விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள் 8

மாகிர் (சூன் 15, 2011 -சூன் 25, 2011) (வாக்கு: 23|0|0)தொகு

மாகிர், 2006 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பல்வேறு வகைகளில் பங்களித்து வருகிறார். நேரடியாக கட்டுரையாக்கத்தில் முனைப்பாகச் செயல்படும் முன்னே, தமிழ் விக்கிப்பீடியா சார்ந்து பல இணையக் கருவிகளை உருவாக்கி உள்ளார். தற்போதும், வார்ப்புரு உருவாக்கம், தானியங்கிப் பராமரிப்பு உட்பட அவரது பல்வேறு பணிகள் நுட்பம் சார்ந்தவை. மாகிருக்கு நிருவாக அணுக்கம் அளிப்பது அவரது பணிகளைத் திறன்பட செய்ய உதவும். எனவே, மாகிருக்கு நிருவாக அணுக்கம் அளிக்க பரிந்துரைக்கிறேன். நன்றி--இரவி 16:18, 15 சூன் 2011 (UTC)

உங்களது பரிந்துரைக்கு மிக்க நன்றி இரவி. இந்த நிருவாக அணுக்கம் நுட்பம் சார்ந்த எனது பங்களிப்பிற்கு மேலும் உதவும். நன்றி. -- மாகிர் 04:38, 16 சூன் 2011 (UTC)

ஆதரவுதொகு

 1. -இரவி 16:18, 15 சூன் 2011 (UTC)
 2. --P.M.Puniyameen 16:27, 15 சூன் 2011 (UTC)
 3. --Natkeeran 16:32, 15 சூன் 2011 (UTC)
 4. --மயூரநாதன் 17:59, 15 சூன் 2011 (UTC)
 5. --Kanags \உரையாடுக 21:15, 15 சூன் 2011 (UTC)
 6. --மணியன் 05:08, 16 சூன் 2011 (UTC)
 7. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 06:11, 16 சூன் 2011 (UTC)
 8. --சஞ்சீவி சிவகுமார் 06:34, 16 சூன் 2011 (UTC)
 9. --அஸ்வின் 07:13, 16 சூன் 2011 (UTC)
 10. --சிவகோசரன் 09:02, 16 சூன் 2011 (UTC)
 11. --செந்தி//உரையாடுக// 12:21, 16 சூன் 2011 (UTC)
 12. --சிவக்குமார் \பேச்சு 15:22, 16 சூன் 2011 (UTC)
 13. --சித்தாட்ரீம்ஸ் 10:52, 17 சூன் 2011 (IST)
 14. ----Santharooban 06:18, 17 சூன் 2011 (UTC)
 15. --சோடாபாட்டில்உரையாடுக 14:16, 17 சூன் 2011 (UTC)
 16. --குறும்பன் 11:56, 18 சூன் 2011 (UTC)
 17. --தகவலுழவன் 13:42, 18 சூன் 2011 (UTC)
 18. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 06:00, 20 சூன் 2011 (UTC)
 19. --செல்வா 17:21, 23 சூன் 2011 (UTC)
 20. ----கார்த்திக் 18:33, 23 சூன் 2011 (UTC)
 21. சுந்தர் \பேச்சு 08:59, 24 சூன் 2011 (UTC)
 22. --பவுல்-Paul 01:40, 25 சூன் 2011 (UTC)
 23. --Sengai Podhuvan 23:18, 26 சூன் 2011 (UTC)

