பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy/தொகுப்பு 1
|
---|
1 2 3 4 5 6 |
வாருங்கள்!
வாருங்கள், Dineshkumar Ponnusamy, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--சோடாபாட்டில்உரையாடுக 13:40, 28 நவம்பர் 2011 (UTC)
இறுதியில் பிற மொழி இணைப்பு
தொகுநான் மற்ற மொழி கட்டுரைகளில் இருந்து, சிலவற்றை தமிழில் மொழிபெயர்க்க விரும்புகிறேன், மற்ற மொழி கட்டுரை பக்க பட்டையில் அதனை சேர்ப்பது எப்படி.. நீங்கள் உதவ முடியுமா?
- கட்டுரையின் இறுதியில் பிற மொழி இணைப்புகள் சேர்க்கலாம். எ.கா [[en: english language title]] “english language title" என்ற ஆங்கிலக் கட்டுரைக்கு இடது பட்டையில் இணைப்பு தோன்றி விடும். அது போலவே பிற மொழிகளுக்கும். எடுத்துக் காட்டாக இந்தியா என்ற பக்கத்தைத் தொகுத்து இறுதிப்பகுதியில் பாருங்கள். பிற மொழி இணைப்புகள் தெரியும்.
தங்களுடைய உதவிக்கு மிகவும் நன்றி. மற்றவகளுடைய பார்வைக்காக என்னுடைய பேச்சு பகுதியில் சேமித்து வைக்கிறேன்.
அனுபவம்
தொகுஉங்கள் அனுபவம் கட்டுரையில் எந்தத் தகவலும் சேர்க்கப்படாததால் அது நீக்கப்பட்டது. உங்களிடம் இப்போது போதியளவு தகவல் இருந்தால் மீண்டும் எழுதத் தொடங்குங்கள். கட்டுரை கலைக்களஞ்சிய நடையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உசாத்துணைக்கு ஆங்கில விக்கிக் கட்டுரையைப் பாருங்கள். கட்டுரையின் ஆரம்பத்தில் {{Underconstruction}} என்ற வார்ப்புருவையும் சேர்க்கலாம். தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 08:05, 9 பெப்ரவரி 2012 (UTC)
- அனுபவம் கட்டுரையில் நீங்கள் தந்துள்ள தகவல் அனைத்தும் விக்சனரியில் உள்ளன.--Kanags \உரையாடுக 08:16, 9 பெப்ரவரி 2012 (UTC)
- அனுபவம் கட்டுரையில் மேலும் பல தகவல்களை சேகரித்துக்கொண்டு வருகிறேன், விரைவில் தொகுத்தல் பணி நிரைவு பெரும். தங்களுடைய உதவிக்கு நன்றி.--~~பயனர்:Dineshkumar_Ponnusamy~~
சுப்பிரமணிய பாரதியார் பக்க நீக்கம்
தொகுசுப்பிரமணிய பாரதியார் பக்கம் 17 ஜனவரி 2012 அன்று என்னால் நீக்கப்பட்டது. இதற்கான காரணம் பின்வருமாறு.
- பொதுவாக விக்கிமேற்கோள் தளத்தில் புகழ்பெற்றவர்களின் மேற்கோள்கள் இடுவதே சிறப்பு.
- பாடல்கள் மற்றும் நூல்களை விக்கிமூலம் அல்லது விக்கிநூல்கள் ஆகிய தளங்களில் பதிவு செய்யலாம். இதில் பதிவு செய்வதில்லை.
