முனைவர் ஜெ. இராஜ் குமார் பேச்சுப்பக்கம்!
அன்புடன் வருக, ஆவலுடன் பகிர்க!!

.
பயனர்:Raj.the.tora
         
பயனர்:Raj.the.tora/தொடங்கிய கட்டுரைகள்
         
பயனர் பேச்சு:Raj.the.tora
         
பயனர்:Raj.the.tora/பதக்கங்கள்
         
Special:Emailuser/Raj.the.tora
         
முகப்பு
         
தொடங்கிய கட்டுரைகள்
         
பேச்சு
         
பதக்கங்களும் பாராட்டுக்களும்
         
மின்னஞ்சல்
         


வாருங்கள்!

வாருங்கள், Raj.the.tora, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 07:36, 26 மார்ச் 2013 (UTC) பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Raj.the.tora!

 
அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 07:38, 26 மார்ச் 2013 (UTC)

பயனர் பக்கம்தொகு

வணக்கம், தாங்கள் புதிய கட்டுரைகளை தொடங்கி எழுதி வருவது கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும், தமிழ் குறித்தான கட்டுரைகளாக எழுதிவருவது இரட்டை மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து பங்களியுங்கள், உங்கள் பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றிய தகவல்களைத் தந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு விருப்பமானத் அல்லது நீங்கள் மிக்க புலமையுடன் இருக்கும் துறை போன்றவற்றைத் தந்தால் இன்னும் சிறப்பு. -- அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 07:45, 26 மார்ச் 2013 (UTC)

மகிழ்ச்சிதொகு

பயனர் பக்கத் தகவல்கள் கண்டதில் மகிழ்ச்சி. தாங்கள் விரும்பினால் தங்கள் பிளிக்கர் படங்களை விக்கிமீடியா காமன்சில் அனைவருக்கும் பயன் தரும் வகையில் பதிவேற்றலாம். நான்கு நாட்களில் நான்கு கட்டுரைகளை உருவாக்கியிருப்பது தமிழ் விக்கிக்குப் புதிய தொடர் பங்களிப்பாளர் கிடைத்திருப்பதைத் தெரிவிக்கிறது. நன்றி!--Karthi.dr (பேச்சு) 10:09, 30 மார்ச் 2013 (UTC)

  விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:29, 30 மார்ச் 2013 (UTC)

உசாத்துணைதொகு

வணக்கம், பறவைகள் பற்றி விபரமாக கட்டுரைகள் எழுதிவருவது கண்டு மகிழ்ச்சி. முழுமையாக அவற்றை உருவாக்குவதற்குப் பாராட்டுக்கள். ஊதாத்தேன்சிட்டு கட்டுரையில் உசாத்துணையினைச் சேர்த்து இவற்றை கூண்டுகளில் நன்கு பராமரித்தால் 22 ஆண்டுகள் வரை வாழக்கூடியன என்பதற்கான உசாத்துணையினை ஆங்கில விக்கியிலிருந்து எடுத்து இணைத்துள்ளேன். சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுவதால் இவ்வாறு உசாத்துணை சேர்ப்பது முறை. எனவே, பிற கட்டுரைகளிலும் சேர்த்துவிடுங்கள். உதவி தேவைப்படின் கேட்கவும். --Anton (பேச்சு) 05:31, 31 மார்ச் 2013 (UTC)

விரைவுப்பகுப்பிதொகு

வணக்கம் முனைவரே! விரைவுப்பகுப்பி (hotcat) என்ற கருவி தமிழ் விக்கியில் உள்ளது. இதைக் கொண்டு மிக விரைவாக, எளிதாக பகுப்புகள் சேர்க்கலாம். பின்னர், பகுப்பில் சென்று ஒரு கட்டுரையைக் கண்டுபிடிப்பதும் எளிது. உங்கள் சுமையைக் குறைக்க, இதை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறேன். விக்கிப்பீடியா:விரைவுப்பகுப்பி பக்கத்தில் இதை எப்படி செயல்படுத்துவது என்று கூறப்பட்டுள்ளது. படித்துப்பார்த்து இயக்க வேண்டுகிறேன். இதை தேர்ந்து விட்டு அமைப்புகளை சேமித்த பின்னர், தொகுக்கப்படாத கட்டுரையின் இறுதியில் Categories (+) என்று வரும். இந்த + ஐ அழுத்தினால் வரும் பெட்டியில் பகுப்பின் சில எழுத்துக்களை அடிக்கவும். எடுத்துக்காட்டாக தமிழக அரசு என்ற பகுப்பு உள்ளதா எனப் பார்த்து சேர்க்க விரும்பினால், தமிழ என்று அடித்தால் இந்த மூன்று எழுத்துக்களைக் கொண்ட அனைத்துப் பகுப்புகளையும் காட்டும். வேண்டிய பகுப்புகளைச் சேர்த்துவிட்டு சேமிக்கவும். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:18, 31 மார்ச் 2013 (UTC)