எதிர்ப்புதொகு

நடுநிலைதொகு

கருத்துதொகு

கேள்விகள்
 • தமிழ் விக்கிச்சூழலில் நிருவாகிகள் செய்ய வேண்டிய பணிகளுள் எது முன்னுரிமையானது என்று நீங்கள் கருதுகிறீர்கள். நிருவாகி அணுக்கம் கிடைக்குமெனில் அப்பணியினைச் செய்ய எந்த விதமான நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுள்ளீர்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 05:13, 16 சூன் 2011 (UTC)
 1. சோடாபாட்டில், எனது கண்ணோட்டத்தில் தமிழ் விக்கியில் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் ஏராளமாக உள்ளது. தானியங்கி பணிகள் கிடப்பில் உள்ளது. உதா. ஊர்கள் பற்றிய கட்டுரை நூற்றுக்கணக்கில் சேர்க்கவேண்டியுள்ளது. தொழில்நுட்ப பங்களிப்பாளர்களை தவிக்கு பங்களிக்க தூண்டவேண்டும். பயிற்சி பெற்ற தானியங்கி பங்களிப்பாளர்கள் தவிக்கு இன்னும் அதிகம் இருக்க வேண்டும். விக்கியிடை இணைப்புகள் தொடர்ந்து சேர்க்கப்படவேண்டும்.
 2. விக்கி குறுந்தட்டுதிட்டம் வேகம் பெறாமல் உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மேலும் பல மாணவர்களையும், ஆசிரியர்களையும் தவிக்கு பங்களிப்பாளர்களாக குறைந்தபட்சம் வாசகர்களாக கிடைக்கும். இதுவரை 250 கட்டுரைகள் அந்த திட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை 500 கட்டுரைகளாக்கி அந்தக் கட்டுரைகளில் (தானியங்கி உதவியுடன்), கட்டுரை திருத்தம் செய்ய கோரி அந்தந்த கட்டுரைகளில் அறிவிப்பு செய்யலாம் என்றிருக்கிறேன்.
 3. தவியை ஐஏஎஸ் தேர்விற்கு ஆரம்ப கட்ட தகவல்களைப் பெறும் களமாக உருவாக்கவேண்டும். காட்டாக ஐஏஎஸ் தேர்விற்கு நடப்பு நிகழ்வுகள், பத்திரிக்கை தலையங்கங்களை தினமும் படிக்க, கவனிக்க சொல்கிறார்கள். விக்கியிலும் அதுபோன்ற கட்டுரைகளை பங்களிப்பாளர்கள் அவ்வப்போது எழுதுகிறார்கள். ஆனால் இதுபோன்ற கட்டுரைகள் அதிகம் எழுதப்படவேண்டும். இதில் அனுபவமிக்கவர்களை விக்கி பங்களிப்பாளர்களாக மாற்ற முயற்சிக்கவேண்டும்.
 4. அநேக கட்டுரைகளில் இடம்பெற்றுள்ள முக்கிய வார்ப்புருக்களை பூட்ட நினைத்துள்ளேன். (சிறு தவறு ஏற்பட்டாலும் எல்லா கட்டுரைகளையும் சொதப்பிவிடும்). ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு விக்கி நிகழ்வுகளில் பங்காற்றிய அனுபவத்துடன் மற்ற விக்கியர்களுடன் இணைந்து மேலும் பட்டறைகள் நடத்த முயலுவேன். நன்றி -- மாகிர் 08:06, 16 சூன் 2011 (UTC)
மாகிர், முன்கூட்டியே பல பக்கங்கள் / வார்ப்புருக்களைப் பூட்டுவது விரும்பத்தக்கதல்ல. குறிப்பிட்ட வார்ப்புரு / பக்கம் தொடர் விசமத்துக்கு ஆளானால் மட்டும் பூட்டுவது நன்று. ஒரு கணக்குக்கான தானியங்கி அணுக்கம் என்பது முன்கூட்டியே குறிப்பிட்ட பணிகளுக்கே வழங்கப்படுகிறது. எனவே, நிருவாகப் பொறுப்பு ஏற்ற பிறகு நீங்கள் மேற்கொள்ளும் புதிய பல்வேறு வகையான தானியங்கிப் பணிகளையும் முன்கூட்டியே முறையாக அறிவித்து மற்ற பயனர்களின் கருத்தறிந்து செயல்படுவீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன். நன்றி --இரவி 20:25, 16 சூன் 2011 (UTC)
