தா. சலபதி ராவ்
தாதினேனி சலபதி ராவ் (22 திசம்பர் 1920 - 22 பிப்ரவரி 1994) என்பவர் தெலுங்குத் திரைப்படத் துறையில் பணியாற்றிய இந்திய இசையமைப்பாளர் ஆவார். 1950 களின் முற்பகுதியில் இருந்து 1980 கள் வரை இவரது தொழில் வாழ்க்கை மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்தது. இவர் டி. பிரகாஷ் ராவின் உறவினர் ஆவார்.
தாதினேனி சலபதி ராவ் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | தாதினேனி சலபதி ராவ் |
பிறப்பு | 22 திசம்பர் 1920 வுய்யூரு, கிருஷ்ணா மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 22 பெப்ரவரி 1994 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 73)
தொழில்(கள்) | இசையமைப்பாளர் |
இசைத்துறையில் | 1953-1984 |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇவர் 1920 ஆம் ஆண்டு திசம்பர் 22 ஆம் நாள் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள வுய்யூரு என்ற சிற்றூரில் துரோணவில்லி மாணிக்கியம்மா இரத்தய்யா இணையருக்கு மகனாகப் பிறந்தார், என்றாலும் இவர் தாத்தினேனி கோடேஸ்வர ராவ், அவரது மனைவி கோட்டம்மா ஆகியோரால் தத்தெடுக்கப்பட்டார். இவர் டி. பிரகாஷ் ராவின் உறவினர்.
தொழில்
தொகுஇவர் மற்றொரு இசையமைப்பாளரான மோகன் தாசுடன் இணைந்து 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு திரைப்படமான புட்டில்லு திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அமரதீபம் (1956) என்ற தமிழ்த் திரைப்படமே இவர் முதலில் தனித்து இசையமைத்த திரைப்படம் ஆகும். அதன்பிறகு 1984 வரை இவர் சுமார் 125 படங்களுக்கு இசையமைத்தார். அவற்றில் பெரும்பாலானவை தெலுங்கு படங்களும், சில படங்கள் தமிழ்ப் படங்களும் ஆகும்.
அக்கினேனி நாகேஸ்வர ராவ் நடித்த படங்களுக்கு பல பிரபலமான பாடல்களை இவர் உருவாக்கினார். 1950கள், 1960கள், 1970களில், சலபதி ராவ் மற்றும் நாகேஸ்வர ராவ் கூட்டணி எண்ணிலடங்கா வெற்றிகளைப் பெற்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை இல்லறிகம் (1959), புனர்ஜன்மா (1963), மனுசுலு மமதாலு (1965), நவராத்திரி (1966), தர்ம தாதா (1970), ஸ்ரீமந்துடு (1971); 1972 இல் பெருவெற்றியை ஈட்டிய தத்தா புத்ருடு, மஞ்சி ரோஜுலு வச்சாய், ரைத்து குடும்பம் ஆகியவை அடங்கும். இறுதிவரை இந்த ஜோடி கண்ணா கொடுக்கு (1973), பல்லேதூரி பாவ (1973), ஆளு மகளு (1977), ஸ்ரீ ராம ரக்ஷா (1978) உள்ளிட்ட படங்களுக்கு வெற்றிக் கூட்டணியாகத் தொடர்ந்தது.
கிருஷ்ணம் ராஜூ நாயகனாக நடித்த மஞ்சி ரோஜுலு வச்சாய், அம்மா நானா, மஞ்சி மனசு, கமலம்மா கமதம் உள்ளிட்ட படங்களும், என். டி. ராமராவ் நாயகனாக நடித்த லட்சாதிகாரி, ராமுனி மிஞ்சின ராமுடு, கலவாரி கோடலு உள்ளிட்ட படங்களும், கிருஷ்ணா நடித்த அசாத்யுடுவுடன் கூத்தாச்சாரி 116, அசாத்யுடு போன்ற பிற தெலுங்கு நாயகர்கள் நடித்த படங்களுக்கு டி. சலபதி ராவ் இசையமைத்து பாடல்கள் வெற்றி ஈட்டின.
