விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு92
நெற்றிக் கண் திறப்பினும்...
தொகுமேலதிக விபரங்களுக்கு இங்கே நெற்றிக் கண் திறப்பினும்... --46.16.33.233 18:11, 16 அக்டோபர் 2013 (UTC)
தற்போது விக்கிபீடியாவின் போக்கில் குழப்பத்தை ஏற்படுத்தியது யார்? இதற்கு நியாயம் வேண்டும். ஓர் குற்றவாளியை நியாயப்படுத்தி பல பேரின் அதிருப்தி விக்கிக்கு வேண்டாம்.
சுப்பிரமணி:
- இவர் பயனர்களை அனுசரித்துப் போகும் போக்கற்றவர். கட்டுரை உருவாக்கி ஒரு சில நிமிடங்களில் நீக்கி விடுவார் அல்லது நீக்கல் / விக்கியாக்கம் வார்ப்புரு இட்டுவிடுவார். இன்று அவர் உருவாக்கிய கட்டுரைகள் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளன. அவர் அன்று விதைத்தது இன்று அறுக்கிறார். மற்ற நிருவாகிகள் போன்று ஏன் இவரால் நடந்து கொள்ள முடியவில்லை? இவர் என்ன அதிகாரம் மிக்க மேற்பார்வையாளரா?
- விக்கி பற்றி அவதூறு பரப்பிய தமிழ் கம்ப்யூட்டர் இதழில் வெளியிட்டுள்ளார். இதற்காக இவர் மீது விக்கி என்ன நடவடிக்கை எடுத்தது? விக்கிக்கு பணி செய்வதாகப் பிதற்றும் அவரின் பதில் என்ன? அவரை ஒருவிதமாகவும், புதுப் பயனர்களை வேறு விதமாகவும் விக்கி நோக்குகிறதா? நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே!
- முதற்பக்க கட்டுரைகள் தரமற்றவை என்பதற்காக கம்ப்யூட்டர் இதழில் விக்கியை மட்டம் தட்டிய இவர் தரமற்ற முதற்பக்க கட்டுரைகளை காட்சிப்படுத்தினாரே இவரைக் கேள்வி கேட்க எந்த ஒரு பயனரும் முன் வரவில்லையே. இவரின் சர்வாதிகாரப் போக்குக்கு என்ன நடடிக்கை எடுப்பது?
- தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் கருத்திடலில் குறை கண்ட இவரும் ஒரு பத்தாண்டு கொண்டாட்ட ஒருங்கிணைப்பாளர் அல்லவா? குறைகள் இருந்தால் இவரும் அல்லவா பொறுப்பெடுக்க வேண்டும்?
- பத்தாண்டு கொண்டாட்ட கருத்தில் இவர் கையாண்ட சொற்களின் வன் போக்கை என்னவென்று சொல்வது? என்னுடைய தனித் திறனுக்குக் கிடைக்கக் கூடியவை எல்லாம் தமிழ் விக்கிப்பீடியாவினால்தான் கிடைத்தது என்கிற தவறான கருத்து ஏற்பட்டு விடக் கூடாதே என்ற இவர் திரும்பவும் வர விரும்பியது எதற்காக? விக்கிப்பீடியா இல்லாவிட்டால் இவருக்கு திறன் இல்லை என்கிறாரா?
- அண்மையில் கருத்திட்ட 786haja & Vaarana18 ஆகிய பயனர்கள் யார்? இப்போது எங்கே போனார்கள்? இவர்களுக்கும் சுப்பிரமணிக்கும் தொடர்பு இல்லையா?
- உன்னுடைய...., முட்டாள் வழங்கும்... போன்ற நற்பண்பு அற்ற சொற்களை இவர் பயன்படுத்தினாரே. இவருக்கு யாரும் புத்திமதி செய்ய மாட்டீர்களா?
- இவர் கட்டுரைகளில் பல மிகச் சிறிய அல்லது தகுந்த ஆதாரம் இல்லாத கட்டுரைகள். இதை விக்கி ஏற்றுக் கொள்கிறதா? இவர் மற்றவர்களின் கட்டுரையை நீக்கலாம் என்றால், ஏன் இவரின் கட்டுரைகள் நீக்கப்படக்கூடாது? அதைவிடுத்து ஐபியை தடைசெய்வதும், கட்டுரையை மீளமைப்பதும் சரியான செயலா?
- வன் சொற்கள், சுய பெருமை பேசும் இவரின் செயற்பாடுகள் விக்கிக்கு ஏற்றதா? இது ஒரு நிருவாகிக்கு ஏற்றதா?
- தனக்கு இ-மெயில் வந்ததாகக் குறிப்பிட்டரே. அந்த திரைக்காட்சியில் இருந்த அனுப்புனரின் இ-மெயில் ஐடி பிழையானது என்பதை யாரும் கவனித்தீர்களா? தேனி நாடகமா இது?
- இன்னும் பல...
- இவரின் பிழைகளுக்கு விக்கி என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது?
- இவரின் விக்கி விதிக்குப் புறப்பான கட்டுரைகள் மட்டில் விக்கியின் நிலைபாடு என்ன?
- நீங்கள் தவறாக எடுக்கும் முடிவுகள் விக்கிக்கு இடையூறாகவும், பிழையான உதாரணமாகவும் மாறிவிடக் கூடும்.
- இவரின் நிருவாக அணுக்கத்தை மீளவும் பெறுங்கள் அல்லது அவராகவே விலகிக் கொள்வது, வரவிருக்கும் சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும்.
@சுப்பிரமணி, உங்களுக்கு ராகு காலம் தொடங்கிவிட்டது! விக்கிப்பீடியாவிற்கு உதவுவது நீங்கள் எடுக்கும் முடிவில்தான் உள்ளது!
--46.16.33.233 18:09, 16 அக்டோபர் 2013 (UTC)
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. தயந்து "ராகு காலம் தொடங்கிவிட்டது" போன்ற தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம். விக்கி நிர்வாகிகள் தவறாக நடந்து கொண்டால் அதைப் பற்றி இங்கு முறையீடு செய்யலாம்.
- தவறாக நீக்கப்பட்டதாக நீங்கள் கருதும் கட்டுரைகள் எவை? எல்லோரும் விக்கியின் பொது விதிகளுக்கும் வழிகாட்டல்களுக்கும் உட்பட்டே நடக்கவேண்டும்.
- இதை அவதூறாக கருதவில்லை. இந்த விமர்சனங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு, முதற்பக்க ஒருங்கிணைப்பில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
- நிகழ்வு நிறைகள் குறைகள் ஏற்கனவே மிக விரிவாக அலசப்பட்டுள்ளன. உங்களின் கருத்துக்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
- சொற்களின் வன்போக்கு இருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டியது. தவிர்க்கப்பட வேண்டியது. உங்களின் மற்றைய கேள்வி, தனிமனிதத் தாக்குதலாகவே நான் பாக்கிறேன்.
- குறிப்பான ஆதாரங்கள் இருந்தால் முன்வையுங்கள். மொட்டையாக குற்றம் சாட்டுதலைத் தவிர்த்தல் நன்று.
- மீண்டும், யார் தனிமனிதத் தாக்குதல்கள் செய்தாலும் அவை கண்டிக்கப்பட வேண்டியவையே.
- குறிப்பான கட்டுரைகளைச் சுட்டவும். அக் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் விபரங்களைத் தரவும்.
- வன் சொற்கள், நிர்வாகிகள் உட்பட எந்தப் பயனருக்கும் ஏற்றது அல்ல.
- தேனியின் நிர்வாக அணுக்கம் தொடர்பாக உங்களின் தனிப்பட்ட கருத்துக்கு நன்றி. அக் கருத்து பெரும்பான்மைப் பயனர்களின் கருத்து இல்லை என்றே நான் நினைக்கிறேன். பெரும்பான்மைப் பயனர்களின் கருத்தாக அமையும் என்று நீங்கள் கருதுவீர்கள் என்றால் இங்கே உங்கள் கருத்துக்களைப் பகிரலாம். உங்கள் கருத்துக்கள் வலுவாகப் பதியப்பட்டுள்ளன. இந்தத் தொனியில் உரையாடல்களைத் தொடர்பது விக்கிக்கு நலம் விளைவிக்காது என்பது என் கருத்து. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:27, 16 அக்டோபர் 2013 (UTC)
- தன்னை யாரென்று அடையாளம் காட்டாமல் என் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தி வரும் தமிழ் விக்கிப்பீடியா பயனர் யாரென்பதை நான் அவருடைய உரையாடல் (எழுத்து நடையினைக் கொண்டு) மூலம் அறிந்து கொண்டேன். என்னைப் போலவே இந்த உரையாடல்களைக் கவனித்து வரும் மேலும் பல பயனர்களும் அறிந்திருக்கக் கூடும். இவர் இங்கு மட்டுமில்லாது, என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கும் போலியான மின்னஞ்சல் (என்னுடைய மின்னஞ்சல் பெயரிலேயே மின்னஞ்சல்களை உருவாக்கிக் கொண்டால் தன்னை யாரென்று கண்டுபிடிக்க முடியாது என நினைக்கிறார் போல் இருக்கிறது. அவருடைய உரையாடல் பகுதியே இவர் யாரென்பதை முழுமையாகக் காட்டிக் கொடுத்து விட்டது என்பதைப் புரிந்து கொண்டால் நல்லது) மூலம் மிரட்டல் மின்னஞ்சல், அசிங்கமான சொற்களுடனான மின்னஞ்சல் போன்றவைகளைத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்கிறார். (இது தொடர்ந்தால் இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்) என்னுடைய நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுவதற்கான பரிந்துரையினை அவருடைய போலியான முகமூடிகளைத் தூக்கியெறிந்து விட்டு அவருடைய உண்மையான பயனர் பெயரில் பரிந்துரைக்கலாம். வரவேற்கிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:24, 17 அக்டோபர் 2013 (UTC)
- அடையாளம் காட்டாத பயனரே, கட்டுரைப் பக்கங்களில் நீங்கள் எழுப்பிய கேள்விகள் தொடர்பான பிற பயனர்களின் உரையாடலை இங்கு காணலாம். எனவே, உங்களின் முறையான கேள்விகள் கவனத்தில் கொள்ளப்படுகிறது என்பதைக் கருத்தில் கொள்ளவும். அடையாளம் காட்டாமல் செயல்படுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், உங்கள் கேள்விகளைப் பண்புடனும் முறையாகவும் முன்வைப்பதன் மூலமே, விக்கிச் சமூகத்தின் முறையான பதிலையும் நடவடிக்கையையும் பெற்றுக் கொள்ள முடியும். நன்றி.--இரவி (பேச்சு) 03:51, 17 அக்டோபர் 2013 (UTC)
- தேனி சுப்பிரமணி, //தன்னை யாரென்று அடையாளம் காட்டாமல் என் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தி வரும் தமிழ் விக்கிப்பீடியா பயனர் யாரென்பதை நான் அவருடைய உரையாடல் (எழுத்து நடையினைக் கொண்டு) மூலம் அறிந்து கொண்டேன். // என்று பொத்தாம் பொதுவாக கூறுவதன் மூலம் விக்கிச் சமூகத்தில் தேவையற்ற குழப்பம் வரும். உங்களிடம் தக்க ஆதாரம் இருந்தால் அதனை முன்வையுங்கள். இல்லையேல், பொதுப்பட குற்றம் சாட்டுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். அடையாளம் காட்டாத பயனரின் கேள்விகள் முறையானவை என்று நீங்கள் கருதினால் அவற்றுக்கு முறையாக மறுமொழி தாருங்கள். இல்லை, அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அடையாளம் காட்டா பயனர் எல்லை மீறும் இடங்களில் மற்ற நிருவாகிகள் கவனித்து அவரது அணுக்கத்தைத் தடுத்தே வருகிறார்கள். நன்றி. --இரவி (பேச்சு) 03:54, 17 அக்டோபர் 2013 (UTC)
- ஆம், தேனி மு. சுப்பிரமணி சந்தேகத்தின் அடிப்படையில் மேலே எழுதியதைத் திரும்பப்பெற வேண்டும். இல்லை, அந்தக் கருத்தில் அவர் உறுதியாக இருந்தால், அவர் யாரைக் குறித்து எழுதினார் என்றும் எந்த அடிப்படையில் எழுதினார் என்றும் தெளிவுபடுத்த வேண்டும். இவ்விரண்டும் செய்யாவிட்டால் அவர்மீது நடவடிக்கை கோரலாம். -- சுந்தர் \பேச்சு 05:44, 17 அக்டோபர் 2013 (UTC)
- தேனி சுப்பிரமணி, //தன்னை யாரென்று அடையாளம் காட்டாமல் என் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தி வரும் தமிழ் விக்கிப்பீடியா பயனர் யாரென்பதை நான் அவருடைய உரையாடல் (எழுத்து நடையினைக் கொண்டு) மூலம் அறிந்து கொண்டேன். // என்று பொத்தாம் பொதுவாக கூறுவதன் மூலம் விக்கிச் சமூகத்தில் தேவையற்ற குழப்பம் வரும். உங்களிடம் தக்க ஆதாரம் இருந்தால் அதனை முன்வையுங்கள். இல்லையேல், பொதுப்பட குற்றம் சாட்டுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். அடையாளம் காட்டாத பயனரின் கேள்விகள் முறையானவை என்று நீங்கள் கருதினால் அவற்றுக்கு முறையாக மறுமொழி தாருங்கள். இல்லை, அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அடையாளம் காட்டா பயனர் எல்லை மீறும் இடங்களில் மற்ற நிருவாகிகள் கவனித்து அவரது அணுக்கத்தைத் தடுத்தே வருகிறார்கள். நன்றி. --இரவி (பேச்சு) 03:54, 17 அக்டோபர் 2013 (UTC)
கருத்துக்களை இட்ட அதிகாரிகள், நிர்வாகிகள், பயனர்களுக்கு நன்றிகள். இங்கு இரு கருத்துக்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
- எல்லா IP பயனரும் நான் அல்ல. ஆகவே எல்லாவற்றுக்கும் நான் பதிலாளியல்ல.
- வன் சொற் பிரயோகத்தில் நானும் ஈடுபட்டுள்ளேன். காரணம் - என் பேச்சை யாரும் கண்டுகொள்ளாது தடுப்பதிலும், தொகுப்பை மீளமைபப்திலும் ஈடுபட்டனர். மேலும் சுப்பிரமணியும் பதில் தாக்குதலில் ஈடுபட்டார். பின்னர் முறையாக கருத்திட்ட அதிகாரிகளுக்கு நன்றிகள். ஆயினும், வன் சொற் பிரயோகத்தில் ஈடுபட்டதற்காக மன்னிப்புக் கேட்கிறேன்.
தக்க இடத்தில் உரையாடுவேன்...... --Rajan s (பேச்சு) 15:13, 17 அக்டோபர் 2013 (UTC)
பார்க்கவும் - விக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்#Theni.M.Subramani --Rajan s (பேச்சு) 15:36, 17 அக்டோபர் 2013 (UTC)
தேனி.மு.சுப்பிரமணியின் பதில்கள்
தொகு- தேவையற்றதை நீக்கித்தான் ஆக வேண்டும். குப்பையைச் சேர்த்துக் கொண்டிருக்க முடியாது. (நான் தவறுதலாக நீக்கியிருந்தாலும், பிற பயனர் நிருவாகிகள் அதை மீட்டெடுத்து விடுவர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்). விக்கி நடையில் இல்லாததை விக்கியாக்கம் என்று போடாமல் சிறப்புக் கட்டுரை என்றா போட முடியும்? என்னுடைய கட்டுரையில் குறை காணப்பட்டால் பிற பயனர் நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்திருப்பார்கள் (இங்கும் என் மீது தனித்தாக்குதல்கள்)
- தமிழ் கம்ப்யூட்டர் இதழில் முதற்பக்கக் கட்டுரையின் நிலை தெரிவிக்கப்பட்டது. அடுத்த இதழில் வெளியான அடுத்த பகுதியைப் படித்தீர்களா? நான் விக்கிக்குச் செய்த பணிகளைப் பலரும் அறிவர். பொறாமையுடன் பார்ப்பவர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்கிற நிலையில் இருப்பதும் உண்டு. (இங்கும் என் மீதான தனித் தாக்குதல்களைக் கவனத்தில் கொள்க)
- தமிழ் கம்ப்யூட்டர் இதழில் மட்டுமல்ல, ஆலமரத்தடியிலும் முதற்பக்கக் கட்டுரையின் நிலை தெரிவிக்கப்பட்டது. இதன் பின்பு முதற்பக்கக் கட்டுரை மட்டுமில்லை முதற்பக்கங்களின் அனைத்துத் தகவலுக்கும் மாற்றங்களுக்கான சில பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன. (இங்கும் என் மீது தனித்தாக்குதல்கள்)
- பெயரளவில் ஒருங்கிணைப்பாளராகச் சேர்க்கப்பட்டிருந்தேன். குறைகளிருந்தால் சொல்லாமல்...என்ன செய்வது? நான் எதையும் மறைத்துச் செயல்பட விரும்புவதில்லை. அடையாளத்தைக் கூட மறைத்துக் கொள்வதில் விருப்பமில்லை (இங்கு தாங்கள் ஒருங்கிணைப்பாளராகவோ அல்லது அவர்களில் ஒருவரின் தீவிர ஆதரவாளராகவோ இருந்தால் தெரிவிக்கலாம்)
- நான் வெளியேறத்தான் விரும்பினேன். என்ன செய்வது? தங்களைப் போன்ற விசமிகள் வரவு என்னை மீண்டும் இங்கு கொண்டு வந்து விட்டுவிட்டது. என்னுடைய தனித்திறன் குறித்து எனக்கு மட்டுமில்லை... அது பலருக்கும் தெரியும். அதனால்தான் பல இலக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறேன். தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்றிருக்கிறேன். இன்னும் பல பரிசுகளும்,விருதுகளும் பெறுவேன் என்கிற நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
- தங்களின் எண்ணம் பொய்யாகிப் போய்விட்டது...!
- என்னுடைய பேச்சுப்பக்கத்தில் விக்கியன்பு மூலம் தாங்கள் வழங்கிய நடிகர் பட்டத்தைத் திருப்பி அளிக்கும் போது நானும் பதிலுக்கு வழங்க வேண்டியதாகி விட்டது.
- விக்கிப்பீடியாவிற்குத் தகுதியில்லாத கட்டுரை என்று கருதும் எந்தக் கட்டுரையையும் நீக்கலாம். இதை நானே வரவேற்கிறேன்...!
- நான் செய்த செயலைச் சொன்னால் அது சுய பெருமையா? இருக்கட்டும். இதற்கும் விக்கி நிருவாகிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? தாங்கள் விக்கிக்கு என்ன செய்திருக்கிறீர்கள் என பட்டியலிடலாமே...?
- இந்த மின்னஞ்சல்கள் உண்மையா பொய்யா என்று அறிவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த மின்னஞ்சல்கள் அனைத்தும் விக்கிப்பீடியாவின் முக்கிய நிர்வாகிகள் சிலருக்கு Forward செய்யப்பட்டுள்ளது.
- நாடகம் போடுபவரும் நடிகரும் யார் என்பது கூடிய விரைவில் தெரிந்துவிடும்.
//இவரின் பிழைகளுக்கு விக்கி என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது?//
- நானும் இதைத்தான் கேட்கிறேன். தங்களின் தேவையற்ற தனிமனிதத் தாக்குதலுக்கு விக்கி என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது?
//இவரின் விக்கி விதிக்குப் புறப்பான கட்டுரைகள் மட்டில் விக்கியின் நிலைபாடு என்ன?//
- நிருவாகிகள் முடிவு செய்யட்டும்.
//நீங்கள் தவறாக எடுக்கும் முடிவுகள் விக்கிக்கு இடையூறாகவும், பிழையான உதாரணமாகவும் மாறிவிடக் கூடும்.//
- உங்களுக்கு மட்டும் ஆதரவாக முடிவெடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்...
//இவரின் நிருவாக அணுக்கத்தை மீளவும் பெறுங்கள் அல்லது அவராகவே விலகிக் கொள்வது, வரவிருக்கும் சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும்.//
- நிருவாக அணுக்கத்தினை மீளப் பெற்றாலும் எனக்குக் கவலையில்லை... நான் உண்மையில் இந்தப் பிரச்சனையால் விலகிக் கொள்ள வேண்டுமென்றுதான் நினைத்திருந்தேன். இப்போது என் எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டேன். நான் ஏன் விலகிக் கொள்ள வேண்டும்? எந்தச் சிக்கலையும் எதிர் கொள்ளத் தயாராக இருக்கிறேன். தாங்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம்...!
//@சுப்பிரமணி, உங்களுக்கு ராகு காலம் தொடங்கிவிட்டது! விக்கிப்பீடியாவிற்கு உதவுவது நீங்கள் எடுக்கும் முடிவில்தான் உள்ளது!//
- ஜோதிடம், கடவுள் நம்பிக்கை போன்றவைகளில் எனக்கு நம்பிக்கை கிடையாது. எந்தக் காலத்தையும் எனக்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ள முடியும்...! எதையும் சந்திப்பது, ஏன் சாதிப்பது என்பதுதான் என் முடிவு...!
--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 19:52, 22 அக்டோபர் 2013 (UTC)
தெளிவு தேவை
தொகு- //தமிழ் கம்ப்யூட்டர் இதழில் மட்டுமல்ல, ஆலமரத்தடியிலும் முதற்பக்கக் கட்டுரையின் நிலை தெரிவிக்கப்பட்டது. இதன் பின்பு முதற்பக்கக் கட்டுரை மட்டுமில்லை முதற்பக்கங்களின் அனைத்துத் தகவலுக்கும் மாற்றங்களுக்கான சில பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன. (இங்கும் என் மீது தனித்தாக்குதல்கள்)//
- இதற்குத் தெளிவான பதில்கள் தேவை. எப்படியான தனித்தாக்குதல்கள்? யார் தனித்தாக்குதல்கள் நடத்தியது? தனித்தாக்குதல்கள் ஏற்கெனவே முறையிடப்பட்டுள்ளதா?
- //நாடகம் போடுபவரும் நடிகரும் யார் என்பது கூடிய விரைவில் தெரிந்துவிடும்//
- //தங்களைப் போன்ற விசமிகள்//
- மீண்டும் விக்கி நடைமுறைக்குப் புறம்பான, ஆதாரமற்ற உரையாடல். இது கண்டிக்கத்தக்கது. விசமிகள் என்று பன்மையில் குறிப்பிடப்பட்டவர்கள் யார்?
--Anton·٠•●♥Talk♥●•٠· 05:58, 24 அக்டோபர் 2013 (UTC)
- அன்ரன், தேனியாரின் பிரச்சினையை சுந்தர் கவனித்து வருகிறார். அவர் விரைவில் ஒரு சிறந்த முடிவை எடுப்பார் என அனைவரும் நம்புகிறோம். அதன் பின்னர் உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.--Kanags \உரையாடுக 06:21, 24 அக்டோபர் 2013 (UTC)
- முதற்பக்க இற்றை குறித்த உரையாடலை இரு தடவைகள் நான் ஆலமரத்தடியில் தெரிவித்திருந்தேன். ஆகவே தேனியாரின் பிரச்சினைக்கு அப்பால் தெளிவு தேவைப்பட்டது எனக்கு. வேண்டுமென்றால், 2வது கேள்வியை பிற்போடலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 06:33, 24 அக்டோபர் 2013 (UTC)
- சிறீதரன், சுந்தர் தற்போது விக்கி விடுப்பில் உள்ளார். தவிர, பல்வேறு பிரச்சினைகளுக்கு எவ்வாறு படிமுறையாகத் தீர்வு காண்பது, எவ்வாறு பிணக்குகளைத் தீர்ப்பது என்பது தொடர்பான வழிமுறைகளையும் கொள்கைகளையும் உருவாக்கவே சுந்தர் முனைந்து வருகிறார். இங்கு சுந்தர் எடுக்க வேண்டிய முடிவு என்று எதுவும் இல்லை. மாறாக, அவர் முன்வைக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி கேள்விகள் கேட்பதும் பதில்களைத் தருவதுமே தீர்வுகளைத் தரும். எனவே, அன்டனோ யாருமோ கேட்கும் கேள்விகள் முறையானவையாக இருக்கும் பட்சத்தில், அதற்கான மறுமொழியைத் தருமாறு உரியவர்களை வலியுறுத்துங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 17:15, 24 அக்டோபர் 2013 (UTC)
- நான்கு நாட்கள் அமைதியாக இருந்த தமிழ் விக்கி மீண்டும் களை கட்ட ஆரம்பிக்கிறது. நன்றி.--Kanags \உரையாடுக 21:30, 24 அக்டோபர் 2013 (UTC)
- சிறீதரன், சுந்தர் தற்போது விக்கி விடுப்பில் உள்ளார். தவிர, பல்வேறு பிரச்சினைகளுக்கு எவ்வாறு படிமுறையாகத் தீர்வு காண்பது, எவ்வாறு பிணக்குகளைத் தீர்ப்பது என்பது தொடர்பான வழிமுறைகளையும் கொள்கைகளையும் உருவாக்கவே சுந்தர் முனைந்து வருகிறார். இங்கு சுந்தர் எடுக்க வேண்டிய முடிவு என்று எதுவும் இல்லை. மாறாக, அவர் முன்வைக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி கேள்விகள் கேட்பதும் பதில்களைத் தருவதுமே தீர்வுகளைத் தரும். எனவே, அன்டனோ யாருமோ கேட்கும் கேள்விகள் முறையானவையாக இருக்கும் பட்சத்தில், அதற்கான மறுமொழியைத் தருமாறு உரியவர்களை வலியுறுத்துங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 17:15, 24 அக்டோபர் 2013 (UTC)
- முதற்பக்க இற்றை குறித்த உரையாடலை இரு தடவைகள் நான் ஆலமரத்தடியில் தெரிவித்திருந்தேன். ஆகவே தேனியாரின் பிரச்சினைக்கு அப்பால் தெளிவு தேவைப்பட்டது எனக்கு. வேண்டுமென்றால், 2வது கேள்வியை பிற்போடலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 06:33, 24 அக்டோபர் 2013 (UTC)
- அன்ரன், தேனியாரின் பிரச்சினையை சுந்தர் கவனித்து வருகிறார். அவர் விரைவில் ஒரு சிறந்த முடிவை எடுப்பார் என அனைவரும் நம்புகிறோம். அதன் பின்னர் உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.--Kanags \உரையாடுக 06:21, 24 அக்டோபர் 2013 (UTC)
அண்டன், உங்கள் கேள்வியை ஒன்பதாவதாக வையுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 23:53, 24 அக்டோபர் 2013 (UTC)
இ.நெ (IP) அனானி புரொக்சி முகவரிப் பயனர்கள்
தொகுஅனானி புரொக்சி இ.நெ (IP) முகவரி பயன்படுத்தல் சிலநாடுகளில் சட்டப்படி குற்றம். பொதுவாக இ.நெ (IP) முகவரி மூலம் பயனரின் இருப்பிடம் (Geo location) அறியலாம். ஆனால் அதை மறைக்க அனானி புரொக்சி வழங்கிகளைப் பயன்படுத்தி விக்கிபீடியாவில் குழப்பம் விளைவிப்போரை உடனடியாகத் தடை செய்தல் அவசியமானது.
விக்கிபீடியாவின் கொள்கைப்படி திறந்த அல்லது அனானி புரொக்சி இ.நெ (IP) முகவரிகளைக் கண்டவுடனேயே தடை செய்யலாம். அவர்கள் வாசிப்பதற்குத் தடையேதும் இல்லை, ஆனால் எழுதமுடியாது என்று கருதுகிறேன். நான் படித்த விவரம் சரியானதுதானா என்பதை உறுதிப்படுத்துங்கள். ("Open or anonymising proxies, including Tor, may be blocked from editing for any period at any time" / "Open or anonymous proxies may be blocked on sight.") அண்மையில் "AnchorFree" எனும் நிறுவனத்தின் புரொக்சி வழங்கி முகவரிகளான 46.16.33.233, 204.14.77.236 போன்றவற்றைப் பயன்படுத்தி தமிழ் விக்கியில் "எழுதும்" தன்னை அடையாளம் காட்டாத நபர் ஒரு பயனர் கணக்கு உருவாக்கி தன்னை வெளிப்படுத்தலாம். இல்லாத பட்சத்தில் இதற்குரிய விக்கித் திட்டம் மூலம் (en:Wikipedia:WikiProject_on_open_proxies) அவர் எல்லா விக்கிகளில் இருந்தும் தடை செய்தல் தேவையானது. காண்க: en:Wikipedia:Open_proxies, en:Wikipedia:Blocking_policy#Open_or_anonymous_proxies, en:Wikipedia:WikiProject_on_open_proxies--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 19:35, 16 அக்டோபர் 2013 (UTC)
- சண்முகம், இதனைக் கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 22:18, 16 அக்டோபர் 2013 (UTC)
- அடையாளம் காட்டாத பயனர் என்பதற்காகவே தடை செய்யலாம் எனக் கூறுவதாகத் தெரியவில்லை, செந்தி. நாசவேளையில் ஈடுபடும்போது பயனர் கணக்காக இருந்தாலும் அடையாளம் காட்டாத பயனராக இருந்தாலும் தடை செய்யலாம். சில வேளைகளில் ஐ.பி. முகவரிகள் அலுவலக, கல்வி நிறுவன புராக்ஃசிகளாக இருந்தால் தயங்குவார்கள். ஆனால், இந்த இடமாய புராக்ஃசிகளைப் பொருத்தவரை அந்த த் தயக்கம் வேண்டியதில்லை என்பதையே அங்கு குறிப்பிட்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். உறுதிசெய்ய வேண்டும். மற்றபடி அடையாளம் காட்டும் பயனரானாலும் அடையாளம் காட்டாத பயனரானாலும் பண்போடு பேசுதல் வேண்டும், நன்னயம் கருதுதல் வேண்டும், கைப்பாவையாக இருக்கக் கூடாது. அவ்வாறிருப்பின் அக்கொள்கைகளின்படி நடவடிக்கை எடுக்கலாம். -- சுந்தர் \பேச்சு 02:39, 17 அக்டோபர் 2013 (UTC)
- சுந்தரின் கருத்தை வழிமொழிகிறேன். கட்டுரைப் பக்கங்களில் இது வரை பெரிய விசமத்தனம் ஏதும் நிகழாதபோது இது போன்ற முடிவுகளை எடுக்க நினைப்பது பயனர்களின் நியாயமான கேள்விகளைத் தணிக்கைக்கு உட்படுத்துவதாகவே காண்கிறேன். --இரவி (பேச்சு) 03:56, 17 அக்டோபர் 2013 (UTC)
- அடையாளம் காட்டாத ஆனால் Geo location தெரிந்த பயனர் வேறு, அடையாளம் காட்டாத Geo location தெரியாத பயனர் வேறு என்பதைக் கருத்தில் கொண்டே மேலே எழுதினேன். //இந்த இடமாய புராக்ஃசிகளைப் பொருத்தவரை அந்த த் தயக்கம் வேண்டியதில்லை என்பதையே அங்கு குறிப்பிட்டிருக்கிறார்கள்// சுந்தர் அதைத்தான் நான் சொல்ல முற்பட்டேன். Geo location தெரியாத ஐ.பி. புரொக்சி முகவரிகள் இணையத்தில் பெரும்பாலும் தீங்கு விளைவிக்கும் நோக்கிலேயே பயன்படுத்தப்படுபவை எனக் கருதுகிறேன். இயல்பான ஐ.பி. முகவரிகளைக்கொண்டு தொகுக்கும் பயனர்களைக் கவனிப்போமாயின் அவர்கள் எந்த ஊரில் இருந்து தொகுக்கின்றார்கள் எனும் விவரத்தை அறிய முடிகின்றது. விசமத்தனம் நிகழ்த்தும் நோக்கிலேயே Geo location தெரியாத ஐ.பி. புரொக்சி முகவரிகள் கொண்டு குழப்பம் விளைவிக்கையில் கட்டாயமாகத் தடைசெய்யலாம் என்பதில் உடன்படுகின்றேன்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 17:59, 17 அக்டோபர் 2013 (UTC)
- கட்டுரைப் பக்கங்களில் விசமத்தனம் நிகழ்ந்தால்தான் பிரச்சினை என்றில்லை. அண்மைக் காலங்களில் தமிழ் விக்கியில் அனானிகள் அதைவிடப் பெரிய பயமுறுத்தலாக இருக்கிறார்கள். தனிப்பட்டவர்களைக் குறிவைத்துத் தாக்குவது. அதைக் கேள்வி கேட்க முற்படுபவர்களின் பயனர் பக்கங்களைக் குறிவைப்பது என்று இது விரிவடைந்து கொண்டே போகிறது. மொத்தத்தில் தமிழ் விக்கிப்பீடியாவின் இருப்புக்கே அனானிகள் சவாலாக இருக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன். தமிழ் விக்கியில் பிரச்சினைகளை முன்வைப்பவர்கள் தங்கள் பயனர் பெயரில் நேரடியாக முன்வைப்பதுதான் நேர்மை. அதை விடுத்து முகமூடி போட்டுக்கொண்டு தாக்குதலில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியாது. ---மயூரநாதன் (பேச்சு) 18:16, 17 அக்டோபர் 2013 (UTC)
- மயூரநாதன், இந்தப் பெயரிலி நடவடிக்கைகளுக்கெல்லாம் ஒரு சிறிதும் அஞ்சத்தேவை இல்லை. நம் பணி சற்று கெடுகின்றது என்பது உண்மை. ஆனால் இங்கு பணியாற்றும் பயனர்கள் இவற்றைத் தக்கவாறு மதிப்பிடும் திறம் படைத்தவர்களாகவே இருப்பர் என்பது என் துணிபு. இவர்களின் தீநோக்கு நடவடிக்கைகளைத் தடுக்க பல வழிகள் இருக்கின்றன (மொத்தமாகத் தடுப்பது கடைசி நிலை). புனைப்பெயர் வைத்துக்கொண்டோ உண்மையான பெயர் வைத்துக்கொண்டோ தகாத செயல்களில் இறங்கினால் கட்டாயம் தக்க நடவடிக்கை எடுக்கலாம்.--செல்வா (பேச்சு) 18:39, 17 அக்டோபர் 2013 (UTC)
- விக்கிப்பீடியா அடையாளம் காட்டாமல் பங்களிப்பதற்கான உரிமையை வழங்கும் போது, அவ்வாறு பங்களிப்பவர்களை நேர்மையற்றவர்கள், முகமூடி போட்டு தாக்குகிறார்கள் என்ற வகையில் அழைப்பது தவறு. விக்கிப்பீடியாவில் யார் கூறுகிறார்கள் என்பது முக்கியமில்லை. என்ன கூறப்படுகிறது என்பதே முக்கியம் என்று இருக்கும் போது ஒரு பயனரின் உண்மை அடையாளத்தையும், நிலையான IP முகவரி மூலம் அவரது இருப்பிடத்தையும் அறிய முற்படுவது ஏன்? உண்மையிலேயே இது தான் ஒருவர் நேர்மையாக கருத்துகளை முன்வைப்பதற்கு அச்சுறுத்தலாக இருக்கும். மாறி மாறி வரும் IP முகவரிகளால் நாம் ஒரே பயனரிடம் பேசுகிறோமா பல பயனர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோமா என்று அறிய முடியாததே இதில் உள்ள சிக்கல். ஆனால், இதே சிக்கல் ஒருவரே தன் பெயரில் பல போலிக் கணக்குகளை உருவாக்கிக் கொள்ளும் போதும் வரும் என்பதால் Anonymous IP மூலம் பங்களிக்கிறார்கள் என்பது மட்டும் இங்கு சிக்கல் அன்று. Rajan S என்ற பயனர் தனது பெயரில் முறையான முறையீட்டை முன்வைத்துள்ளார். ஆலமரத்தடியிலும் தேனி சுப்பிரமணியின் பேச்சுப் பக்கத்திலும் நான் உரிய விளக்கங்களைக் கேட்டுள்ளேன். எனவே, இனிமேலும் IP பயனர் மூலமான தாக்குதல் என்று இவ்வுரையாடலை அணுக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இறுதியாக ஒன்று. Anonymous IP மூலம் வந்தாலே ஏதும் நாட்டுக்கு கேடு விளைவிப்பவன், சட்டத்தை மீறுபவன், தீவிரவாதி என்ற நோக்கில் பார்க்க வேண்டாம். கட்டற்ற இயக்கத்தின் பல்வேறு களங்களில் இவ்வாறு செயல்பட்ட Hackerகள் தான் செழுமையான பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 19:24, 17 அக்டோபர் 2013 (UTC)
- விக்கிப்பீடியா அடையாளம் காட்டாமல் பங்களிக்க உரிமை வழங்குவது மற்றவர்களைத் தாக்குவதற்காக அல்ல. அனானிகளுடைய நோக்கம் என்னவென்பது அவர்களுடைய கருத்துக்களில் இருந்து தெளிவாகவே தெரிகிறது. கடுமையான குற்றச் சாட்டுகளை ஒருவர் முன்வைக்கும்போது அவர் என்ன நோக்கத்தில் அக்கருத்துக்களை முன்வைக்கிறார் என்பதை அறிந்துதான் அக் கருத்தின்மீது ஒரு தீர்மானத்துக்கு வரமுடியும். அடையாளம் காட்டாமல் குற்றம் சொல்பவர்கள் தமிழ் விக்கியில் குழப்பத்தை உண்டாக்குவதற்காகவே இத்தகைய கருத்துக்களை இடக்கூடிய சாத்தியம் உள்ளது. அனானிகளினால் முன்வைக்கப்பட்ட சில குற்றச்சாட்டுகளை எந்தப் பயனர் மீதும் வைக்க முடியும். எனவே அனானிகள் மாறிமாறிக் குற்றச் சாட்டுகளை ஒருவர்மீது ஒருவர் சுமத்தித் தமிழ் விக்கிப்பீடியாவைப் போர்களமாக்கி விடுவார்கள். எனவே அனானியாகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்துபவர்களுக்கு மதிப்பளிப்பது நாமே நம் தலையில் மண் அள்ளிப் போட்டுக் கொள்வதற்குச் சமம். இந்தப் போக்கை முளையிலேயே கிள்ளி எறிவது தான் நல்லது. -- மயூரநாதன் (பேச்சு) 03:12, 18 அக்டோபர் 2013 (UTC)
- அடையாளம் காட்டா பயனர்களை நமது வழக்கமான கொள்கைகளுக்குட்பட்டே அணுகலாம். ஆனால் ஒன்றைத் தெளிவாக்க வேண்டும். அடையாளம் காட்டாமல் கருத்திடுவது என்பது இங்கு இருக்கும் பயனர் எவரும் தனது கைப்பாவையாக இயங்கினால் அது கொள்கைக்கு முரணானது. தவறான போக்கும் கூட. எந்தவொரு சிக்கலான விசயமானாலும் அவரவர் கணக்குகளில் இருந்து வெளிப்படையாகவும் பண்புடனும் முன்வைக்க வேண்டும். அதை அவ்வண்ணமே ஏற்றுக் கொள்ளும் வழக்கமும் உருவாக வேண்டும். -- சுந்தர் \பேச்சு 06:00, 18 அக்டோபர் 2013 (UTC) பி.கு. // செந்தி: சுந்தர் அதைத்தான் நான் சொல்ல முற்பட்டேன். // இப்போதுதான் இதைக் கவனித்தேன். நன்றி, செந்தி.
- ஒரு ஐபி w:open proxy என கண்டிப்பாக தெரிந்தால் அதனை எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தடை செய்யலாம். பார்க்க m:NOP.. காரணம் m:NOP#Rationale--சண்முகம்ப7 (பேச்சு) 01:18, 19 அக்டோபர் 2013 (UTC)
- விளக்கத்துக்கும் இணைப்புக்கும் நன்றி, சண்முகம். இப்போது, அந்தக் கணக்கில் இருந்து எதுவும் பதிவுகள் வருவதாகத் தெரியவில்லை. அந்நிலையில் தடை செய்ய வேண்டியதில்லை. செய்தாலும் எனக்கு மறுப்பில்லை. -- சுந்தர் \பேச்சு 07:14, 19 அக்டோபர் 2013 (UTC)
- இது தொடர்பில் கருத்து வேறுபாடுகள் இருப்பதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டாம். தேவைப்பட்டால், இது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் கொள்கை முடிவு எடுக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 01:26, 20 அக்டோபர் 2013 (UTC)
- சண்முகம் சுட்டிய பக்கத்தில் கூறியுள்ளதைக் காணும்பொழுது தடுப்பதே நல்லது என்று தோன்றுகின்றது. யாரேனும் சிறப்பான காரணங்களுக்காக வேண்டும் எனில் அவர்களுக்காகத்தனி உரிமை வழங்கலாமே அன்றி, எதற்காக இதனைத் தடை செய்யாமல் வைத்திருக்க வேண்டும் என்று எனக்கு விளங்கவில்லை. --செல்வா (பேச்சு) 02:05, 20 அக்டோபர் 2013 (UTC)
- அரசியல் நெருக்கடி உள்ள ஒரு நாட்டில் இருந்து அல்லது அந்நாட்டைப் பற்றிய ஒரு சரியான தரவைக் கட்டுரைகளில் தர விரும்புபவருக்கு இந்த வசதி உதவியாக இருக்கும். இதனை ஏற்கனவே உள்ள கணக்கில் இருந்தோ அல்லது அனைத்துப் பங்களிப்புகளையும் ஒரே புனைப்பெயர் கணக்கில் இருந்தோ செய்வதில் சிக்கல் உண்டு. தவிர, பத்தாண்டுகளில் தற்போது ஒரு முறை மட்டுமே இச்சிக்கலை எதிர்கொண்டுள்ளோம். அதனையும் தேவைப்பட்டால் IPகளைத் தடுத்தும் முறையாக பண்புடனும் எதிர்கொள்வதன் மூலமும் சமாளிக்க முடியும். நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதே சான்று. எனவே, தடை தேவையில்லை. --இரவி (பேச்சு) 02:10, 20 அக்டோபர் 2013 (UTC)
- இரவி, ஏற்கனவே இதனை நான் வேறுவிதமாகக் கூறியிருக்கின்றேன் - // யாரேனும் சிறப்பான காரணங்களுக்காக வேண்டும் எனில் அவர்களுக்காகத்தனி உரிமை வழங்கலாமே அன்றி//. மேலும் புனைப்பெயரிலோ தன் பெயரிலோ கணக்கு வைத்திருக்கும் ஒருவர் இப்படியான இடம் காணமுடியாத பெயரிலி கணக்குவழியாகவும் (கைப்பாவை போல்) இயங்கலாமா? அப்படி இப்பொழுது நடக்கவில்லை என்று உறுதியாகக் கூற இடம் உள்ளதா? அறிந்தவர்கள் தெரிவிக்கவும். --செல்வா (பேச்சு) 02:21, 20 அக்டோபர் 2013 (UTC)
- அரசியல் நெருக்கடி உள்ள ஒரு நாட்டில் இருந்து அல்லது அந்நாட்டைப் பற்றிய ஒரு சரியான தரவைக் கட்டுரைகளில் தர விரும்புபவருக்கு இந்த வசதி உதவியாக இருக்கும். இதனை ஏற்கனவே உள்ள கணக்கில் இருந்தோ அல்லது அனைத்துப் பங்களிப்புகளையும் ஒரே புனைப்பெயர் கணக்கில் இருந்தோ செய்வதில் சிக்கல் உண்டு. தவிர, பத்தாண்டுகளில் தற்போது ஒரு முறை மட்டுமே இச்சிக்கலை எதிர்கொண்டுள்ளோம். அதனையும் தேவைப்பட்டால் IPகளைத் தடுத்தும் முறையாக பண்புடனும் எதிர்கொள்வதன் மூலமும் சமாளிக்க முடியும். நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதே சான்று. எனவே, தடை தேவையில்லை. --இரவி (பேச்சு) 02:10, 20 அக்டோபர் 2013 (UTC)
- சண்முகம் சுட்டிய பக்கத்தில் கூறியுள்ளதைக் காணும்பொழுது தடுப்பதே நல்லது என்று தோன்றுகின்றது. யாரேனும் சிறப்பான காரணங்களுக்காக வேண்டும் எனில் அவர்களுக்காகத்தனி உரிமை வழங்கலாமே அன்றி, எதற்காக இதனைத் தடை செய்யாமல் வைத்திருக்க வேண்டும் என்று எனக்கு விளங்கவில்லை. --செல்வா (பேச்சு) 02:05, 20 அக்டோபர் 2013 (UTC)
- இது தொடர்பில் கருத்து வேறுபாடுகள் இருப்பதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டாம். தேவைப்பட்டால், இது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் கொள்கை முடிவு எடுக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 01:26, 20 அக்டோபர் 2013 (UTC)
- விளக்கத்துக்கும் இணைப்புக்கும் நன்றி, சண்முகம். இப்போது, அந்தக் கணக்கில் இருந்து எதுவும் பதிவுகள் வருவதாகத் தெரியவில்லை. அந்நிலையில் தடை செய்ய வேண்டியதில்லை. செய்தாலும் எனக்கு மறுப்பில்லை. -- சுந்தர் \பேச்சு 07:14, 19 அக்டோபர் 2013 (UTC)
- ஒரு ஐபி w:open proxy என கண்டிப்பாக தெரிந்தால் அதனை எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தடை செய்யலாம். பார்க்க m:NOP.. காரணம் m:NOP#Rationale--சண்முகம்ப7 (பேச்சு) 01:18, 19 அக்டோபர் 2013 (UTC)
- "அரசியல் நெருக்கடி உள்ள ஒரு நாட்டில் இருந்து அல்லது அந்நாட்டைப் பற்றிய ஒரு சரியான தரவைக் கட்டுரைகளில் தர விரும்புபவருக்கு இந்த வசதி உதவியாக இருக்கும்." மிகச் சரியே. - Case by Case ஆக அணுக வேண்டும். அதே வேளை, socket puppets கொள்கை இந்தச் சிக்கலைக் கையாள வேண்டும். --Natkeeran (பேச்சு) 02:14, 20 அக்டோபர் 2013 (UTC)
- இங்கு இரண்டு விதமான அனானிகள் பற்றிக் குறிப்பிட வேண்டும். ஒன்று: கைப்பாவை. மற்றது open proxy. இந்த இரண்டையும் வெவ்வேறு பயனர்கள் இங்கு கையாண்டுள்ளனர். எனவே இரண்டுக்கு தனித்தனியே முடிவு எடுக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 02:41, 20 அக்டோபர் 2013 (UTC)
//யாரேனும் சிறப்பான காரணங்களுக்காக வேண்டும் எனில் அவர்களுக்காகத்தனி உரிமை வழங்கலாமே அன்றி//
இந்த வாய்ப்பையே தடை செய்த பிறகு, அவர் தனது எந்த அடையாளத்தை முன்வைத்து எங்கு வந்து இந்த அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியும்?