இரவி, தானியங்கி மட்டுமல்ல நிருவாகப் பொறுப்பும் கூட குறிப்பிட்ட சில பணிகளுக்காக மட்டுமே வழங்கப்படுவதை அறிவேன். எனினும் நினைவூட்டலுக்கு நன்றி. முறையாக அறிவிப்பு செய்த பிறகே எனது பணிகள் அமையும். -- மாகிர் 05:53, 17 சூன் 2011 (UTC)
 • மாகிர், இஆப (IAS) தேர்விற்குண்டான ஆரம்பகட்டத் தகவல்களைப் பெறும் களமாக விக்கிப்பீடியாவை மாற்ற வேண்டும் என்று கருதுவது நன்று. ஆனால் அதற்குத் தொழில்நோக்கானவர்களையும் (Professional) நீங்கள் கூறியுள்ளது போல அனுபவம் மிக்கோரையும் விக்கிப்பக்கம் வரவழைக்க வேண்டியிருக்கும். ஏனெனில், தகவல்பிழை என்பது கண்டிப்பாக இருக்கக்கூடாது. இவ்வாறு, அவர்களை இங்கு அழைத்துவர நீங்கள் ஏதேனும் திட்டம் வைத்துள்ளீர்களா? அவ்வாறு வந்தால், அவர்களுடைய பங்களிப்பு எந்த அளவிலும் எதை மையப்படுத்தியும் (கட்டுரை உருவாக்கம், தகவற்சேர்ப்பு, உள்ளதகவல்திருத்தம்) இருக்கும் என்று நினைக்கலாம்? --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 13:57, 18 சூன் 2011 (UTC)
சூர்யபிரகாசு, நல்ல கேள்வி. பள்ளி, கல்லூரிகளில் பட்டறைகளை நடத்துவதன் மூலம் கல்வியாளர்களை விக்கியின் பக்கம் ஒரளவு ஈர்க்க முடியும். விக்கி10 சென்னையில் கொண்டாடியபோது தமிழ் செய்தித் தளங்களின் உதவியால் நல்ல வரவேற்பிருந்தது. சென்னையில் நடைபெற்ற பட்டறைக்கும் அதிக வரவேற்பிருந்ததை அறிவீர்கள். அதுபோன்ற பட்டறைகள் இன்னும் அதிகம் நடத்தும் போது இதுபோன்ற பங்களிப்பாளர்களின் வருகை அதிகரிக்கும் என்பது திண்ணம். கட்டுரை உருவாக்கம், தகவற்சேர்ப்பு, உள்ளதகவல்திருத்தம் போன்றவைகளை நாம் வரையறுக்க முடியாது. அது அவரவர்களின் விருப்பம். பயனர்களின் பங்களிப்புகளை பார்த்து ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை நாம் வழங்கலாம். நன்றி -- மாகிர் 06:37, 19 சூன் 2011 (UTC)
 • என் தனிக்கருத்தே இது. மாகிர், மிகச்சிறந்த முறையிலே நிருவாகப் பணிகளைச் செய்ய இயலும் என நான் கருதுகின்றேன். நிருவாகப் பொறுப்பு இல்லாமலே பல பணிகளையும் பலரும் செய்யலாம் எனினும், மாகிர் போன்ற நிரலியறிவும், பங்களிக்கும் உளப்பான்மையும் உள்ளவர்கள் நிருவாகியாக இருப்பது த.வி-க்குப் பயன் அளிக்க வல்லது. ஆனால் இவற்றைப் பொது நன்மைக்காக, முறையுடன், தக்க திறந்த அணுகுமுறையுடன் செய்வது நல்லது. செய்வார் என்பது என் நம்பிக்கை. --செல்வா 17:31, 23 சூன் 2011 (UTC)

