விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு60

எது மிகச் சரியானது?

தொகு

கோவில், கோயில் - இவ்விரண்டில் எது மிகச் சரியானது? சில இதழ்கள் “கோவில்” என்றும், சில இதழ்கள் “கோயில்” என்றும் பயன்படுத்துகின்றன. விக்கிப்பீடியாவில் அதிகமாக “கோயில்” என்ற சொல்லே என்பது பயன்படுத்தப்படுகிறது. விவரம் அறிந்தவர்கள் விளக்கமளிக்க வேண்டுகிறேன். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:34, 31 சூலை 2011 (UTC)[பதிலளி]

  • இலக்கியங்களை எடுத்துக் கொண்டால் இரண்டில் கோயில் என்ற சொல்லே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கவிச்சக்ரவர்த்தி கம்பர், தனது கம்பராமாயணத்தில் இரண்டு சொற்களையுமேப் பயன்படுத்தியுள்ளார்.

எடுத்துக் காட்டாக;-
  1. மிடைந்திட, முனியொடும் வேந்தன் கோயில் புக்கு, (கோயில்- அதிகமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது)
  2. அறம் கொள் நாள் மலர்க் கோயில்கள் இதழ்க் கதவு அடைப்பப்
  3. அம் பொன் கோயில் பொன் மதில் சுற்றும் அகழ் கண்டார்.
  1. கோவில்; நான்முகன் படைக்கலம் தடக்கையில் கொண்டான். (மிகக் குறைவாகக் கையாளப்பட்டுள்ளது.)


அதிக மக்கள், கோயில் என்றே பயன்படுத்துகின்றனர். ஆலயம் என்ற மற்றொரு சொல்லையும் நாம் பயன்படுத்துகிறோம். நான் கற்றவரை, ஆலயம் என்ற சொல்லைக் கம்பர் கையாளவில்லை. எனது நோக்கில், இங்கு கோயில் என்று பயன்படுத்துவதே சரி.01:35, 1 ஆகத்து 2011 (UTC)உழவன்+உரை..


கோவில்-சரியான இலக்கணப் பயன்பாடு; கோயில்-ஏற்கத்தக்க பிழை

தொகு

கோவிலா, கோயிலா என்னும் கேள்வியைப் பலர் கேட்பது வழக்கம். அதற்கான இலக்கண அடிப்படையிலான பதிலைத் தேடிப் பார்த்தேன். கூகிள் தேடுதலும் நடத்தினேன். அப்போது 2010ஆம் ஆண்டு, திசம்பர் 12ஆம் நாள் வெளியான தினமணிக் கதிரில் அப்பதிலைக் கண்டு மகிழ்ந்தேன். அது நிறைவான விளக்கமாக உள்ளது. சுருங்கக் கூறின், "கோவில்" என்பது சரியான இலக்கணப் பயன்பாடு; ஆனால் "கோயில்" என்னும் சொல்லும் நெடுங்காலம் இலக்கியத்திலும் மக்கள் பயன்பாட்டிலும் வந்துவிட்டதால் அது "ஏற்கத்தக்க பிழை" எனலாம்.

சென்னைப் பேரகர முதலி (Tamil Lexicon, Madras) தரும் தகவல்படி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் "கோவில்", "கோயில்" என்னும் இரு பயன்பாடுகளும் உள்ளன.

ஆயினும், ஊர்ப்பெயர்களில் மக்கள் வழக்கத்தில் "கோவில்" என்று வரும்போது அதை மாற்றாமல் அப்படியே பயன்படுத்துவதே முறை. எடுத்துக்காட்டுகள்: நாகர்கோவில் (நாகர்கோயில் அல்ல); கோவில்பட்டி (கோயில்பட்டி அல்ல).

மொழிப்பயிற்சி - 18: பிழையின்றித் தமிழ் பேசுவோம் - எழுதுவோம் என்னும் தலைப்பிட்ட தினமணிக் கதிர் பதிகை இதோ: கோவிலா? கோயிலா?
இதோ மேற்கோள்:
கோவிலா? கோயிலா? தமிழில் உடம்படுமெய் என்று ஓர் இலக்கணச் செய்தி உளது. நிலைமொழியின் இறுதியிலும், வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்து வருமாயின் அவ்விரண்டு உயிர்களையும் இணைத்திட (உடம்படுத்த)ப் பயன்படும் மெய்யெழுத்துகள் ய், வ் என்றிரண்டு. கோ (க்+ஓ) இல் (இ). கோ என்பதில் ஓ எனும் உயிரும், இல்லில் இ எனும் உயிரும் இணையுமிடத்தில் வ் எனும் மெய்யெழுத்து தோன்றும். ஆதலின் கோ+வ்+இல் = கோவில் என்பதே சரியானது. கோயில் என்னும்போது கோ+ய்+இல் = கோயில் என்று ய் உடம்படுமெய்யாக வந்துள்ளது. ஆனால் நன்னூல் இலக்கணம் என்ன சொல்லுகிறது என்றால், இ, ஈ, ஐ வழி யவ்வும் ஏனை உயிர் வழி வவ்வும் ஏ முன் இவ்விருமையும் உடம்படு மெய் என்றாகும். கோவில் ஓகாரம் இருப்பதால் வ் உடன்படு மெய்தான் வர வேண்டும். ஆயினும் மக்கள் வழக்கத்தில் கோயிலும் இடம் பெற்றுவிட்டது. இது ஏற்கத்தக்க பிழையே.

