கேரளக் காட்டுயிர்கள்

கேரளத்தின் பெரும்பகுதியானது, சற்று உயரமான நிலப்பகுதியாகவும் ஈரப்பதமான பசுமைமாறா மழைக்காடுகள் கொண்டதாகவும் உள்ளது. கிழக்கில் உயரமான நிலப்பரப்பில் இலையுதிர் மற்றும் அரை- பசுமை மாறாக் காடுகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், இதன் நிலப்பரப்பும், குறிப்பிடத்தக்க உயர வேறுபாடுகள் கொண்ட நிலத்தின் காரணமாக இதன் பல்லுயிர் பதிவு உலகின் மிக முக்கியமான ஒன்றாகும்.

கண்ணூரில் உள்ள சிரக்கல் சிராவில் ஒரு உண்ணிக்கொக்கு
சிம்மேனி வனவிலங்கு சரணாலயம்

பசுமைமாறா காடுகள்

தொகு

கேரளத்தின் கணிசமான பல்லுயிர் வனப்பகுதிகள் அதன் கிழக்குத் திசையில் உள்ள பசுமைமாறா காடுகளில் உள்ளன; கரையோர கேரளம் பெரும்பாலும் வேளாண்மைக்குப் பயன்படுத்தபடுகிறது. மேலும், ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான காட்டுயிர்கள் உள்ள பகுதியாக உள்ளது. கேரளத்தில் 9,400  கி.மீ 2 பரப்பளவில் இயற்கையான காடுகள் உள்ளன.  பெருந்தோட்டமற்ற காடுகள் தோராயமாக 7,500 கி.மீ 2 உள்ளன. வெப்பமண்டல ஈரப்பதமான பசுமைமாறா மற்றும் அரை பசுமைமாறா காடுகள் கொண்ட காட்டுப் பகுதிகள் (குறைந்த மற்றும் நடுத்தர உயரங்கள் — 3,470 கி.மீ 2 ) உள்ளன. வெப்பமண்டல ஈரப்பதமான மற்றும் வறண்ட இலையுதிர் காடுகள் (நடுத்தர உயரப் பகுதிகள் — 4,100 கிமீ 2 மற்றும் 100 கி.மீ 2, முறையே), மற்றும் மொன்டேன் துணை வெப்பமண்டல மற்றும் மிதவெப்பதண்டலக் ( சோலை ) காடுகள் (மிக உயரமான பகுதி — 100 கிமீ 2 ). இத்தகைய காடுகள் கேரளத்தின் நிலப்பரப்பில் 24% ஆகும். உலகின் இரண்டு ராம்சர் மாநாட்டுகளில் பட்டியலிடப்பட்ட நீர்த்தடங்களை கேரளம் கொண்டுள்ளது: சாஸ்தம்கோட்டை ஏரி மற்றும் வேம்பநாட்டு-நீர்த்தடங்கள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நீர்த்தடங்களாக குறிப்பிடப்படுகின்றன. பரந்த நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் 1455.4 கி.மீ 2 உட்பட ஏராளமான பாதுகாக்கப்பட்ட பகுதிகளும் உள்ளன. 

 
இந்த ஸ்ட்ராங்க்லர் அத்தி போன்ற ( அத்தி பேரினம்) தாவரங்களின் கனிகள் பல பழந்தின்னிகளின் வாழ்கைக்கு ஆதாரமாக உள்ளன

மழைக்காடுகள்

தொகு

கிழக்கு கேரளத்தின் காற்று முகச்சரிவு கொண்ட மலைகளானது வெப்பமண்டல ஈரப்பத காடுகள் மற்றும் வெப்பமண்டல வறண்ட காடுகளைக் கொண்டதாக உள்ளது: பொதுவாக இவை பரந்து பரவியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சிறப்பியல்புகள் ஆகும். ஜயண்ட் சோனோகெலிங்கின் கிரவுன் ( இருசொற் பெயரீடு : டல்பெர்கியா லாடிஃபோலியா - இந்திய ரோஸ்வுட்), அஞ்சிலி (ஆர்டோகார்பஸ் ஹிர்சுட்டா), முள்ளுமுறுக்கு (எரித்ரினா), காசியா மற்றும் பிற மரங்கள் கன்னிக் காடுகளின் பெரிய பகுதிகளின் உச்சியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒட்டுமொத்தமாக, கேரளக் காடுகளில் 1,000 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. சிறிய தாவரங்களில் மூங்கில், காட்டு மிளகு, காட்டு ஏலக்காய், இறகுத்தண்டு பிரம்பு — ஒரு வகை பெரிய பிரம்புப் புல் ), வெட்டிவேர் புல் போன்றவை அடங்கும்.

