Request for translation. Yanka Kupala and Yakub Kolas தொகு

Warm greeting from Belarusian Wikipedia! This year we celebrate 130. birthday of Belarusian great poets en:Yanka Kupala and en:Yakub Kolas Could you help us to translate articles into your unique and honourable language? Thank you in advance!--Rymchonak 07:25, 17 சனவரி 2012 (UTC)Reply

Done by Manian.--சோடாபாட்டில்உரையாடுக 04:27, 23 சனவரி 2012 (UTC)Reply

Periyar (river). தொகு

Hi,

Found multiple references to the பெரியாறு originating from தமிழ்நாடு. I'm unable to add the same in Tamil wiki due to lack of tamil ref's. Any suggestions?--Pearll's sun 06:55, 3 சனவரி 2012 (UTC)Reply

english refs are perfectly fine for adding content in tamil wiki. only the content needs to be in tamil. the reference can be in any language as long as it is reliable. please add them.--சோடாபாட்டில்உரையாடுக 07:01, 3 சனவரி 2012 (UTC)Reply

நாணயம் தொகு

நாணயம் கல்வெட்டு போன்ற படிமங்களை மற்ற தளத்தில் இருந்து பதிவேற்றலாமா? அல்லது புத்தகங்களில் அப்படிமம் இருப்பின் அதை புகைப்படமெடுத்து நியாய காரணங்கள் கொடுக்கலாமா?--தென்காசி சுப்பிரமணியன் 16:21, 3 சனவரி 2012 (UTC)Reply

செய்யலாம். நாணயம், கல்வெட்டு அனைத்தும் நியாயப்பயன்பாட்டுக்கீழ் வரும்.--சோடாபாட்டில்உரையாடுக 16:24, 3 சனவரி 2012 (UTC)Reply

உங்களின் உதவி தேவை தொகு

ஐயா,

கச்சதீவு எனும் பெயரில் ஒரு கட்டுரை உள்ளது. கச்சத்தீவு என்பதுதான் சரியாகும். ஆதாரத்துக்கு அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மேற்கோளில் இணைக்கப்பட்டுள்ள தினமலர் செய்தியை பார்க்கவும். தலைப்பை நீங்கள் சரிசெய்து கொடுத்தால், கட்டுரையின் உள்ளேயுள்ள பிழைகளை நான் திருத்திக் கொள்கிறேன்.(கட்டுரையின் உள்ளே சில இடங்களில் சரியாக உள்ளது; சில இடங்களில் பிழையாக உள்ளது)

 Y ஆயிற்று--Selvasivagurunathan mஉரையாடுக

நகர்த்தியிருக்கிறேன். நீங்களே கூட நகர்த்திவிடலாம். மேல் மெனுவில் “நகர்த்தவும்” என்ற இணைப்பு ஒன்று உள்ளது அதைக் கொண்டு நகர்த்திவிடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 17:07, 4 சனவரி 2012 (UTC)Reply

மொழிபெயர்ப்பு தொகு

நான் அச்சில் புழக்கத்தில் இருக்கும் ஆங்கில புனைக்கதை அற்ற(non-fiction) புத்தகங்களை மொழிபெயர்ப்பு செய்ய விரும்புகிரேன் இதை விக்கிநூல்களில் செய்யலாமா? அப்படி செய்வது தவறு என்றால் வேறு எந்த விக்கியில் இதைச்செய்யலாம்?பிரசன்னா காந்திராஜ் 08:51, 7 சனவரி 2012 (UTC)Reply

விக்கி நூல்களில் செய்யலாம். ஆனால் மூலத்திற்கு பதிப்புரிமை உள்ளதா என்று நன்கு சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். பதிப்புரிமை கொண்டவற்றை மொழிபெயர்க்க இயலாது.--சோடாபாட்டில்உரையாடுக 09:01, 7 சனவரி 2012 (UTC)Reply

நியாயப் படிம பயண்பாடு தொகு

ஒரு கட்டுரையில் எத்தனை நியாயப் பயன்பாடு படிமங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் எங்கோ 2, 3 வரை கூறியதாக ஞாபகம். மேலும் இவ்வெண்ணிக்கை வரலாற்று சிறப்புமிக்க படிமங்களுக்கு பொருந்துமா? அவற்றில் இவ்வெண்ணிக்கைக்கு மேல் பயன் படுத்தலாமா?--தென்காசி சுப்பிரமணியன் 05:56, 8 சனவரி 2012 (UTC)Reply