மேற்கூறிய அந்த பக்கத்தில் பாடல்கள் மட்டுமே இருந்தது. எனவே அந்தப்பக்கம் நீக்கப்பட்டது. மேலும் தங்கள் கருத்துகளை விக்கிமேற்கோள் தளத்தின் ஆலமரத்தடியில் அல்லது எனது பேச்சுப்பக்கத்தில் தெரிவியுங்கள்.--கிருஷ்ணபிரசாத் /உரையாடுக 13:06, 14 பெப்ரவரி 2012 (UTC)
விரிவான கட்டுரைகள் எழுத வேண்டுகோள்
தொகுவணக்கம் Dineshkumar Ponnusamy. தங்கள் கட்டுரையாக்கங்கள் நன்று. ஒரே ஒரு வேண்டுகோள்: தமிழ் விக்கிப்பீடியா தொடக்கம் முதலே அனைத்துப் பயனர்கள் உருவாக்கிய பெரும்பாலான குறுங்கட்டுரைகளும் விரிவாக்கம் அடையாமல் அப்படியே தேங்கி விடுவதையே கண்டு வருகிறோம். எனவே, கட்டுரையைத் தொடங்கும் போதே இயன்ற அளவு விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும். தொடர்ந்து பல குறுங்கட்டுரைகளைத் தொடங்காமல், ஒரு சில கட்டுரைகளில் மட்டும் கவனம் செலுத்தினால், பிற பயனர்களும் கூட இணைந்து பங்களிப்பார்கள். தகவல் செறிவுள்ள கட்டுரைகள் முதற்பக்கக் கட்டுரைகளாகவும், உங்களுக்குத் தெரியுமா துணுக்குகளாகவும் இடம்பெற்று கூடுதல் கவனமும் பெறும். நன்றி. --இரவி (பேச்சு) 08:43, 19 மார்ச் 2012 (UTC)
- தங்களுடைய அறிவுரைக்கு நன்றி, நான் துவங்கிய கட்டுரைகளை இந்த மாத இறுதிக்குள் முடித்து விட திட்டமிட்டுள்ளேன்; புதிய கட்டுரைகள் தொடங்குவதையும், தற்காலிகமாக நிறுத்தி உள்ளேன். --~~தினேஷ்குமார் பொன்னுசாமி~~ 11:30, 19 மார்ச் 2012 (UTC)
புரிதலுக்கு நன்றி :) தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 09:45, 19 மார்ச் 2012 (UTC)
- தாங்கள் தொடங்கிய சில கட்டுரைகள் குறிப்பாக மாலை, வம்சம் போன்ற கட்டுரைகள் ஓரிரு வரிகளில் இருப்பதால் அதை நான் நீக்கம் செய்திருக்க முடியும். இருப்பினும் இக்கட்டுரைகளை விரிவாக்கம் செய்தால் சிறப்பான கட்டுரையாக அமையலாம் என்பதற்காகவே குறிப்பிட்ட கால அளவுடைய நீக்கலுக்கான வார்ப்புரு கட்டுரையின் மேற்பகுதியில் என்னால் இணைக்கப்பட்டது. இக்கட்டுரைகளை நல்லமுறையில் விரிவாக்கம் செய்து தாங்கள் நீக்க வேண்டுமே தவிர, தாங்கள் எவ்வித விரிவாக்கமும் செய்யாமல் அதை அலட்சியப்படுத்தி நீக்கி வருகிறீர்கள். இது தவறு என்பதைத் தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:21, 19 மார்ச் 2012 (UTC)
பேச்சு பக்கம் வெற்று
தொகுதினேஷ்.... வணக்கம்! பொதுவாக, பேச்சுப் பக்கங்களின் உள்ளடக்கங்களை நாம் நீக்குவதில்லை. இதனை ஒரு தகவலாக உங்களிடம் சொல்லுகிறேன்.
உங்களின் பேச்சுப் பக்கத்தை நீங்களே 'வெற்று' செய்திருக்கிறீர்கள் என்பதால்.... இது விக்கியின் விதிமுறைகளை பெரிய அளவில் பாதிக்கப் போவதில்லை. (ஆனால், மற்றவரின் பேச்சுப் பக்கத்தை தவறுதலாக 'வெற்று' செய்து விடாதீர்கள்)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:47, 26 மார்ச் 2012 (UTC)
- தங்களுடைய தகவலுக்கு நன்றி, ஏற்கனவே எனது பேச்சு பக்கத்தில் இருந்த தகவல்களுடைய அவசியம் இனி இல்லை; ஆகவே அதனை நீக்கம் செய்தேன்; மற்றவரின் பேச்சுப் பக்கத்தை 'வெற்று' செய்வது, அவர்களுடைய தேவையை பொருத்து வேறுபடலாம், நான் வெற்று செய்யத்தேவை இல்லை. ~~பயனர்:Dineshkumar Ponnusamy~~
தங்கள் பேச்சுப் பக்கத்தில் உள்ள தகவல்களை நீக்குவதும் சரியானதல்ல. பழைய உரையாடல்களைப் பரணுக்குத் தள்ளுவதே நல்லது. பரணுக்குத் தள்ளுவது எப்படி என்று இங்கே பார்க்கவும். பழைய உரையாடல்களை நீக்குவது தாங்கள் விமர்சனத்தை மறைக்க முயல்வதாகக் கருதக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தலாம். இந்தப் பக்கத்தை ஒரு முறை வாசியுங்கள். தாங்கள் நீக்கிய உரையாடல்களையும் பழைய நிலைக்குக் கொண்டு வந்து விடுங்கள். --மதனாஹரன் (பேச்சு) 12:38, 26 மார்ச் 2012 (UTC)
நாம் படித்த மின்மடல்களை அழிப்பது போல் பேச்சுப் பக்கத் தகவலை நீக்குவது பெரிய தவறோ ஒழுங்குப் பிறழ்வோ இல்லை. மின்மடலைப் போல் அன்றி, பிறர் நமக்கு இட்ட தகவலுக்கும் நமது பேச்சுப் பக்கமே ஒரே படி என்பதையும் கவனிக்க வேண்டும். ஆனால், பேச்சுப் பக்கச் செய்திகளைப் பரணேற்றுவது நல்ல நடைமுறையாக இருக்கும். பிற்காலத்தில் அவற்றின் மூலம் அறிந்து கொள்ளக்கூடிய செய்திகள் இருக்கலாம்.--இரவி (பேச்சு) 13:26, 26 மார்ச் 2012 (UTC)
- தங்கள் இருவருடைய தகவலுக்கும் நன்றி, இனி என்னுடைய பேச்சு பகுதியை 'வெற்று' செய்வதற்குக் பதிலாக பரணேற்று முறையை பயன்படுத்துகிறேன். ~~பயனர்:Dineshkumar Ponnusamy~~
நல்லது. --மதனாஹரன் (பேச்சு) 09:39, 27 மார்ச் 2012 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா பிறந்தநாள் குழுமம்
தொகு- வரவேற்பிற்கு நன்றி மதனாஹரன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி, 30, மார்ச்சு, 2012.
வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
தொகுஉங்களின் துடிப்பான பங்களிப்பிற்கு நன்றி; எனது உளங்கனிந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுகின்றன.
தொடர்ந்து பணியாற்றி, சிறந்த கட்டுரை பலவற்றை அளிக்க வேண்டுகிறேன். நட்புடன் ---மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:10, 30 மார்ச் 2012 (UTC)
- தங்களுடைய பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள். எனக்கு தெரிந்த தகவல்களை விக்கீயில் இடுவதை பெருமையாக எண்ணுகிறேன். இனிவரும் காலங்களிலும், பெரும்பாலான கட்டுரைகளில் என்னுடைய சிறிய பங்களிப்பாவது இருக்கும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி, 2, ஏப்ரல், 2012.