இவர் கடைசியாக 1984 ஆம் ஆண்டு வெளிவந்த ஜன மனம் படத்திற்கு இசையமைத்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் அன்னபூர்ணாவை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு குழந்தை இல்லை. பின்னர் டாக்டர் ஜமுனாவை மணந்தார். இந்த இணையருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.
திரைப்படவியல்
தொகுஆண்டு | படம் | மொழி | இயக்குநர் | பதாகை | குறிப்பு |
---|---|---|---|---|---|
1953 | புட்டில்லு | தெலுங்கு | டாக்டர். ராஜா ராவ் | ராஜா புரொடணன்ஸ் | சி. மோகன்தாசுடன் இணைந்து |
1954 | பரிவர்தனா | தெலுங்கு | டி. பிரகாஷ் ராவ் | ஜனதா பிக்சர்ஸ் | சி. மோகன்தாசுடன் இணைந்து |
1956 | அமரதீபம் | தமிழ் | டி. பிரகாஷ் ராவ் | வீனசு பிக்சர்ஸ் | ஜி. ராமநாதன், ஜி. என். பாலசுப்பிரமணியம் |
1956 | அமரஜீவி | தெலுங்கு | டி. பிரகாஷ் ராவ் | வீனசு பிக்சர்ஸ் | G. Ramanathan |
1958 | பதி பக்தி | தெலுங்கு | ஏ. பீம்சிங் | புத்தா பிக்சர்ஸ் | |
1958 | வீர பிரதாப் | தெலுங்கு | டி. பிரகாஷ் ராவ் | வீனசு பிக்சர்ஸ் | ஜி. ராமநாதன் |
1959 | இல்லரிக்கம் | தெலுங்கு | டி. பிரகாஷ் ராவ் | பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ் | |
1959 | கூடி வாழ்ந்தால் கோடி நன்மை | தமிழ் | டி. எஸ். இராஜகோபால் | நரசு ஸ்டுடியோஸ் | |
1959 | உத்தமி பெற்ற ரத்தினம் | தமிழ் | எம். ஏ. திருமுகம் | அமர் புரொடக்சன்ஸ் | |
1960 | மா பாபு | தெலுங்கு | டி. பிரகாஷ் ராவ் | பிரகதி ஆர்ட் புரொடக்சன்ஸ் | |
1960 | மீண்ட சொர்க்கம் | தமிழ் | ஸ்ரீதர் | மதுரம் பிக்சர்ஸ் | |
1961 | அன்பு மகன் | தமிழ் | டி. பிரகாஷ் ராவ் | பிரகதி ஆர்ட் புரொடக்சன்ஸ் | |
1961 | புனர்ஜென்மம் | தமிழ் | ஆர். எஸ். மணி | விஜயா பிலிம்ஸ் | |
1961 | தந்தருலு கொடுக்குலு | தெலுங்கு | கே. ஹேமபரதர ராவ் | ரகுராமையா கிரியேஷன்ஸ் | |
1962 | ஸ்ரீ வள்ளி | தெலுங்கு | டி. ஆர். ராமண்ணா | நரசு ஸ்டுடியோஸ் | |
1963 | லட்சதிகாரி | தெலுங்கு | வி. மதுசூதன ராவ் | ரவீந்திரா ஆர்ட் பிக்சர்ஸ் | |
1963 | புனர்ஜன்மா | தெலுங்கு | கே. பிரத்யகாத்மா | பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ் | |
1963 | சந்திர குமார | கன்னடம் | என். எஸ்.வர்மா | எச் எம் பாபா புரொடக்சன்ஸ் | எம். வெங்கடராஜு இணை இசையமைப்பாளர். |
1964 | கலவரி கோடலு | தெலுங்கு | கே. ஹேமாம்பரதர ராவ் | ரகுராம் பிக்சர்ஸ் | |
1964 | மஞ்சி மனிஷி | தெலுங்கு | கே. பிரத்யகாத்மா | சாயா சித்ரா | |
