விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு91

உரை திருத்த உதவி தேவை தொகு

விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு வெகு விரைவில் அச்சுக்குச் செல்லவிருப்பதால் அனைவரும் ஒரு முறை பார்த்து உரை திருத்தி உதவ வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 06:30, 16 செப்டம்பர் 2013 (UTC)

சென்னை விக்கிப்பீடியர் கூடலுக்கு பயணம், தங்கலுக்கு உதவி தொகு

சென்னை விக்கிப்பீடியர் கூடலுக்கு தங்குமிடத்துக்கும் பயணச் செலவுக்கும் இயன்றவை உதவுவோம். உங்கள் விண்ணப்பங்களை முறையாக மேற்கண்ட பக்கங்களில் இட்டு உதவுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 07:56, 20 செப்டம்பர் 2013 (UTC)

நாளை மறுநாள் சென்னையில் மென்பொருள் விடுதலை நாள் கொண்டாட்டம் தொகு

செப்டம்பர் 22 அன்று சென்னையில் மென்பொருள் விடுதலை நாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது. இடம்: விவேகானந்தா அரங்கம், கிண்டி வளாகம், அண்ணா பல்கலைக்கழகம். தமிழ் விக்கிப்பீடியா சார்பாக யாராவது இதில் பங்கு பெற்று பார்வையாளர்களுக்கு விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும். நமக்காக ஒரு மேசை ஒதுக்கித் தருவார்கள். அடுத்த வாரம் நாம் நடத்த இருக்கும் நிகழ்வுக்கான முன்னோட்டமாகவும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நன்றி. --இரவி (பேச்சு) 12:32, 20 செப்டம்பர் 2013 (UTC)

பார்வையாளனாகச் செல்லவுள்ளேன். தமிழ் விக்கிப்பீடியர் யாரேனும் மேசை அமைத்தால் உதவ வருகிறேன் -நீச்சல்காரன் (பேச்சு)
அதிக விவரம் தேவை! நானும் அறிந்துகொள்ள பார்வையாளராக கலந்து கொள்வேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:46, 20 செப்டம்பர் 2013 (UTC)

tshrinivasan at gmail.com தொடர்பு கொள்ளுங்கள். அவரது தொலைப்பேசி எண்ணை உங்களுக்கு மின்மடலில் அனுப்புகிறேன்.--இரவி (பேச்சு) 18:39, 20 செப்டம்பர் 2013 (UTC)

இற்றை: தமிழ் விக்கிப்பீடியா சார்பாக நீச்சல்காரன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு விளக்கங்களைத் தந்துள்ளார்.--இரவி (பேச்சு) 20:16, 25 செப்டம்பர் 2013 (UTC)

தாமதமான இற்றை. மேசைக்குச் செல்லவில்லை. மதியம் ஒரு சிறு விக்கி அறிமுக உரை ஆற்ற முடிந்தது.--சோடாபாட்டில்உரையாடுக 05:04, 30 செப்டம்பர் 2013 (UTC)

முக்கியம்: இந்திய மொழி விக்கிகள் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு தொகு

பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:இந்திய விக்கிமீடியப் பிரிவுக்கான முன்மொழிவுகள் 2013

பார்வதி நேர்காணல் தொகு

விக்கிமேனியாவில் பார்வதி தந்த நேர்காணல் - http://vimeo.com/73856540 --இரவி (பேச்சு) 15:16, 21 செப்டம்பர் 2013 (UTC)

விக்கி விடுகதை தொகு

நண்பர்களே, இது தமிழ் விக்கிபீடியாவில் என் முதல் முயற்சி. இங்கு ஒரு தமிழ் விக்கி விடுகதைதொகுத்திருக்கிறேன். இதனைபற்றிய உங்கள் கருத்தை தெரிவியுங்கள். இது மைக்ரோசாப்ட் பவர் பாயிண்ட்-ல் உருவாக்கபட்டது. பேச்சாளர் குறிப்பு காட்சியில் பேசவேண்டிய உரை கொடுக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் பங்குகொள்வோருக்கு விக்கி-ல் காணப்படும் பல தலைப்புகள் மற்றும் திட்டங்கள் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்துவதாகும். இது ஒரு மாதிரி விடுகதை. உங்கள் கற்பனையால் இதனை மேலும் சிறப்பிக்க வேண்டுகிறேன். - தி.சௌமியன் - விக்கிமீடியா சாப்ட்டர்.Sowmyan (பேச்சு) 11:43, 23 செப்டம்பர் 2013 (UTC)

சிறப்பாக இருக்கிறது சௌமியன். ---மயூரநாதன் (பேச்சு) 17:21, 23 செப்டம்பர் 2013 (UTC)

இலச்சினை மாற்ற வேண்டுகோள் தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுக் கொண்டாட்டத்தினை முன்னிட்டு இலச்சினையை மாற்ற ஒரு வழு பதியப்பட்டுள்ளது (https://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=54516). எனவே, அனைவரும் தங்களது ஆதரவினைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இலச்சினை மாற்ற வேண்டுகோள் இங்கு உள்ளது.-- சூர்யபிரகாஷ்  உரையாடுக 17:27, 24 செப்டம்பர் 2013 (UTC)

யாழ்ப்பாணத்தில் பத்தாண்டு நிறைவு நிகழ்வும் பயிற்சிப் பட்டறையும் தொகு

விக்கிப்பீடியா பத்தாண்டு நிறைவையொட்டி, எதிர்வரும் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாத முற்பகுதியில் யாழ். பல்கலைக்கழகத்தில் விக்கிப்பீடியா அறிமுகம் மற்றும் பட்டறையை நடாத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ 3 மணி நேர மாலை நிகழ்வாக நடைபெறும். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இது திறந்த நிகழ்வாக அமையும். --சிவகோசரன் (பேச்சு) 04:42, 25 செப்டம்பர் 2013 (UTC)

நல்லது சிவகோசரன். திகதி தீர்க்கமானதும் திட்டப்பக்கம் தொடங்கலாம். மேலும் சென்னை சந்திப்பின் போது இது பற்றி உரையாடுவோம். நன்றி--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:40, 25 செப்டம்பர் 2013 (UTC)

  விருப்பம்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:09, 25 செப்டம்பர் 2013 (UTC)

  விருப்பம்--கலை (பேச்சு) 13:18, 25 செப்டம்பர் 2013 (UTC)

  விருப்பம்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:46, 25 செப்டம்பர் 2013 (UTC)

  விருப்பம்--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:12, 25 செப்டம்பர் 2013 (UTC)

  விருப்பம்-- சுந்தர் \பேச்சு 02:51, 1 அக்டோபர் 2013 (UTC) +1 -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 02:58, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவின் புதிர்ப் போட்டி தொகு

புதிய பயனர்கள் பங்களிக்கும் விதத்தில் ஒரு புதிர்ப் போட்டி நாளை காலை இணையத்தில் 9 மணிக்கு இங்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. விழா அரங்கில் விடைகள் வெளிவரும் விதமாக மூன்று நாள் கொண்டாட்டமாக அமையும். நெடுநாள் வைத்து விளையாடும் விதமாகவும், எளிமை மற்றும் கடுமை தகுந்த விதத்திலும், விக்கித் திட்டங்களைத் துழாவும் விதத்திலும், கூகிள் தேடல்களில் விடை அவிழாத கடுமையான புதிர்களும் கொண்டு வடிவமைக்கப்படவுள்ளது. 18 புதிர்கள் தயாராகிவிட்டது உங்கள் ஆலோசனைகளையும் உங்கள் புதிர்களையும் நாளைக் காலை 9க்குத் தெரிவித்தால் தகுந்த திருத்தம் செய்துவிடுகிறேன். புதிரின் மாதிரிப் பக்கம் --நீச்சல்காரன் (பேச்சு) 17:47, 25 செப்டம்பர் 2013 (UTC)

சிறப்பாகவும் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணமும் உள்ளது. --Natkeeran (பேச்சு) 18:40, 25 செப்டம்பர் 2013 (UTC)

http://tamilwikipedia.blogspot.in/2013/09/quiz.html தமிழ் விக்கிப்பீடியாவின் புதிர்ப் போட்டி ஆரம்பமாகிவிட்டது. சமூகத்தளங்களில் #tawiki10 உடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கெல்லாம் ஒட்டமுடியுமோ அங்கெல்லாம் போஸ்டரை அடித்து ஒட்டுங்கள். அனைவரும் பங்கு கொள்ளலாம். --நீச்சல்காரன் (பேச்சு) 06:06, 26 செப்டம்பர் 2013 (UTC)

நிர்வாக அணுக்கம் உள்ளவர்கள் யாரேனும் இப்புதிர்ப் போட்டிக்கான இணைப்பை விக்கி தலைப்பகுதியில் சேர்த்து விடுங்கள். அதிகமானவர்களுக்கு அறிமுகமாகும். நீச்சல்காரன் (பேச்சு)

--சீராசை சேதுபாலா./உரையாடுக. 11:29, 30 செப்டம்பர் 2013 (UTC)== தினமணியின் இணையப் பதிப்பில்... பத்தாண்டுகள் கொண்டாட்டம் குறித்த முன்னறிவிப்பு செய்தி! ==

செப்டம்பர் 23, தினமணியின் இணையப் பதிப்பில் பிற்பகலில் இந்த செய்திக் கட்டுரை பதிப்பாகியுள்ளது!
செய்தியாளர்கள் சந்திப்புக்கு வெகுமுன்பாகவே வெளியாகியுள்ள இச்செய்தியை நம்மில் எவரேனும் முன்னெடுத்து தினமணியிடம் தந்தார்களா? அல்லது கட்டுரையின் ஆசிரியர் நமது திட்டப் பக்கங்களை பார்த்து, அவரே எழுதியுள்ளாரா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:40, 25 செப்டம்பர் 2013 (UTC

