லியாகத் அலி கான் (இயக்குநர்)
தமிழ் திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்
லியாகத் அலிகான் என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார். அரசியல் வகையிலான பல படங்களில் முதன்மையாக விசயகாந்து மற்றும் ஆர். கே. செல்வமணியுடன் இணைந்து 1990 களில் செயல்பட்டார். [1]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகு2006 ஆம் ஆண்டில், லியாகத் அலிகான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். [2] இவரது நண்பரும் நம்பிக்கைக்குரியவருமான விஜயகாந்து இவரை தான் புதிதாக உருவாக்கிய கட்சியில் இருந்து வெளியேற்றிய பின்னர் இந்த முடிவை எடுத்தார். [3] [4] சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தேர்தல் அதிகாரியாகவும் இவர் நியமிக்கப்பட்டார். [5]
திரைப்படவியல்
தொகு- இயக்குனர்
ஆண்டு | படம் | நடிகர்கள் | குறிப்புகள் |
---|---|---|---|
1989 | பாட்டுக்கு ஒரு தலைவன் | விசயகாந்து, சோபனா | |
1993 | எழை ஜாதி | விஜயகாந்து, ஜெயபிரதா | |
1993 | கட்டளை | சத்யராஜ், பானுப்ரியா | |
1993 | எங்க முதலாளி | விஜயகாந்து, கஸ்தூரி | |
1995 | ராணி மகாராணி | ரகுவரன், ராதிகா | தயாரிப்பாளரும் கூட |
1999 | சுயம்வரம் | பல நட்சத்திரங்கள் |
- எழுத்தாளர்
- லியாகத் அலிகான் எழுதிய மேற்கண்டவற்றைத் தவிர பிற திரைப்படங்கள்.
- அன்னை என் தெய்வம்
- பூந்தோட்ட காவல்காரன் (1988)
- உழைத்து வாழ வேண்டும் (1988)
- தாய் பாசம் (1988)
- தங்கச்சி (1988)
- ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன் (1990)
- புலன் விசாரணை (திரைப்படம்) (1990)
- கேப்டன் பிரபாகரன் (1991)
- வெற்றி படிகள் (1991)
- மாநகர காவல் (1991)
- மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (1991)
- தாய்மொழி (1992)
- சக்கரைத் தேவன் (திரைப்படம்) (1993)
- மக்கள் ஆட்சி (1995)
- டெத் டைரி (1996)
- தடயம் (1997)
- அரவிந்தன் (திரைப்படம்) (1997)
- அரசியல் (திரைப்படம்) (1997)
- ஆசைத் தம்பி (1998)
- உளவுத்துறை (திரைப்படம்) (1998)
- உண்மை (1998)
- மன்னவரு சின்னவரு (1999)
- சண்முகப் பாண்டியன் (2000)
- பாரத் ரத்ணா (2000)
- வாஞ்சிநாதன் (திரைப்படம்) (2001)
- கஜேந்திரா (2004)
- குற்றப்பத்திரிகை (திரைப்படம்) (2007)
- புலன் விசாரணை 2 (2015)
குறிப்புகள்
தொகு- ↑ http://www.thehindu.com/2001/01/20/stories/0420401z.htm
- ↑ https://www.oneindia.com/2006/04/02/film-stars-to-don-new-role-in-tn-assembly-elections-1143957763.html
- ↑ http://www.behindwoods.com/tamil-movie-news/feb-06-04/17-02-06-vijayakanth.html
- ↑ https://tamil.oneindia.com/news/2006/03/04/admk.html
- ↑ https://www.youtube.com/watch?v=rHuKJJ7vt7E