விக்கிப்பீடியா பேச்சு:சிறப்புத் தொடர்-தொகுப்பு 2025
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:34, 28 அக்டோபர் 2024 (UTC)
இன்னொரு நிகழ்வை அனைவருக்கும் ஏற்புடைய இடத்தில் திட்டமிட்டு நடத்தலாம். --மகாலிங்கம் இரெத்தினவேலு 13:40, 28 அக்டோபர் 2024 (UTC)
திட்டம் தொடர்பான பணிகள்
தொகுதொடர்-தொகுப்பு 2024 நிகழ்வில் இலங்கைப் பயனர் கலந்துகொள்ள இயலவில்லை. எனவே, அந்நிகழ்வின் தொடர்ச்சியாக இன்னொரு நிகழ்வு திட்டமிடப்படுகிறது. தொடர்பான தகவல்கள்:
- சேலம் அல்லது திருச்சி நகரில், விடுதி ஒன்றில் 2 நாட்களுக்கு நிகழ்வு நடைபெறும்.
- நிதி மேலாண்மைத் திட்டம் தயாரிக்கப்பட்டு, சிஐஎஸ் அமைப்பிடம் இணைவாக்கத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்துப் பேசப்படும்.
- தேவைப்பட்டால், இன்னொரு Rapid Fund கோரிக்கை தாக்கல் செய்யப்படும்.
- தொடர்-தொகுப்பு 2024 நிகழ்வில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அதே 20 பயனர்கள் இந்த நிகழ்விலும் கலந்துகொள்ள அழைக்கப்படுவர்.
- பிப்ரவரி 1, 2 அல்லது பிப்ரவரி 8, 9 நாட்களில் நிகழ்வு நடத்தப்படும்.
- முதல் நாளில் 'அறிவுப் பகிர்வு' நிகழ்ச்சி நடைபெறும்.
- இரண்டாம் நாளில் கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை மேம்படுத்தும் பணி நடைபெறும்.
- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:41, 2 நவம்பர் 2024 (UTC)
- விருப்பம்-நீச்சல்காரன் (பேச்சு) 07:43, 2 நவம்பர் 2024 (UTC)
- குறிப்பாக பிப்ரவரியில் நடத்தத் திட்டமிடுவதற்கு ஏதேனும் காரணம் உண்டா? ஏன் என்றால், கடந்த செப்டம்பர் மாதம் தான் 2024 நிகழ்வு நடந்ததால் இது உடனடியாக வருவது போல தோன்றுகிறது. வீட்டில் 10,+2 படிக்கும் பிள்ளைகள் உள்ளவர்கள் பிப்ரவரி மாதம் கலந்து கொள்வதில் சிரமம் இருக்கலாம்.
- கடந்த முறை கலந்து கொண்ட அதே 20 பேர் தான் கலந்து கொள்ள வேண்டுமா? இல்லை, புதிதாக வேறு சிலரோ 20க்கு மேற்பட்டவர்களோ கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாமா?
- 2023ல் இந்நிகழ்வு நடத்தத் திட்டமிட்டு ஒருங்கிணைக்க முடியவில்லை என்று நினைக்கிறேன். 2024 நிகழ்வுக்கான நல்கை கோரிக்கை, வரவு - செலவு கணக்கு எங்கே பார்க்கலாம்? 2024 நிகழ்வின் மூலம் பெற்றுக் கொண்ட பாடங்கள் என்ன? அவற்றின் மூலம் இந்நிகழ்வை எப்படி மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்?
