ரங்கன ஹேரத்

இலங்கை துடுப்பாட்ட அணியின் வீரர்
(ரங்கன ஹெரத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரங்கன ஹேரத் (Rangana Herath, பிறப்பு: மார்ச் 19, 1978) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இடதுகை சுழல் பந்து வீச்சாளர் ஆவார். 2004 ஆம் ஆண்டு அராரேயில் நடந்த சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியதனூடாக பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்ட உலகில் அறிமுகமானர். இவர் இலங்கை தேசிய துடுப்பாட்ட அணி, குருணாகலை இளம் துடுப்பாட்ட அணி, முவர்ஸ் அணி, தமிழ் யூனியன் அணி, வயாம்பா துடுப்பாட்ட அணி ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளார். இவர் இலங்கை அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடினார்.

ரங்கன ஹேரத்
Rangana Herath
රංගන හේරත්
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஹேரத் முதியாசிலாகே ரங்கன கீர்த்தி பண்டார ஹேரத்
பிறப்பு19 மார்ச்சு 1978 (1978-03-19) (அகவை 46)
குருணாகல், இலங்கை
உயரம்5 அடி 5 அங் (1.65 m)
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைஇடதுகை மரபுவழா சுழல்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 78)22 செப்டம்பர் 1999 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வு6 நவம்பர் 2018 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 120)25 ஏப்ரல் 2004 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாப1 மார்ச் 2015 எ. இங்கிலாந்து
ஒநாப சட்டை எண்14
இ20ப அறிமுகம் (தொப்பி 39)6 ஆகத்து 2011 எ. ஆத்திரேலியா
கடைசி இ20ப28 மார்ச் 2016 எ. தென்னாப்பிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1996–1998குருணாகலை இளைஞர் துடுப்பாட்டக் கழகம்
1998–2010மூவர்சு விளையாட்டுக் கழகம்
2008–2011வயம்பா துடுப்பாட்ட அணி
2009சரே துடுப்பாட்டக் கழகம்
2010ஆம்ப்சயர் துடுப்பாட்டக் கழகம்
2011–இன்றுதமிழ் யூனியன்
2012பசுனாகிரா துடுப்பாட்டம் டண்டீ
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒநாப இ20ப பஅ
ஆட்டங்கள் 93 71 17 190
ஓட்டங்கள் 1,699 140 8 1,043
மட்டையாட்ட சராசரி 14.64 9.33 2.66 16.55
100கள்/50கள் 0/3 0/0 0/0 0/1
அதியுயர் ஓட்டம் 80* 17* 3 88*
வீசிய பந்துகள் 25,993 3,242 365 8,256
வீழ்த்தல்கள் 433 74 18 226
பந்துவீச்சு சராசரி 28.07 31.91 20.72 25.36
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
34 0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
9 n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 9/127 4/20 5/3 4/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
24/- 14/- -/- 44/-
மூலம்: ESPNCricinfo, நவம்பர் 13 2018

துடுப்பாட்டத்தில் மிகச்சிறந்த இடக்கைப் பந்து வீச்சாளர்களில் ஒருவராகப் புகழப்படும் ரங்கன ஹேரத் தேர்வுத் துடுப்பாட்ட இடக்கை சுழற்திருப்ப பந்துவீச்சாளர்களில் சிறந்த உலக சாதனையை இவர் கொண்டுள்ளார். 2016 மே 29 இல், முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ் ஆகியோருக்கு அடுத்ததாக 300 தேர்வு இலக்குகளைக் கைப்பற்றிய மூன்றாவது இலங்கை வீரர் என்ற சாதனையை எட்டினார்..[1]

டிசம்பர் 23,2016 இல் சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு ஹெராத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2] இதன்மூலம் அதிக வயதில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தலைமை தாங்கிய இலங்கை வீரர் எனும் சாதனை படைத்தார். இதற்கு முன் டொம் கிரவெனி தலைமை தாங்கியதே சாதனையாக இருந்தது.[3]

