விக்கிப்பீடியா:உரித்தாக்கம்
பயனர்கள் தாங்கள் ஒவ்வொரு மாதமும் செய்யும் தொகுப்புகளை தாங்கள் மதிக்கும், ஊக்குவிக்க நினைக்கும் இன்னொரு பயனருக்கு உரித்தாக்கலாம். விக்கியன்பின் ஒரு பகுதியாகவும் இதனை நோக்கலாம்.
பிப்ரவரி 2015
தொகுஎனது இம்மாதத் தொகுப்புகளை பல திறமையான விக்கி, கணிமைக் கருவிகளை உருவாக்கியுள்ள நீச்சல்காரனுக்கு உரித்தாக்குகிறன். மீண்டும் அவர் முன் போல் முனைப்புடன் விக்கியில் பங்களிப்பதைக் காண ஆவல் :) --இரவி (பேச்சு) 05:56, 3 பெப்ரவரி 2015 (UTC)
நான் என்னுடைய 2015 பெப்ரவரி தொகுப்புக்களை விக்கியில் தளராமல் உழைத்துவரும் பயனர் சிறீதரனுக்கு (Kanags) உரித்தாக்க விரும்புகிறேன். -- மயூரநாதன் (பேச்சு) 03:25, 5 பெப்ரவரி 2015 (UTC)
சனவரி 2015
தொகுஇம்மாதம் நான் செய்யும் இலக்குத் தொகுப்புகளை செங்கை செல்விக்கு உரித்தாக்கலாம் என்று எண்ணியுள்ளேன். தானும் பங்களிப்பதோடு அல்லாமல் செங்கை பொதுவனுக்கு உற்ற துணையாகவும் விளங்கும் அவர்களின் பெருமைக்கு இதன் மூலம் என்னால் இயன்ற சிறு சிறப்பைச் சேர்க்க இயலும் என்று எண்ணுகிறேன். இது போல் ஒவ்வொரு பங்களிப்பாளரும் தங்கள் மனம் கவர்ந்த பங்களிப்பாளருக்குத் தம் இலக்குத் தொகுப்புகளை உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகமூட்டி இந்த இலக்குப் பயணத்தில் பங்கேற்கச் செய்ய முடியும். இத்தகைய உரித்தாக்குதலை குறிப்பிட்ட பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் தெரிவிக்கலாம். எல்லாருக்கும் புரிகிற மாதிரி தமிழில் சொல்வதென்றால் உங்க editsஐ dedicate பண்ணுங்க ;) --இரவி (பேச்சு) 20:25, 8 சனவரி 2015 (UTC)
- இம்மாதம் (சனவரி, 2015) நான் செய்யும் தொகுப்புகளை மலேசியாவைப் பற்றி சிறப்பான கட்டுரைகளை எழுதிவரும் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் அவர்களுக்கு உரித்தாக்குகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 14:51, 16 சனவரி 2015 (UTC)
- இம்மாதம் நான் செய்யும் தொகுப்புகளை மிகப் பயனுள்ள உயிரியல்/ மருத்துவ கட்டுரைகளை உள்ளிட்ட, விக்கிப் பரப்புரையை ஐரோப்பியக் கண்டத்தில் தனியாக மேற்கொண்ட கலை அவர்களுக்கு உரித்தாக்குகிறேன். இப்புத்தாண்டில் அவர்கள் வளமும் நலமும் பெற இவ்வமயத்தில் வாழ்த்துகிறேன் !! --மணியன் (பேச்சு) 04:13, 17 சனவரி 2015 (UTC)
- நான் செய்யும் தொகுப்புகளை கி. கார்த்திகேயன் அவர்களுக்கு உரித்தாக்குகிறேன். சு.க.மணிவேல் 22:26, 19 சனவரி 2015 (UTC)
- தம்பி மிகுந்த மகிழ்வாய் உணர்கிறேன்! மென் மேலும் பங்களித்து சீரிய உயரங்களை அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!. அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 14:15, 27 சனவரி 2015 (UTC)
சனவரியில் நான் செய்யும் தொகுப்புகளை ஸ்ரீகர்சனுக்கு உரித்தாக்குகிறேன். இந்த ஆண்டின் மற்ற மாத தொகுப்புகளை ஆன்டனுக்கும் சேலம் & கோவை வாத்தியாரம்மாக்களுக்கும் உரித்தாக்குகிறேன். --குறும்பன் (பேச்சு) 17:27, 20 சனவரி 2015 (UTC)
- மிக்க நன்றி குறும்பன் அவர்களே! உங்கள் ஊக்குவிப்பிற்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்:) சனவரியில் நான் செய்யும் தொகுப்புகளை, விக்கிப்பீடியாவில் நுட்பம் தொடர்பான என் பங்களிப்பிற்குப் பிள்ளையார் சுழி போட்டு ஊக்குவித்த சூர்யா அண்ணாவிற்கு உரித்தாக்குகிறேன்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 11:46, 22 சனவரி 2015 (UTC)
