டென்மார்க்

வட ஐரோப்பிய நாடு
(தென்மார்க்கு இராச்சியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டென்மார்க் (Denmark, அல்லது தென்மார்க்கு இராச்சியம் (Kingdom of Denmark, டேனியம்: Kongeriget Danmark, பலுக்கல் [ˈkɔŋəʁiːəð ˈdanmɑɡ̊] (கேட்க)) என்பது தென்மார்க்கு, பரோயே தீவுகள் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இராச்சியம் ஆகும். இது ஐரோப்பாக் கண்டத்திலுள்ள நாடுகளுள் ஒன்று. இதன் தலைநகரம் கோப்பன்ஹேகன் ஆகும். நார்டிக் நாடுகளில் தென்கோடியில் அமைந்துள்ளது இதுவே. இதன் தெற்கில் செருமனி இதன் எல்லையாக உள்ளது. இதன் வடகிழக்குப் பகுதியில் ஸ்காண்டிநேவிய நாடுகளான நோர்வே, சுவீடன் என்பன அமைந்துள்ளன. இது பால்டிக் கடல் மற்றும் வடக்கு கடலுக்கு இடையில் அமைந்துள்ளது. டென்மார்க்கின் பரப்பளவு 43,094 சதுர கிலோமீட்டர்கள் (16,638.69 sq mi) ஆகும். டென்மார்க் நாடானது தீபகற்பம், ஜட்லாந்து மற்றும் 407 தீவுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிக் காணப்படுகின்றது.[11] ஆனாலும் மக்கள் 70 தீவுகளிலேயே வசித்து வருகின்றனர்.

டென்மார்க் இராச்சியம்
Kongeriget Danmark
கொடி of டென்மார்க்
கொடி
சின்னம் of டென்மார்க்
சின்னம்
நாட்டுப்பண்: Der er et yndigt land
ஓர் அழகான நாடு உள்ளது

Kong Christian stod ved højen mast[1][2]
ஐரோப்பா (கடும் சாம்பல்) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் (இளம் பச்சை) டென்மார்க்கின் (கடும் பச்சை) அமைவிடம்
ஐரோப்பா (கடும் சாம்பல்) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் (இளம் பச்சை) டென்மார்க்கின் (கடும் பச்சை) அமைவிடம்
அமைவிடம்: டென்மார்க் இராச்சியம்: கிறீன்லாந்து, பரோயே தீவுகள் (வட்டமிடப்பட்டவை), மற்றும் டென்மார்க்.
அமைவிடம்: டென்மார்க் இராச்சியம்: கிறீன்லாந்து, பரோயே தீவுகள் (வட்டமிடப்பட்டவை), மற்றும் டென்மார்க்.
தலைநகரம்கோபனாவன்
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)டேனியம்
பிராந்திய மொழிகள்
சமயம்
டென்மார்க் திருச்சபை
மக்கள்
  • டேனியர்
  • டேன்
அரசாங்கம்ஒற்றையாட்சி நாடாளுமன்ற
அரசியல்சட்ட முடியாட்சி
• மன்னர்
பத்தாம் பிரெடெரிக்
• பிரதமர்
மெட்டா பிரெடெரிக்சென்
சட்டமன்றம்நாடாளுமன்றம் (ஃபோல்க்திங்)
வரலாறு
• அமைவு
அண். 10ம் நூற்றாண்டு[3]
• அரசமைப்புச் சட்டம்
5 சூன் 1849
• டேனிய ஆளுமை
24 மார்ச் 1948[N 2]
பரப்பு
• டென்மார்க்
42,925.46 km2 (16,573.61 sq mi)[4] (133வது)
• கிரீன்லாந்து
2,166,086 km2 (836,330 sq mi)
• பரோ தீவுகள்
1,399 km2 (540.16 sq mi)
மக்கள் தொகை
• சனவரி 2016 மதிப்பிடு
5,707,251[5] (113வது)
• கிரீன்லாந்து
56,114[6]
• பரோ தீவுகள்
49,079[7]
• அடர்த்தி (டென்மார்க்)
132.96/km2 (344.4/sq mi)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2015 மதிப்பீடு
• மொத்தம்
$257.148 பில்.[8][N 3] (52வது)
• தலைவிகிதம்
$45,435[8] (19வது)
மொ.உ.உ. (பெயரளவு)2015 மதிப்பீடு
• மொத்தம்
$291.043 பில்.[8][N 3] (34வது)
• தலைவிகிதம்
$51,424[8] (6வது)
ஜினி (2014)negative increase 27.5[9]
தாழ்
மமேசு (2014) 0.923[10]
அதியுயர் · 4வது
நாணயம்டேனிய குரோன்[N 4] (DKK)
நேர வலயம்ஒ.அ.நே+1 (ம.ஐ.நே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (ம.ஐ.கோ.நே)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+45[N 5]
ஐ.எசு.ஓ 3166 குறியீடுDK
இணையக் குறி.dk[N 6]

டென்மார்க் 1973ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் (முன்னதாக ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு) அங்கமாக இருந்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை கொண்டு அரசின் நாடாளுமன்றத்தால் இயங்குகிறது. நேட்டோ அமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றாகும். பால்டிக் கடல் பகுதியில் உள்ள ஏராளமான சிறு தீவுகளை உள்ளடக்கியது.

வருவாய் ஏற்றத்தாழ்வு மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் இது ஒன்றாகும். 2007 மற்றும் 2008 எடுக்கப்பட்ட தகவல் சேகரிப்பின் படி, உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உகந்த இடமாகும். இந்த அளவுகள் மக்களின் வாழ்க்கைத்தரம், சுகாதாரம், மருத்துவ வசதி மற்றும் கல்வித்தரம் கொண்டு அளவிடப்பட்டது. ஐஸ்லாந்திற்கு அடுத்தபடியாக உலகின் மிக அமைதியான நாடு எனவும் அறியப்படுகிறது. டானிய மொழியே தேசிய மொழியாகும் இது பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. இது சுவீடிய மற்றும் நோர்வேய மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடையது. 90% டென்மார்க் மக்கள் டானியர்களாவர். இவர்கள் தவிர 8% மக்கள் சிகாண்டிநேவியா நாடுகளில் இருந்து குடிபெயர்ந்தவர்களாவர்.

வரலாறு

தொகு

பொ.ஊ.மு. 1000 இற்கும் பொ.ஊ.மு. 1500 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இன்றைய டென்மார்க் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் வேடர்களாகவும் மீனவர்களாகவும் இருந்துள்ளனர். அதன் பின்பே அவர்கள் விவசாயத்துறையை நாடியுள்ளனர். பொ.ஊ. 8 ஆம் நூற்றாண்டில் இப் பிரதேசம் ஜட்லாந்து என அழைக்கப்பட்டது. பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டில் இந்நாடு கிறிஸ்தவ மயமாகியது. 10 ஆம் நூற்றாண்டில் முதலாவது கிறிஸ்தவ மன்னனாக ஹெரால்ட் பிளாடண்ட் ஆட்சிபீடம் ஏறினார். ஹெரால்டின் மகனாகிய சுவைன் பொ.ஊ. 1013 இல் இங்கிலாந்தைக் கைப்பற்றினார். சுவைனின் மகனாகிய மகா கெனியூட் 1014 தொடக்கம் 1035 வரையிலான காலப் பகுதியில் இங்கிலாந்து, நோர்வே ஆகிய நாடுகளை டென்மார்க்குடன் இணைந்து ஆட்சி புரிந்தார். அத்துடன், 17 ஆம் நூற்றாண்டு வரையும் சுவீடனின் தென்பகுதி டென்மார்க்கின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. கொனியூட்டின் மறைவைத் தொடர்ந்து உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகி நாட்டைச் சின்னாபின்னப் படுத்தியது.

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டென்மார்க் நெப்போலியனை ஆதரித்தது. ஆனால், நெப்போலியனின் தோல்வியைத் தொடர்ந்து, 1815 இல் இடம்பெற்ற வியன்னா மாநாட்டில் டென்மார்கைத் தண்டிக்கும் பொருட்டு அதன் ஒரு பகுதியான நோர்வேயை சுவீடனிடம் இழந்தது. டென்மார்க் முதலாம் மற்றும் இரண்டாம் உலக மகாயுத்தங்களில் நடுநிலை வகித்தது. எனினும், 1940 இல் ஜேர்மனியப் படைகள் டென்மார்க்கில் நுழைந்தன. பரம்பரை மன்னராட்சியைக் கொண்ட டென்மார்க், தற்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ளது.

நிர்வாகப் பிரிவு

தொகு

டென்மார்க் ஐந்து பிரதான பிரதேசங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அத்துடன் 98 நகர சபைகளையும் கொண்டுள்ளது.

