தா. சலபதி ராவ்

இந்திய திரைப்பட இசையமைப்பாளர் (1920-1994)

தாதினேனி சலபதி ராவ் (22 திசம்பர் 1920 - 22 பிப்ரவரி 1994) என்பவர் தெலுங்கு திரைப்படத் துறையில் பணியாற்றிய இந்திய இசையமைப்பாளர் ஆவார். 1950 களின் முற்பகுதியில் இருந்து 1980 கள் வரை இவரது தொழில் வாழ்க்கை மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்தது. இவர் டி. பிரகாஷ் ராவின் உறவினர் ஆவார்.

தாதினேனி சலபதி ராவ்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்தாதினேனி சலபதி ராவ்
பிறப்பு22 திசம்பர் 1920
வுய்யூரு, கிருஷ்ணா மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு22 பெப்ரவரி 1994(1994-02-22) (அகவை 73)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைத்துறையில்1953-1984

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர் 1920 ஆம் ஆண்டு திசம்பர் 22 ஆம் நாள் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள வுய்யூரு என்ற சிற்றூரில் துரோணவில்லி மாணிக்கியம்மா ரத்தய்யா இணையருக்கு மகனாகப் பிறந்தார், என்றாலும் இவர் தாத்தினேனி கோடேஸ்வர ராவ் மற்றும் அவரது மனைவி கோட்டம்மா ஆகியோரால் தத்தெடுக்கப்பட்டார். இவர் டி. பிரகாஷ் ராவின் உறவினர்.

தொழில்

தொகு

இவர் மற்றொரு இசையமைப்பாளரான மோகன் தாசுடன் இணைந்து 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு திரைப்படமான புட்டில்லு திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அமரதீபம் (1956) என்ற தமிழ்த் திரைப்படமே இவர் முதலில் தனித்து இசையமைத்த திரைப்படம் ஆகும். அதன்பிறகு 1984 வரை இவர் சுமார் 125 படங்களுக்கு இசையமைத்தார். அவற்றில் பெரும்பாலானவை தெலுங்கு படங்களும், சில படங்கள் தமிழ்ப் படங்களும் ஆகும்.

அக்கினேனி நாகேஸ்வர ராவ் நடித்த படங்களுக்கு பல பிரபலமான பாடல்களை இவர் உருவாக்கினார். 1950கள், 1960கள், 1970களில், சலபதி ராவ் மற்றும் நாகேஸ்வர ராவ் கூட்டணி எண்ணிலடங்கா வெற்றிகளைப் பெற்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை இல்லறிகம் (1959), புனர்ஜன்மா (1963), மனுசுலு மமதாலு (1965), நவராத்திரி (1966), தர்ம தாதா (1970), ஸ்ரீமந்துடு (1971); 1972 இல் பெருவெற்றியை ஈட்டிய தத்தா புத்ருடு, மஞ்சி ரோஜுலு வச்சாய், ரைத்து குடும்பம் ஆகியவை அடங்கும். இறுதிவரை இந்த ஜோடி கண்ணா கொடுக்கு (1973), பல்லேதூரி பாவ (1973), ஆளு மகளு (1977), ஸ்ரீ ராம ரக்ஷா (1978) உள்ளிட்ட படங்களுக்கு வெற்றிக் கூட்டணியாகத் தொடர்ந்தது.

கிருஷ்ணம் ராஜூ நாயகனாக நடித்த மஞ்சி ரோஜுலு வச்சாய், அம்மா நானா, மஞ்சி மனசு, கமலம்மா கமதம் உள்ளிட்ட படங்களும், என். டி. ராமராவ் நாயகனாக நடித்த லட்சாதிகாரி, ராமுனி மிஞ்சின ராமுடு, கலவாரி கோடலு உள்ளிட்ட படங்களும், கிருஷ்ணா நடித்த அசாத்யுடுவுடன் கூத்தாச்சாரி 116, அசாத்யுடு போன்ற பிற தெலுங்கு நாயகர்கள் நடித்த படங்களுக்கு டி. சலபதி ராவ் இசையமைத்து பாடல்கள் வெற்றி ஈட்டின.

இவர் கடைசியாக 1984 ஆம் ஆண்டு வெளிவந்த ஜன மனம் படத்திற்கு இசையமைத்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் அன்னபூர்ணாவை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு குழந்தை இல்லை. பின்னர் டாக்டர் ஜமுனாவை மணந்தார். இந்த இணையருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.