- 2025 நிகழ்வுக்கான என்னுடைய பரிந்துரைகள்: தொடர்ந்து 3, 4 நாட்களாக வார இறுதியில் விடுமுறை வரும் நாட்களைத் தெரிவு செய்யலாம். அது பரவலாகக் கொண்டாடப்படும் திருவிழா நாட்களாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 3 நாள் நிகழ்வாக நடத்தி, அதில் ஒரு நாள் உள்ளூர் சுற்றுலாவோடு இணைந்த Photowalk போல நடத்தலாம். இந்த ஒரு நாள் சுற்றுலா பயனர்களுக்குப் புத்துணர்வும் ஓய்வும் அளிக்கும். இதற்கேற்ப ஓய்வளிக்கக் கூடிய கடற்கரை / மலைப் பகுதி நகரங்களைத் தேர்ந்தெடுக்கலாம். 20 பேர் என்கிற எண்ணிக்கைக் கட்டுப்பாடு இல்லாவிட்டால், கூடுதல் பயனர்களை அழைக்கலாம். ஒரு பரிசோதனை முயற்சியாக, உறுப்பினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரையும் அழைத்து வரலாம் என்று நல்கை வேண்டிப் பார்க்கலாம். பல பங்களிப்பாளர்கள் பத்தாண்டுகளுக்கு மேல் முனைப்பாக விக்கிப்பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். பலருக்குப் புதிதாகத் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கலாம். அந்தப் பொறுப்புகளை எல்லாம் விட்டு விட்டு எந்நேரமும் விக்கியே கதி என்று கிடந்தால் நாளடைவில் அவர்களுக்குக் குடும்பத்தில் விக்கிப்பணிகளுக்கு ஒத்துழைப்பு கிடைக்காமலும் போகலாம். கடந்த சில நிகழ்வுகளில் விக்கிப்பயனர்களுடன் சக பங்களிப்பாளர்களாக கலந்து கொண்ட இணையர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்ததைக் காண முடிந்தது. அவர்களுக்குத் தங்கள் இணையர் ஆற்றும் பணி எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளவும் உதவியது. இதற்கு நிதி ஒப்புதல் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால், இதன் முக்கியத்துவத்தை நாம் ஏற்றுக் கொண்டு விண்ணப்பித்துப் பார்ப்பதில் தவறில்லை.
- சில விக்கி சமூகங்களில் விக்கி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களுக்கு Childcare support க்கு என்றும் ஒருங்கிணைப்பாளர்களின் நேரத்தைச் செலவழிப்பதற்கும் பகுதிநேர stipend தருகிறார்கள். இது போன்ற வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்வதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவில் தேவைப்படும் திட்டங்களை முன்னெடுக்கத் தொய்வு இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.
- தெற்காசிய நிதிக்குழுவில் இருப்பதால் அந்த அனுபவத்தில் என் பரிந்துரைகளை வழங்கி திட்டத்தை மேலும் சிறப்பாக நடத்த பங்களிக்க முடியும் என்ற நோக்கில் இக்கேள்விகளைக் கேட்கிறேன். ஏற்கனவே நடத்தப்பட்ட நிகழ்வின் மீது குறை சொல்வதாகவோ ஒருங்கிணைத்தவர்களைக் கேள்வி கேட்பதாகவோ தவறாக எண்ணிக் கொள்ள வேண்டாம். இது போன்ற நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் அனைவருக்கும் என் நன்றியையும் வாழ்த்துகளையும் பதிவு செய்கிறேன்.
- இரவி (பேச்சு) 18:09, 2 நவம்பர் 2024 (UTC)
- @Ravidreams வணக்கம். உங்களின் ஐயங்கள் / கேள்விகளுக்கு, ஒன்றன் கீழ் ஒன்றாக பதிலளித்துள்ளேன்:
- தொடர்-தொகுப்பு 2024 நிகழ்வில் இலங்கைப் பயனர் ஒருவர் கலந்துகொள்ளும் வகையில் திட்டமிட்டிருந்தோம். விசா விண்ணப்பிப்பதற்கான ஏற்பாட்டுப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால், அப்பயனரால் கலந்துகொள்ள இயலவில்லை. தமிழகத்தில் வாழும் இரண்டு பயனர்கள் சொந்தக் காரணங்களால் கலந்துகொள்ள இயலவில்லை. ஆகவே, தெரிவு செய்யப்பட்ட 20 பயனர்களில் 3 பயனர்கள் கலந்துகொள்ளவில்லை. அதற்கு முன்னதாக, திட்டமிட்ட 23 பேரில் 20 பேர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். ஒட்டுமொத்தமாக 6 பயனர்கள் கலந்துகொள்ளாத காரணத்தால் இந்தியப் பணம் ₹90,972 நிதி மீதம் இருந்தது. Rapid Fund கோரிக்கையின்போது இலங்கைப் பயனர் கலந்துகொள்வதையும் கருதியிருந்ததால் அந்நிகழ்வின் நீட்சியாக இன்னொரு நிகழ்வினையும் நடத்திட முடிவு செய்தோம். ஆறு மாத கால திட்டமாக நமது நிதிக் கோரிக்கையில் இட்டிருந்ததால் மார்ச் 2025இற்கு முன்பாக சிறப்புத் தொடர்-தொகுப்பு நிகழ்வினை நடத்தலாம் என மாதாந்திரக் கூட்டத்தில் பரிந்துரைத்தேன். இலங்கைப் பயனரை தொடர்புகொண்டு கேட்டபோது, பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் தனக்கு உகந்ததாக இருக்கும் என தெரிவித்தார். நமது பயனர்களில் சிலர் ஆசிரியர்களாக இருப்பதால் அவர்களிடம் கேட்டபோது, பிப்ரவரி மாதம் தமக்கு சரியாக இருக்குமென தெரிவித்தார்கள். இவற்றின் அடிப்படையில் பிப்ரவரி மாதத்தை இறுதி செய்துள்ளோம். கலந்துகொண்ட 17 பயனர்களின் வீட்டில் 10, +2 படிக்கும் பிள்ளைகள் இல்லை என்பது எனது புரிதல். எனினும் அனைவரிடமும் கேட்டுவிட்டு அதன்படி திட்டமிடலைத் தொடர்வோம்.