//மேலும் புனைப்பெயரிலோ தன் பெயரிலோ கணக்கு வைத்திருக்கும் ஒருவர் இப்படியான இடம் காணமுடியாத பெயரிலி கணக்குவழியாகவும் (கைப்பாவை போல்) இயங்கலாமா? //
இயங்கக்கூடாது.
//அப்படி இப்பொழுது நடக்கவில்லை என்று உறுதியாகக் கூற இடம் உள்ளதா? அறிந்தவர்கள் தெரிவிக்கவும். //
கைப்பாவைச் சோதனை செய்யாமல் இது பற்றி கருத்து கூற முடியாது. தங்களுக்கு ஐயம் உள்ள கணக்குகள் மீது பயனர்கள் தாராளமாக கைப்பாவைச் சோதனை அறிக்கை கோரலாம்.
தற்போது இந்த வசதியை முற்றிலும் தடை செய்தால் கூட, சென்னை போன்ற பெருநகரின் பல்வேறு இடங்களில் (வீடு, அலுவலகம், உலாவியகம், திறந்த wifi கூடங்கள்) இருந்து ஒருவர் மாறி மாறி கருத்திடலாம். எனவே, இத்தடையின் மூலம் விசமத்தனத்தைத் தடுக்க முடியும் என்றில்லை. தவிர, ஒரு கொள்கை முடிவு எடுத்து தடை கொண்டு வருவது என்றால் பலவகையான சாத்தியங்களையும் அலசி அதன் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். ஒரே ஒரு நிகழ்வை வைத்து அன்று.--இரவி (பேச்சு) 02:37, 20 அக்டோபர் 2013 (UTC)
- இரவி, தேனி சுப்பிரமணி மீது ஐயப்பட்டு த-வி-யில் முன்பு வெளிப்படையாக அறியாத ஒரு பயனர், புதிய பயனராகப் பதிவு செய்துள்ள பயனர் (Rajan s), கைப்பாவையா என்று அறியக்கேட்டு விடை பெற்றுள்ளார். இதில் தேனி சுப்பிரமணியின் பங்கு ஏதும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. ஆனால் தேனி சுப்பிரமணியைக் குறிவைத்துக் கடுமையாக மறைவழி பெயரிலி கணக்குகள் (176.56.174.80, 74.115.3.62, 46.16.33.233) வழி தாக்குதல்கள் நடத்தியது யார் என்பதற்கு விடை தெரியவில்லை. நெற்றிக்கண் என்று 46.16.33.233 (Anchorfree) என்னும் மறைவழி பெயரிலி கணக்கில் இருந்து ஒருவர் "குற்றச்சாட்டுகளை"யும் கடும் சொற்களையும் கூறினார். ஆனால் இதே "குற்றச்சாட்டுகளை" சிறிதே வேறான வடிவில் Rajan s என்னும் பயனர் இங்கே வைத்துள்ளார். Rajan s என்னும் பயனரரால் ஆலமரத்தடியில் மேலே சுட்டப்பட்ட நெற்றிக்கண் என்னும் பகுதியில் கீழ்க்காணுமாறு கூறுகின்றார்
கருத்துக்களை இட்ட அதிகாரிகள், நிர்வாகிகள், பயனர்களுக்கு நன்றிகள். இங்கு இரு கருத்துக்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எல்லா IP பயனரும் நான் அல்ல. ஆகவே எல்லாவற்றுக்கும் நான் பதிலாளியல்ல. வன் சொற் பிரயோகத்தில் நானும் ஈடுபட்டுள்ளேன். காரணம் - என் பேச்சை யாரும் கண்டுகொள்ளாது தடுப்பதிலும், தொகுப்பை மீளமைபப்திலும் ஈடுபட்டனர். மேலும் சுப்பிரமணியும் பதில் தாக்குதலில் ஈடுபட்டார். பின்னர் முறையாக கருத்திட்ட அதிகாரிகளுக்கு நன்றிகள். ஆயினும், வன் சொற் பிரயோகத்தில் ஈடுபட்டதற்காக மன்னிப்புக் கேட்கிறேன். தக்க இடத்தில் உரையாடுவேன்..
எனவே மறைவழி பெயரிலி கணக்கு 46.16.33.233 (Anchorfree Proy) என்பதில் இருந்து கருத்திட்டவரும், Rajan s என்பவரும் ஒருவராக இருக்க வாய்ப்புகள் மிகவுள்ளது என்று கருதுகின்றேன். Anchorfree Proy யின் பிற பெயரிலி கணக்கெண்கள் வழியாக (மேலே சுட்டப்பட்ட எண்கள்) விக்கி நுணுக்கத்தை நன்கு அறிந்தவரும், தேனி சுப்பிரமணியின் கம்ப்யூட்டர் இதழின் வெளியீடுகள் பற்றியும், முன்பு ஆலமரத்தில் அது பற்றி நடந்த உரையாடல் பற்றியும் நன்கு அறிந்தவரும் அவரைத் தாக்கி எழுதியுள்ளார். விக்கியன்பு கூட பயன்படுத்தி நடிகர் என்று பதக்கம் அளித்துள்ளார். இது மறைவழி பெயரிலி கணக்குகளை கைப்பாவையாக பயன்படுத்திய பயனர் கணக்குள்ள ஒரு பயனராக இருக்குமா என்னும் ஐயம் எழுகின்றது.--செல்வா (பேச்சு) 03:41, 20 அக்டோபர் 2013 (UTC)
- செல்வா, தங்களுக்கு ஐயம் இருப்பின் மேல் விக்கியில் நீங்களும் கூட கைப்பாவைச் சோதனை கோரலாம். சோதனை கோரி முடிவு அறியும் முன்னேயே இவராக இருக்குமோ அவராக இருக்குமோ என்பது அவதூறு பரப்புவதற்கு ஈடாகும் என்பதால் அதனைத் தவிர்க்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 04:01, 20 அக்டோபர் 2013 (UTC)
- செல்வா கூறுவது போல அல்லது நான் ஏற்கனவே கூறியது போல ராஜன் என்ற பயனரின் கணக்கையும் ஏனைய அனானிக் கணக்குகளையும் கைப்பாவை மற்றும் open proxy சோதனை செய்து பார்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 04:10, 20 அக்டோபர் 2013 (UTC)
- ஆம். எனக்கும் இதில் ஐயம் உண்டு. இவர்கள் சொன்னதைப் போன்று, ராஜன் என்ற பயனரின் கணக்கையும் ஏனைய அனானிக் கணக்குகளையும் கைப்பாவை சோதனை செய்ய வேண்டும். முறைப் படி எப்படி சோதனை செய்ய வேண்டுமோ அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் அல்லது நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.--பழ.இராஜ்குமார் (பேச்சு) 20:09, 20 அக்டோபர் 2013 (UTC)
- ச ராஜன் கணக்கிற்கும், எனது பெயர் இராஜ்குமார் (இன்பம்குமார்) என்ற கணக்கிற்கும் தொடர்பு இருக்கலாம் என யாரும் அவதூறு கூறாமல் இருந்தாலும் மனதுக்குள் விக்கிப்பயனர்கள் அவ்வாறு எண்ண வாய்ப்பிருப்பதால் உண்மையை அறிந்து கொள்ள கைப்பாவை சோதனை மேற்கொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.--பழ.இராஜ்குமார் (பேச்சு) 20:20, 20 அக்டோபர் 2013 (UTC)
- இரவி, நான் தெளிவான காரணத்தைச் சுட்டியுள்ளேன். நடந்ததைக் கூறினேன். அதில் தெரிவதைக்கொண்டு வாய்ப்பைப்பற்றித்தான் கூறினேன். கைப்பாவையாக இயங்கினவா என்று கேள்வியை அங்கே வைக்கலாம். அதிகாரிகள் யாரும் அங்கே வைக்க முன்வரவில்லை எனில் நான் வைக்க முன்வருவதில் தயக்கம் இல்லை. புத்தம் புதிய பயனராகிய Rajan s கைப்பாவையா என்று வினவியபோது அவருடைய வாய்மொழியாகவே, "எல்லா IP பயனரும் நான் அல்ல", என்று கூறியிருப்பதால் ஒரு ஐ.பி முகவரியோ அல்லது சிலவோ அவருடையதுதானே. இதில் என்ன அவதூறு? பயனர் Rajan s அவர் வாய்மொழியாகவே பலவும் கூறியுள்ளாரே. --செல்வா (பேச்சு) 04:30, 20 அக்டோபர் 2013 (UTC)
மன்னிக்கவும், செல்வா. 100% உறுதியான ஆதாரம் இல்லாமல் இவ்வாறு வாய்ப்புகளைப் பற்றிப் பேசுவது அவதூறுகளுக்கே இட்டுச் செல்லும். தவிர்க்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 04:38, 20 அக்டோபர் 2013 (UTC)
- இராசன், தானாகவே குறைந்தது ஒரு ஐ.பி. பங்களிப்புகள் அவருடையவை என்று பதிவு செய்துள்ளார். அதிலும் அந்த ஐ.பி. முன்வைத்தவற்றையே தனது ஒப்பத்துடன் முன்னெடுத்துச் சென்றிருக்கிறார். இந்நிலையில் நடவடிக்கை எடுப்பதற்கு வேண்டுமானால் முழு ஆதாரத்தையும் தொகுக்கலாம் (அதில் இரவியுடன் ஒப்புகிறேன்). மற்றபடி இந்தக் கட்டத்தில் அவ்வாறு குறிப்பிடுவதே அவதூறு என்பதில் எனக்கு ஏற்பில்லை.
மாறாக மற்றொரு இழையில் வேறொரு கணக்கை கைப்பாவைக்கெல்லாம் விருப்பம் வைக்கிறீர்களே என நீங்கள் குறிப்பிட்டிருந்தது நெருடலாக உள்ளது. இதைக் காட்டிலும் அங்கு சான்று இன்னும் நிறுவப்படாத நிலையில்தான் உள்ளது. சிறீதரனின் கேள்விக்கும் பொது அறிவைக் காரணமாகச் சுட்டியிருந்தீர்கள். அவ்வளவு பொது அறிவு விசயம்போலத் தோன்றவில்லை. :)இப்போதுதான் அது தொடர்பான வேறொரு செய்தியைக் கண்டேன். பிழையான புரிதலுக்கு வருந்துகிறேன். -- சுந்தர் \பேச்சு 05:42, 20 அக்டோபர் 2013 (UTC)\
- இரவி, பயனர் Rajan s அவர்களின் செயற்பாட்டைப் பற்றி நான் கூறியது அவதூறு-அவதூறுகளுக்கு இட்டுச்செல்லும் என்று கூறும் நீங்கள் ஏன் பயனர் Rajan s அவர்கள் இங்கே கூறிய //சுப்பிரமணிக்கு ஆதரவாக கருத்திட்ட பயனர்:786haja, அதேகாலத்தில் விசமத்தனத்தில் ஈடுபட்ட பயனர்:Vaarana18 ஆகிய பயனர்களுக்கும் சுப்பிரமணிக்கும் தொடர்பு உண்டா? கைப்பாவைகளா?// என்று நேரடியாகக் கேட்டபொழுது ஏதும் கூறவில்லை? உண்மையில் பலருக்குக் கைப்பாவை என்னும் சொல் கூட தெரியாதிருக்கலாம், ஆங்கிலத்தில் sock-puppet என்றால் கூட என்ன என்று சரிவர தெரியாமல் இருக்கலாம். அப்படி நுணுக்கமாக அறிந்து ஒருவர் குற்றம் சாட்டிக் கேள்வி கேட்டிருக்கின்றார், அப்பொழுது ஏன் நீங்கள் ஏதும் கூறவில்லை? புரியவில்லை எனக்கு உங்கள் கவலை. --செல்வா (பேச்சு) 19:45, 20 அக்டோபர் 2013 (UTC)
- செல்வா, நிறைய இழைகள் திசை மாறிப் போகின்றன. இந்த இழை அனானி IP தடை செய்வதைப் பற்றியது. இந்த இழையில் இதைப் பற்றிப் பேசுவோம். உங்களுக்கு வேறு ஏதேனும் விளக்கம் தேவையெனில் குறித்த இழையில் கேளுங்கள். அல்லது, என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். எங்கேனும் உரிய விளக்கம் அளிக்கத் தவறி இருந்தால், ஒரு வேளை நான் அவ்வுரையாடலைக் கவனிக்காமல் இருந்திருக்கலாம். என் பேச்சுப் பக்கத்தில் சிறு நினைவூட்டல் அளித்தால், உரிய விளக்கம் அளிப்பேன். நன்றி --இரவி (பேச்சு) 17:14, 24 அக்டோபர் 2013 (UTC)
- இங்கே பயனர் Rajan s அவர்களின் பேச்சுப் பக்கத்தில் சிலவற்றைப் பற்றி அவர் கருத்தறிய விளக்கம் வேண்டியிருக்கின்றேன். அவர் கூற்றுப்படியே அவர் அடையாளம் காட்டாத ஐ.பி.-யில் இருந்து தேனி சுப்பிரமணி மீது வன்முறை சொற்கள் கூறியுள்ளார். ஆகவே இது பற்றியும் இது தொடர்பான பிறவற்றைப் பற்றியும் கருத்தறிய கேள்விகள் கேட்டுள்ளேன். --செல்வா (பேச்சு) 18:08, 20 அக்டோபர் 2013 (UTC)
- இராச்குமார், நீங்கள் //ஆம். எனக்கும் இதில் ஐயம் உண்டு. இவர்கள் சொன்னதைப் போன்று, ராஜன் என்ற பயனரின் கணக்கையும் ஏனைய அனானிக் கணக்குகளையும் கைப்பாவை சோதனை செய்ய வேண்டும்.// எனக் கூறினீர்கள். சிறீதரன் கனகும் கூறியிருந்தார். பயனர் Rajan s பேச்சுப்பக்கத்தில் சில விளக்கங்கள் கேட்டிருக்கின்றேன். அவர் ஓரிரு நாள்களில் விடையளித்தால் நல்லது, இல்லாவிடில் சிலர் இங்கே கூறியது போல மேல்விக்கியில் வேண்டுகோள் வைப்போம். --செல்வா (பேச்சு) 08:33, 21 அக்டோபர் 2013 (UTC)
கட்டுரைவெளிக்கப்பால் கூட்டு
தொகுஅண்மையில் பத்தாண்டு நிறைவு கொண்டாட்டத்துக்குப்பின் பயனர் சீனிவாசனுடன், கட்டற்ற மென்பொருள் குழுவினர் பலரும் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தங்களால் இயன்ற வகையில் பங்களிக்க ஆர்வமாயிருக்கிறார்கள். ஒரு முகநூல் உரையாடலில் சி'ம்பு, இங்குசுகேப்பு பயிற்சிப்பட்டறை பற்றிய அறிவிப்பைத் தொடர்ந்து விளக்கப்படங்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் பயிற்சியையும் சேர்க்குமாறு கேட்டுக் கொண்டேன். ஏற்கனவே உருவாக்கிய பறவை அலகுப்படத்தையும் மாதிரியாகக் காட்டினேன். அவர்களும் உடனடியாக குருதிச்சிவப்பணுக்களில் சவ்வூடு பரவலைக் காட்டும் படமொன்றை மொழிபெயர்த்துள்ளனர். பயனர் புருனோ நமது கட்டுரைக்குத் தேவைப்படும் விளக்கப்படங்களை முன்னுரிமை தந்து மொழிபெயர்க்கலாம் என பரிந்துரைத்தார். இதற்கென விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விளக்கப்படம் வரைதல் ஒன்றை உருவாக்கி செயற்படுத்தலாம் என எண்ணுகிறேன். ஆர்வமிருப்பவர்கள் உதவ வேண்டும். -- சுந்தர் \பேச்சு 08:45, 17 அக்டோபர் 2013 (UTC)
- நல்ல திட்டம். அண்மையில் 3 - 4 படங்கள் இவ்வாறு லிங்க்ஸ்கேப் கொண்டு மொழிபெயர்த்து பொதுவகத்தில் தரவேற்றியிருக்கிறேன். ஆனால் தமிழில் எவ்வாறு புதிய படங்களை உருவாக்குவது போன்ற நுட்பங்கள் எனக்குத் தெரியாது. வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 10:04, 17 அக்டோபர் 2013 (UTC)
- நன்றி சிறீதரன். இப்போதுதான் மற்ற படங்களைப் பார்க்கிறேன். சில எடுத்துக்காட்டுகளையும் பொதுவகத்துக்கான பெட்டியையும் சேர்த்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 10:24, 17 அக்டோபர் 2013 (UTC)
- நல்ல திட்டம். நானும் ஏற்கனவே ஒரிரு படங்களை மொழி மாற்றியுள்ளேன். (https://commons.wikimedia.org/wiki/File:Schematic_diagram_of_the_human_eye_ta.svg) மேலும், jpg கோப்பில் இருந்து svgக்கும் மாற்றியுள்ளேன். (https://commons.wikimedia.org/wiki/File:Haemophilia_X_linked_recessive.svg). எனினும் இவற்றின் போது, மொழி பெயர்ப்பு சரியானதாக அமைவது மிக முக்கியம். --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 18:27, 17 அக்டோபர் 2013 (UTC)
- நல்ல விடயம். நானும் முயன்றுள்ளேன். சில படங்கள் மட்டுமே முடிந்தது. அறிவியல் சார் கட்டுரைகளுக்கு மிகப் பயனுள்ளது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:20, 17 அக்டோபர் 2013 (UTC)
//ஆனால் தமிழில் எவ்வாறு புதிய படங்களை உருவாக்குவது போன்ற நுட்பங்கள் எனக்குத் தெரியாது. //
நான் தமிழில் படங்களை உருவாக்க வேண்டும் என்றால் பெயிண்டில் வெட்டி ஒட்டி/சிலவற்றை வரைந்து படத்தை முதலில் முடிப்பேன். அதன்பிறகு "A" என்ற டெக்சுடு பட்டனை சொடுக்கி அதில் தமிழ் விளக்கங்களை வெட்டி ஒட்டிடுவேன். அகரமேறிய மெய் முறைமை கட்டுரை பார்க்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:29, 17 அக்டோபர் 2013 (UTC)
- .svg படிமங்களை எவ்வாறு உருவாக்குவது என்று கேட்டேன்.--Kanags \உரையாடுக 21:30, 17 அக்டோபர் 2013 (UTC)
- இங்கே பாருங்கள் : விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் விளக்கப்படம் வரைதல், அங்கு குறிப்பிட்ட மென்பொருளைக் (இரியல் டிரோ) கொண்டு வெக்டர் கோப்புகளை உருவாக்கலாம் பின்னர் அதை அடோப் இலசுட்ரேட்டர் (adobe illustrator) அல்லது கோரல் டிரோ (coral draw) பயன்படுத்தி svg கோப்பாக மாற்றலாம். அல்லது இரியல் டிரோவில் உருவாக்கிய வரையங்களை அடோப் போட்டோ சொப்பில் மெருகுபடுத்தி அடோப் இலசுட்ரேட்டருக்கு சென்று svg கோப்பாக மாற்றலாம். - இதுதான் நான் பயன்படுத்தும் முறை. இன்னும் விளக்கம் தேவைப்பட்டால் கேளுங்கள். --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 05:22, 18 அக்டோபர் 2013 (UTC)
மரு.செந்தி, சஞ்சீவி சிவக்குமார், தென்காசி சுப்பிரமணியன் உங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி. இத்தனை ஆர்வமுள்ள பங்களிப்பாளர்கள் இருப்பதால் நமது திட்டம் நன்கு வளரும் என நம்பிக்கை பிறக்கிறது. சண்முகமும் ஒரு படத்தை ஆக்கியிருந்தார். கட்டற்ற மென்பொருள் கழகத்தின் சிபி போன்றோரும் உதவுவார்கள். இன்க்குசுகேப்பு என்ற பயனுள்ள கட்டற்ற கருவியில் பயிற்சி தேவைப்பட்டால் அவர்களால் தர முடியும். எண்ணற்ற பறவைகளின் மாதிரிப் படங்களை உருவாக்கிய ஆங்கில விக்கிப் பங்களிப்பாளர் சியாமளும் உதவக் கூடும். -- சுந்தர் \பேச்சு 05:43, 18 அக்டோபர் 2013 (UTC)
- இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நன்றி, சுந்தர். முகநூலில் தொடங்கிய உரையாடல் தற்போது ஒரு திட்டமாக உருப்பெறுகிறது. ஊடகச் சந்திப்பில் "சமூக இணையத்தளங்கள் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளதா" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இது ஒரு நல்ல விடை. இனி, கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் சிபி என்று சொல்லக்கூடாது. ஏனெனில், அவர் ஏற்கனவே விக்கிப்பீடியாவுக்கு நிறைய பங்களித்துக் கொண்டிருக்கிறார் :) நற்கீரன் முன்னெடுத்து வரும் துறை சார் பயிற்சிகள் திட்டத்தின் முதற்பகுதியாக இதற்கான ஒரு பயிற்சியை வலையுரையாகத் தரலாம். --இரவி (பேச்சு) 01:22, 20 அக்டோபர் 2013 (UTC)
நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல் - நிபந்தனைகள், நடைமுறை
தொகுஇது வரைக்கும் தமிழ் விக்கியில் வலுக்கட்டாயமக (forceful) நிர்வாக அணுக்கம் திரும்பிப் பெறுதல் தொடர்பாக ஒரு வழிகாட்டல் இல்லை. ஆங்கில விக்கியில் சில நடைமுறைகள் உள்ளன. பார்க்க: en:Wikipedia:Requests for de-adminship. குறைந்தது 5 பயனர்களின் (3 மாதப் பங்களிப்பு, 250 தொகுப்புகள்) ஆதரவு இருந்தாலே நிர்வாக அணுக்கத்தை திரும்பிப் பெற நியமிக்க முடியும் என்ற ஒரு நிபந்தனை தமிழ் விக்கியில் தற்போது பொருத்தமாக அமையும் என்பது என் கருத்து. இல்லாவிடின் விசமத் தனமாக நியமனங்கள் வரும், அது தொடர்பாக நிறைய ஆற்றல் வீணாகும். அவ்வாறு நியமிக்கப்பட்டால், அப் பயனருக்கு நிர்வாக அணுக்கத்தைத் திரும்பிப் பெருமாறு பெரும்பான்மை பயனர்களின் கருத்தும், நியமிக்கப்பட்ட குறிப்பான காரணங்களும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு முடிவு எடுக்கப்பட வேண்டும் இருக்க வேண்டும். இது என் பரிந்துரை. அணுக்கம் திரும்பப் பெறப்பட்ட பயனர் பொறுப்பான பங்களிப்புக்கள் மூலம் மீண்டும் நிர்வாகிப் பொறுப்பை ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் பெற்று கொள்ளலாம். பிற பயனர்களின் கருத்துக்களைப் பகிருங்கள். --Natkeeran (பேச்சு) 03:02, 18 அக்டோபர் 2013 (UTC)
