பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்/தொகுப்பு 02
தாய் மொழி
தொகுநான் அடிக்கடி மீட்டும் பார்க்கும் வரிகள். உங்களுக்கும் உற்சாகம் அளிக்குமென நினைக்கிறேன்.
வாய்க்கு மகிழ்ச்சி எது?
புது மனைவியின் முதல் சமையல்? இல்லை
முதல் காப்பியின் இளம் கசப்பு? இல்லை
முரட்டு இருட்டில் திருட்டு முத்தம்? இல்லை
வாய்க்கு மகிழ்ச்சி, தப்பின்றி உச்சரிக்கும் தாய்மொழி!
~கவிஞர் வைரமுத்து~
செத்துக் கிடந்தேன். யாரோ ஒருவர் என் தாய் மொழியில் பேசியதும் எழுந்து கொண்டேன்.
~உரசியப் பழமொழி~
--Anton (பேச்சு) 15:33, 23 செப்டெம்பர் 2012 (UTC)
விருப்பம் +1 :) புத்துணர்ச்சி பெற்றேன் நண்பரே!. தாய்மொழி என்ற சொல்லே மகிழ்விக்கிறது. மக்களின் தவ்றான தமிழை எண்ணியே அடிக்கடி சோர்வுறுகிறேன். நீங்களே அவ்வப்போது ஊக்கமூட்டி புத்துணர்ச்சி அளித்து என்னை மெருகேற்ற வேண்டும். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:52, 23 செப்டெம்பர் 2012 (UTC)
- விருப்பம் --Anton (பேச்சு) 16:42, 23 செப்டெம்பர் 2012 (UTC)
உங்களுக்குத் தெரியுமா?
தொகுநீங்கள் பங்களித்த அலாரிப்பு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஏப்ரல் 13, 2013 அன்று வெளியானது. |
- ,முதல்முறையாக இந்த அறிவிப்பு எனக்கு வந்துள்ளது. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:59, 18 ஏப்ரல் 2013 (UTC) விருப்பம்--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 15:14, 18 ஏப்ரல் 2013 (UTC)
பதக்கம்
தொகுசிறந்த உழைப்பாளர் பதக்கம் | |
தமிழ்குரிசிலின் அயராத உழைப்பை வியந்து நான் அளிக்கும் சிறிய பதக்கம். எஸ்ஸார் (பேச்சு) 15:27, 1 அக்டோபர் 2012 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
பதக்கம் வழங்கி பாராட்டியதற்கு நன்றி எஸ்ஸார். :) உங்கள் வாழ்த்தின்மூலம் புது உற்சாகம் பெற்றுள்ளேன். இதன் மூலம் மேலும் என்ன உசுப்பி விட்டுள்ளீர்கள்! நன்றாக உழைத்து கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்துவேன் என்று உறுதியேற்கிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:00, 1 அக்டோபர் 2012 (UTC)
- சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டுமென்பர். நான் விளக்கு என்றால் தூண்டுகோல் சண்முகம்! முதல் நாள் இங்கு வந்தபோது நல்ல தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதவும், ஓரளவு எழுத்துப் பயிற்சியும், தட்டச்சும் மட்டுமே அறிந்திருந்தேன். (பொதுவாக விக்கி பழக்கங்கள், முறைகள் பொதுமக்களுக்கு மிகவும் கடினம்) அவ்வப்போது என் பங்களிப்புகளைக் கவனித்து, உடனடியாக பேச்சுப் பக்கத்தில் தெரிவித்து என் செயல்பாடுகளில் முன்னேற்றம் காண உதவியிருக்கிறார். தற்போது கட்டுரை உருவாக்கம், படிம இணைப்பு, புதுப் பயனர் வரவேற்பு, என விதவிதமாக செய்யக் கற்றிருக்கிறேன். இதை இங்கே சொல்வதற்கு காரணம், சண்முகம் என்னை கண்காணிக்காமல், உதவாமல் விட்டிருந்தால் இவ்வளவு பங்களிப்புகள் கிடைத்திருக்காது அவ்வகையில் இப்பதக்கத்தை சண்முகத்திற்கு கொடுத்து மீண்டும் பெற்றுக் கொள்கிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:48, 17 அக்டோபர் 2012 (UTC)
- விருப்பம் நீங்கள் சுட்டியுள்ளது ஒரு முக்கியமான நோக்கு, தமிழ்க்குரிசில். ஒவ்வொரு பயனரின் தொடக்கக் காலத்திலும் முழு நேரமும் அவர்களைக் கவனித்து விக்கி நடைமுறைகளைப் புரிய வைப்பதன் மூலம் அவர்களை நெடுநாள் பங்களிப்பாளர்களாக மாற்ற இயலும். முன்பு சோடாபாட்டில் இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்தார். இப்போது சண்முகம் இதனைச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். நாளை உங்களைப் போன்றோர் அந்த இடத்தை நிரப்ப வேண்டும் :)--இரவி (பேச்சு) 14:54, 26 அக்டோபர் 2012 (UTC)
அதற்கென்ன! சிறப்பாக செய்துடுவோம் :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:00, 30 அக்டோபர் 2012 (UTC)
ஓர் உதவி கோரி....