- நிதிக் கோரிக்கையில் 23 பயனர்கள் + 2 சிஐஎஸ் விருந்தினர்கள் என்பதாக நிதி மேலாண்மைக்கான முன்மொழிவு தந்திருந்தோம். கலந்துகொள்ள விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பின்போது விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவித்து, அதன் பிறகு 2 வாரங்கள் கூடுதலாக நேரம் தந்தோம். முன்பு பங்காற்றியவர்கள், அண்மைக் காலங்களில் பங்களிப்போர் ஆகியோரின் உரையாடல் பக்கத்திலும் அழைப்பு இட்டிருந்தோம். இங்கு காணலாம்: விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2024/பயனர் அறிவிப்பு. இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும், 23 பயனர்கள் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். நிகழ்வின் பெரும்பகுதி 'நேரடியாகப் பணியாற்றுதல்' என்பதால் 3 விண்ணப்பங்களை நாம் தெரிவு செய்யவில்லை. இந்தக் கற்றலின் அடிப்படையிலேயே அதே 20 பயனர்களை அழைப்பது என முடிவு செய்தோம்.
- தொடர்-தொகுப்பு 2024 நிகழ்விற்கான (அ) மேல்-விக்கியிலுள்ள திட்டப் பக்கம்: Tamil Wikipedia Content Enrichment Meet, (ஆ) நிதிக் கோரிக்கை வைக்கப்பட்ட பக்கம்: In-person Edit-a-thon in Tamil Wikipedia and Strategic Meet. பெற்றுக்கொண்ட பாடங்களை முறைப்படி இன்னமும் ஆவணப்படுத்தவில்லை. எனினும், இதுவரை பெற்ற பலன்களை மேல்-விக்கியிலுள்ள திட்டப் பக்கத்தில் தொடர்ந்து இற்றை செய்துவருகிறோம். சிறப்புத் தொடர்-தொகுப்பு நிகழ்வையும் அவ்வழியிலேயே நடத்தலாம் என்றே நினைக்கிறேன்.
- 3 நாள் நிகழ்வு எனும் கருத்துருவினை 2025 ஆம் ஆண்டின் இறுதியில் கொண்டு வரலாமென ஒரு எண்ணம் உள்ளது. இங்கு காணலாம்: விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2025. உங்களின் பரிந்துரைகளை அத்தகைய நிகழ்வின்போது செயல்படுத்தலாம் எனக் கருதுகிறேன். பிப்ரவரியில் நடத்தத் திட்டமிடப்படும் நிகழ்வானது 2024 ஆண்டின் நிகழ்வின் நீட்சி என்பதால், சிறப்புத் தொடர்-தொகுப்பு 2025 எனப் பெயரிட்டுள்ளோம். மீதமிருக்கும் நிதியோடு, சிஐஎஸ் உடனான இணைவாக்கத்தின் மூலமாக சிறப்புத் தொடர்-தொகுப்பு 2025 நிகழ்வினை நடத்தலாம் என்பதாக மாதாந்திரக் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.
