விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு85

தமிழ் விக்கிபிடியாவிற்கு தேவையான கருவிகள் தொகு

IIT சென்னையில் மீடியாவிக்கி நிரல் திருவிழா நடைபெறுகிறது. தமிழ் விக்கிபிடியாவிற்கு தேவையான கருவிகள், gadgets போன்றவற்றை வரிசைப்படுத்தினால், அவற்றை செய்ய முயலுவேன். --Tshrinivasan (பேச்சு) 11:58, 6 சனவரி 2013 (UTC)[பதிலளி]

  விருப்பம்

வாழ்த்துக்களும் நன்றிகளும் சீனிவாசன்! தேவையான பட்டியலைத் தயாரிப்போம் தேடும் பணிக்குச் செல்கிறேன். :) இது பற்றிய செய்தியை, இணையதளத்தைத் தந்தால் அதையும் கட்டுரை வடிவில் எழுதலாம், --தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:47, 6 சனவரி 2013 (UTC)[பதிலளி]

சீனி, மீடியாவிக்கியின் math நீட்சியில் ஒருங்குறி ஏற்பு இல்லை. யுவராஜ் பாண்டியனிடமும் இது பற்றி சொல்லியிருக்கிறேன். நீங்களும் கொஞ்சம் கவனியுங்களேன்.--சோடாபாட்டில்உரையாடுக 14:24, 6 சனவரி 2013 (UTC)[பதிலளி]
இதனை நானும் பலமுறை சொல்லியுள்ளேன். இது மிக மிகத் தேவையான ஒரு வசதி. சீனி இதற்கான உதவி செய்தால் நன்றாக இருக்கும். கணிதச் சமன்பாடுகள் கோவைகளில் உரோமன் (இலத்தீன்), கிரேக்கம், சில எபிரேய எழுத்துகள், குறியீடுகள் இருப்பது போன்று தமிழ் எழுத்துகள் அனைத்தையும் இட்டு எழுதுமாறும் செய்தல் மிகவும் தேவையானது. அண்மையில் மாத்திசியாக்ஃசு (http://www.mathjax.org/) என்னும் மென்கலம் வழியாக வலைத்தளங்களிலே எளிதாக கணிதக் குறியீடுகளை இட வசதியாக உருவாக்கி இருக்கின்றார்கள். இதனை நான் இன்னும் செய்தேர்வு செய்து பார்க்கவில்லை. --செல்வா (பேச்சு) 15:00, 6 சனவரி 2013 (UTC)[பதிலளி]
வார்ப்புருக்களில் இருந்து தரவுகளை extract செய்வதற்கு சீரான செயலிகள் இருந்தால் நன்று. எ.கா வார்ப்புரு:சஞ்சிகை தகவல் சட்டம் என்ற வார்ப்புருவைப் பயன்படுத்தும் அனைத்து பக்கங்களில் இருந்தும் தரவுகளை எடுத்து ஒரு csv கோப்பாகத் தந்தால் உதவியாக இருக்கும். சுந்தர் போன்றவர்களிடம் ஏற்கனவே இதற்கான நிரல் துண்டுகள் (scripts) உண்டு, ஆனால் ஒரு அடிப்படை இடைமுகம் உதவியாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 17:16, 6 சனவரி 2013 (UTC)[பதிலளி]

பிப்ரவரி01 ஆம் நாள் பம்மல் சம்பந்த முதலியார் பிறப்பு இறப்பு இந்த நாளுக்கு சரியாக இல்லையே, கவனிக்கவும்.


2012 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டறிக்கை தொகு

ஆண்டுதோறும் தமிழ் விக்கிப்பீடியா ஆண்டறிக்கை தயாரித்து வந்த நக்கீரன் இந்த 2012 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கிப்பீடியா ஆண்டறிக்கையைப் புதிதாக யாராவது தயாரிக்கட்டும் என்று சொல்லிச் சிலரைப் பரிந்துரையும் செய்திருந்தார். ஆனால், இதுவரை 2012 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கிப்பீடியா ஆண்டறிக்கையைக் காணவில்லை. யாராவது 2012 ஆண்டறிக்கையைக் கண்டுபிடித்து விக்கிப்பீடியாவில் சேர்த்து விடுங்களேன்... --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 13:06, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]

வணக்கம் தேனியாரே.... நான் முயல்கிறேன்... சண்முகம் புள்ளிவிவரங்கள் குறித்த பகுதிகளை இணைத்தால் நலம்.. இதற்கான தகவல் தரவுகள் எங்குள்ளன?-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:54, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]


Be a Wikimedia fundraising "User Experience" volunteer! தொகு

Thank you to everyone who volunteered last year on the Wikimedia fundraising 'User Experience' project. We have talked to many different people in different countries and their feedback has helped us immensely in restructuring our pages. If you haven't heard of it yet, the 'User Experience' project has the goal of understanding the donation experience in different countries (outside the USA) and enhancing the localization of our donation pages.

I am (still) searching for volunteers to spend some time on a Skype chat with me, reviewing their own country's donation pages. It will be done on a 'usability' format (I will ask you to read the text and go through the donation flow) and will be asking your feedback in the meanwhile.

The only pre-requisite is for the volunteer to actually live in the country and to have access to at least one donation method that we offer for that country (mainly credit/debit card, but also real time banking like IDEAL, E-wallets, etc...) so we can do a live test and see if the donation goes through. **All volunteers will be reimbursed of the donations that eventually succeed (and they will be very low amounts, like 1-2 dollars)**

By helping us you are actually helping thousands of people to support our mission of free knowledge across the world. If you are interested (or know of anyone who could be) please email ppena@wikimedia.org. All countries needed (excepting USA)!!

Thanks!