தொகுஓர் உதவி கோரி.நான் தொகுத்த காவேரி(எழுத்தாளர்)பக்கத்திலிருந்து முறையற்று நுழைந்த எவரோ ஒருவர் படத்தை நீக்கிவிட நான் மறுபடி சேர்த்திருக்கிறேன்.காப்புரிமைக்கட்டுப்பாடு அற்ற அந்தப்படம் பொதுத்தளத்திலும் உள்ளதாலேயே பயன்படுத்தி உள்ளேன். தகவல்கள் அனைத்தும் எழுத்தாளரிடமிருந்து பெறப்பட்டவை. எந்தப்பிழையும் அற்றவை.அதை மேலும் செம்மையாக்கி உதவக்கோருகிறேன்.பிறந்த ஆண்டு,பெயர்,மாவட்டம்,ஊர் ஆகியவற்றையும் அதற்குள்ளேயே சேர்த்தும் உதவுக. கயல்கண்ணி
எம்.ஏ.சுசீலா பக்கத்தை முதலில் நான்தான் எழுதினேன்.பின்பு நீங்கள் செம்மை செய்திருக்கிறீர்களென அறிந்தேன்.அதிலுள்ள புகைப்படத்தை விட வேறுபடம் சேர்த்தால் சிறப்பாக இருக்குமென அவர்களுமே நினைக்கிறார்கள்.எனவே அதைச் சேர்க்கவும்,பிறந்த ஆண்டு,பெயர்,மாவட்டம்,ஊர் ஆகியவற்றையும் அதற்குள்ளேயே சேர்த்தும் உதவுக. படங்கள்; எம்,ஏ.சுசீலா,எம்.ஏ.சுசீலா இப்படம் பொதுவெளியில் நிறையப்பயன்படுத்தப்பட்டிருப்பதால் இதை விக்கியில் சேர்ப்பதில் தவறில்லை. கயல்கண்ணி
பொன்னியின் செல்வன் கட்டுரைப் பெயர் நகர்த்தல்
தொகுவணக்கம் நண்பரே, நீங்கள் பொதுமைக்கு என்று அநிருத்தர் கட்டுரையை மாற்றியமைக் கண்டேன். அதற்குள் செம்பியன் மாதேவி(கதைமாந்தர்) என்று தவறுதலாக கட்டுரையை தொடங்கிவிட்டேன். இக்கட்டுரைப் பெயரையும் இடைவெளிவிட்டு மாற்றிதரவும். மேலும்
- சின்னப் பழுவேட்டரையர் - காலாந்த கண்டர் (கதைமாந்தர்)
- பெரிய பழுவேட்டரையர் - கண்டன் அமுதனார் (கதைமாந்தர்)
எனவும் அருள்கூர்ந்து பெயர்மாற்றமோ, கட்டுரை நகர்த்தலோ செய்து தரவும். மிக்க நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:44, 1 அக்டோபர் 2012 (UTC)
வணக்கம் சகோதரன், புகுபதிகையில் இருக்கும் யாரும் (நீங்களும் நானும் உட்பட) கட்டுரையை நகர்த்தலாம். தவறுக்கு வருந்தாதீர். இதை உங்கள் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம் என்று நினைத்து மறந்தேன். நீங்களே தலைப்பை நகர்த்த, கட்டுரையின் மேலே உள்ள தொகு என்பதற்கு அருகிலுள்ள கீழ் நோக்கிய அம்புகுறியை சொடுக்கினால், நகர்த்தவும் என்று வரும். அதை சொடுக்குக. நகர்த்தல் பக்கத்தில் புதிய தலைப்பை இடுங்கள். நீங்களே நகர்த்திப் பாருங்களேன். முடிந்தது :) - பயனர்:தமிழ்க்குரிசில்
- மிக்க நன்றி நண்பரே. சிறப்பாகவும் எளிமையாகவும் விளக்கம் கொடுத்து என்னையும் திருத்தம் செய்யும் அளவிற்கு உயர்த்திவிட்டீர்கள். நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:46, 1 அக்டோபர் 2012 (UTC)
கட்டுரையாக்கத் தூண்டல்
தொகு- வணக்கம் தமிழ்க்குரிசில். நன்றியெல்லம் எதற்கு? நாம் அனைவருமே தமிழ் விக்கிக்காகப் பாடுபடுபவர்களே. பழந்தமிழ் இசை கட்டுரை உருவாக்கத் தூண்டல் நீங்கள் தானே. எனவே உங்களுக்கே நன்றி கூற வேண்டும். இக்கட்டுரை இன்னும் ஓரிரு நாள்களில் முழுமையாகிவிடும். படித்துவிட்டு தங்கள் கருத்துகளைக் கூறவும். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:05, 5 அக்டோபர் 2012 (UTC)
விதை விதைப்பது எளிது! அதை கண்ணுங் கருத்துமாக பாதுகாத்து நீரூற்றி வளர்த்தால்தானே மரமாகி பயன்தரும்! அந்த வகையில், கட்டுரைகளில் தரம் பேணி, கண்காணித்து, உரை திருத்தி, மேம்படுத்திய உங்களின் கடுமையான உழைப்பிற்குத் தலைவணங்கியே நன்றி தெரிவித்தேன். :) தமிழ்க்குரிசில்
- வணக்கம் தமிழ்க்குரிசில் பழந்தமிழ் இசை கட்டுரை என்னளவில் நிறைவுற்றது. அதனை உரை திருத்த வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். மேலும் ஏதேனும் செய்திகள் விடுபட்டுள்ளனவா என்பதையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:15, 8 அக்டோபர் 2012 (UTC) நன்றி!
