கோலா கிராவ் மக்களவைத் தொகுதி
கோலா கிராவ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kuala Krau; ஆங்கிலம்: Kuala Krau Federal Constituency; சீனம்: 瓜拉吉挠国会议席) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், மாரான் மாவட்டம்; தெமர்லோ மாவட்டம்; ஜெராண்டுட் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P087) ஆகும்.[5]
கோலா கிராவ் (P087) மலேசிய மக்களவைத் தொகுதி பகாங் | |
---|---|
Kuala Krau (P087) Federal Constituency in Pahang | |
கோலா கிராவ் மக்களவைத் தொகுதி (P087 Kuala Krau) | |
மாவட்டம் | தெமர்லோ மாவட்டம்; ஜெராண்டுட் மாவட்டம்; மாரான் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 60,537 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | கோலா கிராவ் |
முக்கிய நகரங்கள் | மாரான், தெமர்லோ, ஜெராண்டுட் |
பரப்பளவு | 1,391 ச.கி.மீ[3] |
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | கமல் அசாரி (Kamal Ashaari) |
மக்கள் தொகை | 68,047 [4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2004 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
கோலா கிராவ் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து கோலா கிராவ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
மாரான் மாவட்டம்
தொகுமாரான் மாவட்டம், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் மாரான். முன்பு மாரான் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த பெரா மாவட்டம் 1981-ஆம் ஆண்டில் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது.
இந்த மாவட்டம் பகாங் மாநிலத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இதைச் சுற்றி குவாந்தான் மாவட்டம், பெக்கான் மாவட்டம், ரொம்பின் மாவட்டம், பெரா மாவட்டம், தெமர்லோ மாவட்டம், ஜெராண்டுட் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
1981 சனவரி மாதம்; மாரான் நகரம், தெமர்லோ மாவட்டத்தின் புக்கிட் செகும்பல் (Mukim Bukit Segumpal), செனோர் (Chenor), கெர்த்தாவ் (Kertau) ஆகிய நகரங்களுடன் இணைக்கப்பட்டு புதிய மாரான் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
கோலா கிராவ் மக்களவைத் தொகுதி
தொகுகோலா கிராவ் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (2004 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
2003-ஆம் ஆண்டில் கோலா கிராவ் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P087 | 2004–2008 | இசுமாயில் முகமது சாயிது (Ismail Mohamed Said) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | உறுப்பினர் கமல் அசாரி (Kamal Ashaari) |
பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
கோலா கிராவ் தேர்தல் முடிவுகள்
தொகுவேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
கமல் அசாரி (Kamal Ashaari) | பெரிக்காத்தான் நேசனல் | 22,505 | 47.13 | 47.13 | |
இசுமாயில் முகமது சாயிட் (Ismail Mohamed Said) | பாரிசான் நேசனல் | 21,481 | 44.98 | 2.16 ▼ | |
ஜுகாரி ஒசுமான் (Juhari Osman) | பாக்காத்தான் அரப்பான் | 3,593 | 7.52 | 5.72 ▼ | |
சாரூதின் முகமது சாலே (Shahruddin Mohamed Salleh) | தாயக இயக்கம் | 174 | 0.36 | 0.36 | |
மொத்தம் | 47,753 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 47,753 | 98.57 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 695 | 1.43 | |||
மொத்த வாக்குகள் | 48,448 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 60,537 | 78.88 | 3.85 ▼ | ||
பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [8] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 11 ஜூலை 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
- ↑ "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF PAHANG" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.