பெப்ரவரி 6 - போதைப் பொருள் கடத்தலில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு மாதங்களில் அவர்களின் தண்டனை நிறைவேற்றப்படும் என அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.[1][2]
பெப்ரவரி 23 - இலங்கைத் துடுப்பாட்ட அணி தென்னாப்பிரிக்காவில் தனது முதலாவது தேர்வுத்தொடரை வென்றது. ஆசிய நாடொன்று தென்னாப்பிரிக்காவில் இத்தொடரைக் கைப்பற்றியது இதுவே முதல் தடவையாகும்.[3]
ஏப்ரல் 29 - உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்: அம்பாறை, கல்முனை அருகே சாய்ந்தமருது என்ற ஊரில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த தேசிய தவ்கீத் ஜமாத் தீவிரவாதிகள் மீது இலங்கைப் படையினர் தாக்குதல் நடத்தினர். மூன்று தீவிரவாதிகள் குண்டுகளை வெடித்து தற்கொலை செய்து கொண்டனர். ஆறு பிள்ளைகள் உட்பட ஒன்பது குடும்ப உறுப்பினர்களும் இக்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். மேலும் நால்வர் படையினரால் கொல்லப்பட்டனர்.[9][10] இதன் போது பொதுமகன் ஒருவரும் கொல்லப்பட்டார்.
சூன் 3 - பொது பல சேனா என்ற தீவிரவாத பௌத்த அமைப்பின் போராட்டங்களை அடுத்து, இலங்கை அரசின் அனைத்து முசுலிம் அமைச்சர்களும், ஆளுநர்களும் தமது பதவிகளைத் துறந்தனர்.[15][16]
செப்டம்பர் 23 - முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் குருகந்த புராண ரஜமகா விகாரை எனும் பெயரில் பௌத்த கோவில் அமைத்து தங்கியிருந்த மேதாலங்கார கீர்த்தி தேரரின் இறந்த உடல் நீதிமன்றத் தடை ஆணையையும் மீறி, பிள்ளையார் ஆலயத் தீர்த்தப் பகுதியில் காவல்துறையினரின் பாதுகாப்போடு எரியூட்டப்பட்டது.[24]
செப்டம்பர் 24 - முல்லைத்தீவு நீராவியடியில் தேரரில் உடல் தகனம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த பௌத்த பேரினவாதத்துக்கு எதிராகவும், வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், முல்லைத்தீவில் மாபெரும் கண்டனப் போராட்டம் இடம்பெற்றது.[25]
இலங்கை இராணுவத் தலைவராக சவேந்திரா சில்வா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐநா அமைதிப் படைகளில் இலங்கை இராணுவத்தினர் பணியாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் அவை தடை விதித்தது.[26]
கொழும்பு பகுதிகளில் கடத்திச் செல்லப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட பதினொரு தமிழர்கள் தொடர்பான வழக்கில் இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் விசாரணை நடத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க உத்தரவிட்டார்.[27]
25 செப்டம்பர் - 7 அக்டோபர் - 12 நாட்கள் தொடருந்து சேவைகள் வேலை நிறுத்தத்தினால் பாதிக்கப்பட்டன.[28][29]
17 நவம்பர் - இலங்கையின் 7-வது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவராக கோட்டாபய ராஜபக்ச 52.25% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.[41]
21 நவம்பர் - அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராசபக்சவை நியமித்தார். மகிந்தவின் தலைமையில் 15 அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவை நியமிக்கப்பட்டது.[42]
22 நவம்பர் - இலங்கை வேடுவப் பழங்குடிகள் 9 பேரின் 200 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடுகளை எடின்பரோ பல்கலைக்கழகம் இலங்கைக்குத் திரும்பக் கொடுத்தது.[44]
25 நவம்பர் - இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் உள்ளூர் பெண் ஒருவர் பணி முடிந்து வீடு திரும்பும் போது கொழும்பு நகரில் வைத்து இனந்தெரியாதோரால் "வெள்ளை வான்" ஒன்றில் வைத்துக் கடத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்டு இரண்டு மணி நேரத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டார்.[45]