பிரேம் லோகநாதன் வேண்டுகோள்
தொகுsir, i come to understand that, you called me for doing something at wiki, nice to meet you, in http://ta.wikipedia.org/s/10cy the nayaka doubts will be clarified by the following websites, who are all nayaka's clan and who was been the king and emperor of the nation in the earlier days etc., i will also contribute with you in my lessor time, to prepare the article,பயனர் பேச்சு:Premloganathan. I requested you people try to read full website and other references, part or portion of reading will not be good for argument about a topic. now you can see the reference web sites: [1] [2]
மொழிபெயர்ப்பு அறிவிப்பு: FDC portal/Proposals/CentralNotice2012
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் FDC portal/Proposals/CentralNotice2012 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-10-15
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 08:07, 14 அக்டோபர் 2012 (UTC)விருத்தாச்சலம் விருத்தகிரிஸ்வரர் கோயில் கட்டுரை குறித்து
தொகுவணக்கம் தமிழ்குரிசில்... விருத்தாச்சலம் விருத்தகிரிஸ்வரர் கோயில் கட்டுரை குறித்தான உங்கள் கருத்திற்கு அந்தக்கட்டுரையின் பேச்சு பக்கத்திலேயே பதில்/பின்னூட்டம் அளித்துள்ளேன். தங்கள் கருத்திற்கு நன்றி. அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 06:02, 16 அக்டோபர் 2012 (UTC) மறுமொழியிட்டுள்ளேன். பிறர் பதிலுக்குக் காத்திருப்போம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:48, 17 அக்டோபர் 2012 (UTC)
சான்று சேர்த்தல்
தொகுமிக்க நன்றி நண்பரே, நானும் இங்கு சாதியினை பற்றி பேச வரவில்லை, நானும் ஒரு பேராசிரியர், மேலாண்மை பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிரிகின்றேன், தற்பொழுது நாயகர்களை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கின்றேன், இன்னும் வலுவான அதரங்களை தேடுகின்றேன். நன்றி, மீண்டும் சந்திப்போம். --Premloganathan (பேச்சு) 13:41, 19 அக்டோபர் 2012 (UTC)
நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதுங்கள். ஆனால் அவை உண்மையாகவும், ஆதாரங்களுடனும் இருக்க வேண்டியது அவசியம். எப்போது உதவி தேவை என்றாலும், எது தொடர்பான உதவியென்றாலும் கேளுங்களேன். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:46, 19 அக்டோபர் 2012 (UTC)
பதக்கம்
தொகுமரியாதை மிக்கவர் பதக்கம் | ||
என்ன ஒரு நளினம்... அனைவரிடமும் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்ளும் ஒரு அன்பரைக் கண்டு வியக்கிறேன்! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:28, 24 அக்டோபர் 2012 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
வாழ்த்துக்கள்! பொருத்தமான பதக்கம்! சமயோசிதமாக உரையாடும் உங்கள் பண்பு விவேகமானது! --Anton (பேச்சு) 13:33, 24 அக்டோபர் 2012 (UTC)
- பதக்கம் வழங்கிப் பாரட்டியமைக்கு நன்றி! மேலும் என்னை மெருகேற்றிக் கொள்ள உதவுங்கள். உங்கள் அன்பிற்கு மிக்க நன்றிகள் சிவகுருநாதன், அன்றன் :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:45, 24 அக்டோபர் 2012 (UTC)
- விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:23, 25 அக்டோபர் 2012 (UTC)
- விருப்பம் இப்படி ஒரு பதக்கத்தைப் பெறும் முதல் பயனர் என்று நினைக்கிறேன். வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 17:25, 25 அக்டோபர் 2012 (UTC)
வாழ்த்துகளுக்கு நன்றி பார்வதி, இரவி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:08, 26 அக்டோபர் 2012 (UTC)
ஐயம்.
தொகுதமிழ்குரிசில் is online எப்படி பயன்படுத்துவது? இப்ப கூகுள் அஞ்சலின் அரட்டைச் சாளரத்திற்கு வர இயலுமா?--த♥ உழவன் +உரை.. 06:46, 29 அக்டோபர் 2012 (UTC)
சண்முகம் கூறிய யோசனையை செயற்படுத்தினேன். is onlin என்பது சும்மா தான், வேண்டுமென்றால் பிற வற்றை சொடுக்கிக் கொள்ளலாம். நீங்கள் is offline என்பதைச் சொடுக்கினாலும், நான் ஆப்லைன் தான்! விவரங்களுக்கு, பயனர்:தமிழ்க்குரிசில்/vector.js பக்கத்தைப் பார்க்கவும். கூகுள் அரட்டையில் உள்ளேன். tamilanban98@gmail.com :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:57, 29 அக்டோபர் 2012 (UTC)
நிரல் வரிகளின் மூலம் பயனர்:Shanmugamp7/status.js பக்கத்தில் உள்ளது. வேண்டுமென்றால், உங்கள் பக்கத்திற்கு நகலெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மேலே வரக்கூடிய ஆனலைன், பிசி, போன்ற ஏதாவதொன்றை சொடுக்கினால், அதைக் காட்டும். (தவறாகக் கூறிவிட்டேன். அவரவர நிலையை அவரவரே மாற்றிக் கொள்ள முடியும்.) நன்றி! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:09, 29 அக்டோபர் 2012 (UTC)
- நன்றி. நண்பரே! அடிக்கடி மின்தடை வருவதால் உங்களுடன் இணையத்தில் தொடர்பு கொள்ள இயலவில்லை. நீங்கள் இணையத்தில் வரும் நேரத்தில் கூகுள் மின்னஞ்சலில் உங்கள் நிலையை தெரிவிக்கக் கோருகிறேன். விக்சனரிக்கான ஒரு திட்டமொன்றை உங்களிடம் பகிர்ந்து, உங்களின் ஒத்துழைப்பை வாரம் ஒரு அரைமணிநேரம் எதிர்பார்க்கிறேன். சந்திப்போம்.வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 03:44, 30 அக்டோபர் 2012 (UTC)
நிச்சயமாக உழவரே! நான் ஆர்வமாய் உள்ளேன். :) இன்றும் நாளையும் பல்கலை செய்முறைத் தேர்வுகள். உள்ளன, ஆகவே, அடுத்த இரண்டு வாரங்களுக்கு விடுமுறை என்பதால், இணைந்து செய்ய ஆவலாய் இருக்கிறேன். நிறைய நேரமிருக்கும். நன்றி! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:52, 30 அக்டோபர் 2012 (UTC)
உருசிய மொழி, உக்ரைன் மொழி
தொகுவணக்கம். உக்ரைனில் உருசிய மொழிக் கட்டுரையில் அம்மொழிகள் கொண்ட படம் இணைப்பது நல்லது என்ற கருத்தை இட்டிருந்தீர்கள். உருசிய விக்கிப்பீடியா மற்றும் உக்ரைனிய விக்கிப்பீடியா கட்டுரைகளில் தகவற்பெட்டியில் தலைப்பு அந்தந்த மொழிகளில் உள்ளன. தங்கள் நோக்கத்திற்கு உதவுமா என்று பார்க்கவும்.--Booradleyp (பேச்சு) 13:52, 19 நவம்பர் 2012 (UTC)
- தங்கள் கருத்திற்கு நன்றி! தற்போது கணினியில், கைபேசி வழி இணையத்தைப் பயன்படுத்துகிறேன். 12 மெகாபைட்டுகள் தான் மொத்தமே. ஆகவே, படங்களை மறைத்துவிட்டு பக்கங்களைத் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். அதனால்தான் பதிவேற்றிவிட்டு சென்றுவிடுவேன். திருத்தங்களைக் கூட் நீங்கள் தான் செய்கிறீர்கள்! :) உங்கள் கருத்தை செயற்படுத்திப் பாருங்கள்.