அறுதியிட்ட உச்சவரம்பு கிடையாது. 4-5 என்று ஆங்கில விக்கியில் கொள்கிறார்கள் (அங்கும் பரிந்துரை மட்டுமே, விதி அல்ல). ஐந்து வரை தாராளமாக சேருங்கள். அதற்கு மேல் சற்று யோசித்து இடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 05:59, 8 சனவரி 2012 (UTC)Reply

உதவி தேவை தொகு

புதிய பக்கம் உருவாக்கினால் அதில் எழுதியவை எதுவும் தெரியவில்லை (காலி பக்கம் மட்டுமே தெரிகிறது). உதாரணம்: லினோலெயிக் அமிலம். ஆனால், அண்மைய மாற்றங்களில் பைட் அளவுகள் உள்ளது. தொகுவை அழுத்திப் பார்த்தால் எழுதியது தெரிகிறது. உங்களால் உதவ முடியுமா?--Nan 13:11, 8 சனவரி 2012 (UTC)Reply

சரி செய்திருக்கிறேன். தகவல் பெட்டியில் உள்ள convert (centigrade to farenheit) வார்ப்புருவுக்கு குறை எண்களை அனுப்பினால் இச்சிக்கல். இப்போது அதனை நீக்கிவிட்டு சரி செய்திருக்கிறேன். வார்ப்புருவில் என்ன சிக்கல் என ஆராய்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:23, 8 சனவரி 2012 (UTC)Reply

உடனடியாக உதவியமைக்கு நன்றி சோடா பாட்டில்--Nan 13:26, 8 சனவரி 2012 (UTC)Reply

புதுப்பயனர் பற்றியது தொகு

வணக்கம்! புது பயனர்களுக்கான உரையாடல் பக்கத்தில் புதுப்பயனர் வார்ப்புரு இடுவது யார் வேண்டுமானாலும் செயலாமா?அல்லது தங்களைப் போன்ற நிர்வாகிகள் தான் செய்ய வேண்டுமா? நன்றி

யார் வேண்டுமானாலும் செய்யலாம். விக்கிப்பீடியாவில் “நிருவாகி” என்பவர் சாதாரண பயனரை விட ஒரு சில அணுக்கங்கள் (கட்டுரை நீக்குதல், காத்தல், பயனர் தடை) மட்டும் பெற்றவர். மற்றபடி அனைவரும் ஒரே நிலை தான். எனவே நீங்கள் விருப்பப்பட்டால் தாராளமாக புதுப்பயனர் வரவேற்பு இடுங்கள் :-)--சோடாபாட்டில்உரையாடுக 10:42, 10 சனவரி 2012 (UTC)Reply

மிக்க நன்றி ...இதோ இப்போதே ஆரம்பித்துவிட்டேன்....பயனர் பேச்சு:Krishnamoorthy48....:)...--shanmugam 10:50, 10 சனவரி 2012 (UTC)Reply

வணக்கம்!
எனக்கு என்ன விதமான கட்டுரைகளை உருவாக்குவது என்பதில் சற்று குழப்பமாக உள்ளது.தங்களிடம் ஏதாவது யோசனை (தலைப்பு) உள்ளதா?--shanmugam 06:03, 11 சனவரி 2012 (UTC)Reply
விக்கிப்பீடியா:சமுதாய வலைவாசல் பக்கத்தில் கட்டுரையாக்கம் பகுதியில் முக்கிய கட்டுரைகள், கோரப்பட்ட கட்டுரைகள் உள்ளன. தவிர உங்களுக்கு பிடித்த எந்தக் கட்டுரையிலும் உள்ள சிவப்பிணைப்புகளில் கட்டுரைத் துவங்கலாம்.--மணியன் 06:44, 11 சனவரி 2012 (UTC)Reply
உங்கள் உதவிக்கு நன்றி திரு.மணியன் அவர்களே!!!--shanmugam 07:38, 11 சனவரி 2012 (UTC)Reply

