முக்தா பிலிம்ஸ்

முக்தா பிலிம்ஸ் (Muktha Films) என்பது தமிழ் நாட்டில் செயல்பட்ட ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனமானது இயக்குநர் முக்தா சீனிவாசன் மற்றும் அவரது சகோதிரான முக்தா இராமசாமி ஆகியோரால் துவக்கப்பட்டது.

வரலாறு தொகு

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், பாபநாசம் அருகே மணப்புரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த வெங்கடச்சாரியார், செல்லம்மாள் தம்பதியின் மகன்களாகப் பிறந்தவர்கள் இராமசாமியும் சீனிவாசனும். 1945 இல் ராமசாமி மாடர்ன் தியேட்டர்சில் தட்டச்சராகப் பணியில் சேர்ந்தார். தட்டச்சராக இருந்த நிலையில் டி. ஆர். சுந்தரத்தின் காரியதரிசி என்ற பொறுப்புக்கு உயர்ந்தார். தன் சகோதிரர் சீனிவாசனை அழைத்துவந்து டி. ஆர் சுந்தரத்திடம் உதவி இயக்குநராக சேர்த்துவிட்டார். சில காலத்துக்குப் பிறகு தனியாக படங்களை இயக்கத் துவங்கினார் சீனிவாசன் இதன் பிறகு சகோதிரர்கள் இருவரும் இணைந்து இராமசாமியின் மகளான முக்தா பெயரில் 1960 இல் ‘முக்தா பிலிம்ஸ்’ திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கினர். முதல் படமாக பனித்திரை படத்தை தயாரித்து முக்தா சீனிவாசன் இயக்கினார். அதன் பிறகு சகோதிரர்களின் பெயரோடு முக்தா என்ற பெயர் இணைந்தது. இந்த திரைப்பட நிறுவனமானது மொத்தம் 41 படங்களைத் தயாரிகத்துள்ளது.[1]

தயாரித்த திரைப்படங்கள் (முழுமையான பட்டியல் அல்ல) தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்தா_பிலிம்ஸ்&oldid=3094146" இலிருந்து மீள்விக்கப்பட்டது