வாழ்த்துரைத்தல்

தொகு
தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி செல்வா. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 03:27, 17 அக்டோபர் 2013 (UTC)Reply

உங்களின் கவனத்திற்கு...

தொகு

வணக்கம்! 'முதற்பக்க வார்ப்புரு' என்பதனை இற்றை செய்ய தற்போது யாரும் இல்லை. இங்கு காண்க. உங்களால் இயன்றால் செய்யலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:32, 18 அக்டோபர் 2013 (UTC)Reply

@ஜெயரத்தினா நண்பரே, இப்பணியை ஏற்க வேண்டுகிறேன். வார்ப்புரு அமைத்தல் குறித்தான தங்களின் ஆர்வத்தினையும் ஆக்கத்தினையும் கண்டு செல்வசிவகுருநாதன் கோரிக்கை வைத்திருக்கிறார். தங்களுடைய நிலைபாட்டினை தெளிவு செய்தால் அடுத்த கட்ட நகரிவிற்கு செல்ல ஏதுவாக இருக்கும். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:04, 23 அக்டோபர் 2013 (UTC)Reply
ஜெகதீஸ்வரன், நான் தேர்வுக்கு ஆயத்தம் செய்து கொண்டிருக்கின்றேன் என்பதே எனக்கு இப்போது சிக்கலாக உள்ளது. டிசம்பர் மாதம் வரை சிறிது நேரமே கிடைக்கும். ஆயினும் என்னால் இயன்ற வரை முயல்கிறேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 02:13, 24 அக்டோபர் 2013 (UTC)Reply

@மாதரசன்... தேர்வுக்கு முதலிடம் கொடுங்கள். இங்கே இயன்றதைச் செய்யுங்கள். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:48, 24 அக்டோபர் 2013 (UTC)Reply

மா. செல்வசிவகுருநாதன், நீங்கள் முன்னர் இட்ட செய்தி குழும செய்தி (group message) என்று எண்ணினேன். இது எனக்கு மட்டும் அளிக்கப்பட்டதென்பதை ஜெகதீஸ்வரன் வழியாக தான் தெரிந்தது. உங்களுக்கு காலத்தோடு பதிலளிக்காததற்கு மன்னிக்கவும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 04:56, 24 அக்டோபர் 2013 (UTC)Reply
தாங்கள் இப்பணியை ஏற்றமைக்கு என்னுடைய நன்றிகள், தற்போது தேர்வில் கவனம் செலுத்துங்கள் நண்பரே. இப்பணியை செய்ய ஆர்வமுள்ளோர்களை தேடி இணைத்துவிடலாம். தங்களுக்கு பணி சுமை குறைந்ததும் இப்பொறுப்பினை திறன்பட செய்யுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:11, 24 அக்டோபர் 2013 (UTC)Reply
ஜெகதீஸ்வரன், ஒன்றரை மாதமாக முதற்பக்க வார்புரு இற்றைபடுத்தாதிருந்ததை இன்று தான் கண்டேன், ஆகவே இன்றொருநாளில் திசம்பர் வரைக்கான வார்புருக்களை ஒழுங்குபடுத்தியுள்ளேன். அவற்றை ஒவ்வொன்றாக இட்டுவிடலாம். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 15:31, 24 அக்டோபர் 2013 (UTC)Reply
ஒன்றரை மாத காலமாக இயற்றை செய்யாத செய்தியை இப்போதுதான் அறிகிறேன் நண்பரே. பத்தாண்டு கொண்டாட்ட குதுகளமும், அதன் பின் விக்கியில் நடந்த விசமங்களும் நிர்வாகிகளையும், அதிகாரிகளையும் முதற்பக்கம் நோக்கி கவனம் திருப்பாமல் செய்துவிட்டன. முதற்பக்கத்தினை இயற்றை செய்பவர்களின் எண்ணிக்கை இன்னும் கூட அதிகரிக்க வேண்டும். ஆர்வமுள்ளோர் எவரையேனும் கண்டால் அவர்களை இப்பொறுப்பில் இணைந்து கொள்ளும் படி கூறுங்கள். குறைந்தபட்சம் பரிந்துரை செய்யும் நண்பர்கள் கிடைத்தால் நலம். அத்துடன் தேர்வில் கவனம் செலுத்துங்கள் நண்பரே. நன்றி!--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:48, 24 அக்டோபர் 2013 (UTC)Reply

படிமம் இணைக்க வேண்டுகோள்

தொகு

ஜெயரத்தின மாதரசன், நான் அண்மையில் இடுகை செய்த வழி (ஆங்கிலத் திரைப்படம்) கட்டுரைக்கு படிமம் இணைக்க முடியுமா? நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 13:34, 19 அக்டோபர் 2013 (UTC)Reply

 Y ஆயிற்று. திரு. பவுல், என் பேச்சு பக்கத்துக்கு பதில் தவறுதலாக என் பயனர் பக்கத்தை தொகுத்து விட்டீர்கள்   --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:50, 19 அக்டோபர் 2013 (UTC)Reply

கூகுள்:

தொகு

மாதரசன், 1) பகுப்பு:திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை 2) பகுப்பு:திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட கூகுள் கட்டுரைகள் இவை இரண்டும் ஒன்றல்ல. இரண்டாமவது கூகுள் மொழிபெயர்ப்பாளர்களைத் திருத்தச் சொன்ன போது அவர்கள் “திருத்தி விட்டோம்” என்று சொன்னவை (திருத்தினாலும் திருத்தாவிட்டாலும்). முதலாவது திட்டம் கைவிடப்பட்டபின் நமது விக்கி பயனர்கள் திருத்தி எழுதியவை. வரலாற்றுப் பதிவுக்காக இரண்டும் வெவ்வேறாகவே இருத்தல் நலம் (நாளை இத்திட்டத்தை ஆய்வு செய்பவர்கள் இரண்டையும் குழப்பிக் கொள்ளாது இருக்க). எனவே தங்கள் தானியங்கி மாற்றியதை முன்னிருந்தவாறே மீளமைக்க வேண்டுகிறேஎன்.--சோடாபாட்டில்உரையாடுக 09:02, 20 அக்டோபர் 2013 (UTC)Reply

இன்று இரவுக்குள் செய்து விடுகின்றேன். தவறுக்கு மன்னிக்கவும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 09:07, 20 அக்டோபர் 2013 (UTC)Reply
 Y ஆயிற்று பார்வதி தான் திருத்திய கட்டுரைகளுக்கு தவறாக திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட கூகுள் கட்டுரைகள் என பகுபிடிருந்தார், அதனைத்திருத்தி googel cache ஓடு ஒப்பிட்டு எல்லாவற்றையும் முன்னிருந்தபடியே செய்துள்ளேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 11:13, 20 அக்டோபர் 2013 (UTC)Reply