- Childcare support, stipend போன்ற வாய்ப்புகள் குறித்த தகவல்களுக்கு நன்றிகள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:29, 3 நவம்பர் 2024 (UTC)
- உரிய விளக்கங்களுக்கு நன்றி. போன முறை வந்தவர்கள் சிலர் இந்த முறை வர முடியாமல் போகலாம். போன முறை வர முடியாதவர்கள், விண்ணப்பிக்க இயலாதவர்கள் இந்த முறை வர எண்ணலாம். ஆகவே, தமிழ் விக்கிப்பீடியாவின் எந்த நிகழ்வு என்றாலும் இயன்ற அளவு திறந்த முறையில் அனைவருக்கும் அழைப்பு விடுப்பது போல் செயற்படுவதே சரியாக இருக்கும். ஒரு வேளை சென்ற முறை வந்தவர்களுக்கு அடுத்த நிலை உயர் பயிற்சி அளிப்பது என்பது போன்ற திட்டங்கள் என்றால், இன்னார் தான் வர வேண்டும் என்பதை வரையறுக்கலாம். இரவி (பேச்சு) 22:36, 6 நவம்பர் 2024 (UTC)
- @Ravidreams "இயன்ற அளவு திறந்த முறையில் அனைவருக்கும் அழைப்பு விடுப்பது போல் செயற்படுவதே சரி" எனும் உங்களின் கருத்திற்கு நன்றி. முந்தைய நிகழ்வில் வர இயலாதவர்களையும் கருத்திற்கொண்டு 20 பேரை (17 + 3 பேர்) அழைக்கலாம் என முதற்கட்டமாக நினைத்திருந்தோம். உங்களின் பரிந்துரைப்படி, முந்தைய நிகழ்வில் கலந்துகொள்ள விண்ணப்பிக்காதவர்களுக்கும் வாய்ப்பு தருவது சாத்தியமே. எனவே, 25 பேர் எனும் கணக்குடன் திட்டமிடலைத் தொடர்கிறோம் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். முந்தைய நிகழ்வின் அடுத்த நிலை உயர் பயிற்சியாக இந்த நிகழ்வு வடிவமைக்கப்படவில்லை. ஒரு நன்மை யாதெனில், அந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் இந்த நிகழ்வின்போது உடனடியாக பணியை ஆரம்பித்துவிடுவர். எனினும் கலந்துகொள்ளாத 3 பேருக்கு வழிகாட்டுதலை தரவேண்டியது இருக்கத்தான் செய்யும். இந்நிலையில் கூடுதலாக 5 பேருக்கு வழிகாட்டினால், நன்மை அதிகரிக்கும் என்பது உண்மை. அதற்கேற்ப நிகழ்ச்சி நிரலில் சிறு மாற்றங்களை செய்துகொள்கிறோம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:30, 8 நவம்பர் 2024 (UTC)
- என் பரிந்துரையை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. இந்த நிகழ்வு என்றில்லை, எந்த நிகழ்வு, செயற்பாடானாலும் அது எல்லோரும் எப்போதும் திறந்த முறையில் பங்கெடுக்க வாய்ப்புள்ள ஒன்றாக ஏற்பாடு செய்வது வரவேற்கத்தக்கது. நாம் முறையாகச் செயற்பட்டாலும், ஒரு சிலரோ ஒரு குழுவோ தனித்து இயங்குவது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டால், அது மற்ற பயனர்களுக்கும், புதிய பயனர்களுக்கும் விக்கிச் சமூகத்தில் இருந்து விடுபட்டுப் போன உணர்வைத் தரும். இத்தகைய குழு இயங்கியலால் பொழிவு இழந்த சமூகங்கள் நிறைய. அதனால் தான் என் கருத்துகளைப் பகிர்ந்தேன். இரவி (பேச்சு) 08:18, 8 நவம்பர் 2024 (UTC)
- @Ravidreams விருப்பம் நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போன்று முறையாக செயல்படுகிறோம். எடுத்துக்காட்டாக இந்த தள அறிவிப்பைக் காணலாம். திறந்த முறையில் செயல்படுவது குறித்து, வரும் காலங்களில் கூடுதல் கவனம் செலுத்துவோம் என உறுதியளிக்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:25, 9 நவம்பர் 2024 (UTC)