தினமணி வெளியிடும் இந்த வார நிகழ்ச்சிகள் பற்றிய பகுதிக்கான குறிப்பாக இதனை அனுப்பி வைத்திருநோம்.--இரவி (பேச்சு) 19:50, 25 செப்டம்பர் 2013 (UTC)
அடைப்புக் குறிக்குள் சரிபார்க்க வேண்டும் என்ற குறிப்பும் சேர்ந்து வந்துள்ளது. --Natkeeran (பேச்சு) 20:01, 25 செப்டம்பர் 2013 (UTC)
உருவாக்கத்தில் இருந்த ஊடக அறிக்கையை நாம் அனுப்பி வைக்க அவர்களும் அப்படியே போட்டு விட்டார்கள் :) இதையெல்லாம் கண்டுக்காதீங்க :) 2 நாட்கள் முன்பே அனுப்பி வைத்திருந்தோம்.--இரவி (பேச்சு) 20:07, 25 செப்டம்பர் 2013 (UTC)

முக்கிய அறிவிப்பு: 'பத்தாண்டுகள் கொண்டாட்டம்' குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள், கட்டுரைகளை இனிமேல் இங்கு தெரிவித்து இற்றை செய்யுங்கள்; நமது விரைவான பார்வைக்கு இது எந்நாளும் உதவிகரமாக இருக்கும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:26, 25 செப்டம்பர் 2013 (UTC)

10-ஆம் ஆண்டுவிழாவில் மயூரநாதன் ஆற்றிய உரை: தொகு

தமிழ்விக்கி 10-ஆம் ஆண்டு விழாவில் சென்னையில் மயூரநாதன் ஆற்றிய உரை -rssairam

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் கொண்டாட்ட சென்னைக் கூடல் அறிக்கை தொகு

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் கொண்டாட்டம் தொடர்பான சென்னை விக்கிப்பீடியர் கூடல் நடந்து முடிந்துள்ளது. நிகழ்வு பற்றிய ஊடகச் செய்திகளை இங்கு காணலாம். நிகழ்வு பற்றிய அனைவரின் கருத்துகளையும் இங்கு வரவேற்கிறேன். நிகழ்வில் எடுக்கப்பட்ட தொழில்முறை ஒளிப்படங்களும் நிகழ்பதிவுகளும் இந்த வாரத்தின் இறுதியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். கிடைத்தவுடன் காமன்சில் ஏற்றி இங்கு இணைப்பைப் பகிர்வோம். நிகழ்வுக்குப் பிந்தைய பின்னணி வேலைகள், மற்ற குடும்பப் பொறுப்புகள் காரணமாக அடுத்த சில நாட்கள் என் பங்களிப்புகள் குறைவாகவே இருக்கும். நேரம் கிடைக்கும் போது நிகழ்வு குறித்த விரிவான அறிக்கையையும் கருத்துகளுக்கான மறுமொழியையும் அளிக்கிறேன். .நன்றி. --இரவி (பேச்சு) 21:07, 30 செப்டம்பர் 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் கொண்டாட்டம் படங்கள் தொகு

நான் எடுத்துள்ள ஒரு சில படங்களை இங்கு பதிவேற்றியுள்ளேன்.

-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 05:47, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உலாவியின் ஆரம்பப் பக்கமாக தமிழ் விக்கிப்பீடியா தொகு

  • தமிழ் விக்கியை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள இணையம் இணைந்த கணினிகளில் உள்ள உலாவிகளின் ஆரம்ப வலைமனையாக(Default Homepage of browsers) வைத்தால் , இணையதளம் பார்க்க வேண்டுபவர் முதலில் இந்த தளத்தை பார்த்த பின்பு தான் வேறெங்கும் செல்ல முடியும். அப்பொழுது தமிழ் விக்கிபீடியாவின் முகப்பு பக்கத்தில் உள்ள செய்திகள், பகுதிகள் எல்லாவற்றையும் படிக்க தூண்டும்.
  • அரசு அலுவலகங்களிலும் தமிழ் விக்கிப்பீடியா வலைத்தளத்தை உலாவியின் ஆரம்ப பக்கமாக வைத்தால், கண்டிப்பாக ஒரு நாளைக்கு மூன்று தடவையாவது ஊழியர்கள் பார்க்க நேரிடும்.
  • வீட்டில் உள்ளவர்கள் கணினியின் உலாவி முதற்ப்பக்கமாக தமிழ் விக்கிப்பீடியா பக்கத்தை வைக்கலாம். அந்த கணினியை உபயோகிப்பவர்கள் அதனை பார்த்து தெரிந்துக் கொள்வார்கள்
  • பிரௌசிங் சென்டர்களிலும் இதை நாம் பரிந்துரைக்கலாம்.
  • தமிழ் விக்கிப்பீடியாவின் முகப்பு பகுதியில் நீங்களும் தொகுக்கலாம் என்று ஒரு புகைப்படத்தை வைத்து அது தொகுத்தல் உதவி பக்கத்திற்கு செல்லுமாறு வைக்கலாம்.

இந்த கோரிக்கையை நம் பத்தாண்டு விழாவிற்கு வந்த இணைய துறை அதிகாரியிடம் நாம் தெரிவிக்கலாம். இதை நம் அரசு செயல்படுத்தினால் நிச்சயம் தமிழகமெங்கும் தமிழ் விக்கிப்பீடியா பரவும்! - Vatsan34 (பேச்சு) 07:41, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வத்சன், நல்ல பரிந்துரை. ஆனால், இது நடைமுறைச் சாத்தியமற்றதும் கணினிப் பயனர்களின் உரிமையில் தலையிடுவதும் ஆகும். தமிழ் விக்கிப்பீடியாவின் பயன் பெருகப் பெருக மக்கள் தாமாகவே இவ்வாறான நடவடிக்கைகளில் இறங்குவார்கள் என்று எதிர்பார்ப்போம். அரசுடனான தொடர்பாடல்கள் பெரு நோக்கில் இருப்பதே நன்று.--இரவி (பேச்சு) 07:45, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

புரியவில்லை இரவி. இது எப்படி உரிமையில் தலையிடுதல் ஆகும்? அரசு சார்ந்த இடங்களில் இப்படி இருந்தால் அரசு கொடுக்கும் டீபால்டு பிரவுசரை தான் வைக்க வேண்டும். ஊழியர்கள் அரசு கூறுவதைத் தானே கேட்பார்கள். வீட்டில் உள்ளவர்களுக்கும் பிரவுசிங்கு சென்டர்களுக்கும் அவர் பரிந்துரைக்க தானே சொல்கிறார். இது எதன் கீழ் உரிமையில் தலையிடுதலாக வரும்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:08, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இரவியின் கருத்துடன் உடன்படுகிறேன்.--Kanags \உரையாடுக 08:18, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
கட்டற்ற இயக்கமாகிய நாம் எல்லா வகையிலும் பயனருக்கான உரிமையை உறுதி செய்ய வேண்டும். பயனருக்கு எது நல்லது, பயனுள்ள தளம் என்று நாம் தீர்மானிக்க முடியாது. இயல்பிருப்புத் தளமாக கூகுள் இருந்தால் கூட எரிச்சல் அடையும் சிலர் இருக்கிறார்கள். அரசு, பிற நிறுவனங்கள் போன்ற இடங்களில் இயல்பிருப்புத் தளத்தை மாற்றிக் கொள்ள முடியாத அளவுக்குக் கூட கணினி அமைப்புகளை அங்குள்ள கணினி நிருவகிப்பவர் தடுத்து வைத்திருக்கலாம். பலருக்கு இயல்பிருப்புத் தளத்தை மாற்றலாம் என்றே தெரியாது. வேண்டுமானால், தமிழ் விக்கிப்பீடியாவை இயல்பிருப்புத் தளமாக மாற்றிக் கொள்ளுங்கள் என்பது போல் ஒரு bookmarkletஐ நாம் தரலாம். அதனை வேண்டியவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழ் விக்கிப்பீடியாவைப் பரப்ப வேண்டும் தான். ஆனால், இது சரியான வழியன்று. இன்னும் பல வழிகளில் பரவுவதற்கான உள்ளாற்றல் நமக்கு உண்டு. ஆங்கில விக்கிப்பீடியாவை யாராவது நமக்கு இயல்பிருப்புத் தளமாகப் போட்டா தெரிந்து கொண்டோம்? வேண்டுமானால், உலாவியகங்கள் போன்ற இடங்களில் தமிழ் விக்கிப்பீடியாவை விளம்பரப்படுத்தும் ஒட்டிகளைத் தரலாம். உள்ளடக்கத்தையும் தரத்தையும் கூட்டும் போது மற்றவை தாமே நிகழும். இன்னொன்று, அரசு என்பது மாபெரும் அமைப்பு. அதனுடனான தொடர்பாடல்கள் மாபெரும் விளைவுகளைத் தரும் கொள்கை முடிவுகள் நோக்கியதாக இருக்க வேண்டும். எ.கா. - தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழ்த் தட்டச்சு பயிற்றுவித்தல், அரசு ஆக்கங்களைக் கட்டற்ற உரிமத்தில் தருதல் போன்றவை. சின்னச் சின்ன வேண்டுகோள்களுடன் போய் நின்றால் நமது இயக்கத்தின் மதிப்பு தான் குறையும். நன்றி. --இரவி (பேச்சு) 08:17, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஓ. சரி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:20, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உலாவியில் ஆரம்ப பக்கமாக்க ஏதுவாக, தமிழ் விக்கித்திட்டங்களில் ஒரு இணைப்பு கொடுக்கலாமா? விருப்பப்படுவோர் வைத்துக்கொள்ளட்டும். ஆங்கிலத்திலும் கூட வைத்துக்கொள்ளலாம். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:40, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

புது பயனர்கள் தொகு

புதிய பயனர்கள் முதலில் தனிப்பெயர்வெளியிலோ அவர்தம் பயனர்பக்கத்தின் துணைப்பக்கத்திலோ எழுதி பழகினால் அவர்கள் விக்கி நடைமுறைகளை புரிந்து கொள்ளலாம். அதன் பிறகு கட்டுரையின் பேச்சுப்பக்கதிலும் இறுதியில் கட்டுரை பக்கத்திலும் எழுதும் நடைமுறையை கொண்டுவரலாமா புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 08:30, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

புதுப்பயனர்கள் மணல்வெளியில் எழுதிப் பழகலாம் என்ற விசயத்தை இன்னும் தெளிவாக எடுத்துரைக்கலாம். ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை என்றால் என்ன என்று அவர்கள் புரிந்து கொள்ளுமாறு இன்னும் எளிமைப்படுத்தி, சுருக்கமாக விளக்க வேண்டும். ஆனால், அனைத்துப் புதுப்பயனர்களையும் பயிற்சி வெளியில் முதலில் எழுதச் சொல்வது, எழுதிக்காட்டச் சொல்வது இன்னும் பாதமாக முடியும். அந்த அளவுக்குத் தமிழ் விக்கிப்பீடியாவில் புதுப்பயனர்களின் வரவு அதிகமாகவோ அவர்கள் தரும் பங்களிப்புகள் நிருவாகச் சுமையைக் கூட்டுவதாகவோ இல்லை. சரியோ தவறோ யாருடைய ஒப்புதலும் இன்றி நாம் முதன் முதலில் இடும் ஒரு பங்களிப்பு உலகின் பார்வைக்குச் செல்கிறது என்று உணரும் வேளை தான் விக்கியார்வத்தைத் தூண்டும் வேளை. அந்த உணர்வு இல்லாமல் விக்கி தரும் உண்மையான சுதந்திரத்தைப் புரிந்து கொள்ள முடியாது. இன்று முனைப்பான பங்களிப்பாளர்களாக உள்ள பலர் விளையாட்டுக்கு எழுதிப் பார்த்து, வேண்டுமென்றே விசமத்தனம் செய்து பார்த்து, முதற்கட்டுரை நீக்கப்பெற்று பிறகே இந்த நிலையை அடைந்துள்ளார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். புதுப்பயனர்களின் பங்களிப்புகளை உடனடியாக நீக்கி அவர்களைத் திகைக்கச் செய்யாமல் அவர்களுக்கு எப்படி இன்னும் சரியான வழிகாட்டலும் காலமும் தரலாம் என்பதைச் சிந்திக்க வேண்டும். --இரவி (பேச்சு) 19:09, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விக்கி சமூக ஊடகம், மின்னஞ்சல் தொகு

விக்கி சமூக ஊடகம், மின்னஞ்சல் பராமரிப்பில் பங்கெடுக்க விரும்பும் பயனர்கள் பேச்சுக் பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:43, 3 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

 
Notifications inform you of new activity that affects you -- and let you take quick action.

(This message is in English, please translate as needed)

Greetings!

Notifications will inform users about new activity that affects them on this wiki in a unified way: for example, this new tool will let you know when you have new talk page messages, edit reverts, mentions or links -- and is designed to augment (rather than replace) the watchlist. The Wikimedia Foundation's editor engagement team developed this tool (code-named 'Echo') earlier this year, to help users contribute more productively to MediaWiki projects.

We're now getting ready to bring Notifications to almost all other Wikimedia sites, and are aiming for a 22 October deployment, as outlined in this release plan. It is important that notifications is translated for all of the languages we serve.

There are three major points of translation needed to be either done or checked:

Please let us know if you have any questions, suggestions or comments about this new tool. For more information, visit this project hub and this help page. Keegan (WMF) (talk) 19:17, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

(via the Global message delivery system) (wrong page? You can fix it.)

தமிழ் விக்கிக்கு தேவைப்படும் கருவிகள் குறித்து வழிகாட்டல் தேவை தொகு

வணக்கம் நண்பர்களே, தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்ட சென்னை கூடலின் பொழுது பல பயனர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் தேவைப்படுகின்ற கருவிகள் குறித்து அறிய முடிந்தது. அவ்வாறான தேவைகளை ஒருங்கினைத்து ஒரே பக்கத்தில் சரியான விளக்கத்துடன் தரும் பொழுது நிரலியில் பயற்சிப் பெற்ற தன்னாலர்வர்கள் உதவ முன்வருவார்கள் என்பதால் இங்கு அதற்கான பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பக்கத்தில் தங்களுடைய மேலான வழிகாட்டல்களையும், சிறப்பான எண்ணங்களையும் முன்வைக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:27, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:பயனர் கருவிகள் மற்றும் விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழில்நுட்பம்) ஆகிய பக்கங்களில் விக்கி கருவிகள் பற்றிய தங்களுடைய கருத்துகளை முன்வைக்க அழைக்கிறேன். தேவைப்படும் கருவிகள் பக்கம் தொழில்நுட்பம் குறித்தான கருத்துகளை ஒரே பக்கத்தில் தொகுத்தல் நன்மை என்ற நண்பர்களின் வழிகாட்டுதலால் நீக்கப்பட்டுள்ளது. நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:24, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

முதற்பக்கம் - கட்டுரை, படம், உ.தெ தொகு

10 வருட வளர்ச்சி கண்ட த.வி. முதற்பக்க கட்டுரை, படங்கள், உ.தெ அறிவிப்பு தொடர்பான விடயங்களிலும் அக்கறை செலுத்துதல் நலம் எனக் கருதுகிறேன். உள்ளே என்ன இருக்கிறது என்பதைவிட வெளியில் தெரிவதுதான் மற்றவரைக் கவர்ந்து இழுக்கும் வியாபார உத்தி அல்லது தந்திரோபாயம் (strategy). வலை வடிவமைப்பில் இது முக்கியத்துவம் உள்ளது. முதற்பக்கம் இற்றைப்படுத்தலிலுள்ள குறைபாடுகளுக்கு எதிர்ப்புக்காட்ட (உ.தெ. விதிவிலக்கு) நான் ஏற்கெனவே பரிந்துரைத்த பரிந்துரைகளை நீக்கியிருந்தேன். பேச்சுப் பக்கத்தில் தெரிவித்திருந்தேன். ஆயினும் கவனத்தில் எடுக்கப்படாததால் இங்கு தெரிவிக்க வேண்டியதாயிற்று.

எனவே, இது குறித்து தெளிவான உறுதியான முடிவெடுத்து முன்னோக்கிச் செல்வது சிறப்பு. என்னைப் பொறுத்தவரை இது குறித்து மேலும் மேலும் உரையாட விரும்பவில்லை. தெளிவான முடிவெடுக்கும் பட்சத்தில் முன்பக்க இற்றைப்படுத்தலில் என்னாலான பங்களிப்பைச் செய்ய முடியும். முன்பக்கத்திற்குக் காட்சிப்படுத்தக் கூடிய கட்டுரைகளைம் ஏற்கெனவே உருவாக்கியதுபோல் உருவாக்க முடியும் அல்லது குறுங்கட்டுரைகளுடன் மட்டுப்படுத்திக் கொள்கிறேன். நன்றி! --Anton (பேச்சு) 04:33, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

  விருப்பம், நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை , ஆழிப்பேரலை காட்சிப்பைடுத்தியிருக்கக் கூடாது. மேலும் ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளது போன்று பரிந்துரைகள் வாக்கெடுப்பு போன்று நடத்த வேண்டுகிறேன். அதை முன் மொழிகிறேன், மேலும் முதல் இருந்த வாக்கெடுப்பு முறை பயனர் குறைவால் நிறுத்தப்பட்டதா? , ஆபபடிஎன்றால் மீண்டும் தொடங்கலாம். --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 04:44, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  1. முதற்பக்க பங்களிப்புகளை ஒருவர் மட்டும் செய்யாமல் பலபேர் சேர்ந்து செய்தாலே சரிவரும். முதற்பக்க கட்டுரை ஆக்க வேண்டும் என்றால் 10 பேருக்கு மேலாவது வாக்களித்திருக்க வேண்டும் என்ற நடைமுறை வந்தாலே சிக்கல்கள் தானாக தீர்ந்துவிடும்.
  2. ஒருவாரத்துக்கு 2 முதற்பக்க கட்டுரைகள் என்று கட்டாயமக்குவதை விடுத்து கட்டுரை நைத்து தகுதிகளை பூர்த்தி செய்தால் மட்டுமே காட்சிப்படுத்தலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:53, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

காட்டுரைகளுக்கு, படங்களுக்கு வாக்களிப்போரை ஒரு பட்டியற்படுத்தி, அவர்களில் அரைவாசிப்பேர் (அல்லது குறைவாக) வாக்களித்தால் காட்சிப்படுத்தலாம். அவர்கள் பரிந்துரையை கவனித்ததை உறுதி செய்யச்சொல்லலாம்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 05:00, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வணக்கம் அன்டன், வேதனையுற வேண்டாம். பொதுப்பங்களிப்பில் சில மனக்கசப்புகள் வருவது சகஜமே. முதற்பக்க கட்டுரைகள், சிறப்பு படங்கள் போன்றவற்றிக்கு அதிக பயனர் பங்களிப்புகள் வரும் பொழுது இப்பிரட்சனை தீரும் என்று நினைக்கிறேன். முதற்பக்க இயற்படுத்தலில் ஆர்வமுள்ளோர்களை திரட்டி இதற்கு தீர்வு காண வேண்டுகிறேன். தற்போது உள்ள வழிகாட்டல் முறைகளை இறுக்கம் செய்து கட்டுரைகளில் உள்ள தரத்தினை பேன தாங்கள் முன்வருவதை வரவேற்கிறேன். //குறுங்கட்டுரைகளுடன் மட்டுப்படுத்திக் கொள்கிறேன்.// தயவு செய்து இவ்வாறான எண்ணத்தினை கைவிடுங்கள். தொடர்ந்து ஊக்கத்துடன் பங்களியுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:04, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 05:07, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பத்தாண்டுக் கூடல் நமக்கெல்லாம் புதிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது என்று தோன்றுகிறது. இது நமது தற்போதைய நடைமுறைகளை அலசி ஆராய்ந்து வருங்காலத்தில் செய்ய வேண்டியவற்றைப் பற்றிச் சிந்திப்பதற்குச் சரியான சூழல் ஆகும். வருங்காலத்தில் தமிழ் விக்கி உள்ளடக்கங்களின் தரம் குறித்தும், அவற்றை எவ்வாறு நாம் பயனாளிகளின் முன் வைக்கிறோம் என்பது குறித்தும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமே. எனவே, அன்டன் குறிப்பிட்டிருப்பதுபோல் இவ்விடயங்கள் குறித்த வரையறைகளை உருவாக்குவது குறித்துச் சிந்திக்கலாம். பத்தாண்டு நிறைவுக் காலத்தில் தமிழ் விக்கிகுறித்துப் பல ஊடகங்களில் செய்திகளும் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. பிபிசி, அகில இந்திய வானொலி போன்றவையும் பேட்டிகளை ஒலிபரப்பியுள்ளன இதனால், கூடிய பங்களிப்பாளர்கள் தமிழ் விக்கிக்குக் கிடைக்கக்கூடும். எனவே இவற்றைச் சரியான முறையில் பயன்படுத்தித் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்துவோம். ---மயூரநாதன் (பேச்சு) 07:06, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