- மூன்று மாதப் பங்களிப்பு இவ்வாறான முக்கியமான விடயங்களை முன்னெடுப்பதற்குப் போதாது. ஓராண்டு என்று விதிப்பது நல்லது. குறைந்தது 1000 தொகுப்பு இருக்கவேண்டும் என்பது எனது ஆலோசனை.-- மயூரநாதன் (பேச்சு) 03:23, 18 அக்டோபர் 2013 (UTC)
- பிரேரிப்பவர் யாராவது இருக்கலாமா? கட்டுரைகளிலோ அல்லது உரையாடல்களிலோ பங்களிப்புகள் எதுவுமே செய்யாதவர் எவ்வாறு பிரேரிக்க முடியும்? ரோட்டில் நின்றவர் போனவர் எவரும் ஒரு கணக்கை ஆரம்பித்து ஒரு நிருவாகியை நீக்கப் பிரேரிக்கலாமா?--Kanags \உரையாடுக 03:42, 18 அக்டோபர் 2013 (UTC)
- நிச்சயமாக யாரும் பிரேரிக்கலாம் என்று ஒரு வழிமுறையை வகுத்துக்கொள்ள முடியாது. தமிழ் விக்கிப்பீடியா ஆங்கில விக்கிப்பீடியாவைப் போல் ஆயிரக் கணக்கில் பங்களிப்பாளர்களைக் கொண்டது அல்ல. இங்கே இவ்வாறான விடயங்களை முன்னெடுப்பதற்குக் ஆங்கிலத்தில் இருப்பதைவிடக் கூடுதலான தகுதிகள் வலியுறுத்தப்பட வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் குழப்பம் விளைவிக்க எண்ணும் எவரும் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக நிர்வாகி நீக்கக் கோரிக்கைகளை விட்டு எல்லாப் பயனர்களது நேரத்தையும் வீணடித்து விடுவதற்கே வழி சமைப்பதாக முடியும்.---மயூரநாதன் (பேச்சு) 03:56, 18 அக்டோபர் 2013 (UTC)
- யாராக இருந்தாலும், பங்களிக்காதவர்களாகவே இருந்தாலும், அவர்கள் தங்கள் முறையீட்டை (விக்கியின் நற்பெயர் கெடுகின்றதே, பொறுப்பில் உள்ள ஒருவர் இப்படிச் செய்யலாமா என்று கேள்விகள் அல்லது ஏதும் முறையீட்டை) கட்டாயம் வைக்கலாம் என்றே கருதுகின்றேன். ஆனால் அது தனிமாந்தக் காழ்ப்பின் அடிப்படையிலோ நன்றாக பங்களித்துவரும் ஒருவரை ஒரு பொறுப்பில் இருந்து நீக்கவேண்டும் என்றோ எடுத்த எடுப்பிலேயே வைப்பது சரியாகத் தோன்றவில்லை. இதில் பழிவாங்கல், பெருமையழித்தல் முதலான தீநோக்கங்கள் கொண்டதாலா என்றெல்லாம் கருதவும் வேண்டிய கட்டாயம் இருக்கும். முறையிடப்பட்டவருக்கும் தக்க கால இடைவெளி தந்து விடைபகர வாய்ப்பளிக்கவேண்டும். இந்த விடைபகர்தலானது அம் முறையீட்டைப் பற்றிய தன் பார்வையைப் பகிர்வதும், தான் கருதுவதும், அமைதி கூறுதலும், பிழை நேர்ந்திருந்தால் அதற்கு மெய்யான வருத்தம் கூறுதலும் காரணம் கூறுதலும் மன்னிப்பு வேண்டுதலும் முதலானவைகளாக இருக்கும். இதன் அடிப்படையில் பிற நிருவாகிகள் முடிவுகள் எடுக்கலாம். இது பற்றி ஒரு பரிந்துரை இருக்கலாம், ஆனால் அதுவே வேண்டாத அரசியல் சழக்குகள் பெருக்கவும் காரணமாக அமைய நேரிடும். ஆகவே மிக மிகக் கடுமையான தீய செயல்களில் இறங்கிய ஒருவரைப் பற்றியதாக இருந்தால் மட்டுமே இப்படியான நடவடிக்கைகளுக்கு இடம் தரவேண்டும். மற்றபடி முறையீடு என்பதை, இப்படியான நடவடிக்கை இல்லாமலேயே, யாரும் எப்பொழுதும் பொதுவில் வைக்கலாம் அது பற்றி உரையாடி நன்முறையில் தீர்க்கலாம். இதற்காக இபப்டியான பொறுப்புநீக்கல் முதலான கடுமையான நடவடிக்கைகளுக்குச் செல்லத்தேவையில்லை. இது தவறான வழிகாட்டுதலாக அமையும். மிகவும் கணிசமான, பெருந்தீங்கான செயல்களை ஒருவர் செய்திருந்தால் இப்படியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுவது தமிழ் விக்கி நிருவாகத்தின் கடமையாகும். ஆகவே அது கருதி ஒரு வழிமுறை அமைத்து வைப்பது தேவையாகலாம். ஆங்கில விக்கியிலும் எல்லோரும் ஏற்கும் பரிந்துரைகள் என்று ஏதும் எட்டவில்லை என்றே எண்ணுகின்றேன். --செல்வா (பேச்சு) 04:05, 18 அக்டோபர் 2013 (UTC)
- பிரேரிப்பவர் யாராவது இருக்கலாமா? கட்டுரைகளிலோ அல்லது உரையாடல்களிலோ பங்களிப்புகள் எதுவுமே செய்யாதவர் எவ்வாறு பிரேரிக்க முடியும்? ரோட்டில் நின்றவர் போனவர் எவரும் ஒரு கணக்கை ஆரம்பித்து ஒரு நிருவாகியை நீக்கப் பிரேரிக்கலாமா?--Kanags \உரையாடுக 03:42, 18 அக்டோபர் 2013 (UTC)
உங்கள் வசதிக்கேற்ப சட்டங்களை உருவாக்க முனையாதீர்கள். முறையாக "கருத்துக்களைப் பகிரலாம்" என்றார் ஒருவர். அதைப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள் எல்லோரும். நீங்கள் வழிகாட்டியபடி கருத்துக்களைப் பகிர்தால், இப்போ புதுக்கதை! //ரோட்டில் நின்றவர் போனவர் எவரும் ஒரு கணக்கை ஆரம்பித்து// இது தனி மனிதத் தாக்குதல் இல்லையா? இப்படித்தானா புதுப்பயனரை அணுகுவது? நீங்கள் யார்? Kanags யார்? ஐபி ஊடாக தனி மனித தாக்குதல் என்று தடை செய்த உங்களை யார் தடை செய்வது? குற்றவாளிகளை உருவாக்குவதே உங்களைப்போன்றவர்களின் பொறுப்பற்ற நடத்தைதான். --Rajan s (பேச்சு) 04:15, 18 அக்டோபர் 2013 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியாவின் நலனுக்காகத்தான் வழிமுறைகளை உருவாக்க முனைகிறோம். இங்கே பல ஆண்டுகள் தமது பொன்னான நேரத்தைச் செலவு செய்து பல பயனர்கள் உழைத்து தமிழ் விக்கிப்பீடியாவைத் தற்போதைய நிலைக்குக் கட்டி எழுப்பி இருக்கிறார்கள். வழிமுறைகள் இந்த உழைப்புக்கு மதிப்பு அளிப்பதாக இருக்கவேண்டும். குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்காகவே வருகின்ற அனானிப் பயனர்களுக்கும், அதே நோக்கங்கருதி பயனர் கனக்குத் தொடங்குபவர்களுக்கும் சாதகமாக வழிமுறைகள் அமையவேண்டும் என எவரும் எதிர்பார்க்க முடியாது. --மயூரநாதன் (பேச்சு) 04:39, 18 அக்டோபர் 2013 (UTC)
விருப்பம் நந்தினிகந்தசாமி (பேச்சு) 13:08, 18 அக்டோபர் 2013 (UTC)
- Rajan s, முறை வகுத்துத்தானே செயல்பட முடியும் இங்கே நடக்கும் உரையாடலானது நீங்கள் தேனி சுப்பிரமணியைப் பற்றி எழுப்பியது பற்றியன்று. அது தூண்டுகோலாக இருந்தது என்பது வேறு. ஆனால் இப்படியான முறையீடுகள் வரும்பொழுது அவற்றை எவ்வாறு அணுக வேண்டும் எப்படி எடுத்து நடத்த வேண்டும், தக்க வழிமுறைகள் யாவை என்று கருதுகின்றோம், ஆகவே முறைமை வகுக்கும் நோக்கில் நடக்கும் பொது உரையாடல். அருள்கூர்ந்து இங்கே இந்த உரையாடலின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களின் தாக்குவேட்கை நிறைந்த சொற்களை தவிர்க்க வேண்டுகின்றேன் (//குற்றவாளிகளை உருவாக்குவதே உங்களைப்போன்றவர்களின் பொறுப்பற்ற நடத்தைதான்.//).இப்படித்தானா புதுப்பயனரை அணுகுவது? என்கின்றீர்களே எந்த நல்ல பங்களிப்பும் செய்யாத புதுப்பயனராகிய நீங்கள் இப்படியா சொற்களை முன்வைப்பீர்கள்?! அதுவும் சிறீதரன் கனகு போல ஒவ்வொரு நாளும் எட்டு ஆண்டுகளாக ஒழுக்கத்துடன் பல்லாயிரக்கணக்கான தொகுப்பகள் செய்தவரைப்பற்றி இப்படியெல்லாம் அவையில் பேச உங்களுக்குச் சிறு கூச்சம் கூட இல்லையே! உங்கள் அணுகுமுறையில் உரையாடல்கள் இங்கே மலிந்திருந்தால் இந்தப் பத்தாண்டுகளாக த.வி வளர்ந்தே இருந்திருக்கமுடியாது!! உங்களுக்குப் பங்களிக்க விருப்பம் இருந்தால், விக்கியில் அக்கறை இருந்தால், விக்கியின் நற்பழக்கவழக்கங்களை அறியுங்கள், பிற பங்களிப்பாளர்களுடன் பண்புடம் பழகுங்கள். சிறீதரன் கனகு //ரோட்டில் நின்றவர் போனவர் எவரும்// என்றது பொதுவாகக் கூறியது (உங்களைப் பற்றியன்று). இக்கேள்வி பொதுவான வழிமுறை வகுப்பதைப் பற்றியது (தனியொருவரைப் பற்றியதன்று). --செல்வா (பேச்சு) 04:52, 18 அக்டோபர் 2013 (UTC)
விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 13:15, 18 அக்டோபர் 2013 (UTC)
//பிற பங்களிப்பாளர்களுடன் பண்புடம் பழகுங்கள்// அதைத்தான் நான் உங்கள் எல்லோரிடமும் கேட்கிறேன். --Rajan s (பேச்சு) 10:21, 18 அக்டோபர் 2013 (UTC)
- ஒருவர் நிருவாக அணுக்கத்தைத் தவறாகப் பயன்படுத்தி (நீக்கல் கருவி போன்றவற்றை) விக்கி இணக்க முடிவுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டாலோ, நிருவாகி என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு தொடர்ந்து விக்கிக்கு களங்கம் ஏற்படுத்தினாலோ தவிர இவ்வாறான பெரிய முடிவுக்கு வர வேண்டியதில்லை. வழக்கமான உள்ளடக்கத்தில் கருத்து வேறுபாடுகள், கொள்கை மீறல்கள் போன்றவற்றை அவ்வவ் கொள்கைகளைக் கொண்டே அணுக வேண்டும். காட்டாக மூன்றுமுறை வலிந்து மற்றொரு பயனரின் பங்களிப்பை மீளச் செய்தால் மற்ற எவரையும் போல நிருவாகியின் கணக்கையும் 24 மணி நேரம் முடக்கலாம். நிற்க.
- தொடர் அத்துமீறல்களின் பேரிலோ, மாபெரும் களங்கம் ஏற்படும் நிலையிலோதான் செயற்படுத்தப்படும் என்பதால் விக்கியில் நன்கு பழகியவர்கள் 3-6 மாதமாவது பங்களித்தவர்கள் மட்டுமே நீக்கல் பரிந்துரை செய்யுமாறு வைக்கலாம். அதற்கு முன்னதாக விதமீறலை முறையிடும் வசதி ஒன்றை அனைவருக்கும் திறந்து விடலாம். அங்கு சரியாகாத சிக்கலுக்கு அடுத்து சில வழிமுறைகளைத் தொடர்ந்து வேறு வழியில்லாத நிலையில் இந்த முடிவைக் கூடிப்பேசி வாக்கெடுப்பு நடத்தி முறைப்படுத்தலாம். விக்கிகு வெளியே எடனடியாக பாதிப்பு வருமிடங்களில் புதுப்பயனரோ அடையாளம் காட்டாதவரோ சுட்டிக்காட்டும்போது மற்ற வழமையான பங்களிப்பாளர்கள் நிலையின் தீவிரத்தை உணர்ந்து முறையான நடவடிக்கையெடுக்க முன்மொழியலாம். புதுப்பயனருக்கு வழக்குரைஞராக நாம் செயல்படலாம். -- சுந்தர் \பேச்சு 06:13, 18 அக்டோபர் 2013 (UTC)
- குறைந்தது 3 மாத பங்களிப்பு மற்றும் 250 தொகுப்புகள் கொண்ட பயனர்களின் 5 பேரின் ஆதரவுகள் பெற்று, கொடுக்கப்பட்ட முறையீடு ஆதாரத்துடன் சரிபார்க்கப்பட்டப்பின் ஒருவரின் நிருவாக அணுக்கத்தை திரும்ப பெறலாம். மறுபடியும் அவருக்கான நிருவாக அணுக்க பரிந்துரை, அடுத்த மூன்று மாதங்களுக்கு மற்றும் 1000 தொகுப்புகள் பெற்றப்பின் பரிந்துரைக்கு எடுத்துக் கொள்ளலாம். புதுப்பயனர்கள் ஒருவரின் நிருவாக அணுக்கத்தை திரும்ப பெற வலியுறுத்தி முறையிடலாம். (ஏனென்றால் புதுப்பயனர்கள் பாதிப்புக்கு உள்ளானால் முறையிடும் உரிமையை கொடுக்க வேண்டும். அவர்கள் 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியதில்லை.) ஆனால் அதற்கான ஆதரவுகள் கொண்ட 5 பயனர்கள் தமிழ் விக்கியில் 3 மாத பங்களிப்பு மற்றும் 250 தொகுப்புகள் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு விதிமுறைகளை வகுக்கலாம் என்பது என் கருத்து. மாற்றங்கள் இருந்தால் கூறுங்கள். --பழ.இராஜ்குமார் (பேச்சு) 07:21, 18 அக்டோபர் 2013 (UTC)
தயவு செய்து இங்கு நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல் பற்றிய நிபந்தனைகள், செய்முறை முடிவு பெறும்வரை யாரும் தொகுத்தலில் ஈடுபடாதீர்கள்! --Anton·٠•●♥Talk♥●•٠· 12:51, 18 அக்டோபர் 2013 (UTC)
அயர்ச்சி
தொகுஏற்கெனவேயும் இடம்பெற்ற தொகுத்தல் மற்றும் விமர்சனப் "போர்கள்" பயனர்களுக்கு அயற்சி ஏற்படுத்தியிருக்கும் என நினைக்கிறேன். தனிப்பட்ட அனுபவதத்தில் குறிப்பிடுவதென்றால் இவ்வகைப் "போர்களால்" நான் பாதிக்கப்பட்டுள்ளேன். முரண்பாடு கையாளும் உத்திகள் (conflict management strategies) அல்லது முரண்பாடு தீர்த்தல் (conflict resolution) சரியாக மேற்கொள்ளப்படாவிட்டால் நிலைமை மேலும் மேலும் மோசமடையும். அதுவே இங்கும் நடப்பதாக நான் உணர்கிறேன். என்னைவிடப் பெரியவர்களுக்கு புத்தி சொல்லும் பக்குவம் எனக்கு இல்லாவிட்டாலும், தமிழ் விக்கிப்பீடியாவில் நல்லது நடக்க வேண்டும் என்று கருதுபவர்களில் நானும் ஒருவன். எனவே, கருத்துக்கள் மற்றவரை தாக்காதவாறு அல்லது கேள்விக்கு உட்படாதாவாறு பார்த்துக் கொள்ளுங்கள். நாம் அளிக்கும் பதில் கேள்விக்கானதாக இருக்க வேண்டுமேயன்றி, இன்னுமொரு கேள்வியை உருவாக்கக் கூடாது.
தேனியவர்கள் பதில் கூறல் பல சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும். எனவே, அவர் தன் மீது நோக்கி எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் கூறுதல் சிறப்பாக அமையும். சண்டைக்காரர்கள்தான் பேச வேண்டும். சமாதானம் செய்ய முற்படுகிறவர்கள் அல்ல. முதலில், சுந்தர், இரவி ஆகிய அதிகாரிகள் கேட்ட விளக்கம் கோரலுக்கு அவர் பதில் சொல்லட்டும். அதன் பின் என்ன செய்வதென கலந்துரையாடலாம். அது வரை யாவரும் அமைதியாக இருப்பது சிறப்பு என நினைக்கிறேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 04:53, 18 அக்டோபர் 2013 (UTC)
- அன்ரன் உங்கள் அயர்ச்சி புரிகிறது. இது எவருக்குமே மகிழ்ச்சியளிக்கும் நிகழ்வல்ல. ஆனாலும் சமூகம் வளர வளர இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கும். இது போல ஏற்கனவே சில இக்கட்டுகள் வந்தபோதும் பேரிழப்பு ஏதுமின்றி தமிழ் விக்கி தொடர்ந்து வளர்ந்தே வந்துள்ளது. வழக்கமாகப் பெரும்பாலான சிக்கல்கள் நன்னயம் கருதல், உரையாடி இணக்க முடிவை எடுத்தல் போன்ற அடிப்படை நிலையிலேயே தீர்ந்து விடுகின்றன. இம்முறையும் அவ்வாறு நிகழ வாய்ப்புள்ளது. அடுத்தபடியாக நடுவுநின்று தீர்த்து வைத்தல், இருசாரார் தேர்ந்தெடுக்கும் தீர்ப்பாயம் வைத்து தீர்க்கும் முறை போன்றவைகளும் உள்ளன. தேவைப்பட்டால் அந்நிலைகளுக்குச் செல்ல வேண்டி வரும். இவை அயர்ச்சி தந்தாலும், நம் வளத்தையும் விரைவையும் இப்போதைக்குக் குறைத்தாலும், நமது கட்டமைப்பை வலுப்படுத்தும். -- சுந்தர் \பேச்சு 05:51, 18 அக்டோபர் 2013 (UTC)
- மேலும் நான் இங்கு கேள்வி கேட்டது உடன்பணியாற்றும் பங்களிப்பாளன் என்ற முறையிலேயே, அன்ரன். நிருவாகிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் தாமாக முடிவெடுக்கும் சூழல்கள் அரிதே. -- சுந்தர் \பேச்சு 05:53, 18 அக்டோபர் 2013 (UTC)
- விருப்பம் --Anton·٠•●♥Talk♥●•٠· 05:56, 18 அக்டோபர் 2013 (UTC)
- :D ஆன்டன், இவற்றை அயர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இவை அனைத்தும் விக்கி வளர்வதைக் காட்டுகிறது. யாருமே இல்லாத கடையில் நாம் டீ ஆற்றவில்லை என்பதைக் காட்டுகிறது. நம்மைக் கவனிக்கின்றனர். நம்மோடு உரையாட விரும்புகின்றனர். நம்மில் இருக்கும் குறைகளைக் கழைய விரும்புகின்றனர் - அல்லது குறைந்தது தீக்குறும்பு விளைவிக்கவாவது எண்ணுகின்றனர். இதெல்லாம் வளர்ச்சியில் ஒரு நிலைதான். இது எந்த வகையிலும் நம் வளர்ச்சியைப் பாதிக்காது. இதனை தொழில்நெறியோடு (professionalistic approach) எடுத்துக் கொள்ளவும். இது போன்ற உரையாடல்கள் எனக்கு குழுக் கலந்தாய்வில் (Group discussion) மிக மிக உதவிகரமாக இருந்தன. நம்மைக் குறிவைத்துத் தாக்கும்போதோ நம் கூற்றுக்கு எதிர் கூற்று வரும்போதோ எப்படி அதனை அணுகுவது போன்றவற்றை அனுபவம் மிக்கவர்களின் மறுமொழிகளிலிருந்தும் மனப்பாங்கிலிருந்தும் கற்றுக்கொள்ள பழக வேண்டும். மேலும், த.வி. ஒரு சிறந்த கட்டமைப்புடன் வருங்காலத்தில் வலுவாக இருக்க இவை போன்ற உரையாடல்கள் உதவுமென்பதில் எனக்கு சற்றும் ஐயம் இல்லை. எனக்கு இது போன்றதொரு கண்ணோட்டத்தில் விக்கியுரையாடல்களைக் காணவேண்டும் என்று பழக்கியவர் பாலா :) -- சூர்யபிரகாஷ் உரையாடுக 10:05, 19 அக்டோபர் 2013 (UTC)
- விருப்பம் --Anton·٠•●♥Talk♥●•٠· 05:56, 18 அக்டோபர் 2013 (UTC)
- விருப்பம்-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:38, 19 அக்டோபர் 2013 (UTC)
- விருப்பம்--இரவி (பேச்சு) 01:17, 20 அக்டோபர் 2013 (UTC)
கைப்பாவை நிலை அறிய கோரிக்கை
தொகுVaarana18, 786haja, Theni.M.Subramani ஆகிய பயனர் கணக்குகள் இடையே உள்ள தொடர்பு பற்றி அறிய முறையான கைப்பாவை சோதனை செய்து அறிக்கையைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். காரணம்: என் மீதான தனிமாந்தத் தாக்குதல்கள். நன்றி.