Pats Pena
Global Fundraising Operations Manager, Wikimedia Foundation

Sent using Global message delivery, 21:19, 8 சனவரி 2013 (UTC)

ஆண்டறிக்கை தொகு

ஆண்டறிக்கை இங்கு தொகுக்கப்படுகிறது. ஏதேனும் விடுபட்டிருந்தாலோ, நீக்க வேண்டியிருந்தாலோ பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்க வேண்டுகிறோம். உரை திருத்தம் செய்ய வேண்டியிருந்தாலும் தயங்காமல் செய்யவும், நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 05:34, 11 சனவரி 2013 (UTC)[பதிலளி]

ஆண்டறிக்கை இங்கு ஓரளவு முழுமையடைந்துள்ளது. பார்வையிட்டு கருத்துகள் தெரிவித்தால் அதனை திட்டப்பக்கத்திற்கு நகர்த்திவிடலாம். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 05:29, 20 சனவரி 2013 (UTC)[பதிலளி]

ஆங்கில கட்டுரைகளை படியெடுப்பதில் கவனம் தொகு

நாம் அநேகமான கட்டுரை உருவாக்கத்திற்கு ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து அப்படியே படியெடுத்து மொழிமாற்றிவிடுகிறோம் அல்லது மொழிப்பெயர்ப்பு செய்கிறோம். கட்டுரை தொகுப்புக்கே நாம் முன்னுரிமை கொடுப்பதால், ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளின் தகவல்கள் சரியானதா என்பதை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். அங்கே வழங்கப்பட்டிருக்கும் சான்றுகள் சரியானதா என உறுதிப்படுத்தவும் தவறிவிடுகிறோம். நான் அன்மையில் பார்த்ததில் அங்கே (அநேகமான இலங்கைச் சார்ந்த கட்டுரைகளில்) பக்கச்சார்பாக சிலரின் போலியான சான்றுகள், இல்லாத நூல்களை சான்றாக முன்வைத்தல், திசைத்திருப்பும் எரிதச் சான்றுகள், ஏமாற்றுச் சான்றுகள் என பல்வேறு சிக்கல்கள் இருப்பதை அவதானிக்க முடிந்தது. எ.கா: en:Colombo எனும் கட்டுரையில் கொலம்ப எனும் சொல்விளக்கத்திற்கு "Indrapala 2007, p. 70" என ஒரு சான்று வழங்கியுள்ளார்கள். தேடிப்பார்த்ததில் இப்படி ஒரு நூல் 2007ல் வெளிவரவில்லை. காணப்படவில்லை. இது ஒரு போலிச் சான்று. "கொழும்பு" எனும் சொல் தொடர்பில் தமிழில் சொல்விளக்கம் உள்ளது. இது குறித்த எந்த தகவலோ சான்றோ அங்கு வழங்கப்படவும் இல்லை. நாம் இங்கு வழங்கப்படவும் இல்லை. ஆங்கில கட்டுரையை அப்படியே படியெடுத்து இங்கே கொழும்பு கட்டுரையில் இட்டுள்ளோம். இது சரியான நடைமுறையல்ல. மேலும் en:Tea_production_in_Sri_Lanka கட்டுரையில் [1] ஒரு வெற்றுப்பக்கத்தை சான்றாக கொடுத்துள்ளனர். இப்படி இன்னும் பல சித்துவேலைகள் உள்ளன. எனவே ஆங்கில கட்டுரைகளை மொழிப்பெயர்ப்பு செய்யும் போது நாம் இவற்றையும் கவனம் கொள்ளல் வேண்டும். --HK Arun (பேச்சு) 07:26, 12 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இது போன்ற பிரச்சனைகள் இருப்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, Indrapala என்பது அனேகமாக நூலாசிரியரின் பெயராக இருக்கலாம் என நம்புகின்றேன். ஒரு ஆண்டில் வெளிவந்த அனைத்து தமிழ்/ஆங்கில நூல்களையும் பட்டியலிடும் தளம் ஏதாவது இருக்கின்றதா? நூல் வெளிவரவில்லை என்ற கூற்றிற்கு போதுமான ஆதாரம் உண்டா? --சிவகோசரன் (பேச்சு) 15:41, 12 சனவரி 2013 (UTC)[பதிலளி]
//Indrapala என்பது அனேகமாக நூலாசிரியரின் பெயராக இருக்கலாம் என நம்புகின்றேன்.// நூலாசிரியரின் பெயரை நூலாக குறிப்பிடப்பட்டிருக்குமானால் அதுவும் ஒரு திசைத்திருப்பல் செயல்பாடுதான். //நூல் வெளிவரவில்லை என்ற கூற்றிற்கு போதுமான ஆதாரம் உண்டா?// தேடிப்பார்த்ததில் (திருத்தியுள்ளேன்) காணப்படவில்லை என்று வாசியுங்கள். மேலும் விக்கிப்பீடியா ஒரு மூன்றாவது தரவு தளம், இதில் முதலாம், இரண்டாம் நிலை தரவுகளின் ஊடாக சான்றுகளை முன்வைத்து தொகுத்து வைக்கப்படுகிறது. எனவே ஒரு நூலை சான்றாக வழங்கும் போது எவ்வாறு வழங்கப்பட வேண்டும் எனும் முறையுண்டு. பார்க்க: [2] குறிப்பாக ஒவ்வொரு நூலுக்கும் ISBN இலக்கம் உண்டு. ஒரு கட்டுரையை வாசிக்கும் ஒரு நபர் அக்கட்டுரையில் வழங்கப்பட்டிருக்கும் சான்றை உறுதிப்படுத்திக்கொள்ளவோ அல்லது மேலதிக வாசிப்பிற்காகவோ வழங்கப்பட்டிருக்கும் சான்று சரியாக இருக்கவேண்டும். இணையத்தளங்களை சான்றாக வழங்கியிருப்பவை, அவ்விணைத்தளம் செயல்பாட்டில் இல்லாதப் போது இணைப்பு நீக்கப்படுவதும் அதனால் தான்.
மேலும் எனது சுட்டிக்காட்டல் குறிப்பிட்ட ஒரு கட்டுரை தொடர்பானதல்ல. பிற விக்கிகளில் இருந்து மொழிப்பெயர்ப்பு செய்யும் போது நாம் கொள்ள வேண்டிய கவனம் தொடர்பான கோரிக்கை. --HK Arun (பேச்சு) 17:14, 12 சனவரி 2013 (UTC)[பதிலளி]
ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கும்போது அங்குள்ள சான்றுகளையும் சரிபார்க்காமல் அப்படியே தருவதில் உள்ள பிரச்சினைகள் குறித்த அருணின் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு உண்டு. நூல்களைச் சான்றாகக் கொடுக்கும்போது அந்நூலின் முழு விபரங்களையும் கட்டுரையின் ஒரு இடத்திலாவது கொடுப்பது அவசியம். இந்த விபரங்கள், "எழுதியவர் பெயர், நூலின் பெயர், வெளியிட்ட நிறுவனம், வெளியிட்ட இடம், வெளியிட்ட ஆண்டு" என்பவற்றை இந்த ஒழுங்கில் உள்ளடக்கியிருப்பது வழக்கம். இவ்வாறான விபரங்களை கட்டுரையின் அடியில் உசாத்துணை நூல் பட்டியலாகக் கொடுத்தால், கட்டுரையின் உள்ளே எண்கள் கொடுத்துச் சான்றுகளை அடிக்குறிப்புகளாகத் தரும்போது "எழுதியவர் பெயர், ஆண்டு, பக்கம்" என்ற வடிவில் சுருக்கமாகக் கொடுக்கலாம். ஆனால் குறித்த கொழும்பு கட்டுரையில் எவ்விடத்திலும் நூலின் முழு விபரமும் கொடாமல், சுருக்க விபரங்களை மட்டும் கொடுத்துள்ளனர், இது சரியான முறையல்ல. கட்டுரையில் "Indrapala 2006, p. 70" என்பதற்குப் பதிலாகவே "Indrapala 2007, p. 70" எனப் பிழையாகக் கொடுத்துள்ளனர் எனக் கருதுகிறேன். மேற்படி குறிப்பு இந்திரபாலா அவர்கள் எழுதிய "The Evolution of an Ethnic Identity, The Tamils in Sri Lanka c. 300 BCE to c. 1200 CE" என்னும் நூலைக் குறிக்கிறது என்று எண்ணுகிறேன். இந்த நூலின் 70 ஆம் பக்கத்தில் கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள "Sidatsangarava" (தமிழில் பிழையாக "சிடசங்கரவ" என எழுதப்பட்டுள்ளது) பற்றிய குறிப்பு உள்ளது. இதன்படி "சிதத்சங்கராவ" என்னும் 13 ஆம் நூற்றாண்டுச் சிங்கள இலக்கண நூலில் சில சிங்களச் சொற்களை உள்நாட்டுக்கு உரியனவாக வகைப்படுத்தியிருப்பது பற்றிய தகவல் மட்டுமே உண்டு. அவற்றில் "கொழம்ப" என்னும் சொல் அடங்கியிருப்பது குறித்தோ அல்லது அதன் பொருள் குறித்தோ எவ்வித தகவலும் இல்லை. அதனால், இது கட்டுரை கூறும் விடயத்துக்குச் சான்றாக அமையவில்லை. --- மயூரநாதன் (பேச்சு) 18:53, 12 சனவரி 2013 (UTC)[பதிலளி]