1964 | மானே அலியா | கன்னடம் | எஸ். கே.ஏ.சாரி | பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ் | |
1964 | நல்வரவு | தமிழ் | சார்லி–மணியம் | எஸ். வி. மூவிஸ் | |
1965 | மனுஷுலு மம்தாலு | தெலுங்கு | கே. பிரத்யகாத்மா | நவயுகா பிலிம்ஸ் | |
1965 | மாவன மகளு | கன்னடம் | எஸ். கே. ஏ. சாரி | பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ் | |
1966 | படுகுவா தாரி | கன்னடம் | கே. எஸ்.பிரகாஷ் ராவ் | பலராம் பிக்சர்ஸ் | |
1966 | குடாச்சாரி 116 | தெலுங்கு | எம். மல்லிகார்ஜுன ராவ் | வாகினி ஸ்டுடியோஸ் | |
1966 | மங்களசூத்திரம் | தெலுங்கு | ஏ. கே. வேலன் | அருணாச்சலம் ஸ்டுடியோஸ் | |
1966 | நவராத்திரி | தெலுங்கு | டி. ராமராவ் | பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ் | |
1966 | ஜமீன்தாரி | தெலுங்கு | வி. மதுசூதன ராவ் | ரவீந்திரா ஆர்ட் பிக்சர்ஸ் | |
1967 | ஆடா படுச்சு | தெலுங்கு | கே. ஹேமாம்பரதராவ் | சுபாஷினி ஆர்ட் பிக்சர்ஸ் | |
1967 | மாடிவீட்டு மாப்பிள்ளை | தமிழ் | எஸ். கே. ஏ. சாரி | பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ் | |
1967 | மரபூரணி கதா | தெலுங்கு | வி. ராமச்சந்திர ராவ் | ஸ்ரீ புரொடக்ஷன்ஸ் | |
1967 | பட்டுக்குண்டே படிவேலு | தெலுங்கு | எம். மல்லிகார்ஜுன ராவ் | நவஜோதி பிலிம்ஸ் | |
1967 | சிவ லீலலு | தெலுங்கு | ஏ. பி. நாகராசன் | ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் | கே. வி. மகாதேவன் உடன் |
1968 | அசத்யுடு | தெலுங்கு | வி. ராமச்சந்திர ராவ் | டைகர் புரொடக்ஷன்ஸ் | |
1968 | பங்காரு காஜுலு | தெலுங்கு | சி. எஸ். ராவ் | ரவீந்திரா ஆர்ட் பிக்சர்ஸ் | |
1968 | பிரம்மச்சாரி | தெலுங்கு | டி. ராமராவ் | பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ் | |
1968 | செல்லேலி கோசம் | தெலுங்கு | எம். மல்லிகார்ஜுன ராவ் | ஜெயஸ்ரீ லட்சுமி பிக்சர்ஸ் | |
1968 | நாதமந்திரபு சிரி | தெலுங்கு | டி. ராமராவ் | நவஜோதி பிக்சர்ஸ் | |
1968 | பிரேம கதா | தெலுங்கு | முக்தா சீனிவாசன் | முக்தா பிலிம்ஸ் | |
1968 | சிறீமந்துடு | தெலுங்கு | டி. ஆர். ராமண்ணா | ஆர். ஆர். பிக்சர்ஸ் | |
1969 | சிரஞ்சீவி | தெலுங்கு | சாவித்திரி | அருணாச்சலம் ஸ்டுடியோ | |
1969 | மதுரா மிலானா | கன்னடம் | |||
1969 | மரதாஸ் டூ ஐதராபாத் | தெலுங்கு | திருமலை–மகாலிங்கம் | ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிடோன் | |
1969 | பிரேம கனுகா | தெலுங்கு | வி. சோபநாத்ரி ராவ் | திக்விஜயா பிலிம்ஸ் | |
1970 | அகந்துடு | தெலுங்கு | வி. ராமச்சந்திர ராவ் | டைகர் புரொடக்சன்ஸ் | |