சமீபத்தில் ஒரு செய்தித் தாளின் மூலம் அறிந்துகொண்டேன். கோ- கொடுங்கோல்,அரசன். இல்- வாழுதல், வாழும் இடம். கோ- இறைவன். வில்- உறையுமிடம். ஆகவே கோயில்- அரசன் வாழுமிடம் கோவில் - இறைவன் இருக்குமிடம். --பவுல்-Paul 04:02, 1 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

கற்றேன்,விரிவான தங்கள் விளக்கத்திற்கு நன்றி. இது பற்றி எழுதத் துவங்கும் போதே, தங்களை நினைத்தேன். விக்கி விடுமுறையில் நீங்கள் இருப்பதாக நினைத்தேன். வணக்கம்.00:49, 2 ஆகத்து 2011 (UTC)உழவன்+உரை..
  • ஆம், தகவலுழவனே, சில மாதங்களாக விக்சனரியில் என் பங்களிப்பு குறைவுதான். மாறாக, விக்கியில் தொடர்ந்து எழுதுகிறேன். "கோவில்" பற்றிய விளக்கத்தை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியரிடமிருந்து கற்றதாக நினைவு! வாழ்த்துகள்!--பவுல்-Paul 03:49, 2 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
பொதுவாக இரண்டும் சரி என்றே நினத்திருந்தேன். சரியான வழியில் விளக்கமளித்தமைக்கு நன்றி, பவுல் அவர்களே! --சிவகோசரன் 11:38, 2 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
இந்த உரையாடலை பேச்சு:கோயில் பக்கத்தில் தொடரவும்.--Kanags \உரையாடுக 09:00, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]

நரையம் தட்டச்சு முறை -- சோதனை

தொகு

சென்ற முறை நரையம் தட்டச்சு முறை நிறுவிய பொழுது சில வழுக்கள் தென்பட்டன, ஆகையால் அதை நாம் மீள்வித்துவிட்டோம்.விக்கியூடக நுட்ப குழு நம்மை நரையம் நீட்சியை பயன்படுத்துவதில் ஆர்வமாக உள்ளனர்(நம்மிடம் உள்ள தட்டச்சு கருவிக்கு நுட்ப ஆதரவு விரைவில் விலக்கிக்கொள்ளப்படலாம்). ஆகையால் நாம் விரைவில் நரையம் தட்டச்சு முறைக்கு மாறுவதே நல்லது. ஆனால் இம்முறை முழு சோதனைக்கு பிறகே மாறுவோம். மொழிபெயர்ப்பு விக்கியில்(translatewiki.net) நரையம் தட்டச்சு முறையின் அண்மைய பதிப்பு நிறுவப்பட்டுள்ளது.(விருப்பத்தேர்வில் தமிழ் தேர்ந்தெடுத்தால் போதும்) உங்களை உங்களிடம் உள்ள அனைத்து உலாவிகளில் இரு தட்டச்சு முறைகளையும் சோதித்து பார்த்து, வழுக்கள் இருப்பின் இங்கு பதியவும். நன்றி (குரோம் உலாவியில் நரையம் மூலம் தட்டச்சு செய்யும் பொழுது உயிர்மெய் எழுத்துக்கள் சரியாமல் வருவது பதியப்பட்ட வழு) ஸ்ரீகாந்த் 16:57, 3 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

நிருவாகிகள் கவனத்திற்கு

தொகு

சோடாபாட்டில் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருப்பதால் சில நிருவாக வேலைகள் கவனிக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக, விசமத் தொகுப்புகள் சில கவனிக்கப்படாமல் உள்ளன. தயவு செய்து இவற்றை அண்மைய மாற்றாங்களில் கவனித்து அவ்வப்போது நீக்கக் கோருகிறேன். நிருவாகிகள் அல்லாதோரும் நீக்க வேண்டிய பக்கங்களில் delete வார்ப்புருவை இணைத்து உதவலாம். நன்றி.--Kanags \உரையாடுக 03:17, 4 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

2011 இந்திய விக்கி மாநாடு அழைப்பு

தொகு

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

 

வணக்கம் ஆலமரத்தடி,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

இந்த வார்ப்புருவை விக்கிப்பீடியா:நகரங்கள்_வாரியாக_தமிழ்_விக்கிப்பீடியர்கள் பக்கத்திலுள்ள இந்திய விக்கியர்களின் பேச்சுப் பக்கத்தில் இடப்பட்டுள்ளது. ம்ற்றவர்களுக்காக இங்கே இடுகிறேன். ஸ்ரீகாந்த் 13:51, 6 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

மீ இணையை பக்கவழிப்படுத்தல்

தொகு

நான் விக்கி இனங்கள் மீ இணையைச் சொடுக்கியபோது அது ஆங்கில wikispecies பக்கத்துக்கு இட்டுச் செல்கிறது. ஆயினும் தமிழில் விக்கி இனங்கள் பக்கம் காணப்படுகிறது. எனவே விக்கி இனங்கள் மீ இணையை தமிழில் உள்ள விக்கி இனங்கள் பகுதிக்கு பக்கவழிப்படுத்தி உதவுக.

