மலேசிய மூத்த அமைச்சர்
மலேசிய மூத்த அமைச்சர் (மலாய்: Menteri Kanan Malaysia; ஆங்கிலம்: Senior Minister of Malaysia மலாய்: منتري کانن مليسيا)) என்பது மார்ச் 2020 முதல் நவம்பர் 2022 வரை மலேசியாவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது மிக உயர்ந்த அரசியல் பதவியாக இருந்தது.
மலேசிய மூத்த அமைச்சர்
Senior Minister of Malaysia Menteri Kanan Malaysia | |
---|---|
உறுப்பினர் | அமைச்சரவை நாடாளுமன்றம் |
அறிக்கைகள் | நாடாளுமன்றம் |
பரிந்துரையாளர் | பிரதமர் |
நியமிப்பவர் | யாங் டி பெர்துவான் அகோங் |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள், புதுப்பிக்கத்தக்கது. பிரதமரைச் சார்ந்தது |
உருவாக்கம் | 10 மார்ச்சு 2020 |
முதலாமவர் | அஸ்மின் அலி இஸ்மாயில் சப்ரி யாகோப் பாடில்லா யூசோப் ராட்சி சிடின் |
இறுதியாக | அஸ்மின் அலி இசாமுடின் உசேன் பாடில்லா யூசோப் ராட்சி சிடின் |
நீக்கப்பட்ட வருடம் | 24 நவம்பர் 2022 |
இணையதளம் | www |
முன்னாள் பிரதமர் முகிதீன் யாசின் (Muhyiddin Yassin), தன் அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களை நியமிக்கும் வழக்கத்தை மார்ச் 2020-இல் தொடக்கி வைத்தார். அவரின் வாரிசான இஸ்மாயில் சப்ரி யாகோப் (Ismail Sabri Yaakob) இந்த நடைமுறையைத் தொடர்ந்து கடைப்பிடித்தார்.
ஆனால் அன்வர் இப்ராகீம் இதைப் பின்பற்றாமல் அவரின் அமைச்சரவையில் (Anwar Ibrahim Cabinet) இரு துணைப் பிரதமர்களை நியமித்து, முகிதீன் யாசின் உருவாக்கிய மூத்த அமைச்சர் பதவியை அகற்றினார்.
பொது
தொகுஇந்த மூத்த அமைச்சர் பதவி, ஒரு துணைப் பிரதமரின் பதவியைப் போலவே இயங்க வேண்டும் என்பது முகிதீன் யாசின் எதிர்பார்த்த அரசியல் நகர்வு; அத்துடன் முகிதீன் யாசின், பிரதமராக இருந்த காலத்தில் அவர் இல்லாத காலத்தில், அப்போதைய மூத்த அமைச்சர்கள் நான்கு பேரில் ஒருவரான அஸ்மின் அலியை (Senior Minister Azmin Ali) தற்காலிகப் பிரதமராக (Acting Prime Minister) நியமித்தார்.
இருப்பினும், 7 சூலை 2021 தொடங்கி 16 ஆகத்து 2021 வரையிலான 40 நாட்களுக்கு, ஒரு குறுகிய காலத்தில், மலேசிய மூத்த அமைச்சர் பதவியும் (Senior Minister of Malaysia); மலேசிய துணைப் பிரதமர் பதவியும் (Deputy Prime Minister) ஒன்றாகவே செயல்பட்டன.
இஸ்மாயில் சப்ரி யாக்கோப்
தொகுமுகிதீன் யாசின் நிர்வாகத்தின் போது, 7 ஜூலை 2021-இல், மூத்த அமைச்சராக இருந்த இஸ்மாயில் சப்ரி யாகோப் துணைப் பிரதமராக பதவி உயர்த்தப் பட்டார். அதே நேரத்தில் இஸ்மாயில் சப்ரி யாகோப் (Ismail Sabri Yaakob) விட்டுச் சென்ற மூத்த அமைச்சர் பதவி இசாமுடின் உசேன் (Hishammuddin Hussein) அவர்களுக்கு வழங்கப்பட்டது. மற்ற மூன்று மூத்த அமைச்சர்களும் தக்க வைத்துக் கொள்ளப் பட்டனர்.[1]
16 ஆகஸ்ட் 2021-இல் முகிதீன் யாசின் நிர்வாகம் சரிவு அடைந்தது. அதன் பிறகு பிரதமர் பதவிக்கு வந்த இஸ்மாயில் சப்ரி யாகோப், துணைப் பிரதமர் எவரையும் நியமிக்கவில்லை; மூத்த அமைச்சர்களை மட்டுமே நியமித்தார்.[2]
நியமனம் மற்றும் அதிகாரம்
தொகுமலேசியாவின் 2020-ஆம் ஆண்டு அரசியல் நெருக்கடிக்கு (2020–2022 Malaysian Political Crisis) பிறகு, 2020-இல் முன்னாள் பிரதமர் முகிதீன் யாசின் தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவை சற்றே மாறுபட்டது; தனித்துவம் வாய்ந்தது.
