9வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்

தென்னிந்திய திரைப்படங்களுக்கான விருதுகள்

9வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் (9th Cinema Express Awards) என்பது 9 மார்ச் 1989 அன்று நடந்த ஒரு விருது நிகழ்வாகும். விழாவில் சினிமா எக்ஸ்பிரஸ் இதழ் ஆசிரியர் வி. ராமமூர்த்தி சிறப்புரையாற்றினார். 1988 ஆம் ஆண்டு வெளியான தென்னிந்திய திரைப்படங்களில் விருதுக்குரியவை, பத்திரிகை வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டன. டயனோரா தொலைக்காட்சியின் விற்பனை மேலாளரும், நிகழ்ச்சியின் இணை விளம்பரதாரருமான ஜி. லட்சுமா ரெட்டி, திரைப்படத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு டயனோரா கோல்டு சினி விருதுகளையும் அறிவித்தார்.[1][2][3]

9-ஆம் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்
திகதி1989
சிறப்புக் கூறுகள்
Best Pictureஅக்னி நட்சத்திரம்
 < 8வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் 10வது > 

மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கு நான்கு வகை விருதுகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டடன.[1]

தமிழ்

தொகு
வகை வெற்றியாளர்[1] படம்
சிறந்த படம் ஜி. வெங்கடேஸ்வரன் அக்னி நட்சத்திரம்
சிறந்த இயக்குநர் பாலு மகேந்திரா வீடு
சிறந்த இயக்குநர் (சிறப்பு விருது) மணிரத்னம் அக்னி நட்சத்திரம்
சிறந்த அறிமுக இயக்குநர் ஆர். வி. உதயகுமார் உரிமை கீதம், புதிய வானம்
சிறந்த நடிகர் பிரபு மனசுக்குள் மத்தாப்பூ
சிறந்த நடிகை ராதிகா பாசப் பறவைகள், பூந்தோட்ட காவல்காரன்
சிறந்த நடிகை (சிறப்பு விருது) அமலா இல்லம், அக்னி நட்சத்திரம்
சிறந்த குணச்சித்திர நடிகர் விஜயகாந்த் பூந்தோட்ட காவல்காரன், செந்தூரப்பூவே
சிறந்த அறிமுக நடிகர் லிவிங்ஸ்டன் பூந்தோட்ட காவல்காரன்
சிறந்த அறிமுக நடிகை நிரோஷா அக்னி நட்சத்திரம், செந்தூரப் பூவே
சிறந்த வில்லன் நடிகர் கிட்டி சத்யா
சிறந்த நகைச்சுவை நடிகர் எஸ். எஸ். சந்திரன் வசந்தி
சிறந்த நகைச்சுவை நடிகை மனோரமா பாட்டி சொல்லைத் தட்டாதே
சிறந்த குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் சிலம்பரசன் என் தங்கை கல்யாணி
சிறந்த ஒளிப்பதிவாளர் எம். எம். ரெங்கசாமி செந்தூரப்பூவே
சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா சூரசம்ஹாரம், அக்னி நட்சத்திரம், தர்மத்தின் தலைவன்
சிறந்த பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் உன்னால் முடியும் தம்பி (பாடல்: )
சிறந்த பின்னணிப் பாடகி பி. சுசீலா ராசாவே உன்னெ நம்பி (பாடல்: ராசாத்தி மனசுல ...)

தெலுங்கு

தொகு
வகை வெற்றியாளர்[1] படம்
சிறந்த படம் சிஎச். வி. அப்பாராவ் சஸ்வர்ணகமலம்
சிறந்த இயக்குநர் கே. விஸ்வநாத் ஸ்வர்ணகமலம்
சிறந்த நடிகர் சிரஞ்சீவி ஸ்வயக்குருஷ்
சிறந்த நடிகை பானுப்ரியா ஸ்வர்ணகமலம்

கன்னடம்

தொகு
வகை வெற்றியாளர்[1] படம்
சிறந்த படம் பிரபா ராஜ் சுப்ரபாதா
சிறந்த இயக்குநர் வீ. ரவிச்சந்திரன் ரணதீரா
சிறந்த நடிகர் விஷ்ணுவர்தன் சுப்ரபாதா
சிறந்த நடிகை சுஹாசினி சுப்ரபாதா

மலையாளம்

தொகு
வகை வெற்றியாளர்[1] படம்
சிறந்த படம் அட்லஸ் ராமச்சந்திரன் வைசாலி
சிறந்த இயக்குனர் ஐ. வி. சசி 1921
சிறந்த நடிகர் மம்மூட்டி ஒரு சி. பி. ஐ டைரி குரிப்பு
சிறந்த நடிகை கீதா வைசாலி

டியானோரா கோல்ட் சினி விருதுகள்

தொகு
வெற்றியாளர்[1] பங்களிப்பு
அக்கினேனி நாகேஸ்வர ராவ் தென்னிந்திய திரைப்படத் துறைக்கு பங்களிப்பு அளித்தமைக்கு
இரசினிகாந்து பிளட்ஸ்டோன் ஆங்கில படத்தில் நடிப்பதற்காக.
நாகேஷ் தமிழ் திரைப்படத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றியதற்கு
அஞ்சலிதேவி அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் மிகவும் திறமையான கலைஞராக இருந்தமைக்கு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Cinema Express readers choose Agni Nakshathiram". இந்தியன் எக்சுபிரசு. Express News Service: pp. 4. 11 March 1989. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19890311&printsec=frontpage&hl=en. 
  2. "1988 Award Winners" (in Tamil). சினிமா எக்ஸ்பிரஸ் (Indian Express Group). 1 May 1989. 
  3. സ്വന്തം ലേഖകൻ (1989-03-10). "മമ്മൂട്ടിക്കും ഗീതയ്ക്കും അവാർഡ്" (in ml). மாத்ருபூமி (இதழ்). 

வெளி இணைப்புகள்

தொகு