அத்தினாபுரம் வனவிலங்கு சரணாலயம்

இந்தியாவின் வனவிலங்கு சரணாலயம்

அத்தினாபுரம் வனவிலங்கு சரணாலயம் (Hastinapur Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் கங்கைச் சமவெளிகளில் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது 1986 இல் நிறுவப்பட்டது. மேலும், இது மீரட், முசாபர்நகர், காசியாபாத், பிஜ்னோர், அம்ரோஹா மாவட்டங்களில் 2,073 கிமீ 2 (800 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.[1] முறையான அறிவிப்பு இல்லாததால் வேட்டையாடுதல் மற்றும் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பல்வேறு அச்சுறுத்தல்களை சரிபார்க்க தேவையான பாதுகாப்பை இந்த பகுதிக் கொண்டிருக்கவில்லை.[2]

அத்தினாபுரம் வனவிலங்கு சரணாலயம்
அத்தினாபுரம் வனவிலங்கு சரணாலயத்தில் காணப்படும் புலம்பெயர் பறவைகள்
Map showing the location of அத்தினாபுரம் வனவிலங்கு சரணாலயம்
Map showing the location of அத்தினாபுரம் வனவிலங்கு சரணாலயம்
அமைவிடம்உத்தரப் பிரதேசம், இந்தியா
அருகாமை நகரம்மீரட் (35 கி.மீ.) & தில்லி (96 கி.மீ)
ஆள்கூறுகள்29°10′N 78°06′E / 29.167°N 78.100°E / 29.167; 78.100
பரப்பளவு2073 கி.மீ.2
நிறுவப்பட்டது1986

நிலவியல்

தொகு

இந்த வனவிலங்கு சரணாலயம் கங்கை ஆற்றின் மேற்குக் கரையில் 130-150 மீ (430-490 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. உயரமான ஈரமான புல்வெளிகள் தாழ்வான பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. மேலும், ஆண்டின் பெரும்பகுதி நீரில் மூழ்கியுள்ளன. குறுகிய ஈரமான புல்வெளிகள் குளிர்காலம் முதல் பருவமழை தொடங்கும் வரை வறண்டு இருக்கும். உலர் புதர் புல்வெளிகள் உயர்ந்த வண்டல் படிவுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. உயரமான மைதானங்களுக்கும் கங்கையின் மணல் படுக்கைக்கும் இடையில் சதுப்பு நிலங்களும் உள்ளன. சரணாலயத்தின் பெரும்பகுதி குடியேறப்பட்டு சாகுபடிக்கு உட்படுத்தப்பட்டது.[1] கரும்பு, அரிசி, கோதுமை, மக்காச்சோளம் ,பூசணி வகைகள் ஆகியவை இங்கு பயிரிடப்படும் முக்கிய பயிர்களாகும். [3]

பூதி கங்கையின் மேற்குக் கரையில் அமைந்துள்ள பண்டைய நகரமான அத்தினாபுரத்தின் பெயரை இந்த சரணாலயம் கொண்டுள்ளது.

வனவிலங்கு

தொகு

இங்கு பதிவு செய்யப்பட்ட பாலூட்டி இனங்களாக சதுப்புநில மான், ஆற்று நீர்நாய், தென்னாசிய ஆற்று ஓங்கில், சொம்புமூக்கு முதலை ஆகியவை காணப்படுகின்றன.[4] மேலும், இந்தியச் சிறுத்தை, புள்ளிமான், கடமான், நீலான் ஆகியவையும் இங்கு காணப்படுகின்றன.[5]

2009-2012க்குமிடையில், 494 சொம்புமூக்கு முதலைகள் சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டன.

