பயனர் பேச்சு:மதனாஹரன்/தொகுப்பு ௩

பெண்ணியம் வலைவாசல்

தொகு

வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி--Commons sibi (பேச்சு) 18:19, 27 அக்டோபர் 2014 (UTC)Reply

வருக! வருக!

தொகு

மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களைக் காண மகிழ்ச்சி!

வணக்கம், மதனாஹரன்/தொகுப்பு ௩!

 
வருக! வருக!

மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களைக் காண்பதில் மகிழ்கிறேன்.

நீங்கள் என்னைப் போன்றவர் என்றால், பங்களிக்க இயலாத காலத்திலும் அண்மைய மாற்றங்களைக் கவனித்தவாறே இருந்திருப்பீர்கள். எனினும், இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் விக்கிப்பீடியாவின் செயற்பாடுகளை அறிய நமது ஆண்டு அறிக்கைகளைப் பாருங்கள். குறிப்பாக, மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரையும் உள்ளடக்கி வளர்ந்து வரும் தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தைக் காணுங்கள்.

பலரும் இணைந்து பங்களிக்கும் போது, அவ்வப்போதாவது வந்து செல்லும் போது, ஏற்கனவே இருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியாகவும் உந்துதலாகவும் இருக்கும். உங்களைப் போன்றோரிடம் இருந்து புதுப்பயனர்களும் நிறைய கற்றுக் கொள்ள இயலும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இதற்கு மேல் உங்களுக்குத் தெரியாதா என்ன :) ? உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். அன்புடன்...

--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 08:52, 9 திசம்பர் 2014 (UTC)Reply

விக்கித்திட்டம் 100, 2015, அழைப்பு

தொகு
 
அனைவரும் வருக

வணக்கம் மதனாஹரன்/தொகுப்பு ௩!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:15, 29 திசம்பர் 2014 (UTC)Reply
அட, மீண்டும் உங்கள் பங்களிப்புகளைக் காண மிக்க மகிழ்ச்சி. கலக்குங்க ! --இரவி (பேச்சு) 12:18, 22 சனவரி 2015 (UTC)Reply


வேதியியல் பெயரீடு

தொகு

மதனாகரன், oxide என்பதை தமிழக வழக்கில் ஆக்சைடு என்றும் இலங்கை வழக்கில் ஒக்சைடு என்றும் எழுதலாம். ஒட்சைட் என்றே நாம் படித்தோம், ஆனாலும் அவ்வாறு எழுதுவது தவறு. Sulphide ஐ சல்பைடு என்றும், Sulphite ஐ சல்பைட்டு (இலங்கை வழக்கு: சல்பைற்(று)) என்றும் எழுதலாம். Vanadium(V) oxide என்பதை வனேடியம்(V) ஆக்சைடு (இன்றைய வழக்கு) என்றோ வனேடியம் ஐயொக்சைடு என்றோ எழுதலாம். விக்கியில் உங்களை மீண்டும் காண மகிழ்ச்சியாயுள்ளது.--Kanags \உரையாடுக 09:19, 1 பெப்ரவரி 2015 (UTC)
http://www.nie.sch.lk/ebook/t11syl16.pdf இந்நூலின் பி. டி. எவ். பதிப்பில் 10ஆம் பக்கத்தைப் பார்வையிடுங்கள். பழைய இலங்கைத் தமிழ் வேதியியல் நூல்களிலும் ஒட்சைட்டு என்ற சொல்லையே பயன்படுத்துவதைப் (ஒட்சைட் அன்று) பார்த்திருக்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 09:24, 1 பெப்ரவரி 2015 (UTC)

ஆமாம், நானும் அவ்வாறே படித்தேன். ஆனாலும், oxide ஏன் ஒட்சைட் என எழுத வேண்டும் என்று தெரியவில்லை.--Kanags \உரையாடுக 09:35, 1 பெப்ரவரி 2015 (UTC)

இன்னும் சில இலங்கை நூல்களில் மக்னீசியம் என்பதைத் தவிர்த்து மகனீசியம் என்று எழுதுவதையும் அவதானித்துள்ளேன். தற்போது பாடநூல்களில் மக்னீசியம் என்றே எழுதுகின்றார்கள். சல்பைடு (Sulphide), சல்பைட்டு (Sulphite) என்று வேறுபடுத்துவதிலும் சிக்கலுள்ளதாகக் கருதுகின்றேன். "Sulphideஐ", "Sulphiteஐ" ஆகிய இரண்டையுமே "சல்பைட்டை" என்றே எழுத வேண்டி வரும். முறையே, சல்பைட்டு (அல்லது சல்பைடு), சல்பைற்று என்று பயன்படுத்தினால் இச்சிக்கல் எழாது. --மதனாகரன் (பேச்சு) 09:27, 1 பெப்ரவரி 2015 (UTC)

மகனீசியம் என எழுதுவது தமிழ் இலக்கண முறைப்படி சரியாக இருக்கலாம். ஆனாலும் மக்னீசியம் (தமிழக வழக்கு) என்று எழுதுவதில் தவறில்லை..--Kanags \உரையாடுக 09:35, 1 பெப்ரவரி 2015 (UTC)
Sulphideஐ - சல்பைடை, Sulphiteஐ - சல்பைட்டை.--Kanags \உரையாடுக 09:35, 1 பெப்ரவரி 2015 (UTC)

"நாடு + ஐ" என்பது "நாட்டை" என்றவாறே சேர்ந்து வருதல் வேண்டும். "நாடை" என்று எழுதுவது தவறு. சில விளம்பரங்களில் இவ்வாறான வேற்றுமை உருபுகளின் தவறான பயன்பாட்டைக் கண்டிருக்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 09:44, 1 பெப்ரவரி 2015 (UTC)

தேவையேற்படின் எழுதுவதில் தவறில்லை. சல்பைற்று எனத் தமிழகத்தில் எழுதுவதில்லை. அவர்களில் உச்சரிப்பை நாம் மாற்ற முடியாது. அதனாலேயே சிக்கல்.--Kanags \உரையாடுக 09:55, 1 பெப்ரவரி 2015 (UTC)

"க்ஸ" அல்லது "க்ஷ" என்பதற்குப் பதிலாகத் தமிழில் "ட்ச" என்பதைப் பயன்படுத்தும் வழக்கம் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றது (எடுத்துக்காட்டு: நக்ஷத்திரம்-நட்சத்திரம்). ஆக்ஸைடு என்பதையும் அவ்வாறு தமிழ்ப்படுத்தியே இலங்கை நூல்களில் எழுதி வருகின்றார்கள். --மதனாகரன் (பேச்சு) 10:03, 1 பெப்ரவரி 2015 (UTC)

க்‌ஷ என்பதற்கு உங்கள் உதாரணம் சரி. க்ஸ என்பதற்கு வேறு உதாரணம் உள்ளதா? ஒக்ஸைடு என்பதும் ஒக்சைடு என்பதும் ஒரே ஒலிப்புத் தானே?--Kanags \உரையாடுக 10:11, 1 பெப்ரவரி 2015 (UTC)
வல்லின மெய்யை அடுத்து வல்லின உயிர்மெய் வரும்போது க-ka (வெட்கம்), ச-cha (அட்சரம்), த-tha (சத்தம்), ப-pa (நட்பு) என்றவாறே ஒலிக்கும். மேலும் ககர மெய்யையடுத்துச் சகர மெய் வருவதில்லையே. ஆக்சைடு என்பதிலுள்ள சகரமானது ஸகரத்தைப் போல் ஒலிக்குமெனின், தமிழ்நாட்டு நூல்களில் ஆக்சைடு என்றே பயன்படுத்தியிருப்பார்கள் என்று நினைக்கின்றேன். தேவையில்லாமல் ஆக்ஸைடு என ஸகரத்தைப் புகுத்தி எழுதியிருக்க மாட்டார்கள். --மதனாகரன் (பேச்சு) 10:16, 1 பெப்ரவரி 2015 (UTC)


மீண்டும் வருக

தொகு

வெகுநாட்கள் கழித்து உங்களுடைய விக்கி தொகுப்புகளைப் பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நலமாக உள்ளீர்களா? விக்கிப்பீடியாவிற்கு மீண்டும் வருக என வரவேற்கிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:17, 16 ஏப்ரல் 2015 (UTC)


விக்கித்தரவு

தொகு

மதனாகரன், உங்களுக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை. விக்கியிடை இணைப்புகள் தற்போது விக்கித்தரவிலேயே இணைக்கப்படுகின்றன. இங்கு விளக்கியிருக்கிறார்கள். நீங்கள் புதிதாகக் கட்டுரை எழுதும் போது, புதிய கட்டுரையில் இருந்து கொண்டு, இடப்பக்கத்தில் இறுதியில் Languages என்பதில் Add links என்பதை சொடுக்க வேண்டும். அப்போது தோன்றும் புதிய பெட்டியில் Language என்பதில் "en" எனவும் Page என்பதில் ஆங்கிலக் கட்டுரையின் சரியான பெயரையும் எழுதி, "Link with page" என்பதை அழுத்துங்கள். அக்கட்டுரையில் வேறு மொழி விக்கிக் கட்டுரைகள் இருந்தால், அவையும் பட்டியலில் தோன்றும். அதைக் confirn பண்ணுங்கள். உடனடியாக அனைத்து மொழி விக்கிக் கட்டுரைகளிலும், தமிழ்க் கட்டுரைக்கான இணைப்பு சேர்ந்து விடும். இவ்வாறு சேர்த்த பின்னர், கட்டுரைத் தலைப்பை மாற்றினீர்கள் என்றால், அது தானியங்கியாக அனைத்து விக்கிகளிலும் மாற்றப்பட்டு விடும். முன்னர் இப்பணிகளைச் செய்து வந்த தானியங்கிகளுக்கு இப்போது வேலையில்லை.--Kanags \உரையாடுக 09:56, 19 ஏப்ரல் 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு

தொகு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:47, 7 மே 2015 (UTC)Reply


வணக்கம் மதனாஹரன்,

நேற்று (12/06/15) எனது "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" கட்டுரையின் பெயர்மாற்றத்துக்கு உதவியிருந்தீர்கள். நீங்கள் (எதிர்வு)கூறியது போல நானும் இலங்கையைச் சேர்ந்தவர் தான். எனது நண்பர் செல்வராசா கேசவன் அவர்களின் உதவியுடன் நான் கட்டுரைகளை எழுதுகின்றேன். நீங்கள் கடந்த நான்கு வருடமாக விக்கிப்பீடியாவில் பங்களிப்புச் செய்வது எனக்கு ஆச்சரியமளிக்கின்றது. தமிழில் தட்டச்சிட நான் இன்னும் பயின்றுகொண்டிருக்கிறேன். தற்போது, Phonetic Keyboard மூலமாகவே நான் தட்டச்சிடுகின்ற போதிலும் அது எனக்கு முழுமைகாகத் திருப்தியளிப்பதில்லை. எனவே ஒரு கட்டுரையை முழுமையாக எழுதமுடிவதில்லை. ஆதலால் மணற்பெட்டியின் உதவியுடன் கட்டுரைகளை முழுதாக எழுதிச் சோதித்துப் பிற்பாடு அதைத் தமிழ் விக்கிபீடியாவில் இணைக்கும் பழக்கத்திற்கு மாறியுள்ளேன். உலகளவில் 20ஆவது இடத்தில் தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை இருக்கும்போதிலும் விக்கிபீடியாக் கட்டுரைகளின் எண்ணிக்கையில் 62ஆம் இடத்தையே பிடித்திருப்பது வருத்தமளிக்கிறது. விக்கிபீடியாவை ஒரு நம்பத்தகுந்த, மிகைப்படுத்தல்களைத் தவிர்க்கும் கலைக்களஞ்சியமாக மாற்றுவது எனது எண்ணமாகும். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

அன்புடன், Chenkodan Sabalingam

வணக்கம் மதன்

தொகு

அரிய பல கலைகள் யாவற்றையும் நம்மொழிக்குள் விரைவாக அழைத்துவர வேண்டும் என்பது நம் நோக்கம்.பேச்சுத் தமிழில் வேறுபாடுகள் இருப்பதை தவிர்க்க இயலாது. ஆனால் எழுத்துத் தமிழ் ஒரே மாதிரியாகத்தான் எழுதுகிறோம். சிற்சில வேறுபாடுகள் இருக்கின்றன. அவ்வப்போது அல்லது போகிற போக்கில் அவற்றைச் சீர்மைப்படுத்தி களைந்து விடலாம். எளிய சொற்களைக் கொண்டு குறிப்பாக அறிவியலை எல்லோருக்கும் புரியும் வகையில் நல்ல தமிழில் எழுத முயற்சிப்போம். பயனர்களும் கட்டுரைகளும் அதிகமாகவேண்டும். தாங்கள் வழங்கிய பதக்கம் உற்சாகம் அளித்தது. நன்றி . அன்புடன் --கி.மூர்த்தி 15:25, 14 சூன் 2015 (UTC)

உதவி தேவை

தொகு

நன்னூல் என்ற வார்ப்புரு முயற்சித்தேன். தொடர்ந்து அதை எவ்வாறு பயன்படுத்துவது தெரியவில்லை. உதவவும் அன்புடன் --கி.மூர்த்தி 16:32, 22 சூன் 2015 (UTC)

@கி.மூர்த்தி: வார்ப்புரு:நன்னூல் என்ற தலைப்பில் புதிய கட்டுரையைத் தொடங்கி, அதில் இடுங்கள். --மதனாகரன் (பேச்சு) 16:40, 22 சூன் 2015 (UTC)Reply

நன்னூல் என்ற தலைப்பில் வேறு கட்டுரை விக்கியில் உள்ளதே?--கி.மூர்த்தி 16:46, 22 சூன் 2015 (UTC)
@கி.மூர்த்தி: வார்ப்புரு:நன்னூல் என்ற இணைப்பில் உங்கள் வார்ப்புருவை இடுங்கள். Alkali என்பதற்குத் தமிழ்நாட்டுப் பாடநூல்களின் பயன்படுத்தப்படும் சொல்லை அறியத் தருவீர்களா? --மதனாகரன் (பேச்சு) 16:50, 22 சூன் 2015 (UTC)Reply
காரம் = alkali , alkaline = காரத்தன்மையுள்ள --கி.மூர்த்தி 17:04, 22 சூன் 2015 (UTC)
@கி.மூர்த்தி: அப்படியானால் Base என்பதற்கு? --மதனாகரன் (பேச்சு) 17:07, 22 சூன் 2015 (UTC)Reply
ஒரு பொருள் பன்மொழி தமிழுக்கு புதியதல்லவே! நன்னூல் என்ற கட்டுரையில் {{நன்னூல்}} என்ற வார்ப்புருவை இட்டேன். ஆனால் இடம்பெறவில்லையே? --கி.மூர்த்தி 17:11, 22 சூன் 2015 (UTC)
இலங்கையில் Base என்பதற்கு மூலம் என்று பயன்படுத்தப்படுகின்றது. Baseஇன் ஒரு பிரிவான Alkaliஐயும் Baseஐயும் ஒரே சொல்லால் அழைப்பதை விட Base என்பதற்கு மூலம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமாகப்படுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 17:14, 22 சூன் 2015 (UTC)Reply
வரலாற்றுடன் நகர்த்தியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 17:20, 22 சூன் 2015 (UTC)Reply

acids and bases

தொகு

காரம் என்ற அடிப்படையில் தான் 6 முதல் 12 வகுப்பு வரையில் அமிலங்கள், காரங்கள் என்ற பொருளில் பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.நான் பயன்படுத்தும் சொற்கள் யாவும் அதன் அடிப்படையில் தான் இருக்கும். --கி.மூர்த்தி 17:17, 22 சூன் 2015 (UTC)

உதவி தேவை

தொகு

வணக்கம் மதன். சூரிய செல்பேசி மின்னேற்றி கட்டுரையில் படங்கள் இணைக்க முடியவில்லை. உதவவும். --கி.மூர்த்தி 04:46, 28 சூன் 2015 (UTC)  Y ஆயிற்று --மதனாகரன் (பேச்சு) 04:57, 28 சூன் 2015 (UTC)Reply

நன்றி மதன். அதே கட்டுரையில் படக்காட்சியகம் பகுதியில் மேலும் இரண்டு படங்கள் பதிவேற்ற வேண்டும். --கி.மூர்த்தி 05:11, 28 சூன் 2015 (UTC)

மதனாகரன் தமிழகப் பாடநூல்களில் பெட்ரோல் என்றுதான் எழுதப்படுகிறது. உச்சரிப்பும் கூட pet rol கிட்டத்தட்ட பொருந்திதான் வருகிறது. சிலவற்றை விட்டுக்கொடுக்கலாமே. அன்புடன் --கி.மூர்த்தி 08:23, 4 சூலை 2015 (UTC)Reply

பெட்ரோல் பரவலான பயன்பாட்டில் உள்ள சொல்.--Kanags \உரையாடுக 09:22, 4 சூலை 2015 (UTC)Reply
பெற்றோல் என்ற சொல் இலங்கையில் பரவலான பயன்பாட்டிலுள்ள சொல். தமிழ் இலக்கண விதிகளுக்குட்பட்டு அமையும் சொல் பரவலான பயன்பாட்டிலிருந்துங்கூட, இலக்கண விதிகளுக்கமையாத சொல்லை முதன்மைப்படுத்துவது (ஒட்சிசன்-ஆக்சிசன், பெற்றோல்-பெட்ரோல், அற்கேன்-ஆல்க்கேன், நைதரசன்-நைட்ரசன், கோபாற்று-கோபால்ட், காபனீரொட்சைட்டு-கார்பன்டைஆக்சைடு) ஏனென்று புரியவில்லை. --மதனாகரன் (பேச்சு) 09:45, 4 சூலை 2015 (UTC)Reply
இவை தமிழக-இலங்கை பயன்பாட்டு வேறுபாடுகள். அவைகளும் இலக்கண விதிகளுக்கமையவே எழுதப்பட்டுள்ளன. அது சரி, Oxygen எவ்வாறு ஒ(ட்)சிசன் ஆனது? ஏன் ஒக்சிசன் என எழுதக்கூடாது? இதற்கு இலக்கண விதி உள்ளதா? அதற்காகத்தான் Rajapaksa வை ராஜபக்ச என எழுதாமல் ராஜபக்‌ஷ என எழுதுகிறார்களா?--Kanags \உரையாடுக 10:22, 4 சூலை 2015 (UTC)Reply
இலங்கை வழக்கு எப்போதும் சரியென்று கூற வரவில்லை. சரியானதையே பின்பற்ற வேண்டும். இரசாயனவியல், பௌதிகவியல் என்று பயன்படுத்துவதை விட வேதியியல், இயற்பியல் என்று பயன்படுத்துவதே சாலச் சிறந்தது. இதனைப் பற்றி மேலுங் கருத்துகளைப் பரிமாற விரும்பவில்லை. செல்வா பல இடங்களில் பல தடவைகள் இதனைப் பற்றிக் கூறியிருக்கின்றார்.
பார்க்க: மெய்ம் மயக்கம், en:Exonym and endonym --மதனாகரன் (பேச்சு) 10:37, 4 சூலை 2015 (UTC)Reply
இலங்கை வழக்கு , தமிழக வழக்கு என்று தனித்தனியாக பார்ப்பதை விட அறிவியல் தமிழ் என்ற நோக்கில்தான் நாம் பார்க்க வேண்டும். ஆங்கில எழுத்துக்களின் உச்சரிப்பை அடிப்படையாக வைத்துதான் பெயர்ச் சொற்களை நாம் மொழி பெயர்த்து வருகிறோம். இலக்கியக் கட்டுரைகளுக்கு இலக்கணம் அளவு கோலாக இருக்கட்டும். ஆனால் அறிவியல் கட்டுரைகள் எளிமையாகப் புரியும் வகையில் இருக்க வேண்டும். அதே நேரத்தில் பயன்பாட்டில் உள்ள் சொற்கள் இருந்தால்தான் கட்டுரைகள் படிக்கத் தூண்டும் என்பது என் நம்பிக்கை. --கி.மூர்த்தி 10:52, 4 சூலை 2015 (UTC)

ஹைட்ரஜன், ஹீலியம், லித்தியம், நைட்ரஜன், ஆக்ஸிஜன், Fளோரின் [1] என்று எழுதுவது துல்லியமாக ஒலிப்புகளைக் காட்ட உதவும். குறிப்பு:-

  • இந்தியில் पोटैशियम (போடைஸி2யம) என்று எழுதுகின்றார்கள்.
  • தெலுங்கில் నత్రజని (நத்ரஜனி) என்று எழுதுகின்றார்கள். --மதனாகரன் (பேச்சு) 12:59, 4

சூலை 2015 (UTC)

அண்ணா!தங்கள் பயனர் பக்கத்தைப் போன்று என் பயனர் பக்கத்தையும் அழகாக மாற்றுவது எப்படி?shaaima*** (பேச்சு) 09:29, 14 சூலை 2015 (UTC)Reply

விக்கிநிரலமைப்பைச் சற்றுப் புரிந்து கொண்டால் ஏனைய பயனர் பக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, அவற்றிலிருந்து படியெடுத்துத் தேவையான மாற்றங்க~ளைச் செய்யலாம். விக்கிநிரலமைப்பில் நல்ல புரிதல் இருந்தால் தானாகவே பயனர் பக்க வடிவமைப்பை உருவாக்க முயலலாம். பேச்சுப்பக்கத்தில் புதிய செய்தியை இடும்போது பக்கத்தின் அடியில் இடுங்கள். --மதனாகரன் ([[பயனர்

பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 09:11, 14 சூலை 2015 (UTC)

படியெடுத்து என்றால்(copy)செய்வதா?shaaima*** (பேச்சு) 09:29, 14 சூலை 2015 (UTC)Reply

ஆம். --மதனாகரன் (பேச்சு) 09:35, 14 சூலை 2015 (UTC)Reply

உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை

தொகு

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 18:05, 4 சூலை 2015 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

தொகு
 
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:20, 7 சூலை 2015 (UTC)Reply

  விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 08:58, 8 சூலை 2015 (UTC)Reply

தெ.ஞானசுந்தரம்-பிழைத் திருத்தம்

தொகு

அன்புள்ள தம்பி மதனாகரனுக்கு

பெங்களூர் என்பது பழைய பெயர்; கருநாடக அரசு அதை பெங்களூரு என்று மாற்றிச் சில ஆண்டுகள் ஆகிவிட்டன.

கட்டுரைத் தலைப்பில் மட்டுமே அடைமொழிகள் சேர்க்கக்கூடாது என்பது விதி. கட்டுரைக்குள் செய்திகளினூடே முனைவர் என்னும் அடைமொழியைப் பெயரோடு இணைத்து எழுதலாம். பல கட்டுரைகளில் அவ்வாறு எழுதப்பட்டுள்ளன.

--Semmal50 (பேச்சு) 04:41, 11 சூலை 2015 (UTC)Reply

கட்டுரைக்குள் அவர் முனைவர் பட்டம் பெற்ற செய்தியைக் குறிப்பிட்டால் மட்டும் போதும். முனைவர் என்ற அடைமொழியைச் சேர்த்து எழுதுவதில்லை. அவ்வாறு எழுதப்பட்டுள்ள மற்றக் கட்டுரைகளிலும் மாற்ற வேண்டும். பார்க்க: Subsequent Use
இங்குக் கூறியபடி, பெங்களூர் என்றே அழைக்கலாம். ஆயினும் பெங்களூரு என்றெழுதுவதிலும் தவறில்லை. அதனை நீங்கள் எழுதியபடியே மாற்றியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 06:38, 11 சூலை 2015 (UTC)Reply
பட்டங்கள் குறித்து மதனாகரன் கூறுவது சரியானதே. தெ. ஞானசுந்தரம் கட்டுரையில் அவர் முனைவர் பட்டம் பெற்றதை கட்டுரையில் குறிப்பிட்டால் போதுமானது. முனைவர் தெ. ஞானசுந்தரம் எனக் கட்டுரையில் எழுதத் தேவையில்லை. ஆனாலும் இவரது கட்டுரையில் //இவர் மு. வரதராசனின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.// என்ற வரிகள் "இவர் பேராசிரியர் மு, வரதராசனாரின் மாணவர் ஆவார்" என்று எழுதலாம். அத்துடன் பொதுவாக விக்கிக் கட்டுரைகளில் "என்பது குறிப்பிடத்தக்கது" என்ற சொற்றொடரை முற்றாகத் தவிர்ப்பது நல்லது. இன்றைய தமிழ் ஊடகங்களிலும், கட்டுரைகளிலும் இச்சொற்றொடர் இல்லாமல் எந்தச் செய்தியும் எழுதப்படுவதாகத் தெரியவில்லை. இச்சொற்றொடர் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்:)--Kanags \உரையாடுக 07:00, 11 சூலை 2015 (UTC)Reply

யெசு வங்கி

தொகு

வணக்கம்! யெசு வங்கி கட்டுரையில் speed delete வார்ப்புரு இட்டதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என நான் குறிப்பிட்டதற்கான காரணங்கள்:

  1. கட்டுரையாளர் கடந்த ஓராண்டு காலமாக நல்லமுறையில் பங்களித்து வருகிறார். இதுபோன்ற வார்ப்புருக்கள் அவரின் ஊக்கத்தைக் குறைக்கக்கூடும்.
  2. கட்டுரைகள் குறைந்தது 3 வாக்கியங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்பது கட்டுரையாளருக்குத் தெரியாது என்றே நான் கருதுகிறேன். ஒருமுறை அவருக்குத் தெரிவிப்பது மிகுந்த நன்மை தரும். அதற்குப் பிறகும் அவர் விக்கி விதிகளை கடைப்பிடிக்காதிருந்தால், வார்ப்புரு இடலாம்.
  3. இந்தக் கட்டுரையில் 2 வாக்கியங்களே இருந்தன என்றாலும், பல முக்கியமான தகவல்கள் வேறுவடிவில் இருந்தன. எனவே கட்டுரையாளருக்கு விதிமுறை குறித்து அறியத்தருவது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

விக்கியின் விதிகளை இன்னமும் கூடுதல் பொறுமையுடன் பயனர்களுக்கு நாம் தெரிவித்து, அரவணைத்துச் சென்றால்... தமிழ் விக்கி மேலும் வளரும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:12, 15 சூலை 2015 (UTC)Reply

சத்திகுமாரின் பேச்சுப்பக்கத்தில் எடுத்துரைத்துள்ளேன். சுற்றுக்காவல் செய்யப்படாத பக்கம் என்பதால் விரைவு நீக்கல் வார்ப்புருவை இட்டு வைத்தால், நிருவாகிகளின் பார்வையிலோ சுற்றுக்காவலர்களின் பார்வையிலோ படுமென நினைத்தேன். அவ்வாறே தாங்கள் அதனைக் கவனித்தீர்கள். நன்றி. --மதனாகரன் (பேச்சு) 03:42, 16 சூலை 2015 (UTC)Reply

ஐயம்...

தொகு

//கைபேசி செயலியில் செய்யப்பட்டத் தொகுப்பு, கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு)// கைப்பேசி வழியான இணைய இணைப்பினை கணிப்பொறியில் பெற்று தொகுப்புகளைச் செய்கிறீர்களா? அல்லது நேரடியாகக் கைப்பேசியில் தொகுப்புகளைச் செய்கிறீர்களா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:29, 18 சூலை 2015 (UTC)Reply

நேரடியாகக் கைப்பேசியில் கைப்பேசிச் செயலியைப் பயன்படுத்துகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 17:32, 18 சூலை 2015 (UTC)Reply
மொழிபெயர்ப்பு விக்கியிலும் உரிய திருத்தங்களைச் செய்ய வேண்டும். செய்யப்பட்ட தொகுப்பு என ஒற்று மிகாமல் வரவேண்டும். --மதனாகரன் (பேச்சு) 18:02, 18 சூலை 2015 (UTC)Reply

ஒற்று மிகாதோ?

தொகு

அன்புத் தம்பி மதனாஹரன் நன்செய் கட்டுரையில் போன்றப் பணப்பயிர்கள் எழுதிய இது சரி என்று எண்ணுகிறேன். தாங்கள் போன்ற பணப்பயிர்கள் என திருத்தம் செய்துள்ளீர்கள். ஒரு சொல்லின் ஈற்றெழுத்து வல்லினமாயும், அடுத்த சொல்லின் முதல் எழுத்து வல்லினமாகவும் வந்தால் முதற்சொல்லின் ஈற்றில் வல்லினம் ஒற்று மிகும் என நான் படித்ததாக ஞாபகம்? கொஞ்சம் பேசுங்களேன். நன்றியுடன் --Yokishivam (பேச்சு) 10:22, 20 சூலை 2015 (UTC)Reply

ஒற்று வராது என்றே நானும் நம்புகிறேன். "போன்றப் பணபயிர்கள்" - "போன்ற அப்பணப்பயிர்கள்" என்பது போல அர்த்தப்படுகிறது.--Kanags \உரையாடுக 10:33, 20 சூலை 2015 (UTC)Reply
போன்ற வேறுப் பணப்பயிர்கள் எனக் குறிக்கவும், ஒரு சொல்லின் ஈற்றெழுத்து வல்லினமாயும், அடுத்த சொல்லின் முதல் எழுத்து வல்லினமாகவும் வந்தால் முதற்சொல்லின் ஈற்றில் வல்லினம் ஒற்று மிகும் என நான் படித்ததாக ஞாபகம்? நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 10:49, 20 சூலை 2015 (UTC)Reply
அன்பு கனக்ஸ் ஒரு சொல்லின் ஈற்றெழுத்து வல்லினமாயும், அடுத்த சொல்லின் முதல் எழுத்து வல்லினமாகவும் வந்தால் முதற்சொல்லின் ஈற்றில் வல்லினம் ஒற்று மிகும் உ.ம். செய்யப் பட்டத்தொகுப்பு--Yokishivam (பேச்சு) 11:00, 20 சூலை 2015 (UTC)Reply
பெயரெச்சமாக இருந்தால் ஒற்று மிகாது (செய்யப்பட்ட தொகுப்பு, போன்ற பணப்பயிர்). மேலே செய்த திருத்தத்தில் வேறு (Other) என்பதும் பெயரெச்சம் போன்றதே. எனவே, ஒற்று மிகாது. வேறுப் பணப்பயிர்கள் என்பது தவறானது. ஒருகாலும் இவ்வாறு வராது (பொதுவான சில கருத்துகளையும் இங்கே கூற விரும்புகிறேன். தமிழ்நாடு அரசு என்பது முற்றிலும் பிழை, தமிழ்நாட்டு அரசு என்றே வரை வேண்டும். நிலைமொழியும் வருமொழியும் பிறமொழிச் சொற்களாக இருந்தால் மட்டும் அம்மொழியின் புணர்ச்சி விதிகளுக்கேற்ப எழுதுவது வழமை. ஞானசம்பந்தர், சோடியம் குளோரைடு, அபூர்வசகோதரர்கள், தேசிய கீதம், தேவாலயம் போன்றவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். கொல்லம் மாவட்டம் என்பது போன்ற சொல்லாட்சிகள் தவறானவை. கொல்ல மாவட்டம் என்றே வரவேண்டும். யாழ்ப்பாணம் மாவட்டம், மரம் வேர், சுரங்கம் பாதை, தமிழ் இணையம் கல்விக்கழகம் என்றெழுத முடியாதல்லவா? தமிழ்நாடு, அரசு ஆகிய இரண்டுந் தமிழ்ச் சொற்களாக இருந்தும் தமிழ்நாடு அரசு என்று எழுதுவது தவறு. இவ்வாறு எழுதினால் வினைத்தொகையாகவே அமையும். தமிழை நாடும் அரசு என்று பொருள் படும். இந்தியநாட்டுமக்கள் என்பதற்குப் பதிலாக இந்தியநாடுமக்கள் என்றெழுத முடியுமா? தற்போது ஒரு திரைப்படத்திற்குக் குழம்பி (Coffeeஐக் குறிப்பது குளம்பி) எனப் பெயர் வைத்துள்ளனர். திரைப்படத் தலைப்புகளில் ஒற்றுப்பிழைகள் (வாயை மூடி பேசவும், வேலையில்லா பட்டதாரி, தமிழ்படம், பம்பரகண்ணாலே) வருவதைப் போல் இவ்வாறான பிழைகளும் வரத் தொடங்கிவிட்டன. ரகர, றகரப் பிழைகள் வரினும் வியப்பில்லை.). வேற்றுக்கிரகம் என்பது போல் வேற்றுப்பணப்பயிர் (Foreign என்ற கருத்தில் வருமாயின்) எனலாம். வினையெச்சமாக இருந்தால், மென்றொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் ஒற்று மிகாது (என்று கூறினேன், வந்து பார்த்தான், கண்டு கொண்டேன்). ஏனைய வினையெச்சங்களிலேயே ஈற்றில் வல்லினம் வந்தால் ஒற்று மிகும் (எடுத்துக் கொண்டேன்). அங்கு, இங்கு, எங்கு ஆகிய சொற்களின் பின்னும் ஒற்று மிகும். தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் ஒற்றுமிகும், மிகா இடங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். --மதனாகரன் (பேச்சு) 13:16, 20 சூலை 2015 (UTC)Reply
  விருப்பம் -- மயூரநாதன் (பேச்சு) 02:49, 23 சூலை 2015 (UTC)Reply

