இராணுவப் பொறியாளர் சேவைகள் (இந்தியா)
இராணுவப் பொறியாளர் சேவைகள் (Military Engineer Services (MES), இது இராணுவம் மற்றும் பொதுமக்கள் இணைந்த சேவை ஆகும். பொறியியல் அதிகாரிகள் மற்றும் சார்-நிலை அலுவலர்கள் கொண்ட இப்படையானது இந்தியாவின் பழைமையான மற்றும் பெரிய இந்திய அரசின் அமைப்பாகும். இந்தியாவின் முப்படைகளுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும், பராமரிக்கவும் உள்ள இப்பொறியாளர்கள் படையானது 26 செப்டம்பர் 1923 அன்று பிரித்தானிய இந்தியாவின் அரசால் நிறுவப்பட்டது.[1][1]
படிமம்:This is the logo for Military Engineer Services.png | |
உருவாக்கம் | 26 செப்டம்பர் 1923 |
---|---|
வகை | இந்திய அரசின் அமைப்பு |
தலைமையகம் |
|
சேவை | இந்தியா |
தலைமைப் பொறியாளர் | லெப். ஜெனரல் அர்விந்த் வாலியா |
தலைமை இயக்குநர் (பணியாளர்கள்) | லால் சந்த் மீனா, இந்தியப் பாதுகாப்புச் சேவைப் பொறியாளர்கள் சங்கம் (Indian Defence Service of Engineers Association) |
பணிக்குழாம் | இந்தியப் பொறியாளர்கள் சேவைகள் தேர்வு, குரூப் 'A' & மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு (குரூப் பி (இளநிலை பொறியாளர்) & இராணுவம் அல்லாதோருக்கு SSC CHSL, CGL AND MTS EXAM FOR Administrative Staff of MES. |
வலைத்தளம் | https://mes.gov.in/ www.mes.gov.in |
இதன் தலைமைப் பொறியாளர் லெப். ஜெனரல் அர்விந்த் வாலியா மற்றும் தலைமை இயக்குநர் (பணியாளர்கள்) லால் சந்த் மீனா ஆவார்.
இந்திய இராணுவப் பொறியாளர்கள் படையணியின் கீழ் இராணுவப் பொறியாளர் சேவைகள் உள்ளது. இப்படையில் இராணுவம் மற்றும் இராணுவ அல்லாத இளநிலை மற்றும் முதுநிலை பொறியாளர்கள் உள்ளனர்.
படையின் பணியிடம், தரம், அடிப்படைச் சம்பளம்
தொகு
தரம் | பதவி | பெயர் | மாத அடிப்படை ஊதியம் |
---|---|---|---|
இளநிலை ஊதிய விகிதம் | உதவி செயற்பொறியாளர் | உதவி இயக்குநர் | ₹56,100 |
முதுநிலை ஊதிய விகிதம் | செயற்பொறியாளர் | துணை இயக்குநர் | ₹67,700 |
முதுநிலை ஊதிய விகிதம் (Non-Functional) | செயற்பொறியாளர் (NFSG) | இணை இயக்குநர் | ₹78,800 |
முதுநிலை நிர்வாக கிரேடு (Functional) | கண்காணிப்பு பொறியாளர் | இயக்குநர் | ₹123,100 |
முதுநிலை நிர்வாக கிரேடு | தலைமைப் பொறியாளர் | இணை தலைமை இயக்குநர் | ₹144,200 |
உயர்நிலை நிர்வாக கிரேடு | கூடுதல் தலைமை இயக்குநர் | கூ த இ (நடுவர் மன்றம்) | ₹182,200 |
மண்டலங்கள்
தொகுஇப்படையானது முப்படைகளுக்கும் சேவை செய்ய இந்தியாவில் 600 பொறியியல் நிலையங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இப்படையின் மண்டலங்கள் வருமாறு:[2]
CCE (தரைப்படை) 1 தின்ஜன் | CCE (தரைப்படை) . 2 மிஸாமரி | CCE (தரைப்படை) 3 நராங்கி | |
CCE புது தில்லி | CCE சபுவா | CE (வான் படை) பிரயாக்ராஜ்j | |
CE (வான் படை) பெங்களூர் | CE (வான் படை) காந்திநகர் | CE (வான் படை) நாக்பூர் | |
CE (வான் படை) சில்லாங் | CE (வான் படை) உதம்பூர் | CE (வான் படை) பாலம் | |
CE ஐதராபாத் | CE அந்தமான் நிக்கோபார் தீவுகள் | CE பரேலி | |
CE பட்டிண்டா | CE போபால் | CE சண்டிகர் | |
CE சென்னை | CE தில்லி | CE ஜபல்பூர் | |
CE ஜெய்ப்பூர் | CE ஜலந்தர் | CE ஜோத்பூர் | |
CE கொல்கத்தா | CE லே | CE லக்னோ | |
CE கடற்படை கொச்சி | CE கடற்படை மும்பை | CE கடற்படை விசாகப்பட்டினம் | |
CE பட்டிண்டா | CE பதான்கோட் | CE புனே | CE RD தில்லி |
CE சிக்கந்தராபாத் | CE சில்லாங் | CE சிலிகுரி | |
CE சிறிநகர் | CE உதம்பூர் | DGNP மும்பை | |
DGNP விசாகப்பட்டினம் | தேசிய போர் அருங்காட்சியகம் மற்றும் நினைவிடம் | CE ( CG ) விசாகப்பட்டினம் | |
CE ( CG ) கோவா |
CE- தலைமைப் பொறியாளரr, CCE- தலைமை கட்டுமானப் பொறியாளர், AF- வான் படை
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "About Us | Military Engineer Services| Military Engineer Services, Government of India". mes.gov.in.
- ↑ "Military Engineer Services". mes.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2017-09-26.