1970 | தர்ம தாதா | தெலுங்கு | ஏ. சஞ்சீவி | ரவீந்திரா ஆர்ட் பிக்சர்ஸ் | |
1971 | அத்ருஷ்ட ஜாதகுடு | தெலுங்கு | கே. ஹேமாம்பரதர ராவ் | சுபாஷினி ஆர்ட் பிக்சர்ஸ் | |
1971 | பவித்ரா ஹ்ருதயலு | தெலுங்கு | ஏ. சி. திருலோகச்சந்தர் | ஸ்ரீ விஜயா வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் | |
1971 | சிசிந்திரி சிட்டிபாபு | தெலுங்கு | அக்கினேனி சஞ்சீவி ராவ் | ரவீந்திரா ஆர்ட் பிக்சர்ஸ் | |
1971 | ஸ்ரீமந்துடு | தெலுங்கு | கே. பிரத்யகாத்மா | விஸ்வ பாரதி புரொடக்சன்ஸ் | |
1972 | தத்த புத்ருடு | தெலுங்கு | தம்மரெட்டி லெனின் பாபு | ரவீந்திரா ஆர்ட் பிக்சர்ஸ் | |
1972 | கில்லாடி புல்லோடு | தெலுங்கு | நந்தமுரி ரமேஷ் | சித்ரககா பிலிம்ஸ் | |
1972 | மஞ்சி ரோஜுலு வச்சாய் | தெலுங்கு | வி. மதுசூதன ராவ் | ஜெமினி ஸ்டூடியோஸ் | |
1972
ரைத்து குடும்பம் |
தெலுங்கு | டி. ராமராவ் | நவ பரத் திரைப்படம் | ||
1973 | டாக்டர் பாபு | தெலுங்கு | தம்மரெட்டி லெனின் பாபு | ரவீந்திரா ஆர்ட் பிக்சர்ஸ் | |
1973 | கண்ணா கொடுக்கு | தெலுங்கு | வி. மதுசூதன ராவ் | விஸ்வ பாரதி தயாரிப்பு | |
1973 | மைனரு பாபு | தெலுங்கு | தாத்தினேனி பிரகாஷ் ராவ் | சாரதி அண்ட் டி.பி.ஆர் கம்பைன்ஸ் | |
1973 | பல்லேதூரி பாவா | தெலுங்கு | கே. பிரத்யகாத்மா | பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ் | |
1974 | ஆடபிள்ளா தந்திரி | தெலுங்கு | கே. வாசு | சத்யா எண்டர்பிரைசஸ் | |
1974 | கலி பாடலு | தெலுங்கு | டி. பிரகாஷ் ராவ் | அனில் ஆர்ட்ஸ் | |
1974 | முக்குரு அம்மாயிலு | தெலுங்கு | கே. பிரத்யகாத்மா | நவபாரத் ஆர்ட் பிலிம்ஸ் | |
1974 | வாணி தொங்கள ராணி | தெலுங்கு | ஆமன்சர்லா சேஷகிரி ராவ் | நவோதயா ஆர்ட் மூவிஸ் | |
1975 | சின்னினதி கலலு | தெலுங்கு | கே. விஸ்வநாத் | ரவீந்திரா ஆர்ட் பிக்சர்ஸ் | |
1975 | தேவுடு செசின பெல்லி | தெலுங்கு | டி. ராமராவ் | ஸ்ரீ லக்ஷ்மி புரொடக்சன்ஸ் | |
1975 | பரிவர்தனா | தெலுங்கு | கே. ஹேமாம்பரதர ராவ் | ||
1975 | ராமுனி மிஞ்சின ராமுடு | தெலுங்கு | எம். எஸ்.கோபிநாத் | ராஜேஸ்வரி ஃபைன் ஆர்ட்ஸ் | |
1975 | சம்சாரம் | தெலுங்கு | டி. பிரகாஷ் ராவ் | அனில் புரொடக்ஷன்ஸ் | |
1975 | வயசோசின பில்லா | தெலுங்கு | லக்ஷ்மி தீபக் | கிரிஷிவாலா படங்கள் | |
1976 | அல்லுடோச்சாடு | தெலுங்கு | கே. பிரத்யகாத்மா | பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ் | |
1976 | அம்மா நானா | தெலுங்கு | தம்மரெட்டி லெனின் பாபு | ரவீந்திரா ஆர்ட் பிக்சர்ஸ் | |