பி. கு. இது தேனி. மு. சுப்பிரமணி மீதான அவதூறு கிடையாது. இக்கணக்குகள் இடையே உள்ள தொடர்பு பற்றிய உண்மையை அறிய முறையான கோரிக்கை மட்டுமே. --இரவி (பேச்சு) 07:20, 18 அக்டோபர் 2013 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியாவில் கைப்பாவைகளைக் கண்டறியும் அணுக்கமுடையவர்களைக் கண்டறிய வேண்டியுள்ளது. அதற்கு சில நாட்களாகலாம். இதுபோன்ற வேண்டுகோள் இருக்கும்போது தொடர்புடைய கணக்குகளைச் சந்தேகத்துடன் எவரும் அணுக வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 08:50, 18 அக்டோபர் 2013 (UTC)
- கைப்பாவைச் சோதனை இரண்டு தெரிந்த கணக்குகளிடையேதான் செய்ய முடியுமா? அல்லது தெரிந்த ஒன்றை வைத்துக்கொண்டு அது தெரியாத ஒன்றின் கைப்பாவையாகச் செயல்படுகிறதா என்றும் கண்டறிய முடியுமா? ---மயூரநாதன் (பேச்சு) 17:08, 18 அக்டோபர் 2013 (UTC)
- @இரவி : சரியான காரணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் m:SRCUல் கேட்க வேண்டும். ஏற்கனவே வேண்டுகோள் ஒன்று வைக்கப்பட்டுள்ளது m:SRCU#Theni.M.Subramani.40ta.wikipedia.. சரியாக உரையாடல்களை பின்தொடராததால் விக்கியில் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் இருக்கிறது. அதனால் இது பற்றி என்னுடைய கருத்தை கூற இயலவில்லை. @sundar : m:CU_policy#Access_to_CheckUser.. @மயூரநாதன் :ஒரு ஐபி அல்லது பயனர் கணக்கு இருந்தால் போதுமானது அதன் மூலம் எளிதாக அது தொடர்புடைய கணக்குகளை கண்டறியலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 01:40, 19 அக்டோபர் 2013 (UTC)
- நன்றி சண்முகம், அந்தப் பயனர்கள் இருவரும் யாருடைய கைப்பாவை என இப்போது தெரிந்து விட்டது.--Kanags \உரையாடுக 23:45, 19 அக்டோபர் 2013 (UTC)
- @இரவி : சரியான காரணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் m:SRCUல் கேட்க வேண்டும். ஏற்கனவே வேண்டுகோள் ஒன்று வைக்கப்பட்டுள்ளது m:SRCU#Theni.M.Subramani.40ta.wikipedia.. சரியாக உரையாடல்களை பின்தொடராததால் விக்கியில் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் இருக்கிறது. அதனால் இது பற்றி என்னுடைய கருத்தை கூற இயலவில்லை. @sundar : m:CU_policy#Access_to_CheckUser.. @மயூரநாதன் :ஒரு ஐபி அல்லது பயனர் கணக்கு இருந்தால் போதுமானது அதன் மூலம் எளிதாக அது தொடர்புடைய கணக்குகளை கண்டறியலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 01:40, 19 அக்டோபர் 2013 (UTC)
- கைப்பாவைச் சோதனை இரண்டு தெரிந்த கணக்குகளிடையேதான் செய்ய முடியுமா? அல்லது தெரிந்த ஒன்றை வைத்துக்கொண்டு அது தெரியாத ஒன்றின் கைப்பாவையாகச் செயல்படுகிறதா என்றும் கண்டறிய முடியுமா? ---மயூரநாதன் (பேச்சு) 17:08, 18 அக்டோபர் 2013 (UTC)
நடவடிக்கை
தொகுபின்வரும் நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கிறேன்.
- 786haja, Vaarana18 பங்களிப்புகள் அனைத்தையும் அந்தந்த பக்கங்களின் தற்போதைய பதிப்பில் இருந்து நீக்க வேண்டும். இரு கணக்குகளையும் நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்.
- HK Arun இது குறித்து விளக்க அளிக்க ஒரு வார காலம் தரலாம்.
- இந்த இடைப்பட்ட ஒரு வார காலத்தில் கைப்பாவை கணக்குகளை இயக்குவோர் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை பற்றி முடிவெடுக்க வேண்டும். இது இந்ந ஒரு வழக்கை வைத்து மட்டும் அல்லாமல் வருங்காலத்தின் அனைத்துச் சாத்தியக்கூறுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
- தேவைப்பட்டால், தமிழ் விக்கிப்பீடியா சார்பாக கைப்பாவைச் சோதனை செய்யும் இருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையெனில், தற்போது மேல்-விக்கியில் கேட்டு அறியும் நடைமுறையே போதுமானது.--இரவி (பேச்சு) 01:13, 20 அக்டோபர் 2013 (UTC)
- வழிமொழிகிறேன். -- சுந்தர் \பேச்சு 06:18, 20 அக்டோபர் 2013 (UTC)
- முடிவை வரவேற்கிறேன். மேலும் இதனையும் [ஏற்கனவே நம்மிடம் உள்ள கைப்பாவை தொடர்பான விதிகள்] பார்க்கவும். -- சூர்யபிரகாஷ் உரையாடுக 06:33, 20 அக்டோபர் 2013 (UTC)
- நன்றி சூரியா. பி.கு. இரவி குறிப்பிட்ட நடவடிக்கைகளில் முதலாம் எண்ணிட்ட குறிப்பை மட்டும் அப்படியே செயற்படுத்த வேண்டாமெனக் கருதுகிறேன். பல உரையாடல்கள் தொடர்பற்றுப் போய்விடும். ஏதாவது பொருத்தமான முன்னுரையுடன் அவற்றைக் கட்டம் கட்டிப் பூட்டலாம். -- சுந்தர் \பேச்சு 07:53, 20 அக்டோபர் 2013 (UTC)
- அவ்விரு கணக்குகளும் ஆன்டனால் தற்போது [முடிவின்றி] Hard-Block [கணக்கு தொடங்குவது, உரையாடுவது] செய்யப்பட்டுள்ளன. நீங்கள் அதனைத் திருத்தலாம் சுந்தர். -- சூர்யபிரகாஷ் உரையாடுக 08:06, 20 அக்டோபர் 2013 (UTC)
- தடை செய்வதற்கு மறுப்பேதும் இல்லை, சூரியா. ஏற்கனவே அவர்கள் பதிந்தவற்றைப் பற்றிய கருத்தைத்தான் மேலே இட்டிருந்தேன். -- சுந்தர் \பேச்சு 08:53, 20 அக்டோபர் 2013 (UTC)
- சுந்தர், கைப்பாவை கணக்கில் இருந்து கட்டுரை வெளியில் வந்த நல்ல தொகுப்புகளையும் உரையாடல் பக்கங்களில் உள்ள பண்பான உரையாடல்களையும் அப்படியே விட்டு விடலாம். ஆனால், பண்பற்ற தனிமனிதத் தாக்குதல்கள், ஆதாரமற்ற அவதூறுகளை அப்படியே விட்டு விடுவது சரியன்று. நாளை வேறு ஒரு பயனர் இன்னும் மோசமான சொற்களைக் கூட விட்டுச் சொல்லலாம். எனவே, கைப்பாவை கணக்குகளின் முறையற்ற தொகுப்புகளை வரலாற்றில் இருந்து நிலையாக நீக்குமாறு வேண்டுகிறேன். தேவைப்பட்டால் விக்கிப்பீடியா:கைப்பாவை பக்கத்தில் இதற்கான விதியைச் சேர்க்க நடவடிக்கை எடுப்போம். நன்றி. --இரவி (பேச்சு) 17:27, 24 அக்டோபர் 2013 (UTC)
- இரவி, இப்படி நீக்குவதில் சிக்கல்கள் இருக்கின்றன. நீக்குவதற்கு மாறாக கோடிட்டு அடித்துக் காட்டலாம். காரணத்தைப் பிறைக்குறிகளுக்குள் இடலாம்(அதாவது கைப்பாவை கணக்கான செயற்பட்டதால் என்று), அப்பகுதிகளை மாற்றமுடியாமல் காப்பும் செய்யலாம். கைப்பாவைக் கணக்குகளை மூடிவது சரி (காலவரையற்ற தடை), கைப்பாவையை இயக்கியவரிடம் விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுப்பதும் சரி. ஆனால் அக்கூற்றுகளை நீக்குவதால், கைப்பாவை அல்லாமல் வேறு பெயரிலிவழி நாசவேலைகள் செய்தவர்களின் செயற்பாடுகளும் மறைந்து விடும். அக்கருத்துகளையும் கோடிட்டு அடித்துக்காட்டலாம். நீங்கள் கூறுவது: //பண்பற்ற தனிமனிதத் தாக்குதல்கள், ஆதாரமற்ற அவதூறுகளை அப்படியே விட்டு விடுவது சரியன்று. நாளை வேறு ஒரு பயனர் இன்னும் மோசமான சொற்களைக் கூட விட்டுச் சொல்லலாம்.// என்பதுபோல் அப்படியே விட்டுவிடவில்லை. அவை அடிக்கப்பட்டு காரணத்தையும் பிறைக்குறிகளுக்குள் நிருவாகி ஒருவர் இட்டு அறிவிக்கலாம். ஆகவே அப்படியே இல்லை. கைப்பாவைக் கணக்குவழியாக நிகழ்ந்த முறையற்ற உரையாடலை விடக் கீழ்மையாக பெயரிலி கணக்குகளில் இருந்து வந்துள்ளன. அவற்றை நீக்கி சான்றுகளை அழிக்க வேண்டாம். அவற்றைக் கோடிட்டு அடித்துக்காட்டி, அவை நீக்கப்பட்டன என்று குறிக்கலாம். நீங்கள் கூறுவது போல நாளை வேறு ஒரு பயனர் இதைப்பார்த்துத்தான் செய்ய வேண்டும் என்று இல்லை, இவற்றை அழிப்பதால் அப்படியான செயற்பாடுகளைத் தடுக்கவும் முடியாது. காலப் போக்கில் இவை எங்கோ புதைந்து கிடக்கும். ஆனால் இப்படி நடந்தது வரலாறாக இருக்கும். எனவே நீக்குவதற்கு நான் உடன்படவில்லை. --செல்வா (பேச்சு) 18:14, 24 அக்டோபர் 2013 (UTC)
- செல்வா, https://en.wikipedia.org/wiki/Wikipedia:Revision_deletion#Criteria_for_redaction பார்த்து என்ன செய்வது என்று விக்கிச்சமூகம் முடிவெடுக்கட்டும். //Purely disruptive material that is of little or no relevance or merit to the project. This includes allegations, harassment// என்று உள்ள வரிகளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். இங்கு தடை செய்யப்பட்ட கைப்பாவை கணக்கின் மூலமாக வந்த அவதூறினால் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் கோரிக்கை முன்வைத்துள்ளேன். Anonymous IP மூலம் பாதிக்கப்பட்டவரகள் தகுந்த இழையில் தங்கள் கோரிக்கையை முன் வைக்கலாம். --இரவி (பேச்சு) 07:25, 25 அக்டோபர் 2013 (UTC)
- இரவி, இப்படி நீக்குவதில் சிக்கல்கள் இருக்கின்றன. நீக்குவதற்கு மாறாக கோடிட்டு அடித்துக் காட்டலாம். காரணத்தைப் பிறைக்குறிகளுக்குள் இடலாம்(அதாவது கைப்பாவை கணக்கான செயற்பட்டதால் என்று), அப்பகுதிகளை மாற்றமுடியாமல் காப்பும் செய்யலாம். கைப்பாவைக் கணக்குகளை மூடிவது சரி (காலவரையற்ற தடை), கைப்பாவையை இயக்கியவரிடம் விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுப்பதும் சரி. ஆனால் அக்கூற்றுகளை நீக்குவதால், கைப்பாவை அல்லாமல் வேறு பெயரிலிவழி நாசவேலைகள் செய்தவர்களின் செயற்பாடுகளும் மறைந்து விடும். அக்கருத்துகளையும் கோடிட்டு அடித்துக்காட்டலாம். நீங்கள் கூறுவது: //பண்பற்ற தனிமனிதத் தாக்குதல்கள், ஆதாரமற்ற அவதூறுகளை அப்படியே விட்டு விடுவது சரியன்று. நாளை வேறு ஒரு பயனர் இன்னும் மோசமான சொற்களைக் கூட விட்டுச் சொல்லலாம்.// என்பதுபோல் அப்படியே விட்டுவிடவில்லை. அவை அடிக்கப்பட்டு காரணத்தையும் பிறைக்குறிகளுக்குள் நிருவாகி ஒருவர் இட்டு அறிவிக்கலாம். ஆகவே அப்படியே இல்லை. கைப்பாவைக் கணக்குவழியாக நிகழ்ந்த முறையற்ற உரையாடலை விடக் கீழ்மையாக பெயரிலி கணக்குகளில் இருந்து வந்துள்ளன. அவற்றை நீக்கி சான்றுகளை அழிக்க வேண்டாம். அவற்றைக் கோடிட்டு அடித்துக்காட்டி, அவை நீக்கப்பட்டன என்று குறிக்கலாம். நீங்கள் கூறுவது போல நாளை வேறு ஒரு பயனர் இதைப்பார்த்துத்தான் செய்ய வேண்டும் என்று இல்லை, இவற்றை அழிப்பதால் அப்படியான செயற்பாடுகளைத் தடுக்கவும் முடியாது. காலப் போக்கில் இவை எங்கோ புதைந்து கிடக்கும். ஆனால் இப்படி நடந்தது வரலாறாக இருக்கும். எனவே நீக்குவதற்கு நான் உடன்படவில்லை. --செல்வா (பேச்சு) 18:14, 24 அக்டோபர் 2013 (UTC)
- சுந்தர், கைப்பாவை கணக்கில் இருந்து கட்டுரை வெளியில் வந்த நல்ல தொகுப்புகளையும் உரையாடல் பக்கங்களில் உள்ள பண்பான உரையாடல்களையும் அப்படியே விட்டு விடலாம். ஆனால், பண்பற்ற தனிமனிதத் தாக்குதல்கள், ஆதாரமற்ற அவதூறுகளை அப்படியே விட்டு விடுவது சரியன்று. நாளை வேறு ஒரு பயனர் இன்னும் மோசமான சொற்களைக் கூட விட்டுச் சொல்லலாம். எனவே, கைப்பாவை கணக்குகளின் முறையற்ற தொகுப்புகளை வரலாற்றில் இருந்து நிலையாக நீக்குமாறு வேண்டுகிறேன். தேவைப்பட்டால் விக்கிப்பீடியா:கைப்பாவை பக்கத்தில் இதற்கான விதியைச் சேர்க்க நடவடிக்கை எடுப்போம். நன்றி. --இரவி (பேச்சு) 17:27, 24 அக்டோபர் 2013 (UTC)
- தடை செய்வதற்கு மறுப்பேதும் இல்லை, சூரியா. ஏற்கனவே அவர்கள் பதிந்தவற்றைப் பற்றிய கருத்தைத்தான் மேலே இட்டிருந்தேன். -- சுந்தர் \பேச்சு 08:53, 20 அக்டோபர் 2013 (UTC)
- அவ்விரு கணக்குகளும் ஆன்டனால் தற்போது [முடிவின்றி] Hard-Block [கணக்கு தொடங்குவது, உரையாடுவது] செய்யப்பட்டுள்ளன. நீங்கள் அதனைத் திருத்தலாம் சுந்தர். -- சூர்யபிரகாஷ் உரையாடுக 08:06, 20 அக்டோபர் 2013 (UTC)
- நன்றி சூரியா. பி.கு. இரவி குறிப்பிட்ட நடவடிக்கைகளில் முதலாம் எண்ணிட்ட குறிப்பை மட்டும் அப்படியே செயற்படுத்த வேண்டாமெனக் கருதுகிறேன். பல உரையாடல்கள் தொடர்பற்றுப் போய்விடும். ஏதாவது பொருத்தமான முன்னுரையுடன் அவற்றைக் கட்டம் கட்டிப் பூட்டலாம். -- சுந்தர் \பேச்சு 07:53, 20 அக்டோபர் 2013 (UTC)
- அவதூறுகள் கைப்பாவைக் கணக்கினால் வந்தால்தான் ஒருவர் பாதிக்கப்படுவார் என்றில்லை. ஒரு முறையான பயனரிடம் இருந்து வந்தாலும் பாதிப்பு ஒன்றுதான். கைப்பாவைக் கணக்கில் இருந்து வந்ததற்கு ஒப்பான அல்லது அதிலும் கூடுதலான அவதூறுகளும் தாக்குதல் களும் முறையான பயனர்களிடம் இருந்தும், அனானிகளிடம் இருந்தும் வந்திருக்கின்றன. நீக்குவதானால் எல்லாவற்றையும் அடையாளம் கண்டு நீக்குவதுதான் முறை. அண்மைக் காலங்களில், குறிப்பாகக் கடந்த ஒரு மாத காலத்தில், தமிழ் விக்கியில் கருத்திடுபவர்கள் தாம் எழுதுபவற்றை மீண்டும் வாசித்துப் பார்க்கிறார்களா என்று தெரியவில்லை. பல கருத்துக்களை வாசிக்கும் போது அப்படியான எண்னம் தான் தோன்றுகிறது. சில வேளைகளில் அந்தந்த நேரங்களில் உள்ள மனநிலைக்கு ஏற்றபடி கருத்துக்கள் வெளிவந்திருக்கலாம். இப்பொழுது வாசித்துப் பார்த்தால் சிலவேளை அவர்களே இதை நானா எழுதினேன் என்று வெட்கப்படவும் கூடும். எனவே, அவதூறுகளும், தனி மனிதத் தாக்குதல்களும் தன்னை மட்டும் அன்றி மற்றவர்களையும் பாதிக்கும் என்று எண்ணக்கூடிய ஒவ்வொருவரும் தயவு செய்து நீங்கள் இந்த ஒரு மாத காலத்தில் எழுதியவற்றை மீண்டும் படித்துப் பார்த்து அங்கே தனிமனிதத் தாக்குதல், அவதூறுகள் என்பன இருந்தால் நடுக்கோடிட்டு அழித்து வருத்தம் தெரிவியுங்கள். அது விக்கிச் சமூகத்தில் ஒரு நல்ல, பண்பான முன்மாதிரியாக அமையும். அத்துடன் ஒவ்வொருவரும் தங்களுடைய நிலைப்பாடுகளை மீள்பரிசோதனை செய்யவும், அதற்கேற்றபடி தங்களை மாற்றிக்கொள்ளவும் உதவியாக அமையும். ஒவ்வொருவரினதும் மனச்சாட்சிதான் அவர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் முதல் நீதிபதி. இந்த நீதிபதியின் தீர்ப்பினால் உங்களுக்கு எந்த மனத்தாங்கலும் ஏற்படாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்---மயூரநாதன் (பேச்சு) 08:49, 25 அக்டோபர் 2013 (UTC)
- //நீக்குவதானால் எல்லாவற்றையும் அடையாளம் கண்டு நீக்குவதுதான் முறை// இதற்கு நான் மறுக்கவில்லையே? இது கைப்பாவை கணக்கு பற்றிய இழை. எனவே, இதனை மட்டும் இங்கு கோருகிறேன். உரிய மற்ற கொள்கைகளையும், உரையாடல்களையும் நீங்களே கூட முன்னெடுக்கலாம். என்னுடைய வலைப்பதிவில் என்னை மிக மோசமாக திட்டி வந்த கருத்துகளைக் கூட நான் அப்படியே தான் வைத்துள்ளேன். எனவே, செல்வா வலியுறுத்தும் வரலாறு, தொடர்ச்சி முதலியவற்றை ஏற்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், விக்கியில் நடப்பது என்னுடைய தனிப்பட்ட பிரச்சினை இல்லை. நாளை பெண்களும் மாணவர்களும் நிறைய வந்து பங்களிக்க வேண்டும் என்ற நிலையில் அவர்களுக்கு எத்தகைய காப்பு நடவடிக்கைகளை நாம் வழங்க முடியும் என்பதை மட்டும் விக்கிச் சமூகம் எண்ணிப் பார்க்க வேண்டும். இதற்கு மேல் இந்த இழையில் உரையாட விரும்பவில்லை. நன்றி. --இரவி (பேச்சு) 09:27, 25 அக்டோபர் 2013 (UTC)
குற்றச்சாட்டையும் ஆதாரங்களை ஆராயவேண்டுமா அல்லது விசாரணை நடைபெறாமல் குற்றவாளியை காப்பாற்ற வழிமுறைகளை ஆராய வேண்டுமா
தொகுஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொரும் மெய்ப்பொருள் காண்பதறிவு. எனவே யார் வேண்டுமானாலும் கோரிக்கை வைக்கலாம். அந்த கோரிக்கையுடன் அவர் தரும் ஆதாரங்களைத்தான் ஆராய்வது, அதன் பிறகு ஆதாரங்களின் அடிப்படையில் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வது அல்லது அந்த கோரிக்கையை மறுக்கும் அளவு ஆதாரங்களை தந்து அந்த கோரிக்கையை நிராகரிப்பதுதான் உலக நடைமுறை. இது தான் அறம் தவிர குற்றம் சாற்றுபவர் யார், குற்றம் சாற்றப்பட்டது யார் என்று ஆராய்வது முற்றிலும் அறமற்ற செயல் மற்றும் மனசாட்சிக்கு விரோதமான செயல் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஒருவர் குற்றம் சாட்டினால் அந்த குற்றத்தை ஆராய்வதை செய்யாமல், அந்த ஆதாரங்களை ஆராய்வதை செய்யாமல், குற்றம் சாற்றப்பட்டவரை விசாரிக்காமல், குற்றம் சாற்றுபவரை குறுக்கு விசாரணை செய்யாமல் யார் குற்றம் சாட்டலாம், யார் குற்றம் சாட்ட அனுமதிக்க கூடாது, யார் மீது குற்றம் சாற்றலாம், யார் மீது குற்றம் சாற்ற முடியாது என்று விவாதிப்பது குற்றவாளியை காப்பாற்றும் நடைமுறை என்பது என் தாழ்மையான கருத்து
ஒரு குற்றச்சாட்டை எப்படி கையாள வேண்டும் என்று வாக்கெடுப்பு நடத்தலாமா ?