பதக்கம்
தொகுஅசத்தும் புதிய பயனர் பதக்கம் | ||
தங்கள் துடிப்பான செயற்பாடுகளுக்காக இப்பதக்கம் வழங்கப்படுகிறது. மதனாஹரன் (பேச்சு) 05:36, 14 ஏப்ரல் 2012 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
வாஸ் - வோஸ்
தொகுநண்பரே, இந்திய ஆங்கில மொழி உச்சரிப்பில் WAS என்பது வாஸ் என்று பயன்படுத்தப்பட்டாலும், ஆங்கில மாழி உச்சரிப்பில் WAS என்பது வோஸ் எனும் உச்சரிப்பையே பெறுகின்றது. கட்டுரைகள் இந்திய பயனர்களுக்கு மட்டும் உரியதன்று. இலங்கையில் இந்திய ஆங்கில உச்சரிப்புகள் புழக்கத்தில் இல்லை. ஆகவே இவ்வாறான உச்சரிப்புக்களை இடும் போது சற்று சிந்திக்கவும்.--ச.ஹோபிநாத் (பேச்சு) 11:00, 14 ஏப்ரல் 2012 (UTC)
- விக்கிப்பீடியாவில் இந்திய வழக்கின்படியும் எழுதலாம்; இலங்கை வழக்கின்படியும் எழுதலாம். குழப்பத்தை விளைவிக்கக்கூடிய ஆங்கிலச் சொல் எனின் அடைப்புக்குள் ஆங்கிலச் சொல்லையும் கொடுத்து விட்டால் பிரச்சினை இல்லை. கட்டுரையின் தலைப்பில் இவ்வாறான குழப்பங்கள் இருப்பின், முதன்மை வழக்குத் தவிர்ந்த மற்றைய வழக்கை வழிமாற்றாகக் கொடுத்து விடலாம். --மதனாஹரன் (பேச்சு) 11:45, 14 ஏப்ரல் 2012 (UTC)
- ஹோபிநாத், நான் தொடங்கிய அல்லது, தொகுத்த பக்கங்களில் ஏதேனும் பிழைகளிலிருந்தால் உடனடியாக மாற்றிவிட்டு, என்னுடைய அல்லது, அப்பக்கத்தின் பேச்சு பக்கத்தில் அதற்கான் குறிப்புகளை இடவும். மதனாஹரன் தங்களுடைய விளக்கத்திற்கு நன்றி. இனிவரும் காலங்களில் குழப்பம் விளைவிக்கும் சொல் வரும் பட்சத்தில், அதனைப் பற்றி விவாதித்து விட்டு பின்னர், அவ்வார்த்தைகளை இட முயற்சிக்கிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 14, ஏப்ரல், 2012.
- மன்னிக்கவும் நண்பரே. நான் இந்திய மொழிவழக்கு மட்டும் தான் விக்கியில் இடம்பெறுகின்றது என்று குறிப்பிடவில்லை. எனது இண்டிகா எனும் கட்டுரையில் தினேஸ்குமார் பொன்னுச்சாமி அப் புத்தகத்தின் பெயரை (The Wonder that was India) was - வாஸ் என்று மாற்றியமைத்தமைக்காகத் தான் சொன்னேன். மற்றபடி பிழை கூறவில்லை. நிச்சயம் விக்கி நண்பர்கள் ஒவ்வொருவரும் நல்ல பங்களிப்புக்களைச் செய்கின்றார்கள். மிகுந்த மகிழ்ச்சி. தங்கள் பணியும் தொடரவேண்டும். தினேஷ்குமார் தங்களிற்கும் வாழ்த்துக்கள். நிச்சயமாக தவறுகள் இருந்தால் திருத்திவிடுகின்றேன். தங்களின் வார்ப்புருக்கள் மிக நேர்த்தியாக இடப்பட்டுள்ளன. நானும் முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. முன்னர் இட்டிருந்த வார்ப்புரு பகுதி தற்போது இயங்கவில்லை. நாம் தொடங்கிய கட்டுரைகளை எவ்வாறு வார்ப்புருவில் பயன்படுத்தலாம்?--ச.ஹோபிநாத் (பேச்சு) 15:26, 14 ஏப்ரல் 2012 (UTC)
@தினேஷ்குமார் பொன்னுசாமி: இல்லை. சொற்களை இட்டு விட்டே விவாதிக்கலாம். இவ்விணைப்பைப் பார்க்க. அதன்போது கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பை இட்டால் நன்று. --மதனாஹரன் (பேச்சு) 02:00, 15 ஏப்ரல் 2012 (UTC)
@ஹோபிநாத்: இண்டிகா எனும் கட்டுரையில் அவ்வாறான மாற்றங்கள் ஏதும் தென்படவில்லையே. மூலக்கட்டுரையில் தி வொண்டர் தட் வாஸ் இந்தியா என்று இருந்தபடியால் அவ்வாறு மாற்றியுள்ளார் என எண்ணுகிறேன். எந்த வார்ப்புருப் பகுதி இயங்கவில்லை என்பதை அறியத் தர முடியுமா? --மதனாஹரன் (பேச்சு) 02:00, 15 ஏப்ரல் 2012 (UTC)
- was என்பது அமெரிக்க உச்சரிப்பில் வாஸ் என்றும் பிரித்தானிய உச்சரிப்பில் வோஸ் என்றும் வரும். இந்திய, இலங்கை, அமெரிக்க, பிரித்தானிய என்று விக்கியில் குழப்பம் ஏற்படாதிருக்க, பெரும்பான்மையான வாஸ் என்பதையே பயன்படுத்துவதில் தவறில்லை.--Kanags \உரையாடுக 02:47, 15 ஏப்ரல் 2012 (UTC) விருப்பம் --மதனாஹரன் (பேச்சு) 02:51, 15 ஏப்ரல் 2012 (UTC)
இற்றைப்படுத்தல்
தொகுநீங்கள் தொடங்கிய கட்டுரைகளின் பட்டியல் இற்றைப்படுத்தப்படாமல் இருக்கிறது என்பதை உங்களின் கவனத்திற்கு அறியத் தருகிறேன். --மதனாஹரன் (பேச்சு) 10:31, 18 ஏப்ரல் 2012 (UTC)
- நன்றி மதனாஹரன், இற்றைப்படுத்தப்பட்டது. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:50, 18 ஏப்ரல் 2012 (UTC)
இவற்றையும் பார்க்க
தொகுஇவற்றையும் பார்க்க என்னும் தலைப்பின் கீழ் வழங்கப்படும் இணைப்புகளில் உருவாக்கப்படாத கட்டுரைகளின் இணைப்புகள் (சிவப்பு இணைப்புகள்) தேவை இல்லை. சன் டைரக்ட் கட்டுரையில் அவற்றை நீக்கியுள்ளேன். இவற்றையும் பார்க்க என்னும் தலைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட கட்டுரைகளின் இணைப்பைத் தருவதே வழக்கு. உருவாக்கப்படாத கட்டுரைகளின் இணைப்புகள் கட்டுரைகளின் இடையில் (அளவுக்கதிகமாக இல்லாது) இருக்கலாம். --மதனாஹரன் (பேச்சு) 14:41, 21 ஏப்ரல் 2012 (UTC)
- இனி வரும் காலங்களில் இப்பிழை நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:04, 22 ஏப்ரல் 2012 (UTC)
தினேஷ்குமார், நுபீடியா போன்ற கட்டுரைகளை உங்கள் மணற்றொட்டியில் இட்டு மொழிபெயர்த்து முடித்தவுடன் பொதுவெளிக்கு மாற்றுங்கள். இவ்வாறு முழுமையும் ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகள் தமிழ் விக்கியில் ஏற்றுக்கொள்வதில்லை. அருள் கூர்ந்து உடனடியாக இக்கட்டுரையை உங்கள் பயனர்வெளிக்கு மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 08:54, 26 ஏப்ரல் 2012 (UTC)
- எடுத்துரைத்தமைக்கு நன்றி Kanags, தமிழில் முடிந்த அளவிற்கு மாற்றிவிட்டேன், தற்போது, தொகுத்தல் நடைபெற்று வருகிறது, விரைவில் முடிந்துவிடும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:56, 26 ஏப்ரல் 2012 (UTC)
உங்களின் கவனத்திற்கு
தொகுதினேஷ், வணக்கம்! 'படிமங்கள் காப்பகமும் பறிமாற்றகமும்' எனும் தலைப்பு, 'படிமங்கள் காப்பகமும் பரிமாற்றகமும்' என இருப்பதே சரியானது. உரிய திருத்தம் செய்துகொள்ளுங்கள்.(| உதவிக்கு)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:07, 4 மே 2012 (UTC)
- மாற்றிவிட்டேன், தகவலுக்கு நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:42, 4 மே 2012 (UTC)
ஹவார்ட் கார்ட்டர்
தொகுவணக்கம் தினேஷ், ஒரே நேரத்தில் ஹாவர்ட் கார்ட்டர் கட்டுரையை இருவரும் தொகுக்குத்துள்ளோம். எனது பணி முடிந்து சேமிக்கும் போது தான் கவனித்தேன். எனவே தாங்கள் கட்டுரையில் தொகுக்கப்படுகிறது என்ற வார்ப்புரு இட்டிருந்த போதும், எனது தமிழாக்கத்தினை தங்களுடைய கட்டுரையில் இணைத்துள்ளேன். பொறுக்கவும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:10, 9 மே 2012 (UTC)
- தங்களுடைய பணி நிறைவு பெற்றவுடன், என்னுடைய பேச்சுப் பக்கத்தில் சிறு குறிப்பு இடவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:16, 9 மே 2012 (UTC)
தொகுத்தல் முரண்பாடுகள்
தொகுவணக்கம் தினேஷ். நேற்று ஹாவர்ட் கார்ட்டர் கட்டுரையை கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் எனக்குத் தெரிந்த அளவில் முழுவதும் தமிழாக்கம் செய்துவிட்டு சேமிக்க விழையும் போதுதான் தாஙகள் எனக்கு முன்பாக அக்கட்டுரையைத் தொடங்கிவிட்டது தெரிந்தது. அக்கட்டுரையில் ஆங்கிலப்பகுதிகள் அப்படியே மொழி பெயர்க்கப்படாமல் இருந்ததால், எனது உழைப்பு வீனாகிவிடக்கூடாதே என்ற எண்ணத்தில்தான் எனது கட்டுரையை இதனுடன் இணைத்தேன். அதுவும் தங்களுக்கு அறிவிப்பு செய்தேன் (பொறுக்கவும்= மண்ணிக்கவும்) இதனைத் தாங்கள் தவறாக எண்ணிவிட்டீர்கள் என நினைக்கிறேன். இம்மாதிரி நிகழ்வுகள் எனக்கு பலமுறை நிகழ்ந்துள்ளன. எனவே நான் MS Word ல் தட்டச்சு செய்துவிட்டு சேமிக்கிறேன். தாங்களும் அவ்வாறு முயலலாம் அல்லது மணல்தொட்டியைப் பயன்படுத்தலாம். நன்றி..-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:10, 10 மே 2012 (UTC)
- தவறாக எண்ணவில்லை, யாரும் யாரையும் மன்னிக்கவும் தேவையில்லை :-). இன்று நான் தொகுக்கும் பொழுதும் கூட என்னுடைய பக்கம், வேறொரு பக்கத்திற்கு இருமுறை வழிமாற்றப்பட்டுவிட்டது :-( தகவல்களை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கும் பொழுது, அதிகமான ஆதாரங்களுடன் சேகரிக்க முடியும். தொகுக்கும் பொழுது, தொகுக்கப்படுகிறது வார்ப்புருவையும் தவறாமல் பயன்படுத்துகிறேன். முடிந்த வரையில் அன்றைய தினம் அல்லது அடுத்த நாள் கட்டுரையை முடித்து விடுவேன். கலைச்சொற்கள் சரியாக கிடைக்காத பொழுது அல்லது எனக்கு திருப்திகரமாக இல்லையென்றால் மேலும் சில தினங்கள் எடுத்துக் கொள்வேன். வேறொருவரும் இதே பக்கத்தினை துவங்கி தங்களுடைய உழைப்பையும், நேரத்தினையும் வீண் செய்யவிடாமல் செய்வதே மணல்தொட்டியை பயன்படுத்தாமல் நேரடியாகத் தொகுப்பதற்கு முழுமுதற்காரணம். எனக்கு MS Word ல் தட்டச்சு செய்யத் தெரியாது :-(. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:59, 10 மே 2012 (UTC)
- விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு பக்கத்தில் உள்ள பல்வேறு வழிகளைக் காண்க. நான் பெரிதாக ஏதும் எழுதும் போது பயர்பாக்சு தமிழ் விசை நீட்சி பயன்படுத்தி கூகுள் மடற்பெட்டியில் எழுதி சேமித்து வைத்துக் கொள்வது வழக்கம்.--இரவி (பேச்சு) 09:31, 11 மே 2012 (UTC)
ஆள்கூற்று முறைமை
தொகுஎன்னால் முடிந்தவரை இக்கட்டுரையைத் தொகுக்கிறேன்.--Booradleyp (பேச்சு) 13:29, 10 மே 2012 (UTC) -- நன்றி! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:16, 10 மே 2012 (UTC)
தமிழாக்கம்
தொகுதினேசு, கட்டுரைப் பக்கத்திலும் பேச்சுப் பக்கத்திலும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளை அப்படியே இட்டுப் படிப்படியாகத் தமிழாக்குவதைத் தவிர்த்து வருகிறோம். தங்கள் பயனர் பக்கத்தின் கீழ் ஒரு துணைப்பக்கம் உருவாக்கி தமிழாக்கப் பணியை மேற்கொள்ளலாம். நன்றி--இரவி (பேச்சு) 06:46, 11 மே 2012 (UTC)
- விளக்கத்திற்கு நன்றி இரவி, நான் தொடங்கிய கட்டுரைகளை முடிந்த வரையில் அன்றைய தினம் அல்லது அடுத்த நாள் கட்டுரையை முடித்து விடுவேன். அதனால் அப்பக்கத்திலிருந்து பேச்சு பக்கத்திற்கு கட்டுரைகளை நகர்த்தியுள்ளேன், இனி வரும் காலங்களில் இதுபோல் தவறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:50, 11 மே 2012 (UTC)
- உங்கள் மருத்துவப் படிமங்கள்... பற்றிய கட்டுரையை இங்கு நகர்த்தியிருக்கிறேன். உங்க வசதிப்படி கட்டுரையை ஓரளவுக்கு மொழிமாற்றம் செய்த பின்னர் முதன்மைத் தலைப்புக்கு மாற்றி விடுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 09:17, 11 மே 2012 (UTC)
தவறு எல்லாம் இல்லை. தமிழ் விக்கிப்பீடியா தொடக்க காலத்தில் அப்படியே இட்டுத் தமிழாக்கி வந்தோம். பிறகு தவிர்த்து விட்டோம். இது போல பல நடைமுறைகள் உள்ளதால் அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. தேவைப்படும் இடங்களில் சுட்டிக் காட்டும் போது ஏற்றுக் கொண்டால் நன்று. நன்றி--இரவி (பேச்சு) 09:28, 11 மே 2012 (UTC) விருப்பம் -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:44, 11 மே 2012 (UTC)
வெளியிணைப்புகள்
தொகுவெளியிணைப்புகளில் ஓர் இணைப்பை இடுவதற்கு முன் இங்கே கூறப்பட்டவற்றை நினைவில் வைத்திருந்து இடுங்கள். இணையத்தில் குறிப்பிட்ட நூலை வாங்குவதற்கான தொடுப்பொன்றை அவனி சுந்தரி எனுங்கட்டுரையில் கொடுத்திருந்தீர்கள். அதனை நீக்கியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 13:16, 13 மே 2012 (UTC)
- விளக்கத்திற்கு நன்றி மதனாகரன்! இனி இப்பிழை நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன். :-) -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:25, 13 மே 2012 (UTC)
பகுப்புகள்
தொகுதினேஷ்குமார், படிமங்களுக்கு அண்மையில் கட்டுகளுக்கான பகுப்புகளை இணைத்து வருகிறீர்கள். தயவு கூர்ந்து இதனை உடனடியாக நிறுத்துங்கள். படிமங்களுக்கு கட்டுரைப் பகுப்புகள் சேர்ப்பதில்லை. மேலும், வாழும் நபர்கள் பகுப்பும் தேவையற்றது. நன்றி.--Kanags \உரையாடுக 08:21, 15 மே 2012 (UTC)
- வாழும் நபர்கள் பகுப்பு தேவையற்றதா ? ஆங்கிலத்தில் Living People என்ற தனி பகுப்பு வைத்துள்ளனர், இதில் தகவல்களை இணைக்கும் பொழுது கூடுதல் கவனம் கொள்ளவே, இந்த பகுப்பு பயன்படுத்தப்படுகிறது என்பது நீங்கள் அறிந்ததே! எனவே தான் வாழும் நபர்களுக்கு அவற்றை இட்டு வருகிறேன். விக்கிப்பீடியா:படிமங்களை அடையாளப்படுத்தலும் வகைப்படுத்தலும் பக்கத்தில், வகைப்படுத்தப்படாத படிமங்கள் என்ற தொகுப்பில் உள்ள படிமங்களுக்கு தேவையான பகுப்பு சேர்த்து வருகிறேன். வேண்டுமானால் துணைப்பகுப்பு ஒன்று இணைத்து (எ.கா. தமிழ் எழுத்தாளர்கள் -> தமிழ் எழுத்தாளர்களின் படிமங்கள்) அதற்கு மாற்றிவிடலாம். அப்போது, படிமங்களை காமன்சில் இணைப்பது, பிற கட்டுரைகளுக்கு தேவைப்படும் படிமங்களினை பகுப்பு வாரியாக தேர்வு செய்யவும், எளிமையாக இருக்கும். ---- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:53, 15 மே 2012 (UTC)
- படிமங்களுக்கு எனத் தனியான பகுப்புகளை உருவாக்கலாம். அத்தகைய பகுப்புகளின் தலைப்புகளில் படிமங்கள் என்ற சொல் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். மேலும் வாழும் நபர்கள் பகுப்பைச் சேர்ப்பதற்குத் தானியங்கிகளின் உதவியை நாடலாம்.--Kanags \உரையாடுக 09:37, 15 மே 2012 (UTC) விருப்பம்-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:54, 15 மே 2012 (UTC)
- தேவைக்கு அதிகமாகப் பகுப்புகளை உருவாக்காதீர்கள். தமிழில் விக்கியில் மட்டுக்ம் பல்லாயிரக்கணக்கான படிமங்கள் உள்ளன. அவற்றுக்கு எல்லாவற்றுக்கும் ஒரே நேரத்தில் பகுப்புகளை சேர்ப்பது அவ்வளவு நல்லதல்ல. ஆலமரத்தடியில் உரையாடி வேண்டுமானால் தானியங்கிகளின் உதவியை நாடலாம்.--Kanags \உரையாடுக 11:19, 15 மே 2012 (UTC)
- ஆலமரத்தடியில், இதுகுறித்து தலைப்பு சேர்க்கப்பட்டுள்ளது.-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:28, 15 மே 2012 (UTC)
- தேவைக்கு அதிகமாகப் பகுப்புகளை உருவாக்காதீர்கள். தமிழில் விக்கியில் மட்டுக்ம் பல்லாயிரக்கணக்கான படிமங்கள் உள்ளன. அவற்றுக்கு எல்லாவற்றுக்கும் ஒரே நேரத்தில் பகுப்புகளை சேர்ப்பது அவ்வளவு நல்லதல்ல. ஆலமரத்தடியில் உரையாடி வேண்டுமானால் தானியங்கிகளின் உதவியை நாடலாம்.--Kanags \உரையாடுக 11:19, 15 மே 2012 (UTC)
- படிமங்களுக்கு எனத் தனியான பகுப்புகளை உருவாக்கலாம். அத்தகைய பகுப்புகளின் தலைப்புகளில் படிமங்கள் என்ற சொல் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். மேலும் வாழும் நபர்கள் பகுப்பைச் சேர்ப்பதற்குத் தானியங்கிகளின் உதவியை நாடலாம்.--Kanags \உரையாடுக 09:37, 15 மே 2012 (UTC) விருப்பம்-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:54, 15 மே 2012 (UTC)
விக்கிமூலம் பதில்கள்
தொகுபார்க்க s:பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy--சண்முகம் (பேச்சு) 07:38, 19 மே 2012 (UTC)