ஆழ்வார்புரம்
ஆழ்வார்புரம் (ஆங்கில மொழி: Allhwarpuram) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். மதுரையின் வடக்குப் பகுதியில் ஒன்று ஆழ்வார்புரம்.[1] மதுரையில் சித்திரைத் திருவிழாவின் போது, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும் இடம் ஆழ்வார்புரம் ஆகும்.[2][3]
ஆழ்வார்புரம் Allhwarpuram | |
---|---|
ஆள்கூறுகள்: 9°55′43″N 78°08′06″E / 9.928613°N 78.135063°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 186 m (610 ft) |
மொழி | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625 002 |
தொலைபேசி குறியீடு | +91452xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, கோரிப்பாளையம், செல்லூர் (மதுரை), தல்லாகுளம், மதுரை, அண்ணா நகர், மதுரை, கே. கே. நகர், மதுரை, சிம்மக்கல், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம், டி. வி. எஸ். நகர், பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் |
மாநகராட்சி | மதுரை மாநகராட்சி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | மருத்துவர் எஸ். அனீஷ் சேகர், இ. ஆ. ப. |
மக்களவைத் தொகுதி | மதுரை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | சு. வெங்கடேசன் |
சட்டமன்ற உறுப்பினர் | மு. பூமிநாதன் |
இணையதளம் | https://madurai.nic.in |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 186 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஆழ்வார்புரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°55′43″N 78°08′06″E / 9.928613°N 78.135063°E ஆகும். மதுரை, கோரிப்பாளையம், செல்லூர் (மதுரை), தல்லாகுளம், மதுரை, அண்ணா நகர், மதுரை, கே. கே. நகர், மதுரை, சிம்மக்கல், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம், டி. வி. எஸ். நகர், பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகியவை ஆழ்வார்புரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
மதுரையில் சுமார் ஐம்பது ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக மூங்கில் வியாபாரம் நடைபெறும் இடம் ஆழ்வார்புரம் பகுதியாகும்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "திறக்கப்படுமா ஓபுலா படித்துறை பாலம்? மதுரை மக்கள் ஏக்கம்!". News18 Tamil. 2023-05-17. பார்க்கப்பட்ட நாள் 2023-07-01.
- ↑ "மதுரை வைகை ஆற்றில் மீண்டும் திறந்துவிடப்பட்ட கழிவுநீர்: நிரந்தர தீர்வுக்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?". Hindu Tamil Thisai. 2023-05-29. பார்க்கப்பட்ட நாள் 2023-07-01.
- ↑ அருண் சின்னதுரை (2023-05-01). "Madurai: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம்; வைகை ஆற்றில் முன்னேற்பாடுகள் படுதீவிரம்..!". tamil.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-01.
- ↑ "50 ஆண்டு கால பரம்பரை தொழில்.. மதுரை மூங்கில் கடை தெரு பற்றி தெரியுமா? கள்ளழகர் மண்டகப்படி கடையானது எப்படி?". News18 Tamil. 2023-06-09. பார்க்கப்பட்ட நாள் 2023-07-01.