கையொப்பம்தொகு

பேச்சுப் பக்கங்களில் கையொப்பமிட ~~~~ என்று இட்டால் போதும். (~ - இது esc விசைக்கு கீழே உள்ளது, நான்கு முறை இட வேண்டும்.) உங்கள் கருத்துடன் பெயர் பதிவாகி விடும். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:18, 31 மார்ச் 2013 (UTC)

பதக்கம்தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
உங்கள் உயிரியல் மற்றும் தமிழ் தொடர்பான பங்களிப்புகளுக்காக இது வழங்கப்படுகிறது. தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:50, 31 மார்ச் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:55, 31 மார்ச் 2013 (UTC)
  விருப்பம் நன்றி! முனைவர் இராஜ் குமார் 10:57, 31 மார்ச் 2013 (UTC)
  விருப்பம் --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 11:34, 31 மார்ச் 2013 (UTC)

மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்தொகு

வணக்கம், Raj.the.tora!

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 06:48, 2 ஏப்ரல் 2013 (UTC)

பாராட்டுதொகு

 
  • தமிழ் இலக்கண முத்து

எழுதும் மரபுக் கவிதை இசைவால்
விழுதாம் இலக்கண வேரினை ஊன்றும்
அழகர் முனைவர் அரச குமரன்
உழவால் தமிழ்முத்தாம் ஓர்.
--Sengai Podhuvan (பேச்சு) 22:03, 8 ஏப்ரல் 2013 (UTC)

  விருப்பம்செங்கை பொதுவன் பெயருக் கிணங்க
செங்கை கொண்டு படைத்த - மங்காது
தங்கும் சொற்கட்கு சிரம்தாழ்த்தி மகிழும்
வங்கக் கரையோனின் நன்றி! --- 'நேரிசை வெண்பா' கொண்டு மனம் நெகிழ்ந்து நன்றியுரைப்பது முனைவர் இராஜ் குமார் 02:02, 9 ஏப்ரல் 2013 (UTC)

அருமை! அருமை!.--Kanags \உரையாடுக 02:38, 9 ஏப்ரல் 2013 (UTC)

  விருப்பம், மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 21:12, 9 ஏப்ரல் 2013 (UTC)
  விருப்பம் அருமை! அருமை!! நற்றமிழ்ப் பாடல்களுக்கு மகிழ்ச்சி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:22, 11 ஏப்ரல் 2013 (UTC)
  விருப்பம் விக்கியில் இப்பொழுது தமிழ் மழை -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:27, 11 ஏப்ரல் 2013 (UTC)

உதவிதொகு

வணக்கம். நீங்கள் தொடங்கிய பெரிய திருமொழி கட்டுரை; நாலாயிர திவ்வியப் பிரபந்தம் கட்டுரை இரண்டும் பெரியாழ்வார் திருமொழி எனக் கூறும் பாடல்களின் வரிசைஎண்களில் முரண்படுகின்றன. சரிசெய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp (பேச்சு) 17:05, 11 ஏப்ரல் 2013 (UTC)