பொங்கல் நல்வாழ்த்துகள் தொகு

 
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துகள்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:22, 13 சனவரி 2013 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியர்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துகள்--Kanags \உரையாடுக 21:24, 13 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இனிய பொங்கல் வாழ்த்துகள்!--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 21:54, 13 சனவரி 2013 (UTC)[பதிலளி]

பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும்..அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 22:46, 13 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  விருப்பம் - தமிழ்க்குரிசில்

பொங்கல் வாழ்த்துகள்! --மதனாகரன் (பேச்சு) 04:09, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியர்களுக்கும் விக்கிப்பீடியர்களாக இல்லாதவர்களுக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துகள். எப்பூடீஈஈஈஈஈஈஈஈ. :)- --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:27, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]

அனைத்து விக்கி உறவுகளுக்கும் என் இனிய போங்கள் நல் வாழ்த்துக்கள். --சிவம் 01:47, 15 சனவரி 2013 (UTC)

வாக்கெடுப்பு தொகு

நிருவாகி தரத்துக்கான மூன்று நடப்பு வேண்டுகோள்களுக்குமான வாக்கெடுப்பு நிறைவு பெற்றுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 05:22, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]

விக்கி மீடியா ஷாப்பிங் தொகு

அட்ரா சக்க. அட்ரா சக்க. அட்ரா சக்க.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:03, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நினைவுபடுத்தல் - தமிழ் ஆவண மாநாடு - கட்டுரைப் பொழிவு அனுப்பும் திகதி அண்மித்துவிட்டது தொகு

தமிழ் ஆவண மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரையின் பொழிவை (abstract) சமர்ப்பிப்பதற்கான திகதி நாளை (சனவரி 15, 2013) ஆகும். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:55, 15 சனவரி 2013 (UTC)[பதிலளி]

ஐயா நற்கீரரே. தமிழ் ஆவணப்பதிவு மாநாடு 2013க்கு சனவரி 15, 2012 பொழிவை சமர்பிக்க வேண்டுமா? [3] சொல்லவே இல்ல. :)---தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:18, 15 சனவரி 2013 (UTC)[பதிலளி]


ஆவண மாநாட்டுக்கு பொழிவுகள் சமரிப்பித்த விக்கி பயனர்களுக்கு நன்றிகள். விக்கி பயனர்கள் உட்பட நல்ல பங்களிப்புகள் கிடைத்துள்ளதாக அறியமுடிகிறது. தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தல் முயற்சிகளுக்கு ஒரு நல்ல கோட்பாட்டு வியூக அடித்தளாமாக இக் கட்டுரைகள் அமையும் என்று நம்புகிறேன். இத் திகதியைத் தவறவிட்டவர்கள் நூலகம் ஆய்விதழுக்கு கட்டுரை பங்களிப்பது குறித்து பரிசீலிக்கவும் :) --Natkeeran (பேச்சு) 01:40, 17 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நரேந்திரரின் சிகாகோ சொற்பொழிவு தொகு

https://groups.google.com/forum/#!topic/mintamil/vY3LC0bOo2g --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:15, 15 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இது போன்ற இணைப்புகள், அறிவிப்புகளைப் பகிர்வதற்காக விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) என்று ஒரு பக்கம் தொடங்கலாமா? தமிழ் விக்கிப்பீடியாவைப் புதிதாக அணுகும் பலரும் ஆலமரத்தடித் தொகுப்புகளைப் படித்தே நமது வரலாறை அறிந்து கொள்கிறார்கள். எனவே, இயன்றவரை அதனை விக்கிப்பீடியாவுக்கு நேரடியாக தொடர்புடைய உரையாடல்களின் தொகுப்பாக வைத்திருப்பது நன்று.--இரவி (பேச்சு) 16:55, 16 சனவரி 2013 (UTC)[பதிலளி]

தலைப்பு மாற்றம் தொகு

பார்க்க: பேச்சு:குவாண்டம் எண் --பிரஷாந் (பேச்சு) 05:12, 16 சனவரி 2013 (UTC)[பதிலளி]