நீக்கப்பட வேண்டிய கட்டுரை தொகு

வணக்கம்....... Bommalattam இது நீக்கப்படவேண்டும் என நினைக்கிறன்...ஏனெனில் ஏற்கனவே ஒரு கட்டுரை தமிழ் பெயரில் உள்ளது.
நன்றி

சுட்டியமைக்கு நன்று சண்முகம். நீக்கிவிட்டேன். இவ்வாறான கட்டுரைகளைக் காணும் போது {{delete}} என்ற வார்ப்புருவை அவற்றில் சேர்த்து விட்டு உரையாடல் பக்கத்தில் ஏன் நீக்க வேண்டுமென்று குறிப்பிட்டு விடுங்கள். நிருவாகிகள் அதனைக் கண்டு நீக்கி விடுவோம்.--சோடாபாட்டில்உரையாடுக 03:41, 13 சனவரி 2012 (UTC)Reply
நன்றி ...--shanmugam 03:44, 13 சனவரி 2012 (UTC)Reply

வேண்டுகோள் தொகு

பேச்சு:கொங்கு வேளாளர் பக்கத்தில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை கவனிக்குமாறு கேட்டு கொள்கிறேன். வைரதங்கம் 05:54, 14 சனவரி 2012 (UTC)Reply

 Y ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 08:24, 14 சனவரி 2012 (UTC)Reply

எஞ்சியுள்ள பகுதியையும் உங்கள் அறிவுரைபடியே கட்டுரையில் சேர்க்க உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். உரையாடலை பார்க்கவும். வைரதங்கம் 05:15, 20 சனவரி 2012 (UTC)  Y ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 04:25, 23 சனவரி 2012 (UTC)Reply

துறை விளக்கம் - மாற்றம் தேவை தொகு

சோடா பாட்டில், சுழலும் முறையில் என்னுடையப் பெயரினைப் பார்த்தேன். நன்றி. ஆனால், நான் உயிரிவேதியியல் பேராசிரியன் இல்லை. எனக்கு உயிர்வேதியியல் பிடிக்கும் அவ்வளவே. நான் மருத்துவ அழற்சி (Medical Inflammation) துறையில் இணைபேராசிரியனாக உள்ளேன். என்னுடைய பயிற்சி எதிர்ப்பியல் (Immunology). திருத்தி விடுங்கள். நன்றி. --Nan 20:20, 17 சனவரி 2012 (UTC)Reply

தவறுக்கு வருந்துகிறேன் நந்தகுமார். இப்போது திருத்தி விட்டேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:48, 18 சனவரி 2012 (UTC)Reply

நன்றி சோடா பாட்டில். --Nan 08:48, 18 சனவரி 2012 (UTC)Reply

சந்தேகம் தொகு

வணக்கம், பயனர்:Muhilsami இவர் ஆங்கில மற்றும் தமிழ் விக்கிகளில் பொன்னமராவதி மற்றும் இராயபுரம் ஆகிய கட்டுரைகளில் முத்து என்ற நிறுவனத்தை பற்றிய தகவல்களை மட்டும் சேர்த்துள்ளார். அதனை மீளமைத்துள்ளேன் சரிதானே!...ஆங்கில விக்கியில் நான் மாற்றவில்லை.... நன்றி...

மிகவும் சரி. :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 12:41, 19 சனவரி 2012 (UTC)Reply
நன்றி சூர்யா--shanmugam 13:55, 19 சனவரி 2012 (UTC)Reply

உதவியும் பதிலும் தேவை! தொகு

உமையாள்புரம் சிவராமன் எனும் தலைப்பு, உமையாள்புரம் கே. சிவராமன் எனும் தலைப்புக்கு என்னால் நகர்த்தப்பட்டுள்ளது (பக்கவழிமாற்றுப் பக்கம்). நான் சரியாகச் செய்துள்ளேனா என்பதனைப் பாருங்கள்.