கட்டுரை நகர்த்தலின் போது பிழை

தொகு

தேவதர்சினி என்ற கட்டுரையை தொடங்கினேன் ஏற்கனவே, இருப்பது தெரியாமல் அதன் மீது நகர்த்தி விட்டேன். பழைய உளடக்கம் அழிந்துவிட்டது. மீளமைக்கத் தெரியவில்லை. தேவதர்சினி, தேவதர்ஷினி ஆகிய பக்கங்களைப் பார்த்து திருத்தி, மீளமைத்து உதவுங்கள். நன்றி!-16:37, 24 அக்டோபர் 2013 (UTC)

தமிழ்க்குரிசில், நீக்கல் பதிவில் இக்கட்டுரை இல்லையே. இதை நீங்கள் நகர்த்தியிருந்தால் இதன் வரலாற்றுப்பக்கத்தின் மூலமாக இதனை மீளமைத்திடலாமே? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 16:53, 24 அக்டோபர் 2013 (UTC)Reply
 Y ஆயிற்று.--Kanags \உரையாடுக 21:08, 24 அக்டோபர் 2013 (UTC)Reply
நன்றி கனகரத்தினம் சிறீதரன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 02:14, 25 அக்டோபர் 2013 (UTC)Reply

கிறித்தவம் வார்ப்புருவில் மாற்றங்கள் வேண்டும்

தொகு

ஜெயரத்தின மாதரசன், கிறித்தவம் வார்ப்புருவில் "உட்பிரிவுகளும் இயக்கங்களும்" என்ற பகுதியில் கட்டுரைகள் எழுதக் கேட்டீர்கள். அந்த வார்ப்புருவைத் திறந்து தலைப்புகளில் மாற்றங்கள் செய்ய இயலவில்லை. எனவே கீழ்க்கண்டவாறு மாற்றங்கள் செய்யுமாறு வேண்டுகிறேன்:

  • செவன்த் டே அட்வென்டெஸ்ட் சபை - மாற்றுக: "வருகை இயக்கம்"
  • பாப்டிஸ்டு - மாற்றுக: "பாப்திஸ்து சபை"
  • கால்வனிசம் - மாற்றுக: "கால்வினிய சபை"
  • இவேஞ்சலிக்கம் - மாற்றுக: "நற்செய்தி சபை"
  • புனிததுவ இயக்கம் - மாற்றுக: "தூய்மை இயக்கம்"
  • சார்பற்ற கத்தோலிக்கம் - நீக்குக (பழைய கத்தோலிக்கம் கட்டுரைக்குள் அடக்கலாம்)
  • கீழைமுறை மரபுவழி திருச்சபை (மியாபசைட்) - மாற்றுக: "கீழைமுறை மரபுவழி திருச்சபை"
  • கிழக்கின் அசிரியன் திருச்சபை - மாற்றுக: "கிழக்கு அசீரிய சபை"
  • மொர்மனிசம் - மாற்றுக: "மோர்மனியம்"
  • இறையொருமை வாத சபை - மாற்றுக: "ஒருமைவாத பெந்தகோஸ்து சபை"
  • Oneness Pentecostalism - நீக்குக
  • Christadelphians - மாற்றுக: "கிறித்து சகோதரர் சபை"

நீங்கள் இம்மாற்றங்களைச் செய்தவுடன் கட்டுரை தொகுப்பதைத் தொடங்குவேன். நன்றி.--பவுல்-Paul (பேச்சு) 01:04, 25 அக்டோபர் 2013 (UTC)Reply

 Y ஆயிற்று திரு. பவுல், நீங்கள் கூறியுள்ளபடியே செய்துள்ளேன். செவன்த் டே அட்வென்டெஸ்ட் சபைக்கு ஏழாம் நாள் வருகை சபை கட்டுரை உள்ளது என்பதை நோக்குக. மேலும் {{கிறித்தவம்}}வார்புரு இரண்டு வார்ப்புருக்களால் ஆனது, உட்பிரிவுகளை தொகுக்க {{Christian denominations}} என்பதை தொகுக்கவும் நன்றி -ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 02:30, 25 அக்டோபர் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி

தொகு
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:53, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெற நியமித்தல் தொடர்பான பரிந்துரைக் குழு

தொகு

நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் நியமித்தல் தொடர்பான பரிந்துரைக் குழு உங்களை ஓர் உறுப்பினராக பங்களிக்க வேண்டுகிறேன். பங்களிக்க இசைவு எனில் குழு என்ற பகுதியில் உங்கள் பெயரைச் சேர்த்து விடுங்கள். நன்றி. --Natkeeran (பேச்சு) 02:22, 28 அக்டோபர் 2013 (UTC)Reply

ஐயா, இப்பணி அக்டோபர் 30 முதல் நவம்பர் 8 வரை திட்டமிடப்பட்டுள்ளதாலும், டிசம்பர் மாத இருதிவரை எனக்கு தேர்வு இருப்பதாலும் என்னால் இப்பொறுப்பை ஏற்க இயலாது. மன்னிக்கவும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:06, 28 அக்டோபர் 2013 (UTC)Reply
பதிலுக்கு நன்றி. --Natkeeran (பேச்சு) 13:37, 28 அக்டோபர் 2013 (UTC)Reply

முதற்பக்க வார்ப்புரு

தொகு

ஜெயா, முன்வந்து முதற்பக்க வார்ப்புருவை மாற்றுவதற்கு நன்றி. எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்க வார்ப்புரு இற்றைப்படுத்தப்படுகிறது என்று அறிய விருப்பம். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 02:57, 31 அக்டோபர் 2013 (UTC)Reply

சூர்யபிரகாஷ், வாரம் ஒருமுறை வியாழனன்று மாற்ற முயன்று வருகின்றேன். சிறப்பு படத்திற்கு பயனர் பரிந்துரைப்பது தற்போது நடப்பில் உள்ளதா? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 03:06, 31 அக்டோபர் 2013 (UTC)Reply
சரி ஜெயா. ஒரு சிறு விளக்கம்.
  • ஞாயிறு - படம் இற்றை; கட்டுரைகள் இற்றை
  • திங்கள் - ஏதுமில்லை
  • செவ்வாய் - ஏதுமில்லை
  • புதன் - படம் இற்றை; உங்களுக்குத் தெரியுமா இற்றை
  • வியாழன் - ஏதுமில்லை (வார்ப்புரு)
  • வெள்ளி - ஏதுமில்லை
  • சனி - ஏதுமில்லை
வார்ப்புருவுக்கு ஏற்ற நாளாக வேறேதேனும் இருக்க முடியுமா? அதைப் பற்றி உரையாடுவோமா? அல்லது வியாழனை முடிவாக்கி திட்டப்பக்கத்தில் எழுதிவிடுவோமா? வருங்கால மக்களுக்கு உதவும்.
தற்போதைக்கு நான் (சிறப்புப் படக் கவனிப்பாளர்) எந்தப் பரிந்துரைகளையும் எதிர்நோக்கவில்லை. முதன்மையான மூன்று காரணங்கள்
  1. தமிழ்க் கட்டுரைகளில் உள்ள பெரும்பான்மைப் படங்கள் அல்லது சிறந்த படம் இருக்கக்கூடிய கட்டுரைகள் ஏற்கனவே "சிறப்புக் கட்டுரையாகவும், உங்களுக்குத் தெரியுமா செய்திகளாகவும்" காட்டப்பட்டுள்ளன. எனவே, அவற்றைத் தவிர்க்க வேண்டிய இக்கட்டு.
  2. தமிழ் தொடர்பான கட்டுரைகளுக்குப் பெரும்பாலும் குறைந்த படவணுவளவு உள்ள படங்களே :( உள்ளன; அல்லது படங்களே இல்லை.
  3. மேலும், சற்று மேம்படுத்த வேண்டிய கட்டுரைகளை முதற்பக்கத்தில் இடுவது (எ.கா: லம்போர்கினி) புதுப் பயனர்களை விக்கிப்பீடியாவைப் பற்றி எண்ண வைக்கும்; அதாவது, "தமிழ்க் கட்டுரைகளின் நிலை மகிழும் வண்ணம் இல்லை; நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும்" என்றெண்ணக் கூடும். ஆனால், கட்டுரையின் நிலைகண்டு தமிழ் விக்கிப் பக்கம் வராமல் போவதற்கு சாத்தியம் குறைவு. பிற கட்டுரைகளின் நிலையை அறியவாவது அவர்கள் பல இணைப்புகளைச் சொடுக்கிப் பார்க்க முனைவர்.
எனவே, தற்போதைக்கு இம்மூன்றனையும் கருத்திற்கொண்டு நான் காட்சிப்படுத்துகிறேன். உங்களுக்கு உதவ நேரமிருப்பின் தொடர்புகொள்ளவும், வழிமுறைகளைக் கூற அணியமாக உள்ளேன்.
நன்றி. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 03:21, 31 அக்டோபர் 2013 (UTC)Reply
வியாழனன்று வார்ப்புரு இற்றைப்படுத்துவதில் எனக்கு எச்சிக்கலும் இல்லை. இதில் சிக்கல் இருப்பின் வேறு எந்த நாளில் இற்றைப்படுத்துவது நல்லது என்று கூறினால் அதன்படியே செயல்படுகின்றேன்.
நற்கருணை பேழை என்னும் கட்டுரைக்கான ஒரு சிறப்புப்படத்தை இங்கு பரிந்துரைத்திருந்தேன். அதற்கு எந்த பதிலும் கிடைக்காததினாலேயே உங்களை தொடர்பு கொண்டேன். கிறித்தவ பண்பாடு மற்றும் வழக்கங்களைக்குறித்து குறுங்கட்டுரைகள் எழுத நினைத்துள்ளேன், அவற்றிற்கு ஏற்ற படங்களை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்த பரிந்துரைக்கலாமா? அவை குறுங்கட்டுரைகளாக இருப்பதால் "சிறப்புக் கட்டுரையாக" காட்சிப்படுத்த இயலாது. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 03:50, 31 அக்டோபர் 2013 (UTC)Reply
குறுங்கட்டுரைகளைக் காட்சிப்படுத்தக்கூடாது என்றெல்லாம் ஏதுமில்லை ஜெயா. உங்கள் பரிந்துரைக்கு நன்றி. இது போல பல நல்ல படங்களைக் கொண்ட பரிந்துரைகள் பலவும் வந்தால்தான் என்னாலும் நம்பிக்கையுடன் queue செய்ய முடியும். எனவேதான் தற்போதைக்கு நிலையற்றப் பரிந்துரைப் பக்கங்களிலிருந்து எடுப்பதில்லை. மேலும், பரிந்துரை இருப்பின் அதற்கு ஆதரவு, எதிர்ப்பு, கருத்தும் தேவைப்படும். அப்போது queue நீண்டதாகும். மீண்டும் பொதுவகத்திலிருக்கும் நல்ல படத்திற்கு கட்டுரை தேடி இங்கு அலைய வேண்டும். எனவேதான், தற்போதைக்குப் பரிந்துரைப் பக்கத்தை நான் கவனிப்பதில்லை. அதில் 100 முதல் 200 பரிந்துரைகள் வரட்டும். அவற்றுக்கு வாக்கெடுப்பும் நடக்கட்டும். அதன்பின்னர் நான் (அல்லது வருங்காலத்தில் பொறுப்பேற்கும் ஒருவர்) அதனைப் பயன்படுத்திக் கொள்வேன்/கொள்வார். நன்றி :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 04:11, 31 அக்டோபர் 2013 (UTC)Reply
விளக்கத்திற்கு நன்றி சூர்யா. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 04:44, 31 அக்டோபர் 2013 (UTC)Reply
முதற்பக்க வார்ப்புரு காட்சிப்படுத்தலில் தங்களின் உழைப்பு மிகுந்த போற்றுதலுக்குரியது. பாராட்டுகளும் நன்றிகளும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:18, 9 நவம்பர் 2013 (UTC)Reply
மிக்க நன்றி செல்வசிவகுருநாதன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 16:31, 9 நவம்பர் 2013 (UTC)Reply

பதக்கம்

தொகு
  செயல்நயம் மிக்கவர் பதக்கம்
மேலும் முன்னேற வாழ்த்துக்கள் ♥ ஜீவதுவாரகன் ♥ ♀ பேச்சு ♀ 03:40, 1 நவம்பர் 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மிக்க நன்றி ஜீவதுவாரகன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 03:49, 1 நவம்பர் 2013 (UTC)Reply

மாதம் 1000 பங்களிப்புகள் மைல்கல்

தொகு

வணக்கம், Jayarathina/தொகுப்பு04!

 

நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

--இரவி (பேச்சு) 12:10, 2 நவம்பர் 2013 (UTC)Reply

கட்டுரை இற்றைப்படுத்த வேண்டுகோள்

தொகு

வணக்கம் நண்பா! தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) கட்டுரை நீண்ட நாட்களாக இற்றைப்படுத்தப்படாமல் இருக்கிறது. தமிழ் சினிமாவின் தொடக்கத்தில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை, அவற்றின் பகுப்பில் இருந்து எடுங்கள். உங்கள் மணல்தொட்டியில் சேருங்கள். பத்தாண்டுகள் முடிந்ததும், அவற்றை உங்கள் கருவி கொண்டு அகர வரிசைப் படுத்துங்கள். அவற்றை கட்டுரையில் சேருங்கள். கடைசியாக ஒருமுறை, ஒவ்வொரு எழுத்திற்கும் ஏற்ப கட்டுரையில் அகரவரிசையில் மாற்றுங்கள். நன்றி! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:51, 4 நவம்பர் 2013 (UTC)Reply

சிபிச் சக்கரவர்த்தி, மன்னிக்கவும் இக்கட்டுரை மிக நீண்டதாக இருக்குமே, இது தேவைதானா? ஆண்டு வரிசையிலும் இதேபோல ஒரு கட்டுரை ஊண்டு. அதனையும் இற்றைப்படுத்த வேண்டும். இவ்விரு கட்டுரைகளையும் ஆங்கில விக்கியில் உள்ளது போல en:List of Tamil-language films மாற்றியமைக்க பரிந்துரைக்கின்றேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:40, 4 நவம்பர் 2013 (UTC)Reply

