிரைப்படத்தின்மொழிமாற்றம்
டும் டும் டும் ஆம் தமிழில் வெளியான டும் டும் டும் திரைப்படத்தின் மொழிமாற்றம்
1986 மௌன ராகம் ஆம் ஆம் தமிழில் வெளியான மௌன ராகம் திரைப்படத்தின் மொழிமாற்றம்
1987 நாயகுடு ஆம் ஆம் ஆம் தமிழில் வெளியான நாயகன் திரைப்படத்தின் மொழிமாற்றம்
1988 கர்ஷனா ஆம் ஆம் தமிழில் வெளியானஅக்னி நட்சத்திரம் திரைப்படத்தின் மொழிமாற்றம்
1989 கீதாஞ்சலி ஆம் ஆம்
1990 சத்ரியடு ஆம் தமிழில் வெளியான சத்ரியன் திரைப்படத்தின் மொழிமாற்றம்
அஞ்சலி ஆம் ஆம் தமிழில் வெளியான அஞ்சலி திரைப்படத்தின் மொழிமாற்றம்
1991 தளபதி ஆம் ஆம் தமிழில் வெளியான தளபதி

திரைப்படத்தின் மொழிமாற்றம்

1993 காயம் ஆம் ராம் கோபால் வர்மாவுடன் இணைந்து
டோங்கா டோங்கா ஆம் ஆம் தமிழில் வெளியான திருடா திருடா திரைப்படத்தின் மொழிமாற்றம்
2002 அம்ருதா ஆம் ஆம் ஆம் தமிழில் வெளியானகன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் மொழிமாற்றம்
2004 யுவா ஆம் ஆம் ஆம் தமிழில் வெளியான ஆய்த எழுத்து திரைப்படத்தின் மொழிமாற்றம்
2007 குருகந்த் ஆம் ஆம் ஆம் தமிழில் வெளியான குரு

திரைப்படத்தின் மொழிமாற்றம்

2010 வில்லன் ஆம் ஆம் ஆம் தமிழில் வெளியான ராவணன் திரைப்படத்தின் மொழிமாற்றம்
2013 கடலி ஆம் ஆம் ஆம் தமிழில் வெளியான கடல்

திரைப்படத்தின் மொழிமாற்றம்

2015 ஓகே பங்காரம் ஆம் ஆம் ஆம் தமிழில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படத்தின் மொழிமாற்றம்
2017 செழியா ஆம் ஆம் ஆம் தமிழில் வெளியான காற்று வெளியிடை திரைப்படத்தின் மொழிமாற்றம்

† - தகவல் கிடைக்கவில்லை

இந்தி

தொகு
வருடம் திரைப்படம் திரைப்பட இயக்குநர் திரைப்பட தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர் குறிப்புகள்
ரோஜா ஆம் ஆம் தமிழில் வெளியான ரோஜா திரைப்படத்தின் மொழிமாற்றம்
பம்பாய் ஆம் ஆம் தமிழில் வெளியான பம்பாய் திரைப்படத்தின் மொழிமாற்றம்
1988 தயவான் ஆம் தமிழில் வெளியான நாயகன் திரைப்படத்தின் மறுபடி
1990 அஞ்சலி ஆம் ஆம் தமிழில் வெளியான அஞ்சலி திரைப்படத்தின்மொழிமாற்றம்
1991 தளபதி ஆம் ஆம் தமிழில் வெளியான தளபதி திரைப்படத்தின் மொழிமாற்றம்
1992 கசக் ஆம் ஆம் தமிழில் வெளியான மௌன ராகம் திரைப்படத்தின் மறுபடி
1993 சோர் சோர் ஆம் ஆம் தமிழில் வெளியான திருடா திருடா திரைப்படத்தின் மொழிமாற்றம்
1996 பிரியங்கா ஆம் ஆம் தமிழில் வெளியான இந்திரா திரைப்படத்தின் மொழிமாற்றம்
1998 தில் சே ஆம் ஆம் ஆம் தமிழில் உயிரே- இரண்டும் ஒரே நாளில் வெளியாயின
1999 வேலு நாயகன் ஆம் ஆம் தமிழில் வெளியான நாயகன் திரைப்படத்தின் மொழிமாற்றம்
2002 சாத்தியா ஆம் ஆம் ஆம் தமிழில் வெளியான அலைபாயுதே திரைப்படத்தின் மறுபடி
2004 யுவா ஆம் ஆம் ஆம் தமிழில் ஆய்த எழுத்து - இரண்டும் ஒரே நாளில் வெளியாயின
2007 குரு ஆம் ஆம் ஆம் தமிழில் குரு - இரண்டும் ஒரே நாளில் வெளியாயின
2010 ராவண் ஆம் ஆம் ஆம் தமிழில் ராவணன் - இரண்டும் ஒரே நாளில் வெளியாயின
2017 ஓக்கே ஜானு ஆம் ஆம் தமிழில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படத்தின் மறுபடி.

† - தகவல் கிடைக்கவில்லை

கன்னடம்

தொகு
வருடம் திரைப்படம் திரைப்பட இயக்குநர் திரைப்பட தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர் குறிப்புகள் மேற்கோள்
1983 பல்லவி அனுபல்லவி ஆம் ஆம் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான கர்நாடக அரசின் திரைப்பட விருது. [3]

மலையாளம்

தொகு
வருடம் திரைப்படம் திரைப்பட இயக்குநர் திரைப்பட தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர் குறிப்புகள்
ரோஜா ஆம் ஆம் தமிழில் வெளியான ரோஜா திரைப்படத்தின் மொழிமாற்றம்
இருவர் ஆம் ஆம் தமிழில் வெளியான இருவர்திரைப்படத்தின்மொழிமாற்றம்
1984 உணரு ஆம்

† - தகவல் கிடைக்கவில்லை

மராத்தி

தொகு
வருடம் திரைப்படம் திரைப்பட இயக்குநர் திரைப்பட தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர் குறிப்புகள்
ரோஜா ஆம் ஆம் தமிழில் வெளியான ரோஜா திரைப்படத்தின்மொழிமாற்றம்

† - தகவல் கிடைக்கவில்லை

சிங்களம்

தொகு
வருடம் திரைப்படம் திரைப்பட இயக்குநர் திரைப்பட தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர் குறிப்புகள்
தி டூவோ ஆம் ஆம் தமிழில் வெளியான இருவர் திரைப்படத்தின்மொழிமாற்றம்
எ பெக் ஆன் சீக் ஆம் ஆம் தமிழில் வெளியானகன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் மொழிமாற்றம்

† - தகவல் கிடைக்கவில்லை

வெளி இணைப்புகள்

தொகு
  1. "Mani Ratnam", IMDb, பார்க்கப்பட்ட நாள் 2018-06-10
  2. 2.0 2.1 Cinemaya (in ஆங்கிலம்), A. Vasudev, 2002, பார்க்கப்பட்ட நாள் 2018-06-10
  3. "Pallavi Anupallavi (1983) Kannada movie: Cast & Crew", chiloka.com, பார்க்கப்பட்ட நாள் 2018-06-10