- குறும்பன், இப்போதைக்கு உரித்தாக்கங்களுக்கு முன்பதிவு இன்னும் தொடங்கவில்லை :) நிற்க ! இந்த வழமை பயனர்களுக்கு உந்துதல் அளிக்கிறது எனில் விக்கியன்பு போல் இதற்கும் ஒரு திட்டப்பக்கம் உருவாக்கி அந்தந்த மாத இறுதியில் தங்கள் பங்களிப்புகளை விவரித்து உரித்தாக்கங்களைச் செய்யலாம். பங்களிப்பவர், அதற்கு உரியவர் இருவருக்கும் இது நல்ல உந்துதலைத் தரும் என்று எதிர்பார்க்கிறேன். --இரவி (பேச்சு) 12:32, 22 சனவரி 2015 (UTC)
பல்வேறு எதிர்ப்புக்களையும் குற்றச்சாட்டுக்களையும் தாங்கிக் கொண்டு, சோர்ந்துவிடாமல், த.வி.யின் கலைக்களஞ்சியத்தன்மை ஒன்றையே மனதிலிருத்தி, எழுதப்பட்டதும் கட்டுரைகள் விக்கிப்பீடியாக்குரியவையேயொழிய தனியாட்களினுடையவை அல்ல என்ற புரிதலுடன் சலிக்காமல் அஞ்சாமல் குப்பைகளை நீக்கும் என்சக துப்பரவுத் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் எனது இம்மாத தொகுப்புக்களை உரித்தாக்குகிறேன். எவ்வளவ பார்த்துட்டோம் :) விடாது முன்னேறுவோம். கோபி (பேச்சு) 12:59, 22 சனவரி 2015 (UTC)
நந்தக்குமார் அவர்கள் ஜனவரி மாதத் தொகுப்புகளை எனக்கு உரித்தாக்கி இருக்கிறார். மிகவும் நன்றி ஐயா. என்னுடைய தொகுப்புகளை யாருக்கு உரித்தாக்குவது என்று ரொம்ப நேரம் யோசித்துப் பார்த்தேன். கடைசியில், இரவி அவர்களைத் தேர்ந்தெடுத்து, அவருக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். அதற்கு காரணம் இருக்கிறது.
சென்ற ஆண்டு (2014), விக்கிப்பீடியாவைப் பற்றி விளக்கவுரைகள் செய்ய திரு. இரவி மலேசியா வந்திருந்தார். அவரைச் சந்திக்க முடியாமல் போய் விட்டது. சுங்கை சிப்புட் நகரில் நடந்த விளக்கக் கூட்டத்தில் நிறைய விளக்கங்களைக் கொடுத்து இருக்கிறார். அந்தக் கூட்டத்தில் கிளேபாங் தமிழ்ப்பள்ளியில் ஆறாம் ஆண்டு பயிலும் என் பேத்தியும் (ஸ்ரீ லேகா) கலந்து கொண்டார். ரவி அவர்களுக்கு என் பேத்தியைத் தெரியாது என்று நினைக்கிறேன்.
ஆரம்ப காலங்களில், விக்கிப்பீடியாவில் தட்டுத் தடுமாறி எழுதிக் கொண்டு இருக்கும் போது, எனக்கு உதவி செய்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கனக்ஸ், குறும்பன், சோடாபாட்டில், இரவி, செல்வசிவகுருநாதன், மகிழ்நன், நற்கீரன், சிவக்குமார், தமிழ்க்குரிசில், தென்காசி சுப்பிரமணியன், கார்த்திக் இராமானுஜம், அண்டன், சஞ்சீவி சிவகுமார், புன்னியாமீன், பாஹிம். இப்படி நிறைய பேர்.
இன்னும் சிலரின் பெயர்கள் விடுபட்டு போய் இருக்கலாம். பொறுத்தருளவும். ஒரு குடும்பமாக நின்று தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறோம். இந்த நிலை தொடர்ந்து நிலைக்க வேண்டும். நமக்குள் குறை நிறைகள் இருக்கலாம். அதை எல்லாம் பெரிது படுத்தாமல், நம்முடைய சேவைகளைத் தொடர்ந்து செய்வோம். அதுவே தமிழ் அன்னைக்கு நாம் செய்யும் கைமாறு.
ஆக, என்னுடைய தொகுப்புகளை இரவி அவர்களுக்கு உரித்தாக்குகிறேன். நந்தக்குமார் அவர்களுக்கு நன்றிகள். நன்றிகள். மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு--ksmuthukrishnan 13:39, 22 சனவரி 2015 (UTC)
- உங்களது பணிவு கண்டு மனம் மகிழ்ந்தேன். நான் மீண்டும் மலேசியா வரும் போது உங்களைச் சந்திக்க முயல்கிறேன். எனக்கு உங்களது சொந்த ஊர்ப் பகுதியிலும்--பாஹிம் (பேச்சு) 14:12, 22 சனவரி 2015 (UTC) (முவார் நகரில்) சில நண்பர்கள் இருக்கிறார்கள்.