பதக்கம்

தொகு
  மெய்வாழ்வுப் பதக்கம்
விக்கி விடுப்பு அறிவித்த பிறகும் கடமையாற்றிக் கொண்டிருப்பதற்காகவும் புதிதாய் கிடைத்த நிருவாக அணுக்கம் மூலமாகச் சிறப்பான துப்புரவு பணி ஆற்றுவதற்காகவும் மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள் :) இரவி (பேச்சு) 14:27, 8 நவம்பர் 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மிக்க நன்றி இரவி.   --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 16:07, 8 நவம்பர் 2013 (UTC)Reply
  விருப்பம் மிகவும் வேகமாக துப்புரவுப் பணி ஆற்றுகிறீர்கள், பாராட்டுக்கள்! உங்களுக்கு நிருவாக அணுக்கம் முன்னமே கிடைத்திருந்தால், தேங்கிக் கிடக்கும் துப்புரவுப் பணிகளில் பாதி குறைந்திருக்கும். --Anton·٠•●♥Talk♥●•٠· 10:36, 10 நவம்பர் 2013 (UTC)Reply
நன்றி அன்டன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:19, 10 நவம்பர் 2013 (UTC)Reply
  விருப்பம் அஸ்வின் (பேச்சு) 15:54, 10 நவம்பர் 2013 (UTC)Reply

இக்கருவியினை தமிழ் விக்கியிற்கு கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறேன். அதற்காக இப்பக்கத்தை நம் விக்கியின் தேவைக்கு ஏற்ப உருவாக்க சொன்னார்கள். பக்கத்தை உருவாக்கி விட்டேன், அதில் என்ன மாற்றம் செய்வதென்று தெரியவில்லை உதவவும்.நன்றி --அஸ்வின் (பேச்சு) 15:54, 10 நவம்பர் 2013 (UTC)Reply

அஸ்வின், இக்கருவி கொண்டு என்ன பணி செய்ய முயல்கின்றீர்கள் என தெரிந்தால் மேலும் என்ன மாற்றங்கள் செய்யலாம் என முடிவு செய்ய இயலும். எனக்கு தெரிந்தவரை நீங்கள் உருவாக்கியிருப்பது சரி என்றே நினைக்கின்றேன். முன்னர் தமிழ் விக்கியில் எங்கோ விக்கிப்பீடியா:AutoWikiBrowser/Typos தற்போது சேதனை முயற்சியாக இருப்பதால் பயன்படுத்த வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டதாக நினைவு. எனினும், Typos பட்டியல் மிகவும் குறுகியதாக இருப்பதனால் இதனால் பெரும் பயன் கிடைக்குமா? இக்கருவியினை உங்கள் கனினியில் நிறுவி சோதித்துப்பார்த்தீர்களா? முதலில் என்னென்ன செயல்களை இக்கருவியில் செய்ய வேண்டும், அவற்றை செய்ய இக்கருவியில் வழி உள்ளதா என்பதை பட்டியலிடுக. பின்னர் அச்செயல்களை தானியக்கமாக்க முயலலாம். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:24, 11 நவம்பர் 2013 (UTC)Reply
disambiguation pages மற்றும் disambiguation pages with links ஆகியவற்றிற்காகவே இக்கருவியை பயன்படுத்துதல் எனது நோக்கம். எனினும் AWB போன்று பல வேலைகளிற்கும் இக்கருவியினைப் பயன்படுத்தலாம். (AWB விண்டோசில் மட்டுமே சரியாக இயங்குகிறது, லினக்சிலும் இக்கருவி வேலை செய்கிறது இக்காரணமும் கூட). Typos மட்டுமின்றி multiple spaces, wiki syntax errors, isbn ஆகியவற்றினை சரிபடுத்துகின்றது. (இதனை தானியக்கமாய் செய்ய இதனைப் பயன்படுத்தலாம்). நன்றி --அஸ்வின் (பேச்சு) 08:15, 11 நவம்பர் 2013 (UTC)Reply
இப்போது நீங்கள் உருவாக்கியிருக்கும் இப்பக்கம் பயனர்:NicoV வால் இயக்கப்படும் தானியங்கிக்காக தானே? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 10:15, 11 நவம்பர் 2013 (UTC)Reply
காலதாமதமான மறுமொழியிற்கு மன்னிக்கவும். இல்லை பயனர்:NicoV ஆல் உருவாக்கப்பட்ட கருவி WPCleaner இதை நாம் semi-automatic ஆக நமக்கு வேண்டிய முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். --அஸ்வின் (பேச்சு) 02:56, 12 நவம்பர் 2013 (UTC)Reply
அஸ்வின், இக்கருவியினை நம் கணினியில் நிருவினால், நீங்கள் அமைத்துள்ள பக்கத்திலிருந்து தமிழ் விக்கிக்கான விருப்பத்தேர்வுகள் எடுக்கப்படும். இதை கணினியில் நிருவாமல் பயன்படுத்த இயலாது. அப்படித்தானே? எனினும் இக்கருவிக்கு அளிக்கப்படுள்ள ஆவணப்படுத்தல் பக்கத்தினைக்கொண்டும் ஆங்கில விக்கியினை எடுத்துக்காட்டாக கொண்டும் இப்பக்கத்தை மாற்ற முயலுகின்றேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 06:29, 12 நவம்பர் 2013 (UTC)Reply
நன்றி ஜெயரத்தின மாதரசன். தங்களின் உதவியினால் இக்கருவியினை தற்போது தமிழ் விக்கியிலும் பயன்படுத்தலாம். நீங்களும் பயன்படுத்த இங்கு சென்று பதிவிறக்கம் செய்யுங்கள். நன்றி --அஸ்வின் (பேச்சு) 12:00, 13 நவம்பர் 2013 (UTC)Reply

புனித யோசபாத்து கட்டுரைக்கு படிமமும் வார்ப்புருவும் சேர்க்க வேண்டல்

தொகு

ஜெரத்தின மாதரசன், முடிந்தால் புனித யோசபாத்து கட்டுரைக்கு படிமமும் வார்ப்புருவும் சேர்த்து விடுங்கள். நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 04:15, 12 நவம்பர் 2013 (UTC)Reply

பவுல் martyr வார்ப்புருவை ஆங்கிலத்திலிருந்து பெயர்ப்பதை விட {{தகவற்சட்டம் கிறித்தவத் தலைவர்}}ஐ பயன்படுத்துவது சிறப்பு, புனிதர் பட்ட அளபுருக்கள் இதில் உண்டு. ஆயினும் see, archbishop_of, predecessor, successor, consecration, ordination முதலியவைக்கு martyrஇல் இடமில்லை. வேறு ஒரு கட்டுரையில் martyr பயன்படுத்த வேண்டும் எனில் {{தகவற்சட்டம் புனிதர்}} பயன்படுத்தவும். ஏனெனில் இவை இரண்டும் பெயரினைத்தவிர மற்றனைத்திலும் ஒன்று படுகின்றன. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:31, 12 நவம்பர் 2013 (UTC)Reply

