பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்/தொகுப்பு 01

வாருங்கள்!

வாருங்கள், தமிழ்க்குரிசில், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:58, 7 சூன் 2012 (UTC)Reply

பதிப்புரிமை

தொகு

வணக்கம் தமிழ்க்குரிசில், தொடர்ந்து கட்டுரை எழுதி வருவது கண்டு மகிழ்ச்சி. கட்டுரைகள் எழுதும் போது குறைந்தபட்சம் மூன்று வரிகளாவது இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் படங்களை பதிவேற்றும் போது தங்களின் சொந்த ஆக்கங்களை மட்டுமே சொந்த ஆக்கம் என பதிவேற்ற இயலும். இணையத்தில் இருந்து எடுத்தவற்றை நியாயமான பயன்பாடாக மட்டுமே பதிவேற்ற இயலும். பார்க்க விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும் மற்றும் விக்கிப்பீடியா:நியாயமான பயன்பாடு. மேலும் நீங்கள் பதிவேற்றிய படிமம்:தைரிய முத்துச்சாமி.jpg இந்த படத்தில் இருந்து crop செய்யப்பட்டுள்ளது. எனவே அது நீக்கப்படும். அதற்கு பதிலாக இந்த படத்தை (அதே காப்புரிமை விவரங்களுடன்) பயன்படுத்தலாம். மேலும் எதேனும் உதவி தேவைப்படின் தயங்காமல் கேட்கவும். தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள். நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 11:04, 23 சூன் 2012 (UTC)Reply

சான்று சேர்த்தல்

தொகு

பெரும்பாலான வேற்று மொழிக் கட்டுரைகளை மொழி பெயர்க்கும் போது, சான்று தேவை/மேற்கோள் தேவை போன்ற வார்ப்புருக்களை சேர்க்கிறீர்களே! அத்தகைய கட்டுரைகளுக்கு எப்படி சான்று வழங்க முடியும்? அப்படி முடியுமெனில் எப்படி வழங்குவது என விளக்கவும். அல்லது வேறு என்ன செய்யலாம் எனக் கூறவும். கேள்வி புரிந்திருந்தால் சான்று குறித்து பயனர் செய்ய வேண்டியவைகளை விரிவாக விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!−முன்நிற்கும் கருத்து தமிழ்க்குரிசில் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

பார்க்க விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் மற்றும் விக்கிப்பீடியா:சான்று சேர்க்கும் திட்டம். தங்கள் கேள்விகளை பக்கத்தின் இறுதியில் கேட்கவும்--சண்முகம்ப7 (பேச்சு) 16:43, 3 சூலை 2012 (UTC)Reply

நன்றி

தொகு

வணக்கம் சுப்பிரமணி ஐயா! நான் விக்கிப்பீடியாவிற்கு புதியவன். பிழைகளுக்கு மன்னிக்கவும். தங்களின் அறிவுரைகளுக்கு மிக்க நன்றி! தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரைகளின் எண்ணிக்கையை பெருக்குவது என் நோக்கமன்று, கட்டுரைகளின் தரமும் முக்கியம் என்பதையும் நன்கு அறிவேன். இந்த வாரத்தில் பிரான்சுத் தொடர்பான கட்டுரைகளை வழங்கலாம் என்றே மூவரின் பெயர்களில் தொடங்கினேன். போதிய தகவல்களை கிடைக்கவில்லை. தொகுத்தல் வர்லாற்றில் இக்கட்டுரைகள் இடம் பெறும், இதன் மூலம் பிறர் இதை தொகுப்பர் என்றே மூன்று வரிகளில் எழுதினேன். தகவல்களை திரட்டிய பின் இந்த குறுங்கட்டுரைகளை தொகுத்து வழங்குவேன். அவ்வப்போது இணைப்புகள், படங்கள், மற்றும் நான் செய்யும் தவறுகளையும் எழுத்துப் பிழைகளையும் சுட்டிக்காட்டித் திருத்துங்கள் ஐயா! மேலும் ஒவ்வொரு வாரமும் எனக்கென்று சில கட்டுரைகளை பரிந்துரையுங்கள், எந்த கட்டுரைகளை தொகுப்பது எனத் தெரியவில்லை. தற்போதைக்கு ஆதாரச் சான்றுகளை எப்படி இணைப்பது என விளக்கவும். நன்றி ஐயா! −முன்நிற்கும் கருத்து தமிழ்க்குரிசில் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