  • மிக முதன்மையான ஒரு விடயத்தை முன்வைத்த ஆன்டனுக்கு நன்றி. சிறப்புப் படம் குறித்த சில தகவல்களைத் தர விரும்புகிறேன்.
    • சிறப்புப் படம் காமன்சின் காட்சிப்படுத்தப்பட்ட படங்கள் பட்டியலில் இருந்து தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது அப்பட்டியலில் உள்ள வரிசையிலேயே. எடுத்துக்காட்டாக, ஒரு புதனன்று விலங்குகள் - Animals பிரிவிலிருந்து படம் எடுக்கப்பட்டால் ஞாயிறன்று விண்வெளியியலில் - Astronomy இருந்து படம் எடுக்கப்படும். இப்படியே இது ஒரு சுழற்சியாக இருக்கிறது. சில சிறப்பு நிகழ்வுகளின் போது மட்டும் அது மீறப்படுகிறது. எ.கா: சென்ற வாரம் விக்கியின் பத்தாண்டு வளர்ச்சியைக் காட்டும் வரைபடம் - Graph.
    • இப்போதைக்குப் பரிந்துரை ஏதும் ஏற்கப்படுவதில்லை/கவனிக்கப்படுவதில்லை. ஏனெனில், பரிந்துரைக்காகக் காத்திருப்பது வரிசையை - Queue நீளப்படுத்தும். எனவே, பரிந்துரை பக்கம் (என்னால்) பயன்படுத்தப்படுவதில்லை. - சுட்டியமைக்கு நன்றி. உரிய உரையாடல் முடிந்த பிறகு அப்பக்கத்தைக் கவனிக்கிறேன்/நீக்குகிறேன்/பலரிடமும் பரிந்துரை தரச் சொல்கிறேன்.
    • நீங்கள் சுட்டிய உருசிய தேவாலயப் படம் என் தனிப்பட்ட தவறு. அதனைக் காட்சிப்படுத்துவதற்கு முன்பே பலமுறை யோசித்தேன். ஆனால், அந்த மாதம் எனக்குத் தேர்வுகள் நடந்துகொண்டிருந்தன. இருப்பினும் நண்பர்களின் கணினி மூலம் புதனும் ஞாயிறும் தொடர்ந்து இற்றைகள் நடந்தன. அதனை ஆலமரத்தடியிலும் கூறி பரிந்துரைப்புகள் அப்போதுமட்டுமே கேட்டேன். பார்வதியின் பரிந்துரை. இது மிகவும் சிக்கலான, நடைமுறைச் சாத்தியமற்ற விடயம் என்பதால் (ஆள்பலமின்மையும் படம் இற்றைக்கான ஆளைத் தெரிந்து தெளிவதற்கு எனக்கு விருப்பமின்மையுமே) பல நாள் சிந்தித்ததன் விளைவே லுவா நிரல் வழி இற்றையாக்கம். எனவே, தொடர்ந்து கட்டுரைகளுடன் கூடிய படங்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டன. நீங்கள் திட்டப்பக்கத்தில் இதனைக் கவனித்திருக்கலாம்.
    • நான் இதுவரை இத்திட்டத்தைத் தனியாளாக என்பதை விட தன்னிச்சையாகவே நடத்திவந்துள்ளதை எண்ணி வருந்துகிறேன்.

-- சூர்யபிரகாஷ்  உரையாடுக 09:44, 5 அக்டோபர் 2013 (UT

ஒன்றுக்கு இரண்டு முறை முதற்பக்க இற்றை குறித்து முறையீடுகள் வருவதால், முதற்பக்க இற்றைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு, முறையான வழிகாட்டல்களை உருவாக்க வேண்டும். தற்போது உள்ள வழிமுறைகளை இன்னும் இறுக்கமாக்கி செயற்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு வாக்கெடுப்பு ஒரு தீர்வு இல்லை. தமிழ் விக்கி போன்ற சிறிய சமூகங்கள் அனைத்துக்கும் வாக்களித்து வளங்களை வீணாக்க முடியாது. அனைத்து இற்றைகளுக்கும் புதிய பொறுப்பாளர்களைக் கோரலாம். ஒவ்வொரு பகுதிக்கும் (படம், கட்டுரை, உ. தெ) இரண்டு அல்லது மூன்று பொறுப்பாளர்கள் இருப்பது நல்லது. அவர்களின் தெரிவுகளை நன்னம்பிக்கையோடு ஏற்றுக் கொள்ளும் அதே வேளை, வழிகாட்டல்களும் பரிந்துரைகளும் முறையாகச் செயற்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கவனித்து வர வேண்டும்.--இரவி (பேச்சு) 09:57, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சூர்யபிரகாஷ், விக்கிப்பீடியாவில் பெரும்பாலான விடயங்கள் தன்னிச்சையாகவே செய்யப்படுகின்றன. அதில் பிழை எதுவும் கிடையாது. கட்டுரை எழுதுபவர்கள் தன்னிச்சையாகவே எழுதுகிறார்கள், படம் சேர்ப்பவர்கள் தன்னிச்சையாகவே சேர்க்கிறார்கள், .... ஆனால், நாம் செய்யும் எதுவுமே ஒழிவு மறைவாகச் செய்யப்படுவதில்லை. எல்லோரும் பார்க்கக்கூடிய வகையில் தான் செய்யப்படுகின்றன. எனவே பிழையென்றால் அல்லது வேறு வகையாகச் செய்யலாம் என்றால் மற்றப் பயனர்கள் அது பற்றிக் கூறலாம். எனவே தன்னிச்சையாகச் செய்வது பற்றி வருந்த வேண்டியது இல்லை. விக்கிப்பீடியாவில் பெரும்பாலும் "பொதுக்கருத்து" ----> "செயற்பாடு" என்றவகையில் செயற்பாடுகள் இடம்பெறுவதில்லை என்றே தோன்றுகிறது. "தன்னிச்சைச் செயற்பாடு" ---> "கலந்துரையாடல்" ---> "பொதுக் கருத்து" என்ற வகையில் தான் பல செயற்பாடுகள் இடம் பெறுவதைக் காண்கிறோம். அதிலும், குறிப்பாக பங்களிப்பாளர் குறைவாக உள்ள தமிழ் விக்கிபோன்ற விக்கிகளில் எல்லா விடயங்களிமுமே பொதுக்கருத்து எட்டும் வரை செயற்பாடுகளைத் தள்ளிப்போடுவது உசிதமாகாது. ---மயூரநாதன் (பேச்சு) 11:57, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
//பங்களிப்பாளர் குறைவாக உள்ள தமிழ் விக்கிபோன்ற விக்கிகளில் எல்லா விடயங்களிமுமே பொதுக்கருத்து எட்டும் வரை செயற்பாடுகளைத் தள்ளிப்போடுவது உசிதமாகாது.// ---மயூரநாதன்மயூரநாதன்//   விருப்பம் சூர்யா! வருந்த வேண்டாம்.--≈ உழவன் ( கூறுக ) 12:20, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எனது கருத்துகள் தொகு

வணக்கம் தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு நிறைவுக் கொண்டாட்டத்தின் போது சிலருடன் உரையாடியதில் விக்கிக் கட்டுரையின் தரம்குறித்த பேச்சுகள் அமைந்தன. முதற்பக்கம் அதிகமாக கவனிக்கப்படும் பக்கமாக இருப்பதால் தரமான முறையில் முதற்பக்கம் அமைவது அவசியம். இதைச் சரியான நேரத்தில் நினைவூட்டிய அண்டனுக்கு நன்றிகள். முதற்பக்கக் கட்டுரையின் பராமரிப்பில் ஈடுபட்டிருந்த காரணத்தால் சில கருத்துகளை முன் வைக்கிறேன்.

தாங்கள் முதற்பக்க பராமரிப்பில் ஈடுபடுவதில் எனக்கு விருப்பம். பல்வேறு பணிகளுக்கிடையே இப்பணியில் ஈடுபடுவது சிரமாக உள்ளது. நான் முதற்பக்கக் கட்டுரை பராமரிப்பில் ஈடுபட்டு வந்த போது உங்களுக்குத் தெரியுமா? பகுதியையும் சேர்த்து பராமரிக்க வேண்டியதாயிற்று. உ தெ பகுதியில் தன்னார்வத்துடன் நானே தான் பங்களித்தேன் கிட்டத் தட்ட 4 மாத காலம் மற்றவர்கள் யாரும் பங்களிக்க முன்வரவில்லை எனக்கு மிகப் பளுவாக இருந்தது.

குறிப்பிட்ட நாளன்று இற்றைப்படுத்தப்படவில்லை எனில் வேறொரு அக்கறையுள்ள நிர்வாகி தாமாகவே இற்றைப்படுத்தியிருக்கலாம். ஒருவரே பார்த்துக் கொள்வார் என இல்லாமல் பிறரும் சேர்ந்து புரிந்துணர்வுடன் இதில் ஈடுபடுவது நல்லது.

