மைசூர் அரசு

(மைசூர் சமஸ்தானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மைசூர் அரசு (Kingdom of Mysore), கன்னடம்: ಮೈಸೂರು ಸಾಮ್ರಾಜ್ಯ ) (1399–1947) தென்னிந்தியாவில் 1399 இல் மைசூர் பகுதியில் உடையார் அரச குலத்தின் மன்னர் யதுராய உடையார் என்பவரால் அமைக்கப்பட்ட அரசாகும்.[1][2][3][4] மைசூர் அரசு, விஜயநகரப் பேரரசின் கீழ் சிற்றரசாக 1565 வரை, விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி வரை ஆளப்பட்டு வந்தது. பின்னர் பல சிற்றரசுகள் தென்னிந்தியாவில் விடுதலை பெற்ற காலத்தில் மைசூரும் விடுதலை பெற்றது. நரசராச உடையார் மற்றும் சிக்க தேவராச உடையார் ஆகிய அரசர்களின் கீழ் தற்போதைய தெற்கு கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகள் மைசூர் பேரரசின் கீழ் கொண்டு வரப்பட்டு இப்பகுதியில் ஒரு பலமான தன்னாட்சி அரசு 1761 வரை ஆண்டது.

Kingdom of Mysore
மைசூர் அரசு
ಮೈಸೂರು ಸಾಮ್ರಾಜ್ಯ
1399–1950
நாட்டுப்பண்: Kayou Sri Gowri
  Extent of Kingdom of Mysore, 1784 CE
நிலைபேரரசு
(1565 வரை விஜயநகரப் பேரரசுடன் இணைந்திருந்தது)
தலைநகரம்மைசூர், ஸ்ரீரங்கப்பட்டணம்
பேசப்படும் மொழிகள்கன்னடம், ஆங்கிலம்
சமயம்
இந்து
அரசாங்கம்மன்னராட்சி
மன்னர் 
• 1399–1423 (முதல்)
யதுராய உடையார்
• 1940–1950 (முதல்)
ஜெயச்சாமராஜா உடையார்
வரலாறு 
• தொடக்கம்
1399
• ஆரம்பத் தரவுகள்
1551
• முடிவு
1950
முந்தையது
பின்னையது
[[விஜயநகரப் பேரரசு]]
[[பிரித்தானிய இந்தியா]]
[[இந்தியா]]
மைசூர் அரசர்கள்
விசயநகர அரசுக்கு உட்பட்டவர்கள்
யதுராய உடையார் 1399-1423
முதலாம் சாமராச உடையார் 1423-1459
முதலாம் திம்மராச உடையார் 1459-1478
இரண்டாம் சாமராச உடையார் 1478-1513
மூன்றாம் சாமராச உடையார் 1513-1553
தன்னாட்சி பெற்றவர்கள்
இரண்டாம் திம்மராச உடையார் 1553-1572
நான்காம் சாமராச உடையார் 1572-1576
ஐந்தாம் சாமராச உடையார் 1576-1578
முதலாம் இராச உடையார் 1578-1617
ஆறாம் சாமராச உடையார் 1617-1637
இரண்டாம் இராச உடையார் 1637-1638
முதலாம் நரசராச உடையார் 1638-1659
தொட்ட தேவராச உடையார் 1659-1673
சிக்க தேவராச உடையார் 1673-1704
இரண்டாம் நரசராச உடையார் 1704-1714
முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார் 1714-1732
ஏழாம் சாமராச உடையார் 1732-1734
ஐதரலி,திப்புசுல்தானுக்கு அடங்கிய உடையார்கள்
இரண்டாம் கிருட்டிணராச உடையார் 1734-1766
நஞ்சராச உடையார் 1766-1772
எட்டாம் சாமராச உடையார் 1772-1776
ஒன்பதாம் சாமராச உடையார் 1776-1796
பிரித்தானியருக்கு அடங்கிய உடையார்கள்
மூன்றாம் கிருட்டிணராச உடையார் 1796-1868
பத்தாம் சாமராச உடையார் 1881-1894
நான்காம் கிருட்டிணராச உடையார் 1894-1940
செயசாமராச உடையார் 1940-1950
கௌரவ அரச உடையார்கள்
செயசாமராச உடையார் 1950-1974
சிறீகண்ட உடையார் 1974-2013
யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் 2015-

மைசூர் அரசைக் கைப்பற்றிய ஐதர் அலியும், அவரது மகன் திப்பு சுல்தானும் மைசூர் அரசை 1761 முதல் 1799 முடிய ஆண்டனர். ஆங்கிலேயர்களின் உதவியுடன் மீண்டும் உடையார் வம்சத்தினர் மைசூர் அரசை 1799 முதல் 1881 முடிய தன்னாட்சியுடன் ஆண்டனர். 1881ஆம் ஆண்டு முதல் மைசூர் அரசு பிரித்தானிய இந்தியாவிற்கு கப்பம் கட்டும் சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாக விளங்கியது. இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் மைசூர் அரசு அரசியல் ஒருங்கிணைப்புத் திட்டப்படி, 1950ஆம் ஆண்டில் இந்திய அரசில் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Kamath (2001), p. 226
  2. Rice B.L. (1897), p. 361
  3. Pranesh (2003), pp. 2–3
  4. Wilks, Aiyangar in Aiyangar and Smith (1911), pp. 275–276

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசூர்_அரசு&oldid=4058621" இலிருந்து மீள்விக்கப்பட்டது