புதிய சகோதரத் திட்டங்கள் வார்ப்புரு

தொகு

மேற்கண்ட செய்தியைக் கண்டவுடன் இதனைச் செய்யவேண்டுமெனத் தோன்றியது. தற்போதுள்ள சகோதரத் திட்டங்கள் வார்ப்புருவை மாற்றிப் புதிதாக ஒரு வார்ப்புரு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்துத் திட்டங்களுக்கும் உரிய தமிழ் முகப்புப் பக்கங்களுக்கு பக்கவழிப்படுத்தல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதன் வடிவமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. இன்னும் சிறப்பாக https வழங்கியிலும் http வழங்கியிலும் செயல்படுவது போன்ற ஒரு முறை ஆங்கில விக்கியில் இருந்து அப்படியே பின்பற்றப்பட்டுள்ளது. அதனை மாற்றுவதன் மூலம் முதற்பக்க வடிவமைப்பு மாற்றம்பெறுவதால் அனைவரது கருத்தையும் கேட்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எனவே கீழே உள்ள வார்ப்புருவுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பழையது

தொகு
விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:

ஆதரவு
தொகு
எதிர்ப்பு
தொகு
  1.   எதிர்ப்பு பல ஆங்கிலப் பக்கவழிச் செலுத்தல்கள், தெளிவற்ற எழுத்து. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 05:48, 9 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

புதியது

தொகு

வார்ப்புரு:Mainpagefooter 2.0


ஆதரவு
தொகு
  1.   ஆதரவு புதிய இடைமுகப்பு, தேவையான மாற்றங்களும் செய்துகொள்ளலாம். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 05:48, 9 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
  2.   ஆதரவு --Natkeeran 14:23, 9 ஆகத்து 2011 (UTC) பரிந்துரை: விக்கியூடக நிறுவனம் என்று கூறலாம்.[பதிலளி]
  3.   ஆதரவு -- தகவலுழவன்
  4.   ஆதரவு ----Nan 14:16, 11 ஆகத்து 2011 (UTC) சில திருத்தங்கள்: "கட்டற்ற" என்ற சொல் பல இடங்களில் தேவையா? முதல் வரியில் உள்ளக் "கட்டற்ற" என்பது போதாதா? அதேபோல், விக்கிபொதுவில் உள்ள "பகிரப்பட்ட" என்பதும், மேல்-விக்கியில் உள்ள "விக்கிமீடியா" என்பதுவும் தேவையில்லை என்றே கருதுகிறேன். சுருக்கமாக இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுவதால் இந்தப் பரிந்துரை --Nan 14:16, 11 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
  5.   ஆதரவு -- முதல் வரியில் உள்ள "கட்டற்ற" என்பதை வேண்டுமானால் எடுக்கலாம். ஆனால் ஏனையவற்றில் கட்டாயம் தேவை.--Kanags \உரையாடுக 10:13, 16 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
  6.   ஆதரவு -- --சோடாபாட்டில்உரையாடுக 10:40, 16 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
எதிர்ப்பு
தொகு

--சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 05:48, 9 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

சூரியா, இது போன்ற அறிவிப்புகளை வார்ப்புருவின் பேச்சுப் பக்கத்திலேயே தரலாமே? சர்ச்சை ஏற்படக்கூடும் என்று எதிர்ப்பார்க்கும் போது மட்டும் வாக்கெடுப்புகளை அறிவிக்கலாம். மற்ற நேரங்களில் பேச்சுப் பக்கத்தில் ஒரு தகவல் இட்டு ஒரு வாரம் கழித்து மாற்றலாம்--இரவி 14:45, 9 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

ஏற்கனவே இது குறித்து கனக்சு அறிவுறுத்தியுள்ளார். பார்க்கவும் இரவி வார்ப்புருப் பேச்சுப் பக்கக் கருத்து --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 11:46, 11 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

கருத்துக்கள்

தொகு
 

1)புதிய வார்ப்புருவில் "விக்கியினங்கள்", "விக்கிபொது" ஆகியவற்றுக்கான இணைப்பை அழுத்தும்போது பக்கத்தில் காட்டியவாறான Error பக்கம் வந்து சில நொடிகளுக்குப் பின்னரே சரியான பக்கம் திறக்கிறது. சரி பார்க்கவும். தவிர, எழுத்துக்கள் பழைய வார்ப்புருவில் உள்ளதைப்போல் சிறியனவாக இருந்தால் நல்லது. --- மயூரநாதன் 15:04, 9 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

இணைப்பு வழிமாற்ற வழு:  Y ஆயிற்று எழுத்துச் சிறிதாக்கம்:  N முடிக்கப்படவில்லை நிறைய பேர் திட்டங்கள் குறித்த விளக்கக் குறிப்பு சிறிதாக உள்ளதென்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இங்கு பார்க்கவும். ஆங்கில வார்ப்புரு --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:32, 11 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

2)விக்கியூடகத்தின் உறவுத் திட்டங்கள் என்று கூறலாம். --Natkeeran 15:22, 9 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

 N முடிக்கப்படவில்லை எளிமையான சொற்பயன்பாடு : விக்கிமீடியாவின் பிற திட்டங்கள் என்பதே சுருக்கமாகவும் தெளிவான ஒன்றாகவும் புதியவர்கள் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையிலும் உள்ளது. எனவே அதனை அப்படியே விடுகிறேன். மேலும் விக்கியூடகம் என்று மொழிபெயர்ப்பது சரியாகத் தெரியவில்லை. விக்கிமீடியா ஒரு பதிவுபெற்ற நிறுவனம் எனவே அதன் வணிகப் பெயரை மாற்றுவதில் / மொழிபெயர்ப்பதில் அவ்வளவு பொருளிருப்பதாக எனக்குப் படவில்லை. மேலும் விக்கிப்பீடியா என்பதே விக்கி, -pædia என்ற இரு சொற்களின் கூட்டுதான். ஆனால், விக்கிப்பீடியா என்ற பெயர் விக்கிமீடியா நிறுவனத்தின் பதிவுபெற்ற பெயராக இருக்கிறது. எனவேதான் தமிழிலும் அதையே பின்பற்றிவருகிறோம், இல்லையெனில் விக்கிக் களஞ்சியம் என்றோ, தொகுதகு களஞ்சியம் என்றோ இருந்திருக்கக் கூடும்.   (Wikipedia® is a registered trademark of the Wikimedia Foundation, Inc., a non-profit organization. → இச்செய்தி ஆங்கில விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தின் அடிக்குறிப்பில் இருந்து எடுக்கப்பட்டது. ® என்ற குறியீட்டின் இருப்பிடத்தைப் பார்க்கவும்.) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:32, 11 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