அக்கருத்தின் காரணமே, படிப்பவர்கள் அம்மொழிகளைப் பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவற்றைப் பற்றிய பொதுத்தகவலை இடையிடையே அக்கட்டுரையில் சேர்க்க விரும்பினேன். அதன் ஒரு பகுதியாக படத்தை இணைக்கக் கோரியிருந்தேன். செய்ய்ங்கள் மாற்றம் தேவைப்பட்டால் பின்னர் மாற்றிக் கொள்வோம். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:26, 19 நவம்பர் 2012 (UTC)
அன்புக்கு நன்றி
தொகுஅன்பின் மிக்க தோழர் தமிழ்க்குரிசில் அவர்களுக்கு வணக்கம். தங்களின் இனிய பாராட்டுக் கிடைத்து மகிழ்ந்தேன். தாங்கள் புகழும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிதாய்ச் செய்து விடவில்லை. எல்லாப் புகழும் விக்கிக்கே சேரும். இயன்ற அளவு பதிவு செய்திருக்கிறேன். நம்மையெல்லாம் ஒருங்கிணைக்கும் விக்கிதளத்திற்கு நமது பாராட்டும் நன்றிகளும் சென்று சேரட்டும். தொடர்வோம். நன்றிகள் பலப்பல.
அன்பு வணக்கங்களுடன் அருணன்கபிலன்
Ideas on Ukrainian/Belarusian/Ruthenian articles
தொகுHi,
Thank you for writing to me and for working on Ukrainian/Russian topic articles and for offering to create more. If you would like, please consider creating the following articles:
- uk:Українці (en:Ukrainians)
- uk:Українофобія (en:Anti-Ukrainian sentiment)
- uk:Українофільство (en:Anti-Ukrainian sentiment)
- uk:Українізація (en:Ukrainization)
- uk:Білорусизація (en:Belarusization)
- uk:Українська Народна Республіка (en:Ukrainian People's Republic)
- uk:Гетьманщина (en:Cossack Hetmanate)
- uk:Хмельниччина (en:Khmelnytsky Uprising)
- uk:Українська революція (en:Ukrainian War of Independence)
- uk:Акт Злуки (en:Act Zluky)
- uk:Акт проголошення незалежності України (en:Declaration of Independence of Ukraine)
- uk:Київська Русь (en:Kievan Rus')
- uk:Русини (en:Ruthenians)
- uk:Релігія в Україні (en:Religion in Ukraine)
If you could expand this article: உக்குரேனிய மொழி, that would be good as well.
Hope you enjoy working on these articles and if you ever need any more ideas, just write to me on my English page. Thanks! --Sanya3 (பேச்சு) 00:46, 22 நவம்பர் 2012 (UTC)
நன்றி
தொகுஎன் செயலை பாராட்டி, பதக்கம் வழங்கி, ஊக்குவிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி ..........கருப்பன்.முனியப்பன்.........Muniyankaruppan (பேச்சு) 18:50, 30 நவம்பர் 2012 (UTC)
இலங்கைத் தமிழர்
தொகுபார்க்கவும்:பேச்சு:இலங்கைத் தெலுங்கர்--Booradleyp (பேச்சு) 16:20, 2 திசம்பர் 2012 (UTC)
தமிழில் டி-சட்டை
தொகு“தமிழில் எழுதப்பட்ட சட்டை விற்கும் இடம் அறிந்தால் எனக்கு சொல்லுங்கள்.:) ” என்பதைப் படித்தேன். சென்னையில் இருக்கிறீர்களா? இவர்கள் சிட்டி செண்டர் பேரங்காடியில் கடை போட்டிருக்கிறார்கள். --சோடாபாட்டில்உரையாடுக 13:01, 4 திசம்பர் 2012 (UTC)
நன்றி சோடா! விரைவில் சென்று வாங்கிவிடுவேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:07, 11 திசம்பர் 2012 (UTC)
நன்றி
தொகுவணக்கம் தமிழ்க்குரிசில், தங்களது வரவேற்பிற்கு எமது நன்றி! Mr.Falcon (பேச்சு)
- விருப்பம் :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 02:59, 11 திசம்பர் 2012 (UTC)
தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு
தொகுஇம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும். --Natkeeran (பேச்சு) 19:49, 26 திசம்பர் 2012 (UTC)
- அழைப்பிற்கு நன்றி நற்கீரன். :)
நேரில் கலந்து கொள்வது கடினம் என்றாலும், நிகழ்ச்சி நடைபெறும் ஒரு வாரம் முழுவதும் இணையவழியிலான தன்னார்வ உதவிகளை வழங்க முடியும். இங்கிருந்து கொண்டே கட்டுரையை சமர்ப்பிக்க முடியும் என்றால் மகிழ்வேன். என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று உரிய எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினால் நலம். ஆவலுடன் பங்கேற்பேன். மறுமொழியிடுங்கள் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:14, 30 திசம்பர் 2012 (UTC)