தாரளமாக எழுதுங்கள், கண்டிப்பாக special:recentchanges பக்கம் மூலம் அனைத்து விக்கிபீடியர்களும் பார்த்து திருத்துவர் (குறைந்த பட்சம் மூன்று வரிகளாவது இருக்க வேண்டும் என்பது கொள்கை). இந்த கட்டுரைதான் எழுத வேண்டும் என்றில்லை, எனினும் விக்கிப்பீடியா பேச்சு:முக்கிய கட்டுரைகள்-2/redlinks இங்குள்ள முக்கிய கட்டுரைகளை எழுதலாம். மேலும் இங்கு எவரையும் ஐயா என அழைப்பதில்லை, பெயர் சொல்லியே அழைக்கிறோம், எனவே ஐயா தேவையில்லை. உங்கள் கையொப்பத்தை இட ~~~~ அல்லது படிமம்:Signature button.pngஇதை பயன்படுத்தவும். பேச்சுப் பக்கத்தில் உரையாடும் போது, உங்கள் கருத்தின் இறுதியில் மறக்காமல் கையொப்பம் இடவும். உங்களைப் பற்றிய விவரங்களை பயனர்:தமிழ்க்குரிசில் இப்பக்கத்தில் தந்தால், உங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். சான்று சேர்க்க பார்க்க விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்--சண்முகம்ப7 (பேச்சு) 11:44, 23 சூன் 2012 (UTC)Reply
பகுப்பு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் கீழ் வரும் கட்டுரைகளை உரை திருத்தி உதவினால் நன்றாக இருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 21:14, 1 சூலை 2012 (UTC)Reply

பகுப்புகள்

தொகு

வணக்கம் தமிழ்க்குரிசில், பகுப்புகளைச் சேர்க்கும் போது [[பகுப்பு:பகுப்பின் பெயர்]] என்று ஒவ்வொரு பகுப்பிற்கும் தனித்தனியாக சேர்க்க வேண்டும். special:preferencesல் கருவிகள் என்பதில் விரைவுப் பகுப்பி என்பதை தேர்வு செய்து கொண்டால் எளிதாக பகுப்புகளை சேர்க்கலாம். பார்க்க விக்கிப்பீடியா:விரைவுப்பகுப்பி--சண்முகம்ப7 (பேச்சு) 05:28, 24 சூன் 2012 (UTC)Reply

படம்

தொகு

புதிய படங்களை இணைக்கும் போது கூகுளில் எடுத்து படத்திற்கு அனுமதியை என்னவென்று குறிப்பிடுவது.--தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:50, 24 சூன் 2012 (UTC)Reply

அது எந்தவிதமான படம் என்பதைப் பொறுத்து மாறுபடும். பகுப்பு:காப்புரிமை வார்ப்புருக்கள் இப்பகுப்பில் உள்ள வர்ப்புருக்களில் பொருத்தமானதை இட வேண்டும். பார்க்க விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்.. இணைப்பு கொடுத்தால் சரியாக கூற இயலும்.--சண்முகம்ப7 (பேச்சு) 05:55, 24 சூன் 2012 (UTC)Reply

படிமத்தை நான் விரும்பிய வடிவில் கட்டுரையில் தோன்றச் செய்ய என்ன செய்வது? அதாவது, படவணுக்களை மாற்றி பெரிய படத்தை சிறிய படமாக தோன்றச் செய்வது எப்படி? விளக்கவும். நன்றி!−முன்நிற்கும் கருத்து தமிழ்க்குரிசில் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

பார்க்க விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி--சண்முகம்ப7 (பேச்சு) 15:53, 3 சூலை 2012 (UTC)Reply

படம் குறித்து விளக்கவும்

தொகு

மீண்டும் மீண்டும் கேட்பதாக தவறாக நினைக்க வேண்டாம். படம் குறித்த விளக்கம் எனக்கு புரியவில்லை. எடுத்துக்காட்டாக, கூகிலில் தேடிக் கிடைத்த படங்களில், அரசு தளங்களில்(பிரான்சு செனட் தளத்தில் எடுத்ததற்கு என்ன அனுமதி குறிப்பிடுவது?) மற்றும் கூகிளில் தேடி எடுத்த படங்களில் நாளிதழ்களில் கிடைத்த படங்களுக்கு என்ன காப்புரிமை அளிப்பது? கேள்வி புரியவில்லையெனில், தாங்களே ஒரு உதாரணம் கூறி விளக்கவும். −முன்நிற்கும் கருத்து தமிழ்க்குரிசில் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

அந்த வலைத்தளத்தில் உள்ள காப்புரிமையைப் பொறுத்துதான் முடிவுசெய்ய இயலும். எடுத்துக்காட்டக இந்திய அரசின் வலைத்தளங்களில் உள்ள படங்களை இங்கு பதிவேற்ற இயலாது. ஏனெனில் அவற்றின் காப்புரிமையை இந்திய அரசே வைத்துள்ளது. en:Copyright_law_of_France இதன்படி There is no specific provision for government works or laws: the copyright is normally held by the relevant public body, எனவே அது செனட் சபையின் வலைத்தளத்தின் காப்புரிமையை பொறுத்தது. நாளிதழ் படங்கள் காப்புரிமை உடையவை. எனினும் அவற்றுக்கு இணையான பொது உரிமைப்படங்கள் இல்லையெனில் நியாயப்பயன்பாடாக பயன்படுத்தலாம். என்னென்னவற்றை நியாயப்பயன்பாடாக பயன்படுத்தலாம் என்பதற்கு விக்கிப்பீடியா:நியாயமான பயன்பாடு பக்கத்தை ஒரு முறை படித்து பார்க்கவும்.
இன்னும் புரியவில்லை எனில் படத்தை பதிவேற்றி அதன் மூலத்தையும் (எங்கிருந்து எடுத்தது என்ற விவரம்) குறிப்பிடுங்கள், நான் தேவையான காப்புரிமை வார்ப்புருவை இணைத்து விடுகிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 06:50, 24 சூன் 2012 (UTC)Reply