திரைப்படவியல்

தொகு
ஆண்டு படம் மொழி இயக்குநர் பதாகை குறிப்பு
1953 புட்டில்லு தெலுங்கு டாக்டர். ராஜா ராவ் ராஜா புரொடணன்ஸ் சி. மோகன்தாசுடன் இணைந்து
1954 பரிவர்தனா தெலுங்கு டி. பிரகாஷ் ராவ் ஜனதா பிக்சர்ஸ் சி. மோகன்தாசுடன் இணைந்து
1956 அமரதீபம் தமிழ் டி. பிரகாஷ் ராவ் வீனசு பிக்சர்ஸ் ஜி. ராமநாதன், ஜி. என். பாலசுப்பிரமணியம்
1956 அமரஜீவி தெலுங்கு டி. பிரகாஷ் ராவ் வீனசு பிக்சர்ஸ் G. Ramanathan
1958 பதி பக்தி தெலுங்கு ஏ. பீம்சிங் புத்தா பிக்சர்ஸ்
1958 வீர பிரதாப் தெலுங்கு டி. பிரகாஷ் ராவ் வீனசு பிக்சர்ஸ் ஜி. ராமநாதன்
1959 இல்லரிக்கம் தெலுங்கு டி. பிரகாஷ் ராவ் பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்
1959 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை தமிழ் டி. எஸ். இராஜகோபால் நரசு ஸ்டுடியோஸ்
1959 உத்தமி பெற்ற ரத்தினம் தமிழ் எம். ஏ. திருமுகம் அமர் புரொடக்சன்ஸ்
1960 மா பாபு தெலுங்கு டி. பிரகாஷ் ராவ் பிரகதி ஆர்ட் புரொடக்சன்ஸ்
1960 மீண்ட சொர்க்கம் தமிழ் ஸ்ரீதர் மதுரம் பிக்சர்ஸ்
1961 அன்பு மகன் Tamil டி. பிரகாஷ் ராவ் பிரகதி ஆர்ட் புரொடக்சன்ஸ்
1961 புனர்ஜென்மம் தமிழ் ஆர். எஸ். மணி விஜயா பிலிம்ஸ்
1961 தந்தருலு கொடுக்குலு தெலுங்கு கே. ஹேமபரதர ராவ் ரகுராமையா கிரியேஷன்ஸ்
1962 ஸ்ரீ வள்ளி கல்யாணம் தெலுங்கு டி. ஆர். ராமண்ணா நரசு ஸ்டுடியோஸ்
1963 லட்சதிகாரி தெலுங்கு வி. மதுசூதன ராவ் ரவீந்திரா ஆர்ட் பிக்சர்ஸ்
1963 புனர்ஜன்மா தெலுங்கு கே. பிரத்யகாத்மா பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்
1963 சந்திர குமார கன்னடம் என். எஸ்.வர்மா எச் எம் பாபா புரொடக்சன்ஸ் எம். வெங்கடராஜு இணை இசையமைப்பாளர்.
1964 கலவரி கோடலு தெலுங்கு கே. ஹேமாம்பரதர ராவ் ரகுராம் பிக்சர்ஸ்
1964 மஞ்சி மனிஷி தெலுங்கு கே. பிரத்யகாத்மா சாயா சித்ரா
1964 மானே அலியா கன்னடம் எஸ். கே.ஏ.சாரி பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்
1964 நல்வரவு தமிழ் சார்லி–மணியம் எஸ். வி. மூவிஸ்
1965 மனுஷுலு மம்தாலு தெலுங்கு கே. பிரத்யகாத்மா நவயுகா பிலிம்ஸ்
1965 மாவன மகளு கன்னடம் எஸ். கே. ஏ. சாரி பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்
1966 படுகுவா தாரி கன்னடம் கே. எஸ்.பிரகாஷ் ராவ் பலராம் பிக்சர்ஸ்
1966 குடாச்சாரி 116 தெலுங்கு எம். மல்லிகார்ஜுன ராவ் வாகினி ஸ்டுடியோஸ்