அவரின் அப்போதைய அமைச்சரவையில் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) எவரும் துணைப் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவில்லை. மாறாக, அவர் நான்கு மூத்த அமைச்சர்களை நியமித்தார்.[3][4]
இந்த மூத்த அமைச்சர்கள், பிரதமர் இல்லாத நேரத்தில் அமைச்சரவைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவார்கள்; மற்றும் பிரதமரின் கடமைகளை நிறைவேற்றுவதில் பிரதமருக்கு உதவுவார்கள். அந்தக் கட்டத்தில் நான்கு மூத்த அமைச்சர்களும் சமமான தகுதியில் இருந்த போதிலும், அஸ்மின் அலி மட்டும், பிரதமர் இல்லாத நேரத்தில் அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்கு தகுதி வழங்கப்பட்டார்.[5]
16 ஆகஸ்ட் 2021-இல் யாங் டி பெர்துவான் அகோங் அவர்களிடம் அமைச்சரவை உறுப்பினர்கள் தங்களின் பதவித் துறப்பை ஒப்படைத்த பின்னர், மலேசிய மூத்த அமைச்சர் பதவிகள் கலைக்கப்பட்டன.
மலேசியாவின் மூத்த அமைச்சர்களின் பட்டியல்
தொகுமலேசிய அரசியல் கட்சிகள்
பெரிக்காத்தான் நேசனல்
பாரிசான் நேசனல்
சரவாக் கட்சிகள் கூட்டணி
தோற்றம் | பெயர்
(பிறப்பு-இறப்பு) |
அரசியல் கட்சி | துறை | பதவிக்காலம் | பிரதமர் | |||
---|---|---|---|---|---|---|---|---|
அஸ்மின் அலி محمد عزمين علي (b. 1964) MP கோம்பாக் |
பெரிக்காத்தான் நேசனல் (PPBM) |
பொருளாதாரம் மற்றும் நிதி | 10 மார்ச் 2020 | 16 ஆகத்து 2021 | 1 ஆண்டு, 159 நாட்கள் | முகிதீன் யாசின் | ||
இஸ்மாயில் சப்ரி யாகோப் إسماعيل صبري يعقوب (b. 1960) MP பெரா |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
பாதுகாப்பு மற்றும் ஒற்றுமை | 7 July 2021[6] | 1 ஆண்டு, 119 நாட்கள் | ||||
இசாமுடின் உசேன் هشام الدين حسين (b. 1961) MP செம்புரோங் |
7 July 2021[6] | 16 ஆகத்து 2021 | 0 ஆண்டுகள், 40 நாட்கள் | |||||
பாடில்லா யூசோப் فضيلة يوسف (b. 1962) MP பெட்ரா செயா |
சரவாக் கட்சிகள் கூட்டணி (PBB) |
உள்கட்டமைப்பு மேம்பாடு | 10 மார்ச் 2020 | 1 ஆண்டு, 159 நாட்கள் | ||||
ராட்சி சிடின் محمد راضي محمد جيدين (b. 1977) செனட்டர் |
பெரிக்காத்தான் நேசனல் (PPBM) |
கல்வி மற்றும் சமூகம் | ||||||
அஸ்மின் அலி محمد عزمين علي (b. 1964) MP கோம்பாக் |
பன்னாட்டு வர்த்தகம் மற்றும் தொழில் | 30 ஆகத்து 2021 | 24 நவம்பர் 2022 | 1 ஆண்டு, 86 நாட்கள் | இஸ்மாயில் சப்ரி யாகோப் | |||
இசாமுடின் உசேன் هشام الدين حسين (b. 1961) MP செம்புரோங் |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
தற்காப்பு | ||||||
பாடில்லா யூசோப் فضيلة يوسف (b. 1962) MP பெட்ரா செயா |
சரவாக் கட்சிகள் கூட்டணி (PBB) |
பணிகள் | ||||||
ராட்சி சிடின் محمد راضي محمد جيدين (b. 1977) செனட்டர் |
பெரிக்காத்தான் நேசனல் (PPBM) |
கல்வி |
சான்றுகள்
தொகு- ↑ "Malaysia PM Ismail Sabri names 4 senior ministers in new Cabinet; no DPM appointed". Channel News Asia. பார்க்கப்பட்ட நாள் 27 August 2021.
- ↑ "Ismail unveils cabinet, no DPM". Malaysiakini (in ஆங்கிலம்). 2021-08-27. பார்க்கப்பட்ட நாள் 2021-08-27.
- ↑ "Malaysia's PM Muhyiddin unveils Cabinet line-up, four senior ministers named". The Straits Times. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
- ↑ "PM Muhyiddin announces Cabinet without Deputy Prime Minister". Prime Minister's Office of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Muhyiddin: The senior minister's position is the same". Bernama. 11 March 2020. https://www.bernama.com/bm/news.php?id=1820386.
- ↑ 6.0 6.1 "Muhyiddin reshuffles Malaysian Cabinet, promoting Ismail Sabri to deputy prime minister". Channel News Asia. Archived from the original on 4 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)