பிரதேசங்கள் நகரசபைகளின்
எண்ணிக்கை
டானிஷ் பெயர் தமிழ்ப் பெயர் நிர்வாக நகரம் பெரிய நகரம் (பிரசித்தியானது) மக்கள் தொகை
(அக்டோபர் 2013)
பரப்பளவு
(km²)
குடி அடர்த்தி
(km² இற்கு)
Region Hovedstaden டென்மார்க்கின் முதன்மைப் பிரதேசம் ஹிலெரொட் (Hillerød) கோபனாவன் (Copenhagen) 1,747,596 2,568.29 680.45 29
Region Midtjylland டென்மார்க்கின் மத்திய பிரதேசம் விபோ (Viborg) ஓகூஸ் (Aarhus) 1,276,604 13,095.80 97.48 19
Region Nordjylland டென்மார்க்கின் வட பிரதேசம் ஒல்போ (Aalborg) ஒல்போ (Aalborg) 580,886 7,907.09 73.46 11
Region Sjælland சீலாந்துப் பிரதேசம் சொரோ (Sorø) ரொஸ்கிலே (Roskilde) 816,460 7,268.75 112.32 17
Region Syddanmark டென்மார்க்கின் தென் பிரதேசம் வைலே (Vejle) ஓடென்ஸ் (Odense) 1,201,955 12,132.21 99.07 22

குறிப்புகள்

தொகு
  1. பரோசு மொழி பரோயே தீவில் தானிய மொழியுடன் சேர்ந்து அதிகாரபூர்வ மொழி. கிரீன்லாந்தியம் கிரீன்லாந்தின் ஒரேயொரு அதிகாரபூர்வ மொழி. இடாய்ச்சு டென்மார்க்கின் தெற்கு சுட்லாந்து பகுதியின் சிறுபான்மையின மொழி.
  2. பரோ தீவே 1948 மார்ச் 24 இல் முதன் முதலில் சுயாட்சி பெற்றது. கிரீன்லாந்து 1979 மே 1 இல் சுயாட்சி பெற்றது.
  3. 3.0 3.1 இத்தரவுகள் டென்மார்க்கிற்கு மட்டுமானது. கிறீன்லாந்து, பரோ தீவுகளின் தரவுகளுக்கு அந்தந்தக் கட்டுரைகளைப் பார்க்கவும்.
  4. பரோ தீவுகளின் குரோனா நாணயம் வித்தியாசமான வடிவமைப்பைக் கொண்டது.
  5. பரோ தீவுகள் (+298), கிரீன்லாந்து (+299) தமது தனிப்பட்ட நாட்டு தொலைபேசிக் குறியீடுகளைக் கொண்டுள்ளன.
  6. அதியுயர் ஆள்களப் பெயர் .eu ஏனைய ஐரோப்பிய ஒப்ன்றிய நாடுகளுடன் பகிரப்படுகிறது. கிரீன்லாந்து (.gl), பரோ தீவுகள் (.fo) தமது தனிப்பட்ட ஆட்களப் பெயர்களைக் கொண்டுள்ளன..

மேற்கோள்கள்

தொகு
  1. Kong Christian நாட்டுப்பண்ணுக்கு இணையானது, ஆனால் இது அரச மற்றும் இராணுவ நிகழ்வுகளில் மட்டும் ஒலிக்கப்படுகிறது.
  2. "Not one but two national anthems". Denmark.dk. Ministry of Foreign Affairs of Denmark. Archived from the original on 2014-05-15. பார்க்கப்பட்ட நாள் 18 மே 2014.
  3. Stone et al. 2008, ப. 31.
  4. "Area by region - StatBank Denmark - data and statistics".
  5. "Population at the first day of the quarter by municipality, sex, age, marital status, ancestry, country of origin and citizenship". statbank.dk. Statistics Denmark. பார்க்கப்பட்ட நாள் 24 ஏப்ரல் 2016. சனவரி 2016 {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "2015 Population 1st July". Stat.gl. Statistics Greenland. பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2016.
  7. "Population, births, deaths and migrations by sex, village/city, monthly (1985–2015)". Hagstova.fo. Hagstova Føroya. பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2016.
  8. 8.0 8.1 8.2 8.3 "Denmark". International Monetary Fund. பார்க்கப்பட்ட நாள் அக். 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "Gini coefficient of equivalised disposable income (source: SILC)". Eurostat Data Explorer. பார்க்கப்பட்ட நாள் 4 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. "2015 Human Development Report" (PDF). United Nations Development Programme. 2015. பார்க்கப்பட்ட நாள் 14 December 2015.
  11. "Denmark in numbers 2010" (PDF). Statistics Denmark. பார்க்கப்பட்ட நாள் 2 May 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டென்மார்க்&oldid=3869160" இலிருந்து மீள்விக்கப்பட்டது