பிழை

தொகு

நான் உருவாக்கிய சமீபத்திய கட்டுரைகளில் <ref 0> tags but <references/> doesnt exist என வருகிறது. பிழையை திருத்தவும். ஒரு படம் திரையில் தோன்றவில்லை. அதையும் திருத்தவும். மேலும் குறுங்கட்டுரைகளை ஒரு கட்டுரையின் கீழ் கொண்டு வர முடியுமா? பிற மொழிப் பெயர்களில் சிறு குழப்பம் ஏற்படின் பக்க வழிமாற்றம் செய்வது எப்படி? என் பங்களிப்பில் உள்ள குறைகளைக் கூறி, எவற்றையெல்லாம் மேம்படுத்த முடியும் எனக் கூறுக. மேலும் இந்த பயனர் பக்கத்தில் உள்ளவற்றை நீக்கி விடலாம் தானே? −முன்நிற்கும் கருத்து தமிழ்க்குரிசில் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

<ref></ref> டேக் கட்டுரையில் இருந்தால், கட்டுரையின் இறுதியில் ==மேற்கோள்கள்== {{Reflist}} என்பதனை சேர்த்து விடவும். அந்த படம் ஆங்கில விக்கியில் உள்ளது இங்கு இல்லை, எனவே அங்கிருந்து உங்கள் கணினியில் சேமித்து பிறகு இங்கு பதிவேற்ற வேண்டும். பக்க வழிமாற்றம் செய்ய பார்க்க விக்கிப்பீடியா:வழிமாற்று.. இந்தப் பக்கம் உங்களுடைய பேச்சுப் பக்கம், இதை நீக்க தங்களுக்கு உரிமை உண்டு எனினும் பொதுவாக நாம் நீக்குவதில்லை. அதனை தொகுப்பாக சேமிக்கிறோம். இதுவே உங்கள் பயனர் பக்கம், இதில் உங்களைப் பற்றி நீங்கள் எழுதலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 17:40, 24 சூன் 2012 (UTC)Reply
//குறுங்கட்டுரைகளை ஒரு கட்டுரையின் கீழ் கொண்டு வர முடியுமா? //..இக்கேள்வி சரியாக புரியவில்லை. உருவாக்கிய குறுங்கட்டுரை எனில் {{குறுங்கட்டுரை}} என்பதை கட்டுரையின் இறுதியில் சேர்த்தால்ல் குறுங்கட்டுரையில் சேர்க்கப்படும். ஒரு கட்டுரையில் மற்றொரு கட்டுரை உள்ளடக்கத்தை சேர்க்க வேண்டுமெனில் ஒரு உட்தலைப்பில் சுருக்கமாக சேர்க்கலாம் {{main|கட்டுரைப்பெயர்}} என்பதை அந்த உபதலைப்பில் சேர்க்க வேண்டும்.--சண்முகம்ப7 (பேச்சு) 18:05, 24 சூன் 2012 (UTC)Reply
குறுங்கட்டுரைகளை ஒரு கட்டுரையாக இணைக்க முடியுமா எனக் கேட்கிறார் போலும். அது கட்டுரைகளைப் பொறுத்தே முடிவு எடுக்கப்படும். ஒரு பகுப்பினுள் அடங்கும் மேலும் தகவல்கள் சேர்க்க இயலாத ஓரிரு வரிக் கட்டுரைகளை ஒரு பட்டியலாக்கலாம். அவற்றைக் குறிப்பிட்டுக் கூறினால் அவற்றைப் படியலாக்குவதா இல்லையா என்பதை மேலும் ஆலோசித்து முடிவு செய்யலாம்.--Kanags \உரையாடுக 21:22, 24 சூன் 2012 (UTC)Reply

பகுப்பு

தொகு

இன்றைக்கு ஒரு கட்டுரையை தொகுக்கிறேன். இன்னும் முடியவில்லை(உதாரணமாக, ஒரு ஆங்கில விக்கியின் பக்கத்தை படியெடுத்து தமிழில் சேர்க்கிறேன். பாதியே மொழிபெயர்த்திருக்கிறேன். சில ஆங்கில சொற்களும் கலந்துள்ளன.) இவை நீக்கப் படுவதை நான் விரும்பவில்லை. ஆயினும் நாளை தொடர்ந்து தொகுக்க விரும்புகிறேன். இக்கட்டுரை பாதியில் உள்ளது என்பதைக் குறிக்கும்வகையில் ஏதும் பகுப்பு?வார்ப்புருக்கள் உண்டா? பாதியில் உள்ளவை என்ன செய்யப்படும்?