உதவி

தொகு

வணக்கம். கும்பகோணம் மகாமக குளம் கட்டுரையின் பகுப்பில் ”Articles which use infobox templates with no data rows” என இருப்பது எதனால் என்பதையும், அதனைச் சரி செய்யும் வழி முறையையும் விளக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 06:02, 14 நவம்பர் 2013 (UTC)Reply

Booradleyp1, {{infobox}}இல் உள்ள சிக்கல் என நினைக்கின்றேன். தேவையான ஒரு சில parameters கொடுக்கவில்லை எனில் இவ்வாறு வருகின்றது. ஒரு தகவற்சட்டம் வடிவமைக்கும் போது ஒவ்வொரு parameter-ஐயும் கொடுக்கப்பட்டால் மட்டும் காட்டு (if param exists { show label and value}) என வடிவமைக்கப்பட வேண்டும், பழைய (?!?) தகவற்சட்டங்களின் இம்முறை கடைபிடிக்கப்படாததால் இவ்வாறு எழுகின்றது. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 07:53, 14 நவம்பர் 2013 (UTC)Reply

உதவியமைக்கு நன்றி. தகவற் பெட்டியை சரிசெய்திருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:53, 14 நவம்பர் 2013 (UTC)Reply

படத் துப்பரவுப் பணிகளுக்கு நன்றி

தொகு

நீன்ற நாட்களாகச் செய்யப்பட வேண்டிய படங்கள் தொடர்பான துப்புரவுப் பணிகளை நிறைவேற்றுவதற்கு நன்றி. --Natkeeran (பேச்சு) 14:21, 14 நவம்பர் 2013 (UTC)Reply

தவறுக்கு மன்னிக்கவும், இது காமன்சில் நீக்கப்பட்டிருகின்றது. அதே பெயரில் {{NowCommons}} tag இருந்ததால் தவறாக நீக்கிவிட்டேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 14:28, 14 நவம்பர் 2013 (UTC)Reply
பொதுவகத்தில் உள்ள படங்களை இங்கு நீக்கும் போது, அவை இங்கு வேறு பெயருடன் இல்லாமல் இருக்க வேண்டும். இல்லாவிடின், அவை எந்தப் பக்கங்களில் இணைக்கப்பட்டுள்ளன எனப் பார்த்து திருத்த வேண்டும். ஏற்கனவே அப்படிச் செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 14:53, 15 நவம்பர் 2013 (UTC)Reply
ஆம் அப்படிதான் செய்கிறேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 10:53, 16 நவம்பர் 2013 (UTC)Reply

படிமம் இணைக்க வேண்டுகோள்

தொகு

மாதரசன், அமைதியின் அரசி அன்னை மரியா கோவில் (திருவனந்தபுரம்) என்னும் கட்டுரையில் படிமத்தைச் சரிபார்த்து இணைக்க வேண்டுகிறேன். நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 14:51, 14 நவம்பர் 2013 (UTC)Reply

 Y ஆயிற்று குறிப்பு: pushpin mapக்கான நிலப்பட படிமம் காமன்சிலிருந்து எடுக்கப்படுகின்றது. ஆதலால், pushpin map ஆங்கிலத்திலேயே இருக்க வேண்டும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 15:01, 14 நவம்பர் 2013 (UTC)Reply

உதவி

தொகு

வணக்கம். நேற்று நான் தலைப்பை நகர்த்திய இரு கட்டுரைகள் கிராம_நிருவாக_அலுவலர்கள், பியரே_டி_பேர்மட் இரண்டும் எனது ’தொடங்கிய கட்டுரைகள் பட்டியலில்’ [1] தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. பிரச்சனை என்னவென்று பார்த்து உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:09, 20 நவம்பர் 2013 (UTC)Reply

Booradleyp1 இயல்பாக இப்படித்தான் நடக்க வேண்டும். ஒரு பக்கத்தை ஒருபெயரில் இருந்து மற்றொரு பெயருக்கு நகர்த்தும் போது வரலாறும் சேர்ந்தே நகரும். ஆதலால் கட்டுரையினை உருவாக்கியவரின் பட்டியலில் புதிய பெயரும், வழிமாற்றாக அமைக்கப்பட்ட பழைய பெயர் வழிமாற்றினை உருவாக்கிய உங்களின் பெயரிலும் அமையும். Yokishivam மற்றும் Prabhupuducherry ஆகியோரின் பட்டியலில் புதிய பெயர் இருப்பதைக் காண்க --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:14, 20 நவம்பர் 2013 (UTC)Reply

அவ்விரு பழைய தலைப்புகள் நீக்கப்பட்டவுடன் அவை தொடங்கிய கட்டுரைகள் பட்டியலிலும் இப்போது இல்லை. நன்றி--Booradleyp1 (பேச்சு) 05:25, 20 நவம்பர் 2013 (UTC)Reply

மற்றுமொரு வேண்டுகோள். பயனர் பக்கத்தின் விருப்பத் தேர்வுகள் பக்கத்திற்குச் சென்றால் அங்கு இறுதியிலுள்ள சேமி பொத்தானுக்கருகில் \\எல்லோருக்கும் பொதுவான வடிவமைப்பைத் திரும்பக்கொண்டுவரவும் (எல்லா பிறிவுகளிலும்)\\ என்றுள்ளது இப் பகுதியின் கடைசியிலுள்ள பிறிவுகளிலும் என்பது பிரிவுகளிலும் என்று இருக்க வேண்டும். மாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:33, 20 நவம்பர் 2013 (UTC)Reply

Booradleyp1, மாற்றத்தை செய்திருக்கின்றேன், [2] ஆனாலும், இது இற்றைபடுத்தப்பட பல வாரங்கள் ஆகும். :( --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:39, 20 நவம்பர் 2013 (UTC)Reply
  விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 05:59, 20 நவம்பர் 2013 (UTC)Reply

விக்கித் திட்டம் தானியங்கிப் பராமரிப்பு

தொகு

வணக்கம், புதிய தானியங்கிப் பராமரிப்புத் திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. உங்கள் தானியங்கி மூலமோ, ஆலோசனைகள் மூலமோ இத்திட்டத்திற்கு உதவலாம். --நீச்சல்காரன் (பேச்சு) 07:14, 20 நவம்பர் 2013 (UTC)Reply

தலைப்பு

தொகு

புனித பசில் பேராலயம் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட பசிலி பேராலயம் எனும் பதங்கள் சரியானவைகளா எனப்பாருங்கள். --Antonக●♥Talk♥●•٠ଯsup> 13:01, 20 நவம்பர் 2013 (UTC)Reply

 Y ஆயிற்று--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 14:11, 20 நவம்பர் 2013 (UTC)Reply
திருத்தங்களுக்கு நன்றி! --Antonக●♥Talk♥●•٠ଯsup> 08:01, 21 நவம்பர் 2013 (UTC)Reply