- மகிழ்ச்சி. நன்றி! இரவி (பேச்சு) 09:58, 9 நவம்பர் 2024 (UTC)
- @Ravidreams விருப்பம் நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போன்று முறையாக செயல்படுகிறோம். எடுத்துக்காட்டாக இந்த தள அறிவிப்பைக் காணலாம். திறந்த முறையில் செயல்படுவது குறித்து, வரும் காலங்களில் கூடுதல் கவனம் செலுத்துவோம் என உறுதியளிக்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:25, 9 நவம்பர் 2024 (UTC)
- என் பரிந்துரையை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. இந்த நிகழ்வு என்றில்லை, எந்த நிகழ்வு, செயற்பாடானாலும் அது எல்லோரும் எப்போதும் திறந்த முறையில் பங்கெடுக்க வாய்ப்புள்ள ஒன்றாக ஏற்பாடு செய்வது வரவேற்கத்தக்கது. நாம் முறையாகச் செயற்பட்டாலும், ஒரு சிலரோ ஒரு குழுவோ தனித்து இயங்குவது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டால், அது மற்ற பயனர்களுக்கும், புதிய பயனர்களுக்கும் விக்கிச் சமூகத்தில் இருந்து விடுபட்டுப் போன உணர்வைத் தரும். இத்தகைய குழு இயங்கியலால் பொழிவு இழந்த சமூகங்கள் நிறைய. அதனால் தான் என் கருத்துகளைப் பகிர்ந்தேன். இரவி (பேச்சு) 08:18, 8 நவம்பர் 2024 (UTC)
- @Ravidreams "இயன்ற அளவு திறந்த முறையில் அனைவருக்கும் அழைப்பு விடுப்பது போல் செயற்படுவதே சரி" எனும் உங்களின் கருத்திற்கு நன்றி. முந்தைய நிகழ்வில் வர இயலாதவர்களையும் கருத்திற்கொண்டு 20 பேரை (17 + 3 பேர்) அழைக்கலாம் என முதற்கட்டமாக நினைத்திருந்தோம். உங்களின் பரிந்துரைப்படி, முந்தைய நிகழ்வில் கலந்துகொள்ள விண்ணப்பிக்காதவர்களுக்கும் வாய்ப்பு தருவது சாத்தியமே. எனவே, 25 பேர் எனும் கணக்குடன் திட்டமிடலைத் தொடர்கிறோம் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். முந்தைய நிகழ்வின் அடுத்த நிலை உயர் பயிற்சியாக இந்த நிகழ்வு வடிவமைக்கப்படவில்லை. ஒரு நன்மை யாதெனில், அந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் இந்த நிகழ்வின்போது உடனடியாக பணியை ஆரம்பித்துவிடுவர். எனினும் கலந்துகொள்ளாத 3 பேருக்கு வழிகாட்டுதலை தரவேண்டியது இருக்கத்தான் செய்யும். இந்நிலையில் கூடுதலாக 5 பேருக்கு வழிகாட்டினால், நன்மை அதிகரிக்கும் என்பது உண்மை. அதற்கேற்ப நிகழ்ச்சி நிரலில் சிறு மாற்றங்களை செய்துகொள்கிறோம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:30, 8 நவம்பர் 2024 (UTC)
- @Ravidreams வணக்கம். உங்களின் ஐயங்கள் / கேள்விகளுக்கு, ஒன்றன் கீழ் ஒன்றாக பதிலளித்துள்ளேன்:
இற்றை
தொகு- நிகழ்வு நடத்துவதற்கு ஏதுவான கட்டமைப்பைக் கொண்ட ஒரு விடுதியைத் தேர்ந்தெடுத்து, அதற்கேற்ப நிதி மேலாண்மைத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்தை சிஐஎஸ் அமைப்புடன் பகிர்ந்துள்ளோம்.
- இணைவாக்கத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சிஐஎஸ் அமைப்புடன் பேசப்பட்டது. இந்த நிகழ்வு நடைபெற இணைவாக்க முறையில் உதவி செய்வதாக தெரிவித்துள்ளார்கள்.
