வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் நவம்பர் 2008
- நவம்பர் 30:
- மும்பாய் தாக்குதல்களுக்கு தார்மீகப் பொறுப்பை ஏற்று இந்தியாவின் உட்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீல் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்தார். (பிபிசி)
- பாங்கொக் நகரில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கிரனேட் வீசப்பட்டதில் 46 பேர் காயமடைந்தனர். (ஏபி)
- நவம்பர் 29:
- நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரங்களில் குறைந்தது 380 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- பிரேசிலில் பெரும் வெள்ளம் காரணமாக 105 பேர் கொல்லப்பட்டனர். (ஜி1)
- மும்பாய் தாக்குதல்கள்:
- நவம்பர் 28: தாய்லாந்தில் இடம்பெறும் அரச எதிப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து அங்கு அவசர நிலமை பிறப்பிக்கப்பட்டது. (ஆஸ்திரேலிய வானொலி)
- நவம்பர் 27: ஏழு பேருடன் சென்ற நியூசிலாந்து விமானம் ஒன்று கடலில் வீழ்ந்து மூழ்கியது. (சீஎனென்)
- நவம்பர் 26:
- 26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்: இந்தியாவின் மும்பாய் நகரில் பல இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டனர். (டைம்ஸ் ஆப் இந்தியா))
- டென்மார்க்கிடமிருந்து அதிக சுயாட்சி பெறுவதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கிரீன்லாந்து மக்கள் 75 விழுக்காட்டினர் ஆதரவாக வாக்களித்தனர்.
- நவம்பர் 25: ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் தொடருந்து நிலையமொன்றில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- நவம்பர் 24:
- தாய்லாந்தில் மக்களாட்சிக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் நாட்டின் தேசிய அரசுப் பேரவையைச் சூழ்ந்து கொண்டனர். (ஏஎஃப்பி)
- பிரேசிலின் தெற்குப் பகுதியில் இடம்பெற்ற வெள்ளம் காரணமாக குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டு 20,000 பேர் இடம்பெயர்ந்தனர். (பிபிசி)
- நவம்பர் 23:
- கினி-பிசாவு நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததை அடுத்து அங்கு இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது. ஒருவர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்தனர். (பிபிசி)
- பாலஸ்தீன அரசின் தலைவராக மகமுது அப்பாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். (பிபிசி)
- நவம்பர் 22:
- கொலம்பியாவில் நெவாடோ டெல் ஹுயிலா எரிமலை வெடித்ததில் 10 பேர் கொல்லப்ப்பட்டனர். 12,000 பேர் இடம்பெயர்ந்தனர். (பிபிசி)
- மலேசியாவில் முஸ்லிம்கள் யோகக் கலையில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டது. (பிபிசி)
- நவம்பர் 18: தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 20 சமீ உயரமான ஓர் அரிய வகை சருகு மான் கண்டுபிடிக்கப்பட்டது. (தினத்தந்தி)
- நவம்பர் 17: சோமாலியாவில் சவுதி அரேபிய எண்ணெய்க் கப்பல் ஒன்று சோமாலிக் கடல் கொள்ளைக்காரர்களினால் கடத்தப்பட்டது. (பிபிசி)
- நவம்பர் 16:
- இந்தோனேசியா கரைக்கப்பால் 7.5 அளவு நிலநடுக்கம் பதிவாகியது. (சிஎனென்)
- ஐக்கிய அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பராக் ஒபாமா தனது மேலவை உறுப்பினர் பதவியை துறந்தார். (வாஷிங்டன் போஸ்ட்)
- நவம்பர் 15:
- தற்போதைய நிதி நெருக்கடி தொடர்பாக ஜி20 நாட்டுத் தலைவர்கள் வாஷிங்டன், டிசியில் சந்தித்தனர். (பிபிசி)
- எண்டெவர் விண்ணோடம் எஸ்டிஎஸ்-126 விண்கலத்தைத் தாங்கி பன்னாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கிச் சென்றது. (நாசா)
- புர்கினா பாசோவில் பேருந்து ஒன்றும் சுமையுந்து ஒன்றும் மோதியதில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர். (சிஎனென்)
- நவம்பர் 14: இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலத்தில் அனுப்பப்பட்ட ஆய்வுக்கலம் இந்திய தேசியக் கொடியுடன் சந்திரனில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. (டைம்ஸ் ஆஃப் இந்தியா)
- நவம்பர் 13: எச்ஆர் 8799 விண்மீனைச் சுற்றிவரும் மூன்று கோள்களையும், பொமல்ஹோட் என்ற விண்மீனைச் சுற்றிவரும் ஒரு கோளையும் தொலைக்காட்டிகளினூடாக பார்க்கக்கூடியதாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (சிஎனென்)
- நவம்பர் 11:
- எகிப்தின் அரசி செசெஷெட்டுக்குச் சொந்தமான 4,300 ஆண்டுகள் பழமையான பிரமிட் ஒன்றைத் தான் கண்டுபிடித்திருப்பதாக எகிப்தின் வரலாற்றாய்வாளர் சாகி ஹவாஸ் அறிவித்தார். (சிஎனென்)
- மாலைதீவுகளின் புதிய குடியரசுத் தலைவராக முகமது நசீட் பதவியேற்றார். (சிஎனென்)
- நவம்பர் 9:
- 2002 பாலி குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான மூன்று தீவிரவாதிகள் பாலியில் சுட்டுக் கொல்லப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. (பிபிசி)
- பசிபிக் பெருங்கடல் பகுதியில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ரஷ்யாவின் அணு ஆயுதங்களுக்கான நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் 20 பேர் கொல்லப்பட்டதுடன், 21 பேர் படுகாயமடைந்தனர். (அல்ஜசீரா)
- நவம்பர் 8: நியூசிலாந்து 2008 தேர்தலில் ஜோன் கீ தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றது. (நியூசிலாந்து ஹெரால்ட்)
- நவம்பர் 7: எயிட்டியில் பாடசாலை ஒன்றின் இரண்டு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 75 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- நவம்பர் 6: ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக் பூட்டானின் 5வது மன்னராக முடிசூடினார். இவரே உலகின் வயதில் குறைந்த அரசுத்தலைவர் ஆவார். (பிபிசி)
- நவம்பர் 4:
- ஐக்கிய அமெரிக்கா குடியரசுத் தலைவர் தேர்தல், 2008: மக்காளாட்சிக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது ஆபிரிக்க அமெரிக்கக் குடியரசுத் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். (சிஎன்என்)
- சீனாவும் தாய்வானும் இரு நாடுகளுக்குமிடையிலான நேரடி வர்த்தகம் மற்றும் போக்குவரத்து தொடர்புகளை அபிவிருத்தி செய்யும் பில்லியன் கணக்கான டாலர்கள் பெறுமதியான உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டுள்ளன. (தினக்குரல்)
- மெக்சிக்கோ நகரில் விமானம் ஒன்று தரையில் வீழ்ந்ததில் நாட்டின் உள்ளூராட்சி அமைச்சர் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- நவம்பர் 1:
- இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம் சந்திரனுக்குச் செல்லும் வழியில் பூமியின் இரு படங்களை எடுத்து அனுப்பியது. (த ஹிண்டு)
- முன்னர் தாம் நடத்திய தீவிரவாத தாக்குதல்களுக்கு நட்ட ஈடாக லிபியா $1.5 பில்லியன்களை ஐக்கிய அமெரிக்காவுக்குக் வழங்கியது. (ஏஎஃப்பி)