வலைவாசல் கேரளம் வேண்டல்

தொகு

வணக்கம் செயரத்தினா! நாம் உரையாடி வெகு நாட்களாகி விட்டன. :) எனக்கு உங்கள் உதவி தேவை! கேரளம் தொடர்பான வலைவாசலுக்கு தேவையானவற்றை செய்துதருமாறு வேண்டுகிறேன். வலைவாசல் வடிவமைப்பு குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. சிறப்புக் கட்டுரைகள், தேவைப்படும் கட்டுரைகள், பகுப்புகள், இன்ன பிற என ஒவ்வொன்றிலும் இருபது வீதம் குறிப்பிட்டீர்கள் எனில், தொடர வசதியாய் இருக்கும். மேலும் உங்கள் ஆலோசனைகளை வழங்குக! செகதீசுவரனையும், சிவகுருவையும் கேட்டுள்ளேன். ;) நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:44, 25 நவம்பர் 2013 (UTC)Reply

தமிழ்க்குரிசில், வலைவாசல் தொடுப்பு கொடுக்க இயலுமா? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 12:33, 25 நவம்பர் 2013 (UTC)Reply
இனிமேல் தான் உருவாக்க வேண்டும். அதற்கு தான் கேட்டிருக்கேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:04, 25 நவம்பர் 2013 (UTC)Reply
தேவைப்படும் கட்டுரைகளின் பட்டியலை en:Template:Kerala மற்றும் en:Template:Kerala topics என்பவனற்றிலிருந்து பெறலாம். இக்கட்டுரைகளின் அடிப்படையில் தான் பகுப்புகளை அமைக்க வேண்டும். வலைவாசல் அமைக்க பகுப்புகள் அவசியமற்றது. சிறப்புக்கட்டுரைகள் இத்தலைப்பில் முனைப்புடன் பங்களிப்பவருக்கு தெரிந்திருக்கக்கூடும், எணினும் பகுப்பு:கேரளம்இல் குறிப்பிட்ட அளவைத்தாண்டிய கட்டுரைகளை தேவைப்படும் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்புக்கட்டுரைகளாக தேர்வு செய்யலாம். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:22, 25 நவம்பர் 2013 (UTC)Reply

படிமம்

தொகு

வணக்கம். கதவு சந்தானம் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள படிமங்கள் இரண்டும் பதிப்புரிமை மீறலாகுமா? இல்லையெனில் அவற்றுக்கு அனுமதி எந்த வகை என்று கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:36, 25 நவம்பர் 2013 (UTC)Reply

Booradleyp1, ஒரு படமோ அல்லது ஓவியமோ அதன் ஆக்குனர் தானாகவே வேறு உரிமத்தின் கீழ் அளித்தால் அன்றி அவை பதிப்புரிமையுடையது. இந்தியாவில் ஓவியரின் காலம் முடிவடைந்து 60ஆண்டுகள் வரை அது பதிப்புரிமையுடையது. இது நியாயமான பயன்பாட்டின் கீழ் இணைக்க இயலாது. உயிரோடு இருக்கும் நபரின் புகைபடத்துக்கும் இது பொருந்தும். :( நீங்கள் facebook போன்ற சமூக வலைத் தளத்தில் அவரை தொடர்பு கொண்டு ஒரு புகைப்படத்தையும் ஒரு ஓவியத்தையும் creative commons உரிமையில் அளிக்க இயலுமா என்று அவரிடமே கேட்டுப்பாருங்கள். அது தவிர வேறு வழியில்லை :( --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 17:06, 25 நவம்பர் 2013 (UTC)Reply

உட்பகுப்பு சேர்க்க உதவி

தொகு

வணக்கம் நண்பா! எனக்கு ஒரு உதவி தேவை!

1970 திரைப்படங்கள்
மலையாளத் திரைப்படங்கள்

என்ற இரண்டு பகுப்புகள் உடைய கட்டுரையில்

1970 மலையாளத் திரைப்படங்கள்

என்ற ஒரே பகுப்பு சேர்க்க வேண்டும். இது போல், 1969 முதல் 1979 வரை வேண்டும். உதவுக. தானியக்கமாக செய்ய முடியும்தானே! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:12, 28 நவம்பர் 2013 (UTC)Reply

 Y ஆயிற்று --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 06:52, 28 நவம்பர் 2013 (UTC)Reply
நன்றி! இனிவரும் கட்டுரைகளையும், குறிப்பாக மலையாளத் திரைப்படக் கட்டுரைகளிலும் இதே திருத்தத்தை தானே செய்யுமாறு செய்ய முடியும் தானே! உதவுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:30, 28 நவம்பர் 2013 (UTC)Reply
தமிழ்க்குரிசில், இதை முழுவதும் தானியங்கி கொண்டு செய்வதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பல கட்டுரைகளில் எதிர்பாரா பகுப்புகளையும் வடிவமைப்புகளையும் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இதை சிறிய regular expression கொண்டு விக்கிதானுலாவியினால் ஒவ்வொரு தொகுப்பையும் பரிசோதித்து செய்வது நல்லது. அவ்வாறுதான் நான் செய்தேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 12:44, 28 நவம்பர் 2013 (UTC)Reply
தாங்களே இதைத் தொடர்ந்து செய்யுமாறு வேண்டுகிறேன், நேரம் கிடைக்கையில்! விக்கிதானுலாவி பற்றி, சோடா விளக்கியிருந்தார். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:09, 28 நவம்பர் 2013 (UTC)Reply
என்னால் இயன்றவரை செய்கின்றேன். ஆயினும் அவ்வப்போது நினைவூட்டவும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 04:06, 29 நவம்பர் 2013 (UTC)Reply

இவ்வார்ப்புருவில் ஜஸ்டின் மற்றும் ஜார்ஜ் ஆகிய புனிதர்களின் இணைப்பு பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்களுக்கு இணைக்கப்படுள்ளது. இவற்றை என்னால் சரிசெய்ய இயலவில்லை. தாங்கள் சரியான கட்டுரைகளுக்கு இணைப்புக்களை மாற்ற வேண்டுகிறேன். மேலும் பிசர் ஜான்; தாமஸ் மூர் என்றொறு இணைப்பு உள்ளது. இதையும் கவனிக்கவும். நன்றி --அஸ்வின் (பேச்சு) 12:26, 28 நவம்பர் 2013 (UTC)Reply

 Y ஆயிற்று --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 12:39, 28 நவம்பர் 2013 (UTC)Reply

iwt tool

தொகு

வணக்கம் நண்பா! தங்களது கருவியில் ஆங்கில இணைப்பு மட்டுமே உள்ளது. பிற இந்திய மொழிகளுக்கும் இந்த வசதியை ஏற்படுத்தித் தருமாறு வேண்டுகிறேன். நான் மலையாள திரையுலகம், பண்பாடு குறித்து கட்டுரைகள் எழுதி வருகிறேன். எனவே, மலையாள கட்டுரையை தமிழ் விக்கியில் இட்டால், அது மலையாள கட்டுரைக்கு இணையான தமிழ் கட்டுரையை மாற்றித் தர வேண்டும். மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளம், சிங்களம் உள்ளிட்ட மொழிகளுக்கு இந்த வசதியை வேண்டுகிறேன். விரைவில் எதிர்பார்க்கிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:30, 1 திசம்பர் 2013 (UTC)Reply