────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────செல்வா, நான் தற்போது செய்துவந்த (வார்ப்புரு போன்ற) பணிகளுக்கு நிர்வாகப் பொறுப்பில்லாமலே நன்றாக செய்ய முடிந்ததாக உணர்கிறேன். நிருவாக அணுக்கம் கூடுதல் பொறுப்புணர்ச்சியை தரும். விக்கி சமூக அங்கீகாரத்துடனே (நுட்பம் சார்ந்த) எனது நிருவாகப் பணிகள் இருக்கும். -- மாகிர் 17:18, 24 சூன் 2011 (UTC)

தேனி. மு. சுப்பிரமணி (சூன் 15, 2011 -சூன் 25, 2011) (வாக்கு: 24|0|0)தொகு

தேனி. மு. சுப்பிரமணி கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழ் விக்கிப்பீடியாவில் பல்வேறு வகையிலும் சிறப்பாக பங்களித்து வருகிறார். தமிழ்நாடு சார்ந்த பல தகவல்களைத் தொகுத்துத் தந்தது இவரது சிறப்பான பங்களிப்புகளில் ஒன்று. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி ஏற்பாடுகளில் கலந்து கொண்டது, விக்கிப்பீடியா குறித்து தமிழில் நூல் எழுதியது, அனைத்து பயனர்களுடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணி வருவது குறிப்பிடத்தக்கது. இவருக்கு நிருவாக அணுக்கம் அளிப்பது, இவரது பங்களிப்புகளை இன்னும் சிறப்பாகவும் முனைப்புடனும் செய்ய உதவும் என்று எண்ணுகிறேன். எனவே, தேனி. மு. சுப்பிரமணிக்கு நிருவாக அணுக்கம் அளிக்குமாறு பரிந்துரைக்கிறேன். நன்றி--இரவி 16:18, 15 சூன் 2011 (UTC)

என்னை நிருவாக அணுக்கத்திற்குப் பரிந்துரைத்த இரவிக்கு நன்றி. இரவியின் எதிர்பார்ப்பிற்கேற்பவும், தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள்/பங்களிப்பாளர்கள் அனைவரது ஒத்துழைப்புடனும் என்னுடைய விக்கிப்பணி மேலும் சிறப்பாக அமைய நிருவாக அணுக்கம் உதவும் என நம்புகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:05, 15 சூன் 2011 (UTC)

ஆதரவுதொகு

 1. - இரவி 16:18, 15 சூன் 2011 (UTC)
 2. --P.M.Puniyameen 16:27, 15 சூன் 2011 (UTC)
 3. --Natkeeran 16:32, 15 சூன் 2011 (UTC)
 4. --மயூரநாதன் 18:00, 15 சூன் 2011 (UTC)
 5. --Kanags \உரையாடுக 21:15, 15 சூன் 2011 (UTC)
 6. --மணியன் 05:09, 16 சூன் 2011 (UTC)
 7. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 06:12, 16 சூன் 2011 (UTC)
 8. --சஞ்சீவி சிவகுமார் 06:34, 16 சூன் 2011 (UTC)
 9. --அஸ்வின் 07:13, 16 சூன் 2011 (UTC)
 10. --சிவகோசரன் 09:03, 16 சூன் 2011 (UTC)
 11. --செந்தி//உரையாடுக// 12:21, 16 சூன் 2011 (UTC)
 12. --சிவக்குமார் \பேச்சு 15:22, 16 சூன் 2011 (UTC)
 13. --Santharooban 06:19, 17 சூன் 2011 (UTC)
 14. --குறும்பன் 11:56, 18 சூன் 2011 (UTC)
 15. --Gcsekaran 12:01, 18 சூன் 2011 (UTC)
 16. --Nan 13:17, 18 சூன் 2011 (UTC)
 17. --தகவலுழவன் 13:44, 18 சூன் 2011 (UTC)
 18. --Manikandand 09:57, 23 சூன் 2011 (UTC)
 19. --செல்வா 17:23, 23 சூன் 2011 (UTC)
 20. ----கார்த்திக் 18:34, 23 சூன் 2011 (UTC)
 21. --Chandravathanaa 19:25, 23 சூன் 2011 (UTC)
 22. -- சுந்தர் \பேச்சு 18:11, 24 சூன் 2011 (UTC)
 23. --பவுல்-Paul 01:40, 25 சூன் 2011 (UTC)
 24. --Sengai Podhuvan 23:20, 26 சூன் 2011 (UTC)