−முன்நிற்கும் கருத்து தமிழ்க்குரிசில் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

அவ்வாறு பாதி தொகுக்கப்படும் கட்டுரைகளை உங்களுக்கென தனியாக ஒரு மணல்தொட்டி உருவாக்கி அதில் முழுதும் மொழிபெயர்த்து பிறகு கட்டுரை வெளிக்கு நகர்த்தலாம். பயனர்:தமிழ்க்குரிசில்/மணல்தொட்டி என்ற பக்கத்தில் மொழிபெயருங்கள், பிறகு கட்டுரை வெளிக்கு நகர்த்தி விடவும்--சண்முகம்ப7 (பேச்சு) 12:40, 25 சூன் 2012 (UTC)Reply

பயனர் பக்கத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாமா? என் படத்தையும் பதிவேற்றிக் கொள்ளலாமா? −முன்நிற்கும் கருத்து தமிழ்க்குரிசில் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

உங்கள் பயனர் பக்கத்தில் உங்கள் தகவல்களை, படம் போன்றவற்றை எழுதலாம். பல பயனர்கள் மிகக் கவர்ச்சிகரமாக தங்கள் பயனர் பக்கங்களை ஆக்கியுள்ளார்கள். தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் உரையாடல்களில் உங்கள் கையொப்பத்தையும் தவறாது சேருங்கள்.--Kanags \உரையாடுக 21:31, 25 சூன் 2012 (UTC)Reply

சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பது யார்? எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன? நான் சிறந்த கட்டுரையை பரிந்துரைக்க முடியுமா? சிறந்த கட்டுரைகள் குறித்து அறிய வேண்டியவை யாவை? விளக்கி கூறவும். நன்றி! --தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:16, 26 சூன் 2012 (UTC)Reply

தற்போது, சிறப்புக் கட்டுரைத் தெரிவுகள் அவ்வளவாக நடைமுறையில் இல்லை. முதற்பக்கத்தில் கட்டுரைகளை காட்சிப்படுத்துவதற்கான உங்கள் பரிந்துரையை இங்கு தரலாம்.

இணைத்தல்

தொகு

என்றிக்கே என்றீக்கசு மற்றும் என்றீக் என்றீக்கசு ஆகிய பக்கங்கள் ஒரே நபரை குறிப்பிடுவன. இக்கட்டுரைகளை merge செய்வது எப்படி? ஏதாவது ஒன்றை நீக்குவதா? பக்க வழிமாற்றம் செய்வதா? merge செய்வதா? merge க்கான தமிழ்ச் சொல் எது? விரைவில் பதிலளிக்கவும். −முன்நிற்கும் கருத்து தமிழ்க்குரிசில் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இரண்டு கட்டுரைகளையும் வரலாற்றுடன் ஒன்றிணைக்க வேண்டும் தமிழ்க்குரிசில். பக்கங்களை ஒன்றிணைத்தல் மற்றும் நீக்குதல் நிர்வாக அணுக்கம் கொண்ட பயனர்களால் மட்டுமே இயலும். எனவே ஒன்றிணைக்கப்பட கட்டுரையில் {{merge to|கட்டுரையின் பெயர்}} என இணைத்து விடுங்கள். அந்த இரண்டையும் நானே ஒன்றிணைத்து விடுகிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 05:25, 1 சூலை 2012 (UTC)Reply

ஏதாவது ஒரு கட்டுரை

தொகு

இப்பகுதியை நிர்வகிப்பது யார்? இதை சொடுக்கினால் 10க்கு 7 முறை துடுப்பாட்டம் தொடர்பான கட்டுரைகளே வருகின்றன. பிழையுள்ள கட்டுரைகளை இப்பகுதியில் சேர்த்தால் திருத்துவதற்கு வசதியாக இருக்குமே! மேற்கோள் சேர்த்தலை விளக்கவும்.−முன்நிற்கும் கருத்து தமிழ்க்குரிசில் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

சிபி, உரையாடலின் போது கருவிப்பட்டையில் இடமிருந்து நான்காவதாய் அமைந்துள்ள கையொப்பக் கருவியைப் பயன்படுத்திக் கையொப்பமிட மறக்க வேண்டாம். ஏதாவது ஒரு கட்டுரை என்பது தானியக்கமாய் ஏதாவது ஒரு கட்டுரையைக் காட்டும். யாரும் இதை நிர்வகிப்பதில்லை. திரைப்படம், ஊர் மற்றும் துடுப்பாட்டம் பற்றிய கட்டுரைகள் தற்போதைக்கு அதிமகாய் உள்ள படியால் அவை ஏதாவது ஒரு கட்டுரையில் அடிக்கடி வருவது இயல்பே !--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 15:28, 5 சூலை 2012 (UTC)Reply

பாராட்டு

தொகு

நீங்கள் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய பல்வேறு நடைமுறைகளையும் ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து பங்களித்து வருவதைக் கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து பயனுற பங்களிக்க வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 21:14, 1 சூலை 2012 (UTC)Reply

  ஆர்வமுள்ள புதுப்பயனர் பதக்கம்
உங்களது ஆர்வமும் பங்களிப்புகளும் அருமை. எனவே, உங்களுக்கு இப்பதக்கத்தைக் கொடுத்து மகிழ்கிறேன். உங்களது சீரிய பணி சிறக்க வாழ்த்துகள். நன்றி!

--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 17:05, 3 சூலை 2012 (UTC)Reply

நன்றி இரவி, மரு. பெ. கார்த்தி! மேலும் சிறப்பாக பணியாற்றுவேன் என்று உறுதியேற்கிறேன். தொடர்ந்து உறுதுணையாயிருந்து உதவுங்கள். நன்றி-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:48, 17 அக்டோபர் 2012 (UTC)Reply

ஒரு ஐயம்...