 Y ஆயிற்று தமிழ்க்குரிசில்,  ஐ சொடுக்கி பிற மொழி விக்கிப்பீடியாவின் சுறுக்க குறியீட்டினை இட்டு நடப்பில் உள்ள அனைத்து பிற மொழி விக்கிப்பீடியாக்களிலிருந்தும் தமிழ் விக்கி இணைப்புகளைப் பெற மாற்றியமைத்துள்ளேன். சுறுக்க குறியீடுகளின் பட்டியல் இங்கு உள்ளது --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 17:22, 2 திசம்பர் 2013 (UTC)Reply
அது இயங்கவில்லை. ஒரு முறை சோதித்துப்பார்க்கவும். en, enwiki என்றெல்லாம் கொடுத்துப்பார்த்தேன். ஒரு ஆங்கில இணைப்பு கூட மாறவில்லை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:47, 3 திசம்பர் 2013 (UTC)Reply
தமிழ்க்குரிசில், en என்று கொடுத்தால் பொதும். நான் பரிசோதிக்க, நீங்கள் பயன்படுத்திய உரையினை தரையலுமா. உங்கள் உலாவியினையும் குறிக்கவும். (குறிப்பு: உங்கள் உங்களின் common.js பக்கத்தில் இருமுறை கருவியினை இணைத்துள்ளீர்கள்) --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 10:56, 3 திசம்பர் 2013 (UTC)Reply

iwt கருவி

தொகு

தங்கள் கருவியின் 'தேடிக்கண்டுபிடித்து மாற்றும்' பயன் எனக்கு சரிவர வேலைசெய்வதில்லை. எனது பட்டியலில் "Tin" = "வெள்ளீயம்" என்ற மாற்றம் அனைத்து 'tin'களுக்கும் செய்யப்படுகின்றது. இம்மாற்றங்களை case-sensitive ஆக மாற்றினால் இலகுவாக இருக்கும். --அஸ்வின் (பேச்சு) 12:11, 1 திசம்பர் 2013 (UTC)Reply

ஆங்கில விக்கியில் tin அல்லது Tin இரண்டும் வெள்ளீயத்தைத் தானே தருகிறது. எதற்கு case-sensitive தேவை?--Kanags \உரையாடுக 12:23, 1 திசம்பர் 2013 (UTC)Reply
இல்லை வெறும் tin வார்த்தைகளை நான் கூறவில்லை, உதாரணமாக Martin என்பதை Marவெள்ளியம் என்று மாற்றுகின்றது. --அஸ்வின் (பேச்சு) 14:02, 1 திசம்பர் 2013 (UTC)Reply

கருவியினை விரைவாக புதுப்பித்தமைக்கு நன்றிகள். எனது common.js பக்கத்தினை மாற்றிவிட்டேன். கருவி அருமையாக இயங்குகிறது. நன்றி --அஸ்வின் (பேச்சு) 17:11, 2 திசம்பர் 2013 (UTC)Reply

கருவி இயங்குகையில் 'Cannot read property '0' of undefined' என்று வந்துக்கொண்டே இருக்கின்றன. இதனைக் கொஞ்சம் கவனிக்கவும் --அஸ்வின் (பேச்சு) 17:15, 2 திசம்பர் 2013 (UTC)Reply
அஸ்வின் கருவியில் என்ன செய்யும்போது இது நிகழ்கின்றது? ஒவ்வொரு பக்கத்தோற்றத்திலும் இது வருகின்றதா?? நீங்கள் பயன்படுத்திய sample text தர இயலுமா? நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகின்றீர்கள்?--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 17:19, 2 திசம்பர் 2013 (UTC)Reply
பயனர்:Aswn/மணல்தொட்டி/அகாதமி விருதுகள் பக்கத்தில் பயன்படுத்தும் போது நடந்தது. (dont allow more instances என்று குடுத்ததால் இப்போது தெரிவதில்லை) தற்போது 'தரவு வழங்கள் பிழை. உங்கள் பிற மொழி விக்கியின் குறியீட்டினை சரிபார்க்கவும்.' என்று கூறுகின்றது. குரோம் பயன்படுத்துகிறேன்--அஸ்வின் (பேச்சு) 17:23, 2 திசம்பர் 2013 (UTC)Reply
அஸ்வின், தவறினை சுட்டியமைக்கு நன்றி. இப்போது cache நீக்கிவிட்டு பரிசோதிக்கவும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 17:40, 2 திசம்பர் 2013 (UTC)Reply
வழு இன்னும் உள்ளது போல் தெரிகிறது. மேலும் 'Cannot read property '0' of undefined' என்பது தமிழில் அந்த ஆங்கில கட்டுரை இல்லையெனில் வருகின்றது. மற்றபடி கருவி ஒழுங்காக இயங்குகிறது --அஸ்வின் (பேச்சு) 17:58, 2 திசம்பர் 2013 (UTC)Reply
அஸ்வின் வழு இன்னும் உள்ளதா? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 19:06, 2 திசம்பர் 2013 (UTC)Reply

──────────────────────────────────────────────────────────────────────────────────────────────────── தற்போது கருவி பிழையின்றி இயங்குகிறது. --அஸ்வின் (பேச்சு) 16:18, 4 திசம்பர் 2013 (UTC)Reply

அஸ்வின் case sensitive ஆக மாற்றுவதைக்குறித்து ஆவணத்தை புதுப்பித்துள்ளேன். உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன். சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 18:08, 4 திசம்பர் 2013 (UTC)Reply

படிமம் சேர்க்க வேண்டுகோள்

தொகு

மாதரசன், இறை அன்னை மரியா பெருங்கோவில் (ராஞ்சி) என்னும் கட்டுரைக்குப் படிமம் இணைத்ததில் ஏற்பட்ட இடரைச் சரிப்படுத்த முடியுமா? நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2013 (UTC)Reply

 Y ஆயிற்று --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 16:27, 2 திசம்பர் 2013 (UTC)Reply

நன்றி

தொகு

எனது பேச்சுப் பக்கத்தில் நீங்கள் கூறியுள்ளபடி மாற்றங்களைச் செய்துள்ளேன். ஒரு தடவை சரி பார்த்துவிடுங்கள். நன்றி.

கலை, சரியாக உள்ளது. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 04:11, 3 திசம்பர் 2013 (UTC)Reply

சற்று பொறுக்கவும்

தொகு

ஒருவர் பதிவேற்றிய பல படங்களை நீக்கும் முன் அவர்களை கேட்டுவிடலாமே? நான் 300, எருமைத் தமிழர்கள், புரட்சித்தலைவர் மற்றும் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் போன்ற படிமங்களை பயன்படுத்தப் போகிறேன். அதனால் அதை மீளமைக்கவும். நன்றி.