பிரசாந்த், ஒரு கட்டுரையின் பேச்சுப் பக்க உரையாடல் பல கட்டுரைகள் தொடர்புடைய ஒரு கொள்கை உரையாடலாக இல்லாத பட்சத்தில், அதனை ஆலமரத்தடியின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவ்வுரையாடலில் ஆர்வம் இருக்கக்கூடிய மற்ற பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் அறிவிப்பு இடுவது நன்று. தொடர்புடைய பகுப்பு / திட்டப்பக்கத்திலும் கவனம் ஈர்க்கலாம். நன்றி--இரவி (பேச்சு) 16:59, 16 சனவரி 2013 (UTC)[பதிலளி]

மன்னிக்கவும். இரண்டு கிழமையாக எதுவித பதிலும் இல்லாததால் அவசரப்பட்டு ஆலமரத்தடிக்குக் கொண்டுவந்துவிட்டேன்--பிரஷாந் (பேச்சு) 03:58, 17 சனவரி 2013 (UTC)[பதிலளி]

மன்னிப்பு...! தமிழ் விக்கிப்பீடியர்களின் அகரமுதலியில் கேட்கக்கூடாத சொல் :) ஏற்கனவே சில முறை பல்வேறு பயனர்களும் இது போல் ஆலமரத்தடியில் இட்டிருந்ததால் பொதுப்படவே வேண்டினேன். நன்றி.--இரவி (பேச்சு) 11:57, 17 சனவரி 2013 (UTC)[பதிலளி]

பேச்சுப்பக்கங்களில் தனி நபர் தாக்குதல் தொகு

சி(ப)ல பேச்சுப்பக்கங்களில் முட்டாள், அறிவு கெட்ட போன்ற தனி நபர் தாக்குதல் சொற்கள் இப்போதும் காணப்படுகின்றனவே. இந்த மாற்றங்களை பார்க்க முடியாத மாதிரி செய்யலாமா? மேலும் இதைப்போல் தனி நபர் தாக்குதலில் ஈடுபடுவோரை அவர் எவரானாலும் குறித்த காலத்துக்கு தடை செய்ய வேண்டும் என்பது என் கருத்து. ஏனெனில் இவ்வார்த்தை உபயோகிக்க கூடாதவை என்ரு தெரிந்தும் சில நிர்வாகிகளே பயன்படுத்துவதை பார்த்திருக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:49, 16 சனவரி 2013 (UTC)[பதிலளி]

மிகவும் மலினமான, தனிநபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள தகவலை மட்டும் வரலாற்றில் இருந்து நீக்கலாம். இதுவரை ஒரே ஒரு முறை மட்டும் தான் அத்தகைய சூழ்நிலை வந்து அதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மற்றபடி, ஓரளவு தடித்த உரையாடல்களானாலும் அவற்றை விட்டு விடுவது நல்லது. ஆவணமாகவும் இருக்கும். தணிக்கை செய்கிறோம் என்ற குற்றச்சாட்டும் வராது. பல்வேறு சூழ்நிலைகளில் மூன்று எச்சரிக்கைகள் தந்து, விதி மீறலுக்கு ஏற்ப தடை செய்யும் வழக்கமே உள்ளது. விக்கிப்பீடியாவின் செயற்பாட்டுக்கும் உள்ளடக்கத்துக்கும் பெரும் ஊறு விளைவித்தால் மட்டும் உடனடியாக சிறிது காலத்துக்குத் தடுப்பது நலம்--இரவி (பேச்சு) 16:51, 16 சனவரி 2013 (UTC)[பதிலளி]

ஆயிரத்தைத் தாண்டிட்டேன்...! தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் எப்படியும் ஆயிரம் கட்டுரைகளைத் தொடங்கி விட வேண்டும் என்கிற என் முயற்சி, தமிழ் விக்கிப்பீடியாவில் பயனராக இணைந்து 4 ஆண்டுகள் 1 மாதம் 2 நாட்களாகின்ற நிலையில் நான் தொடங்கிய கட்டுரைகள் ஆயிரம் (1000) என்கிற எண்ணிக்கையை இன்றுதான் கடந்துள்ளது. இன்று என்னுடைய கட்டுரைத் தொடக்கம் 1002 ஆகியுள்ளது. அப்பாடா! நானும் ஆயிரத்தைத் தாண்டிட்டேன்...!! (பயனராக இணையாமல் பத்து கட்டுரைகளும் தொடங்கியிருக்கிறேன். அந்தக் கணக்கு தனி) --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 15:39, 16 சனவரி 2013 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள் சுப்பிரமணி. மேலும் பல ஆயிரம் கட்டுரைகளை எழுதுவதற்கான எல்லா வளங்களும் உங்களுக்குக் கிடைக்கட்டும். --- மயூரநாதன் (பேச்சு) 17:57, 16 சனவரி 2013 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள் ஆயிரம் தேனியாரே! பணி மென்மேலும் கூடட்டும்.--பரிதிமதி (பேச்சு) 18:13, 18 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  விருப்பம்--Nan (பேச்சு) 20:46, 18 சனவரி 2013 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள் தெரிவித்த மயூரநாதன், பரிதிமதி மற்றும் Nan ஆகியோருக்கு என் இதயப்பூர்வமான நன்றி...--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 02:03, 19 சனவரி 2013 (UTC)[பதிலளி]

எம்.ஐ.டீ.கணினி பயிலரங்கம்/செயல்விளக்க அரங்கத்தில் தமிழ் விக்கி தொகு

அனைவருக்கும்!

எம்.ஐ.டீ(சென்னைத் தொழில்நுட்ப நிறுவனம்)-யில் நடைபெறவுள்ள (பிப்ரவரியில்) கணினி பயிலரங்கத்தில் தமிழ் விக்கி கலந்து கொள்ள இயலுமா என்று அகமத் என்ற மாணவர் என்னை வினவினார். அகமத்தின் தொலைபேசி: 9500802567. என்ன சொல்லலாம்? எவ்வாறு செய்யலாம்? --பரிதிமதி (பேச்சு) 18:12, 18 சனவரி 2013 (UTC)[பதிலளி]

எனக்கு மின்னஞ்சல் அனுப்ப சொல்லுங்களேன். தேதியும் நேரமும் ஒத்து வந்தால் நான் சென்று நடத்துகிறேன். மின்னஞ்சல் sodabottle at gmail com.--சோடாபாட்டில்உரையாடுக 01:01, 19 சனவரி 2013 (UTC)[பதிலளி]
சரி. (நானும் கலந்து கொள்கிறேன் - தேதி ஒத்து வந்தால்)--பரிதிமதி (பேச்சு) 02:56, 19 சனவரி 2013 (UTC)[பதிலளி]

Wikimedia sites to move to primary data center in Ashburn, Virginia. Read-only mode expected. தொகு

(Apologies if this message isn't in your language.) Next week, the Wikimedia Foundation will transition its main technical operations to a new data center in Ashburn, Virginia, USA. This is intended to improve the technical performance and reliability of all Wikimedia sites, including this wiki. There will be some times when the site will be in read-only mode, and there may be full outages; the current target windows for the migration are January 22nd, 23rd and 24th, 2013, from 17:00 to 01:00 UTC (see other timezones on timeanddate.com). More information is available in the full announcement.

