சித்ரா (மலையாளம்)

சித்ரா (Chithra; 21 மே 1965-21 ஆகத்து 2021) மலையாளத் திரைத்துறையில் தனது பங்களிப்பிற்காக நன்கு அறியப்பட்ட ஓர் இந்திய நடிகை ஆவார்.[4][5] இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1983ஆம் ஆண்டில் தனது முதல் படமான ஆட்டகலசம் படத்தில் பிரேம் நசீர் மற்றும் மோகன்லால் ஆகியோருடன் நடித்தார்.[6] இவர் நடித்த ஓர் எண்ணெய் நிறுவனத்தின் விளம்பரத்தின் மூலம் பெற்ற புகழ் காரணமாக இவருக்கு "நல்லெண்ணெய் சித்ரா" என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டது.[7]

சித்ரா
பிறப்பு(1965-05-21)21 மே 1965 [1]
கொச்சி, கேரளம், இந்தியா
இறப்பு21 ஆகத்து 2021(2021-08-21) (அகவை 56) [2][3]
சாலிகிராமம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்சுருதி சித்ரா
நல்லெண்ணெய் சித்ரா[சான்று தேவை]
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1981–2020
வாழ்க்கைத்
துணை
விசயராகவன் (தி. 1990⁠–⁠2021)
பிள்ளைகள்1

வாழ்க்கை வரலாறு

தொகு

1965ஆம் ஆண்டில் கொச்சி மாதவன் மற்றும் தேவிக்குப் பிறந்த மூன்று குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார், சித்ரா. இவருக்குத் தீபா என்ற மூத்த சகோதரியும், திவ்யா என்ற இளைய சகோதரியும் உள்ளனர். இவர் சென்னை இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.[8] பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், திரைப்பட வாய்ப்பு அதிகமாக வந்ததால் தனது படிப்பைத் தொடர முடியவில்லை.

1990ஆம் ஆண்டு விஜயராகவனை மணந்தார். இவர்களுக்கு 1992-இல் மகாலட்சுமி என்ற மகள் பிறந்தார். திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் தனது குடும்பத்துடன் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். இவர் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.[9] இவர் 21 ஆகத்து 2021 அன்று சென்னையில் திடீர் மாரடைப்பால் இறந்தார்.[10]

தமிழ்த் திரைப்படங்கள்

தொகு
ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
1975 அபூர்வ ராகங்கள் குழந்தை கலைஞர்
1978 அவள் அப்படித்தான் இளம் மஞ்சு குழந்தை கலைஞர்
1981 ராஜ பார்வை சுலோச்சனா
1982 ஆட்டோ ராஜா ராஜாவின் சகோதரி
1984 என் உயிர் நண்பா சாந்தி
1986 குரோதம் சுபா.
ரசிகன் ஒரு ரசிகை ரம்யா
1987 சின்னபூவே மெல்லபேசு
மனதில் உறுதி வேண்டும் சித்ரா
ஊர்க்காவலன் மல்லிகா
1988 என் தங்கச்சி படிச்சவ லட்சுமி
1989 எங்க வீட்டு தெய்வம் ஜான்சி
வலது கலை வைத்து வா லச்சமி
தலைப்பு செய்திகள்
நினைவு சின்னம் தங்கம்
மனிதன் மாறிவிட்டன் தமிழரசி
திருப்பு முனை சித்ரா
1990 எதிர்காற்று கீதா
வெள்ளையத் தேவன் புரணம்மா
அதிசய மனிதன் கௌசல்யா
எனக்கோரு நீதி
எங்கள் சாமி ஐயப்பன்
60 நாள் 60 நிமிடம் ஆஷா
1991 நாடு அதை நாடு அஞ்சலி
புத்தம் புது பயணம் செவிலியர்.
சேரன் பாண்டியன் பரிமளம்
புதிய நட்சத்திரம் கதா [11]
1992 பொண்டாட்டி ராஜ்ஜியம் பாரதியின் சகோதரி
சின்னவர் பொன்னி
1993 பரம்பரியம் விமலா
பத்தினிப் பெண்
1994 வீட்டைப்பாரு நாட்டைப்பாரு திருமதி விக்ரமாதித்யன்
மகுடிக்காரன் தங்கம்
முதல் மணைவி கண்ணம்மா
மதுமதி ரதி ஆசிரியர்
1995 பெரிய குடும்பம் சாந்தி
1996 கோபாலா கோபாலா மீனாட்சி
ராஜாளி லச்சமி
இளமை ரோஜாக்கள் ஆஷாவின் தாய்
2001 கபடி கபடி நில உரிமையாளர் அம்மா
2005 காதல் செய்ய விரும்பு நிதியின் தாய்
2020 மணி அடிப்பகுதி
என் சங்கத்து ஆளா ஆடிச்சவன் எவாண்டா தேவனை

மேற்கோள்கள்

தொகு
  1. "இரவு 12 மணிக்கு போன் செய்த ரசிகர் - நெகிழும் நடிகை சித்ரா!". cinema.vikatan.com/. 22 May 2021. https://cinema.vikatan.com/tamil-cinema/actress-chithra-shares-her-happiness-on-fans-birthday-wish. 
  2. "நடிகை சித்ரா மரணம்... அதிகாலையில் திடீர் மாரடைப்பால் உயிர் பிரிந்தது!". cinema.vikatan.com. 21 August 2021. https://cinema.vikatan.com/tamil-cinema/popular-actress-chithra-died-due-to-heart-attack. 
  3. "Nallennai Chithra death: Actress Chithra passed away due to cardiac arrest". thenewscrunch.com. 21 August 2021. https://thenewscrunch.com/nallennai-chithra-death-actress-chithra-passed-away-due-to-cardiac-arrest/38568/. 
  4. "Popular South Indian actor 'Nallenai' Chitra passes away". The News Minute (in ஆங்கிலம்). 21 August 2021. பார்க்கப்பட்ட நாள் 22 August 2021.
  5. Chithra - cinediary
  6. "ഭരത്‌ നടനും ഉര്‍വ്വശി അവാര്‍ഡ്‌ നടിയും". Mangalam. Archived from the original on 13 October 2014. பார்க்கப்பட்ட நாள் 17 September 2014.
  7. "Malayalam actor Chitra passes away due to heart attack". Mathrubhumi. Archived from the original on 8 October 2021. பார்க்கப்பட்ட நாள் 21 August 2021.
  8. "ലൊക്കേഷനില്‍ ആരോടും സംസാരം പാടില്ല; ഷൂട്ടിങ് തീര്‍ന്നാല്‍ നേരെ മുറിയിലേക്ക്.. തടവറയിലടച്ച ജീവിതം, ചിത്ര തുറന്ന് പറയുന്നു". mangalam.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 August 2021.
  9. "ഞാന്‍ എന്തുകൊണ്ടാണ് സിനിമ ഉപേക്ഷിച്ചത് ? വെളിപ്പെടുത്തലുമായി സൂപ്പര്‍സ്റ്റാറുകളുടെ നായിക". Mangalam.com. பார்க்கப்பட்ட நாள் 25 July 2018.
  10. "നടി ചിത്ര അന്തരിച്ചു; അന്ത്യം ഹൃദയാഘാതത്തെ തുടർന്ന്". ManoramaOnline (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 21 August 2021.
  11. "Puthiya Natchathiram Songs Download isaimini, Puthiya Natchathiram Tamil Songs". 23 January 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்ரா_(மலையாளம்)&oldid=4167702" இலிருந்து மீள்விக்கப்பட்டது