- மலாக்கா முத்துக்கிருஷ்ணன், உங்கள் உரித்தாக்கம் கண்டு நெகிழ்ந்தேன். ஏதாவது ஒரு மாதம் ஆயிரம் தொகுப்புகள் செய்ய முடிந்தால் அன்று உங்களுக்கு என் தொகுப்புகளை உரித்தாக்கம் செய்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மலேசியா நிகழ்வில் உங்கள் பேத்தியும் இருந்தது தெரியாமல் போய்விட்டதே ! மீண்டும் அனைவரும் சந்திக்க முனைவோம். நன்றி--இரவி (பேச்சு) 12:50, 24 சனவரி 2015 (UTC)
கனக சிறிதரனும் இரவியும் ஏற்கனவே இதில் பங்களிப்பதாலும் சோடா சூரியா போன மாதம் தான் விக்கிக்கு எட்டிப் பார்த்துட்டு போனதாலும் சில மாதங்களாக விக்கியில் பங்களிக்காமல் இருக்கும் தலையைக் காட்டாத வாத்தியார் அம்மாக்கு நான் என் பங்களிப்புகளை உரித்தாக்குகிறேன். ஒழுங்கா வரலைனா பங்களிப்புகளை வேரு யாருக்காவது கொடுத்துபுடுவேன். அக்காங்...... --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:10, 27 சனவரி 2015 (UTC)
- விருப்பம்--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 00:14, 28 சனவரி 2015 (UTC)
- தென்காசி சுப்பிரமணியன், அபிராமியின் +2 தேர்வு, இணைய இணைப்பு பிரச்சினைகளை முன்னிட்டு தற்போது விக்கி பக்கம் வர இயலவில்லை என்று பார்வதி தெரிவித்திருக்கிறார். கோடை விடுமுறையில் எதிர்பார்ப்போம் :)--இரவி (பேச்சு) 07:36, 29 சனவரி 2015 (UTC)
- என்னுடைய இம்மாத பங்களிப்பினை, புகுபதிகை செய்து புதிய பக்கம் உருவாக்கிய புதிய பயனர் பயனர்:தமிழ்கவிஞன் அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். (தற்போது இறுதியாக உருவாக்கப்பட்ட புதிய பக்கத்தினை உருவாக்கியவர்) . மேலும் புதிய பயனர்கள் வருகை தந்து விக்கியை மேம்படுத்த இச்சமர்ப்பனம் உந்ததுதலாக இருக்க பிராத்தனைகள்.. நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:58, 31 சனவரி 2015 (UTC)
சனவரி மாதம் நான் செய்திருந்த 500 அதிகமான தொகுப்புகளை இருவருக்கு உரித்தாக்குகிறேன். தமிழ் விக்கியில் இணைந்த மிகக் குறுகியகாலத்திலேயே பயனுள்ள பங்களிப்பை வழங்கிவரும் பயனர் திரு.பா.ஜம்புலிங்கம் அவர்களுக்கும் மற்றும் தமிழ் விக்கிப்பீடியாவிற்காகவே தனது வாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டுவரும் நண்பர் இரவி அவர்களுக்கும் எனது சனவரி மாதத் தொகுப்புகள் உரித்தாகுகிறது.--இரா.பாலா (பேச்சு) 02:27, 3 பெப்ரவரி 2015 (UTC)
- இரா.பாலா, உங்கள் அன்புக்கு நன்றி. ஆனால் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் தமிழ் விக்கிப்பீடியாவுக்காக உழைக்கும் பலர் இருக்கும் போது //தமிழ் விக்கிப்பீடியாவிற்காகவே தனது வாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டுவரும் நண்பர்// என்பது "இதை இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது" வகையறாவில் வரும் :) உருப்படியாக ஏதாவது செய்துவிட்டு, உங்கள் உரித்தாக்கத்தை இன்னொரு மாதம் உரிமையுடன் கோருவேன் :) --இரவி (பேச்சு) 05:49, 3 பெப்ரவரி 2015 (UTC)
- இரா.பாலா உங்களின் அன்பு என்னை நெகிழ வைத்துவிட்டது. விக்கி நடைமுறைகளில் சிலவற்றை இன்னும் புரிந்துகொள்ள வேண்டிய நிலையில் உள்ளேன். சில பொருண்மைகளில் எனக்குத் தெளிவு ஏற்படாத நிலையில் நான் பதிய தாமதமாகிறது. இருப்பினும் உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து இன்னும் எழுதுவேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:46, 4 பெப்ரவரி 2015 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவின் வரலாற்றில் சுந்தர், நற்கீரன் ஆகியோரது பங்களிப்புக்கள் மிகவும் முக்கியமானவை. எனது சனவரி மாதத் தொகுப்புக்களை அவர்கள் இருவருக்கும் உரித்தாக்குகிறேன். --மயூரநாதன் (பேச்சு) 03:34, 5 பெப்ரவரி 2015 (UTC)
- மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மயூரநாதன். :) இந்த வகையில்(லும்) விக்கியன்பைப்பரப்புவதற்கு எனது சனவரி மாதத்தொகுப்புகளை மணியனுக்கும் பூவுக்கும் கலைக்கும் உரித்தாக்குகிறேன். -- சுந்தர் \பேச்சு 04:51, 6 பெப்ரவரி 2015 (UTC)