1966 மங்களசூத்திரம் தெலுங்கு ஏ. கே. வேலன் அருணாச்சலம் ஸ்டுடியோஸ்
1966 நவராத்திரி தெலுங்கு டி. ராமராவ் பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்
1966 ஜமீன்தாரி தெலுங்கு வி. மதுசூதன ராவ் ரவீந்திரா ஆர்ட் பிக்சர்ஸ்
1967 ஆடா படுச்சு தெலுங்கு கே. ஹேமாம்பரதராவ் சுபாஷினி ஆர்ட் பிக்சர்ஸ்
1967 மாடிவீட்டு மாப்பிள்ளை தமிழ் எஸ். கே. ஏ. சாரி பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்
1967 மரபூரணி கதா தெலுங்கு வி. ராமச்சந்திர ராவ் ஸ்ரீ புரொடக்ஷன்ஸ்
1967 பட்டுக்குண்டே படிவேலு தெலுங்கு எம். மல்லிகார்ஜுன ராவ் நவஜோதி பிலிம்ஸ்
1967 சிவ லீலலு தெலுங்கு ஏ. பி. நாகராசன் Sri Vijayalakshmi Pictures கே. வி. மகாதேவன் உடன்
1968 அசத்யுடு தெலுங்கு வி. ராமச்சந்திர ராவ் டைகர் புரொடக்ஷன்ஸ்
1968 பங்காரு காஜுலு தெலுங்கு சி. எஸ். ராவ் ரவீந்திரா ஆர்ட் பிக்சர்ஸ்
1968 பிரம்மச்சாரி தெலுங்கு டி. ராமராவ் பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்
1968 செல்லேலி கோசம் தெலுங்கு எம். மல்லிகார்ஜுன ராவ் ஜெயஸ்ரீ லட்சுமி பிக்சர்ஸ்
1968 நாதமந்திரபு சிரி தெலுங்கு டி. ராமராவ் நவஜோதி பிக்சர்ஸ்
1968 பிரேம கதா தெலுங்கு முக்தா சீனிவாசன் முக்தா பிலிம்ஸ்
1968 சிறீமந்துடு தெலுங்கு டி. ஆர். ராமண்ணா ஆர். ஆர். பிக்சர்ஸ்
1969 சிரஞ்சீவி தெலுங்கு சாவித்திரி அருணாச்சலம் ஸ்டுடியோ
1969 மதுரா மிலானா கன்னடம்
1969 மரதாஸ் டூ ஐதராபாத் தெலுங்கு திருமலை–மகாலிங்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிடோன்
1969 பிரேம கனுகா தெலுங்கு வி. சோபநாத்ரி ராவ் திக்விஜயா பிலிம்ஸ்
1970 அகந்துடு தெலுங்கு வி. ராமச்சந்திர ராவ் டைகர் புரொடக்சன்ஸ்
1970 தர்ம தாதா தெலுங்கு ஏ. சஞ்சீவி ரவீந்திரா ஆர்ட் பிக்சர்ஸ்
1971 அத்ருஷ்ட ஜாதகுடு தெலுங்கு கே. ஹேமாம்பரதர ராவ் சுபாஷினி ஆர்ட் பிக்சர்ஸ்
1971 பவித்ரா ஹ்ருதயலு தெலுங்கு ஏ. சி. திருலோகச்சந்தர் ஸ்ரீ விஜயா வெங்கடேஸ்வரா பிலிம்ஸ்
1971 சிசிந்திரி சிட்டிபாபு தெலுங்கு அக்கினேனி சஞ்சீவி ராவ் ரவீந்திரா ஆர்ட் பிக்சர்ஸ்
1971 ஸ்ரீமந்துடு தெலுங்கு கே. பிரத்யகாத்மா விஸ்வ பாரதி புரொடக்சன்ஸ்
1972 தத்த புத்ருடு தெலுங்கு தம்மரெட்டி லெனின் பாபு ரவீந்திரா ஆர்ட் பிக்சர்ஸ்
1972 கில்லாடி புல்லோடு தெலுங்கு நந்தமுரி ரமேஷ் சித்ரககா பிலிம்ஸ்
1972 மஞ்சி ரோஜுலு வச்சாய் தெலுங்கு வி. மதுசூதன ராவ் ஜெமினி ஸ்டூடியோஸ்
1972