மலேசியாவில் ஒரே விக்கிபீடியர் மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
தொகுமலேசியாவைப்பற்றி 128 கட்டுரைகள். மலேசியாவிற்கு ஓர் இடம் கொடுங்கள். எனக்கு உதவி செய்ய வேண்டாம். மலேசியாவில் இருக்கும் 22 இலட்சம் தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதி. கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நான் எழுதி கொண்டுதான் இருப்பேன். ஆளை விடுங்கள்.--ksmuthukrishnan 15:21, 12 சனவரி 2013 (UTC)
நன்றி
தொகுநன்றி | ||
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:12, 14 சனவரி 2013 (UTC) |
நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:26, 14 சனவரி 2013 (UTC)
+1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:54, 15 சனவரி 2013 (UTC)
இன்றைய உதவிக்குறிப்பு
தொகுவிக்கிப்பீடியா:இன்றைய உதவிக்குறிப்பு பக்கம் நீண்ட நாட்களாக இற்றைப்படுத்தப்படாமல் இருப்பதாகத் தோன்றுகிறது... இற்றைப்படுத்தி உதவவும். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:33, 24 சனவரி 2013 (UTC)
- தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் பார்வதி. கட்டுரைகளை எழுதவும் திருத்தவுமே நேரம் போதவில்லை. நாள்தோறும் இற்றைப்படுத்தப்பட வேண்டும் என்பதை அறிந்துள்ளேன். எனினும் நேரமின்மையாலும், ஆர்வமின்மையாலும் தொடர முடியவில்லை. தகுந்த ஆலோசனைகளை வழங்கினால் தொடர்ந்து செயற்பட அணியமாய் இருக்கிறேன். கனிவான் வேண்டுகோளுக்கு நன்றி-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:47, 24 சனவரி 2013 (UTC)
லட்சுமி (2013 திரைப்படம்)
தொகுவணக்கம். இக்கட்டுரையில் படிமம் இணைத்துள்ளேன். (கன்னடம் என்பதால்) அது சரியானதா என்று பார்க்கவும்.--Booradleyp (பேச்சு) 03:53, 27 சனவரி 2013 (UTC)
- நீங்கள் இணைத்துள்ள படிமம் சரியானதே! lakshmikannadmovie.com என்ற தளம் உறுதி செய்கிறது. நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:12, 27 சனவரி 2013 (UTC)
விருப்பம்--Booradleyp (பேச்சு) 14:46, 27 சனவரி 2013 (UTC)
முதற்பக்க அறிமுகம் குறித்த நினைவூட்டல்
தொகுதள அறிவிப்புகளில் பங்களிப்பாளர் அறிமுகங்களைத் தரும் இவ்வேளையில், உங்கள் அறிமுகத்தையும் தந்தால் நன்றாக இருக்கும். புதிய மூக்குக் கண்ணாடியுடன் ஒரு நல்ல படத்தை எதிர்பார்க்கிறேன் :)--இரவி (பேச்சு) 16:40, 28 சனவரி 2013 (UTC) விருப்பம்--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 18:55, 30 சனவரி 2013 (UTC)
- விருப்பம், சரி ரவி. என்னைப் பற்றிய ஓரிரு வரிகளை சேர்க்கிறேன். பூ(?!) என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். என் படம் கிட்டும்வரை பூவின் படத்தை வைக்க முடியுமா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:23, 30 சனவரி 2013 (UTC)
- அறிமுகத்துக்கு நன்றி, தமிழ்க்குரிசில். நீங்கள் தொடங்கிய கட்டுரைகள் உள்ளிட்ட சில விவரங்களைத் தந்து இன்னும் ஓரிரு வரிகள் சேர்க்கலாம். விக்கிப்பீடியாவில் புனைப்பெயர் வைத்துக் கொள்வது போல் புனைவான ஒரு அவதாரப் படத்தையும் வைத்துக் கொள்ளலாம். ஆனால், விக்கிப்பீடியர் அறிமுகத்தில் உண்மையான ஒளிப்படங்களை இடுவதன் நோக்கமே ஒரு சமூக / முகம் பார்க்கும் உணர்வைத் தந்து மேலும் பலரைப்பங்களிக்கத் தூண்டுவதே. அதற்கு அவதாரப் படத்தை இடுவது உதவாது என்று நினைக்கிறேன். உங்கள் படம் கிடைக்குவரை அறிமுக உரை மட்டுமே போதுமானதாக இருக்கும்--இரவி (பேச்சு) 05:56, 2 பெப்ரவரி 2013 (UTC)
- படம் கிடைச்சிடுச்சா?--இரவி (பேச்சு) 16:19, 25 மார்ச் 2013 (UTC)
- மன்னிக்கவும், நாளைக்குள் எப்படியும் ஒரு படத்தை பதிவேற்றி விடுகிறேன்.