- பிப்ரவரி மாதம் 14 முதல் 16 வரை விக்கிமூலத்தின் மாநாடு இந்தோனேசியாவில் நடைபெறவுள்ளது. எனவே, சிறப்புத் தொடர்-தொகுப்பு நிகழ்வை மார்ச் மாதத்திற்கு நகர்த்துவது குறித்து, 'தொடர்-தொகுப்பு 2024' நிகழ்வில் கலந்துகொண்டவர்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்படும். இலங்கைப் பயனரிடத்தும் அவரின் வசதி, வாய்ப்புகள் குறித்து பேசப்படும்.
- இந்த உரையாடல் பக்கத்தில் திட்டம் தொடர்பான பணிகள் துணைத் தலைப்பில் @Ravidreams இக்கேள்விகளைக் கேட்டிருந்தார்:
- //கடந்த முறை கலந்து கொண்ட அதே 20 பேர் தான் கலந்து கொள்ள வேண்டுமா? இல்லை, புதிதாக வேறு சிலரோ 20க்கு மேற்பட்டவர்களோ கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாமா?// இது குறித்து மறுசீராய்வு செய்யப்படும்.
- திட்டமிடப்படும் இந்த நிகழ்வு குறித்த கருத்துக்களை இங்கு தெரிவிக்குமாறு குமுகாய உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கி, செயல்திறன் மிக்க நிகழ்வாக நடத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:43, 6 நவம்பர் 2024 (UTC)
விக்கி மூலத்தின் மாநாடு, தமிழ்நாட்டில் திருமண முகூர்த்த நாட்கள் இவற்றைக் கருத்திற் கொண்டு... 2025 ஆம் ஆண்டின் மார்ச் 15, மார்ச் 16 (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் இந்த நிகழ்வினை நடத்துதல் என்பது எனது பரிந்துரை. @Balurbala: @Sancheevis: @சத்திரத்தான்: @Selvasivagurunathan m: @Arularasan. G: @Neechalkaran: @TNSE Mahalingam VNR: @Sridhar G: @S.BATHRUNISA: @Vasantha Lakshmi V: @Balu1967: @Balajijagadesh:@Info-farmer: @சா அருணாசலம்: @Ramkumar Kalyani: @Thiyagu Ganesh: @கி.மூர்த்தி: @Saranbiotech20: @Mohammed Ammar: @Hibayathullah: வணக்கம். உங்களின் கருத்துக்களை இட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:57, 7 நவம்பர் 2024 (UTC)
- விருப்பம்-- சா. அருணாசலம் (உரையாடல்) 08:52, 7 நவம்பர் 2024 (UTC)
- விருப்பம்-- பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 08:57, 7 நவம்பர் 2024 (UTC)
- விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:21, 7 நவம்பர் 2024 (UTC)
- எந்நிகழ்வு நடத்தாலும், வியாழன் இரவு அனைவரும் ஒன்று கூடுதலும், ஞாயிறு இரவு அனைவரும் அவரது பணியிடமோ, இல்லமோ திரும்புதல் வசதியாக இருக்கும். பயணக்கட்டணமும் 30-40%குறைவாகும் வாய்ப்புகள் ஏற்படும். --த♥உழவன் (உரை) 09:23, 7 நவம்பர் 2024 (UTC)
- விருப்பம் --கி.மூர்த்தி (பேச்சு) 09:30, 7 நவம்பர் 2024 (UTC)
- விருப்பம் --மகாலிங்கம் இரெத்தினவேலு--மகாலிங்கம் இரெத்தினவேலு 09:39, 7 நவம்பர் 2024 (UTC)
- விருப்பம் --ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 10:42, 7 நவம்பர் 2024 (UTC)
- விருப்பம் - ராம்குமார் கல்யாணி 🌿 15:51, 7 நவம்பர் 2024 (UTC)
- விருப்பம்--கு. அருளரசன் (பேச்சு) 09:41, 8 நவம்பர் 2024 (UTC)
- விருப்பம்--தியாகு கணேஷ் (பேச்சு) 12:06, 8 நவம்பர் 2024 (UTC)
- விருப்பம் --சரவணன் பெரியசாமி (பேச்சு)04:12, 9 நவம்பர் 2024 (UTC)
- விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 12:45, 10 நவம்பர் 2024 (UTC)
- விருப்பம் -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:14, 10 நவம்பர் 2024 (UTC)
- விருப்பம் -- S.BATHRUNISA 08:29, 11 நவம்பர் 2024 (UTC)
- விருப்பம் -- இரா. பாலாபேச்சு 13:30, 11 நவம்பர் 2024 (UTC)
- விருப்பம்--குனு அன்வர் (பேச்சு) 16:11, 11 நவம்பர் 2024 (UTC)
- விருப்பம்--ஹிபாயத்துல்லா (பேச்சு) 16:46, 19 நவம்பர் 2024 (UTC)
முந்தைய நிகழ்வில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், 14 பயனர்கள் தமது கருத்தை இங்கு தெரிவித்துள்ளனர் (74%). கருத்தினைத் தெரிவித்துள்ளவர்களில், 13 பயனர்கள் தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர் (93%). இதனடிப்படையில், நிகழ்வு நடைபெறும் நாட்களாக 2025 ஆம் ஆண்டின் மார்ச் 15, மார்ச் 16 (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களை இறுதி செய்கிறோம்; திட்டப் பணியை தொடர்கிறோம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:27, 12 நவம்பர் 2024 (UTC)
@Info-farmer: 3-நாள் நிகழ்வு என்பதாக இருந்தால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களை திட்டமிடலாம்; வியாழன்று இரவு ஒன்றுகூடலாம். 2-நாள் நிகழ்வு என்பதால் சனி, ஞாயிறு ஆகிய நாட்களை திட்டமிடுகிறோம்; வெள்ளியன்று இரவு ஒன்றுகூடுகிறோம். முந்தைய நிகழ்விலும், திட்டமிடப்பட்டுவரும் நிகழ்விலும் கலந்துகொள்பவர்களில் பெரும்பாலானோர்க்கு ஞாயிறு அன்று மட்டுமே வார விடுமுறை நாள் ஆகும். சனிக்கிழமைக்கு விடுப்பு எடுத்தே அவர்கள் வரவேண்டியது இருக்கும். நிகழ்வு நாட்கள், நிகழ்வு நடக்கும் ஊர், நிகழ்வு நடக்கும் இடம், தெரிவு செய்யப்பட்டவர்கள் குறித்தான தகவல்களை விரைவில் அறிவிக்க முயற்சிகள் எப்போதும் எடுக்கப்படுகின்றன. இம்முயற்சிகள் நடைபெறவிருக்கும் நிகழ்விற்காகவும் எடுக்கப்படும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:56, 12 நவம்பர் 2024 (UTC)
//கலந்துகொள்பவர்களில் பெரும்பாலானோர்க்கு ஞாயிறு அன்று மட்டுமே வார விடுமுறை நாள் ஆகும். சனிக்கிழமைக்கு விடுப்பு எடுத்தே அவர்கள் வரவேண்டியது இருக்கும்.// இந்நிகழ்வு தொடர்பாக கூடுதல் நிதி நல்கை வேண்டும் பட்சத்தில், அல்லது இனி வரும் நல்கை விண்ணப்பங்களில், இத்தகைய வேலை நாட்களுக்கு விடுமுறை எடுக்கும் இழப்பை ஈடுகட்டும் வகையில் மதிப்பூதியம் வழங்கக் கோரலாம். அலுவலகத்தில் விடுப்பு கிடைக்காது, விடுப்பு கிடைத்தாலும் சம்பளம் போகும் என்கிற நிலையில்உள்ளவர்கள் இத்தகைய கூடல்களில் கலந்து கொள்ள இந்தத் தொகை உதவும். வேலையிடத்தில் இத்தகைய சிக்கல் உள்ளோருக்கு மட்டும் அல்லாமல், கலந்து கொள்ளும் அனைவருக்கும் இத்தகைய மதிப்பூதியம் வழங்கக் கோரலாம். இதை ஏற்றுக் கொண்டு வழங்குவார்களா தெரியவில்லை. ஆனால், கேட்டுப் பார்ப்பதில் தவறில்லை. பங்கேற்பைக் கூட்டுவது, தக்க வைப்பது ஆகிய அடிப்படைகளில் இந்தக் கோரிக்கையை முன்வைக்கலாம் --இரவி (பேச்சு) 18:17, 19 நவம்பர் 2024 (UTC)
- விருப்பம். உங்களின் பரிந்துரையை அடுத்த நிகழ்வின்போது கவனத்திற் கொள்கிறோம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:25, 19 நவம்பர் 2024 (UTC)