அகாதமி விருது
அகாதமி விருது, (ஆங்கில மொழி: Academy Awards) ஆஸ்கார் விருது அல்லது ஓஸ்கார் விருது எனப் பரவலாக அறியப்படும் அகாதமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும். மேலும் உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாகும்.
அகாதமி விருது | |
---|---|
தற்போதைய: 95ஆவது அகாதமி விருதுகள் | |
அகாடமி விருது உருவப்படம் ("ஆஸ்கார்") | |
விருது வழங்குவதற்கான காரணம் | அமெரிக்க மற்றும் சர்வதேசத் திரைப்படத் துறையில் சிறந்து விளங்குகிறது |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
வழங்குபவர் | அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் |
முதலில் வழங்கப்பட்டது | மே 16, 1929 |
இணையதளம் | www |
வரலாறு
தொகுமுதன்முதலாக அகாதமி விருதுகள் மே 16, 1929 ஆம் ஆண்டு ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 மக்கள் முன்னிலையில் நடந்தது. பின்னர் மேபைர் ஹோட்டலில் பெரிதாக நடந்தது.[1] மொத்தம் பதினைந்து விருதுகள் வழங்கப்பட்டன.
வெற்றியாளர்கள் நிகழ்ச்சிக்கு மூன்று மாதங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டனர். 1930ஆம் வருடம் வெற்றியாளர்கள் நிகழ்ச்சியின் இரவு 11 மணிக்கு பத்திரிகையில் வெளியிடப்பட்டன.
2010 ஆம் வருடம் வரைக்கும் மொத்தம் 2789 விருதுகள் வழங்கப்பட்டன.[2]
அகாதமி விருதுகள்
தொகு- சிறந்த அசல் இசையிற்கான அகாதமி விருது: 1934 - இன்றுவரை
- சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருது: 1940 - இன்றுவரை
- சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது:1934 - இன்றுவரை
- சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது: 1931 - இன்றுவரை
- சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது: 2001 - இன்றுவரை
- சிறந்த ஆவண குறும்படத்திற்கான அகாதமி விருது: 1941 - இன்றுவரை
- சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது: 1963 - இன்றுவரை
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
- சிறந்த உடை அமைப்பிற்கான அகாதமி விருது: 1948 - இன்றுவரை
- சிறந்த ஒப்பனையிற்கான அகாதமி விருது: 1981 - இன்றுவரை
- சிறந்த ஒலியிற்கான அகாதமி விருது: 1930 - இன்றுவரை
- சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
- சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது: 1931 - இன்றுவரை
- சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது: 1943 - இன்றுவரை
- சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகாதமி விருது: 1947 -இன்றுவரை
- சிறந்த தயாரிப்பிற்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
- சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது: 1935 - இன்றுவரை
- சிறந்த திரை வண்ணத்திற்கான அகாதமி விருது: 1939 - இன்றுவரை
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது:1928 - இன்றுவரை
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது: 1936 - இன்றுவரை
- சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது: 1936 - இன்று வரை
- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
- சிறந்த நடிகைக்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
சிறப்பு அகாதமி விருதுகள்
தொகுஇவ்விருதுகள் அகாடெமியின் சிறப்பு குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவ்விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுவதில்லை. இவ்விருதிற்கு தேந்தேடுக்கப்படுபவர் இவ்விருதை வாங்க மறுக்கலாம்.
- சிறப்பு அகாதமி விருது: 1929 - தற்போது
- அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதமி விருது: 1931 - தற்போது
- கோர்டன் இ. சாயர் விருது: 1981 - தற்போது
- ஜீன் ஹேர்ஷோல்ட் ஹுமானிட்டேரியன் விருது: 1956 - தற்போது
- இர்விங் ஜி. தல்பெர்க் நினைவு விருது: 1938 - தற்போது
அடிக்குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "History of the அகாதமி விருதுகள்". Academy of Motion Picture Arts and Sciences.
- ↑ "A Brief History of the Oscar". Academy of Motion Picture Arts and Sciences. Archived from the original on 2008-07-30. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 4, 2008.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
மேலும் படிக்க
தொகு- Brokaw, Lauren (2010). "Wanna see an Academy Awards invite? We got it along with all the major annual events surrounding the Oscars". Los Angeles: The Daily Truffle.
- Cotte, Oliver (2007). Secrets of Oscar-winning animation: Behind the scenes of 13 classic short animations. Focal Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-240-52070-4.
- Fischer, Erika J (1988). The inauguration of "Oscar": sketches and documents from the early years of the Hollywood Academy of Motion Picture Arts and Sciences and the Academy Awards, 1927–1930 (in English). Munich: K. G. Saur Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-598-10753-5. இணையக் கணினி நூலக மைய எண் 925086635.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Kinn, Gail; Piazza, Jim (2002). The Academy Awards: The Complete History of Oscar. Black Dog & Leventhal Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57912-240-9.
- Levy, Emanuel (2003). All About Oscar: The History and Politics of the Academy Awards. Burns & Oates. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8264-1452-6.
- Wright, Jon (2007). The Lunacy of Oscar: The Problems with Hollywood's Biggest Night. Thomas Publishing, Inc.
வெளி இணைப்புகள்
தொகு