ஒரு வினா: நான் இதனைச் செய்யும் போது, எனது செயலுக்குரிய காரணத்தையும் குறிப்பிட்டேன். அந்தக் குறிப்பை இப்போது எவ்விடத்தில் பார்க்க முடியும்? --Selvasivagurunathan mஉரையாடுக

சரியாகத் தான் செய்துள்ளீர்கள். நகர்த்தல் பதிகையிலும் வரலாற்றிலும் அக்குறிப்பு இருக்குமே!--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 18:38, 21 சனவரி 2012 (UTC)Reply


சரியாகவே நகர்த்தியுள்ளீர்கள். குறிப்பை வரலாற்றுப் பக்கத்தி காணலாம்--சோடாபாட்டில்உரையாடுக 18:40, 21 சனவரி 2012 (UTC)Reply


உதவிக்கும் பதிலுக்கும் நன்றி!--Selvasivagurunathan mஉரையாடுக

மன்னிக்கவும் தொகு

இப்பகுதியில் நான் பிழையாக எழுதிவிட்டேன். மன்னிக்கவும்.--செல்வா 15:16, 22 சனவரி 2012 (UTC)Reply

அதனால் என்ன பரவாயில்லை.--சோடாபாட்டில்உரையாடுக 15
17, 22 சனவரி 2012 (UTC)

என் கவனிப்பு பட்டியல் தொகு

கவனிப்பு பட்டியலில் அதிகபட்சம் 7 நாட்கள் தான் காட்டப்படுகிறது. இதை அதிக நாட்கள் காட்ட ஏதேனும் வழியுள்ளதா?--குறும்பன் 02:25, 23 சனவரி 2012 (UTC)Reply

என் விருப்பத்தேர்வுகள் > கவனிப்புப் பட்டியல் > கவனிப்புப்பட்டியலில் காட்டப்பட வேண்டிய நாள்களின் எண்ணிக்கை
இதில் நமக்கு வேண்டிய எண்ணை போட்டுக் கொள்ள வசதி செய்துள்ளார்கள். --சோடாபாட்டில்உரையாடுக 04:24, 23 சனவரி 2012 (UTC)Reply

அதில் 7 நாட்கள் '(அதிகபட்சம் 7 நாட்கள்)' மட்டுமே அனுமதிக்கிறார்கள். 7 க்கு மேல் கொடுத்தால் சேமிக்க முடியவில்லை. நான் 20 நாட்கள் உள்ளவாறு கவனிப்பு பட்டியலை மாற்ற நினைக்கிறேன். --குறும்பன் 17:12, 23 சனவரி 2012 (UTC)Reply

கவனிப்புப் பட்டியல் பக்கத்தில் “நாட்களைக் காட்டு” க்கு அடுத்துள்ள ”அனைத்து” இணைப்பை சொடுக்கினால் 30 நாட்கள் வருகிறது. இருபது நாட்கள் வேண்டுமெனில் தொடுப்பில் http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Watchlist&invert=&days=20 மாற்றம் செய்து விடுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 17:40, 23 சனவரி 2012 (UTC)Reply

விக்கிப்பீடியா:குறுந்தட்டு திட்டம் தொகு

வணக்கம், நான் நடுத்தர போர் வானூர்தி மற்றும் தீ எச்சரிக்கை அமைப்பு ஆகிய குறுந்தட்டு திட்ட கட்டுரைகளில் சில உரைதிருத்தங்களை செய்துள்ளேன்...தயவுசெய்து அவற்றை ஒப்பிட்டு பார்த்து மேலும் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் கூறவும். மேலும் நான் குறுந்தட்டு திட்டத்தில் உரைதிருத்தங்கள் செய்யலாம்தானே? எவ்வாறு செய்வது என மேலும் விவரங்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும். நன்றி--shanmugam 08:33, 23 சனவரி 2012 (UTC)Reply