கேரள விலங்குகள்

தொகு

இதையொட்டிய காடுகளில் ஆசிய யானை, வங்காளப் புலி, சிறுத்தை, நீலகிரி வரையாடு, பழுப்பு மலை அணில் போன்ற முக்கிய விலங்கினங்கள் வாழ்கின்றன. மேலும் குண்டலி மலைகளில் உள்ள அமைதிப்பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் சோலைமந்தி, தேன் கரடி, காட்டெருது போன்ற அச்சுறுத்தலுக்கு உள்ளான விலங்குகளும், இந்திய முள்ளம்பன்றி, புள்ளிமான், கடமான், சாம்பல் குரங்கு, பறக்கும் அணில், காட்டுப்பூனை, காட்டுப்பன்றி, பல்வேறு பழைய உலக குரங்கு இனங்கள், செந்நாய், ஆசிய மரநாய் போன்ற விலங்குகளும் உள்ளன.

 
இராச நாகம் ( ஓபியோபகஸ் ஹன்னா )

பிற விலங்குகள்

தொகு

கேரளத்தில் மரப் பாம்பு, பச்சைப் பாம்பு, இராச நாகம், விரியன், மலைப்பாம்பு, பல்வேறு வகையான ஆமைகள், முதலைகள் போன்ற பல ஊர்வனங்கள் காணப்படுகின்றன. கேரளத்தில் சுமார் 453 வகையான பறவைகள் உள்ளன, அதாவது இலங்கை தவளைவாயன், இலை எடுக்கும் பறவை, கிழக்கத்திய விரிகுடா ஆந்தை, மலை இருவாட்சி, இந்திய சாம்பல் இருவாச்சி , மலை இருவாட்சி, மயில், கொண்டை நீர்க்காகம், காட்டு மைனா, மலை மைனா, கிழக்கத்திய பாம்புத் தாரா, கருந்தலை மாங்குயில், துடுப்பு வால் கரிச்சான், இரட்டைவால் குருவி, கரிச்சான், கொண்டைக்குருவி, மீன் கொத்தி , மரங்கொத்தி, காட்டுக்கோழி, பெரிய பச்சைக்கிளி, பலவகையான வாத்துகள், இடம் பெயரும் பறவைகள் போன்ற பறவைகள் காணப்படுகின்றன. கூடுதலாக, காரி ( தேளி மீன் ) போன்ற நன்னீர் மீன்களும், சூட்டச்சி ( ஆரஞ்சு குரோமைடு — எட்ரோப்ளஸ் மாகுலட்டஸ் ; போன்ற உவர் நீர் மீன் உயிரினங்கள் கேரள ஏரிகள் மற்றும் நீர்வழிப்பாதைகளில் உள்ளன.

 
இடுக்கி மாவட்டம் எரவிகுளம் தேசிய பூங்காவில் காணப்பட்ட வரையாடு
 
சோலைமந்தி

பட்டியல்

தொகு
தேசியப் பூங்கா பரப்பளவு (கி.மீ 2 ) தொடங்கிய ஆண்டு
எரவிகுளம் தேசிய பூங்கா 97 1978
அமைதிப்பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா 237. 52 1984
ஆனைமுடி சோலை தேசியப் பூங்கா 7.5 2003
மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா 12.817 2003
பாம்பாடும் சோலை தேசியப் பூங்கா 1.318 2003
உயிர்க்கோளக் காப்பகங்கள் பரப்பளவு (கி.மீ 2 ) தொடங்கிய ஆண்டு
நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் 1455.4 1986
அகஸ்தியமலை உயிர்க்கோளக் காப்பகம் 1701 2002
வனவிலங்கு சரணாலயங்கள் பரப்பளவு (கி.மீ 2 ) தொடங்கிய ஆண்டு
பெரியாற்றுத் தேசியப் பூங்கா 777 1950
நெய்யாறு காட்டுயிர் உய்விடம் 128 1958
பீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம் 125 1958
வயநாடு வனவிலங்கு காப்பகம் 344.44 1973
பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் 285 1973
இடுக்கி வனவிலங்கு சரணாலயம் 70 1976
தட்டெக்காடு பறவைகள் சரணாலயம் 25 1983
பேப்பரா காட்டுயிர் உய்விடம் 53 1983
சிம்மோனி காட்டுயிர் உய்விடம் 85 1984
சின்னார் கானுயிர்க் காப்பகம் 90.44 1984
செந்தூருணி காட்டுயிர் உய்விடம் 171 1984
ஆரளம் வனவிலங்கு சரணாலயம் 55 1984
மங்களவனம் பறவைகள் சரணாலயம் 0.0274 2004
குறிஞ்சி மலை சரணாலயம் 32 2006
புலி காப்பகங்கள் பரப்பளவு (கி.மீ 2 ) தொடங்கிய ஆண்டு
பெரியார் புலிகள் காப்பகம் 925கள் காப்பகம் 1978
பரம்பிகுளம் புலிகள் காப்பகம் 648.50 1973

குறிப்புகள்

தொகு

குறிப்புகள்

தொகு
  • Sreedharan, TP (2004), "Biological Diversity of Kerala: A survey of Kalliasseri panchayat, Kannur district" (PDF), Kerala Research Programme on Local Level Development (Centre for Development Studies), archived from the original (PDF) on 26 மார்ச் 2009, பார்க்கப்பட்ட நாள் 13 January 2006 {{citation}}: Check date values in: |archive-date= (help).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரளக்_காட்டுயிர்கள்&oldid=3924897" இலிருந்து மீள்விக்கப்பட்டது