//முதற்பக்கக் கட்டுரைகள் ஏற்புடைய பரிந்துரைகளை காட்டும் வரிசை முறைக்கான வழிகாட்டலைப் பின்பற்றுவதில்லை. எ.கா: பரிந்துரைகள் நெடுநாட்கள் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றிருக்க இன்று பரிந்துரைத்து நாளை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தும் நிலையிலுள்ளது.// முதற்பக்கக் கட்டுரை தரமுடையதாக அமைய வேண்டும். பரிந்துரைகள் பக்கத்தில் பரிந்துரைகளைத் தந்து விட்டு காட்சிப் படுத்தும் வரிசை முறைக்கு (அடுத்த வாரம் இடம்பெற இருப்பவை) வந்த பிறகு கூட கட்டுரையாளர்கள் அதில் உள்ளடக்கங்களைச் சேர்க்கவோ பிழைகளைத் திருத்தவோ முன்வருவதில்லை என நானறிந்த வரையில் கூறுகிறேன். பரிந்துரைகளில் ஒரே துறை சார்ந்த அல்லது நபர்களைப் பற்றிய கட்டுரைகளே இடம் பெற்ற போது பிற துறைகளைப் பற்றியும் கட்டுரை இடம்பெற வேண்டும் என்ற காரணத்தால் அவ்வாறு கட்டுரைகளை இடம்பெறச் செய்திருப்பேன்.

மேலும் பரிந்துரைகள் பரவலான துறை சார்ந்த வகையில் இல்லை. எனது கட்டுரை தான் இனி முதற்பக்கம் வரும் என்றும், ஒருவருடைய கட்டுரையே மீண்டும் மீண்டும் வரக்கூடாது என்றும் கடந்த வாரங்களில் கருத்தாடல்கள் நடைபெற்றது. இது நமது விக்கிப்பீடியாவின் கூட்டு முயற்சிக்கு உகந்ததல்ல.

எனது பள்ளியில் தேர்வு மற்றும் வேலைப்பளு காரணமாக என்னால் முதற்பக்க பராமரிப்பில் ஈடுபட முடியவில்லை. மேலும் பரிந்துரைக்கும் கட்டுரைகள் பற்றிய ஆட்சேபங்களை பிற பயனர்கள் முன்மொழிவதில்லை. முதற்பக்கம் காட்சிப்படுத்தும் வரை விட்டு விட்டு காட்சிப்படுத்திய பின் கருத்து கூறிப் பயனில்லை. இக்கருத்து பரிந்துரை பக்கத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.(தற்போது சில வாரஙகளாக தேனியார் இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்)

பரிந்துரைத்து நீண்ட நாட்களாயிற்று என்பதற்காக பரிந்துரைக்கும் அனைத்து கட்டுரைகளையும் காட்சிப்படுத்த வேண்டும் என்பது கட்டாயமல்ல. மேம்பாடு தேவைப்படும், அல்லது ஒரே துறை சார்ந்த அல்லது தகுதியற்ற கட்டுரைகளை என்ன செய்வது? முதற்பக்கத்தில் இடம்பெறப் போகும் கட்டுரைகளை தரம் கணித்து காட்சிப்படுத்த ஒரு குழு அமைப்பின் நன்று. அல்லது சிறப்புக் கட்டுரைகளை தேர்ந்தெடுத்து வாக்கெடுப்புகளின் மூலம் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தலாம்.

ஒரு சிலரின் கட்டுரைகளே இடம் பெறாமல் பரவலாக அனைத்து பயனர்களின் சிறந்த கட்டுரைகளையும் தேர்ந்தெடுப்போம். அதற்கென ஒரு திட்டப்பக்கத்தினைத் தொடங்குவோம். அதில் முதற்பக்கக் கட்டுரைக்கென சில சிறப்புத் தகுதிகளை தீர்மானிப்போம். அதில் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகளை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தலாம். இவை பல்வேறு துறைகளைச் சார்ந்தவையாகவும் இருத்தல் நலம்.

விக்கி பத்தாண்டு நிறைவு வேளைகளில் நமது பக்கங்கள் கவனிக்கப்படுகின்றன என்பதைக் கருத்தில் கொண்டு தமிழ் விக்கியை மேலும் செம்மைப்படுத்தும் முயற்சியில் கூடி உழைப்போம். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:00, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பார்வதி, உங்கள் பணிச்சுமையும் பரிந்துரைகளைக் கண்காணிப்பதில் பயனர்களின் போதிய பங்களிப்பின்மையும் நானும் முன்பே உணர்ந்தது. இது போன்ற களைப்பு வரும் போது பயனர்கள் பொறுப்புகளை மாற்றி எடுத்துக் கொள்வது வரவேற்கத்தக்கது.--இரவி (பேச்சு) 18:53, 6 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வணக்கம்! விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பரிந்துரைகள் எனும் பக்கத்தில்... பலதுறைகள் குறித்த, சிறப்புமிக்க தகவல்களை பரிந்துரை செய்யுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:23, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சிறப்பு உள்ளடக்களை வலு செய்ய வேண்டுதல் தொகு

தற்போது தமிழ்விக்கிப்பீடியாவில் சிறப்புக் கட்டுரைகள், சிறப்புப் படங்கள் மட்டுமே வரையரைச் செய்யப்பட்டு உள்ளன. கீழ்வரும் தலைப்புகளுக்கும் ஒரு பிள்ளையார் சூழியைப் போட்டுவைத்தால் வருங்காலத்தில் செம்மை செய்ய உதவும். உள்ளடக்கங்களை மக்கள் எளிதாக அனுகவும் வழிவகை செய்யும். நன்றி.

தீர்வு தொகு

சகலரின் கருத்துகளை அறிவதற்காக கால அவகாசம் எடுத்திருந்தேன். கருத்துக்களை வழங்கிய அணைவருக்கும் நன்றி. சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் சகலரும் ஒருமித்த கருத்து வெளிப்படுத்தியது மகிழ்ச்சி. இந்தவிடயத்தை இங்கு கொண்டு வந்தது யாரையும் புண்படுத்த அல்ல. சிலவேளை இவ்வாறான உரையாடல்களில் நெருடல்கள் ஏற்படுவது இயல்பே. ஆயினும், சூர்யா சங்கடப்பட்டது, எனக்கே தர்ம சங்கடமாகிவிட்டது.

இங்குள்ள கருத்துக்களுக்கு மீண்டும் பதிலளித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும், அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ள விரும்புகிறேன். அதற்கேற்ற அந்தந்த பக்கங்களில் தேவையான மாற்றங்களைச் செய்கிறேன். தன்னிச்சையாக செயற்பட்டேன் என நான் எனக்குள்ளாக கருதிக்கொள்ளவும், யாரும் என்னை குற்றம்சாட்டாமல் இருக்க, தயவு செய்து உங்கள் பங்களிப்பை வழங்குங்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 02:12, 11 அக்டோபர் 2013 (UTC)   விருப்பம்--122.174.113.156 06:34, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பொறியியல் கல்லூரிகளில் விக்கிப்பீடியா அறிமுகம் தொகு

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் விக்கிப்பீடியாவை எப்படி அறிமுகம் செய்வது என்பது குறித்து நாம் தனிப்பட்ட அணுகுமுறை வகுத்துக் கொள்வது நல்லது. வரும் அக்டோபர் 18 ஒரு வாய்ப்பு வருகிறது. பொறியியல் கல்லூரிகள் நிறைந்த தமிழகத்தில் நாம் இது போல் இன்னும் பல வாய்ப்புகளைப் பெற முடியும்.

வாய்ப்புகள்

  • விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பதற்கான கணினி, இணையம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள்.
  • தமிழ் விக்கிப்பீடியாவின் நுட்பத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய மாணவர் வளம்.
  • ஏராளமான கல்லூரிகள் இருப்பதால் மாவட்டத்துக்கு ஒரு தோழமைக் கல்லூரியை இனங்கண்டாலும் வருங்காலத்தில் நிறைய பரப்புரை, தமிழ் விக்கிப்பீடியா வலைப்பின்னல் முன்னெடுப்புகளை மேற்கொள்ள முடியும். கட்டற்ற மென்பொருள் / இலினக்சு குழுக்கள் போல் ஒவ்வொரு கல்லூரியிலும் ஊடுருவும் வாய்ப்பு.
  • மீடியாவிக்கி பங்களிப்பை வேலைவாய்ப்புக்கான வழியாக முன்னிறுத்தல்.
  • மாணவர்களின் ஆளுமைத் திறன், மென் திறன்கள் வளர்ச்சிக்கான ஒரு வழியாக விக்கிப்பீடியா பங்களிப்பை முன்னிறுத்தல்.
  • பட்டமேற்படிப்பு, ஆய்வு மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கை எழுதும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான ஒரு களமாக விக்கிப்பீடியாவை முன்னிறுத்தல்.

சோதனைகள்

  • ஆங்கில வழி உயர் கல்வி. தமிழ் நலம் சார்ந்து மட்டும் திட்டத்தை முன்வைப்பது எடுபடாது. வேறு பல நன்மைகளை இனங்கண்டு எடுத்துரைக்க வேண்டும்.
  • நுட்ப மொழியில் பேசுவதற்குப் போதுமான தன்னார்வலர்கள் நம்மிடம் இல்லாமை.
  • இன்னும் நம்மிடம் இது போன்ற களங்களில் தமிழ் விக்கிப்பீடியாவை எப்படி முன்னிறத்துவது என்பது தொடர்பான அணுகுமுறை இல்லை.
  • மாணவர்களைத் தாண்டி, ஆசிரியர்கள் - கல்லூரிகளுக்கு இதில் என்ன கிடைக்கும்?
  • தொடர் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் என்ன?