எதிர்ப்புதொகு

நடுநிலைதொகு

கருத்துதொகு

கேள்விகள்

தமிழ் விக்கிச்சூழலில் நிருவாகிகள் செய்ய வேண்டிய பணிகளுள் எது முன்னுரிமையானது என்று நீங்கள் கருதுகிறீர்கள். நிருவாகி அணுக்கம் கிடைக்குமெனில் அப்பணியினைச் செய்ய எந்த விதமான நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுள்ளீர்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 05:13, 16 சூன் 2011 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகிகள் தேர்வில் கருத்து எனும் தலைப்பில் கேள்விகள் அவசியமில்லை என்று உரையாடல் பக்கத்தில் முன்பே எனது கருத்தைத் தெரிவித்திருந்தேன்.இருப்பினும் நிருவாகியாக அணுக்கம் பெறுபவர்கள் அந்த அணுக்கத்தைக் கொண்டு என்னென்ன பணிகளை செய்வார்? என்பதை முன்கூட்டியே அறிய விரும்பும் தங்களின் ஆர்வம் பாராட்டுக்குரியது. அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று ஒப்புக்கு சொல்லிவிட்டு ஒன்றும் செய்யாமலிருப்பதை விட, தமிழ் விக்கிப்பீடியாவின் தேவைகளை அறிந்து, அவற்றில் எனது திறனுக்கேற்ற செயல்பாடுகள் அனைத்தும் அவசியம் இருக்கும். நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 10:54, 16 சூன் 2011 (UTC)
கேள்விகள் குறித்தவைகளை வாசித்தேன். நாம் செய்யவேண்டிய முன்னேற்றப் பணிகள் ஏராளம். அப்படியிருக்க, பல பேச்சுபக்கங்களில், அதிக நேரம் செலவிடுவது, வருத்தமாக இருக்கிறது. அதற்கு மாற்றாக, சிறந்த கட்டுரைகளை, அனைவரும் இணைந்து எழுதுவோம். இந்த பணியினை நான் எடுத்து செய்யலாமென்று இருக்கிறேன் என்று கூறிய பிறகு, அதனைமுடிக்கவில்லையெனில், யாரும் தவறென எண்ணப் போவதில்லை.அடுத்தவர் குறிப்பிட்ட காலம் வரை, அந்த பணியினைச் செய்யாமல், மற்றவைகளைக் கவனிப்பர். எனவே, அறிதல் அவசியம். அறிதலுக்காக கேள்விகள் அவசியமே. இங்கு கேள்விகள், அரிதலுக்காக அல்ல. வணக்கம்14:15, 18 சூன் 2011 (UTC)உழவன்+உரை..
 • தேனி சுப்பிரமணி, "தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகிகள் தேர்வில் கருத்து எனும் தலைப்பில் கேள்விகள் அவசியமில்லை என்று உரையாடல் பக்கத்தில் முன்பே எனது கருத்தைத் தெரிவித்திருந்தேன்" என்கின்றீர்கள். ஆனால், கேள்விகள் தேவை என்று பிறர் பலரும் கருதுவதால்தானே கேள்விகள் கேட்கின்றார்கள் என்று நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் அல்லவா? விக்கிப்பீடியாவின் அடிப்படைகளில் ஒன்று ஒருவர் நன்னோக்கத்துக்காக, மேம்பாட்டுக்காகவே ஒன்றைச் செய்கின்றார்க் என்று கொள்ளல் வேண்டும் அல்லவா? நீங்கள் இவற்றை அறியாதவர்கள் இல்லை. விக்கிப்பீடியா பற்றி நூலே எழுதியுள்ளீர்கள். ஆனால் சோடாபாட்டிலின் கேள்விக்கு நீங்கள் தந்த மடலின் அணுகுமுறையை, அது தெரிவிக்கும் கருத்துக்கோணத்தை அருள்கூர்ந்து நடுநின்று நோக்குங்கள். மாற்றுக் கருத்தை வைத்தாலும் வளர்முகமாக, இணக்கம் ஏற்படுமாறும் கூறிச் செயல்படல் நல்லது அல்லவா? சோடாபாட்டில் கேட்ட கேள்விகள் மிகவும் முக்கியமானவை! நீங்கள் "அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று ஒப்புக்கு சொல்லிவிட்டு ஒன்றும் செய்யாமலிருப்பதை விட, தமிழ் விக்கிப்பீடியாவின் தேவைகளை அறிந்து, அவற்றில் எனது திறனுக்கேற்ற செயல்பாடுகள் அனைத்தும் அவசியம் இருக்கும்."