- குற்றத்தை ஆராய வேண்டும். ஆதாரங்களை ஆராய வேண்டும். ஆதாரங்களை மறுத்து அடுத்த தரப்பு ஆதாரங்களை அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும். இரு தரப்பினையும் சீர்தூக்கி பார்க்க வேண்டும். எது சரி என்று ஆதாரங்களின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும்
- குற்றத்தை ஆராயாமல், ஆதாரங்களை ஆராயாமல், குற்றவாளிகளை காக்கும் வழிமுறைகளை கண்டு பிடிக்க வேண்டும்
இதில் எத்தனை பேர் வழிமுறை 1 தேர்ந்தெடுக்கிறீர்கள். எத்தனை பேர் வழிமுறை 2 தேர்ந்தெடுக்கிறீர்கள் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 00:42, 19 அக்டோபர் 2013 (UTC)
- முதலில் இது அறமன்றம் அன்று. இங்கே தலையாய குறிக்கோள் நல்லதொரு கலைக்களஞ்சியம் உருவாக்குவது. ஆனால் இக்கலைக்களஞ்சியம் கூட்டாக பலருடைய ஒத்துழைப்பாலும், கூட்டுழைப்பாலும், உருவாவது. ஆகவே உடனுழைப்பதிலும் அடிப்படைக் குறிக்கோளை எய்துவதிலும் சில ஒழுகுமுறைகள் வேண்டும். இந்த ஒழுகுமுறைகளில் சில நேரங்களில் சிக்கல்கள் ஏற்படும்பொழுது இணக்க முடிவை நோக்கி நகர்வதே வழக்கம் (ஐந்து தூண்கள் என்பதில் நான்காவது தூணாகக் கருதப்படும் கருத்தை நோக்குக). இந்தக் கலைக்களஞ்சிய உருவாக்கத்தில், அதன் நடைமுறைகளில், பொறுப்பாளர் ஒருவர் செய்யும் "குற்றம்" என்பது என்ன, குற்றம் எனக்கருதப்படுவதை எப்படி முன் வைக்க வேண்டும் அதனை அலச என்ன அணுகுமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும், யார் அலசுவது என்னென்ன முடிவுகள் எய்தலாம், இப்படியான குற்றங்கள் நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும், முதலானவற்றுக்கு ஏற்ற நடைமுறைகள் வேண்டுமல்லவா? அவற்றைத்தான் செய்ய முற்படுகின்றோம் (த.-வி-யின் பொறுப்பாளர்களும் த-வி குமுகமும்). ஒரு விளையாட்டே என்றாலும் அதிலும் விதிமுறைகள் வேண்டும் அல்லவா? (அரங்கின்றி வட்டாடியற்றே.. என்பது திருக்குறள்). ஒரு முறை-வகுப்பதையே குற்றம் சாட்டத்தொடங்கினால் வரம்பின்றிப் போகும். இவை எதுவாக இருந்தாலும் அடிப்படைக் குறிக்கோளைக் (நல்ல கலைக்களஞ்சியத்தை உருவாக்குதல், கூட்டுழைப்பால் உருவாக்குதல்) கருத்தில் கொண்டே செய்ய வேண்டும். --செல்வா (பேச்சு) 01:34, 19 அக்டோபர் 2013 (UTC)
அறமற்ற மன்றம் மற்றும் குற்றவாளிகளை காக்கும் குற்றமன்றம்
தொகு//முதலில் இது அறமன்றம் அன்று.// அறமற்ற மன்றம் என்றும் குற்றவாளிகளை காக்கும் குற்றமன்றம் என்றும் தெளிவு படுத்தியதற்கு நன்றி.
// ஒரு முறை-வகுப்பதையே குற்றம் சாட்டத்தொடங்கினால் வரம்பின்றிப் போகும்.//
ஆமாம் சார் . . . இதைத்தான் நானும் கூறினேன்.
- குற்றம் சாட்டுவதையே குற்றம் சாட்டத்தொடங்கினால் வரம்பின்றி போகும் என்பது தான் என் கருத்து
- அந்த குற்றத்தை ஆராயது அந்த குற்றவாளியை காக்க முயன்றால் அது வரம்பின்றிப் போகும்
- ஆதாரங்களை கண்டு கொள்ளாது, குற்றவாளியை காக்க வழிமுறைகளை தேடினால் அது வரம்பின்றிப் போகும்
ஆனால் இது எல்லம் அறத்தின் அடிப்பட்டையின் இயக்கும் சமூகங்களுத்தான் அறமற்ற வழிகளில் குற்றவாளியை காக்கும் சமூகங்கள் இது போன்ற நல்ல விஷயங்களை கண்டு கொள்ள வேண்டாம். . . அறமற்ற குற்றவாளிகளை காக்கும் குற்றமன்றங்களுக்கு நீதி நியாயம் எதுவுமே தேவையில்லை நீங்கள் எந்த பக்கம் நிற்கிறீர்கள்.
- குற்றத்தின் பக்கமா
- அல்லது நீதியின் பக்கமா
என்பதை பொருத்து இதில் மாறுபட்ட கருத்துகள் இருக்கும் என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன்
//. ஒரு விளையாட்டே என்றாலும் அதிலும் விதிமுறைகள் வேண்டும் அல்லவா?//
ஆமாம் சார்
எந்த விளையாட்டு என்றாலும் கால ஓட்டத்திற்கு ஏற்றாற்போல் அதில் மாற்றம் தேவைதான். அனைத்து விளையாட்டுகளிலும் விதிமுறைகள் மாற்றப்பட்டு வந்துள்ளன. இதில் எந்த சந்தேகமும் கிடையாது
ஆனால்
ஆட்டம் ஆரம்பித்த பிறகு பாதியில் விதிகளை மாற்றி, அதை அந்த ஆட்டத்திற்கும் சேர்த்து பயன் படுத்துவது என்பது அறமற்ற, வெட்கப்படவேண்டிய செயல்
எந்த ஒரு விளையாட்டு என்றாலும், அதில் ஒரு விதி மாற்றப்பட்டால், அது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ஆட்டத்திற்கு பொருந்தாது. அடுத்து வரும் ஆட்டங்களுக்குத்தான் பொருந்தும்
இது தான் உலக நியாயம்
இது தான் அறம்
ஆனால் அறமற்ற குற்றவாளிகளை காக்கும் குற்றமன்றங்களின் நிலை வேறு உங்களுக்கு தேவைப்படுபவர் விளையாடினால், விளையாட்டின் நடுவில் விதிகளை மாற்றலாம், அதையும் வழவழ கொழகொழ என்று நியாயப்படுத்தவும் செய்யலாம்.
புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 02:18, 19 அக்டோபர் 2013 (UTC)
- புருனோ, நான் அறமன்றம் அன்று என்று சொன்னது வழக்காடு மன்றம் அன்று என்ற பொருளில். தலையாய நோக்கம் என்னவென்றும் கூறினேன். முறை வகுப்பதை நீங்கள் ஏற்கும் பொழுது, நீங்கள் அது முடியும் வரை ஏன் பொறுத்திருக்காமல் முன்முடிவுகளுக்கு வருகின்றீர்கள் (எ.கா: குற்றமன்றம்.."குற்றவாளியைக் காக்கும் சமூகம்"..குற்றம் சாட்டுவதையே குற்றம் சாட்டத்தொடங்குதல்..). --செல்வா (பேச்சு) 02:41, 19 அக்டோபர் 2013 (UTC)
- நான் எந்த முன் முடிவிற்கும் வரவில்லை. முறை வகுப்பதை நான் ஏற்கிறேன். ஆனால் அந்த முறையின் நோக்கம் வருங்காலத்தை நோக்கி இருக்க வேண்டுமே தவிர குற்றவாளிக்கு ஆதரவாக இருக்க கூடாது. நான் ஏற்கனவே கூறியுள்ளபடி, அந்த முறைகள் எல்லாம் இனி வரும் ஆட்டங்களுக்கே பொருந்த வேண்டுமே தவிர, நடந்து கொண்டிருக்கும் ஆட்டங்களுக்கு அல்ல
- உதாரணமாக
- # ஒரு கிரிக்கெட் ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஒருவர் க்ளீன் போல்ட் ஆகி விட்டார். அப்பொழுது கூடி இனி கிரிக்கெட்டில் க்ளீன் போல்ட் என்பது ஆட்டமிழக்கும் முறையில்லை என்று நீங்கள் முடிவெடுத்தால், அதை அடுத்த ஆட்டத்தில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வருவது அறம்
- # நாங்கள் விதியை வகுத்து விட்டோம். ஏற்கனவே ஆட்டமிழந்தவருக்கும் (அதாவது ஏற்கனவே க்ளீன் போல்ட் ஆனவருக்கும்) அது பொருந்தும். எனவே அவர் அவுட் இல்லை. அவர் தொடர்ந்து விளையாடலாம் என்று கூறுவது வெட்கக்கேடு
- இந்த வெட்கக்கேட்டிற்கு நீங்கள் வழ வழ கொழ கொழ என்று சப்பைக்கட்டு கட்டலாம்.
- //(எ.கா: குற்றமன்றம்.."குற்றவாளியைக் காக்கும் சமூகம்"..குற்றம் சாட்டுவதையே குற்றம் சாட்டத்தொடங்குதல்..)//
- சார்
- இது தனி தலைப்பு
- ஆலமரத்தடியில் நான் புதிதாக துவங்கியுள்ளேன்
- இது எதையாவது, யாரையாவது குறிப்பதாக தோன்றினால் பிழை என்னுடையது அல்ல.. . .. குற்றம் செய்பவருடை பிழை, அந்த குற்றவாளிக்கு ஆதரவாக இருப்பவருடைய பிழை புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 02:52, 19 அக்டோபர் 2013 (UTC)
நீங்கள் ஏற்கனவே கிளீன் போல்டு ஆனவர் என்று கூறும்பொழுது அது ஆட்டமிழப்பு என்று முன்பு விதி இருந்திருந்ததல் அல்லவா 'கிளீன் போல்டு'- ஆட்டமிழப்பு எல்லாம். இங்கே அப்படி ஏதும் முன் விதிகள் இல்லை. எனவே தான் இந்த நடவடிக்கையே. மேலே நான் "எ.கா" காட்டியவை எல்லாம் உங்கள் மொழிகள்!! நான் இங்கு எந்தக் குறிப்பிட்ட பயனரையும் காப்பாற்ற எதையும் கூறவில்லை. முறையின்றி யார்மீதும் "குற்றம்" "தண்டனை" என்றெல்லாம் போய்க்கொண்டிருந்தால், இங்கு நடக்கும் பணி (கலைக்களஞ்சிய ஆக்கம்) தடைபடுமே என்பதே கவலை. --செல்வா (பேச்சு) 03:12, 19 அக்டோபர் 2013 (UTC)
- //நீங்கள் ஏற்கனவே கிளீன் போல்டு ஆனவர் என்று கூறும்பொழுது அது ஆட்டமிழப்பு என்று முன்பு விதி இருந்திருந்ததல் அல்லவா 'கிளீன் போல்டு'- ஆட்டமிழப்பு எல்லாம். இங்கே அப்படி ஏதும் முன் விதிகள் இல்லை.//
- சரி சார்
- நான் கூறியது பொதுவான விஷயம்
- நீங்கள் இங்கு விதி இல்லை என்று எதை வைத்து கூறுகிறீர்கள்
- முதலில் விக்கியில் அறம் கிடையாது என்று கூறினீர்கள்
- இப்பொழுது விக்கியில் விதிகள் கிடையாது என்று கூறுகிறீர்களே
- என்ன கொடுமை சார் இது
- உதாரணமாக இங்கு பயனர்கள் ஐந்து தூண்கள் என்பதை கடைபிடிக்க வேண்டாமா. அவ்வாறு கடைபிடிக்காத ஒருவர் மற்றவர்களை அவதூறு செய்ய அனுமதிக்கலாமா
- உதாரணமாக இங்கு ஒருவர் (article spaceல்)கட்டுரை இடங்கஎன் கவிதையை எழுதினால் அதை ஏற்றுக்கொள்வீர்களா
- உதாரணமாக இங்கு ஒருவர் (article spaceல்)சிறுகதை எழுதினால் அதை ஏற்றுக்கொள்வீர்களா
- அந்த விதியை ஒருவர் மீறுவதாக நான் குற்றம் சுமத்தினால், அந்த குற்றச்சாட்டை கண்டு கொள்ளாமல் இங்கு நடக்கும் பணி (கலைக்களஞ்சிய ஆக்கம்) தடைபடுமே என்பதே கவலை என்று எனது கவிதைகளையும், சிறுகதைகளையும் பதிப்பிக்கலாமா
- //எனவே தான் இந்த நடவடிக்கையே. //
- விக்கியில் இருக்கும் விதிகளை வைத்து முதலில் தீர்மாணிக்கும் நேர்மை வேண்டும் சார்
- //மேலே நான் "எ.கா" காட்டியவை எல்லாம் உங்கள் மொழிகள்!! நான் இங்கு எந்தக் குறிப்பிட்ட பயனரையும் காப்பாற்ற எதையும் கூறவில்லை.//
- நன்றி
- / முறையின்றி யார்மீதும் "குற்றம்" "தண்டனை" என்றெல்லாம் போய்க்கொண்டிருந்தால், இங்கு நடக்கும் பணி (கலைக்களஞ்சிய ஆக்கம்) தடைபடுமே என்பதே கவலை./
- தவறு செய்தவர் உங்களுக்கு வேண்டியவர் என்ற ஒரே காரணத்தால், விசாரணை தேவையில்லை என்றும், இங்கு அறம் முக்கியம் இல்லை என்றும், இங்கு விதிகளே கிடையாது என்றெல்லாம் போய்க்கொண்டிருந்தால், இங்கு நடக்கும் பணி (கலைக்களஞ்சிய ஆக்கம்) தடைபடுமே என்பதே கவலை புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 03:44, 19 அக்டோபர் 2013 (UTC)
முன்தேதியிட்ட விதிகளின் நோக்கம்
தொகுமுன்தேதியிட்ட விதிகளின் நோக்கம் --> ஒழுக்கக்கேடு, முறைகேடு, தீநெறி, ஒருபக்கசார்பு ஆகியவையே
உலகம் முழுவதும் ஒரு நடைமுறை உள்ளது அதாவது எந்த விதியும், அந்த விதி நடைமுறைக்கு வந்த நாளில் இருந்து தான் அது அமலுக்கு வரும். இதில் வெகு சில விதிவிலக்குகள் உள்ளன. ஒன்றும் நடைமுறைகளில் தாமதம் காரணமாக நாள்கடந்து வரும் விதிமுறைகள் (உதாரணம் அரசின் பஞ்சப்படி அறிவிப்பு) அல்லது விவாதம் ஆரம்பித்த தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் விதிகள்
- ஒரு நடைமுறை தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டும் என்ற கோரிக்கை சரி
- ஒரு நடைமுறை தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து நடைபெறும் விவாதமும் சரி
ஆனால் ஒரு நடைமுறை தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து நடைபெறும் விவாதத்தை தொடர்ந்து நீங்கள் எடுக்க போகும் விதிமுறைகளும் அந்த விவாதம் தொடங்கப்பட்ட நேரத்திற்கு பிறகு வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தான் பொருந்த வேண்டும்
ஒரு விவாதம் தொடங்கப்பட்ட நேரத்திற்கு முன் வைக்கப்பட்ட கோரிக்கையை (கோரிக்கைகளை) அந்த கோரிக்கை வைக்கப்பட்ட நேரத்தில் இருந்த விதிமுறைகளின் படிதான் அணுக வேண்டுமே தவிர,
ஒரு கோரிக்கை வைத்த பிறகு அது குறித்து புது விதிகளை உண்டாக்குவது, முற்றிலும் ஒரு பக்கசார்பான செயல் என்பது என் தாழ்மையான கருத்து
வெகு சில விதிவிலக்குகளை தவிர முன்தேதியிட்ட விதிகளின் நோக்கம் ஒழுக்கக்கேடு, முறைகேடு, தீநெறி, ஒருபக்கசார்பு ஆகியவையே என்பது உலக பொது நடைமுறை (aim of a predated rule or a rule with retrospective effect is malafide unless proved otherwise)
ஒரு முறை இந்த அறமற்ற பெருங்குற்றத்தை செய்தால், இதையே முன்மாதிரியாக காட்டி (precedence) ஒவ்வொரு முறையும் முன்தேதியிட்ட விதிகளை வகுத்து குற்றவாளிகளை காக்கும் நிலை ஏற்படலாம் என்ற மாபெரும் அபாயம் இருப்பதை நாம் அனைவரும் உணரவேண்டும் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 00:42, 19 அக்டோபர் 2013 (UTC)
- புருனோ அண்ணா அவர்களுக்கு, விக்கித் திட்டங்கள் அனைத்தும் லாபநோக்கில் உள்ள வளங்கள் அல்ல இதுவொரு தன்னார்வ வளங்களே. பங்களிப்பவர்களின் அணுகுமுறையை வைத்து இத்தகைய பழி சுமத்துவதைவிட பெரிய குழப்பங்கள் உண்டாக்கும் செயல்களுக்குத்தான் அத்தகைய நடவடிக்கை வேண்டும். மேலே மயூரநாதன், செல்வா, சுந்தர் போன்றோர் கூறியது போல வீணான நேரவிரயத்தைதான் இத்தகைய குற்றாச்சாட்டுகள் தரும். மேலும் குற்றவாளி, குற்றம் போன்ற சொற்கள் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு விக்கி ஒரு நாட்டாமை ஆலமரமாகி விடக் கூடும். பயனரின் அணுகுமுறைக் குறையாக இருந்தால் அதற்கு ஏற்றார் போல எடுத்துச் சொல்லலாம். .நமது பெருநோக்கம் தவறிளைப்பவர்களைத் தண்டிப்பதல்ல விக்கி வளர்ச்சியே, அதன் மூலம் சமூகப் பயனே. என்று நினைக்கிறேன். பெருநோக்கோடு ஒப்பிட்டே எந்த ஒரு செயலையும் குற்றம் என்று சொல்லமுடியும் ஆகவே அறமீறுவதாக அஞ்சத் தேவையில்லை என்பது அடியேன் வாதம் --நீச்சல்காரன் (பேச்சு) 01:32, 19 அக்டோபர் 2013 (UTC)
- புருனோ, மேலே உள்ள பகுதியில் கூறியிருப்பதையும் பாருங்கள். நீச்சல்காரன், உங்கள் கருத்துகளுடன் உடன்படுகின்றேன், நன்றி. --செல்வா (பேச்சு) 01:38, 19 அக்டோபர் 2013 (UTC)
- பார்த்து விட்டேன். தவறிளைப்பவர்கள் உங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் உங்கள் நோக்கம் அவர்களை தண்டிப்பதல்ல. உங்களுக்கு வேண்டிய அந்த குற்றவாளிகளை காப்பாற்ற கடுமையாக முயல்வது. இங்கு சட்டங்களும் நடைமுறைகளும் அனைவருக்கும் பொது அல்ல, நபருக்கு நபர் மாறுபடும் என்பதை புரிந்து கொண்டேன் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 02:11, 19 அக்டோபர் 2013 (UTC)
- புருனோ, நீங்கள் கூறியிருப்பவை முன்முடிவுகளா என்று எண்ணிப்பார்ப்பீர்களா? தவறிழைத்ததாக ஒருவரைப் பற்றி மற்றொருவர் கூறுவதாலேயே தவறிழைத்தவர் என்று முடிவுக்கு வர முடியுமா? தவறிழைத்ததாக கூறப்பட்டவர் மறுமொழிகள் தந்துள்ளாரா? யார் இவற்றைத் தேர்வது, எப்படித் தேர்வது, தேர்ந்து என்னென்ன முடிவுகளுக்கு வரலாம், என்று ஏதும் விதிமுறைகள் உள்ளனவா? எங்கள் நோக்கம் யாரையும் "தண்டிப்பதல்ல", புருனோ, கலைக்களஞ்சியத்தைச் செவ்வனே வளர்த்தெடுப்பது, அவற்றுக்குத் தேவையான நடைமுறைகளை வகுப்பது. --செல்வா (பேச்சு) 02:58, 19 அக்டோபர் 2013 (UTC)
- பார்த்து விட்டேன். தவறிளைப்பவர்கள் உங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் உங்கள் நோக்கம் அவர்களை தண்டிப்பதல்ல. உங்களுக்கு வேண்டிய அந்த குற்றவாளிகளை காப்பாற்ற கடுமையாக முயல்வது. இங்கு சட்டங்களும் நடைமுறைகளும் அனைவருக்கும் பொது அல்ல, நபருக்கு நபர் மாறுபடும் என்பதை புரிந்து கொண்டேன் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 02:11, 19 அக்டோபர் 2013 (UTC)
- புருனோ, மேலே உள்ள பகுதியில் கூறியிருப்பதையும் பாருங்கள். நீச்சல்காரன், உங்கள் கருத்துகளுடன் உடன்படுகின்றேன், நன்றி. --செல்வா (பேச்சு) 01:38, 19 அக்டோபர் 2013 (UTC)
