சனத் ஜயசூரியா
தேசபந்து சனத் தெரன் ஜயசூரிய (Sanath Teran Jayasuriya (சிங்களம்: සනත් ටෙරාන් ජයසූරිය பிறப்பு: ஜூன் 30, 1969) இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் மட்டையாளர் மற்றும் தலைவர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் அதிரடியாக ஓட்டங்கள் சேர்ப்பதினாலும், சகலத் துறையினராக போட்டியில் அணியை வெற்றி பெறச் செய்ததற்காகவும் பரவலாக அறியப்படுகிறார்.[3]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சனத் தெரன் ஜயசூரியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 30 சூன் 1969 மாத்தறை, சிலோன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | மாஸ்டர் பிளாஸ்டர்,[1] மதாரா மாலர்[2] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 7 அங் (1.70 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடதுகை மரபுவழா சுழல் வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் மற்றும் இடதுகை மரபுவழா சுழல் வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 49) | 22–26 பெப்ரவரி 1991 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 1–5 டிசம்பர் 2007 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 58) | 26 டிசம்பர் 1989 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 28 ஜூன் 2011 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 07 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 4) | 15 ஜூன் 2006 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 25 ஜூன் 2011 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1994 – present | புளூம் ஃபீல்டு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2005 | சாமர்செட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007 | மேரிலெபோன் துடுப்பாட்ட சங்கம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007 | லங்காஷயர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008 | வார்விக்ஷயர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–2010 | மும்பை இந்தியன்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2010 | வார்விக்ஷயர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011 | ருஹுன்ஹா ரைனோஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2012 | குல்னா ராயல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo player profile, 27 டிசம்பர் 2011 |
சனத் ஜயசூரிய | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் மாத்தறை | |
பதவியில் 22 ஏப்ரல் 2010 – 26 ஜூன் 2015 | |
பெரும்பான்மை | 74,352 விருப்ப வாக்குகள் |
மாகாண சபைகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சர் | |
பதவியில் 10 ஜூன் 2015 – 17 ஆகத்து 2015 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
உள்ளூராட்சி மற்றும் கிராம அபிவிருத்தி பிரதி அமைச்சர் | |
பதவியில் 12 ஜனவரி 2015 – 10 ஜூன் 2015 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
தபால் சேவைகள் பிரதி அமைச்சர் | |
பதவியில் 28 ஜனவரி 2013 – 12 ஜனவரி 2015 | |
குடியரசுத் தலைவர் | மஹிந்த ராஜபக்ச |
பிரதமர் | தி. மு. ஜயரத்ன |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
வேலை | அரசியல்வாதி |
இவர் துடுப்பாட்டத்தில் சகலத்துறையராக விளங்கினார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருபது ஆண்டுகளாக விளையாடினார்.[4] மேலும் மொத்தமாக 12,000 ஓட்டங்களும் 300 இலக்குகளும் எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளின் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த சகலத் துறையர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[5][6] 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டி காலத்தில் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் 1997 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்த ஐந்து சிறந்த துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலில் இவரின் பெயரும் இடம்பெற்றது.[7] 1993 முதல் 2003 ஆம் ஆண்டு வரை இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்தார்.