If you would like to stay informed of future technical upgrades, consider becoming a Tech ambassador and joining the ambassadors mailing list. You will be able to help your fellow Wikimedians have a voice in technical discussions and be notified of important decisions.

Thank you for your help and your understanding.

Guillaume Paumier, via the Global message delivery system (wrong page? You can fix it.). 15:43, 19 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இந்திய விக்கிகள் அறிக்கை தொகு

இந்திய மொழிகள் விக்கிப்பீடியாக்களை அலசி 2012 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார்கள். எல்லா தர அளவீடுகளிலும் தமிழ் முதல் ஓரிரு நிலைகளில் உள்ளது. இந்தத் தர அளவீடுகள் பற்றி நாம் அதிகம் கவலை கொள்ள வேண்டாம். கட்டுரைகளின் தரமும், ஒரு மொழி விக்கியின் மொத்தப் பயனும் என்பது கட்டுரைகளில் உள்ள தரமான கருத்துகளும் அவை சொல்லப்பட்டுள்ள பாங்கும், இவற்றைப் பயன்கொள்ளும் குமுகத்தையும் பொருத்தது. தொடர்ந்து முயன்று கொண்டும், கூடுதலான புதிய பங்களிப்பாளர்களை ஈர்த்துக்கொண்டும், இதன் பயனைப் பரப்பிக்கொண்டும் வருவது தேவை. இந்திய மொழிகள் விக்கிப்பீடியாக்களின் 2012 -ஆம் புள்ளிக்குறிப்பு அடிப்படையில் அறிக்கை --செல்வா (பேச்சு) 14:44, 20 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இரண்டு புள்ளிகள் இங்கு கவனிக்கத் தக்கன. ஒன்று எமது செயற்படு பயனர்கள் சுமார் 40 ஆல் குறைந்திருப்பது ??!!. இதுவே மிகவும் அக்கறைக்கு உரிய ஒரு விடயம். இரண்டாவது வாசகர் தொகை 50% மேலால் அதிகரித்து இருப்பது. இந்த உயர்வு எமது உள்ளடக்கத்தின் தரத்தை உணர்த்தி நிற்கிறது. ஆனால் இந்த வாசகர்கள் ஏன் பங்களிப்பாளராக ஆகவில்லை என்பதைக் கவனித்து செயற்பட வேண்டும். --Natkeeran (பேச்சு) 03:27, 22 சனவரி 2013 (UTC)[பதிலளி]
நற்கீரன், 2010க்குப் பிறகு வந்த பங்களிப்பாளர்களோடு இணைந்து முன்பு இருந்தவர்களும் முனைப்பாக பங்களித்ததில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டோம். கடந்த சில மாதங்களாக முதல் தலைமுறை விக்கிப்பீடியர்களின் பங்களிப்பு குறைந்து வருகிறது. இதனை ஈடு கட்டும் வகையில் அடுத்த அலை வர வேண்டும். சென்ற ஆண்டு 50,000 கட்டுரைகளை எட்டும் முன் பல்வேறு வகையிலும் உள்ளடக்கத்தை மேம்படுத்த முனைந்தது போல, முனைப்பான புதிய பங்களிப்பாளர்களைப் பெறுவதை இந்த ஆண்டின் ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டோமானால் நல்ல மாற்றம் வரும் என நம்புகிறேன். இதன் பொருட்டு, முன்பு நல்ல பயனைத் தந்த தள அறிவிப்பில் பங்களிப்பாளர் அறிமுகம் இடும் முயற்சியை மீண்டும் துவக்கியுள்ளோம். வேறு என்னென்ன வகையில் எல்லாம் புதியவர்களை ஈர்க்கலாம், பங்களிக்க உதவலாம் என்று கருத்துகளைப் பகிருங்கள். வரப்புயர நீர் உயரும் - நீர் உயர நெல் உயரும். நன்றி--இரவி (பேச்சு) 15:25, 24 சனவரி 2013 (UTC)[பதிலளி]
கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டும் ஏற்கனவே உள்ள பங்களிப்பாளர்களின் பங்களிப்பு குறைவதற்கும் புதிய பங்களிப்பாளர் வரத்து குறைவாக இருப்பதற்கும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.--இரவி (பேச்சு) 07:28, 25 சனவரி 2013 (UTC)[பதிலளி]
இன்னும் விரிவான தகவல்களுடன் இற்றைப்படுத்திய அறிக்கையைக் காண்க. பொதுவாக, தமிழ் விக்கிப்பீடியா மிக நல்ல நிலையில் உள்ளது. முனைப்பான பங்களிப்பாளர்கள் எண்ணிக்கையைக் கூட்டுவதும் குறுங்கட்டுரைகளை விரிவாக்குவதும் உடனடித் தேவைகள்.--இரவி (பேச்சு) 18:46, 27 சனவரி 2013 (UTC)[பதிலளி]

விக்கிப்பயணம் தொகு

வணக்கம், விக்கிப்பயணம் தொடர்பாக ஒத்தாசைப் பக்கத்தில் ஒரு கேள்வி பார்த்தேன், ஏற்கனவே ஒரு பயனர் அடைகாப்பகத்தில் முதற்பக்கத்தை தொடங்கியுள்ளார். தமிழில் விக்கிப்பயணத்தை தொடங்க/பங்களிக்க யாருக்காவது ஆர்வம் உள்ளதா? (நான்கைந்து/போதுமான பயனர்கள் இருந்தால் அடைக்காப்பக்கத்தில் முழு வீச்சாக தொடங்கலாம்). நம்மிடம் போதுமான ஆள்பலம் இல்லை என்பதனை அறிவேன், இருந்தாலும் அதில் சிலருக்கு ஆர்வம் அதிகம் இருக்கலாம், மேலும் தமிழில் நான் இதுவரை பயண வழிகாட்டி என்றொன்றை இணையத்தில் பார்த்ததில்லை. இது பயனுள்ளதாயிருக்கலாம். நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 16:48, 20 சனவரி 2013 (UTC)[பதிலளி]