- புருனோ, நீங்கள் சொல்ல வரும் கருத்து புரிகிறது. நீங்கள கூறுவது ஒரு வளர்ந்த அரசியலமைப்புக்கு முற்றிலும் பொருந்தும். விக்கியின் அடிப்படைக் கோட்பாடுகளாகிய ஐந்து தூண்கள் மட்டுமே அறுதியாக உள்ளவை. அதனடிப்படையில் அவ்வப்போது முறை வகுத்துக் கொண்டு நெறிமுறைகளையும் வழிகாட்டல்களையும் வளர்த்தே வருகிறோம். இதுவரை கண்டிராத சூழல் வரும்போது அடிப்படைக் கோட்பாடுகள் (நன்னயம் கருதல் முதலானவை), ஆங்கில விக்கி போன்ற வளர்ந்த விக்கியில் உள்ள முற்காட்டுகள் (அப்படியே அவர்களது விதிகளை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை, அங்குள்ள கருத்துக்களை உள்வாங்கி ஏற்புடையவற்றை ஏற்றுக் கொள்வோம்) ஆகியவற்றைக் கொண்டுப் புதிதாய் உரையாடி முடிவெடுப்போம். அவ்வகையில்தான் இப்போது பலவும் செய்யப்பட்டுள்ளன (நிருவாகி தேர்தல், நிருவாக அணுக்கத்தை மீளப்பெறுதல் போன்ற விசயங்களில்). மேலே நீச்சல்காரன் சொன்னதுபோல விக்கியிலுள்ள மிகப்பெரும்பாலான நெறிமுறைகள் (ஆங்கில விக்கியையும் சேர்த்து) தண்டிக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டவை அல்ல. ஏனெனில் இங்குள்ள பெரும்பாலான 'குற்றங்கள்' நிகழ்வாழ்வு போல மீளமைக்க முடியாதவை அல்ல. ஒரு இணைப்பைச் சொடுக்கினால் பழையபடி சீராக்கி விடலாம். தடுப்பு நடவடிக்கைகளாகவே தடைகள் முதலியன உள்ளன. en:Wikipedia:What_Wikipedia_is_not#Wikipedia_is_not_a_democracy - இது பலவற்றையும் தெளிவாக்கும். உங்களுக்கு விரிவாகப் பின்னர் மறுமொழியளிக்கிறேன். -- சுந்தர் \பேச்சு
பிழையை பாருங்கள், பிழை சுமத்துபவரை ஏன் பார்க்கிறீர்கள்
தொகு//புருனோ, நீங்கள் கூறியிருப்பவை முன்முடிவுகளா என்று எண்ணிப்பார்ப்பீர்களா? //
- பார்த்து விட்டேன். நான் எந்த முன் முடிவையும் எடுக்க வில்லை
//தவறிழைத்ததாக ஒருவரைப் பற்றி மற்றொருவர் கூறுவதாலேயே தவறிழைத்தவர் என்று முடிவுக்கு வர முடியுமா? //
- வர முடியாது
- ஆதாரங்களை சீர் தூக்கி பார்த்தே வர வேண்டும்
- ஒருவரை விசாரணை செய்யாமல் குற்றவாளி என்று கூறுவது அந்த குற்றம் சாட்டபட்டவருக்கு இழைக்கப்படும் அநீதி
- அதே போல் ஒருவரை விசாரணையே செய்யாமல் அவரை நிரபராதி என்று கூறுவது அப்படி கூறுபவர்களால் இந்த சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதி
//தவறிழைத்ததாக கூறப்பட்டவர் மறுமொழிகள் தந்துள்ளாரா? //
- நான் பொதுவாக கூறுகிறேன்
- நீங்கள் எந்த முன் முடிவோடு இந்த கேள்வியை கேட்கிறீர்கள் என்று புரியவில்லை, எனக்கு அது தேவையும் இல்லை
- நான் விவாதிப்பது பொது கருத்தை நோக்கி
//யார் இவற்றைத் தேர்வது, //
- யார் என்றாலும்
//எப்படித் தேர்வது//
- அறிவை, புத்தியை பயன்படுத்தி
//தேர்ந்து என்னென்ன முடிவுகளுக்கு வரலாம், என்று ஏதும் விதிமுறைகள் உள்ளனவா? //
- நான் பொதுவாக கூறுகிறேன்
- நீங்கள் எந்த முன் முடிவோடு இந்த கேள்வியை கேட்கிறீர்கள் என்று புரியவில்லை, எனக்கு அது தேவையும் இல்லை
- எந்த குற்றச்சாட்டு என்றாலும் முதலில் அது விசாரிக்கப்படவேண்டும். அது உண்மையா, பொய்யா என்று உறுதி செய்யப்பட வேண்டும்
- ஒரு குற்றச்சாட்டு உண்மையா, பொய்யா என்று உறுதி செய்ய சிறிது அறிவும் நேர்மையான நீதியின் பக்கம் நிற்கும் நெஞ்சமும் போதும்
//எங்கள் நோக்கம் யாரையும் "தண்டிப்பதல்ல", புருனோ, கலைக்களஞ்சியத்தைச் செவ்வனே வளர்த்தெடுப்பது, அவற்றுக்குத் தேவையான நடைமுறைகளை வகுப்பது.//
- சார், தண்டனை என்பது இரண்டாம் பட்சம்
- முதலில் குற்றச்சாட்டினை உறுதி செய்யுங்கள். அது சரியா, தவறா என்பதை முடிவு செய்யுங்கள்
- அப்புறம்
- உங்களுக்கு வேண்டியவர் என்பதால், அவர் எவ்வளவு பெரிய குற்றம் செய்திருந்தாலும், அவரை தண்டிக்க வேண்டாம் என்று நீங்களே முடிவு செய்து விட்டதால் விசாரணை தடுக்க வழிமுறை தேடுவது மிகவும் வெட்கக்கேடு. நிற்க இது பொது கருத்து. யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. இதை வாசித்து யாருக்காவது மனம் புண்பட்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 03:15, 19 அக்டோபர் 2013 (UTC)
- புருனோ, குற்றச்சாட்டு பதியப்பட்டே இருக்கிறது. அக்குற்றம் உறுதிசெய்யப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இடத்தில் குற்றம் உறுதி செய்தாலும் நிருவாக அணுக்கத்துடன் அது தொடர்புடையதா எனவும் பார்க்க வேண்டும். யாரையும் காப்பாற்றுவது நோக்கமல்ல. இப்போது நீங்கள் தடித்த எழுத்தில் உங்களுக்கு வேண்டியவர் என்றால் என எழுதியிருப்பதை விலக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறேன். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. யாருக்கு வேண்டியவர் யார இங்கு? அனைவருமே விக்கிப்பீடியர் தான். -- சுந்தர் \பேச்சு 03:25, 19 அக்டோபர் 2013 (UTC)
- நான் பொதுவாக பேசுகிறேன். எந்த ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை அல்ல என்று பல முறை விளக்கிவிட்டேன். // உங்களுக்கு வேண்டியவர் என்றால் என எழுதியிருப்பதை விலக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறேன். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. யாருக்கு வேண்டியவர் யார இங்கு? அனைவருமே விக்கிப்பீடியர் தான்.// இது குறித்து நான் ஏற்கனவே கூறிவிட்டேன். இது தனி தலைப்பு. ஆலமரத்தடியில் நான் புதிதாக துவங்கியுள்ளேன். இது எதையாவது, யாரையாவது குறிப்பதாக தோன்றினால் பிழை என்னுடையது அல்ல.. . .. குற்றம் செய்பவருடைய பிழை, அந்த குற்றவாளிக்கு ஆதரவாக இருப்பவருடைய பிழை புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 03:37, 19 அக்டோபர் 2013 (UTC)
- புருனோ, குற்றச்சாட்டு பதியப்பட்டே இருக்கிறது. அக்குற்றம் உறுதிசெய்யப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இடத்தில் குற்றம் உறுதி செய்தாலும் நிருவாக அணுக்கத்துடன் அது தொடர்புடையதா எனவும் பார்க்க வேண்டும். யாரையும் காப்பாற்றுவது நோக்கமல்ல. இப்போது நீங்கள் தடித்த எழுத்தில் உங்களுக்கு வேண்டியவர் என்றால் என எழுதியிருப்பதை விலக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறேன். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. யாருக்கு வேண்டியவர் யார இங்கு? அனைவருமே விக்கிப்பீடியர் தான். -- சுந்தர் \பேச்சு 03:25, 19 அக்டோபர் 2013 (UTC)
- புருனோ, பொதுவாகப் பேசுவதாக இருந்தால் நீங்கள் எனக் கூறாதீர்கள். அப்படி ஒருவராவது இருப்பதாக நீங்கள் கருதினால் சான்றுகளுடன் குறிப்பிடுங்கள். அப்படி யாரும் இல்லை என்றால் எதற்காக அப்படி குறிப்பிட வேண்டுமென எண்ணிப் பாருங்கள். திரும்பவும் குற்றவாளிக்கு ஆதரவாக இருப்பவருடைய பிழை என்கிறீர்கள். குற்றச்சாட்டு மட்டுமே வந்துள்ளது. அதை அலசி முடிவெடுப்போம். சற்று பொறுங்கள். அதற்குள். குற்றவாளி என முடிவு செய்ய வேண்டாம். அடுத்து அவரை ஆதரிப்பவர்கள் என அபாண்டமாகச் சொல்ல வேண்டாம். -- சுந்தர் \பேச்சு 07:05, 19 அக்டோபர் 2013 (UTC)
- மற்றபடி குற்றச்சாட்டை முறையாகப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற உங்கள் கூற்றுடன் 100% உடன்படுகிறேன், புருனோ. -- சுந்தர் \பேச்சு 07:06, 19 அக்டோபர் 2013 (UTC)
திரும்பிப் பெற நியமிக்க மேலும் ஒரு வழி
தொகுவிக்கி நல் நோக்கி அடிப்படையில் அமைந்தது. ஆகவே ஆதாரபூர்வமாக, விக்கிப் பண்புகளுக்கும் கொள்கைகளுக்கும், விக்கி நன்நோக்குக் கருத்தியும் ஒரு கோரிக்கை வருமானால் ஒரு arbitration குழு கொண்டு அதனை ஆராயலாம். இந்தக் குழு 4 நிர்வாகிகளையும் 2 பயனர்களையும் அல்லது எதாவது ஒரு தகுந்த சூத்திரம் கொண்டு அமையலாம். இவர்கள் முன்வைக்கப்படும் ஒரு கோரிக்கையை சில அடிப்படைத் தகுதிகளை வைத்து தீர்மானிக்கலாம். இந்தக் குழு ஒரு இணக்க முடிவு எட்டி, அணுக்கத்தை திரும்பப்பெற நியமிக்கலாம். இவ்வாறு நியமிக்கப்பட்ட பின் பரந்த கருத்துக் கோரல் நடைபெறவேண்டும். பின்னர் வேறு ஒரு குழு இறுதி முடிவு எடுக்க வேண்டும்.
arbitration குழுவின் முடிவை எல்லா நேரங்களிலும் எல்லாப் பயனர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே x பயனர்கள், ஒரு குறிப்பிட்ட காலப் பங்களிப்பு உள்ளவர்கள் ஒன்றாக ஒருவரை திரும்பப்பெற நியமிக்கலாம். பின்னர் வேறு ஒரு arbitration குழு முடிவு எடுக்க வேண்டும். arbitration குழு நிலையான குழு இல்லை. அதைத் தேர்தெடுப்பதில் ஒழுங்கில்தன்மை இருக்க வேண்டும்.
நாம் முடிவு செய்யும் நடைமுறை இரண்டு சிக்கல்களை எதிர்பார்துக் கையாள வேண்டும்.
- விசமத் தனமாக நியமனம். இதை எப்படி விசமக் கட்டுரைகள், சோதனைக் கட்டுரைகள நீக்குறோமோ அது போல விரைவாக நீக்க வேண்டும்.
- குழுவாக செயற்பட்டு உள்திட்டத்தை முன்வைத்து திரும்பிப் பெறக் கோருதல்.
--Natkeeran (பேச்சு) 04:32, 19 அக்டோபர் 2013 (UTC)
- நானும் அக்குழு குறித்த விபரங்களைத்தான் படித்துக் கொண்டுள்ளேன். அது நமக்குச் சரிப்பட்டு வருமா என்பதைப் பல்வேறு நோக்குகளில் சிந்திக்கிறேன். -- சூர்யபிரகாஷ் உரையாடுக 10:44, 19 அக்டோபர் 2013 (UTC)
- இது தொடர்பான கருத்துக்களைத் தொகுத்து சில முன்மொழிவுகளை இங்கே -> விக்கிப்பீடியா_பேச்சு:நிர்வாக_அணுக்கத்தைத்_திரும்பப்_பெறுதல்#சிக்கலும் தீர்வும் வைத்துள்ளேன். அருள்கூர்ந்து சிக்கலைப் பிரித்துவிட்டு முறைமை வகுக்கும் உரையாடலைத் தனியாகச் செய்ய வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 18:39, 19 அக்டோபர் 2013 (UTC)
தீர்வு வேண்டும்
தொகுபுதுப்பயனர் சுமத்திய குற்றச்சாட்டுகள் இருக்கத்தக்கதாக, முதலில் ஏற்கெவே இங்கு பங்களிப்புச் செய்த பயனர்களின் நியாயம் கோரல்களுக்கு தேனி. மு. சுப்பிரமணி பதில் கூற வேண்டும். அதன்பின், புதுப்பயனர் குற்றச்சாட்டுக்கள் (நியாயமாக இருப்பின்) அதற்கும் அவர் பதில் கூற வேண்டும். அவருடைய மெளனம் இங்கு பல சிக்கல்களை நாளுக்கு நாள் கூட்டிச் செல்கிறது. எனவே தேனி. மு. சுப்பிரமணி விக்கிப்பீடியாவிற்கு செய்த நன்மைகளில் ஒன்றாக பதில் கூறவும் கடமைப்பட்டுள்ளார். நாங்கள் யாவரும் பதில் கூறியுள்ளோம். அவரும் அதற்கு விதிவிலக்கல்ல. எ.கா: நான் உருவாக்கிய இலங்கை தொங்கும் கிளி என்ற கட்டுரையை நீக்கக் கோரி ஐ.பி. முகவரியூடாக ஒரு பயனர் ஒரு மாத நீக்கல் கோரிக்கை விடுத்திருந்தார். நீக்கல் கோரிக்கைக்கான பின்னணி அறிந்திருந்தும், கட்டுரையில் முக்கியத்துவம் அறிந்திருந்தும், நான் அக் கோரிக்கையினை ஊதாசீனம் செய்யாது, குறித்த கால எல்லைக்குள் மேம்படுத்தினேன். (கட்டுரையில் வரலாற்றுப் பக்கத்தைப் பாருங்கள்.) குறித்த காலம் சென்றிருந்தால் நானே நீக்கியிருப்போன்.
தேனி. மு. சுப்பிரமணி பதில் கூறாது, மேலும் மேலும் விவாதங்கள் தொடர்ந்தால் புதுப்பயனரின் குற்றச்சாட்டுக்களை நானே முன் வைப்போன். நான் த.வி.யில் இணைந்த காலம்: 1 ஆண்டு, 11 மாதங்கள், 4 நாட்கள்; தொகுப்புகள் (நீக்கப்பட்டவை உட்பட) 12,361.
"உலகின் எங்கோ நடக்கும் முறையின்மைக்காக உன் மனம் கொதித்தால், நீயும் எனக்கு தோழன் தான்!" (சேகுவரா).
--Anton·٠•●♥Talk♥●•٠· 03:21, 19 அக்டோபர் 2013 (UTC)
- அண்டன், புதுப்பயனர் என்னுடைய பதில் ஒவ்வொன்றுக்கும் ஏதாவது ஒரு குறைபாடு சொல்லி மறுமொழி இட்டு வருவதால், தேவையற்ற கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவே நான் பதிலளிக்காமல் இருந்து வருகிறேன். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பதிலளிக்கவில்லை. தாங்கள் என் மேல் குற்றச்சாட்டுகளை முன் வைக்கலாம். எனக்கு எவ்வித ஆட்சேபணையுமில்லை.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 04:11, 19 அக்டோபர் 2013 (UTC)
- அது தொடர்பான செய்முறை தெளிவுபெறும் வரை நீங்கள் அதில் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக பதில் தராமல் இருப்பது பொருத்தமே. நன்றி. --Natkeeran (பேச்சு) 04:39, 19 அக்டோபர் 2013 (UTC)
- நற்கீரன், நிருவாகி அணுக்கத்தைத் திரும்பப் பெறுவது மட்டுமே நிலுவையில் உள்ளது. ஆனால் வேறு பல இடங்களில் தேனி. மு. சுப்பிரமணியிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கலாம், பதிலளிக்கவும் வேண்டும். -- சுந்தர் \பேச்சு 07:09, 19 அக்டோபர் 2013 (UTC) விருப்பம் --செல்வா (பேச்சு) 14:17, 19 அக்டோபர் 2013 (UTC)
அருள்கூர்ந்து அனைவரும் இன்று மாலைவரை பொறுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒரு முக்கிய முன்மொழிவை வைக்க எண்ணியுள்ளேன். அதன்பின் அனைவரும் அதைப்பற்றி உரையாடலாம். இத்தகைய சிக்கல் நமக்கு முதன்முறையாக வருவதால் சிறிது காலதாமதத்தைப் பொருட்படுத்த வேண்டாம். கட்டாயம் நல்லதொரு தீர்வை எட்டலாம். -- சுந்தர் \பேச்சு 07:18, 19 அக்டோபர் 2013 (UTC) விருப்பம் --செல்வா (பேச்சு) 14:17, 19 அக்டோபர் 2013 (UTC) விருப்பம் : மேலும் உங்கள் கடைசி கருத்தை ஒப்புகிறேன். அவரிடம் பல இடங்களில் பல விடயங்கள் வினவப்பட்டுள்ளது. எதற்கும் மறுமொழியளிக்க மறுக்கிறார்/விரும்பவில்லை எனில் அதனையாவது தெரிவிக்கவும். யாரும் உங்களிடம் வினவி நேரம் வீணாவதாவதது [குறைந்தபட்சம்] தடுபடும். நன்றி. -- சூர்யபிரகாஷ் உரையாடுக 10:15, 19 அக்டோபர் 2013 (UTC)
//"உலகின் எங்கோ நடக்கும் முறையின்மைக்காக உன் மனம் கொதித்தால், நீயும் எனக்கு தோழன் தான்!" (சேகுவரா).// விருப்பம்--இரவி (பேச்சு) 01:16, 20 அக்டோபர் 2013 (UTC)
பொதுவான பிணக்குத் தீர்வுமுறை வரைவு
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் பொதுவான பிணக்குத் தீர்வுமுறை ஒன்றை வகுக்க வேண்டிய தேவை இருப்பதை நாம் அனைவரும் உணர்ந்திருப்போம். இது தொடர்பில் ஒரு வரைவை எழுதியுள்ளேன் -> விக்கிப்பீடியா:பிணக்குத் தீர்வுமுறை (வரைவு). அதன் பேச்சுப் பக்கத்தில் பங்களிப்பாளர்கள் கூடி உரையாடி, தேவைப்படும் மாற்றங்களோடு கொள்கையாக்கலாம். இவ்வரைவில் நுணுக்கமாக ஒவ்வொரு கட்டத்திலும் செய்ய வேண்டியவற்றை விரிவாக்கவும் வேண்டும். -- சுந்தர் \பேச்சு 18:05, 19 அக்டோபர் 2013 (UTC)
கருத்து வேண்டல்
தொகுஒரு முக்கிய சிக்கலுக்குத் தீர்வுகாணும் நோக்கில் விக்கிப்பீடியா_பேச்சு:நிர்வாக_அணுக்கத்தைத்_திரும்பப்_பெறுதல்#சிக்கலும் தீர்வும் என்ற பத்தியில் வாக்கெடுப்பு நடக்கிறது. வேறு பொருத்தமான விக்கிப்பீடியா பெயர்வெளிப் பக்கம் இருந்தால் அதை அங்கு நகர்த்தலாம். எங்கு நடந்தாலும் அருள் கூர்ந்து அனைவரும் வாக்கையும் கருத்தையும் பதிவு செய்ய வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 05:46, 20 அக்டோபர் 2013 (UTC)
அதிகாரிகள் / நிர்வாகிகள் / பயனர்கள் உதவி தேவை
தொகு- 20 அக்டோபர் 2013 தேதி 11:21(UTC) நேரத்தில் புருனோ என்ற பெயரில் தமிழ் விக்கிபிடியாவில் வேறு என்னை தவிர யாராவது பயனர்கள் உள்ளர்களா ?
- இதற்கு முன்னர் புருனோ என்ற பெயரில் வேறு பயனர்கள் இருந்துள்ளார்களா ?
- நானே இந்த விபரங்களை அறிய வேண்டும் என்றால் எப்படி தெரிந்து கொள்வது ? விக்கியில் எந்த பக்கத்தை பார்க்க வேண்டும் ? என்ன முறையை பயன் படுத்த வேண்டும் என்று விளக்க வேண்டுகிறேன்
புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 11:23, 20 அக்டோபர் 2013 (UTC)
- இதனைப் பயன்படுத்தவும். :) -- சூர்யபிரகாஷ் உரையாடுக 11:29, 20 அக்டோபர் 2013 (UTC)
- அன்பின் சூர்யா. நீங்கள் என் வேண்டுகோளை புரிந்து கொள்ளவில்லை :) :). என் கேள்விக்கான பதில் இதுவல்ல புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 11:44, 20 அக்டோபர் 2013 (UTC)
“கையாட்கள்” (Meatpuppets) குறித்த நடைமுறைகள் உள்ளனவா ?
தொகுதற்சமயம் தமிழ் விக்கிபிடியாவில் “கையாட்கள்” (Meatpuppets) மற்றும் அப்படிப்பட்ட கையாட்களை திரட்டி வருபவர்கள் குறித்த நடைமுறைகள் உள்ளனவா புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 12:04, 20 அக்டோபர் 2013 (UTC)
- விக்கிப்பீடியா:கைப்பாவை --Anton·٠•●♥Talk♥●•٠· 12:20, 20 அக்டோபர் 2013 (UTC)
- இது கைப்பாவை. https://en.wikipedia.org/wiki/Wikipedia:Sock_puppetry . . .