பழநியின் பெருங்கல் சவுக்கை படம் தேவையில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:17, 4 திசம்பர் 2013 (UTC)Reply

திரு. தென்காசி சுப்பிரமணியன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், நான் 300, எருமைத் தமிழர்கள் ஆகியவை நீக்கல் பதிவில் இல்லை (எந்த படிமம் என்று தெரியவில்லை). முழு படிம பெயரைக்குறிப்பிட்டால் மீளமைத்துவிடுவேன். நீங்கள் குறித்துள்ள மற்ற இரு படங்களை மீளமைத்து விட்டேன். படிமம்:புரட்சித் தலைவர்.jpg - தற்போது உள்ள நியாயமான பயன்பாட்டுக்காரணம் பொருந்தாது. கட்டுரையின் பெயரையாவது குறிப்பிடவும். படிமம்:300.jpg 2012இல் பதிவேற்றப்பட்டது. இன்னமும் பயன்படுத்தப்படவில்லை என்று தான் நீக்கினேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 15:29, 4 திசம்பர் 2013 (UTC)Reply

நல்லது. நான் அறிவேன். புரட்சித்தலைவர் என்பது வெளியாகவிருந்த ஒரு படத்தின் சுவரொட்டிதான். பின்பு ஏனோ அப்படம் பற்றிய செய்திகள் வரவில்லை. எருமைத் தமிழர்கள் என ஆங்கிலத்தில் இருக்கும். 300 தெர்மொபைல் இடத்தில் நடத போருக்காக பதிவேற்றியது. தற்போது கட்டுரை சிக்கவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:02, 4 திசம்பர் 2013 (UTC)Reply

 Y ஆயிற்று படிமம்:Erumaiththamizharkal.jpg --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 16:19, 4 திசம்பர் 2013 (UTC)Reply

படிமங்களின் அனுமதி

தொகு
  • படிமம்:Akkari-Sakthi kavignan.jpg
  • படிமம்:Rethnasingam1 kavignan.jpg

இவ்விரு படிமங்களும் [3]- இப்பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன என நினைக்கிறேன். இவற்றின் அனுமதி எந்தவகையைச் சேரும் என்று கூறும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:39, 4 திசம்பர் 2013 (UTC)Reply

இப்படங்கள் பதிப்புரிமையுடையன என நீங்கள் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் இடப்பட்டுள்ளது. இதனை விக்கிப்பீடியாவில் இணைக்க இயலாது. :( இப்படங்களின் வார்ப்புரு இணைத்துள்ளேன். பயனர் பக்கத்திலும் கேட்டுப்பார்க்கலாம். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 15:55, 4 திசம்பர் 2013 (UTC)Reply

உதவிக்கு நன்றி.--Booradleyp1 (பேச்சு) 17:14, 4 திசம்பர் 2013 (UTC)Reply

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, November 2013

தொகு
வணக்கம் Jayarathina,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Highlights, November 2013 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம்


Please consider helping non-English-language Wikimedia communities to stay updated about the most important Wikimedia Foundation activities, MediaWiki development work and other international Wikimedia news from last month. Completed translations will be announced on Facebook, Twitter, project village pumps and (for some languages) mailing lists. If you have questions about the translation notifications system, ask them here. You can manage your subscription here.

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 02:37, 12 திசம்பர் 2013 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising/Translation/Thank you email 20131202

தொகு
வணக்கம் Jayarathina,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising/Translation/Thank you email 20131202 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2014-01-02

Thank you for your help translating this 'Thank you letter' from the Wikimedia Foundation's Executive Director Sue Gardner into your language.

If you have any questions, please post them on my talk page https://meta.wikimedia.org/wiki/User_talk:Jrobell

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 22:34, 12 திசம்பர் 2013 (UTC)

கட்டுரைகள்

தொகு

நான் எழுதும் கட்டுரைகளில் கிறித்தவப் பகுதிகளை சரிபார்க்க உங்களைக் கேட்க எண்ணியிருந்தேன். இந்த கட்டுரையையும் உங்களிடம் சொல்லலாம் என எண்ணியிருந்தேன். எண்ணுவதற்கு முன்பே, வந்து திருத்திட்டீரே! யோவ்! எங்கே இருந்து வர்றீங்கயா நீங்களெல்லாம்?! :D -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:13, 20 திசம்பர் 2013 (UTC)Reply

முன்பே இது போன்ற ஒரு நிகழ்வு நடந்துள்ளது. (ம்.. ஜெயரத்தினவிடம் ஏதோ ஒரு சக்தி இருக்குது :-D) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:29, 20 திசம்பர் 2013 (UTC)Reply
ஜெகதீஸ்வரன், உண்மையாகவே நீங்கள் குறிப்பிட்டுள்ள நிகழ்வு தற்செயலாக நடந்தது.   நம்புங்கள்... இவை இரண்டுக்கும் எத்தொடர்பும் இல்லை. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 09:06, 20 திசம்பர் 2013 (UTC)Reply
தமிழ்க்குரிசில், நான் முன்னர் உருவாக்கியக்கட்டுரை இக்கடுரையில் இருந்து இணைக்கப்பட்டிருந்ததால் என் அறிவிப்பில் அது இருந்தது. அதனால் நான் அதை கவனிக்க நேர்ந்தது. வேறு ஒன்றுமில்லை. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 09:06, 20 திசம்பர் 2013 (UTC)Reply
உங்களைத்தானே நம்பியிருக்கோம்!.. (தேவர்மகன் நடையில் படிக்கவும் :-))--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:16, 20 திசம்பர் 2013 (UTC)Reply

தானியங்கியில் தவறு

தொகு

மணியம்மையார் கட்டுரையில் உங்கள் தானியங்கி செய்த ஒரு மாற்றத்தால் கட்டுரை குழம்பிப் போயுள்ளது. சரி பாருங்கள்.--Kanags \உரையாடுக 05:38, 30 திசம்பர் 2013 (UTC)Reply

மேலும், உங்கள் தானியங்கி மூலம் இந்த மாற்றத்தை அனைத்து ஆண்டு நிறைவுகளிலும் ஏற்படுத்த முடியுமா? இந்த மாற்றத்தால் முன்பக்கத்தில் ஓரிரு வரி இடங்களைச் சேமிக்க முடியும்.--Kanags \உரையாடுக 06:13, 30 திசம்பர் 2013 (UTC)Reply
 Y ஆயிற்று Kanags, சரியாக உள்ளதா என பரிசோதிக்கவும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 07:55, 30 திசம்பர் 2013 (UTC)Reply
மணியம்மை கட்டுரையில் மாற்றம் செய்துள்ளேன். நன்றி ஜெயரத்தினா.--Kanags \உரையாடுக 08:11, 30 திசம்பர் 2013 (UTC)Reply
Return to the user page of "Jayarathina/தொகுப்பு04".