3).செய்யப்பட வேண்டிய திருத்தங்கள்

1. “விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்” என்பதை நடுவிற்குக் கொண்டு வரலாம். மேலும் இதை மாற்ற விரும்பினால் “விக்கிமீடியாவின் சகோதரத் திட்டங்கள்” எனக் குறிப்பிடலாம்.
 N முடிக்கப்படவில்லை நடுவில் வரமாட்டேன் என்கிறது. வரியிசைவு (line alignment) மையம் (center) என்று கொடுத்தும் அப்படியேதான் இருக்கிறது. மேலும் இங்கு பார்க்கவும். ஆங்கில வார்ப்புரு . சகோதரத் திட்டங்கள் என்பதற்கு மேற்கண்ட காரணத்தைப் பார்க்கவும். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:32, 11 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
2. வணிக நோக்கமற்ற விக்கிமீடியா அமைப்பால் இந்த விக்கிப்பீடியா வழங்கப்படுகிறது. இந்த அமைப்பு கீழ்க்காணும் பல கட்டற்ற பன்மொழித் திட்டங்களையும் வழங்குகிறது.
இந்த விக்கிப்பீடியா - சரியான பயன்பாடாகத் தெரியவில்லை. இருப்பது அப்படியே விடப்படுகிறது. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:32, 11 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
3. விக்சனரி - விக்சனரி, விக்கிமூலம் - விக்கி மூலம், விக்கிநூல்கள் - விக்கி நூல்கள், விக்கிபொது - விக்கி பொது, விக்கிசெய்தி - விக்கி செய்திகள், விக்கிமேற்கோள் - விக்கி மேற்கோள்கள், விக்கியினங்கள் - விக்கி இனங்கள், விக்கிப்பல்கலைக்கழகம் - விக்கி பல்கலைக்கழகம், மேல்-விக்கி - மேல்-விக்கி என்று பிரித்து சரியாக இருக்க வேண்டும்.
விக்கிமூலம் தான். பிரிக்கக் கூடாது. (விக்கிப்பீடியா போல; ஆங்கிலத்தில் Wikisource தான், Wiki Source இல்லை.) இதே காரணம்தான் விக்கிநூல்களுக்கும் விக்கிமீடியா பொதுவிற்கும் விக்கிசெய்திகளுக்கும். மேலும், (Wikiquote is run by the non-profit Wikimedia Foundation, which operates several other multilingual and free-content projects:) என்றுள்ளதே தவிர Wikiquotes என்று பன்மையில் இல்லை. எனவே விக்கிமேற்கோள் என்பதே சரியானது. விக்கியினங்கள் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் ஏற்றதாக உள்ளது. விக்கி பல்கலைக்கழகம் என்று பழைய வார்ப்புருவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒற்று மட்டுமே இங்கு சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், அத்திட்டம் தமிழில் இல்லை. பெயர் வழிமாற்று மட்டுமே!   --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:32, 11 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
4.ஒவ்வொரு திட்டத்தின் கீழுள்ள கறுப்பு நிறத்திலான சொற்கள் சிறிய எழுத்துக்களாக இருக்கலாம்.
மேலே கூறப்பட்ட காரணமே இங்கும். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:32, 11 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

இந்த வார்ப்புருவிற்கு ரவி குறிப்பிட்டிருப்பது போல் கருத்து கேட்கலாம். ஆதரவு, எதிர்ப்பு போன்ற வாக்கெடுப்பு தேவையில்லை. மேலும் புதிய வார்ப்புருவாக இல்லாமல், பழைய வார்ப்புருவில் வரலாறு மாறாமல் திருத்தம்தான் செய்யப்பட வேண்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:31, 9 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

மேலே விளக்கம் தரப்பட்டுள்ளது. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:32, 11 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

4)தேனி.எம்.சுப்பிரமணி தெரிவித்துள்ள கருத்துகளோடு முற்றிலும் உடன்படுகிறேன். அப்பரிந்துரைகளின்படி திருத்தங்கள் செய்வது சிறப்பு. மேலதிகமாக ஒரு பரிந்துரையை முன்வைக்கிறேன். Wiki Commons என்று சுருக்கமாகக் குறிப்பிடுவது Wikimedia Commons என்பதையே. தமிழில் "விக்கி பொது" என்பதில் "ஊடகம்" மறைந்துவிடுகிறது. "பொதுவான விக்கி" என்னும் பொருள் தங்கிவிடுகிறது. எனவே Wikimedia Commons என்பதைத் தமிழில் "விக்கி ஊடகம்" என்றோ "விக்கி ஊடகக் கிடங்கு" என்றோ பெயர்த்தால் நன்றாக இருக்குமோ என்று எண்ணுகிறேன். மற்றுமொரு கருத்து: "விக்கிமீடியாவின் சகோதரத் திட்டங்கள்" என்பதற்குப் பதில் "பிற விக்கி ஊடகத் திட்டங்கள்" என்று தமிழாக்கம் செய்யலாம். "சகோதரத் திட்டம், சகோதரித் திட்டம்" என்று ஆங்கில, செருமானிய மொழிகளில் இருந்தாலும், எசுப்பானியம், இத்தாலியம், போர்த்துகீசியம் போன்ற மொழிகளில் "பிற" என்னும் அடைமொழியே உள்ளது. அதுவே தமிழ் வழக்கப்படி பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து. --பவுல்-Paul 00:40, 10 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவைப் போன்று Wikimedia Commons என்ற பெயர் பதிவு பெற்றதன்று. எனவே, மொழிபெயர்க்க இசைகிறேன். விக்கிமீடியா பொது எனலாம். பல மொழிகளிலும் பொது, மையம் என்று பொருள்படும் பெயர்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. கிரேக்கத்திற்கான கூகுள் மொழிபெயர்ப்பு எனவே, தமிழில் விக்கிமீடியா ஊடகக்கிடங்கு என்றோ, விக்கிமீடியா ஊடகநடுவம் என்றோ விக்கிமீடியா பொது என்றோ விக்கிமீடியா பொதுமம் (எனக்கு உடன்பாடற்ற ஒன்று), விக்கிமீடியா காமன்ஸ் (சிக்கலே இல்லை!) என்றெல்லாம் கூறலாம். எனது பரிந்துரை எப்போதுமே விக்கிமீடியா பொது என்பதற்கே. ஏனெனில், சுருக்கமான எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் பெயர். (விக்கிமீடியா பொது என்றுதான் இப்போது உள்ளது.) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:32, 11 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

5)பவுல் கூறிய பரிந்துரைகளை நானும் முன்மொழிகிறேன்.அனைத்து விக்கித்திட்ட முதற்பக்கத்திலும் ஒரே மாதிரியான இம்மாற்றங்கள் கொண்டு வரப் படவேண்டும்.ஊடகங்கள் குறித்த Wikimedia Commons கொள்கைகள் மிகுந்த ஆலோசனைக்குப் பிறகு, அனைத்துலகச் சட்டங்களை பின்பற்றி உருவாக்கப் படுபவை. அங்கு நாம் ஊடகங்களைப் பதிவேற்றுவதால், நாமும் அதற்கு பங்களிப்பு செய்யும் நிலை உருவாகும். மேலும் பலமொழிவிக்கித்திட்டங்களிலும் தெரிய வழிவகுக்கும். இவற்றினைக் கருத்தில் கொண்டு, விக்கி ஊடக நடுவம் எனலாம். விக்கி ஊடகம் என்பதிலும் உடன்பாடே.05:42, 10 ஆகத்து 2011 (UTC)உழவன்+உரை..

மேலே விளக்கம் கூறப்பட்டுள்ளது. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:32, 11 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

6)பல கருத்துகளைக் கூறியுள்ளேன். பயனர்களின் மேலதிக மறுமொழிகளையும், ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன். (ஆலோசனை: அது என்றுமே என்னை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. -பெயரற்ற கவிஞராக இருக்கக்கூடும்.   ) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:32, 11 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

7) பயனர்:Nan, பயனர்:Kanags ஆகியோரின் வேண்டுகோளைத் தொடர்ந்து, முதல்வரியிலுள்ள கட்டற்ற (Free) எனும் சொல்லை நீக்கிவிடுகிறேன். ஏனையவற்றில் அப்படியே இருக்கட்டும். ஏனெனில் அவையும் கட்டற்ற திட்டங்கள் என்று தெரியவேண்டியது அவசியம். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 10:34, 16 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

8)  Y ஆயிற்று எந்தவித எதிர்ப்பும் இல்லாத காரணத்தால், வார்ப்புருவை மாற்றுகிறேன். பழைய வார்ப்புருவை நீக்காமல், புதியதை அதில் பிரதியிடுகிறேன். இங்கு கருத்துகூறி தங்கள் விருப்பங்களையும் ஆலோசனைகளையும் கூறிய அனைவருக்கும் என் நன்றி.   --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 11:55, 16 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

நன்றாக உள்ளது.--Kanags \உரையாடுக 12:07, 16 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
நன்றி --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:49, 16 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கி தொடுப்புகள் மூலம் விக்கிப்பீடியா:குறுந்தொடுப்பு

தொகு

இப்பொழுது ஆங்கில விக்கிபக்கங்களின் பெயரை கொடுத்து தமிழ் விக்கிக்கு வரலாம். http://tawp.in/en/Chennai சென்னை பக்கத்திற்கு வழிமாற்றும். ஸ்ரீகாந்த் 18:29, 11 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

பக்கத்தின் குறுந்தொடுப்பு பகுதியில்,ஆங்கில விக்கிபக்கம் இடைவிக்கி இணைப்புகளில் இருக்கும் போது இந்த ஆங்கில வழி குறுந்தொடுப்பு வரும்(சற்று நீளமாக இருந்தால் கூட),(எ.கா : சச்சின்_டெண்டுல்கர் -> http://tawp.in/en/Sachin_Tendulkar என வரும்),இவை இல்லாத பக்கங்களில் பழைய முறையில் 16 படி வார்த்தை குறுந்தொடுப்பாக வரும். ஸ்ரீகாந்த் 16:06, 12 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
 
சிறீக்காந்த், பயனுள்ள வசதி. ஆனால், இது முன்பு இருந்த குறு முகவரிகளுக்குத் துணையாகவே இருத்தல் நல்லது. ஏனெனில்:
  • டுவிட்டர் போன்ற சேவைகளில் குறு முகவரிகள் இயன்ற அளவு சிறிதாகவே இருப்பது நல்லது.
  • பெரிய தலைப்புடைய கட்டுரைகளில் ஆங்கிலத் தலைப்பில் உள்ள குறுமுகவரிகளும் நீளமாகவே இருப்பதால் தலைப்புப் பகுதி இரண்டு வரிகளுக்கு நீள்வது நன்றாக இல்லை.
  • தளத்தின் பார்வையாளர்களில் சிறு பகுதியனரே இவ்வசதியைப் பயன்படுத்துவர். எனவே, இடைமுகப்பில் இதற்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் தர வேண்டுமா என்று சிந்திக்கிறேன். பக்கத்தின் மேல் உள்ள drop down தெரிவுகளில் ஒன்றாகவோ இடப்பக்கம் கருவிப் பெட்டிகளில் உள்ள ஓர் இணைப்பாகவோ தரலாம் என்று நினைக்கிறேன். --இரவி 20:37, 12 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

: நன்றி ரவி, இப்பொழுது இரண்டு தொடுப்புகளும் compacta வரும்வாரு செய்திருக்கிறேன். ஸ்ரீகாந்த் 07:39, 13 ஆகத்து 2011 (UTC) பழைய நிலைக்கு மீள்விக்கப்பட்டது. ஸ்ரீகாந்த் 18:11, 13 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

  • இப்பொழுது சரி செய்யப்பட்ட்டது.மலையாளம் விக்கியர் பயன்படுத்தும் வடிவத்தை பயன்படுத்தியுள்ளேன். பி.கு :- ஹாட்கேட் பயனர்களுக்கு பழைய முறையில் தான் வரும், நுட்ப வழு. ஸ்ரீகாந்த் 16:29, 27 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

விக்கிமீடியா அறிவிப்பு கட்டங்களாக உள்ளது

தொகு
 
சிகப்புக் குறியிடப்பட்டுள்ளது

தமிழ் விக்கிப்பீடியாவின் மேல் பகுதியில் இடப்பட்டுள்ள விக்கிமீடியா அறிவிப்பு முழுவதும் கட்டங்களாகத் தெரிகிறதே... படத்தில் சிகப்புக் குறியிடப்பட்டுள்ளது. இந்தக் குறைபாட்டிற்குக் காரணம் என்னவாக இருக்கும்? என் கணினியில் மட்டுமா? இல்லை... அனைத்துக் கணினியிலுமா? --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 11:21, 16 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

இல்லை. எனக்குச் சரியாகத்தான் வருகிறது. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 11:56, 16 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
முதலில் கட்டங்களாகத்தான் வந்தது. இந்தச் செய்தியை ஆலமரத்தடியில் இணைத்தேன் அதற்குள்ளாகவே சரியாகி விட்டது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:57, 16 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

விக்கிபீடியா பற்றிய செய்தி

தொகு

ஒரு இணையத்தில் விக்கிபீடியா பற்றி இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "விக்கிப் பீடியாவில் தொல்காப்பியம் சமற்கிருதத்திலிருந்து பல சொற்களைக் கையாண்டுள்ளது என்ற பொய்யைப் போட்டு வைத்துள்ளான்." உண்மையிலேயே தமிழ் விக்கிபீடியாவில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை, என்றாலும் சான்று இல்லாமல் குறிப்பிட்ட கட்டுரையில் உள்ளவற்றை நீக்கல் நன்று எனப் பரிந்துரைகின்றேன், மேலும் ஆங்கில விக்கிபீடியாவை en:Tolkāppiyam ஒருதரம் நோக்கித திருத்தியமைக்க யாரேனும் முன்வந்தால் நன்று. ஆ,வியில் ஆதாரம் என்று குறிக்கப்பட்டது ஒரு சரியான ஆதாரம் அல்ல. அங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் தேவையானவை எனினும், விக்கிபீடியாவை பற்றிக் குறிப்பிட்டவர் அந்தக் குறிப்பிட்ட நபரா அல்லது அந்த இணையதளமா (திரிக்கப்பட்ட செய்தியா?) என்பதை அறிய முடியாதா? தொடுப்பு: தமிழ்வின் --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 11:13, 17 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

இது தமிழ்வின் திரித்த செய்தியாக இராது என்றே நம்புகிறேன். ஆங்கில விக்கியில் உள்ள பகுதி: Opinions on the influence of Sanskrit.--Kanags \உரையாடுக 23:14, 17 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

கோப்புகள் இடம்மாற்றல்

தொகு

இலங்கை எழுத்தாளர்கள் என்ற பகுப்பிலுள்ள ந. சுசீந்திரன்,கலாமோகன் ஆகியவற்றை நாடுகள் வாரியான பகுப்பில் இடம்மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.S.kuneswaran 12:11, 18 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

”புலம்பெயர் எழுத்தாளர்கள்” என்ற பகுப்பிற்கு இவ்விரு கட்டுரைகளையும் மாற்றியுள்ளேன். அப்பகுப்பு இன்னும் நாடுவாரியாகப் பிரிக்கப்படவில்லையென்பதால், “செருமானியத் தமிழர்”, “பிரான்சியத் தமிழர்” என்ற கூடுதல் பகுப்புகளைச் சேர்த்துள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 12:24, 18 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

நன்றிS.kuneswaran 02:33, 19 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

Fundraiser 2011 translation

தொகு

Hi! I am Jon Harald Søby, and I work for the Wikimedia Foundation during the 2011 fundraiser. I am looking for people who can help coordinating the translations into Tamil for this year's fundraiser. The coordinator task is to help find translators and quality checkers, and make sure the translations are done in time. If you want to help out with coordinating, translating or quality checking, add your name to this list or send me an e-mail at jsoby@wikimedia.org. Jsoby 17:43, 17 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

மலாயாப் பல்கலையில் கற்றல் கற்பித்தல் மாநாட்டில் விக்கி

தொகு

கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகள் - பன்னாட்டு மாநாடு விக்கியைப் பற்றி மூன்று நான்குபேர் இங்கு உரையாடி இருப்பார்கள் போல் இருக்கிறது. கல்வியில் விக்கி ஒரு இடம் பெற்று வருவதை இங்கு அவதானிக்கலம். இதனால் சவால்களும் உள்ளன. --Natkeeran 02:01, 22 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

செல்வா பட்டறைகள்/அறிமுகங்கள் நடத்தி வருகிறார் என நினைக்கிறேன். இங்கும் விக்சனரியிலும் அவரது வழிகாட்டுதலின் பெயரில் நிறைய புதிய பயனர்கள் பங்களிக்கத் தொடங்கியுள்ளார்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 04:04, 23 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

புன்னியாமீனின் 4000 கட்டுரைகள்

தொகு

விக்கிப்பீடியாவிற் பங்களிக்கத் தொடங்கி ஓராண்டுக்கும் குறைவான காலப் பகுதியினுள் இதுவரை நான்காயிரம் கட்டுரைகளை நிறைவு செய்துள்ள புன்னியாமீனைப் பாராட்டுகிறேன். இதே கதியிற் போனால் இன்னும் எத்தனை ஆயிரம் கட்டுரைகளை உருவாக்கும் தன்மை வாய்ந்த அவர் விக்கியில் மென்மேலும் மிகச் சிறப்பாகப் பங்களிக்க வேண்டும் என்பது என் அவா. அவரது சேவையைப் பாராட்டி மனதார வாழ்த்துகிறேன் நான்.--பாஹிம் 19:54, 22 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
  விருப்பம் --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 15:58, 23 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

நன்றி பாஹிம்--P.M.Puniyameen 19:57, 22 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

4000 கட்டுரைகளைத் தொடங்கி தமிழ் விக்கிப்பீடியாவிற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்த புன்னியாமீனுக்கு வாழ்த்துகள் பல.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:00, 23 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

நன்றி தேனி--P.M.Puniyameen 09:27, 23 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

புன்னியாமீன், உங்கள் ஆர்வமும் ஊக்கமும் மிகக்குறுகிய காலத்தில் 4000 கட்டுரைகளைத் தொடக்கி வைக்க வழி வகுத்துள்ளது. வாழ்த்துக்கள். --- மயூரநாதன் 15:36, 23 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி ஐயா--P.M.Puniyameen 15:57, 23 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

தேனி, மயூரநாதன், +1 --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 15:58, 23 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

நன்றி சூரி--P.M.Puniyameen 01:19, 24 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிபீடியாவிற்கு தொடர்ச்சியாக பங்களிப்பு செய்கின்ற உங்களின் அதீத ஆர்வம் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன். பாராட்டுகள். அன்புத் தமிழில் அகிலமெலாம் அழகு சேர்ப்போம். நன்றி. --Tharique 03:54, 24 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

நன்றி தாரிக் அஸீஸ்--P.M.Puniyameen 04:16, 24 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

ஆன்மிகம், ஆன்மீகம் எது சரி?

தொகு

ஆன்மிகம், ஆன்மீகம் இந்த இரண்டு சொற்களில் எது மிகச் சரியானது?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:11, 24 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

ஆன்மிகம் சரியானது.--Kanags \உரையாடுக 03:07, 24 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
இந்தக் கேள்விக்கான விடையை அறிந்து கொள்ளலாமென சில தேடல்களைச் செய்தேன். தேடிக்கிடைத்த விடயங்கள் ஆன்மிகமா அல்லது ஆன்மீகமா சரியானது என்பதற்கு நேரடியான பதிலைத்தரவில்லை என்பதையே நான் உணர்கிறேன். நான் தேடிப் பெற்றுக்கொண்ட விடயங்களை பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.
  • ஆங்கில - தமிழ் அகராதிகளில் பார்த்தேன். அதில் ஒன்றில் ஆன்மிகம் என்றும் இன்னொன்றில் ஆன்மீகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றிற்கான இணைப்புகள்
  • ஆன்மீகம் எனச் சொல்லும் அகராதி - கூகிள் புக்ஸ் தளத்திலிருந்து - திரைப்படிமம் - http://i.imgur.com/W3ZSV.png
  • ஆன்மிகம் எனச் சொல்லும் அகராதி - கூகிள் புக்ஸ் தளத்திலிருந்து - திரைப்படிமம் - http://i.imgur.com/9427O.png
  • தமிழ் - ஆங்கில அகராதிகளில் பார்த்தேன். அவற்றுள் பலவற்றில் ஆன்மிகம் அல்லது ஆன்மீகம் என்ற சொல்லையே காணக்கிடைக்கவில்லை. அவற்றுள் ஆன்மிகம் எனச் சொல்லிய ஒரு அகராதி அகப்பட்டது.
அதற்கான இணைப்பு
  • ஆன்மிகம் எனச் சொல்லும் அகராதி - கூகிள் புக்ஸ் தளத்திலிருந்து - திரைப்படிமம் - http://i.imgur.com/gvmmH.png
  • இதேவேளை, தமிழ் விக்கிபீடியாவில் ஆன்மீகம் என்ற தலைப்பிலேயே கட்டுரை இடம் பெறுகிறது. அத்தோடு, ஆன்மிகம் எனத்தேடினால், அந்தத் தேடல் கூட ஆன்மீகம் என்ற கட்டுரைக்கு வழிநடத்திச் செல்கிறது.
  • அத்தோடு, தமிழ் விக்சனரியில் ஆன்மீகம் என்ற சொல்லுக்கே அர்த்தங்கள் சொல்லப்பட்டுள்ளன ஆன்மீகம் - தமிழ் விக்சனரி & Spirituality - தமிழ் விக்சனரி. ஆனாலும், ஆன்மிகவாதி என்றவாறு ஒரு சொல் பற்றிய விளக்கமும் காணப்படுகிறது. அதில் ஆன்மிகம் + வாதி சேர்ந்து ஆன்மிகவாதி உருவாக்கப்படுதல் பற்றிய விளக்கமும் காணப்படுகிறது.
  • கூகிள் தேடல் என்ன சொல்கிறது எனப் பார்த்தால், ஆன்மீகம் என்ற தேடலுக்கு சுமார் 1,310,000 பெறுபேறுகளை வெறும் 0.14 செக்கன்களில் வழங்கியது. இதேவேளை, ஆன்மிகம் என்ற தேடலுக்கு சுமார் 3,280,000 பெறுபேறுகளை 0.15 செக்கன்களில் வழங்கியது.
  • கூகிள் மொழிபெயர்ப்புத் தளத்தில் Spirituality என்ற சொல்லானது, ஆன்மீகம் என்றவாறே மொழிபெயர்க்கப்படுகிறது.
நான் எழுத்துக்களில் பொதுவாக ஆன்மீகம் என்றே பயன்படுத்தி வந்துள்ளேன். ஆனாலும், ஆன்மிகம், ஆன்மீகம் என்ற இந்த இரு சொற்களிலும் எது மிகவும் சரியானது அல்லது இரண்டும் சரியானது தானா என்பதை அறிய ஆவலாயிருக்கிறது. தேடிப்பெற்றதை பகிர்ந்து கொண்டேன். நன்றி. --Tharique 05:04, 24 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

Fabricius அகரமுதலியில் ஆன்மிகம் [[1]] என்று உள்ளது. --குறும்பன் 19:50, 28 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

ஆன்மிகமா ஆன்மீகமா, அல்லது இரண்டுமே சரியா?

தொகு

மேலே Kanags, Tharique, குறும்பன் தெரிவித்த கருத்துகளோடு என் கருத்தையும் முன்வைக்கிறேன்.

ஆன்மா, தெய்வம், உலகம் (லோகம்), சத்வம் (சத்துவம்) போன்ற சொற்கள் இந்திய தத்துவ ஞானத்தைச் சார்ந்த பொருள் கொண்டவை. இச்சொற்களிலிருந்து உரிச்சொல் வடிவங்கள் பெறப்படுவதுண்டு. எ.டு: ஆன்மா சார்ந்த என்பது "ஆன்மிக" என்று வரும். தெய்வம் சார்ந்த என்பது "தெய்விக" என்று வரும்; உலகம் (லோகம்) - லௌகிக (இலௌகிக); சத்வம் - சாத்விக, என்றவாறு. மேலும், "பௌதிக", "ஆத்மிக" போன்ற சொற்களையும் காண்க.

அகரமுதலிகளுள் சென்னைப் பேரகராதி (Madras Lexicon) வடமொழி மூலங்களைப் பொதுவாகச் சுட்டிக்காட்டும். எனவே, Tharique போல நானும் சென்னைப் பேரகராதியை ஆய்வுசெய்தேன். கீழ்வருவனவற்றைச் சொடுக்கிப் பாருங்கள்: ஆத்மிகம்; இலௌகிக;

ஆனால் "தெய்வீகம்" என்னும் நெடில் வடிவம் உள்ளது. காண்க: தெய்வீகம்.

"தெய்வீகம்" சுட்டும்போது "தெய்விகம்" காண்க என்று வருகிறது. இங்கே: தெய்விகம்.

துன்பம் எழுகின்ற மூலங்கள் மூன்று. அவை: தெய்வீகம், ஆன்மீகம், இலௌகீகம் (நெடில் வடிவம்) என்கிறது வின்சுலோ அகராதி. இங்கே: தெய்வீகம், ஆன்மீகம், இலௌகீகம் - வின்சுலோ.

கூகுள் மொழிபெயர்ப்புக் கருவியையும் பயன்படுத்தினேன். ஆங்கிலத்திலிருந்து இந்தி எவ்வாறு வருகிறது என்று பார்த்ததில் आध्यात्मिक (ஆத்யாத்மிக) என்று குறில் வடிவத்தில் "spiritual" மொழிபெயர்ப்பாகிறது. Spirituality आध्यात्मिकता (ஆத்யாத்மிகதா) என வருகிறது

இந்த ஆய்வுக்குப் பின் என் முடிவு இது: வடமொழியை நெருங்கி அமையும் விதத்தில் இச்சொற்களைப் பயன்படுத்தினால் குறில்தான் பொருத்தமாகத் தெரிகிறது. ஆயினும், தமிழில் பேச்சிலும் எழுத்திலும் நெடில் வடிவங்களும் உளதால் அவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை.--பவுல்-Paul 01:32, 29 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]