- நான் கேட்பது கையாட்கள் Meatpuppet (Editors of Wikipedia use the term to label contributions of new community members if suspected of having been recruited by an existing member to support their position. Such a recruited member is considered analogous to a sockpuppet even though he is actually a separate individual (i.e. "meat") rather than a fictitious creation.) புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 12:28, 20 அக்டோபர் 2013 (UTC)
- நான் அறிந்தவரையில் இல்லை.--Anton·٠•●♥Talk♥●•٠· 12:49, 20 அக்டோபர் 2013 (UTC)
- அப்படியென்றால் இந்த கொள்கையையும் வகுக்க நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன்
- கையாட்களும் கைப்பாவைகளாக கருதப்பட வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைக்கிறேன்
- ஒரு பயனரின் கணக்கு மீது எடுக்கப்படும் நடவடிக்கை அந்த பயனரின் கைப்பாவை மற்றும் கையாட்களாக (கையாள் என்ற சொல்லிற்கு பதில் அடியாள், அல்லக்கை என்ற சொற்களை பயன்படுத்தலாமா என்று ஆராய வேண்டும்) செயல்பட்டவர்களின் மீதும் எடுக்க வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைக்கிறேன் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 20:11, 20 அக்டோபர் 2013 (UTC)
- ஆம், இப்போது இங்கு ஒருவர் ஏவி மற்றவர் செயற்படுத்தும் விதமாகப் பல இயக்கங்களைக் காண முடிகிறது. இது விக்கிக் கோட்பாடுகளுக்கு எதிரானது. தனிமனித விடுபாட்டுணர்வு, குழுவாகச் செயல்படாமை போன்றவை விக்கிப்பங்களிப்புக்கு அடிப்படை. நானும் அண்மையில்தான் இதைப்பற்றி எண்ணிக் கொண்டிருந்தேன். இதைப்பற்றிய கொள்கைகளை உருவாக்க வேண்டும். இதற்கான நுட்ப ஆய்வுகளில் சண்முகம், சோடாபாட்டில் போன்றோர் உதவ வேண்டும். மற்றபடி, அடியாள், அல்லக்கை போன்ற கீழ்த்தரமான சொற்களை நாம் பயன்படுத்தக்கூடாது. இது ஒரு கலைக்களஞ்சியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். -- சுந்தர் \பேச்சு 03:35, 21 அக்டோபர் 2013 (UTC)
- ஒரு பிரச்சனையில் முற்றிலும் தொடர்பில்லாத ஒருவரை, அவர் பெயரை குறிப்பிட்டு அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் அவதூறு பரப்பப்படும் போது, அதையும் இங்கு பலர் (நிர்வாகியாக இருக்கும் ஒருவர் உட்பட) ஆதரிக்கும் போது இது கலைக்களஞ்சியம் என்பது நினைவிற்கு வராது, பொதுவாக அல்லக்கை என்ற ஒரு சொல் பயன்படுத்தப்பட்டும் போது இது கலைக்களஞ்சியம் என்பது நினைவிற்கு வருவது வியப்பாக உள்ளது புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 05:55, 21 அக்டோபர் 2013 (UTC)
- நிருவாகி என்று யாரைப் பற்றிக் கூறுகிறீர்கள் என்பதை நேரடியாகவே கூறுங்கள். அவருக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டார்கள். இதனால் பாதிப்படைந்தவர் யார் என்றும் கூறுங்கள். இங்கு மறைமுகமாகக் குத்தி எழுதுவது தடை செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன்.--Kanags \உரையாடுக 06:26, 21 அக்டோபர் 2013 (UTC)
- புருனோ, யாரைக் குறிப்பிட்டு நிருவாக ஒருவர் உட்பட இப்படி எழுதினார் எனச் சான்றுடன் விளக்க வேண்டும். அதை தொடர்புடைய பயனரின் பேச்சுப் பக்கத்தில் இட்டால் தொடர்புடையவர் விளக்கம் அளிக்க முடியும். மற்றவர்களும் கருத்திடலாம். சான்றில்லாமல் அப்படிச் சொல்லியிருந்தால் நனது கருத்தை விலக்கிக் கொள்ள வேண்டும். -- சுந்தர் \பேச்சு 11:48, 21 அக்டோபர் 2013 (UTC)
- சுந்தர், விக்கிப்பீடியா:பயனர் மீது அவதூறு செய்வதை தடுத்தல் குறித்த தெளிவான ஒரு திட்டத்தை நீங்கள் இறுதிபடுத்திய பிறகே என்னால் இது குறித்து மேலும் கூற முடியும். எனவே விக்கிப்பீடியா:பயனர் மீது அவதூறு செய்வதை தடுத்தல் (வரைவு) முதலில் இறுதி செய்து விட்டு, இங்கு உரையாடலாம் என்பது என் கருத்து புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 12:01, 21 அக்டோபர் 2013 (UTC)
- புருனோ, யாரைக் குறிப்பிட்டு நிருவாக ஒருவர் உட்பட இப்படி எழுதினார் எனச் சான்றுடன் விளக்க வேண்டும். அதை தொடர்புடைய பயனரின் பேச்சுப் பக்கத்தில் இட்டால் தொடர்புடையவர் விளக்கம் அளிக்க முடியும். மற்றவர்களும் கருத்திடலாம். சான்றில்லாமல் அப்படிச் சொல்லியிருந்தால் நனது கருத்தை விலக்கிக் கொள்ள வேண்டும். -- சுந்தர் \பேச்சு 11:48, 21 அக்டோபர் 2013 (UTC)
- நிருவாகி என்று யாரைப் பற்றிக் கூறுகிறீர்கள் என்பதை நேரடியாகவே கூறுங்கள். அவருக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டார்கள். இதனால் பாதிப்படைந்தவர் யார் என்றும் கூறுங்கள். இங்கு மறைமுகமாகக் குத்தி எழுதுவது தடை செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன்.--Kanags \உரையாடுக 06:26, 21 அக்டோபர் 2013 (UTC)
- ஒரு பிரச்சனையில் முற்றிலும் தொடர்பில்லாத ஒருவரை, அவர் பெயரை குறிப்பிட்டு அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் அவதூறு பரப்பப்படும் போது, அதையும் இங்கு பலர் (நிர்வாகியாக இருக்கும் ஒருவர் உட்பட) ஆதரிக்கும் போது இது கலைக்களஞ்சியம் என்பது நினைவிற்கு வராது, பொதுவாக அல்லக்கை என்ற ஒரு சொல் பயன்படுத்தப்பட்டும் போது இது கலைக்களஞ்சியம் என்பது நினைவிற்கு வருவது வியப்பாக உள்ளது புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 05:55, 21 அக்டோபர் 2013 (UTC)
- ஆம், இப்போது இங்கு ஒருவர் ஏவி மற்றவர் செயற்படுத்தும் விதமாகப் பல இயக்கங்களைக் காண முடிகிறது. இது விக்கிக் கோட்பாடுகளுக்கு எதிரானது. தனிமனித விடுபாட்டுணர்வு, குழுவாகச் செயல்படாமை போன்றவை விக்கிப்பங்களிப்புக்கு அடிப்படை. நானும் அண்மையில்தான் இதைப்பற்றி எண்ணிக் கொண்டிருந்தேன். இதைப்பற்றிய கொள்கைகளை உருவாக்க வேண்டும். இதற்கான நுட்ப ஆய்வுகளில் சண்முகம், சோடாபாட்டில் போன்றோர் உதவ வேண்டும். மற்றபடி, அடியாள், அல்லக்கை போன்ற கீழ்த்தரமான சொற்களை நாம் பயன்படுத்தக்கூடாது. இது ஒரு கலைக்களஞ்சியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். -- சுந்தர் \பேச்சு 03:35, 21 அக்டோபர் 2013 (UTC)
- நான் அறிந்தவரையில் இல்லை.--Anton·٠•●♥Talk♥●•٠· 12:49, 20 அக்டோபர் 2013 (UTC)
- இதனை நான் வேடிக்கையாகக் கூறவில்லை. நாங்கள் (த.வி-குமுகம்) பட்டறை வைத்து ஆள்களை அழைத்துச் சேர்க்கின்றோம். விக்கி என்பதே கூட்டுழைப்பு கூட்டிணக்குடன் ஒத்துழைப்பால் வளரும் பங்களிப்புகளால் வளர்வது. இவற்றைத் தவறான நோக்கில் பார்த்தால் எல்லாமே வேறாகத் தெரியும். நன்னோக்கம் இழந்தால் அனைத்தையும் இழப்போம். ஓர் எடுத்துக்காட்டுக்குக் கூறுகின்றேன். புருனோ உங்களைப் பார்த்து நான், ஏன் புருனோ நீங்கள் மேலே மொத்தக் கலைக்களஞ்சியத்தைப் பற்றிக் கூறியுள்ளதே பெரும் அவதூறு இல்லையா? அதுவும் ஒரு கலைக்களஞ்சியத்தைப் பற்றி அதிலேயே வந்து இப்படிக் கூறுவது! யாரேனும் அவதறூராக (பொய்க்குற்றமாக, பொய்ப்பழி சுமத்தலாகக்) கூறியிருந்தால். அவர்களைக் முறையாகக் கேள்வி கேட்கலாமே, ஏன் கலைக்களஞ்சியத்தையே பழிக்கின்றீர்கள்? நான் உங்களைப் பார்த்து நீங்கள் கூறியது இக்கலைக்களஞ்சியத்தைப் பற்றிய அவதூறு என்பேன்; அதைத் தொடர்ந்து, நீங்கள் என்னைப்பார்த்து, உங்கள் மீது புது பொய்ப்பழியை நான்தான் கூறுகின்றேன் என்று மீண்டும் ஒரு பழிசுமத்தலாம், இப்படியே முடிவின்றி பழிசுமத்தல்கள் நடைபெறும். இதனால் ஏதும் பயன் உள்ளதா? தவறு நடந்திருந்தால் தவறிழைத்தவர் மெய்யாக வருத்தம் சொல்லி இணக்கம் நாடி மேலே நகர வேண்டும். அடுத்த முறை இன்னும் கவனமாக இருக்க வேண்டும். உழைப்பின் பெரும்பங்கு கலைக்களஞ்சியத்தை வளர்த்தெடுபப்தற்கு செலவிடவேண்டும். இப்படியே வழக்காடு மன்றம் போலும் பிணக்குகளைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கலாகாது. அருள்கூர்ந்து வளர்முகமாக அணுகுங்கள், சற்று விட்டுக்கொடுத்தும், எடுத்துக்கட்டியும் பணியாற்றுங்கள். நன்னோக்கையும், கலைக்களஞ்சியத்தை வளர்த்தெடுக்கும் உயர்நோக்கையும் கைக்கொள்ளல் மிகவும் தேவை. --செல்வா (பேச்சு) 06:39, 21 அக்டோபர் 2013 (UTC)
- வணக்கம் புருனோ! இங்கு 'improvements' என்பதற்கும் 'flaws' என்பதற்கும் உள்ள வேறுபாட்டினை அழகாக எடுத்துரைத்த அதே பொறுமையை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நல்ல தீர்வுகள் அமையும் என்பதில் நம்பிக்கைக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். சுந்தர், செல்வா போன்றோர் களத்தில் இறங்கி தீர்வுகளுக்காகப் போராடுகிறார்கள். உங்களின் கோரிக்கைகளை நயமுடன் எடுத்துவைத்து உதவுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:44, 21 அக்டோபர் 2013 (UTC)
- செல்வசிவகுருநாதன் சார். என் பரிந்துரைகள் இவைதான்
- கையாட்களும் கைப்பாவைகளாக கருதப்பட வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைக்கிறேன்
- ஒரு பயனரின் கணக்கு மீது எடுக்கப்படும் நடவடிக்கை அந்த பயனரின் கைப்பாவை மற்றும் கையாட்களாக செயல்பட்டவர்களின் மீதும் எடுக்க வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைக்கிறேன்
- இது குறித்து - என் பரிந்துரை குறித்து விவாதம் நடைபெறவில்லை - என்பது தான் என் வருத்தம் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 08:57, 21 அக்டோபர் 2013 (UTC)
- தனி மனித அவதூறு பரப்பும் பயணர்கள், அந்த அவதூறிற்கு விருப்பம் தெரிவிக்கும் பயனர்கள், அதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவளிக்கும் பயனர்கள்,
- நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பயனர்கள், அந்த அபாண்டத்தை விருப்பம் தெரிவிக்கும் பயனர்கள், அதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவளிக்கும் பயனர்கள்
- என அனைவரும் நிரந்தரமாக தடை செய்யப்பட வேண்டும் என்ற பரிந்துரையை முன்மொழிகிறேன்.
- மேலும் அந்த பயனர்களின் கைப்பாவைகள் மற்றும் “கையாட்கள்” (sock puppets and meat puppets) கண்டறியப்பட்டு, அனைவரும் நிரந்திரமாக தடை செய்யப்படவேண்டும் என்ற பரிந்துரையை முன்வைக்கிறேன்
- இந்த பரிந்துரை குறித்து ஆதரவு , எதிர்ப்பு வாக்கு நடத்த மூத்த பயனர்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
- கட்டுரை எழுதிவதில் கருத்து வேறுபாடு என்பது வேறு. அதை மெதுவாக தீர்க்கலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். தினமும் 1.75 லட்சம் பார்வையாளர்கள் உள்ள ஒரு தளத்தை தனி மனித தாக்குதலுக்கும் பிறரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவும் பயன் படுத்துபவர்கள் மேல் கடுமையான நடவடிக்கைகள் தேவை புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 08:59, 21 அக்டோபர் 2013 (UTC)
- வணக்கம் புருனோ! இங்கு 'improvements' என்பதற்கும் 'flaws' என்பதற்கும் உள்ள வேறுபாட்டினை அழகாக எடுத்துரைத்த அதே பொறுமையை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நல்ல தீர்வுகள் அமையும் என்பதில் நம்பிக்கைக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். சுந்தர், செல்வா போன்றோர் களத்தில் இறங்கி தீர்வுகளுக்காகப் போராடுகிறார்கள். உங்களின் கோரிக்கைகளை நயமுடன் எடுத்துவைத்து உதவுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:44, 21 அக்டோபர் 2013 (UTC)
- கையாள் கொள்கை உருவானது ஆங்கில விக்கியில். அங்குள்ள பண்பாட்டின் படி மிகப்பெரும்பாலானோர் அனானிகளாகவே இருப்பர். ஆள் திரட்டி வர வேண்டுமெனில் புற தளங்களில் பரப்புரை செய்து (off wiki canvassing) திரட்டி வருவர். அதனால் அங்குள்ள கையாள் கொள்கை உருவாகிய காரணிகளும் நடைமுறைபடுத்தப்படும் விதமும் வேறு வகையானது. சுருங்கச் சொல்லின்: ”சண்டையிடவதெனின் விக்கிக்குள் வெளிப்படையாக சொந்தப் பெயரில், அடித்துக் கொள்ள வேண்டும். குழுக்களாக சேர்ந்து செயல்பட்டாலும் சரி தான்” என்ற பண்பாட்டின் அடிப்படையில் இயங்குகிறது. தமிழ்ச் சூழலில் (விக்கி என்றில்லை) நிகழும் குழு முரண்களில் இது பொருந்தாது. நாம் ஏற்கனவே அதைத் தான் செய்து வருகிறோம். (பெரும்பாலும் நாம் ஒருவரை ஒருவர் அறிந்துள்ளோம். யார் யாருடைய நண்பர், எவ்விசயத்தில் எவர் ஒத்த நிலைப்பாடுடையோர் என்பது ஓரளவு தெளிவாகவே உள்ளது) எனவே கையாள் என்று வரையறுப்பது மிகக் கடினம். பிற விக்கிகள் போல இங்கு கையாள் கொள்கை இருப்பின் புருனோவும் நானும் பதிவர் சந்திப்பில் பேசினோம் என்ற தகவல் கிடைத்தாலே (ஒரு எடுத்துக்காட்டுக்கு சொன்னேன் :-) ) என்னை புருனோவின் கையாள் என்று சொல்லி அவருக்கு ஆதரவாகப் பேசாதே என்று சொல்லிவிடும்படி ஆகும். இத்தகைய சிக்கலான விசயம் என்பதால் தான், கைப்பாவைக் கொள்கையை எழுதும் போதே கையாள் கொள்கையை எழுதாமல் விட்டேன். இங்கு கையாள் கொள்கையை விட முரண் தீர்வு முறைமை (dispute resolution methodology) அதிகம் தேவைப் படுகிறது. பயனர் எதிர் பயனர் என்பதிலிருந்து விலகி கருத்து எதிர் கருத்து என்பதில் செல்ல வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 06:54, 21 அக்டோபர் 2013 (UTC)
- இப்போது இருக்கும் சூட்டில் உங்கள் எடுத்துக்காட்டின்வழியாக நீங்கள் சொன்னதை எப்படிச் சொல்வது எனத் தவித்துக் கொண்டிருந்தேன், சோடாபாட்டில். :) விளக்கத்துக்கு நன்றி. இதேபோல பிணக்குத்தீர்வுமுறை வரைவிலும் உங்கள் கருத்தையும் உதவியையும் வேண்டியிருந்தேன். இயன்றால் கைகொடுங்கள். -- சுந்தர் \பேச்சு 07:56, 21 அக்டோபர் 2013 (UTC)
- கட்டுரை எழுதிவதில் கருத்து வேறுபாடு என்பது வேறு. அதை மெதுவாக தீர்க்கலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். தினமும் 1.75 லட்சம் பார்வையாளர்கள் உள்ள ஒரு தளத்தை தனி மனித தாக்குதலுக்கும் பிறரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவும் பயன் படுத்துபவர்கள் மேல் கடுமையான நடவடிக்கைகள் தேவை விக்கி மூலம் தங்களுக்கு மலிவு விளம்பரம் (இந்த சொல் கலைகளஞ்சியத்திற்கு பொருந்துமா என்று ஆராய்ந்து, நான் சொல்ல வந்த விஷயத்தை திசை திருப்ப வேண்டாம்) தேடுபவதை பொருத்துக்கொள்ளலாம். ஆனால் விக்கி மூலம் அடுத்தவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவது ஏற்றுக்கொள்ளவே இயலாது. எனவே கட்டுரைகளில் ஏற்படும் கருத்து வேறுபாட்டையும், விக்கியை தனிநபர் விளம்பரம் மற்றும் அடுத்தவர் மேல் அவதூறு சுமத்த பயன்படுத்துவதையும் வெவ்வேறாக பார்க்க வேண்டுகிறேன் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 09:53, 21 அக்டோபர் 2013 (UTC)
- அப்படி ஒரு அவதூறுக் குற்றச்சாட்டு இருந்தால் தனியாக ஓரிழையில் தொடர்புடைய பயனரின் பேச்சுப் பக்கத்தில் முன்வையுங்கள், புருனோ. அதற்கான இணைப்பை இங்கு தாருங்கள். -- சுந்தர் \பேச்சு 11:48, 21 அக்டோபர் 2013 (UTC)
- சுந்தர், விக்கிப்பீடியா:பயனர் மீது அவதூறு செய்வதை தடுத்தல் குறித்த தெளிவான ஒரு திட்டத்தை நீங்கள் இறுதிபடுத்திய பிறகே என்னால் இது குறித்து மேலும் கூற முடியும். எனவே விக்கிப்பீடியா:பயனர் மீது அவதூறு செய்வதை தடுத்தல் (வரைவு) முதலில் இறுதி செய்து விட்டு, இங்கு உரையாடலாம் என்பது என் கருத்து புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 12:01, 21 அக்டோபர் 2013 (UTC)
- கையாள் கொள்கை உருவானது ஆங்கில விக்கியில். அங்குள்ள பண்பாட்டின் படி மிகப்பெரும்பாலானோர் அனானிகளாகவே இருப்பர். ஆள் திரட்டி வர வேண்டுமெனில் புற தளங்களில் பரப்புரை செய்து (off wiki canvassing) திரட்டி வருவர். அதனால் அங்குள்ள கையாள் கொள்கை உருவாகிய காரணிகளும் நடைமுறைபடுத்தப்படும் விதமும் வேறு வகையானது. சுருங்கச் சொல்லின்: ”சண்டையிடவதெனின் விக்கிக்குள் வெளிப்படையாக சொந்தப் பெயரில், அடித்துக் கொள்ள வேண்டும். குழுக்களாக சேர்ந்து செயல்பட்டாலும் சரி தான்” என்ற பண்பாட்டின் அடிப்படையில் இயங்குகிறது. தமிழ்ச் சூழலில் (விக்கி என்றில்லை) நிகழும் குழு முரண்களில் இது பொருந்தாது. நாம் ஏற்கனவே அதைத் தான் செய்து வருகிறோம். (பெரும்பாலும் நாம் ஒருவரை ஒருவர் அறிந்துள்ளோம். யார் யாருடைய நண்பர், எவ்விசயத்தில் எவர் ஒத்த நிலைப்பாடுடையோர் என்பது ஓரளவு தெளிவாகவே உள்ளது) எனவே கையாள் என்று வரையறுப்பது மிகக் கடினம். பிற விக்கிகள் போல இங்கு கையாள் கொள்கை இருப்பின் புருனோவும் நானும் பதிவர் சந்திப்பில் பேசினோம் என்ற தகவல் கிடைத்தாலே (ஒரு எடுத்துக்காட்டுக்கு சொன்னேன் :-) ) என்னை புருனோவின் கையாள் என்று சொல்லி அவருக்கு ஆதரவாகப் பேசாதே என்று சொல்லிவிடும்படி ஆகும். இத்தகைய சிக்கலான விசயம் என்பதால் தான், கைப்பாவைக் கொள்கையை எழுதும் போதே கையாள் கொள்கையை எழுதாமல் விட்டேன். இங்கு கையாள் கொள்கையை விட முரண் தீர்வு முறைமை (dispute resolution methodology) அதிகம் தேவைப் படுகிறது. பயனர் எதிர் பயனர் என்பதிலிருந்து விலகி கருத்து எதிர் கருத்து என்பதில் செல்ல வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 06:54, 21 அக்டோபர் 2013 (UTC)
- சோடாபாட்டிலின் கருத்தை வரவேற்கின்றேன். சகலரும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டுகின்றேன். நல்ல முடிவுகளோடு நாம் உறுதியாகுவோம் என நம்புவோம். எல்லாரும் மனஞ் சலித்துப்போயுள்ள இவ்வேளையில் உறுதியான முடிவுகளும் நல்லெண்ணமும் நம் பணிகளுக்கு உதவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:58, 21 அக்டோபர் 2013 (UTC) விருப்பம்--கலை (பேச்சு) 07:39, 22 அக்டோபர் 2013 (UTC)
கையாட்களை எதிர்கொள்வது பற்றிய கொள்கை தேவை. பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:கையாள்--இரவி (பேச்சு) 07:10, 25 அக்டோபர் 2013 (UTC)
விக்கி நிகழ் பட பாடங்கள்
தொகுவிக்கிபீடியாவை புதியவர்களுக்கு அறிமுகம் செய்ய, வீடியோ பாடங்களை உருவாக்கலாமா?
https://ta.wikipedia.org/s/3bse ஆர்வமுள்ளோர் இங்கே பதில் தர வேண்டுகிறேன். --Tshrinivasan (பேச்சு) 09:19, 21 அக்டோபர் 2013 (UTC)
விக்கிசார்பாக அங்கிகாரமற்று இயங்குவதை தடுத்தல்
தொகுசில தனிமனித தவறுகள் ஊடகங்கள் மூலம் வெளிவந்து விக்கிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு, அதன் பிறகு என்ன செய்வது என்று குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க, வெள்ளம் வரும் முன்னர் அணை போடுவதை போல், இப்பொழுதே இது குறித்து நடைமுறைகளை வகுக்கும் நோக்கில் விக்கிப்பீடியா:விக்கிசார்பாக அங்கிகாரமற்று இயங்குவதை தடுத்தல் (வரைவு) என்ற பக்கத்தை துவக்கியுள்ளேன். அருள் கூர்ந்து அனைவரும் வாக்கையும் கருத்தையும் பதிவு செய்ய வேண்டுகிறேன் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 09:45, 21 அக்டோபர் 2013 (UTC)
பயனர் மீது அவதூறு செய்வதை தடுத்தல்
தொகுகட்டுரையை மீள்விப்பது போல் மனித உணர்வுகளையும், ஒருவர் இன்னொருவர் மேல் வைத்திருக்கும் மதிப்பீட்டையும், அவதூறுகளால் ஏற்படும் மன உளைச்சலையும், கால இழப்பையும் மீள்வித்து விட முடியாது. இங்கே பல ஆண்டுகள் தமது பொன்னான நேரத்தைச் செலவு செய்து பல பயனர்கள் உழைத்து தமிழ் விக்கிப்பீடியாவைத் தற்போதைய நிலைக்குக் கட்டி எழுப்பி இருக்கிறார்கள். வழிமுறைகள் இந்த உழைப்புக்கு மதிப்பு அளிப்பதாக இருக்கவேண்டும். எனவே பயனர்கள் மீது அவதூறு எழுப்பப்படுவதை தவிர்க்கும் நோக்கில் விக்கிப்பீடியா:பயனர் மீது அவதூறு செய்வதை தடுத்தல் (வரைவு) என்ற பக்கத்தை துவக்கியுள்ளேன். அருள் கூர்ந்து அனைவரும் வாக்கையும் கருத்தையும் பதிவு செய்ய வேண்டுகிறேன் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 10:33, 21 அக்டோபர் 2013 (UTC)
- இது தொடர்பான ஒரு கருத்தாடல்: இங்கு. -- சுந்தர் \பேச்சு 11:37, 21 அக்டோபர் 2013 (UTC)
- இல்லை சுந்தர். நீங்கள் குறிப்பிடும் பக்கத்தில் விவாதிக்கப்படுவது கட்டுரைகளில் எற்படும் கருத்து வேறுபாடு தொடர்பாக. நான் கூறுவது விக்கிப்பீடியா:பயனர் மீது அவதூறு செய்வதை தடுத்தல் (வரைவு) தனி மனிதர் தாக்குதல் மற்றும் அவதூறு பரப்புதல் தொடர்பாக. இரண்டும் வெவ்வேறான விஷயங்கள். இரண்டையும் பிரித்து தனித்தனியாக அணுகவேண்டும் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 11:46, 21 அக்டோபர் 2013 (UTC)
- ஆம் அதனால்தான் முந்தைய உரையாடலுக்கான இணைப்பைத் தந்தேன். அதை இந்தப் புதிய வரைவின் பேச்சுப்பக்கத்தில் நகர்த்திக் கொள்ளுங்கள். உரையாடலை அங்கேயே தொடரலாம். -- சுந்தர் \பேச்சு 11:52, 21 அக்டோபர் 2013 (UTC)
- இல்லை சுந்தர். நீங்கள் குறிப்பிடும் பக்கத்தில் விவாதிக்கப்படுவது கட்டுரைகளில் எற்படும் கருத்து வேறுபாடு தொடர்பாக. நான் கூறுவது விக்கிப்பீடியா:பயனர் மீது அவதூறு செய்வதை தடுத்தல் (வரைவு) தனி மனிதர் தாக்குதல் மற்றும் அவதூறு பரப்புதல் தொடர்பாக. இரண்டும் வெவ்வேறான விஷயங்கள். இரண்டையும் பிரித்து தனித்தனியாக அணுகவேண்டும் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 11:46, 21 அக்டோபர் 2013 (UTC)