சனவரி 23 – 2018 காற்பந்து உலககோப்பையின் அதிகாரபூர்வமான வெற்றிக் கிண்ணம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு கொழும்பில் 2 நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. 2018 பிஃபா உலகக்கிண்ணத்தின் சுற்றுப் பயணம் இலங்கையில் இருந்து ஆரம்பித்து 52 உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. வரலாற்றில் முதல்தடவையாக இக்கிண்ணம் இலங்கையில் இருந்து சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கின்றது.[1][2]
பெப்ரவரி 23 – 40 ஆண்டுகளுக்குப் பின்னர் முதற்தடவையாக இலங்கையில் பெரும் செலவில் தயாரிக்கப்பட்ட கோமாளி கிங்ஸ் என்ற முழுநீளத் தமிழ்த் திரைப்படம் நாடெங்கும் 50 அரங்குகளில் திரையிடப்பட்டது.[7]
பெப்ரவரி 27 – சிங்கள-முசுலிம் கலவரம் அம்பாறை நகரில் ஆரம்பமானது. அம்பாறை முசுலிம்களின் உணவகங்களில் வேதிப் பொருட்கள் சேர்க்கப்பட்டன என வதந்தி பரவியதை அடுத்து பள்ளிவாசல்கள், உணவகங்கள் சிங்களவர்களினால் தாக்கப்பட்டன.[8]
ஏப்ரல் 5 – மட்டக்களப்பு மாநகரசபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தியாகராஜா சரவணபவன் முதல்வராகவும், க. சத்தியசீலன் பிரதி முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[11]
மே 23 – மே 19 முதல் இலங்கையில் பெய்து வரும் கனத்த மழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தெற்கு, மேற்கு, மத்திய மாவட்டங்களில் 13 பேர் உயிரிழந்தனர், 100,000 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.[15][16][17]
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் தலைமையில் கொழும்பில் கூட்டு எதிரணியினரின் “ஜனபலய கொலம்பட்ட” போராட்டம் இடம்பெற்றது.[22][23]
காணாமல் போணோர் பற்றிய இடைக்கால அறிக்கை சனாதிபதியிடம் கையளிப்பு.[24]
வட மாகாணசபையின் முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார்.[27]
புதிய பிரதமர் ராசபக்சவின் ஆதரவாளர்கள் இரண்டு அரசத் தொலைக்காட்சி நிலையங்களை முற்றுகையிட்டனர். இதனால் அந்நிலையங்களின் தொலைக்காட்சி சேவைகள் சில மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன.[29]
இலங்கை பெட்றோலியக் கூட்டுத்தாபனத்தில் தலையகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு ஊழியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார், மேலும் இருவர் காயமடைந்தனர். இதனை அடுத்து, ரணதுங்க காஅல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.[31]
மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து, 2019 சனவரி 5 இல் புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் நடைபெறும் என வர்த்தமானி மூலம் அறிவித்தார்.[32][33][34]
ரங்கன ஹேரத் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் இருந்து இளைப்பாறினார். இடக்கை சுழற்பந்து வீச்சாளரான இவர் 433 தேர்வி இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார்.[35]