தாராளமாகப் பங்கேற்கலாம் சண்முகம். விக்கிப்பீடியா:குறுந்தட்டு திட்டம்/முதற்பக்கக் குறுந்தட்டு/கட்டுரைகள் பக்கத்தின் ஆரம்பத்தில் சில வழிமுறைகள் தரப்பட்டுள்ளன. பொதுவான எழுத்துப்பிழை/இலக்கணப்பிழைத் திருத்தி உதவினால் போதுமானது. கட்டுரைகள் என்றல்ல விக்கிப்பீடியா:குறுந்தட்டு திட்டம்/முதற்பக்கக் குறுந்தட்டு/உங்களுக்குத் தெரியுமா - உங்களுக்குத் தெரியுமா பகுதியினையும் உரை திருத்தலாம். கட்டுரைகளில் உரை திருத்துவது தயக்கமாக இருப்பின் (சரியாக செய்கிறோமா என்று) உ. தெ பகுதியில் பணியாற்றுங்கள். அதில் ஒவ்வொரு வாக்கியங்களாக மட்டுமே உள்ளன. எனவே உரை திருத்தமும் எளிது, செய்து பழகவும் உகந்ததாக இருக்கும்.--சோடாபாட்டில்உரையாடுக 08:39, 23 சனவரி 2012 (UTC)Reply
கண்டிப்பாக செய்கிறேன்...--shanmugam 08:50, 23 சனவரி 2012 (UTC)Reply

கோவிந்தம்மாள் படம் தொகு

கோவிந்தம்மாள் தியாகி படத்தை விக்கித்தரவிரக்க(உரிமை தளர்வு) ஏதேனும் வழியுள்ளதா? http://nermai-endrum.blogspot.com/2011/08/blog-post_986.html--தென்காசி சுப்பிரமணியன் 13:52, 23 சனவரி 2012 (UTC)Reply

Fair Use என்ற முறையில் அவரது படத்தை இங்கு கொண்டுவரலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 14:09, 23 சனவரி 2012 (UTC)Reply
Fair use இவருக்குப் பொருந்தாது. இவர் வாழும் நபர். எனவே வேறொரு பதிப்புரிமையற்ற படம் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. நியாயப் பயன்பாடு இறந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். எனவே வேறு எதுவும் வழி உள்ளது போல் எனக்குத் தெரிய்வில்லை.--சோடாபாட்டில்உரையாடுக 14:37, 23 சனவரி 2012 (UTC)Reply

எனது முயற்சி! தொகு

கட்டுரைகள் எழுதுவதோடு நின்றுவிடாமல் அடுத்த நிலைக்குச் சென்று பணிபுரிய நினைத்துள்ளேன். 3 தீர்மானங்கள்:

1) புதிய பயனர்களை வரவேற்று, உபசரித்து அவர்களை ஊக்கப்படுத்துதல்.
2) உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் தமிழ் விக்கிப்பீடியா குறித்த அறிவைக் கொணர்ந்து அவர்களை பயனர்கள் ஆக்குவது.
3) தமிழக தமிழ் பத்திரிக்கைகளில் கட்டுரை எழுதி அதன் மூலம் மக்களிடையே பயனர்களை உருவாக்குவது.

3'ஆவது விசயத்தைச் செய்வதில் உங்களிடமிருந்து ஒரு தகவலை எதிர்பார்க்கிறேன்: உங்களின் நினைவுக்கு எட்டிய வரையில் நமது பயனர் எவராவது, தமிழக தமிழ் பத்திரிக்கைகளில்... 'தமிழ் விக்கிப்பீடியா குறித்த விழிப்புணர்வுக் கட்டுரை'களை எழுதியிருக்கிறார்களா? எதற்காக கேட்கிறேன் என்றால்... ஏற்கனவே பிரசுரித்த பத்திரிகை இன்னொருமுறை பிரசுரிக்கத் தயங்கும். நான் சில பத்திரிக்கைகளை தெரிவு செய்துள்ளேன் - அவை தமிழை போற்றும் பத்திரிகைகள். (இன்னமும் 'விழிப்புணர்வுக் கட்டுரை'யை நான் எழுதத் தொடங்கவில்லை, எழுதணும்!)--Selvasivagurunathan mஉரையாடுக

விக்கிப்பீடியா:ஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் இங்கு இதுவரை வெளியான அறிமுகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உங்கள் முயற்சி அருமையானது. :-). வெற்றி பெற வாழ்த்துகள். உறவினர்/நண்பர் மத்தியில் பரப்புரை செய்யும் போது எதிர்ப்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ளுங்கள் (என் அனுபவம் ;-)). வேறு ஏதேனும் உதவி வேண்டுமெனில் கேளுங்கள், இயன்ற வரை செய்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 18:40, 23 சனவரி 2012 (UTC)Reply