தொகு

வணக்கம், தமிழ்!
உங்களின் புனைப்பெயரான 'தமிழ்க்குரிசில்' எனும் வார்த்தையின் அர்த்தத்தை அறிந்துகொள்ள ஆசை. விளக்குவீர்களா?
நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:37, 7 சூலை 2012 (UTC)Reply

வணக்கம் மா. செல்வசிவகுருநாதன் அவர்களே! நான் பிறந்த பொழுது தமிழை நன்கறிந்த குரிசில் என்பவ ர் பக்கத்துவீட்டில் குடியிருந்தாராம். அதனால் என் தாய் எனக்கு இப்பெயர் சூட்டினார். பின்னாளில்,(ஐந்து வயதில்) எட்டாம் உலகத் தமிழ் மாநாடு(தஞ்சை) சிறப்பு நூலைக் காட்டி சிபிச்சக்கரவர்த்தியின் வரலாற்றை என் தாய் சொல்லிக் கொண்டிருந்தார். சிபி என்ற பெயர் எனக்கு பிடித்திருந்ததால் நானே இப்பெயரை சூட்டிக் கொண்டதாகவும் கூறுவார். சக்கரவர்த்தி என்பது தமிழ்ப் பெயர் அல்ல என்றறிந்தபின் தமிழ்க்குரிசில் என்ற பெயரையே பயன்படுத்துகிறேன். குரிசில் என்றால் வள்ளல் என்ற பொருளை மட்டுமே நானறிவேன். விக்கியில் தேடியதில், தன்மானம் மிக்கவன் என்றும் அறிந்தேன். மேலும் அறிய http://ta.wiktionary.org/wiki/குரிசில் பார்க்கவும். நன்றி! −முன்நிற்கும் கருத்து தமிழ்க்குரிசில் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

திரைப்படங்கள்

தொகு

திரைப்படக் கட்டுரைகள் அனைத்துக்கும் தலைப்புகளில் (திரைப்படம்) என்பதைச் சேர்க்கத் தேவையில்லை என நினைக்கிறேன். குறிப்பாக பொதுவான தலைப்புகளில் திரைப்படப் பெயர் இருந்தால் மட்டுமே திரைப்படம் அடைமொழியைச் சேர்ப்பது வழக்கம். இதுவே வேற்று மொழி விக்கிகளிலும் உள்ள நடைமுறை.--Kanags \உரையாடுக 13:46, 7 சூலை 2012 (UTC)Reply

நான் வழிமாற்றிய திரைப்படங்கள் அனைத்தும் சொற்றொடர் போல் அமைந்திருந்தன என்பதை நோக்குக. (எ.கா: காதலில் சொதப்புவது எப்படி, அவளும் பெண்தானே,.). தேடலின் போது இது போன்ற தலைப்புகளை யாரேனும் பார்க்க நேர்ந்தால், இவை நூலா, புதினத்தின் தலைப்பா, திரைப்படமா, அல்லது வேறு ஏதேனுமா என்றறிய முடியாது. தேடுபவர்கள் அனைவரும் திரைப்படங்களை அறிந்திருப்பர் எனக் கொள்ள முடியாது என்பதால் தேடும்பொழுதே தலைப்பை பார்த்தவுடன் அறிந்து கொள்வர் என்றே இவ்வாறு செய்தேன். மேலும் கலைக்களஞ்சியத்தில் தலைப்பு இவ்வாறு இருக்காது என்று எண்ணினேன். பிழையிருப்பின் மன்னிக்கவும். சிறப்பு பக்கங்களில் பிற மொழி இணைப்பற்ற பக்கங்களை இணைக்கலாம் என்று நினைத்தேன். அங்கே பெரும்பான்மை திரைப்படங்களாக இருந்தன. அதனால் தான் இப்படி! :} --தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:50, 7 சூலை 2012 (UTC)Reply

படிமங்கள்

தொகு

விக்கிப்பீடியாவில் இரண்டு வகைகளில் படிமங்களைத் தரவேற்றலாம். காப்புரிமை நீக்கிய படிமங்கள் விக்கி காமன்சில் தரவேற்றப்படும். காமன்சில் உள்ள படிமங்களை விக்கிமீடியாவின் அனைத்துத் திட்டங்களுக்கும் பயன்படுத்தலாம். அவற்றை நாம் இங்கு தனியாக தரவேற்றவேண்டிய தேவையில்லை. இங்குள்ள கட்டுரை ஒன்றில் வழக்கமான இணைப்பாக இணைக்கலாம். இரண்டாவது வகை: காப்புரிமையுடன் கூடிய படிமங்கள், ஆனால் குறிப்பிட்ட கட்டுரை அல்லது கட்டுரைகளில் மட்டும் பயன்படுத்தக்கூடிய "நியாயமான பயன்பாட்டுப் படிமங்கள்". இவற்றை அந்தந்த விக்கியில் மட்டுமே தரவேற்றலாம். பொது விக்கியில் தரவேற்ற முடியாது. வேறொரு விக்கியில் உள்ள இவ்வாறான படிமம் ஒன்றை தமிழ் விக்கிக் கட்டுரையில் பயன்படுத்த விரும்பினால், அப்படிமத்தை மீளவும் தமிழ் விக்கியில் நீங்கள் நியாயமான பயன்பாட்டுக் காரணம் காட்டி தரவேற்றலாம். இதே போன்றே தமிழ் விக்கியில் மட்டுமே உள்ள படிமத்தை வேறொரு விக்கியில் பயன்படுத்துவதற்கு மீளவும் அங்கு தரவேற்ற வேண்டும். மேலும் தகவல் தேவை என்றால் ஒத்தாசைப் பக்கத்திலோ, அல்லது பயனர்களிடம் தனிப்பட்ட முறையிலோ கேளுங்கள்.--Kanags \உரையாடுக 23:34, 7 சூலை 2012 (UTC)Reply