1976 | மகாத்முடு | தெலுங்கு | எம். எஸ்.கோபிநாத் | ராஜேஸ்வரி சித்ரா | |
1976 | வனஜா கிரிஜா | தெலுங்கு | கௌதம் | ஸ்ரீ வனஜா மூவிஸ் | |
1977 | ஆளு மகளு | தெலுங்கு | டி. ராமராவ் | பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ் | |
1977 | அர்தாங்கி | தெலுங்கு | ஏ. மோகன் காந்தி | பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ் | |
1977 | ஆதவரில்லு | தெலுங்கு | கே. பிரத்யகாத்மா | பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ் | |
1977 | கடுசு அம்மாயி | தெலுங்கு | கே. பிரத்யகாத்மா | துவாரகா ஆர்ட் புரொடக்சன்ஸ் | |
1977 | மஹானுபாவுடு | தெலுங்கு | கே. ஹேமாம்பரதராவ் | சுபாசினி கம்பைன்ஸ் | |
1977 | மோகினி விஜயமு | தெலுங்கு | என். எஸ்.வர்மா | ஸ்ரீ வெங்கடலட்சுமி பிக்சர்ஸ் | எம். பூர்ணச்சந்திர ராவுடன் |
1978 | மஞ்சி மனசு | தெலுங்கு | கே. பிரத்யகாத்மா | ஏ. ஏ கம்பைன்ஸ் | |
1978 | ஸ்ரீ ராம ரக்ஷா | தெலுங்கு | அஜய் ஆர்ட் பிக்சர்ஸ் | ||
1978 | தல்லே சல்லானி தெய்வம் | தெலுங்கு | எம். எஸ்.கோபிநாத் | ராஜேஸ்வரி சித்ரா கம்பைன்ஸ் | |
1979 | கமலம்மா கமடம் | தெலுங்கு | கே. பிரத்யகாத்மா | பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ் | |
1979 | லவ் மேரேஜ் | தெலுங்கு | தம்மரெட்டி லெனின் பாபு | ரவீந்திரா ஆர்ட் பிக்சர்ஸ் | |
1980 | ஜந்து பிரபஞ்சம் | தெலுங்கு | சிறீ லட்சுமிநாராயணா பிலிம்ஸ் | ||
1980 | நாயக்குடு விநாயகுடு | தெலுங்கு | கே. பிரத்யகாத்மா | பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ் | |
1980 | தாண்டவ கிருஷ்ண தரங்கம் | தெலுங்கு | ராஜ்குமார் | சஞ்சய் மாணிக்யாவுடன் | |
1980 | யுவதாரம் கதிலிண்டி | தெலுங்கு | தாவல சத்யம் | நவதாரம் பிக்சர்ஸ் | |
1981 | ஹரிசந்திருடு | தெலுங்கு | யு. விஸ்வேஸ்வர ராவ் | விஸ்வசாந்தி மூவிஸ் | |
1981 | மரோ குருக்ஷேத்திரம் | தெலுங்கு | தம்மரெட்டி லெனின் பாபு | சரிதா ஃபிலிம் கம்பைன்ஸ் | |
1982 | சர்க்கஸ் பிரபஞ்சம் | தெலுங்கு | யு. விஸ்வேஸ்வர ராவ் | ||
1983 | கீர்த்தி காந்த கனகம் | தெலுங்கு | யு. விஸ்வேஸ்வர ராவ் | விஸ்வசாந்தி மூவிஸ் | |
1984 | ஜனம் மனம் | தெலுங்கு | மோகன் தாஸ் | நவரத்தினம் பிலிம்ஸ் | |
1985 | தாயி தந்தே | கன்னடம் | வி. சத்தியநாராயணா | யு எஸ் ஆர் பிக்சர்ஸ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Swarnayuga Sangeetha Darsakulu. 2011.
- ↑ "T. Chalapathi Rao". Raaga.com.
- ↑ "T. Chalapathi Rao All Telugu Songs". Allbestsongs.com.