தங்களின் ஊக்குவித்தலுக்கும், ஆலோசனைக்கும், ஆதரவிற்கும் எனது உளங்கனிந்த நன்றிகள்!
ஜூன் 1 முதல் தானும் புதுப்பயனராகி, தமிழில் கட்டுரைகள் எழுதுவதாக என் துணைவியார் எனக்கு வாக்கு தந்துள்ளார்!! (தற்சமயம் ஆசிரியர் பயிற்சி எடுத்துவருகிறார்; மிகுந்த வேலைப்பளு தற்போது.)--செல்வசிவகுருநாதன் மாஉரையாடுக

உதவி தேவை தொகு

சோடாபாட்டில், நேற்று, இன்றும் என்னால் ஆரம்பிக்கப்பட்ட சகல கட்டுரைகளையும் பரிசீலித்துப் பார்த்தேன். அதில் இலங்கை எழுத்தாளர்களின் நூற்பட்டியல் கட்டுரைகளில் சில கட்டுரைகள் பூரணமடையா நிலையில் உள்ளன. அவற்றின் தலைப்புக்களை தங்களது மின் அஞ்சலில் சேர்த்துள்ளேன். தயவு செய்து அவற்றை என் பேச்சுப்பக்க வெளிக்கு நகர்த்தி விடவும். நேரம் கிடைக்கும் போது அவற்றை பூரணப்படுத்துவேன். ஏனைய அனைத்துக் கட்டுரைகளும் விக்கி நியதிகளுக்கமையவே உள்ளன. இதனை ஓர் உதவியாக செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன் --P.M.Puniyameen 06:28, 24 சனவரி 2012 (UTC)Reply

இப்பட்டியல்களை நகர்த்துவதற்கு அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. அந்தந்த இடங்களிலேயே மேலதிக தகவல்களை சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 12:34, 24 சனவரி 2012 (UTC)Reply
கனக்ஸ், வெகுநாட்களாக "வேலை நடந்துகொண்டிருக்கிறது” என்ற வார்ப்புரு இவற்றில் உள்ளது. அதற்கு பதிலாக வேறொரு வார்ப்புருவை இடலாமா (”இப்பட்டியல் முழுமையானதல்ல, இதனை முழுமையாக்க நீங்கள் அறிந்த நூல்களை சேர்த்து உதவுங்கள்”)?--சோடாபாட்டில்உரையாடுக 13:19, 24 சனவரி 2012 (UTC)Reply

வார்ப்புருவில் பிழைதிருத்தம் தொகு

சோடாபாட்டில், தேசிய நெடுஞ்சாலை 47A (இந்தியா) வில் உள்ள infobox road வார்ப்புருவில் மாநிலம் என்ற சுட்டிக்கான இணைப்பு தவறாக இந்தியப் போக்குவரத்துக் கழகங்கள் பக்கத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக இந்திய மாநில நெடுஞ்சாலைகள் பக்கம் இணைக்கப்பட வேண்டும். Nested template ஆக இருப்பதால் என்னால் இனங்கண்டு மாற்ற இயலவில்லை. நீங்கள் உதவ முடியுமா ?--மணியன் 08:49, 24 சனவரி 2012 (UTC)Reply

 Y ஆயிற்று. இதை செய்வதற்கு நான் கையாண்ட குறுக்குவழி - infobox road குழப்பமாக இருப்பதால் அதைப் பார்க்கவில்லை. நேராக இந்தியப் போக்குவரத்துக் கழகங்கள் போனேன். இடது பட்டையில் “இப்பக்கத்தை இணைப்பவை” சொடுக்கினேன். வந்த பக்கங்களில் வார்ப்புருகளை மட்டும் ஆராய்ந்தேன். வார்ப்புரு:Infobox road/browselinks/IND இது அப்பட்டியலில் இருந்த்து. தொகுத்து மாற்றிவிட்டேன். nested தகவல் பெட்டிகளை இப்படி பின்வழியாகக் கையாளுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 09:22, 24 சனவரி 2012 (UTC)Reply
புதிய யுக்தியை அறிமுகப்படுத்தியதற்கும் சிக்கலைத் தீர்த்தமைக்கும் மிக்க நன்றிகள் !!--மணியன் 09:43, 24 சனவரி 2012 (UTC)Reply
சோடாபாட்டில், நீங்கள் தெரிவித்த வழிமுறை எளிதாக உள்ளது. நன்றி. இத்தனை நாட்களாக ஒவ்வொரு வார்ப்புருவுக்கும் சென்று துணை வார்ப்புருக்களைக் கண்டு திருத்தியிருக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 11:37, 24 சனவரி 2012 (UTC)Reply