சரி செய்தாகிவிட்டது நண்பரே. படித்துப்பார்த்து குற்றங்களைய வழிவகுத்தமைக்கு நன்றி. முனைவர் இராஜ் குமார் 03:01, 12 ஏப்ரல் 2013 (UTC)
பெரிய திருமொழியில் மொத்தம் 100 பாடல்கள் தானே, ஆனால் உங்கள் மாற்றத்தின்படி பார்த்தால் 1000 பாடல்கள் என்றாகிறதே? நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் கட்டுரையில் தான் தவறு என நினைக்கிறேன். அது 948-2031 வரையுள்ள பாடல்களைத் திருமங்கை ஆழ்வாரின் பாடல்களாகக் கூறுகிறது. விக்கிமூலமும் பெரியதிருமொழி பாடல்கள் 100 என்றுதான் கூறுகிறது. மீண்டும் மீண்டும் உங்களைத் தொந்திரவு செயவதாக நினைக்க வேண்டாம். நானாகவே இக்குழப்பத்தைச் சரிசெய்யும் அளவிற்கு எனக்கு இத்துறையில் ஞானம் இல்லை. எண்ணிக்கையின் முரண்பாடுகள் மட்டுமே புரிகிறது. தேவையான மாற்றத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp (பேச்சு) 04:03, 12 ஏப்ரல் 2013 (UTC)
நண்பரே, நானும் இதனை இப்போதுதான் கற்றுக்கொள்கிறேன். முதலில் அவசரத்தில் சரிபார்க்காது 100 பாடல்களென தொகுத்து, பின் சரியான இணையதளங்களை (tamilvu, இன்ன பிற) படித்து புரிந்து கொண்டு 1084 பாடல்களென்று சரிசெய்தாகி விட்டது. விக்கிமூலத்தில் உள்ளதும் எனது பங்களிப்பே என்பதால், அதனையும் இவ்வாரத்தின் இறுதியில் சரி செய்து விடுவேன். குழப்பத்துக்கு தயவுசெய்து மன்னிக்கவும். இனி இவ்வாறு நிகழாது. புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. முனைவர் இராஜ் குமார் 05:07, 12 ஏப்ரல் 2013 (UTC)
  விருப்பம்--Booradleyp (பேச்சு) 06:45, 12 ஏப்ரல் 2013 (UTC)

புரட்சிக்கவி படிமம்தொகு

பாரதிதாசனின் புரட்சிக்கவி நூல் அட்டைப்படம் எனக்கு இணையத்தேடலில் கிட்டவில்லை. உங்களிடம் புத்தகம் இருந்தால் அட்டைப்படத்தை உங்களது கம்ப்யூட்டரில் சேமித்து தமிழ் விக்கியில் பதிவேற்ற முடியுமா? பதிவேற்றும் குறிப்புகளுக்கு உதவி தேவைப்பட்டால் கேளுங்கள். கட்டுரையில் இணைக்கலாம்.--Booradleyp (பேச்சு) 06:53, 12 ஏப்ரல் 2013 (UTC)

சில ஆண்டுகளுக்கு முன்பாக நூலகத்திலிருந்து படித்தேன். என்னிடம் நூல் இல்லாவிடினும், மீண்டும் தேடிப்பார்க்கிறேன். கிடைத்தால், இதுவரை கணிணியிலிருந்து நேராக பதிவேற்றியதில்லை என்பதால் பதிவேற்ற தங்கள் உதவி அவசியம் தேவை. மிக்க நன்றி முனைவர் இராஜ் குமார் 06:57, 12 ஏப்ரல் 2013 (UTC)

படங்கள் சேர்க்க, நீக்கதொகு

வணக்கம் ஐயா. கட்டுரை தொடர்பான படங்களை சேர்க்க

தாங்கள் முதலில் ஒரு படிமத்தை முதலில் உங்கள் கணினியில் சேமியுங்கள். விக்கியில் பதிவேற்ற இப்பக்கத்தில் இடப்பக்கம் கருவிப் பெட்டியில் “கோப்பைப் பதிவேற்று” என்றொரு இணைப்பு உள்ளது. அதில் choose file என்பதனை சொடுக்கி தாங்கள் கணினியில் சேமித்த படத்தை இணையுங்கள். பின்னர் அப்பக்கத்தின் கீழுள்ள அணுமதிகளுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து 'கோப்பைப் பதிவேற்று' எனற பொத்தானை அழுத்தினால் தங்கள் படம் சேமிக்கப்பட்டுவிடும். நீங்கள் படத்தை எப்பெயரில் சேமித்தீர்களோ அப்பெயரிலே இருக்கும். அதனை தகுந்த கட்டுரைகளில் இணைத்து விடலாம். அதன் மூலம் பதிவேற்றலாம்.

பிற படங்களைப் பதிவேற்றுவதும் இவ்வாறே செய்யலாம். (படங்கள் உங்கள் சொந்த ஆக்கமாக இருக்க வேண்டும். பிற தளங்களில் வெளியான படங்களை உரிய அனுமதியின்றி இங்கு மறு பயன்பாடு செய்ய இயலாது.)

கட்டுரைகளில் படகங்களை இணைக்கதொகு

எடுத்துக்காட்டாக:

தங்களின் படம்- File:Water above the Hogenakkal falls.jpg என வைத்துக்கொள்வோம்.