மீடியாவிக்கி மென்பொருள் மூலமான வேலைவாய்ப்புகள், மாணவர்களின் மென் திறன் வளர்ச்சி ஆகியவற்றை முன்வைத்து இந்தக்கல்லூரிகளில் நாம் தமிழ் விக்கிப்பீடியாவை முன்னிறுத்துவது நல்லது. தமிழ் விக்கிப்பீடியாவுக்கான நுட்பத் தேவைகள் என்று சிலவற்றை இனங்கண்டால் அவற்றை விளக்கி மாணவர்களின் ஆண்டிறுதித் திட்டத்தில் அவற்றை நோக்கிப் பணி புரிய அழைக்கலாம். இதற்கு வழிகாட்டியாக தமிழ் விக்கிப்பீடியாவில் நுட்பத்தில் வல்லவர்களும் மீடியாவிக்கி நுட்பக் குழுவும் செயல்படலாம். இப்போது எனக்குத் தேவைப்படுவன:

1. தமிழ் விக்கிப்பீடியாவின் நுட்பத் தேவைகள் என்னென்ன? விரிவான விளக்கம், வினாக்கள், தூண்டல்கள், வழிகாட்டல்கள் தேவை. இவற்றை மாணவர் முன் வைக்கலாம்.

2. தமிழ் விக்கிப்பீடியாவின் நுட்பக் குழு ஒன்றை உருவாக்கித் துடிப்புடன் செயல்பட வேண்டும். இது போன்ற கல்லூரிகளில் மாற்றி மாற்றி உரையாட நுட்பம் அறிந்த ஆட்கள் தேவை.

3. மேற்கண்ட அணுகுமுறைக்கேற்ப தமிழ் விக்கிப்பீடியாவை முன்வைக்கும் ஒரு அளிப்புரை (powerpoint)

--இரவி (பேச்சு) 19:05, 6 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]


பக்கப் பார்வைகள் தொகு

தமிழ் விக்கிப்பீடியா செப்டெம்பர் மாதப் பக்கப் பார்வைகள் நாளுக்கு 260,000 -மயூரநாதன் (பேச்சு) 12:07, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

  விருப்பம்--Anton (பேச்சு) 16:58, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  விருப்பம்--அஸ்வின் (பேச்சு) 01:48, 10 அக்டோபர் 2013 (UTC)like[பதிலளி]
  விருப்பம் நம்முடைய சுவையான பொறுப்பகள் அதிகரிக்க தொடங்கியிருக்கின்றன. அனைவரும் ஒன்றினைந்து பணியாற்றுவதற்கு இவை உந்துதலாக உள்ளன. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி மயூரநாதன் அவர்களே!--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:23, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
பத்தாண்டுகளைக் கொண்டாடும் அதே மாதத்தில் கடந்த பத்தாண்டுகளிலும் மிகக் கூடுதலான பார்வைகளைப் பெற்றுள்ளது சிறப்பு. செப்டம்பர் 2012ல் இருந்து 80% வளர்ச்சி ! இந்திய மொழிகளில் இந்திக்கு அடுத்த இடம் என்றாலும் இந்தி பேசும் மக்கள் தொகையை ஒப்பிட்டால் நம்முடைய வீச்சு மிக அதிகம். அதே வேளை, நம்மை விட பாதி மக்கள் தொகை உள்ள மலையாள விக்கிப்பீடியாவும் நமக்கு ஈடான வீச்சைக் கொண்டுள்ளதைக் கவனிக்கலாம். --இரவி (பேச்சு) 06:02, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
மகிழ்ச்சியான செய்தி, மயூரநாதன். -- சுந்தர் \பேச்சு 15:06, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  விருப்பம் முன்னர், ஒரு மணி நேரத்திற்கு 4000 பக்கப் பார்வைகள் இருந்தன. அதைக் கொண்டு கணக்கிட்டால், ஒரு நாளைக்கு 96,000 பார்வைகள் வரும். ஆனால், கிடைத்தது இதை விட மும்மடங்கு! மகிழ்ச்சியைக் கொண்டாடுவோம். :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:32, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

Speak up about the trademark registration of the Community logo. தொகு

யுனிகோட் அல்லாத எழுத்துரு தொகு

யுனிகோட் அல்லாத எழுத்துருவில்(தங்கிஷ் அல்ல) பதிவு செய்யப்படும் செய்திகளை நீக்குவதற்குப் பதில் சிறப்பாக செய்தியெனில் அச்செய்திகளை எழுத்துரு மாற்றிகள் மூலம் உருமாற்றி பதிவு செய்யலாம் எனப் பரிந்துரைக்கிறேன். இது வேலைப்பளுவை அதிகரிக்கும் இருந்தாலும் இப்படியும் வாய்ப்பிருக்கிறது என்று பதிவு செய்ய விரும்புகிறேன். --நீச்சல்காரன் (பேச்சு) 02:38, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நன்றி நீச்சல்காரன், யாழ் சுரதாவின் மிகவும் பயனுள்ள ஒரு எழுத்துரு மாற்றி. இணையத்தில் உள்ளவற்றில் மிக எளிதான எழுத்துரு மாற்றி இதுதான். மிக நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகிறேன்.--Kanags \உரையாடுக 03:09, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நீச்சல்காரன் தங்களால் தமிழ் விக்கிப்பீடியா தொழில்நுட்ப ரீதியில் பெரும் மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. என்னுடைய நன்றிகளையும் உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:24, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
செய்யலாம் நீச்சல்காரன். தொடக்க நாட்களில் என் அலுவலகக் கணினியில் தமிழ் எழுத்துரு இல்லாதபோது (அது ஒரு நிறுவன உள்வெளியீடான யுனிக்ஃசு இயக்கக் கணினி) யாழ் சுரதாவின் எழுதியில் தட்டி, உரையைக் கவர்ந்து ஒட்டுவேன். சரியாக வந்துள்ளதா என என்னாலேயே பார்க்க முடியாது. இரவியையோ வேறு பயனரையோ யாகூ மெசஞ்சரில் கேட்டுத் தெரிந்து கொள்வேன்! -- சுந்தர் \பேச்சு 08:51, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நான் மொசில்லாவில் அதியன் எனும் நீட்சியைப் பயன்படுத்துகிறேன். சிலவற்றை மாற்றித் தருகிறது. சுரதாவை மறந்திருந்தேன்/ :( -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:16, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
புதுப்பயனர்கள் சில சமயம் யுனிக்கோட் அல்லாத பிற குறியீடுகளில் திருத்துகிறார்கள் அல்லது புதுப்பக்கத்தை உருவாக்குகிறார்கள் என யூகிக்கிறேன். அவை பார்ப்பதற்கு ஆங்கிலமும், சிறப்புக்குறியீடுகளும் கலந்தது விசமத் தொகுப்புப் போல தோன்றும். ஆனால் அவற்றை எழுத்துரு மாற்றிப் பார்த்தால் சில புதிய விசயங்களைச் சொல்வதாக இருக்கலாம். அதை உருமாற்றிப் பதிவுசெய்து அப்பயனிடமும் ஓரு செய்தி விட்டால், அப்பயனருக்கு ஓர் ஆர்வம் கிடைக்கக் கூடும். இது மிகைப்படுத்திய பார்வையென நினைக்கிறேன். ஆனால் இது உண்மை என அறிந்தால், செய்யலாம். (வேலைப் பளுவை குறைக்கும் வண்ணம் சுரதா மாற்றியை விக்கிக்குள்ளும் கொண்டு வரமுடியும்)--நீச்சல்காரன் (பேச்சு) 15:30, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

முதற்பக்கம் இற்றைப்படுத்தல் தொகு

முதற்பக்கம் இற்றைப்படுத்தலில் ஈடுபட ஆர்வமுள்ள பயனர்கள் முன் வாருங்கள். தற்போது பங்களிப்போர் பின்வருமாறு:

முதற்பக்க கட்டுரைகள்
சிறப்புப் படம்
உங்களுக்குத் தெரியுமா
இன்றைய நாளில், நடப்பு நிகழ்வுகள்
முதற்பக்க வார்ப்புரு, முதற்பக்க வலைவாசல், விக்கிப்பீடியர் அறிமுகம்

ஆர்வமுள்ளோர் இணையும் பட்சத்தில், அடுத்த கட்டமாக விதிகள் தொடர்பில் கவனம் செலுத்தலாம். மேலதிக கலந்துரையாடல்கள் இங்கு மேற்கொள்ளப்படும். நன்றி! --Anton·٠•●♥Talk♥●•٠· 02:35, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நன்றி அன்ரன். உங்களுக்குத் தெரியுமா பகுதியில் பங்களிக்க முடிவுசெய்துள்ளேன். ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தது மூவர் பொறுப்புடன் பங்குபற்றும் போது காலதாமதத்தை இல்லாது செய்யலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:01, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நானும் சிறிது உங்களுக்குத் தெரியுமா பகுதியில் பங்களிக்க முடிவு செய்துள்ளேன். --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:36, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இற்றை தொகு

ஏற்கெனவே நடைபெற்ற உடையாடல்களின் அடிப்படையில், முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு பராமரிப்பாளர்களாக இணைய ஒரு வாரமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இங்கும், முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு பேச்சுப் பக்கத்தில் நடந்த உரையாடலுக்கும் ஏற்ப முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு பராமரிப்பாளர்களின் பெயர்களை இற்றைப்படுத்தியுள்ளேன். ஏற்கெனவே இற்றைப்படுத்தலில் ஈடுபபட்டவர்கள் சிலரின் கருத்து கிடைக்காதிருந்தும் அவர்களின் பெயர்கள் அங்கேயே உள்ளது. தற்போது முதற்பக்க வார்ப்புரு, முதற்பக்க வலைவாசல் இற்றைப்படுத்தலை மேற்கொள்ள யாரும் இல்லை. --Anton·٠•●♥Talk♥●•٠· 03:53, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பிற தமிழ் விக்கித்திட்டங்களில் புதுப்பயனர் வரவேற்பு தொகு