k7.india என்பவர் தான் அவர். நானும் பிழைகளைத் திருத்திக் கொண்டிருக்கிறேன். ஆர்வமாய் உள்ளேன். எனினும், பீடியா போலேயே அங்கும் நிறைய எழுத வேண்டியிருக்கும். மேலும் wikisongs, wikissentials, wikicode என பத்துக்கும் மேற்பட்ட திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. -தமிழ்க்குரிசில்
//மேலும் wikisongs, wikissentials, wikicode என பத்துக்கும் மேற்பட்ட திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. // எங்கு? ஏதாவது இணைப்புகள் (links) ?--சண்முகம்ப7 (பேச்சு) 17:20, 20 சனவரி 2013 (UTC)[பதிலளி]
அதிகாரப் பூர்வமாக வெளியாக உள்ளன என்று அறிவித்திருக்க வில்லை. பேச்சு வார்த்தையில் உள்ளன என நினைக்கிறேன். தற்போதைக்கு எனக்கு கிடைத்த வேறு இணைப்பு இது. முன்பு பார்த்த பக்கத்தின் இணைப்பு கிடைத்தால தருகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:47, 21 சனவரி 2013 (UTC)[பதிலளி]
Proposed projects நிறைய உள்ளன தமிழ்க்குரிசில், யார் வேண்டுமானாலும் புதிய திட்டத்தை முன்மொழியலாம். --சண்முகம்ப7 (பேச்சு) 14:34, 21 சனவரி 2013 (UTC)[பதிலளி]
ஆம், நான் கூறிய பக்கம் நீங்கள் தந்த இணைப்பே!! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:44, 21 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இலங்கைச் சனத்தொகைப் புள்ளிவிபரங்கள் தொகு

2011/2012க்கான இலங்கையின் சனத்தொகைக் கணக்கெடுப்பு நிறைவுற்று புதிய சனத்தொகைக் கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே தேவையான கட்டுரைகளில் இற்றைப்படுத்தல் மேற்கொள்ளலாம். வெளியிடப்பட்டு பலகாலமானாலும் பெரும்பாலானவை இற்றைப்படுத்தப்படாததால் இங்கு கவனத்துக்கு கொண்டுவரப்படுகிறது.

இணைப்பு: முகப்பு

முக்கியமான புள்ளிவிவரங்கள்:

--பிரஷாந் (பேச்சு) 04:43, 21 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இணையப் பக்கங்கள் தொகு

விக்கி கட்டுரைகளாக எவ்வகையைான இணையப் பக்கங்கள் இடம் பெறலாம்? அல்லது இணையப் பக்கங்கள் கட்டுரைகளாக இடம் பெறலாமா? எ.கா: எதிர்க்குரல் போன்ற சமயஞ்சார் இணையப் பக்க கட்டுரைகளை நீக்குவது சிறப்பெனக் கருதுகிறேன். --Anton (பேச்சு) 05:06, 21 சனவரி 2013 (UTC)[பதிலளி]

பரவலாக அறியப்பட்ட இணையத்தளங்களுக்கு விக்கிப்பீடியா கட்டுரைகள் எழுதலாம். எடுத்துக்காட்டு: http://en.wikipedia.org/wiki/Mashable . சமயம் சார் உள்ளடக்கம் என்பதற்காக நீக்க முடியாது. மலினமான, ஆபத்தான உள்ளடக்கம் கொண்ட தளங்களைத் தவிர்க்கலாம். நல்ல உள்ளடக்கம் உள்ள தளம் என்றாலும் அதற்கான குறிப்பிடத்தக்கமையை வரையறுத்துச் செயற்பட வேண்டும். ஒரு இணையத்தளம் என்பதனைத் தாண்டி அதன் வீச்சு உணரப்படும்போது, ஓரளவு குறிப்பிடத்தக்கமை இருப்பதாக கொள்ளலாம். எடுத்துக்காட்டு: தமிழ்மணம்--இரவி (பேச்சு) 10:51, 21 சனவரி 2013 (UTC)[பதிலளி]

Picture of the Year voting round 1 open தொகு

Dear Wikimedians,

Wikimedia Commons is happy to announce that the 2012 Picture of the Year competition is now open. We're interested in your opinion as to which images qualify to be the Picture of the Year for 2012. Voting is open to established Wikimedia users who meet the following criteria:

  1. Users must have an account, at any Wikimedia project, which was registered before Tue, 01 Jan 2013 00:00:00 +0000 [UTC].
  2. This user account must have more than 75 edits on any single Wikimedia project before Tue, 01 Jan 2013 00:00:00 +0000 [UTC]. Please check your account eligibility at the POTY 2012 Contest Eligibility tool.
  3. Users must vote with an account meeting the above requirements either on Commons or another SUL-related Wikimedia project (for other Wikimedia projects, the account must be attached to the user's Commons account through SUL).

Hundreds of images that have been rated Featured Pictures by the international Wikimedia Commons community in the past year are all entered in this competition. From professional animal and plant shots to breathtaking panoramas and skylines, restorations of historically relevant images, images portraying the world's best architecture, maps, emblems, diagrams created with the most modern technology, and impressive human portraits, Commons features pictures of all flavors.

For your convenience, we have sorted the images into topic categories. Two rounds of voting will be held: In the first round, you can vote for as many images as you like. The first round category winners and the top ten overall will then make it to the final. In the final round, when a limited number of images are left, you must decide on the one image that you want to become the Picture of the Year.

To see the candidate images just go to the POTY 2012 page on Wikimedia Commons.

Wikimedia Commons celebrates our featured images of 2012 with this contest. Your votes decide the Picture of the Year, so remember to vote in the first round by January 30, 2013.