சர்வதேச போட்டிகள்

தொகு

ஹெராத் 1999 ஆம் ஆண்டில் காலி பன்னாட்டு அரங்கத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமனார். பின் 2004 ஆம் ஆண்டில் ஹராரே துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். 2012 ஆம் ஆண்டிற்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி பந்து வீச்சாளர் தரவரிசையில் இவர் எட்டாவது இடம் பிடித்தார்.[4]

இவர் 1999 ஆம் ஆண்டிலேயே தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானாலும் முதன்மைப் பந்துவீச்சாளராக ஆகவில்லை. ஏனெனில் முத்தையா முரளிதரன் அணியின் முதன்மைப் பந்துவீச்சாளராக இருந்தார். பின் இவரின் ஓய்விற்குப் பிறகே இவருக்கு நிலையான இடம் கிடைத்தது.[5]

2015 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் இவர் 5 இலக்குகளைக் கைப்பற்றினார். இது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இவர் எடுக்கும் முதல் 5 இலக்காகும் ஒட்டுமொத்தமாக 23 ஆவது முறையாகும். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 68 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இலக்குகளைக் கைப்பற்றி அந்த அணியை 251 ஓட்டங்களில் ஆட்டமிழக்கச் செய்தனர். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 79 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இலங்கை அணி ஒரு ஆட்டப் பகுதி மற்றும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் 4 இலக்குகளைக் கைப்பற்றி இந்தத் தொடரை 2-0 என்று கைப்பற்ற உதவினார்.[6]

2014 ஆம் ஆண்டில் வங்காளதேசத்தில் நடைபெற்ற 2014 ஐசிசி உலக இருபது20 போட்டியில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். மார்ச் 31 இல் நடைபெற்ற இந்தப் போட்டியில் 119 ஓட்டங்களுக்கு இலங்கை அணி ஆட்டமிழந்தது.[7] 120 வெற்றி இலக்காக வலிமை வாய்ந்த நியூசிலாந்து அணியில் பிரண்டன் மெக்கல்லம், மார்டின் கப்தில்,ராஸ் டைலர் ஆகியோர் இந்த அணியில் இருந்தனர். ஆண்டர்சன் காயம் காரணமாக இந்தப் போட்டியில் இருந்து விலகியதால் 10 வீரர்களோடு விளையாடினர். இந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 3 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றார்.[8]

சாதனைகள்

தொகு
  • 2012 ஆம் ஆண்டில் அதிக தேர்வு இலக்குகளைக் கைப்பற்றியவர்[9]

10 இலக்குத் தேர்வுகள்

தொகு
# தரவுகள் ஆட்டம் எதிராக அரங்கு நகரம் நாடு ஆண்டு
1 12/171 36   இங்கிலாந்து காலி பன்னாட்டு அரங்கம் காலி இலங்கை 2012
2 11/108 41   நியூசிலாந்து காலி பன்னாட்டு அரங்கம் காலி இலங்கை 2012
3 12/157 47   வங்காளதேசம் ஆர். பிரேமதாச அரங்கம் கொழும்பு இலங்கை 2013
4 14/184 57   பாக்கித்தான் சிங்களவர் அரங்கு கொழும்பு இலங்கை 2014
5 10/147 64   மேற்கிந்தியத் தீவுகள் காலி பன்னாட்டு அரங்கம் காலி இலங்கை 2015
6 13/135 73   ஆத்திரேலியா சிங்களவர் அரங்கு கொழும்பு இலங்கை 2016