விக்கிமூலம் மற்றும் விக்கிமேற்கோள் தளத்திற்கு புதுப்பயனர் வரவேற்பிற்கான தானியங்கி தேவை. இதுகுறித்து பிற பயனர்களின் ஆதரவும் தேவை. விக்கிமூலத்திலும், விக்கிமேற்கோள் மற்றும் பிறத்திட்டங்களில் சில புதுப்பயனர்கள் இணைந்துள்ளனர். ஆயினும் போதுமான உதவிகள் மற்றும் வரவேற்பு இல்லாததால அவர்களுடைய பங்களிப்பு மிக மிக குறைவாக உள்ளது. ஆகவே தானியங்கி மூலம் வரவேற்பு அளிக்க எண்ணுகிறேன். அதற்கான வழிமுறைகளை அறிய விரும்புகிறேன். நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:29, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

  விருப்பம் விக்கிப்பீடியாவின் புதுப்பயனர் வரவேற்பிற்கே நான் தானியங்கி சேவையை கேட்டுக் கொண்டிருக்கிறேன். இங்கு நந்தக்குமார் போன்றோர் தங்களுடைய பங்களிப்பு முழுவதையும் புதுப்பயனர் வரவேற்பிற்கு நல்கி கொண்டிருக்கிறார்கள். இத்தகு பயனர் இல்லாத பிற விக்கித்திட்டங்களில் நிச்சயமாக தானியங்கிகள் தேவை தான். புதுப்பயனர் வழிகாட்டுகளை இன்னும் எளிமைப்படுத்த வேண்டிய தருனத்தில் உள்ளோம். விக்கித்திட்டம் சைவம் பற்றி முகநூலில் பகிர்ந்து கொண்டதும், சிலர் பங்களிக்க ஆர்வம் கொண்டுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு விக்கிப்பீடியாவில் பங்களிப்பது குறித்தான வழிகாட்டல் போதுமானதாக இல்லை. நேரில் வந்து எப்படி பங்களிப்பது என்று கற்றுக் கொள்கிறேன் என்று ஒரு பயனர் கூறியுள்ளார். ஆர்வம் கொண்டோர் கிடைப்பதே அரிதெனும் தருனத்தில், வருகின்ற சிலரையும் பெரும் பங்களிப்பாளர்களாக மாற்றவேண்டியது நமது கடமை. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:31, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஏற்கனவே, இதுகுறித்து யாரோ கேட்டதாக நினைவு. பல காலமாகவே, குஜராத்தி விக்கியில் இப்படி தான் செய்கிறார்கள். நமக்கு இது நேரத்தை மிச்சப்படுத்தும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:44, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
mw:Extension:NewUserMessage இதற்கு உதவியாக இருக்கும். இதனை நிறுவுவதற்கு விக்கி சமூகத்தின் ஒப்புதலுடன் வழு பதிய வேண்டும். ஆனால் இது பற்றி ஏற்கனவே நடந்த உரையாடலில் புதிய பயனர்களுக்கு நாமே வரவேற்பது ஒரு உந்துதலை கொடுக்கும் என்று யாரோ கூறியதாக நினைவு-- சண்முகம்ப7 (பேச்சு) 17:34, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
வேண்டுகோளை அந்தந்த திட்டத்தின் வலைவாசலில் இட்டுவிடுகிறேன், ஆதரவைப் பெற்றபின் mw:Extension:NewUserMessage-ஐ மற்ற திட்டங்களில் செய்துவிடலாம், எனக்குத் தெரிந்து மற்ற திட்டங்களுக்கு எதிர்ப்பு அல்லது மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:15, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இது குறித்து ஏற்கனவே இங்கும் இங்கும் உரையாடியுள்ளோம். கட்டுரைகள் எழுதும் பலரும் விக்கி பராமரிப்புப் பணிகளில் புகுவது இந்த வரவேற்புப் பணி மூலம் தான். வேறு எந்த பங்களிப்புகளும் அளிக்க முடியாத காலத்தில் கூட இதனைச் செய்து சற்று மன நிறைவு கொள்ளலாம். நாம் ஒரு கடைக்குப் போனால் நம்மை உண்மையான அன்புடன் வரவேற்றால் பிடிக்குமா இல்லை ஒரு பொம்மை வரவேற்றால் பிடிக்குமா? சில விக்கித் திட்டங்களில் புகுந்த உடன் பயனர் பக்கச் செய்தி வந்ததைக் கண்டு மகிழ்ந்து பார்க்கப் போனால் ஒரு தானியங்கியிடம் இருந்து வந்திருக்கும்.. சை.. என்று ஆகிவிடும், இதனை ஒரு பணிப்பளு என்று எண்ணுவதை விட குறிப்பிட்ட பயனர்களுடன் நட்புறவு கொள்வதற்கான வாய்ப்பாக பார்ப்போம். ஒரு வரவேற்புக் குழு என்றில்லாமல் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பயனர்கள் வரவேற்பது கூட நன்று தான். நந்தகுமார் போன்ற ஒரு ஆய்வாளர் வரவேற்பது தமிழ் விக்கி திட்டத்துக்கு ஒரு நம்பகத்தையும் பயனர்களுக்கு ஒரு பெருமிதத்தையும் அளிக்கவல்லது. ஒவ்வொரு பயனருக்கும் இது போல் தனிச்சிறப்பு உண்டு. அண்மையில் மணியன் இட்டிருந்த செய்தியில் தன்னை வரவேற்ற சிவக்குமாரை நினைவுகூர்ந்திருந்தார். இத்தகைய நெகிழ்ச்சியைத் தானியங்கியால் தர முடியுமா? எனவே, அனைத்துத் தமிழ் விக்கித் திட்டங்களிலும் இயன்றவரை நாமே வரவேற்போம், தானியங்கி வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். --இரவி (பேச்சு) 18:54, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
உங்களுடைய கருத்து, தமிழ் விக்கிப்பீடியாவிற்கு கண்டிப்பாக ஒத்துவரும்,ஆயினும் விக்கிமூலம், விக்கிநூல்கள் போன்ற பிற திட்டங்களில் தொடர் பங்களிப்பு செய்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம், அவர்கள் வரவேற்பு பணியையும் மேற்கொள்வது சற்று கடினமே. தானியங்கியில் செய்து விட்டால் கால தாமதமின்றி உடனே அவருக்கு அத்தகவல் சென்று விடும். என்னை சோடாபாட்டில் தமிழ் விக்கிப்பீடியாவில் வரவேற்றார், ஆனால் அவருடைய வரவேற்பு இரண்டு நாட்களுக்கு பின்னரே எனக்கு தெரிந்தது. ஆகவே தானியங்கி தேவை. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:49, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
//ஆகவே தானியங்கி தேவை.// ஆகவே, கூடுதல் பங்களிப்பாளர்கள் தேவை :) விக்கிநூல், விக்கிமூலம் வரவேற்புப் பணியில் நானும் இணைந்து கொள்கிறேன். உதவ முன்வரும் மற்ற பயனர்களை வரவேற்கிறோம். முகநூல் பக்கங்களிலும் இது போன்ற எளிமையான பணிக்கு உதவ முடியுமா என்று கேட்டுப் பார்ப்போம். --இரவி (பேச்சு) 14:07, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தானியங்கி மூலம் பயனரை வரவேற்றால் விக்கிப்பீடியரின் நேரம் குறையும் என்ற நோக்கில் மட்டுமே சிந்தித்தேன். ஆனால் வரவேற்றலை பயனர் அல்லாது தானியங்கி செய்யும் பொழுது ஏற்படும் ஏமாற்றம் கவனிக்கத்தக்கதே. புதுப்பயனர்களின் வரவேற்றலுக்கும் வழிகாட்டலுக்கம் விக்கிப்பயனர்கள் அதிகமாகும் பொழுது தீர்வு ஏற்படும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:46, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தேடிக் கண்டுபிடித்து மாற்றும் கருவி தொகு

நான் மலையாளக் கட்டுரைகளை எடுத்து தமிழ் எழுத்துகளுக்கு பெயர்த்து, பின்னர் திருத்தங்கள் செய்கிறேன். மொழிபெயர்த்தல் எளிதாக உள்ளது. யாரேனும் கீழ்க்கண்டவாறு ஜாவாசிகிரிப்ட் நிரல் எழுதித் தந்தால் நலம். பங்களிப்பு சிறப்பாக இருக்கும்.

  • array1 with 100 elements(words)
  • array2 with another 100 elements
  • each value of a[i] must be replaced by value in b[i]
  • read the text (மலையாள சொற்கள் தமிழ் எழுத்துகளில்) and find the substrings present in array1
  • if present, replace them with array2 value.