 
காவேரி

[[File:Water above the Hogenakkal falls.jpg|right|thumb|250px|காவேரி]] என்ற நிரல் துண்டை கட்டுரையில் இடுங்கள் இவ்வாறு செய்தால் வலப்புறம் தெரியும் படம் இணையும்.

இந்த நிரல் துண்டில் "Water above the Hogenakkal falls" என்பது இணைக்கும் படிமத்தின் பெயர்;

right என்பது படம் வலப்புறம் அமைய வேண்டும் என்பதைக் குறிக்கிறது. left என மாற்றினால் கட்டுரை இடப்பக்கம் அமையும்.

250px என்பது படத்தின் அளவைக் குறிக்கிறது.

" ஒகேனக்கல் அருவி" என்பது படத்தின் கீழ் இடப்படும் குறிப்பு.

விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி என்ற பக்கத்தில் விவரமான செய்முறை விளக்கம் உள்ளது.

இங்கு உள்ள படிமுறை விளக்கத்தின் மூலம் செய்ய முயலுங்கள்.

படத்தைப் பதிவேற்றிவிட்டு முயற்சி செய்து பாருங்கள். சிக்கல் ஏற்படின் நான் உதவுகிறேன்.

படத்தை நீக்கதொகு

படிமத்தின் உரையாடல் பக்கத்தில் நீக்கக் கோரினால் நிர்வாகிகள் அதனை நீக்கிவிடுவர்கள் நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:38, 12 ஏப்ரல் 2013 (UTC)

  விருப்பம் மிகவும் உபயோகமான தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே! பயிற்சி எடுத்துக்கொண்டேன், எளிமையாகத்தான் உள்ளது :) முனைவர் இராஜ் குமார் 02:34, 13 ஏப்ரல் 2013 (UTC)

பதக்கம்தொகு

  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
உணர்ச்சிகள் தொடர்பான உங்கள் கட்டுரைகளின் வளம் கண்டு மகிழ்ந்து நான் அளிக்கும் சிறு நன்றிக் கடனாக இப்பதக்கத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள் தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:47, 12 ஏப்ரல் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம் மிக்க நன்றி நண்பரே! முனைவர் இராஜ் குமார் 15:52, 12 ஏப்ரல் 2013 (UTC)


பிற மொழிகளின் இணைப்புகளை எவ்வாறு இடப்பக்கம் காட்டுவது?தொகு

  • முதலில் நீங்கள் இணைப்பு கொடுக்க விரும்பும் ஆங்கிலக் கட்டுரையில் இடப்பக்கமுள்ள Edit links என்பதைs சொடுக்கவும்.
  • அது அக்கட்டுரையின் விக்கி டேட்டா பக்கதிற்கு இட்டுச் செல்லும்.
  • அங்கு கீழ் பகுதியில் {add} என்ற இணைப்பு இருக்கும்.
  • அங்குள்ள முதல் கட்டத்தில் ta (தமிழ்) என தட்டச்சிடவும்.
  • அடுத்த கட்டத்தில் தாங்கள் உருவாக்கிய தமிழ் கட்டுரையின் தலைப்பினை இடவும்.
  • சேமிக்கவும். அது தானியக்கமாக இணைப்பாகிவிடும்.

(சில சமயங்களில் இவ்விணைப்பு உடனே இடப்பக்கம் தெரிவதில்லை தாமதமாகலாம்) நன்றி :)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:59, 18 ஏப்ரல் 2013 (UTC)

கவனத்திற்குதொகு

பல கட்டுரைகளில் ஒரே பகுப்பைச் சேர்க்கும் போது கவனமாக இருக்க வேண்டுகிறேன். எடுத்துக்காட்டாக, நெடுஞ்சாலைகள் என்ற பகுப்பு இந்தியாவில் உள்ளவற்றிற்கு தேவையில்லை. அவற்றிற்கு உள்பகுப்பாக இந்திய நெடுஞ்சாலைகள் என்ற குறிப்பிட்ட பகுப்பு உள்ளது. (இல்லை என்றாலும் உருவாக்கிக் கொள்ளலாம்). இவ்வாறு செய்தீர்கள் என்றால், பின்னால் வரும் நபர் அனைத்தையும் உள்பகுப்புக்கு மாற்ற வேண்டி இருக்கும். கடினமாகிவிடும். :(