என்று கூறியதை முதல் பகுதியை விட்டுவிட்டு, "தமிழ் விக்கிப்பீடியாவின் தேவைகளை அறிந்து, அவற்றில் எனது திறனுக்கேற்றவாறு செயல்படுவேன்" என்று மட்டும் கூறியிருந்தால், எப்படி இருந்திருக்கும் என்று அருள்கூர்ந்து ஒருசிறிது எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். முதல் பகுதியை இட்டிருப்பதால் என்ன பயன் என்று எண்ணிப்பாருங்கள்! நிருவாகி சில நேரம் பயனர்களிடையே சிக்கல்களைத் தீர்க்க வேண்டிய தேவை இருக்கலாம். அப்பொழுது தக்க அணுகுமுறை தேவைப்படும். சொல்வதை எப்படிச் சொல்ல வேண்டும், எப்படிச் சொன்னால் நடுநிலை பிறழாது இருக்கும், நம் சொற்கள் எவ்வாறு பிறரால் உள்வாங்கக்கூடும் என்றெல்லாம் ஓர் அறிதல் இருத்தல் வேண்டும். உங்கள் பங்களிப்புகளும் நீங்கள் நிருவாகியாக இருந்து அளிக்கும் பங்களிப்புகளையும் எல்லோரையும் போலவே நானும் மிகவும் வரவேற்கின்றேன், எதிர்பார்க்கின்றேன். எனினும் நீங்கள் இங்கே நான் குறிப்பிட்ட கருத்துகளை நல்ல முறையிலே எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன். நல்வாழ்த்துகள்!--செல்வா 17:52, 23 சூன் 2011 (UTC)
ஆம், தேனி. சுப்பிரமணி. தனியாக ஒரு பயனருக்கு விருப்பம் இல்லை என்பதால் மட்டும் எந்தத் திட்டத்தையும் விலக்கி வைக்க முடியுமா என்று எண்ணிப் பாருங்கள். உங்கள் பங்களிப்புகளை நான் பெரிதும் வரவேற்கிறேன். குறிப்பாக, தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி ஒரு நூலை எழுதிய தனிப்பெருமை உங்களுக்கு உண்டு. ஆனால், நிருவாகித் தேர்தலில் கேள்விகள் கேட்பதைப் பற்றிய உரையாடலில் நீங்கள் எடுத்த நிலைப்பாட்டை மற்ற பயனர்களிடையே ஒப்புதல் இருந்தும் நீங்கள் மாற்றிக் கொள்ளாமல் இருக்கலாமா என்றும் எண்ணிப் பாருங்கள். கூட்டாகக் கலந்து பேசி இணக்க முடிவை எட்டுவது என்பது நமது அடிப்படைக் கொள்கை என்பதை நீங்கள் கட்டாயம் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன். இது பற்றிய உங்கள் கருத்தை அறியும் வரை நான் எனது வாக்கை நிறுத்தி வைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 09:06, 24 சூன் 2011 (UTC)
 • சுந்தர், எனக்கு தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர்/பயனர் நிர்வாகிகள் எவரிடமும் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை. இங்கு நண்பர் சோடாபாட்டிலின் கேள்விக்கு நான் என்னுடைய கருத்தை எனது முதல் பகுதியில் தெரிவித்திருந்தாலும், இரண்டாம் பகுதியில் பதிலளித்து விட்டேன். எனவே நீங்கள் குறிப்பிடும் அடிப்படைக் கொள்கையை ஏற்கவில்லை என்ற நிலை இங்கில்லை. நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 11:36, 24 சூன் 2011 (UTC)
  • விளக்கத்துக்கு நன்றி, தேனி. சுப்பிரமணி. மற்ற பயனர்களுடன் தீவிர கருத்து வேறுபாடுகள் இல்லையென அறிவதில் மகிழ்ச்சி. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எந்தத் தவறுமில்லை. :) -- சுந்தர் \பேச்சு 18:09, 24 சூன் 2011 (UTC)
   • பதிலுக்கு முன்னர் வேறு பொதுவான கருத்து (அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று ஒப்புக்கு சொல்லிவிட்டு...) ஒன்றை இட்டிருந்ததால் கவனிக்கவில்லை. என்னைப் பொருத்த வரை இந்த உரையாடலே வாக்கெடுப்பில் கேள்வி பதிலின் தேவையை உணர்த்துகிறது. இருந்தாலும் நீங்கள் இங்கு நெடுநாள் சிறப்பாகப் பங்களித்துள்ளபடியாலும் உங்களைப் பற்றிப் நானும் மற்ற பயனர்களில் பெரும்பாலானோரும் ஏற்கனவே உணர்ந்துள்ளபடியாலும் இந்த ஒரு பதிலின் அடிப்படையில் இல்லாமல் உங்கள் பொதுவான நடவடிக்கைகளின் அடிப்படையில் எனது ஆதரவைப் பதிவு செய்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 18:17, 24 சூன் 2011 (UTC)