நான் அந்த இரண்டு அரேக்களில் எனக்கு தேவையான சொற்களை நிரப்பிக் கொள்வேன். இக்கருவி உடனடியாகத் தேவை. அகராதியில் உள்ள தேடிக் கண்டுபிடித்து மாற்றவும் கருவி போன்றதே! மேலும் யோசனை தோன்றினால் அதையும் கேட்கிறேன். அப்போது மேம்படுத்தலாம். அவசரம். யாரேனும் செய்து தாருங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:44, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தமிழ்க்குரிசில் அண்ணா, யாரேனும் உடனே தயாரித்துக் கொடுத்தால் பயன்படுத்திக் கொள்க. அல்லது உங்கள் கூகிள் மின்னஞ்சலை எனக்கு அனுப்பினால் இக்கருவியின் தரவுத்தாளில் மொத்தமாக மாற்றிக் கொள்ள அணுக்கம் தருகிறேன். இது ஒரு சொல் மாற்றி செயலி. இதன் தரவு தளம் கூகிள் விரிதாள் என்பதால் எல்லைகள் இன்றி சொற்களை மாற்றிக் கொள்ளலாம். --நீச்சல்காரன் (பேச்சு) 16:57, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி நீச்சல்காரன். நீங்கள் தான் எனக்கு அண்ணன். நான் சின்னவன். என் மின்னஞ்சல் முகவரியை அனுப்புகிறேன். அணுக்கம் தருக. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:14, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
வணக்கம் தமிழ்குரிசில் நண்பரே, ஜெயரத்தின மாதரசன் அவர்கள் உருவாக்கியிருக்கும் கருவியில் தாங்கள் கேட்டவாறு மாற்றியமைத்தல் இயலும். அதற்கு பயனர்:Jayarathina/iwt பக்க்ததினைப் பாருங்கள். எளிமையான கருவி. Replace list of predefined words என்பதன் கீழிருக்கும் வழிமுறைகளை காணவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:03, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஏற்கனவே, இக்கருவியைக் கொண்டே ஆங்கில இணைப்புகளைக் கண்டறிகிறேன். ஆனால், அதில் உள்ள இரு அரேக்கள் ஆங்கிலம், தமிழ் என்று உள்ளன. இரண்டிலும் தமிழ் தர முடியுமா என சோதித்து அறியவில்லை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:14, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நானும் இதுவரை இப்படியொரு முயற்சியில் இறங்கியதில்லை நண்பரே. மாற்ற இயலவில்லை என்றால் ஜெயரத்தினா அவர்களிடம் கூறி மாற்றிவிடலாம். கேட்டவுடனே மாற்றி தந்துவிடுவார். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:20, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இரண்டிலும் தமிழ் தரலாம். ஆங்கிலம், தமிழ் என வசதிக்காக (தவறாக) கொடுத்துவிட்டேன், மன்னிக்கவும். ஆனாலும் find_word, replace_with என்பதே சரியான பெயராக இருந்திருக்கும். Array index சரியாக உள்ளதா என உறுதி செய்து கொள்ளவும் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 17:24, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நீங்க வேகமா செயல்படுவீங்கன்னு தெரியும். அதுக்குன்னு இம்புட்டு வேகமா? நான் கருத்திடும் வரைக்கும் உங்களை அன்மையப் பங்களிப்புகள் பக்கத்துல பார்க்கலையே எப்படி ஆபத்தாண்டவர் மாதிரி வந்தீங்க???:-)--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:35, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
உண்மையாகவே இது தற்செயலாக நடந்தது.   --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 03:44, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

outreach.wikimedia.org தொகு

விக்கி அறிமுகப்படுத்தல், பரவலாக்கல், பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டு இருப்போருக்கான வளங்களை இது கொண்டு இருக்கிறது. இவற்றில் உள்ள சில செயற்திட்டங்களை நாம் பங்கெடுத்து முன்னேற்றலாம். --Natkeeran (பேச்சு) 17:03, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நபர்களைப் பற்றிய நிழற்படப்போட்டி தொகு

தமிழ் விக்கியில், பிரபலமானவர்கள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், சினிமா துறையினர், கவிஞர்கள் போன்றோரின் கட்டுரைகளில் பெரும்பாலும், அவர்களின் புகைப்படம் இருப்பதில்லை.

அவற்றை சேர்க்க நபர்களைப் பற்றிய நிழற்படப்போட்டி நடத்தலாமா?

https://ta.wikipedia.org/s/3atw

--Tshrinivasan (பேச்சு) 12:21, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இது பற்றி எனக்குள்ள கேள்விகள்:
  • போட்டியின் இலக்கு என்ன?
  • தமிழ் - தமிழர் பற்றிய ஊடகப் போட்டி 2012 இல் நடத்தப்பட்ட அளவிற்கு இது வீச்சு உள்ளதாக இருக்குமா? இலக்கு நாடுகள் எவை? எத்தனை பேர் இதற்குப் பங்களிப்பார்கள்?
  • தனி நபர் ஒளிப்படங்கள் தேவை முக்கியத்துவம் உள்ளதா? த.வி.யில் தனி நபர் ஒளிப்படங்களை பதிவேற்றிப் பயன்படுத்தும் முறையும் உள்ளதே.
  • 10 ஆண்டு விழா நிகழ்வில் கொண்டாடியுள்ள த.வி. இன்னுமொரு சுமையைச் சுமக்க தயாரா? --Anton·٠•●♥Talk♥●•٠· 13:36, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
உரையாடலை விக்கிப்பீடியா பேச்சு:நபர்களைப் பற்றிய நிழற்படப்போட்டி பக்கத்தில் தொடர்ந்துள்ளேன்.--இரவி (பேச்சு) 18:40, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

herbert - தமிழில் என்ன ? தொகு

herbert என்று தேடினால் பல்வேறு விதமான எழுதுமுறைகளைக் காண்கிறோம். [1]. எது சரி? (அவற்றில் எதுவுமே சரியாக எனக்குப் படவில்லை!) அறிந்தவர்கள் மேற்கோள்களுடன் தெளிவுபடுத்தவும்.--பரிதிமதி (பேச்சு) 17:37, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பரிதிமதி, Herbert என்பது பிரான்சியப் பெயரானால் அதன் ஒலிப்பு எபேர் (H பிரான்சியத்தில் கிடையாது அவர்கள் ஒலிப்பதும் இல்லை. கடைசி t என்ப்தையும் இப்பெயரில் அவர்கள் ஒலிப்பதில்லை). ஆங்கிலம்-இடாய்ச்சு எனில் அவர்களின் ஒலிப்பு ஃகெர்பெர்ட்(டு) (ட் என்று எந்த மொழியாளராலும் சொல்லி நிறுத்தவே முடியாது; அடுத்து சிறு துணை உயிரொலி வந்தே நிற்கும்). இதனைத் தமிழில் எர்பர்ட்டு (எபர்ட்டு) என்றோ எர்பெர்ட்டு (எபெர்ட்டு) என்றோ சீராக வழங்குதல் வேண்டும். ஆனால் இவ்வகையான ஒழுக்கங்களைக் கைக்கொள்ளும் உளப்போக்கு பலரிடம் இல்லாதது பெரும் சிக்கலாக உள்ளது. ஆகவே பிரான்சிய மொழிச்சொல்லானால் எபேர் என்றும் ஆங்கிலம் போன்ற மொழிச்சொல்லானால் எர்பெர்ட்டு என்றும் எழுதலாம் என்பது என் கருத்து. (இது இங்கு பேசாமல் வேறு இடத்தில் பேச வேண்டிய ஒன்றாக இருப்பின், அங்கு படிஉஎடுத்து இடலாம்). இவற்றை நான் நேரடியாக 20-25 ஆண்டுகளாகக் கேட்டிருக்கின்றேன். என் நண்பர்கள் சிலரின் பெயரும் இது (பிரான்சிய நண்பரும் பிற நண்பரும்). புறவயமான மேற்கோள்: இங்கும் இங்கும் காணலாம். --செல்வா (பேச்சு) 14:39, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி, செல்வா! எபர்ட்டு மிகச்சரியாகத் தெரிகிறது (எனக்கு). இப்பக்கங்களின் [2]தலைப்புகளை என்ன செய்யலாம்? பிறர் கருத்துகளை வேண்டுகிறேன்.--பரிதிமதி (பேச்சு) 15:19, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் தொகு

சேலம் சுழற்சங்கத்தில் விக்கிப்பீடியா குறித்து 20.09.2013 அன்று எடுத்துரைத்ததன் விளைவாக, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் 26.10.2013 அன்று நடைபெற உள்ளது. இப்பயிலரங்கிற்கு பெரியார் பல்கலைக்கழகமும், சேலம் சுழற்சங்கமும் தன் முழு ஒத்துழைப்பை வழங்கிள்ளது. பயிலரங்கில் பங்கேற்கும் அனைவருக்கும் தனித்தனி கணினியுடன், இணைய இணைப்புடன் இந்த நிகழ்ச்சி அணியப்படுத்தப் பெற்றுள்ளது. இந்நிகழ்வில், பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பெயரை தமிழகம் தளத்திலோ அல்லது 9750933101, 9442105151 ஆகிய எண்களிலோ தங்களின் பெயரைப் 21.10.2013 க்குள் பதிவு செய்து நிகழ்வில் பங்கேற்கலாம். பெயர்ப்பதிவு நிகழ்வை ஒருங்கிணைக்க உதவும்.--Thamizhpparithi Maari (பேச்சு) 19:31, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளைக்கும் நமக்கும் நல்ல புரிதல் உள்ளது. அவர்களின் பல பரப்புரைகளில் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான இடத்தைத் தருகிறார்கள். இது போல் நாமும் இயன்ற இடங்களில் அவர்களுக்கான களத்தைப் பெற்றுத் தருவது சிறப்பாக இருக்கும். மலையாள விக்கிப்பீடியர்கள் இவ்வாறு கட்டற்ற மலையாளக் கணிமை அமைப்புடன் சேர்ந்தியங்குவதைக் காண முடிகிறது. நாமும் ஒத்த கருத்துள்ள கூட்டாளிகளைப் பெற்றுக் கொள்வது நமது வீச்சைக் கூட்டுவதாக இருக்கும். மேற்கண்ட நிகழ்வில் கட்டற்ற மென்பொருள்கள், அதன் மூலமான வேலைவாய்ப்புகள் பற்றி ஒரு மணி நேரம் பேச வாய்ப்பு தந்தால் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இயலும் என்றால், கட்டற்ற மென்பொருள் இயக்க நண்பர்களைத் தொடர்பு கொள்ளச் செய்கிறேன். வருங்காலத்தில் நாம் ஈடுபடும் பரப்புரை முயற்சிகளிலும் இதனைக் கருத்தில் கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 14:14, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
மிகுந்த பயனளிக்கும் செய்தி. கட்டற்ற மென்பொருள் இயக்க நண்பர்களைத் தொடர்பு கொள்ள ஏதுவான பேசி எண்ணை அளிக்க விழைகின்றேன்.--Thamizhpparithi Maari (பேச்சு) 17:55, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
வணக்கம் . என்னால் வேகமாக தட்டச்சு முடியாது என்பதால், இப்போது தொலைபேசி எண்கள் மட்டும் விட்டுச் செல்கிறேன். விரைவில் , இன்னும் விரிவான முறையில் எழுதுகிறேன். தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை , அலுவலக தொலைபேசி எண் - 044 43504670 . எனது(சிபி) செல்பேசி எண் - 9840670143 . --Commons sibi (பேச்சு) 02:48, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]