இணையான தமிழ்ச்சொற்கள்

தொகு

பிளாஷ் பேக் என்பதற்கான தமிழ்ச் சொல் என்ன?--தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:43, 8 சூலை 2012 (UTC)Reply

நினைவு மீட்பு எனலாம். --மதனாகரன் (பேச்சு) 14:30, 8 சூலை 2012 (UTC)Reply

ஆனால் திரைப்படங்களில் அனைத்து பிளாஷ் பேக்கும் நினைத்து பார்த்து வருகிறதா? --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:59, 28 சூலை 2012 (UTC)Reply

பின்னோக்கு எனலாம். --மதனாகரன் (பேச்சு) 04:16, 29 சூலை 2012 (UTC)Reply

இற்றைப்படுத்தல்

தொகு

த. விக்கியை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் நிர்வாகிகளே!! என் அன்பு வேண்டுகோள்! http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias இத்தளத்திற்கான தமிழ்ப் பதிப்பை இற்றைப்படுத்தவும். மேலும், சிறப்புப் பக்கங்களில் உள்ள பிற மொழி இணைப்பற்ற பக்கங்களையும் இற்றைப்படுத்தவும். நன்றி! :) --தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:43, 8 சூலை 2012 (UTC)Reply

தமிழ்க்குரிசில், இவ்வாறான வேண்டுகோள்களை ஆலமரத்தடியிலேயே இடுவது வழக்கம். மேலும் நீங்கள் குறிப்பிட்ட மெட்டாவிக்கிப் பக்கம் தானியங்கிகளினால் இற்றைப்படுத்தப்படுகிறது என நினைக்கிறேன். சிறப்புப் பக்கங்கள் என நீங்கள் இப்பக்கத்தைக்] குறிப்பிடுகிறீர்கள் போலும். இவற்றை யாரும் இற்றைப்படுத்தலாம். நீங்களும் செய்யலாம்.--Kanags \உரையாடுக 10:01, 8 சூலை 2012 (UTC)Reply

நான் கேட்டது சிறப்பு பக்கங்களில் உள்ள ”பிற மொழி இணைப்பற்ற பக்கங்கள்” என்ற தலைப்புடைய பக்கத்தை. பிற மொழி இணைப்பற்ற பக்கங்களில் சிலவற்றை இணைத்துவிட்டேன். இந்த பக்கங்களின் பெயர்கள் ”பிற மொழி இணைப்பற்ற பக்கங்கள்” என்ற பக்கத்தில் வராமலிருக்க இற்றைப்படுத்தக் கேட்டேன். அது என்னால் முடியாது. தானாக இற்றைப்படுத்தப்படுமா? நீங்கள் செய்வீர்களா?

இல்லை, அது தானாக இற்றைப்படுத்தப்படும். ஒரு சில நாட்கள் செல்லும்.--Kanags \உரையாடுக 10:31, 8 சூலை 2012 (UTC)Reply

படம் இற்றைப்படுத்தல்

தொகு
 
உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
வணக்கம், தமிழ்க்குரிசில். உங்களுக்கான புதிய தகவல்கள் Arafath.riyath இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.


பயனர் வரவேற்பு

தொகு

வணக்கம் தமிழ்க்குரிசில், பயனர்களை வரவேற்க அவர்களின் பேச்சுப் பக்கத்தில் {{புதுப்பயனர்}} வார்ப்புருவை இடவும். தவறுதலாக இங்கு நீங்கள் இட்டிருந்தது நீக்கப்பட்டது.--சண்முகம்ப7 (பேச்சு) 14:35, 8 சூலை 2012 (UTC)Reply

அவன் என் பள்ளித் தோழன். நானே வரவேற்றால் நன்றாக இருக்குமே என்று செய்தேன். இனிமேல், புதுப்பயனர் என்ற வாப்புருவை இடுகிறேன். :)−முன்நிற்கும் கருத்து தமிழ்க்குரிசில் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
உங்கள் நண்பர்களையும் விக்கியில் பங்களிக்க செய்வதற்கு பாராட்டுகள், மேலும் வார்ப்புரு மூலம் தான் வரவேற்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது, நீங்களே கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல் பக்கங்களை சுட்டி வரவேற்கலாம். பொதுவாக மற்றவர் பயனர் பக்கத்தில் நாம் தொகுப்பதில்லை, பேச்சுப் பக்கத்தில்தான் செய்கிறோம்.. அதையே தங்களுக்கு நினைவூட்டினேன் :) உரையாடல் பக்கங்களில் மறக்காமல் கையொப்பம் இடவும்--சண்முகம்ப7 (பேச்சு) 14:54, 8 சூலை 2012 (UTC)Reply

வார்ப்புரு

தொகு

இன்றைக்கு மேற்கோள்கள் இணைப்பதெப்படி என்று கற்றுக்கொண்டேன்..:) வார்ப்புருக்களை நான் உருவாக்க முடியுமா? வார்ப்புருக்களும் பக்கங்கள் போலவா? உருவாக்குவது குறித்து விளக்கவும். மேலும், table நானே உருவாக்க முடியுமா Infobox என்று தொடங்குகிறதே அதை கேட்கிறேன். என் மணல்தொட்டியில் பயிற்சி செய்து பார்ப்பேன். முதலில் வார்ப்புரு பற்றி மட்டும் கூறவும். நன்றி! --தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:47, 9 சூலை 2012 (UTC)Reply

வார்ப்புரு உருவாக்குவதும் பக்கங்களை உருவாக்குவது போன்றதே. முன்னொட்டாக வார்ப்புரு:வார்ப்புருவின் பெயர் என இருக்க வேண்டும். பல பக்கங்களில் ஒரே விசயத்தை இணைக்க வேண்டி வரும் போது வார்ப்புருக்களாக உருவாக்கி உபயோகப்படுத்திக்கொள்ளலாம். கட்டுரைகளில் {{வார்ப்புருவின் பெயர்}} எனக் கொடுத்தால் போதும். உங்கள் பேச்சுப் பக்கத்தில் கேள்விகளை கேட்பதை விட தொடர்ந்து பங்களிக்கும் பயனர்களின் பேச்சுப் பக்கத்திலோ, ஒத்தாசைப் பக்கத்திலோ கேட்டால் உடனடியாக பதில் கிடைக்கும்--சண்முகம்ப7 (பேச்சு) 14:22, 9 சூலை 2012 (UTC)Reply

கையொப்பம்

தொகு

@தமிழ்க்குரிசில்: பேச்சுப் பக்கங்களில் உரையாடும்போது சில வேளைகளில் கையொப்பத்தை இட மறந்து விடுகிறீர்கள். ஆகவே, தவறாது கையொப்பத்தை இடுமாறு கேட்டுக் கொள்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 14:24, 12 சூலை 2012 (UTC)Reply

தானியங்கிகள்

தொகு

வணக்கம். நீங்கள் கூறுவது போல விக்கியிடை இணைப்புகள், கட்டுரையாக்கம், துப்பரவு பணிகள் போன்றவற்றை தானியங்கிகள் அல்லது நிரல்கள் கொண்டு செய்யலாம். பல்வேறு விதமான விக்கி கட்டுரையாக்க துப்பரவுப் பணிகளுக்கு pywikipediabot பயன்படுகிறது. இதனை நாம் லினக்சில் அல்லது விண்டோசில் நிறுவிப் பயன்படுத்திக் கொள்லலாம். பைத்தானில் எழுதப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்ட வேலைக்கு ஏற்கனவே பல தானியங்கிகள் உள்ளன. மேலதிக தகவல்களுக்கு இங்கே பார்க்கவும் . தமிழ் விக்கியில் பல்வேறு நிரலாக்கத் தேவைகள் உள்ளன. உங்கள் உதவிகள் மிகவும் பயன்மிக்கவையாக அமையும். மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடியா:நுட்ப நெறிப்படுத்தல் பக்கத்தைப் பார்க்கவும். நிறுவ, இயக்க உதவிகள் தேவைப்படின் கேக்கவும். --Natkeeran (பேச்சு) 23:28, 16 சூலை 2012 (UTC)Reply

விரைந்து நீக்கல் வார்ப்புரு

தொகு

வணக்கம் தமிழ்க்குரிசில், விரைந்து நீக்கல் வார்ப்புரு இடும் போது அதில் உள்ள உள்ளடக்கத்தை நீக்காமல் இடவும். அப்போதுதான் என்ன உள்ளடக்கம் என பார்த்து எளிதாக நீக்க இயலும், இல்லையெனில் வரலாற்றை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். மேலும் அதற்கு விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி உபயோகிக்கலாம், எளிதாக இருக்கும்--சண்முகம்ப7 (பேச்சு) 14:15, 20 சூலை 2012 (UTC)Reply

ஆலமரத்தடி

தொகு

ஆலமரத்தடியில் நீங்கள் நீக்கியிருந்த பகுதியை மீண்டும் சேர்த்திருக்கின்றேன். அவை ஆவணப் பதிவு போன்றவை. எனவே நீக்க வேண்டாம். ஐயம் தீரந்தது என நீங்கள் ஒரு வரி அங்குக் கடைசியில் குறிப்பிட்டால் போதும். எழுதிய பகுதிகளை நீக்க வேண்டாம் என வேண்டிக்கொள்கின்றேன். நீங்கள் எழுதியவற்றை அழிக்க வேண்டும் எனில் <s>..</s> என்று "அழிக்கவேண்டிய" பகுதியின் முன்னும் பின்னும் இட்டால் வரிகளைக் கோட்டால் அடித்துக் காட்டும். எடுத்துக்காட்டாக: இதை அழித்துவிட்டேன்.--செல்வா (பேச்சு) 15:10, 27 சூலை 2012 (UTC) அறிந்து கொண்டேன். நன்றி ஐயா! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:28, 27 சூலை 2012 (UTC)Reply

மின்னஞ்சல்

தொகு

உங்கள் கருத்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றியன். என்னுடன் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். விக்கிப்பீடியாவிலேயே தொடுப்பு உள்ளது. எனினும் என் மின்னஞ்சல் சி'-மெயில் கணக்கு. பெயர் c.r.selvakumar --செல்வா (பேச்சு) 12:45, 17 ஆகத்து 2012 (UTC)Reply

-- இந்த வார்ப்புருவை பயன்படுத்துகிறீர்களா, பயன்பாட்டில் உள்ளதா என சோதித்தேன். :) ஐபி பேச்சுப் பக்கத்தில், ’’ஐபிக்கள் மாறிக்கூடியவை’’ என வருகிறது. மாறக்கூடியவை என மாற்ற வேண்டும். :)

 Y ஆயிற்று தமிழ்க்குரிசில், அந்த வார்ப்புரு பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. அண்மைய மாற்றங்கள் குறைவாக உள்ளதால் இப்போதைக்கு அது தேவையில்லாதது. அண்மைய மாற்றங்கள் அதிகமாகும் போது தேவைப்படும் :)--சண்முகம்ப7 (பேச்சு) 16:42, 25 ஆகத்து 2012 (UTC)Reply

ஆலமரத்தடி

தொகு

பார்க்க: விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#புதுப்பயனர் உதவி. --மதனாகரன் (பேச்சு) 13:45, 27 ஆகத்து 2012 (UTC)Reply

பதக்கம்

தொகு
  சிறந்த யோசனைக்கான பதக்கம்
இன்றைய உதவிக்குறிப்பு என்னுந்திட்டத்தை வடிவமைத்தமைக்காக இப்பதக்கம்! மதனாகரன் (பேச்சு) 13:17, 28 ஆகத்து 2012 (UTC)Reply

+1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:36, 6 செப்டெம்பர் 2012 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி மதன்! உங்கள் பாராட்டு என்னை உற்சாகமூட்டுகிறது. என் பணிகள் இனி மேலும் சிறப்பாக அமையும் என உறுதியளிக்கிறேன்.. :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:47, 28 ஆகத்து 2012 (UTC)Reply

முதற்பக்க அறிமுகம் வேண்டல்

தொகு

உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/தமிழ்க்குரிசில் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவல், புகைப்படத்தைப் பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

என் கட்டுரைகள் பல குறுங்கட்டுரைகளாகவே உள்ளன. அவற்றில் சிலவற்றையாவது மேம்படுத்தினால்தான் ஆவணப்படுத்த ஏதுவாக இருக்கும். மேலும், கூடுதல் பணிகள் சில உள்ளன. அவற்றையும் செய்ய வேண்டும். ஆகவே சில நாட்கள் கழித்தே பங்களிப்புக்கு என்னைப் பற்றி எழுத முடியும். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:48, 19 செப்டெம்பர் 2012 (UTC)Reply

சரி, குரிசில். அப்புறம், பின்னையூர் குறித்த உங்கள் கட்டுரையை நடுநிலையுடன் எழுதியுள்ளதாகக் கூறியுள்ளீர்கள். ஆனால், அது எனது கணினியில் இடப் பக்கம் தொடங்கியே தெரிகிறது. இன்னும் நடுவுக்குக்கொண்டு வர முடியுமா? ;)--இரவி (பேச்சு) 17:31, 21 செப்டெம்பர் 2012 (UTC)  விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:42, 1 அக்டோபர் 2012 (UTC)Reply

வாழ்த்துகளுக்கு நன்றி

தொகு

தங்களின் அனைத்து வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ்க்குரிசில்.விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்புகளும் குறிப்பிடத்தக்கதே. நாம் அனைவரும் இணைந்து விக்கிப்பீடியாவில் இன்னும் சிறப்பாகப் பங்களிப்போம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:04, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய உதவிக்குறிப்பு/பரிந்துரைகள்

தொகு

இங்கே உங்களுக்குப் பதிலளிக்கப்பட்டுள்ளது. பேச்சுப் பக்கத்தில் உங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 13:29, 9 செப்டெம்பர் 2012 (UTC)Reply

வணக்கம்

தொகு

வணக்கம் . Glad to meet you. I want to know how is called in Tamil characters: ா , ி , ீ , ு , ெ , ே , ை , ௗ ? Please help me and write what I can to help you. --92.243.181.140 17:55, 15 செப்டெம்பர் 2012 (UTC) ВМНС.Reply

I have replied on your talk page. :)-101.212.112.104 18:05, 15 செப்டெம்பர் 2012 (UTC)Reply

நன்றிகள்

தொகு

தமிழ்க்குரிசில், நான் அமீரகத்துக்கு வெளியே சென்றிருந்ததால் இன்றுதான் உங்கள் வாழ்த்துக்களைப் பார்க்க முடிந்தது. உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். --- மயூரநாதன் (பேச்சு) 18:24, 18 செப்டெம்பர் 2012 (UTC)Reply

Return to the user page of "தமிழ்க்குரிசில்/தொகுப்பு 01".