அதே போல, ஒரே உள்ளடக்கத்தை ஒரே மாதிரியான கட்டுரைகளில் இடும்போது, எடுத்துக்காட்டாக, நெடுஞ்சாலைகளை ஒன்றன் பின் ஒன்றாக எழுத இருந்தால், ஒரே உள்ளடக்கத்தை நகலெடுத்து ஒட்டுவோம். இது வசதியானதும் கூட. எனினும், முதல் கட்டுரைக்கான உள்ளடக்கத்தை சரி செய்து விட்டு பின்னர் அதை மற்றவற்றில் ஒட்டி,, தகுந்த மாற்றங்களைச் செய்து, கூடுதல் தகவல்களைச் சேர்க்கலாம். முதல் கட்டுரையில் ஒரு தவறான வார்த்தையோ, தவறான இணைப்போ இட்டுவிட்டு, அதை மற்றவற்றிலும் இட்டால், பின்னர் எலலாவற்றையும் மாற்ற வேண்டியிருக்கும். கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:20, 23 ஏப்ரல் 2013 (UTC)
பகுப்பினைப் பற்றி அறிவுறுத்தியமைக்கும், கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கும் நன்றி. இப்போதே சரி செய்து விடுகிறேன். எல்லாம் ஒன்றோடொன்று இசைந்திருக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் என்னும் பகுப்பிற்குள் கொண்டு வர இருக்கிறேன் (இந்திய நெடுஞ்சாலைகள் என்ற ஒரு பகுப்பும் உள்ளது). எது சரி என வழிகாட்டவும். மீண்டும் நன்றி! :) முனைவர் இராஜ் குமார் 11:28, 23 ஏப்ரல் 2013 (UTC)
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் என்ற பகுப்பும் நன்றே! இதற்கு மூலப் பகுப்பாக இந்திய நெடுஞ்சாலைகள் என்பதை வைக்கலாம். அவ்வப்போது புதுப் பகுப்புகள் உருவாக்கப்படும் போதே பிழை இருந்தால் தெரிவியுங்கள். பின்னால பல கட்டுரைகளுக்கு அந்த பகுப்பைச் சேர்த்தபின் நீக்குதல் கடினமான வேலையாகும்.
இது போன்ற திரும்பத் திரும்ப கூடிய அளவில் (repetitive and bulk) செய்ய வேண்டிய மாற்றங்களுக்கு விக்கித் தானுலாவி பெரிதும் பயன்படும்.--மணியன் (பேச்சு) 12:16, 23 ஏப்ரல் 2013 (UTC)
இதற்கு மாற்று வழி ஒன்றும் உள்ளது. ஒரே மாதிரியான கட்டுரைகளில் ஒரு வார்ப்புருவை பயன்படுத்துவோம், பெரும்பாலான சூழல்களில்! எனவே, அந்த வார்ப்புருவின் இறுதியில், தேவையான பகுப்பை இணைத்து விட்டால் ஒவ்வொன்றிலும் பகுப்பு சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது. அனைத்துக் கட்டுரைகளிலும் தானாகவே தோன்றும். உதாரணமாக, குறுங்கட்டுரை என்ற வார்ப்புருவைத் தொகுத்துப் பாருங்கள். `-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:28, 23 ஏப்ரல் 2013 (UTC)
வார்ப்புருவில் பகுப்புக்களை புகுத்த என் உளமார்ந்த வாக்கு உண்டு. இது பல குழப்பங்களை தவிர்க்கும்! நன்றி நண்பர்களே! முனைவர் இராஜ் குமார் 14:07, 23 ஏப்ரல் 2013 (UTC)

ஆண்டுகள்தொகு

ஆண்டுகள் பக்கங்களை உருவாக்குவதற்கு நன்றி. ஆனாலும், வெறுமனே வார்ப்புருக்களை மட்டும் கொண்டு கட்டுரைகளை உருவாக்காதீர்கள். குறைந்தது இரண்டு தகவல்களையாவது தாருங்கள். இல்லாவிடில் அவை நீக்கப்படலாம்.--Kanags \உரையாடுக 06:04, 31 மே 2013 (UTC)

முதற்பக்கக் கட்டுரைதொகு
தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்புதொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டிதொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:56, 27 அக்டோபர் 2013 (UTC)


விக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்புதொகு

வணக்கம் Raj.the.tora!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 04:01, 30 திசம்பர் 2014 (UTC)
மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் வந்து சிறப்பாக பங்களிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். நன்றி. --இரவி (பேச்சு) 16:54, 11 சனவரி 2015 (UTC)

உங்களுக்குத் தெரியுமா? திட்டம்தொகு


2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for votersதொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Raj.the.tora&oldid=3477890" இருந்து மீள்விக்கப்பட்டது