ராம்பூர்வா போதிகைகள்

(ராம்பூர்வா காளை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ராம்பூர்வா காளை (Rampurva capitals) இந்தியாவின் வடக்கு பிகாரில் உள்ள மேற்கு சம்பாரண் மாவட்டதில், நேபாளத்தின் எல்லையை ஒட்டி அமைந்த தொல்லியல் களம் ஆகும்.[1] பிரித்தானிய தொல்லியல் அறிஞர் ஏ. சி. எல். கார்லைலி என்பவர், கி மு மூன்றாம் நூற்றாண்டு காலத்திய, அசோகரின் இரண்டு தூண்களை, 1907ல் ராம்பூர்வா அகழ்வாய்வின் போது கண்டுபிடித்தார்.[2][3]

ராம்பூர்வா போதிகைகள்
ராம்பூர்வா போதிகைகள் is located in இந்தியா
ராம்பூர்வா போதிகைகள்
Shown within India# India Bihar
ராம்பூர்வா போதிகைகள் is located in பீகார்
ராம்பூர்வா போதிகைகள்
ராம்பூர்வா போதிகைகள் (பீகார்)
இருப்பிடம்மேற்கு சம்பராண், பிகார், இந்தியா
ஆயத்தொலைகள்26°50′34″N 84°41′46″E / 26.8429°N 84.6960°E / 26.8429; 84.6960
வகைSettlement
தலைகீழாக கவிழ்த்த தாமரை சிற்பத்தின் மீது அமர்ந்திருக்கும் சிங்கப் போதிகை

ராம்பூர்வாவின் காளை போதிகை தொகு

அசோகரின் தூண்களில் காணப்பாடும் ஏழு விலங்குகளின் தூண்களில், ராம்பூர்வாவில் மட்டும் காளையின் போதிகை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இத்தூணின் மேல் காளையின் சிற்பமும், அதனடியில் விசிறி போன்று சுழலும் சுடரொளிகளின் நடுவில் தாமரைப் பூ சிற்பத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

 
காளைப் போதிகையின் கீழ் தாமரைப் பூவைச் சுற்றிலும் பனை விசிறி போன்று சுழலும் ஒளிச் சுடர்களின் சிற்பம்

ராம்பூர்வாவில் காணப்படும் அபாகஸ் சிற்பக்கலை, பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலையில் வடிக்கப்பட்டுள்ளது.[4] சங்காசியாவில் காணப்படும் அசோகரின் யானைப் போதிகைத் தூண் இதே போன்ற கட்டிடக் கலை வடிவில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடக் கலை அமைப்பு பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலை மற்றும் பாரசீகக் கட்டிடக் கலையிலிருந்து தோன்றியதாகும்.[5]

ராம்பூர்வா சிங்கப் போதிகை தொகு

 
ராம்பூர்வா சிங்கத் தூணின் கல்வெட்டுகள்

ராம்பூர்வா சிங்கத் தூணில் அசோகரின் கல்வெட்டுகள் உள்ளது.[6]

மரபுரிமை பேறுகள் தொகு

இந்தியக் குடியரசுத் தலைவரின் மாளிகையில் ராம்பூர்வா காளையின் சிற்பம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[7]

படக்காட்சிகள் தொகு

ராம்பூர்வா போதிகைகள்
ராம்பூர்வா சிங்கப் போதிகை
ராம்பூர்வ எருது போதிகை

இதனையும் காண்க தொகு

 
 
உதயகோலம்
 
நித்தூர்
 
Jatinga
 
Rajula Mandagiri

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு