விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு79
விக்கிபகுப்பு உருவாக்கம்
தொகுபுதிய விக்கி பகுப்பொன்றை உருவாக்கி கட்டுரைகளை இடுவது எவ்வாறு?--பிரஷாந் (பேச்சு) 07:34, 25 சூலை 2012 (UTC)
- கட்டுரையில் [[பகுப்பு:பகுப்பின் பெயர்]] என்று இடுங்கள். சிகப்பு இணைப்பு வரும். அதனைச் சொடுக்கிப் புதிய பகுப்புப் பக்கத்தை உருவாக்கினால், கட்டுரை தானாக அப்பகுப்பில் சேர்ந்து விடும். இது போன்ற ஐயங்களை ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கலாமே?--இரவி (பேச்சு) 07:36, 25 சூலை 2012 (UTC)
பயனர் பேச்சுப்பக்கம்
தொகுமதனாகரனுக்கு பதக்கம் கொடுக்கும் போது அது தோல்வியில் முடிந்தது. அதற்குக் காரணம் பேச்சுப்பக்கம் அகலம் சிறுத்துள்ளது என நினைக்கிறேன். அதுதான் காரணம் என்றால் அவர்களுக்கு பேச்சுப்பக்கத்தை வழக்கமானதாக வைத்துக்கொள்ள வேண்டுகிறேன். இதனால் பரனேற்றுதல் அதிகமாகி பக்கங்களும் வீணடைகின்றன. பக்க வடிவ மாற்றம் பயனர் பக்கங்களில் மட்டும் மேற்கொள்ளலாமே. இதைப்போல் இன்னும் சில பேர் பயனர் பேச்சுப்பக்கத்தை வைத்துளதால் இவ்வேண்டுகோள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:46, 25 சூலை 2012 (UTC)
- பயர்பாக்சு உலாவி மூலம் ஒரு சோதனைப் பதக்கம் சேர்த்துள்ளேன். internet explorer தவிர பிற உலாவிகளை முயன்று பார்க்கலாம். மற்றபடி, பேச்சுப் பக்கம் இவ்வாறு இருப்பதால் நாம் சேர்க்கும் கருத்துகள் அடிப்பகுதியில் உள்ள படத்துடன் சேர்ந்து கொள்வதை ஒரு இடையூறே. எனவே, பேச்சுப் பக்கங்களில் இது போன்ற அழகூட்டலைத் தவிர்க்கலாம் என்றே நினைக்கிறேன்--இரவி (பேச்சு) 08:11, 25 சூலை 2012 (UTC)
பேச்சுப் பக்கத்தை வழமையான வடிவமைப்புக்குக் கொண்டு வந்துள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 10:56, 25 சூலை 2012 (UTC)
IPV6
தொகுதமிழ் விக்கிப்பீடியாவின் முதல் இ.நெறி ப6 தொகுப்பு இதுவே என நினைக்கிறேன் :). அமெரிக்காவின் University of Minnesotaவிலிருந்து.. மேலும் இது பற்றிய விவரங்களுக்கு en:Wikipedia:WikiProject IPv6 Readiness & m:IPv6 initiative--சண்முகம்ப7 (பேச்சு) 17:32, 25 சூலை 2012 (UTC)
முதற்பக்கம்-உங்களுக்குத் தெரியுமா?
தொகுஉங்களுக்குத் தெரியுமா? என்ற முதற்பக்கப்பகுதியில், ஆர்மடில்லோ உள்ளது. அதுபற்றி இருக்கும் சிலவரிகளை விட, கீழ்கண்ட வரிகள் கருத்தாழம் மிக்கவை.எனக் கருதுகிறேன்.
//அதனால் தொழு நோயைப் பற்றிய ஆய்வுகளில் நல்லங்கு(Armadillo)களைப் பயன்படுத்துகின்றனர். இவ்விலங்குகளைக் கையாள்வதன்மூலமோ, இவற்றை உண்பதாலோ தொழு நோய் கண்ட விலங்கிடமிருந்து நோய் பற்றிக் கொள்ள வாய்ப்புண்டு.//
அமெரிக்க பெருங்கண்டத்தில் இருக்கும் ஒரு உயிரினத்தைப் பற்றி, தமிழ்நாட்டவர் ஏன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான விடயம் இதிலுள்ளது.அந்த அடிப்படையிலேயே, அக்கட்டுரையை எழுதினேன். இப்பொழுதுள்ள இனப்பெருக்கக் குறிப்புகளால், படிப்பவருக்கு ஒரு பலன் மிகமிக குறைவு. இதுபோல, முதற்பக்கத்தில் காட்சி படுத்தும் போது, அந்தந்த கட்டுரையின் உரையாடற் பகுதிகளில் முடிவெடுத்தால், சிறப்பாக நமது ஆக்கத்தை மேலோங்கச் செய்யலாம். --த♥ உழவன் +உரை.. 06:52, 26 சூலை 2012 (UTC)
நீங்கள் கூறுவது விளங்கவில்லை?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:57, 26 சூலை 2012 (UTC)
- உரையாடலை விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/சூலை 25, 2012 பக்கத்தில் தொடர்ந்துள்ளேன்--இரவி (பேச்சு) 07:03, 26 சூலை 2012 (UTC)
<.references group=note> வசதியில் தமிழ்
தொகு<.references group=note> என்பதனை பயன்படுத்தும் போது கட்டுரைகளில்(எ.கா - ஆர்மடில்லோ, கறையான்,..), note என்ற குறிப்பு வருகிறது.அதனை கு அல்லது குறிப்பு என வருமாறு அமைத்தல் சிறப்பாகும். இது குறித்த உங்கள் எண்ணங்களை அறிய ஆவல்--த♥ உழவன் +உரை.. 16:48, 26 சூலை 2012 (UTC)
- பார்க்க நல்லங்கு--சண்முகம்ப7 (பேச்சு) 17:25, 26 சூலை 2012 (UTC)
- ஓ..மிக்கநன்றி.முயற்சிக்காமல் எழுதி விட்டேன்.--த♥ உழவன் +உரை.. 23:13, 26 சூலை 2012 (UTC)
<references/> மற்றும் {{Reflist}} இரண்டுக்குமான வேறுபாடு என்ன?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:21, 27 சூலை 2012 (UTC)
- இதுபற்றி விக்கிப்பீடியா:ஒத்தாசைப்_பக்கம்#காவடியாட்டம் கூறப்பட்டுள்ளது.--த♥ உழவன் +உரை.. 04:05, 27 சூலை 2012 (UTC)
தேடி கண்டுபிடித்து மாற்றவும் ஆழி
தொகு- இந்த வசதியில், ஒரே ஒரு ஆழி(button) மட்டும், ஆங்கிலத்தில்(replace) உள்ளது. அதனைத் தமிழில், மாற்றுக என மாற்றலாமா?--த♥ உழவன் +உரை.. 05:27, 27 சூலை 2012 (UTC)
- ஆயிற்று..betawiki:MediaWiki:Wikieditor-toolbar-tool-replace-button-replace/ta--சண்முகம்ப7 (பேச்சு) 06:07, 27 சூலை 2012 (UTC)
- இனி, இது போன்ற வேண்டுகோள்களை விக்கிப்பீடியா:இடைமுகப்பு மொழிபெயர்ப்பு/வேண்டுகோள்கள் பக்கத்தில் இட வேண்டுகிறேன்--இரவி (பேச்சு) 06:18, 27 சூலை 2012 (UTC)
- 'replace' என்ற ஆழி(button) 'மாற்றுக' என இற்றைபடுத்தப்பட்டு விட்டது. --த♥ உழவன் +உரை.. 04:47, 6 ஆகத்து 2012 (UTC)
கட்டுரைப் பேச்சுப் பக்கம்
தொகுஒரு கட்டுரையை உருவாக்கும் முன்னரே, அதற்கான பேச்சுப் பக்கத்தை உருவாக்க முடியுமா? உதாரணமாக, சிற்றூர்களில் அறியப்படும் சம்பிரதாயம் பற்றியோ, நிகழ்வுகள் பற்றியோ கட்டுரை உருவாக்கப்பட வேண்டும். ஆனால், அது பற்றிய தகவல் விக்கிக்கு ஏற்றவாறு இல்லை. கட்டுரை பற்றிய தகவலும் ஆதாரங்களுடன் இல்லை. எனவே, பேச்சுப் பக்கத்தில் கலந்தாலோசித்து செய்ய முடியுமா? --தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:32, 28 சூலை 2012 (UTC)
- ஆமாம், பேச்சுப் பக்கத்தை உருவாக்கி பின்னர் கட்டுரையை எழுதலாம்.--Kanags \உரையாடுக 05:14, 29 சூலை 2012 (UTC)
புதுப் பக்கம்
தொகுபயனர்கள் புதுக்கட்டுரை உருவாக்கப் பரிந்துரைக்கும் தலைப்புகளை சேமித்து வைக்க தனிப் பக்கம் உள்ளதா? அப்பக்கமிருப்பின் தலைப்பு வாரியாக தனிப் பிரிவுகளாகப் பிரித்து வைத்தால், ஆர்வமுள்ள பயனர்கள் உருவாக்கப் பயனுள்ளதாக இருக்குமே? (முக்கியக் கட்டுரைகள் பக்கத்தை நான் கேட்கவில்லை, மேற்கூறியவாறு உள்ளதா எனக் கேட்கின்றேன்.). நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:26, 28 சூலை 2012 (UTC)
- விக்கிப்பீடியா:கோரப்படும் கட்டுரைகள் எனும் பக்கமுண்டு. --மதனாகரன் (பேச்சு) 04:18, 29 சூலை 2012 (UTC)
புதுப் பயனர் உதவி
தொகுபுதுப்பயனர்கள் விதிகளை தாங்களாவே படித்து அறிவது குறைவே. எனவே, புதுப்பயனர் mode என்று உருவாக்கி புதுப் பயனர்களுக்கு இதை விருப்பத் தேர்வாக அமைக்கலாம். அவ்வப்போது, இது புதுப்பயனர்களுக்கான உதவித் துணுக்குகளை வழங்கும். இதை தானியங்கி உதவியுடன் செய்யலாம். அல்லது, ””உதவி வார்ப்புருக்களை”” உருவாக்கி, அதனை பயனர் பக்கத்தில் இட்டால், (இன்றைய உதவித் துணுக்கு என்ற பெயரில்) அவர்கள் புகுபதிகை செய்யும்போது ஒவ்வொரு முறையும் இவ்வார்ப்புரு பக்கத்திற்கு செல்வர். பிற அனுபவமுள்ள பயனர்கள்/ நிர்வாகிகள் புதுப் பயனர்களின் தேவைக்கேற்ப துணுக்குகளை மாற்றிக் கொண்டே இருக்கலாம். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு)
தொகுத்தல் சாளரம்:பட ஆழி
தொகுஅனைத்துத் தமிழ் விக்கித்திட்டங்களிலும் பயனாகும், தற்பொழுதுள்ள தொகுத்தல் சாளரத்தில், படத்தை இடப்பயன்படுத்தும் ஆழியை(button) அழுத்தினால், [.[படிமம்:மாதிரிப்படம்]] என்று மட்டுமே வருகிறது. மாற்றாக, [[கோப்பின்பெயர்|thumb|right|150px|படக்குறிப்புஎழுதுக]] அமைந்தால், பல திட்டங்களிலும் பயனாகும். இதனை நடைமுறைக்கு கொண்டு வர, எங்கு செயல்பட வேண்டும்.?--த♥ உழவன் +உரை.. 02:46, 29 சூலை 2012 (UTC)
- மொழிபெயர்ப்பு விக்கியிலேயே செய்ய வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 04:20, 29 சூலை 2012 (UTC)
- இங்கு [[படிமம்:மாதிரிப்படம்]] என்பதில் படிமம் தானாகவே பெயர்வெளியைப் பொறுத்து மாறக்கூடியது (translatewikiயில் மாற்ற இயலாது). மேலும் அடுத்துள்ள மாதிரிப்படம் என்பது மீடியாவிக்கி மென்பொருளுக்கு பொதுவானது, எனவே அதை [[கோப்பின்பெயர்|thumb|right|150px|படக்குறிப்புஎழுதுக]] மாற்ற வேண்டுமானால் ஆங்கிலத்திலும் மாற்ற வேண்டும், இல்லையெனில் பெரும்பாலும் தமிழில் மட்டும் மாற்றினால் இற்றைப்படுத்த மாட்டார்கள் (FUZZY எனக் குறித்து விடுவார்கள்). மேலும் இவ்வாறு மாற்றுவது மற்ற அனைத்து திட்டங்களிலும் (மீடியாவிக்கி பயன்படுத்தும் மற்ற வெளி வலைத்தளங்களுக்கும்) பொருந்துமா எனப் பார்க்க வேண்டும். மேலும் ஏற்கனவே உள்ள மொழிபெயர்ப்பும் தவறாக உள்ளது (மதிரிப்படம்.jpg என்றிருக்க வேண்டும்), அதற்கு ஒரு கோப்பும் (file:example.jpg போல) உருவாக்கி பொதுவில் மதிரிப்படம்.jpg என்று பதிவேற்ற வேண்டும்.--சண்முகம்ப7 (பேச்சு) 05:25, 29 சூலை 2012 (UTC)
- .jpg என்பது அனைத்துவகை ஊடகங்களுக்கும் பொருந்தாது அல்லவா?--த♥ உழவன் +உரை.. 07:47, 29 சூலை 2012 (UTC)
- பார்க்க betawiki:MediaWiki:Wikieditor-toolbar-tool-file-example/ta or MediaWiki:Wikieditor-toolbar-tool-file-example. படிமம்:Example.jpg இதுபோல காமன்சில் அனைத்து வகைக்கும் உருவாக்கலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 09:17, 29 சூலை 2012 (UTC)
முதற்பக்க கட்டுரைகளில் படிமம் தொடர்பாக
தொகுஇப்பகுதி முக்கியத்துவம் கருதி விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கக் கட்டுரைகள் பக்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. உரையாடலை அங்கு தொடரலாம். நன்றி.--Kanags \உரையாடுக 11:43, 29 சூலை 2012 (UTC)
- நன்றிங்க.கனகு!--த♥ உழவன் +உரை.. 11:54, 29 சூலை 2012 (UTC)
பழமைப்பட்ட கட்டுரைகள்
தொகுகாலாவதியான தகவல்களைக் கொண்டுள்ள கட்டுரைகளுக்கு ஏதேனும் பகுப்பு உள்ளதா? இல்லாவிடின் உருவாக்கலாம் அல்லவா? ( எ.கா: இலங்கை படைத்துறை : "கட்டளைத் தளபதி - Lt. Gen. சரத் பொன்சேகா" ) --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 15:52, 29 சூலை 2012 (UTC)
- {{update}} வார்ப்புரு இட்டுவிட்டால் இற்றைப் படுத்தப்படவேண்டிய கட்டுரைகள்- எனும் பகுப்பில் வந்து விடும். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 16:36, 29 சூலை 2012 (UTC)
- நன்றி. :) --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 17:13, 29 சூலை 2012 (UTC)
இற்றைப்படுத்தல்
தொகுவிக்கியின் சிறப்புப் பக்கங்கள் பலவற்றில் இற்றைப்படுத்தல் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. வேண்டிய பக்கங்கள் 2009 ஆம் ஆண்டில் கடைசியாக இற்றைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. ஏன் தொடர்ந்து இற்றைப்படுத்துவதில்லை.? மேலும் ஒரு சிறப்புப் பக்கமானது வெறும் 5000 தரவுகளை மட்டும் கொண்டுள்ளது. ஆகையால் பிறவற்றை சேமிக்க இடமிருக்காதே. அடிக்கடி இற்றைப்படுத்தலாமே. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:52, 30 சூலை 2012 (UTC) சிவப்புப் இணைப்புகளை உள்ள பக்கங்களை தேடுவது எப்படி என்ற கேள்வி எழுந்தது. விக்கிப்பீடியா:வேண்டிய பக்கங்கள் பக்கத்தில் இவ்விணைப்புகள் உள்ளன சரிதானே? மறூமொழி கூறவும். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:52, 30 சூலை 2012 (UTC)
- சிறப்புப் பக்கங்கள் தானாகவே இற்றைப்படுத்தப்படுவதனாலேயே இச்சிக்கல் தோன்றியுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 13:07, 30 சூலை 2012 (UTC)
சிக்கலா? புரியவில்லையே. நீங்கள் தானாக இற்றைப்படுத்தலைக் கூறுகிறீர்கள் என நினைக்கிறேன். இருப்பினும், ஒரே ஒரு முறை மட்டுமாவது இதை இயங்கச் செய்து பின்னர் முடக்கினால், இந்தாண்டு வரை இற்றைப்படுத்தப் பட்டிருக்குமே! -தமிழ்க்குரிசில் (பேச்சு)
குறுந்தொடுப்புகள்
தொகுகட்டுரைப் பக்கங்களுக்கான குறுந்தொடுப்புகளில் இன்று மாற்றம் தெரிகிறதே. சரியாக இயங்கவில்லையா?--Kanags \உரையாடுக 21:16, 30 சூலை 2012 (UTC)
- குறுந்தொடுப்பை விக்சனரியிலும் கொண்டு வர இயங்குகிறார் ஸ்ரீகாந்த் என்றே எண்ணுகிறேன். ஏனெனில், இதே போன்ற குறுந்தொடுப்புகள் இன்று முதன்முதலாக, அங்கும் தெரிகிறது. --த♥ உழவன் +உரை.. 02:07, 31 சூலை 2012 (UTC)
- குறுந்தொடுப்பை இப்போது விக்கிப்பீடியா தள முகவரியிலேயே enable செய்துள்ளார்கள். பார்க்க bugzilla:1450. இது அனைத்து தமிழ் விக்கித் திட்டங்களுக்கும் செயல்படுத்தப்பட்டுள்ளது--சண்முகம்ப7 (பேச்சு) 03:21, 31 சூலை 2012 (UTC)
- முன்னர் இருந்த குறுந்தொடுப்பு தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மட்டும் என்னுடைய வழங்கி மூலம் செயல்பட்டு வந்தது. இது நன்கு வேலை செய்திருந்தாலும் இது விக்கிமீடியா நிரல் மூலமாகவோ, வழங்கியிலோ இல்லாமல் இருந்ததால் இது பிற திட்டங்களுக்கு நீட்டிக்கப்படவில்லை.
- இப்பொழுது குறுந்தொடுப்பு வரும் இடம் சரியில்லை, வழு bugzilla:38863 பதிவு செய்துள்ளேன், விரைவில் சரிசெய்யப்படும். ஸ்ரீகாந்த் (பேச்சு) 04:52, 31 சூலை 2012 (UTC)
- சில கேள்விகள்
- அப்படி என்றால் பழைய குறுந்தொடுப்புகள் என்னானது?
- ஒரு தடவை ஸ்ரீகாந்த் இக்குறுந்தொடுப்புகள் அதிகாரப்பூர்வமானவை அல்ல எனத் தெரிவித்திருந்தார். தற்போதுள்ள குறுந்தொடுப்புகள் அதிகாரப்பூர்வமானவை தானா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:09, 31 சூலை 2012 (UTC)
- பழைய குறுந்தொடுப்புகள் வேலை செய்யும், ஆனால் பயன்பாட்டைக் குறைக்க புதிய குறுந்தொடுப்பு மட்டும் தான் தளத்தில் காண்பிக்கப்படும்.
- ஆம் தற்பொழுதுள்ள குறுந்தொடுப்பு அதிகாரபூர்வமான நீட்சி மூலம் செயல்படுகிறது. வழு இருந்தால் விக்கிமீடியாவின் பக்சில்லாவில் பதியலாம். ஸ்ரீகாந்த் (பேச்சு) 04:52, 31 சூலை 2012 (UTC)
ஏனைய திட்டங்களிலும் தெரிகிறது. ஆனால் அவை வேலை செய்யவில்லையே. பக்கம் இல்லை என்று வழு வருகிறது.--Kanags \உரையாடுக 07:59, 31 சூலை 2012 (UTC)
- வழு bugzilla:38905 பதியப்பட்டுள்ளது. விரைவில் வேலை செய்யும் ஸ்ரீகாந்த் (பேச்சு) 06:10, 1 ஆகத்து 2012 (UTC)
- நன்றி சிறீகாந்து.--Kanags \உரையாடுக 08:17, 1 ஆகத்து 2012 (UTC)
அலுவலகப் பணி
தொகுநான் இன்று முதல் விக்கிமீடியா அறக்கட்டளையின் உலகமயமாக்கல்/தம்மொழியாக்கல் குழுவில் பொறியியல் பரப்புரை மற்றும் தரக் கட்டுப்பாட்டு பொறியாளர் என்ற பதவியில் சேர்ந்துள்ளேன். என் அலுவல் சார்ந்த தொடர்புக்காக பயனர்:Srikanth_WMF கணக்கைப் பயன்படுத்துவேன். பயனர்:Logicwiki கணக்கில் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் பங்களிப்பேன். நன்றி ஸ்ரீகாந்த் (பேச்சு) 06:29, 1 ஆகத்து 2012 (UTC)
- வாழ்த்துகள், சிரீகாந்து! தமிழ் விக்கி போன்ற விக்கிக்களின் தேவையறிந்து செயலாற்றக்கூடிய ஒருவர் இணைந்துள்ளது கண்டு மகிழ்ச்சி. இது முழுநேரப்பணியா? -- சுந்தர் \பேச்சு 06:57, 1 ஆகத்து 2012 (UTC)
- வாழ்த்துகள் ஸ்ரீகாந்த் !!--மணியன் (பேச்சு) 07:04, 1 ஆகத்து 2012 (UTC)
- வாழ்த்துக்களுக்கு நன்றி சுந்தர், மணியன். ஆம் முழு நேரப் பணி. தமிழ் விக்கிக்கு மட்டுமல்லாமல், அனைத்து மொழி விக்கிகளிலும் மொழி உதவிக் குழுக்களை விரிவுபடுத்தி, பிற தளங்களிலிருந்து மொழிநுட்ப ஆர்வலர்களை ஈர்த்து மொழிசார் நுட்ப சிக்கல்களை களைவது, உலகமயமாக்கல்/தம்மொழியாக்கல் குழுவின் மொழிசார் நுட்பங்களின் தரத்தை மேம்படுத்துவது என் பணியாகும். ஸ்ரீகாந்த் (பேச்சு) 07:45, 1 ஆகத்து 2012 (UTC)
- மிக்க மகிழ்ச்சி சிறீகாந்து. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 08:18, 1 ஆகத்து 2012 (UTC)
- உலகமயமாக்கல்/தம்மொழியாக்கல் குழுவில் தமிழ் விக்கி பயனர் ஒருவர் இணைந்திருப்பது பெருமையும், மகிழ்வும் தருகிறது. இதனால் தமிழ் விக்கிக்கும் ஏனைய இந்திய விக்கிகளுக்கும் நன்மைகள் பல ஏற்படும் என நம்புகிறேன். தாங்களின் முழு நேர ஒத்துழைப்பையும் இனி விக்கி சமூகத்திற்கு தர இயலும். இதனால் தமிழ் விக்கியின் இடைமுகங்களிலும் மேலும் பல முன்னேற்றங்கள் ஏற்படுத்த முழு வீச்சில் செயல்பட இனி உங்களால் இயலும் :). வாழ்த்துக்கள் ஸ்ரீகாந்த்!.−முன்நிற்கும் கருத்து எஸ்ஸார் (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- வாழ்த்துக்களுக்கு நன்றி சுந்தர், மணியன். ஆம் முழு நேரப் பணி. தமிழ் விக்கிக்கு மட்டுமல்லாமல், அனைத்து மொழி விக்கிகளிலும் மொழி உதவிக் குழுக்களை விரிவுபடுத்தி, பிற தளங்களிலிருந்து மொழிநுட்ப ஆர்வலர்களை ஈர்த்து மொழிசார் நுட்ப சிக்கல்களை களைவது, உலகமயமாக்கல்/தம்மொழியாக்கல் குழுவின் மொழிசார் நுட்பங்களின் தரத்தை மேம்படுத்துவது என் பணியாகும். ஸ்ரீகாந்த் (பேச்சு) 07:45, 1 ஆகத்து 2012 (UTC)
வாழ்த்துகள்! --மதனாகரன் (பேச்சு) 10:28, 1 ஆகத்து 2012 (UTC) வாழ்த்துக்கள் --Natkeeran (பேச்சு) 13:06, 1 ஆகத்து 2012 (UTC)
வாழ்த்துகள் சிரீகாந்து! பலவழிகளில் நீங்கள் நல்லாக்கம் செய்ய இயலும். பணியில் சிறக்க நல்வாழ்த்துகள்.--செல்வா (பேச்சு) 13:42, 1 ஆகத்து 2012 (UTC)
- வாழ்த்துகள்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 14:13, 1 ஆகத்து 2012 (UTC)
ஏரண விக்கிக்கு வாழ்த்துகள் --குறும்பன் (பேச்சு) 14:23, 1 ஆகத்து 2012 (UTC)
- வாழ்த்துக்கள்! உங்கள் பணி சிறக்கட்டும்.--கலை (பேச்சு) 14:25, 1 ஆகத்து 2012 (UTC)
- வாழ்த்துக்கள். --உமாபதி \பேச்சு 14:38, 1 ஆகத்து 2012 (UTC)
- வாழ்த்துக்கள்! உங்கள் பணி சிறக்கட்டும்.--கலை (பேச்சு) 14:25, 1 ஆகத்து 2012 (UTC)
-வாழ்த்துகள் நண்பரே! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:44, 1 ஆகத்து 2012 (UTC)
- வாழ்த்துக்கள் ஸ்ரீகாந்த். -- மாகிர் (பேச்சு) 14:48, 1 ஆகத்து 2012 (UTC)
- வாழ்த்துக்கள் ஸ்ரீகாந்த் தொடர்ந்து முன்னேறுங்கள்--Sank (பேச்சு) 14:59, 1 ஆகத்து 2012 (UTC)
//உலகமயமாக்கல்/தம்மொழியாக்கல் குழுவில் பொறியியல் பரப்புரை மற்றும் தரக் கட்டுப்பாட்டு பொறியாளர்// இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விட்டிருக்கும் விக்கிமீடியா நிறுவனத்துக்கு முதல் வாழ்த்து. இணைய எழுத்துரு நடைமுறைப்படுத்தலின் போது நீங்கள் காட்டிய முனைப்பு பெரிதும் பாராட்டத்தக்கது. ஆங்கில விக்கிப்பீடியாவில் தொடங்கி தமிழ் விக்கிப்பீடியாவில் நுழைந்து உலகளாவிய மொழிகளுக்குச் செல்ல இருக்கும் அண்ணன் சிரீக்காந்தை வாழ்த்தி அமைகிறேன் :) --இரவி (பேச்சு) 15:05, 1 ஆகத்து 2012 (UTC)
- ரவி சொன்னது போல் //அதனை அவன் கண் விட்டிருக்கும் விக்கிமீடியா நிறுவனத்துக்கு முதல் வாழ்த்து.// --எஸ்ஸார் (பேச்சு) 16:42, 1 ஆகத்து 2012 (UTC)
- பாராட்டுகள் ஸ்ரீகாந்த் விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:36, 1 ஆகத்து 2012 (UTC)
அனைவருடைய வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். ஸ்ரீகாந்த் (பேச்சு) 20:55, 1 ஆகத்து 2012 (UTC)
குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் பட்டறை
தொகுவிக்கிப்பீடியா:குப்பம்_திராவிடப்_பல்கலைக்கழகத்தில்_பட்டறை க்கு நகர்த்தப்பட்டது. ஸ்ரீகாந்த் (பேச்சு) 13:30, 11 ஆகத்து 2012 (UTC)
விக்கிப்பீடியா தரவுகள் மூலம் திருடுகிறார்கள் ஜாக்கிரதை
தொகுஎனக்கு இன்று காலை செங்கைப்பொதுவனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அவை,
\\நான் என் கண்களில் கண்ணீர் இந்த எழுதுகிறேன், என் குடும்பத்தில் நான் ஒரு குறுகிய விடுமுறைக்கு இங்கிலாந்து இங்கே வந்து. துரதிருஷ்டவசமாக, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் பார்க்கில் mugged இருந்தது, அனைத்து பண மற்றும் கடன் அட்டை நம்மை விட்டு திருடப்பட்ட ஆனால் அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு நாங்கள் இன்னும் எங்கள் பாஸ்போர்ட் வேண்டும். வரை நம்மை விட்டு போக விட மாட்டேன் நாம் இங்கே தூதரகம் மற்றும் போலீசுக்கு தான் ஆனால் அவர்கள் பிரச்சினைகளை உதவி போவதில்லை எங்கள் விமானம் இப்போது இருந்து சில மணி நேரம் விட்டு ஆனால் நாம் விடுதி பில்கள் மற்றும் ஹோட்டல் மேலாளர் நிலைநிறுத்த பிரச்சனை நாம் கணக்குகளை. சரி நான் உங்கள் நிதி உதவி தேவை .., நீங்கள் எங்களுக்கு உதவ முடியும் என்றால் எனக்கு தெரியப்படுத்துங்கள்? நேரத்தில் வெளியே விசித்திரமான வகையாக தான்! -- பொதுவன் அடிகள் 22, 13-வது தெரு, தில்லை கங்கா நகர், சென்னை 600 061 Dr.Sengai Podhuvan விக்கிப்பீடியாவில் என் கட்டுரைகள்<http://toolserver.org/%7Etparis/pages/index.php?name=Sengai_Podhuvan&namespace=0&redirects=noredirects&lang=ta&wiki=wikipedia&getall=1> தமிழ்நூல் தொகை<http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88> சங்ககால ஊர்கள்<http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D> ஔவையார் தனிப்பாடல்கள்<http://ta.wikisource.org/wiki/%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D> சங்ககால விளையாட்டுகள்<http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D> தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)<http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%28%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%29> சங்ககால மலர்கள்<http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D> \\
எனக்கு இதன் எழுத்து அமைதியை கண்ட போதே இது பொதுவன் அல்ல என்பதைக் கண்டு கொண்டேன். அவரிடம் கைப்பேசியில் விசாரித்ததில் அவஎ சென்னையில் உள்ளதாகவே கூறூகிறார். மேலும் அவர் மின்னஞ்சலை தற்போது திறக்க இயலவில்லை என்றும் கூறுகிறார். அவரது மின்னஞ்சல் தவறாக பயன்படுத்தப் படக்கூடாது என்பதால் அதை லாக் செய்யவோ நிரந்தரமாக செயலிலழக்கவோ செய்ய ஏதும் வழியிள்ளதா? மேலும் இது இன்னும் பல விக்கிப்பீடியர்களுக்கு வர வாய்ப்புள்ளது என்பதால் அனைவரும் இதைப் போண்ற மின்னஞ்சலை தவிர்த்து விடுங்கள். இதை உங்களுக்குத் தெரிந்த அனைத்து விக்கிப்பீடியர்களுக்கும் ஃபார்வேர்ட் செய்து விடுங்கள். என் யாகூ மெய்ல் மற்றும் ஜீ மெயில் இரண்டுக்குமே இது வந்தது. இரண்டும் விக்கியில் கொடுத்தவை. ஆனால் செங்கைப்பொதுவருக்கு ஜிமெயில் மட்டுமே அனுப்பியதாக் ஞாபகம்.அதனால் விக்கித்தரவுகளை கொண்டு திருடலாமோ என்ற ஐயம் உள்ளதால் ஆலமரத்தடியில் பதிகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:02, 2 ஆகத்து 2012 (UTC)
- ஆம் எனக்கும் இன்று காலை வந்துள்ளது. நானும் ஆலமரத்தடியில் இதனைப் பதிந்து எச்சரிக்கை விடுக்கலாம் என எண்ணியிருந்தேன். நன்றி தென்காசி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 05:58, 2 ஆகத்து 2012 (UTC)
- இதுபோல் சில மாதங்களுக்கு முன்னர் ஒருமுறை பயனர்:Profvk மின்னஞ்சலிருந்து வந்தது அப்பொழுதும் விஷமிகளே செய்தார்கள், கிட்டதட்ட இதே செய்தி தான் ஆனால் ஆங்கிலத்தில் இருந்ததால் கூகிள் "Be careful with this message. The sender's account may be compromised, so this message could be a scam to steal personal information" என்ற எச்சரிக்கையை இட்டது. இப்பொழுது விஷமிகள் பயனரின் மொழியறிந்து, மொழிபெயர்த்து அனுப்புகிறார்கள் அதிலுள்ள ஆங்கில சொற்களை நீக்கிவிட்டார்கள்(படிக்கும் பொழுது கூகிள் மொழிபெயர்ப்பு சாயலில் இல்லை? "இங்கிலாந்து இங்கே வந்து"). ஆனால் தமிழில் இருந்ததால் கூகிள் எச்சரிக்கை அளிக்கவில்லை. பொதுவாக விக்கி / இணையத்தில் வீட்டு முகவரி / தொலைபேசி எண் / பிறந்த நாள் அதீத தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் பகிர்தலைத் தவிர்ப்பது உத்தமம். கூகிள், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் 2 அடுக்கு பாதுகாப்பில் en:Two-factor_authentication#Mobile_phones கைபேசி மூலம் பதிவுசெய்து கொள்வது நல்லது. ஸ்ரீகாந்த் (பேச்சு) 09:17, 2 ஆகத்து 2012 (UTC)
- எனது மின்னஞ்சலுக்கும் இக்கடிதம் வந்திருந்தது. இது கூகுள் தமிழ் மொழிபெயர்ப்பு மூலம் தமிழில் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது (செங்கைப் பொதுவன் தமிழில் தட்டச்சில் இவ்வளவு பிழைகள் செய்திருக்க மாட்டார் என்பதை உணர்ந்தவர்கள் பதற்றமடையவில்லை. ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அதை கூகுள் மொழிபெயர்ப்பு உதவியுடன் தமிழ் மொழிக்கு மாற்றியுள்ளனர்.) இந்த மின்னஞ்சல் தமிழ் விக்கிப்பீடியா தவிர, அவருடன் தொடர்பு வைத்திருக்கும் வேறு பலருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. சில மின்குழுமங்களிலுள்ள மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து முனைவர் பா.இறையரசன் என்பவர் அனுப்பிய மின்னஞ்சலில் ”இங்கிலாந்தில் சிக்கிய நம் தமிழர் செங்கைப் பொதுவனின் மடல் காண்க:” எனும் தலைப்பில் பலருக்கும் காலை 7:41 மணிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதன் பிறகு, முனைவர் பா.இறையரசன், செங்கைப் பொதுவன் சென்னையில்தான்! எனும் தலைப்பில் “அன்பார்ந்தீர்! வணக்கம்.! செங்கைப் பொதுவன் சென்னையில்தான் உள்ளார். கூகிள் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் திருடப்பட்டுள்ளது. அந்நிறுவனத்துக்கு இயன்றோர் தெரியப்படுத்துங்கள். உடன் விடையிறுத்த அன்புத் தமிழுள்ளங்களுக்கு நன்றி.” என்று காலை 10.43 மணிக்கு மாற்று மின்னஞ்சல் ஒன்றும் அனுப்பி விட்டார். இதுபோன்ற தகவல்கள் பொய்யானதுதான் என்று நாம் அறிந்தாலும், பலருக்கும் உண்மையாக இருக்குமோ என்று எண்ணம் வந்துவிடுகிறது. இதுபோன்ற தவறான தகவல்களை அனுப்புபவர்கள் திருந்தினால் நல்லது. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:16, 2 ஆகத்து 2012 (UTC)
நீங்கள் கூறியது "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்று முன்னோர் கூறியதை ஞாபகப்படுத்துகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:47, 2 ஆகத்து 2012 (UTC)