ரைத்து குடும்பம்

தெலுங்கு டி. ராமராவ் நவ பரத் திரைப்படம்
1973 டாக்டர் பாபு தெலுங்கு தம்மரெட்டி லெனின் பாபு ரவீந்திரா ஆர்ட் பிக்சர்ஸ்
1973 கண்ணா கொடுக்கு தெலுங்கு வி. மதுசூதன ராவ் விஸ்வ பாரதி தயாரிப்பு
1973 மைனரு பாபு தெலுங்கு தாத்தினேனி பிரகாஷ் ராவ் சாரதி அண்ட் டி.பி.ஆர் கம்பைன்ஸ்
1973 பல்லேதூரி பாவா தெலுங்கு கே. பிரத்யகாத்மா பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்
1974 ஆடபிள்ளா தந்திரி தெலுங்கு கே. வாசு சத்யா எண்டர்பிரைசஸ்
1974 கலி பாடலு தெலுங்கு டி. பிரகாஷ் ராவ் அனில் ஆர்ட்ஸ்
1974 முக்குரு அம்மாயிலு தெலுங்கு கே. பிரத்யகாத்மா நவபாரத் ஆர்ட் பிலிம்ஸ்
1974 வாணி தொங்கள ராணி தெலுங்கு ஆமன்சர்லா சேஷகிரி ராவ் நவோதயா ஆர்ட் மூவிஸ்
1975 சின்னினதி கலலு தெலுங்கு கே. விஸ்வநாத் ரவீந்திரா ஆர்ட் பிக்சர்ஸ்
1975 தேவுடு செசின பெல்லி தெலுங்கு டி. ராமராவ் ஸ்ரீ லக்ஷ்மி புரொடக்சன்ஸ்
1975 பரிவர்தனா தெலுங்கு கே. ஹேமாம்பரதர ராவ்
1975 ராமுனி மிஞ்சின ராமுடு தெலுங்கு எம். எஸ்.கோபிநாத் ராஜேஸ்வரி ஃபைன் ஆர்ட்ஸ்
1975 சம்சாரம் தெலுங்கு டி. பிரகாஷ் ராவ் அனில் புரொடக்ஷன்ஸ்
1975 வயசோசின பில்லா தெலுங்கு லக்ஷ்மி தீபக் கிரிஷிவாலா படங்கள்
1976 அல்லுடோச்சாடு தெலுங்கு கே. பிரத்யகாத்மா பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்
1976 அம்மா நானா தெலுங்கு தம்மரெட்டி லெனின் பாபு ரவீந்திரா ஆர்ட் பிக்சர்ஸ்
1976 மகாத்முடு தெலுங்கு எம். எஸ்.கோபிநாத் ராஜேஸ்வரி சித்ரா
1976 வனஜா கிரிஜா தெலுங்கு கௌதம் ஸ்ரீ வனஜா மூவிஸ்
1977 ஆளு மகளு தெலுங்கு டி. ராமராவ் பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்
1977 அர்தாங்கி தெலுங்கு ஏ. மோகன் காந்தி பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்
1977 ஆதவரில்லு தெலுங்கு கே. பிரத்யகாத்மா பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்
1977 கடுசு அம்மாயி தெலுங்கு கே. பிரத்யகாத்மா துவாரகா ஆர்ட் புரொடக்சன்ஸ்
1977 மஹானுபாவுடு தெலுங்கு கே. ஹேமாம்பரதராவ் சுபாசினி கம்பைன்ஸ்
1977 மோகினி விஜயமு தெலுங்கு என். எஸ்.வர்மா ஸ்ரீ வெங்கடலட்சுமி பிக்சர்ஸ் எம். பூர்ணச்சந்திர ராவுடன்
1978 மஞ்சி மனசு தெலுங்கு கே. பிரத்யகாத்மா ஏ. ஏ கம்பைன்ஸ்
1978 ஸ்ரீ ராம ரக்ஷா தெலுங்கு அஜய் ஆர்ட் பிக்சர்ஸ்
1978 தல்லே சல்லானி தெய்வம் தெலுங்கு எம். எஸ்.கோபிநாத் ராஜேஸ்வரி சித்ரா கம்பைன்ஸ்
1979 கமலம்மா கமடம் தெலுங்கு கே. பிரத்யகாத்மா பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்
1979 லவ் மேரேஜ் தெலுங்கு தம்மரெட்டி லெனின் பாபு ரவீந்திரா ஆர்ட் பிக்சர்ஸ்
1980 ஜந்து பிரபஞ்சம் தெலுங்கு சிறீ லட்சுமிநாராயணா பிலிம்ஸ்
1980 நாயக்குடு விநாயகுடு தெலுங்கு கே. பிரத்யகாத்மா பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்
1980 தாண்டவ கிருஷ்ண தரங்கம் தெலுங்கு ராஜ்குமார் சஞ்சய் மாணிக்யாவுடன்
1980 யுவதாரம் கதிலிண்டி தெலுங்கு தாவல சத்யம் நவதாரம் பிக்சர்ஸ்
1981 ஹரிசந்திருடு தெலுங்கு யு. விஸ்வேஸ்வர ராவ் விஸ்வசாந்தி மூவிஸ்
1981 மரோ குருக்ஷேத்திரம் தெலுங்கு தம்மரெட்டி லெனின் பாபு சரிதா ஃபிலிம் கம்பைன்ஸ்
1982 சர்க்கஸ் பிரபஞ்சம் தெலுங்கு யு. விஸ்வேஸ்வர ராவ்
1983 கீர்த்தி காந்த கனகம் தெலுங்கு யு. விஸ்வேஸ்வர ராவ் விஸ்வசாந்தி மூவிஸ்
1984 ஜனம் மனம் தெலுங்கு மோகன் தாஸ் நவரத்தினம் பிலிம்ஸ்
1985 தாயி தந்தே கன்னடம் வி. சத்தியநாராயணா யு எஸ் ஆர் பிக்சர்ஸ்

மேற்கோள்கள்

தொகு
  1. Swarnayuga Sangeetha Darsakulu. 2011.
  2. "T. Chalapathi Rao". Raaga.com.
  3. "T. Chalapathi Rao All Telugu Songs". Allbestsongs.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தா._சலபதி_ராவ்&oldid=4135730" இலிருந்து மீள்விக்கப்பட்டது