பதிவு செய்யப்பட்ட 117 பறவை இனங்களில் ஓணான் கொத்திக் கழுகு, மஞ்சள் பாறு வெள்ளைக்கண் வைரி, சிறிய கரும்பருந்து, கரும்பருந்து, வைரி, சேற்று பூனைப்பருந்து, புள்ளி ஆந்தை, இந்திய சாம்பல் இருவாச்சி, மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, வெண்கழுத்து நாரை, கரிய அரிவாள் மூக்கன், இந்திய மயில், சாரசு கொக்கு, கரண்டிவாயன், செந்நாரை, குள நாரை, இராக்கொக்கு, உண்ணிக்கொக்கு, பெரிய கொக்கு, வெண் கொக்கு, சின்னக் கொக்கு, சிறு முக்குளிப்பான், வரித்தலை வாத்து, சிறிய சீழ்க்கைச்சிரவி, சீப்பு வாத்து, குள்ளத்தாரா, கருவால் வாத்து, காட்டு வாத்து, புள்ளி மூக்கு வாத்து, தட்டைவாயன், சிவப்புத்தாரா, ஊசிவால் வாத்து, நீலச்சிறகி, களியன், கௌதாரி, ஊதா கோழி, தாழைக் கோழி, கம்புள் கோழி, நாமக்கோழி, நெடுங்கால் உள்ளான் கர்லூ உள்ளான், கோணமூக்கு உள்ளான், நீளவால் தாழைக்கோழி, தாமிர இறக்கை இலைக்கோழி, பச்சைக்கிளி, பனங்காடை, கார்வெண் மீன்கொத்தி, வெண்தொண்டை மீன்கொத்தி, பச்சைப் பஞ்சுருட்டான், நீலவால் பஞ்சுருட்டான், செம்மார்புக் குக்குறுவான், செம்முதுகு கீச்சான், செங்குதக் கொண்டைக்குருவி, சின்னத்தோல் குருவி போன்ற பறவைகளும் காணப்படுகின்றன.[1]

சரணாலயத்தை பாதுகாக்கும் திட்டம்

தொகு

சுற்றுச்சூழல், கங்கை படுகையின் பல்லுயிர் மற்றும் உலகளாவிய, தேசிய, பிராந்திய, மாநில மற்றும் உள்ளூர் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக 25 ஆண்டுகளுக்கு முன்பு இது வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. கார்பெட் தேசிய பூங்கா அல்லது ரணதம்போர் வனவிலங்கு சரணாலயத்தை உருவாக்கியதைப் போலவே இந்த பகுதியையும் அபிவிருத்தி செய்வதற்கும், சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக சரணாலய பகுதிக்குள் விடுதிகளும், பிற சுற்றுலா தொடர்பான உள்கட்டமைப்புகளையும் மேம்படுத்துவதற்கான முதலீட்டை ஈர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது முக்கியம். இது உள்ளூர் மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்கும். அதே நேரத்தில் வனவிலங்கு சுற்றுலாவுக்கு இந்த பகுதியை உருவாக்கும்.

அணுகல்

தொகு

விமானம் மூலம்

தொகு

புது தில்லி, இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் 110 கி.மீ. தொலைவிலுள்ளது.

தொடர் வண்டி மூலம்

தொகு

அருகிலுள்ள தொடர் வண்டி நிலையம் மீரட்டில் உள்ளது. இது சரணாலயத்திலிருந்து 40 கி.மீ. தூரத்திலுள்ளது.

சாலை வழியாக

தொகு

தேசிய நெடுஞ்சாலை எண் 119 தில்லி-மீரட்-பௌரியில் உள்ள அத்தினாபுரம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Khan, M.S., Aftab, A., Syed, Z., Nawab, A., Ilyas, O. and Khan, A. (2013). "Composition and conservation status of avian species at Hastinapur Wildlife Sanctuary, Uttar Pradesh, India". Journal of Threatened Taxa 5 (12): 4174−4721. doi:10.11609/JoTT.o3419.4714-21. 
  2. https://timesofindia.indiatimes.com/city/meerut/awaiting-notification-for-over-3-decades-hastinapur-wildlife-sanctuary-set-to-lose-half-of-its-area/articleshow/78795403.cms
  3. Khan, M.S. & F. Abbasi (2015). "How the local community views wildlife conservation: a case of Hastinapur Wildlife Sanctuary, Uttar Pradesh, India". Journal of Threatened Taxa 7 (2): 6934–6939. doi:10.11609/JoTT.o3943.6934-9. 
  4. Khan, M.S. & F. Abbasi (2015). "How the local community views wildlife conservation: a case of Hastinapur Wildlife Sanctuary, Uttar Pradesh, India". Journal of Threatened Taxa 7 (2): 6934–6939. doi:10.11609/JoTT.o3943.6934-9. 
  5. "Hastinapur Wildlife Sanctuary". Wildlife in India Foundation. 2020. Archived from the original on 2021-08-05. பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.

வெளி இணைப்புகள்

தொகு