Thanks,
the Wikimedia Commons Picture of the Year committee

This message was delivered based on m:Distribution list/Global message delivery. Translation fetched from: commons:Commons:Picture of the Year/2012/Translations/Village Pump/en -- Rillke (பேச்சு) 00:00, 23 சனவரி 2013 (UTC)[பதிலளி]

விக்கிமேனியா 2013 தொகு

விக்கிமேனியா 2013க்கான உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள், பெண் பங்களிப்பாளர்கள், முதல் முறையாக விக்கிமேனியாவுக்குச் செல்வோர் ஆகியோருக்கு கூடுதல் வாய்ப்புள்ளதால் ஆர்வமுள்ளோர் தவறாமல் விண்ணப்பிக்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 05:00, 24 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நான் பங்கேற்கலாமா?-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:41, 24 சனவரி 2013 (UTC)[பதிலளி]

கண்டிப்பாக, நீங்கள் உட்பட அனைத்து தமிழ் விக்கிப்பீடியர்களும் விண்ணப்பிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்களுக்கும் இந்த உதவித் தொகை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. 2011 விக்கிமேனியாவுக்கு மூன்று, நான்கு மலையாள விக்கிப்பீடியர்கள் வந்ததாக நினைவு. ஏற்கனவே உதவித் தொகை பெற்று சென்று வந்தோர் மீண்டும் விண்ணப்பிக்காமல் இருந்தால் போட்டி குறையும் :) . விண்ணப்பத்தில் உங்கள் விக்கி பங்களிப்புகள் பற்றி விரிவாகவும், தெளிவாகவும் தகுந்த இணைப்புகளோடு சுட்டுங்கள். எடுத்துக்காட்டுக்கு, எத்தனை ஆண்டுகளாக பங்களிக்கிறீர்கள், எத்தனை கட்டுரைகள் / தொகுப்புகள், நிருவாகப் பொறுப்பு உண்டா, பிற விக்கிமீடியா திட்டங்களில் பங்களித்துள்ளீர்களா, பட்டறைகள் நடத்தியிருந்தால் அது குறித்த படங்கள் / விவரங்கள், ஊடகப் போட்டி போன்றவற்றிலான பங்கேற்புகள், விக்கிமேனியாவில் கட்டுரை வாசிக்கும் எண்ணம் உண்டா (கட்டாயம் இல்லை), விக்கிமேனியாவில் கலந்து கொண்ட பிறகு எப்படி முனைப்போடு செயலாற்றுவீர்கள் என்று விரிவாக எழுதவும். விண்ணப்பம், பயணத்தில் ஏதேனும் உதவி தேவையெனில் தயங்காமல் கேளுங்கள். --இரவி (பேச்சு) 12:06, 24 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் கட்டுரை எண்ணிக்கையில் இரண்டாம் இடம் தொகு

தெலுங்கு விக்கிப்பீடியாவைத் தாண்டி, இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் கட்டுரை எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தை எட்டியிருக்கிறோம். கட்டுரை எண்ணிக்கைக்கும் தரத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றாலும், பல ஊடகங்களிலும் கட்டுரை எண்ணிக்கை அடிப்படையிலேயே விக்கிப்பீடியாக்களின் வளர்ச்சியை நோக்கும் போக்கு இருப்பதால், இந்த மைல்கல் குறிப்பிடத்தக்கது. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias பக்கத்தில் உள்ள தரவு தானாகவே பிறகு இற்றைப்படுத்தப்பட்டுவிடும். பி.கு: இலங்கை மொழி விக்கிப்பீடியாக்களில் நாம எப்பவும் முதலிடம் தான் :)--இரவி (பேச்சு) 06:04, 26 சனவரி 2013 (UTC)[பதிலளி]

  விருப்பம்--Anton (பேச்சு) 06:39, 26 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:10, 31 சனவரி 2013 (UTC)[பதிலளி]

உலகத் தமிழ் அமைப்புகள் விவரத் தொகுப்பு தொகு

இங்கு இட்டிருந்த செய்தியை விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) பக்கத்துக்கு நகர்த்தியுள்ளேன். நேரடியாக விக்கித் திட்டங்களுக்குத் தொடர்பில்லாத அறிவிப்புகளை இங்கு இடுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 20:11, 30 சனவரி 2013 (UTC)[பதிலளி]

அணுக்கம் தொகு

ஒருவரது தொகுப்புகளின் எண்ணிக்கையும் அவரது விக்கிக்கால வாழ்க்கையும் அவருக்கு கூடுதல் தகுதிகளை/பதவிகளை வழங்குகின்றனவா? அதாவது, அவருக்கு தொகுத்தலில் சில கூடுதல் அணுக்கங்கள் கிடைக்கின்றனவோ? (நிர்வாகிகளால் மட்டுமே வழிமாற்றின்றி நகர்த்த முடியும் என்று யாரோ சொன்னார்கள். முன்பு நான் முயன்றேன். முடியவில்லை. தற்போது முடிகிறதே)! அதனால் கேட்கிறேன். கன்னட விக்கியிலும் கூட எனக்கு ரோல்பேக் வசதி தெரிகிறதே! (ரொம்ப குழம்பியிருக்கேனோ??) இது குறித்து விளக்குங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 18:05, 30 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நானறிந்தவரை வழிமாற்றின்றி நகர்த்தல் வசதி நிர்வாகிகள் மற்றும் உலகளாவிய முன்னிலையாக்கர்கள் ஆகிய குழுவினற்கு மட்டுமே உண்டு. பயனர்கள் வழிமாற்றின் மேலாக (பக்க வரலாறு ஏதும் இல்லையெனில்) நகர்த்தலாம். இதைத்தான் நீங்கள் கூறுகிறீர்கள் என நினைக்கிறேன். கன்னட விக்கியில் ரோல்பேக் வருவதற்கும் வாய்ப்பில்லை (Screen shot இணைக்க முடியுமா?). மேலும் விக்கியில் தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்கள் (Auto confirmed users) குழு மட்டுமே தானாக (குறிப்பிட்ட தொகுப்பு மற்றும் கால அளவை பொறுத்து) வருவது. மற்ற அனைத்து அனுமதிகளும் மற்றவர்களால் வழங்கப்படுவது.--சண்முகம்ப7 (பேச்சு) 18:45, 30 சனவரி 2013 (UTC)[பதிலளி]
நான் தான் உளறிவிட்டேன் என்று நினைக்கிறேன். வழிமாற்றின் மேலாகவே நகர்த்தியுள்ளேன் (வழிமாற்றின்றி அல்ல). கன்னட விக்கியிலும் கூட மீளமைத்தலைத் தான் தவறாகக் குறிப்பிட்டேன் போலும். படம் இணைக்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:07, 31 சனவரி 2013 (UTC)[பதிலளி]

Help turn ideas into grants in the new IdeaLab தொகு

 

I apologize if this message is not in your language. Please help translate it.

  • Do you have an idea for a project to improve this community or website?
  • Do you think you could complete your idea if only you had some funding?
  • Do you want to help other people turn their ideas into project plans or grant proposals?

Please join us in the IdeaLab, an incubator for project ideas and Individual Engagement Grant proposals.

The Wikimedia Foundation is seeking new ideas and proposals for Individual Engagement Grants. These grants fund individuals or small groups to complete projects that help improve this community. If interested, please submit a completed proposal by February 15, 2013. Please visit https://meta.wikimedia.org/wiki/Grants:IEG for more information.