- பொட்டி வந்துடுச்சா :) --இரவி (பேச்சு) 19:51, 10 ஏப்ரல் 2013 (UTC)
- தமிழ்க்குரிசில், மீண்டும் முதற்பக்க அறிமுகங்கள் வர இருப்பதால் ஒரு நினைவூட்டல் - --இரவி (பேச்சு) 08:49, 2 ஆகத்து 2014 (UTC)
- பொட்டி வந்துடுச்சா :) --இரவி (பேச்சு) 19:51, 10 ஏப்ரல் 2013 (UTC)
- அறிமுகத்துக்கு நன்றி, தமிழ்க்குரிசில். நீங்கள் தொடங்கிய கட்டுரைகள் உள்ளிட்ட சில விவரங்களைத் தந்து இன்னும் ஓரிரு வரிகள் சேர்க்கலாம். விக்கிப்பீடியாவில் புனைப்பெயர் வைத்துக் கொள்வது போல் புனைவான ஒரு அவதாரப் படத்தையும் வைத்துக் கொள்ளலாம். ஆனால், விக்கிப்பீடியர் அறிமுகத்தில் உண்மையான ஒளிப்படங்களை இடுவதன் நோக்கமே ஒரு சமூக / முகம் பார்க்கும் உணர்வைத் தந்து மேலும் பலரைப்பங்களிக்கத் தூண்டுவதே. அதற்கு அவதாரப் படத்தை இடுவது உதவாது என்று நினைக்கிறேன். உங்கள் படம் கிடைக்குவரை அறிமுக உரை மட்டுமே போதுமானதாக இருக்கும்--இரவி (பேச்சு) 05:56, 2 பெப்ரவரி 2013 (UTC)
முதற்பக்கக் கட்டுரைக்கான பரிந்துரைகள்
தொகுவணக்கம். நீங்கள் பங்களித்த சிறந்த கட்டுரை அல்லது நீங்கள் சிறந்த கட்டுரையாகக் கருதும் கட்டுரையை முதல் பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்காக இப்பக்கத்தில் தங்களின் பரிந்துரைகள் வேண்டப்படுகின்றன.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:53, 31 சனவரி 2013 (UTC)
மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்
தொகுவணக்கம், தமிழ்க்குரிசில்/தொகுப்பு 02!
நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 09:09, 2 பெப்ரவரி 2013 (UTC)
Chikkaballapur -மொழிபெயர்ப்பு
தொகுவணக்கம். நந்தி மலை கட்டுரையில் இந்த ஊர் சிக்கபள்பூர் என தரப்பட்டுள்ளது. நீங்கள் சிக்கபல்லபுரா என்று தந்துள்ளீர்கள். இரண்டில் எது சரியானது என்பதைத் தெரிவித்தால் வேண்டிய மாற்றத்தைச் செய்யலாம். (எனக்கு கர்நாடகம் பற்றி எதுவும் தெரியாது)--Booradleyp (பேச்சு) 15:06, 2 பெப்ரவரி 2013 (UTC)
எனக்கும் குழப்பம் உள்ளது. கர்நாடக மாநில கட்டுரைகள் உருவாக்கும்போது நான் பயன்படுத்திய பெயர்களும் ஏற்கனவே உள்ள பெயர்களும் வேறுபடுகின்றன. நானும் வேறொரு கட்டுரையில் படித்ததையே எழுதினேன். :( எப்படியோ எல்லாவற்றையும் தமிழ் ஒலிப்பு முறைக்கேற்ப எழுதினால் சரிதான். விரைவில் திருத்த முற்படுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:42, 2 பெப்ரவரி 2013 (UTC)
- அம்மையே, அட்சரமுக கருவி ಚಿಕ್ಕಬಳ್ಳಾಪುರ என்ற கன்னட பெயரை சிக்கபள்ளபுர என்கிறது. என் கன்னட நண்பன் கன்னட பெயர்கள் ம் என்று முடியாது என்றான். எனவே, சிக்கபள்ளபுரம், சிக்கபல்லாபூர் என வழிமாற்றுகளுடன், கட்டுரையை சிக்கபள்ளாபூர் என்ற தலைப்பில் வைக்கலாம். - தமிழ்க்குரிசில்
இரு கட்டுரைகள்
தொகுநைடாசிரி மாகாணம், நய்டாசிரீ மாகாணம் என ஒரே மாகாணத்திற்கு இரு கட்டுரைகள் உருவாக்கி விட்டீர்கள். ஒன்றிணைத்து விடுங்கள்.--Booradleyp (பேச்சு) 17:38, 17 பெப்ரவரி 2013 (UTC)
- சுட்டிகாட்டியமைக்கு நன்றி! இணைத்து விட்டேன். பிஜி மாகாண கட்டுரைகளை கணினியில் சேமித்து கொஞ்சம் கொஞ்சமாக பதிவேற்றியதன் வினை! தவறுதலாக ஒரே கட்டுரையை இரு முறை சேமித்துவிட்டேன். ஒரு கட்டுரையை பதிவேற்றாமலேயே அழித்துவிட்டேன். :(
பிஜி தொடர்பான கட்டுரைகள் சில வரிகளே உள்ளன. இவற்றை நீக்கக் கோர வேண்டாம். கூடுதல் தகவல்கள் கிடைத்தவுடன் சேர்க்கிறேன். பிஜியில் இன்னமும் தமிழ் படிக்கும் ஒன்றிரண்டு தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பது தெரியவந்தால், பிஜி தொடர்பான அனைத்து கட்டுரைகளையும் நாள்தோறும் பிஜி செய்திகளைப் படித்து கட்டுரையாக்க ஆர்வம் கொண்டுள்ளேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:19, 18 பெப்ரவரி 2013 (UTC)
பதக்கம்
தொகுசிறப்புப் பதக்கம் | ||
தமிழ்க்குரிசில், உங்கள் தொடர் பங்களிப்புகளைக் காணும் போது, தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்கிறீர்கள் ! உங்கள் தாய் இப்பொழுதே ஈன்ற பொழுதின் பெரிதுவக்கலாம் ! தொடர்க உங்கள் சீரிய பங்களிப்பு ! இரவி (பேச்சு) 14:58, 18 பெப்ரவரி 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
^^ விருப்பம் --எஸ்ஸார் (பேச்சு) 13:24, 20 பெப்ரவரி 2013 (UTC)
தமிழைப் பேணும் தாங்கள் தங்கள் கண்களையும் பேணுங்கள்.மருத்துவர் ஆலோசனைப்படி செயல்படுங்கள். நலமே விரும்பும், அருண்தாணுமாலயன்.