ஐந்து இலக்குத் தேர்வுகள்

தொகு
# தரவுகள் ஆட்டம் எதிராக அரங்கு நகரம் நாடு ஆண்டு
1 5/99 16   பாக்கித்தான் பி.சரா அரங்கு கொழும்பு இலங்கை 2009
2 5/157 17   பாக்கித்தான் சிங்களவர் அரங்கு கொழும்பு இலங்கை 2009
3 5/139 18   நியூசிலாந்து சிங்களவர் அரங்கு கொழும்பு இலங்கை 2009
4 5/121 20   இந்தியா கிறீன் பூங்கா கான்பூர் இந்தியா 2009
5 5/79 28   ஆத்திரேலியா காலி பன்னாட்டு அரங்கம் காலி இலங்கை 2011
6 7/157 29   ஆத்திரேலியா சிங்களவர் அரங்கு கொழும்பு இலங்கை 2011
7 5/79 34   தென்னாப்பிரிக்கா கிங்க்சுமீட் டர்பன் தென்னாப்பிரிக்கா 2011
8 6/74 36   இங்கிலாந்து காலி பன்னாட்டு அரங்கம் காலி இலங்கை 2012
9 6/97 36   இங்கிலாந்து காலி பன்னாட்டு அரங்கம் காலி இலங்கை 2012
10 6/133 37   இங்கிலாந்து பி.சரா ஓவல் கொழும்பு இலங்கை 2012
11 5/65 41   நியூசிலாந்து காலி பன்னாட்டு அரங்கம் காலி இலங்கை 2012
12 6/43 41   நியூசிலாந்து காலி பன்னாட்டு அரங்கம் காலி இலங்கை 2012
13 6/103 42   நியூசிலாந்து பி.சரா ஓவல் கொழும்பு இலங்கை 2012
14 5/95 43   ஆத்திரேலியா பெல்லரைவ் ஓவல் அரங்கம் ஹோபார்ட் ஆத்திரேலியா 2012
15 5/68 47   வங்காளதேசம் பிரேமதாசா அரங்கு கொழும்பு இலங்கை 2013
16 7/89 47   வங்காளதேசம் பிரேமதாசா அரங்கு கொழும்பு இலங்கை 2013
17 5/125 50   பாக்கித்தான் சார்ஜா அரங்கு சார்ஜா அமீரகம் 2014
18 5/40 55   தென்னாப்பிரிக்கா சிங்களவர் அரங்கு கொழும்பு இலங்கை 2014
19 6/48 56   பாக்கித்தான் காலி பன்னாட்டு அரங்கம் காலி இலங்கை 2014
20 9/127 57   பாக்கித்தான் சிங்களவர் அரங்கு கொழும்பு இலங்கை 2014
21 5/57 57   பாக்கித்தான் சிங்களவர் அரங்கு கொழும்பு இலங்கை 2014
22 7/48 61   இந்தியா காலி பன்னாட்டு அரங்கம் காலி இலங்கை 2015
23 6/68 64   மேற்கிந்தியத் தீவுகள் காலி பன்னாட்டு அரங்கம் காலி இலங்கை 2015
24 5/54 71   ஆத்திரேலியா முரளிதரன் அரங்கு கண்டி இலங்கை 2016
25 6/81 73   ஆத்திரேலியா சிங்களவர் அரங்கு கொழும்பு இலங்கை 2016
26 7/64 73   ஆத்திரேலியா சிங்களவர் அரங்கு கொழும்பு இலங்கை 2016

5 இ20ப இலக்குகள்

தொகு
# தரவுகள் ஆட்டம் எதிராக அரங்கு நகரம் நாடு ஆண்டு
1 5/3 7   நியூசிலாந்து சாக் அரங்கு சிட்டகொங் வங்காளதேசம் 2014

மேற்கோள்கள்

தொகு
  1. "Everyman Herath waddles into history". ESPNCricinfo. 29 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 31 மே 2016.
  2. "Rangana Herath to Captain Sri Lanka against Zimbabwe". Sri Lanka Cricket. 23 October 2016. Archived from the original on 11 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 11 February 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Mathews injured, Herath set for late captaincy debut". ESPNcricinfo. http://www.espncricinfo.com/zimbabwe-v-sri-lanka-2016-17/content/story/1062963.html. 
  4. "Official Player Rankings". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 September 2014.
  5. Thawfeeq , Sa'adi (27 March 2012). "Herath now our No. 1 - Jayawardene". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 September 2014.
  6. "Magical Herath spins Sri Lanka to innings win". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 October 2015.
  7. "ICC World Twenty20, 2014 - 30th match, Group 1". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 April 2016.
  8. "Herath spins New Zealand out of WT20 with 5 for 3". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 April 2016.
  9. "Most wickets in 2012". cricinfo. 28 டிசம்பர் 2012. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்கன_ஹேரத்&oldid=3569404" இலிருந்து மீள்விக்கப்பட்டது