Thanks! --Siko Bouterse, Head of Individual Engagement Grants, Wikimedia Foundation 20:54, 30 சனவரி 2013 (UTC)[பதிலளி]

Distributed via Global message delivery. (Wrong page? Correct it here.)


ஆலமரத்தடி, ஒத்தாசை பக்கங்களுக்கான இணைப்புகளை காணவில்லை தொகு

கடந்த 2, 3 நாட்களாக ஆலமரத்தடி, ஒத்தாசை பக்கங்களுக்கான இணைப்புகளை காணவில்லை சரிசெய்யவும். (ஒத்தாசை பக்கம் எல்லா பக்கங்களிலும் இடதுபுறத்திலுள்ள உதவி -> உதவி கோருக மூலம் பெற முடிகிறது. ஆனால் ஆலமரத்தடியை அணுக எங்கும் இணைப்பு இல்லை :(. நான் கவனிக்க தவறியிருந்தால் எங்கு மாற்றப்பட்டிருக்கிறது என தெளிவுபடுத்தவும். ) இந்த கோரிக்கையை எழுப்ப கூட தேடலில் ஆலமரத்தடியை தேடி எடுத்து பின்னர் பதிவுசெய்துள்ளேன். கி. கார்த்திகேயன் (பேச்சு) 15:16, 7 பெப்ரவரி 2013 (UTC)

ஆம். கவனிப்புப் பட்டியலில் ஆலமரத்தடி இருந்தாலும் அது குறித்த மாற்றங்களும் கவனிப்புப் பட்டியலில் இடம்பெறவில்லை. நானும் தேடிக்கொண்டிருந்தேன். நன்றி கார்த்திகேயன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:22, 7 பெப்ரவரி 2013 (UTC)

@கார்த்திகேயன் : பக்க பட்டையில் பிற --> தொடர்பு கொள்க --சண்முகம்ப7 (பேச்சு) 18:07, 7 பெப்ரவரி 2013 (UTC)
நன்றி... :-) கி. கார்த்திகேயன் (பேச்சு) 18:39, 7 பெப்ரவரி 2013 (UTC)
ஆலமரத்தடியையும் இன்னும் சில பக்கங்களையும் ஒளித்து வைத்ததற்கு வருந்துகிறேன் :) தளத்தில் தலைப்புப் பகுதியில் ஏகப்பட்ட இணைப்புகள் கொச கொச என்று இருந்ததால் அவற்றை இடப்பக்கப் பட்டைக்கு நகர்த்தியுள்ளேன். ஒவ்வொரு பக்கமும் பார்க்கப்படும் பார்வைகள் அடிப்படையிலும், நாம் பயனர்களை என்ன செய்ய வைக்க முயல்கிறோம் என்ற அடிப்படையிலும் பக்கப்பட்டை இணைப்புகளின் வரிசையை மாற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு சில நாட்கள் / வார காலத்தில் இடப்பக்க இணைப்புகள் நிலையாக இருக்கும். ஆலமரத்தடி, ஒத்தாசைப் பக்கம் போன்ற பெயர்கள் புதியவர்களுக்குப் புரியுமோ என்ற எண்ணத்திலேயே பொதுவான பெயரால் குறித்துள்ளேன். தொடர் பங்களிப்பாளர்கள் இப்பக்கங்களை அணுக WP:AM , WP:HD போன்ற குறுக்குவழிகளைப் பயன்படுத்தலாம்--இரவி (பேச்சு) 04:57, 8 பெப்ரவரி 2013 (UTC)
மிக்க நன்றி இரவி.. புரிந்தது. :)

புகுபதிகை செய்து கட்டுரை எழுதுவதில் சிக்கல் தொகு

கடந்த இரண்டு, மூன்று நாட்களாக புகுபதிகை செய்து புதிய கட்டுரை துவங்கமுடியவில்லை. ஒரு கட்டுரையை தேடி அது கிடைக்காமல், அந்த கட்டுரையைத்தொடங்கவும் என வரும் இணைப்பில் சென்றாலும் (அ) எல்லாபக்கத்திலும் வரும் பங்களிப்பு -> புதிய கட்டுரை எழுதுக என்பதின் மூலம் எழுத முயற்ச்சித்தாலும் "index.php" என்ற கோப்பு தரவிறக்கமாகிறதே தவிர எழுதுவதற்கான அந்த சாளரம் வருவதில்லை.. நான் கூகுள் குரோம், பயர்பாக்சு இரண்டு உலாவிகளிலும் முயன்றுவிட்டேன் பயனேதுமில்லை.. :(. நான் லினக்சு இயங்குதளம் பயன்படுத்துகிறேன். இந்த பிரச்சனை வேறுயாருக்கேனும் உள்ளதா...? நிர்வாகி அணுக்கம் உள்ளோர் அல்லது விக்கியின் தொழில்நுட்ப விசயங்களை கையாளுவோர் விரைந்து சரி செய்யவும்.
குறிப்பு: இந்த பிரச்சனை புகுபதிகை செய்யாமல் ஐபி முகவரியுடன் கட்டுரை துவங்கும்போது இல்லை. கி. கார்த்திகேயன் (பேச்சு) 15:16, 7 பெப்ரவரி 2013 (UTC)

எனக்கு இந்தப் பிரச்சினை இல்லையே? வேறு கணினியிலும் private browsing / incognito modeல் முயன்று பார்ப்பது உதவுகிறதா?--இரவி (பேச்சு) 04:57, 8 பெப்ரவரி 2013 (UTC)
மற்றவர்களுக்கும் உதவும் என்பதால் பகிர்ந்துகொள்கிறேன்.. பிரச்சனை தீர்ந்துவிட்டது( ஆம், பிரச்சனை எனக்கு மட்டும்தான் இருந்திருக்கிறது.. ;-) ). சில நாட்களுக்கு முன்பு நான் என் விருப்பத்தேர்வுகளை மாற்றியமைத்தேன், அதில் எந்த தேர்வோதான் இதற்கு காரணமாக இருந்திருக்கிறது. நான் திரும்பவும் எல்லோருக்கும் பொதுவான வடிவமைப்பைத் திரும்பக்கொண்டுவரவும் என விருப்பத்தேர்வுகளை திருத்தியபிறகு சரியாகிவிட்டது. நன்றி. கி. கார்த்திகேயன் (பேச்சு) 12:15, 8 பெப்ரவரி 2013 (UTC)