ஆசியத் திரைப்படத்துறை

ஆசியத் திரைப்படத்துறை (Cinema of Asia) என்பது ஆசியா கண்டத்தில் தயாரிக்கப்படும் திரைப்படங்களையும் அதை சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறையை குறிக்கிறது. ஆசியத் திரைப்படத்துறையிகளில் சீனா, தென் கொரியா, இந்தியா, யப்பான் போன்ற பல நாட்டுத் திரைப்படத்துறைகள் உலகரீதிக மிகவும் பிரபலமாக உள்ளது.

வரலாறு

தொகு

திரைப்படத்தின் முன்னோடிகள்

தொகு

ஈரான் நாட்டில் ஷாஹர்-ஐ சொக்தா என்ற ஊரில் கண்டு எடுக்கப்பட்ட 5,200 ஆண்டுகள் பழமையான மண் கிண்ணத்தில் பக்கவாட்டில் ஐந்து ஆட்டின் படங்கள் வரையப்பட்டுள்ளன. ஆரம்பகால இயங்குபடத்துறைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று நம்பப்படுகிறது.[1][2][3] கிமு 500 ஆம் ஆண்டு சீனா நாட்டு மெய்யியல் நிபுணரான மோகி என்பவரால் ஒளியின் நிழலை இருண்ட அறையில் எதிர் சுவரில் ஒரு சிறிய துளை வழியாக ஒளிரச் செய்து நிழல் நாடகங்கள் முதலில் ஹான் வம்சத்தின் போது தோன்றி விற்றார். அதன் பின்னர் ஆசியா முழுவதும் பிரபலமடைந்தன.

ஊமைத் திரைப்படம்

தொகு

1890 களில் ஆசியாவில் முதல் முதலாக குறும்படங்கள் தயாரிக்கப்பட்டன. ஜப்பான் நாட்டில் 1898 ஆம் ஆண்டு முதல் குறும்படங்கள் தயாரிக்கப்பட்டன.[4] முதல் இந்திய குறும்படம் 1898 இல் ஹிரலால் சென் இயக்கிய 'தி ஃப்ளவர் ஆஃப் பெர்சியா' என்ற திரைப்படம் ஆகும்.[5]

1900 களின் முற்பகுதியில் இஸ்ரேல் நாட்டில் ஊமைத் திரைப்படங்கள் கொட்டகைகள், தேனீர் விடுதியில் மற்றும் பிற தற்காலிக கட்டமைப்புகளில் திரையிடப்பட்டன.[6] 1905 ஆம் ஆண்டில் யூதர்களின் அருகிலுள்ள நெவ் ட்செடெக்கில் ஜாஃபா சாலையில் கஃபே லோரென்ஸ் திறக்கப்பட்டது.[7] 1909 முதல் லோரென்ஸ் குடும்பம் விடுதிகளில் திரைப்படங்களைத் திரையிடத் தொடங்கின.

நாடு வாரியாக ஆசியத் திரைப்படத்துறைகள்

தொகு

மொழி வாரியாக ஆசியத் திரைப்படத்துறைகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. CHTHO produces documentary on world’s oldest animation. Tehran Times. 04-03-2008.
  2. First Animation of the World Found In Burnt City, Iran பரணிடப்பட்டது 2018-04-30 at the வந்தவழி இயந்திரம், Persian Journal, 2004
  3. Oldest Animation Discovered In Iran. Animation Magazine. 12-03-2008.
  4. "Seek Japan | J-Horror: An Alternative Guide". Archived from the original on 2011-08-24. பார்க்கப்பட்ட நாள் 2009-05-22.
  5. McKernan, Luke (1996-12-31). "Hiralal Sen (copyright British Film Institute)".
  6. Shalit, David (January 3, 2011). "Cinemas in Eretz Yisrael". Boeliem.com. Archived from the original on May 18, 2018.
  7. Paraszczuk, Joanna (June 5, 2010). "Reviving Tel Aviv's Valhalla". The Jerusalem Post.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியத்_திரைப்படத்துறை&oldid=3077639" இலிருந்து மீள்விக்கப்பட்டது