(பேச்சுப் பக்கம் பின்தொடருபவர்) இது மீடியாவிக்கியின் சாபக்கேடு. மிக சிக்கலான வார்ப்புரு இயந்திரம் அதனை பி.எச்.பி (மூல மொழி) விட கடினமாக்க அயராமல் உழைத்து வரும் மொழி என சிலர் நகைச்சுவையாக சொல்வதுண்டு. ஸ்ரீகாந்த் 10:45, 24 சனவரி 2012 (UTC)Reply

+1. -- சுந்தர் \பேச்சு 11:37, 24 சனவரி 2012 (UTC)Reply

இயந்திரவியல் கட்டுரைகள் தொகு

தொகுக்க வேண்டிய இயந்திரவியல் கட்டுரைகள் தலைப்பை தந்து உதவவேண்டும்.

இப்போதைக்கு இயந்திரவியல் கலைச்சொற்கள் என்ற பக்கத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். முழுமையான பட்டியல் கிடைக்கிறதா என்று தேடி எடுத்துத் தருகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:46, 25 சனவரி 2012 (UTC)Reply
ஆங்கில விக்கிப் பட்டியல் - en:Index of mechanical engineering articles. இதிலிருந்து தொடங்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 04:47, 25 சனவரி 2012 (UTC)Reply
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் பொறியியல் -ஐப் பார்க்கலாம். --செல்வா 04:53, 25 சனவரி 2012 (UTC)Reply

வார்ப்புரு சந்தேகம் தொகு

வார்ப்புரு:Infobox Historic Site இதில் உள்ள வார்ப்புரு:Designation ஆனது ஆங்கில விக்கியில் color,text,sandbox என தனித்தனியாக உள்ளது .. ஆனால் வார்ப்புரு:Infobox Historic Site ல் ஒன்று மட்டுமே உள்ளது. எனவே தயவுசெய்து இதனை சரிபார்க்கவும். மேலும் இதை எவ்வாறு தமிழில் மாற்றுவது என சற்று விளக்கினால் பின்னால் உபயோகமாக இருக்கும் என நினைகிறேன். உதவிக்கு மிக்க நன்றி... குறிப்பு : ஆங்கில விக்கி வார்ப்புரு en:Template:Infobox historic site
பயன்படுத்திய கட்டுரை:ஹெர்குலஸ் கோபுரம்--shanmugam 07:22, 26 சனவரி 2012 (UTC)Reply

நீக்கியமைக்கு (எப்படி!) நன்றி... மேலும் வார்ப்புரு:Designation க்கு en:Template:Designation/colour ஐ உபயோகப்படுத்தியுள்ளேன் .. முன்பே கூற மறந்துவிட்டேன்...--shanmugam 07:36, 26 சனவரி 2012 (UTC)Reply
யார் வேண்டுமானாலும் நீக்கலாம். மேலே இருக்கும் மொத்த தொகுவை சொடுக்கி நீக்கினேன்
இம்மாதிரியான சிக்கலான தகவல் பெட்டிகளுக்கு அனைத்து துணை வார்ப்ப்புருகளையும் உருவாக வேண்டும். இப்போது அனைத்தையும் உருவாக்கியிருக்கிறேன். (வார்ப்புரு:Designation/colour போன்று) தமிழாக்கம் செய்து கொள்ளுங்கள் (கிட்டத்தட்ட எட்டு துணை வார்ப்புருக்கள் உள்ளன, அவற்றில் தேடி மாற்ற வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 08:28, 26 சனவரி 2012 (UTC)Reply

மிக்க நன்றி ஐயா... மேலும் அந்த தொகுவை நான் மறந்துவிட்டேன்....:):)--shanmugam 08:39, 26 சனவரி 2012 (UTC)Reply

Return to the user page of "Sodabottle/தொகுப்பு14".