- நன்றி ரவ், எஸ்ஸார், தாணுமாலயன் அவர்களே!! என்னால் இயன்றவரை சிறப்புக் கட்டுரைகளாக எழுத முயல்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:56, 7 மார்ச் 2013 (UTC)
படத்தின் பெயர் மாற்றம்
தொகுதோழர் உதயம் NH4 (திரைப்படம்) தொடர்பாக பெயர் மாற்றம் கோரியுள்ளீர்கள் என்ன தலைப்பிற்கு மாட்டவேண்டும் என்பதை கூறினால் உதவியாக இருக்கும். நன்றி!
ஹசன்
தொகுவணக்கம் தமிழ்க்குரிசில், பேச்சு:ஹசன் பார்க்கவும்.--Booradleyp (பேச்சு) 05:38, 11 மார்ச் 2013 (UTC)
ஐயம்
தொகுமு. கோபி சரபோஜி என்ற கட்டுரை ஒன்று மார்ச் 18 தேதி புகுபதிகை செய்யாத பயனரால் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று மு. கோபி சரபோஜி என்ற புதிய பயனர் பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. கட்டுரை உருவாக்கியது இப்பயனரா அல்லது வேறொருவரா என்று தெரிந்து கொள்வது எப்படி? பெரிதாக எதுவும் விதிமுறை மீறல் இல்லையென்றால் விட்டுவிடலாம்.--Booradleyp (பேச்சு) 08:07, 22 மார்ச் 2013 (UTC)
- இதற்கு முன்பும் பல முறை கட்டுரை அனானியால் எழுதப்பட்டு, பின்னர் அதே பெயரில் கணக்கு துவங்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். எனினும், எழுத்தாளர்கள் பலரைப் பற்றிய ஆதாரங்கள் இணைய வழியில் கிடைக்காது என்பதால் அக்கட்டுரையை நீக்கி விட முடியாதே. கட்டுரையின் குறிப்பிடுதன்மை குறித்து ஆராய்ந்து பார்ப்போம். தேவை இல்லயென்றால் நீக்குங்கள். ஐ.பியை வைத்து கணக்கை கண்டுபிடிக்கும் வழியை சோடா அறிவாராம், என்னிடம் கூறினார். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு)
- நன்றி, பொறுத்திருக்கலாம்.--Booradleyp (பேச்சு) 13:08, 22 மார்ச் 2013 (UTC)
புதுப்பயனர் அரவணைப்பு
தொகுதமிழ்க்குரிசில், ஒரு புதிய பயனரை அரவணைத்து வழிகாட்டுவது 1000 கட்டுரைகளை உருவாக்குவது சமம். அந்த வகையில், புதுப்பயனர்கள் தொடர்பாக நீங்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகள் மிகவும் பாராட்டுக்குரியன. சில நாட்கள் முன்பு தான் ஒரு பதக்கம் தந்தேன் என்பதால் மீண்டும் சில நாட்கள் கழித்து அடுத்த பதக்கம் தருகிறேன் :) நிற்க ! உராய்வு அறிவியல் கட்டுரையில் விரைவு நீக்கல் வார்ப்புரு இட்டிருந்தீர்கள். ஒரு புதுப்பயனர் முதல் நாள் ஒன்றை எழுதிவிட்டு அடுத்த நாள் இந்த வார்ப்புருவைப் பார்க்கும் போது திகைக்கக்கூடும். எனவே, புதுப்பயனர்களின் கட்டுரையில் இவ்வார்ப்புருவை இடுவதைத் தவிர்க்கலாம். குறிப்பாக, இது போன்ற தெளிவான தலைப்புகள், ஆங்கில விக்கியை அடிப்படையாகக் கொண்டு எழுதக்கூடியவற்றில் இட வேண்டாம். ஆங்கில விக்கியில் இருந்து வெளியிணைப்புகள், நூற்பட்டியல், விக்கியிடை இணைப்புகள், படிமங்கள் போன்றவற்றை இணைத்து மெருகேற்றினால் புதுப்பயனருக்கும் ஒரு ஈடுபாடு பிறக்கும். முதல் நாள் சிறு கட்டுரையாக எழுதிவிட்டு அடுத்த நாள் வந்து பார்த்தால் மேலும் பல அரிய தகலவல்கள் சேர்க்கப்பட்டிருந்ததே விக்கியின் பால் தன்னை ஈடுபாடு கொள்ளச் செய்ததாக செங்கைப் பொதுவன் குறிப்பிடுவதுண்டு. நன்றி--இரவி (பேச்சு) 06:36, 24 மார்ச் 2013 (UTC)
- நன்றி இரவி,. tribology என்பதை tribiology என்று தவறாக பார்த்துவிட்டேன், பயாலஜிக்கும் உராய்வுக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றிற்று. ஆகவே, அவ்வாறு செய்தேன். (எல்லாம் அவசரம் தான்!! :) ) இனி கூடுதல் தகவல்களைச் சேர்க்கிறேன். நீங்கள் குறிப்பிட்டதற்கு என்னையும் (புதுப்பயனராக) எடுத்துக்காட்டாக கொள்ளலாம். சிந்தியர் என்ற கட்டுரையை புகுபதியாமல், புதியவராக எழுதிக் கொண்டிருக்கையில் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த பின்னரும் கட்டுரையில் கூடுதல் திருத்தங்கள் இருக்கக் கண்டேன். ஏற்கனவே இருந்த பயனர்கள் புதிய தகவல்கள் சேர்த்து என்னை உற்சாகம் ஊட்டியிருந்தனர். ஆச்சரியமாகவும் தூண்டுகோலாகவும் இருந்தது. இனி திருத்திக் கொள்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:07, 24 மார்ச் 2013 (UTC)