நன்றி

தொகு

அருமைத்தம்பி மதனாஹரன் நன்றி!! மேலேயுள்ள விடயங்களை எனது தமிழாசிரிய நண்பரிடம் விவாதித்தோம். முற்றிலும் சரியே நானே தங்களுக்கு எழுத நினைத்தேன், தாங்களே எழுதிவிட்டீர்கள். ஒரு மகிழ்ச்சி 40 ஆண்டுகளுக்கு முன்பு படித்த இலக்கணத்தை மீண்டும் படிக்கத் தூண்டியமைக்கு நன்றி--Yokishivam (பேச்சு) 14:59, 22 சூலை 2015 (UTC)Reply

மிகுந்த மகிழ்ச்சி. நன்றி. --மதனாகரன் (பேச்சு) 15:08, 22 சூலை 2015 (UTC)Reply
  விருப்பம்--Kanags \உரையாடுக 21:15, 22 சூலை 2015 (UTC)Reply
  விருப்பம்-- மயூரநாதன் (பேச்சு) 02:48, 23 சூலை 2015 (UTC)Reply
  விருப்பம்--மணியன் (பேச்சு) 04:17, 23 சூலை 2015 (UTC)Reply

உளங்கனிந்த நன்றி!

தொகு
 

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:01, 25 சூலை 2015 (UTC)   விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 17:29, 25 சூலை 2015 (UTC)Reply

கருத்துக் கோரல் - த.இ.க ஊடாக த.வி வளர்ச்சி வாய்ப்புக்கள்

தொகு

தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான வாய்ப்புக்கள், செயற்திட்டங்கள் பற்றி உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்

--Natkeeran (பேச்சு) 13:05, 29 சூலை 2015 (UTC)Reply

நன்றி

தொகு

சாத்தம் கப்பற்பட்டறை என்ற கட்டுரையில் தேவையான திருத்தங்களை செய்து, வழிகாட்டிய உங்களுக்கு நன்றி. தமிழன்னையின் அன்பு உங்கள் மேல் என்றும் நீங்காமல் நிலைக்கட்டும்.

செலின் ஜார்ஜ் (பேச்சு) 03:27, 11 ஆகத்து 2015 (UTC)Reply

கவனிக்க

தொகு

பேச்சு:தமிழகத்தில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:36, 14 ஆகத்து 2015 (UTC)Reply

புகைப்படம்

தொகு

உலோகண்ட்வாலா மினர்வா கட்டுரையில் புகைப்படம் பதிவேற்றவும் --கி.மூர்த்தி 08:26, 16 ஆகத்து 2015 (UTC)

ஆனால் கட்டுரையில் படம் இடம் பெற்வில்லை மதன்--கி.மூர்த்தி 08:51, 16 ஆகத்து 2015 (UTC)
 Y ஆயிற்று ஓர் இடைவெளியால் ஏற்பட்ட சிக்கல்.   --மதனாகரன் (பேச்சு) 08:55, 16 ஆகத்து 2015 (UTC)Reply
மதனாகரன் புகைப்படம் பதிவேற்றியிருக்கிறேன். வந்திருக்கிறதா என சரிபார்க்கவும். --கி.மூர்த்தி 12:57, 20 ஆகத்து 2015 (UTC)Reply
ஆம், வந்துள்ளது. --மதனாகரன் (பேச்சு) 13:06, 20 ஆகத்து 2015 (UTC)Reply
குறிப்புகள் போதுமா? --கி.மூர்த்தி 13:45, 20 ஆகத்து 2015 (UTC)
Return to the user page of "மதனாஹரன்/தொகுப்பு ௩".