டிசம்பர் 2007 இல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்தும், சூன் 2011 இல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இலங்கைத் துடுப்பாட்ட அணி வாரியம் இவரை வீரர்களைத் தேர்வு செய்யும் குழுவின் செயலாளராக அறிவித்தது. இவரின் தேர்வுக் காலத்தில் தான் 2014 ஐசிசி உலக இருபது20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
சனத் ஜயசூரிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மாத்தறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரானார். அந்தத் தேர்தலில் இவர் 74,352 வாக்குகள் பெற்றார்.[8] மகிந்த ராசபக்சவின் அமைச்சரவையில் அஞ்சல் துறையின் உதவி அமைச்சராகப் பதவியேற்றார்.[9]
ஆரம்பகால வாழ்க்கை
தொகுசனத் ஜயசூரியா சூன் 30, 1969 இல் தென் இலங்கையிலுள்ள மாத்தறையில் பிறந்தார். இவருக்கு சந்தான ஜயசூரியா எனும் மூத்த சகோதரர் உள்ளார். மாத்தறையிலுள்ள புனித செர்வாதியஸ் கல்லூரியில் பயின்றார். இங்கு பயிலும் போது கல்லூரியின் முதல்வர் ஜி. எல். கணபதி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் லயோனல் வகசின்ஹே ஆகியோர் இவரின் துடுப்பாட்டத் திறனை மேம்படுத்தினர்.[10]
தேர்வுத் துடுப்பாட்டம்
தொகு1997 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடந்த தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 340 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த இலங்கை அணி வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இந்தப் போட்டியில் ரொசான் மகாநாமவுடன் இணைந்து 576 ஓட்டங்கள் எடுத்தார்.இரண்டாவது இணைக்கு எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் எனும் சாதனையைப் படைத்தார். இந்த இரு சாதனைகளும் 2006 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியின் போது மகேல ஜயவர்தன 374 ஓட்டங்களும் , குமார் சங்கக்காரவுடன் இணைந்து 624 ஓட்டங்களும் எடுத்து தகர்த்தனர். செப்டம்பர் 20, 2005 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற வங்கதேச துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் மூலம் நூறாவது தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் விளையாடியவர் எனும் சாதனையைப் படைத்தார். இந்தச் சாதனையைப் படைத்த முதல் இலங்கை வீரர் மற்றும் 33 வது சர்வதேச வீரர் ஆவார்.
ஏப்ரல் 2006 இல் ஓய்வு பெற இருப்பதாக தனது விருப்பத்தை அறிவித்தார். ஆனால் அதனை திரும்பப் பெற்றுக் கொண்டு மே 2006 இல் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் அணியில் இடம்பிடித்தார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாது , மூன்றாவது போட்டியில் விளையாடினார்.[11]
ஒருநாள் போட்டிகள்
தொகுஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் விரைவாக ஓட்டங்களை பல முறை எடுத்தவர் எனும் சாதனையை இவர் படைத்துள்ளார். பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 17 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் அதே அணிக்கு எதிராக 48 பந்துகளில் 100 ஓட்டங்களையும், இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 95 பந்துகளில் இவர் விரைவாக 150 ஓட்டங்களை எடுத்தார். இவர் விரைவாக எடுத்த 50 ஓட்டங்கள் எனும் சாதனையானது 19 ஆண்டுகள் எந்த ஒரு வீரராலும் முறியடிக்கப்படாமல் இருந்தது. மேலும் பவர் பிளே போன்ற எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லாத சமயத்தில் இவர் விரைவாக 50 ஓட்டங்கள் எடுத்தது தற்போது வரை சிறந்த 50 ஓட்டங்களாக கருதப்படுகிறது. பின்னர் ஏ பி டிவில்லியர்ஸ் இந்தச் சாதனையை முறியடித்தார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் இவர் மட்டுமே ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் நான்கு முறை 150 ஓட்டங்களுக்கு மேலாக எடுத்துள்ளனர். இதில் இவர் மட்டும் இரு முறை தொடர்ச்சியாக 150க்கும் மேலான ஓட்டங்களை எடுத்துள்ளார்.
2000 ஆண்டு இலங்கைத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 189 ஓட்டங்களை எடுத்தார் இதுவே இவரின் அதிகபட்ச ஓட்டம் ஆகும். அந்த சமயத்தில் இது மூன்றாவது அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது மேலும் இலங்கை துடுப்பாட்ட வீரர்களில் இதுவே இந்த இடத்தில் இருந்தது. தற்போது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இலங்கை வீரர்கள் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் இவர் 11வது இடத்தில் உள்ளார்.
பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் 48 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்தார். பின்னாளில் இந்தச் சாதனை சகித் அப்ரிதியால் முறியடிக்கப்பட்டது. மேலும் அவர் 37 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்தார். பின்னர் அப்ரிதியின் சாதனையினை நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் முறியடித்தார். அவர் 36 பந்துகளில் இந்தச் சாதனை படைத்தார். ஆனால் தென்னாப்பிரிக்காவின் ஏ. பி. டிவில்லியர்ஸ் 31 பந்துகளில் இந்தச் சாதனையினை முறியடித்தார்.ஜயசூரியா ஒருநாள் போட்டிகளில் 270 ஆறு ஓட்டங்களை அடித்து , அதிக ஆறு ஓட்டங்களை அடித்த வீரர் எனும் சாதனை படைத்தார். ஆசியக் கோப்பைத் தொடரின் போது இந்தச் சாதனையானது சகித் அப்ரிதியால் முறியடிக்கப்பட்டது. மேலும் 10, 000 ஓட்டங்களை கடந்த நான்காவது வீரர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 12, 000 மற்றும் 13, 000 ஓட்டங்களை எடுத்த இரண்டாவது வீரர் எனும் சாதனை படைத்தார்.28 நூறு ஓட்டங்களை எடுத்துள்ள இவர் அதிக நூறு ஓட்டங்களை எடுத்த வீரர்கள் வரிசையில் நான்காம் இடத்தில் உள்ளார். ஒரே நிறைவுகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையினையும் இவர் படைத்துள்ளார். 30 ஓட்டங்களை இவர் இருமுறை எடுத்துள்ளார். பின்னர் இந்தச் சாதனையானது தென்னாப்பிரிக்க வீரர் ஹிப்ஸ் என்பவரால் முறியடிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Amit, M.Shamil (13 டிசம்பர் 2002). "Officials in comedy of errors at sporting spectacle". Sunday Times. http://sundaytimes.lk/020811/sports/1.html. பார்த்த நாள்: 28 ஆகஸ்ட் 2009.
- ↑ Abeysinghe, Roshan (25 ஏப்ரல் 2010). "‘Matara Mauler’ enters Parliament". Sunday Times. http://sundaytimes.lk/100425/Sports/take_another_look_at_cricket.html. பார்த்த நாள்: 29 டிசம்பர் 2011.
- ↑ "Biographies of Present Members". The Parliament of Sri Lanka. Archived from the original on 27 October 2010.
- ↑ Rex Clementine (2011). "The legend who made us look stupid". The Island Online. Archived from the original on 2012-01-27. பார்க்கப்பட்ட நாள் 2012-04-16.
- ↑ "Cricket Legends". Talk Cricket. 2008. பார்க்கப்பட்ட நாள் 2010-06-03.
- ↑ "Cricket legend Sanath Jayasuriya bids adieu to International Cricket today". Asian Tribune. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-12-27.
- ↑ "Wisden – 1997". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-10-20. "The success of Sanath Jayasuriya in inspiring Sri Lanka to World Cup victory in March 1996 also inspired a change of policy: he was chosen as one of the Five Cricketers of the Year even though he did not play in the English season."
- ↑ "Sri Lanka's Master Blaster Sanath Jayasuriya tops Matara". Asian Tribune. 9 April 2010. http://www.asiantribune.com/news/2010/04/09/sri-lankas-master-blaster-sanath-jayasuriya-tops-matara.
- ↑ "Nine deputy ministers sworn in before President in Sri Lanka". Colombopage. 10 October 2013 இம் மூலத்தில் இருந்து 3 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303205345/http://www.colombopage.com/archive_13B/Oct10_1381391120CH.php.
- ↑ Fernando, Leslie (22 June 2008). "Master-blaster Sanath won Observer Outstation Cricketer Award in 1988". sunday observer இம் மூலத்தில் இருந்து 5 July 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090705161213/http://www.sundayobserver.lk/2008/06/22/spo01.asp. பார்த்த நாள்: 6 October 2012.
- ↑ http://content-aus.cricinfo.com/engvsl/content/story/249041.html
வெளியிணைப்புகள்
தொகு- முகநூலில் Sanath Jayasuriya
- Cricinfo Player Profile : Sanath Jayasuriya
- Cricket Archive : Sanath Jayasuriya
வார்ப்புரு:ஓரு நாள் கிரிக்கெட்டில் 10000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்