42/28
தொகுசிபி, தமிழ்நாட்டில் நிலவும் மின்தடைக்கும் தளராது பிப்ரவரி மாதத்தின் 28 நாட்களில் 42 கட்டுரைகளைத் தாங்கள் துவங்கியமை கண்டு மகிழ்கிறேன். நன்றி!--Karthi.dr (பேச்சு) 09:55, 30 மார்ச் 2013 (UTC)--Karthi.dr (பேச்சு) 09:55, 30 மார்ச் 2013 (UTC)
- விருப்பம் நன்றிகள் சார்!! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:05, 30 மார்ச் 2013 (UTC)
முதற்பக்கப் பரிந்துரைகள்
தொகுவணக்கம் தமிழ்க்குரிசில். தாங்கள் முதற்பக்கக் கட்டுரைக்காக பரிந்துரைத்த கட்டுரைகள் அருமை ஆனால் குறுங்கட்டுரை அளவிலேயே உள்ளன. எனவே அவற்றை தற்போது முதற்பக்கத்தில் காட்சிப்படுத்த இயலாதுள்ளது. அதனை கூட்டு முயற்சிப் பரிந்துரைகள் பக்கத்தில் இட்டால் மேம்படுத்த வாய்ப்புகள் கிட்டலாம். பின்னர் முதற்பக்கம் காட்சிப்படுத்தலாம். தங்கள் பரிந்துரைக்கு மிக்க நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:18, 30 மார்ச் 2013 (UTC)
- புரிந்துகொண்டேன், நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:19, 31 மார்ச் 2013 (UTC)
பிற மொழிகளின் இணைப்புகளை எவ்வாறு இடப்பக்கம் காட்டுவது?
தொகுநண்பரெ! பிற மொழிகளின் கட்டுரை இணைப்புகளை எவ்வாறு இந்த கட்டுரையில் இடப்பக்கம் காண்பிக்க வழிகாட்ட முடியுமா? மிக்க நன்றி. -- Raj.the.tora முனைவர் இராஜ் குமார் 07:56, 31 மார்ச் 2013 (UTC)
- வணக்கம் முனைவரே! நம்மில் பலர் கட்டுரைகளை ஆங்கிலத்தில் இருந்து எடுத்து தமிழாக்கம் செய்வோம். பின்னர் கட்டுரையில் ஆங்கில இணைப்பை வழங்குவோம். சிலர் வேற்று மொழிகளில் இருந்து மொழிபெயர்ப்பதும் உண்டு. இவ்வாறு இணைப்பதால் பிற மொழிகளில் இருந்து கூடுதல் தகவல்களை பின்னர் சேர்க்க உதவியாய் இருக்கும். :)
- பிற மொழி இணைப்புகளைச் சேர்க்க, கட்டுரையின் இறுதியில் [[xx:articlesname]] என்று இட வேண்டும். எ.காட்டாக, english கட்டுரை Chennai யை இணைக்க விரும்பினால், [[en:Chennai]] என்று இட வேண்டும். ar-arabic, bn-bengali, de-german, fr-french, gu-gujarati hi-hindi, kn-kannada, ml-malayalam என்று இரண்டு எழுத்துக் குறியீடுகளைப் பயன்படுத்துங்கள்., (அது தானாகவே இடப் பக்கத்தில் தோன்றும். நாம் கட்டுரையின் இறுதியில் இட்டால் போதும்) நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:04, 31 மார்ச் 2013 (UTC)
- பிறமொழி இணைப்புகளைச் சேர்ப்பதற்கு ஆங்கில விக்கிக் கட்டுரையில் உள்ள wikidata இணைப்பின் மூலம் wikidata தளத்திற்குச் சென்று தமிழ்ப் ப்க்கத்துக்கான இணைப்பைத் தரவேண்டும். இப்போது தானியங்கிகள எவையும் இவ்விணைப்புகளைச் செய்வதில்லை. நாமாகவே தான் இவ்வாறான இணைப்புகளைக் கொடுக்க வேண்டும். முன்னர் போல கட்டுரையின் இறுதியில் ஆங்கில விக்கிக்கான கட்டுரை இணைப்புத் தருவது தவறு.--Kanags \உரையாடுக 12:51, 16 ஏப்ரல் 2013 (UTC)
கட்டுரைகளுக்கு உள்ளிணைப்பு வழங்குதல் தொடர்பாக
தொகு- முதலில் நீங்கள் இணைப்பு கொடுக்க விரும்பும் ஆங்கிலக் கட்டுரையில் இடப்பக்கமுள்ள Edit links என்பதைs சொடுக்கவும்.
- அது அக்கட்டுரையின் விக்கி டேட்டா பக்கதிற்கு இட்டுச் செல்லும்.
- அங்கு கீழ் பகுதியில் {add} என்ற இணைப்பு இருக்கும்.
- அங்குள்ள முதல் கட்டத்தில் ta (தமிழ்) என தட்டச்சிடவும்.
- அடுத்த கட்டத்தில் தாங்கள் உருவாக்கிய தமிழ் கட்டுரையின் தலைப்பினை இடவும்.
- சேமிக்கவும். அது தானியக்கமாக இணைப்பாகிவிடும்.
(சில சமயங்களில் இவ்விணைப்பு உடனே இடப்பக்கம் தெரிவதில்லை தாமதமாகலாம்) நன்றி :)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:50, 18 ஏப்ரல் 2013 (UTC)
மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்
தொகுவணக்கம், தமிழ்க்குரிசில்/தொகுப்பு 02!
நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.