பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy/தொகுப்பு 4
|
---|
1 2 3 4 5 6 |
நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?
தொகுவணக்கம், தினேசு. பத்தாண்டுகளைக் கடந்துள்ள தமிழ் விக்கிப்பீடியா அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராக இன்னும் பல கைகள் தேவை. தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பம் என்றால் தெரிவியுங்கள். பரிந்துரைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 08:24, 7 அக்டோபர் 2013 (UTC)
- வணக்கம் இரவி, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ விருப்பமே, ஆயினும் விக்கிப்பீடியாவின் கொள்கை அடிப்படையில் நிருவாகப் பொறுப்பிற்குத் தேவையான் முதிர்ச்சியை நான் இன்னும் பெறவில்லை என்றே எண்ணுகிறேன். நிருவாக உதவி தேவைப்படும் போது, அதற்கான பக்குவத்தை பெற்றபிறகு நானே முன்வந்து ஏற்றுக்கொள்கிறேன். நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:58, 7 அக்டோபர் 2013 (UTC)
- ஆங்கில விக்கிப்பீடியா அளவுக்கு நாம் இறுக்கமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கவில்லை. பொறுப்பை ஏற்ற பிறகும் கற்றலுக்கான வாய்ப்புண்டு. பொறுப்பை ஏற்பதற்கான நம்பகத்தன்மையும் விக்கிப் பண்புகளும் கூடியிருப்பதே முதல் தேவை. சரி, உங்களுக்கு என்று நிருவாகப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம் என்று தோன்றுகிறதோ அன்று தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:43, 7 அக்டோபர் 2013 (UTC) விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:45, 7 அக்டோபர் 2013 (UTC)
நீக்கல் வார்ப்புரு
தொகுவார்ப்புரு:Lang-ka இற்கு எதற்காக குறித்த கால நீக்கல் வார்ப்புரு இட்டீர்கள்? வார்ப்புருக்களுக்குக்கு குறித்த-கால நீக்கல் வார்ப்புரு இடுவதில்லை.--Kanags \உரையாடுக 10:25, 11 அக்டோபர் 2013 (UTC)
- அந்த வார்ப்புரு புகுபதிகை செய்யாத பயனரொருவரால் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் அது எந்தவொரு கட்டுரையிலும் பயன்படுத்தவில்லை. சோதனை முயற்சியாகவோ அல்லது கட்டுரைகளை இதில் இணைப்பதற்காகவோ அவர் உருவாக்கியிருக்கலாம். அதன் காரணமாகவே குறித்த கால நீக்கல் வார்ப்புரு இட்டேன், இல்லையென்றால் நீக்கல் வார்ப்புரு இட்டிருப்பேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:02, 13 அக்டோபர் 2013 (UTC)
நன்றியுரைத்தல்
தொகுநிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல் | ||
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:45, 15 அக்டோபர் 2013 (UTC) |
மிக்க நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி!!
--அஸ்வின் (பேச்சு) 03:24, 16 அக்டோபர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டி
தொகு- வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
- விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:52, 27 அக்டோபர் 2013 (UTC)
நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் நியமித்தல் தொடர்பான பரிந்துரைக் குழு
தொகுநிருவாக அணுக்கத்தைத் திரும்பப் நியமித்தல் தொடர்பான பரிந்துரைக் குழு உங்களை ஓர் உறுப்பினராக பங்களிக்க வேண்டுகிறேன். பங்களிக்க இசைவு எனில் குழு என்ற பகுதியில் உங்கள் பெயரைச் சேர்த்து விடுங்கள். நன்றி. --Natkeeran (பேச்சு) 02:22, 28 அக்டோபர் 2013 (UTC)
- பங்களிக்க முன்வைந்தமைக்கு நன்றிகள். குழுவின் நோக்கம் கணிசமாக மாறியுள்ளது. அதனைக் கவனித்து உங்கள் பணியை நாளை தொடங்கலாம். மீண்டும் நன்றிகள். --Natkeeran (பேச்சு) 14:06, 30 அக்டோபர் 2013 (UTC)
- நிச்சயமாக; கவனித்து வருகிறேன், தேவைப்படும்பொழுது என்னுடைய கருத்துகளை இடுகிறேன். நன்றிகளுக்கு விக்கியில் இடமில்லை. நம் தமிழ் விக்கிப்பீடியா சமூகத்திற்காக நம்மால் முடிந்தது, நீங்கள் கூறியது தான். :) --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:12, 30 அக்டோபர் 2013 (UTC)
- கருத்துக்களைத் தொகுத்து, இறுதி முடிவுகளைத் தெரிவிக்கவும். கூடிய காலம் தேவைப்படின், அதையும் கூறவும். நன்றி.--Natkeeran (பேச்சு) 14:40, 7 நவம்பர் 2013 (UTC)
மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்
தொகுவணக்கம், Dineshkumar Ponnusamy/தொகுப்பு 4!
நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.நிருவாக அணுக்க நீக்கல் வாக்கெடுப்பு
தொகுவணக்கம், தினேசு. தேனி சுப்பிரமணி நிருவாக அணுக்க நீக்கல் கோரிக்கை தொடர்பான ஐவர் குழுவில் பணியாற்றிய ஒருவர் என்ற முறையில், இக்கோரிக்கை இப்பொழுது வாக்கெடுப்புக் கட்டத்தை எட்டியுள்ளது என்பதை உங்கள் கவனத்துக் கொண்டு வருகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 05:43, 5 மார்ச் 2014 (UTC)
- இப்பிணக்கை கூர்ந்து கவணித்து வருகிறேன். சரியான தருணத்தில், என்னுடைய கருத்துகளை இடுகிறேன். நினைவூட்டியமைக்கு நன்றி இரவி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:02, 5 மார்ச் 2014 (UTC)
வார்ப்புருக்கள்
தொகுதூக்கம் (விலங்கியல்) போன்ற பொதுக் தகவல்கள் கண்ட கட்டுரைகளுக்கு, குறிப்பாக பிறமொழி இணைப்புக் கொண்ட கட்டுரைகளுக்கு unrefernece என்ற வார்ப்புரு தேவையா என்று தெரியவில்லை. மேற்கோள்களை முறைப்படி சேர்க்கும் வழக்கு தமிழ் விக்கியில் உருவாக வேண்டும் என்ற உங்கள் அவா புரிகிறது. இதை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று விரிந்து பார்க்க வேண்டும். --Natkeeran (பேச்சு) 18:50, 16 மார்ச் 2014 (UTC)
- மேற்கோள் வார்ப்புரு, சான்று தேவை வார்ப்புரு குறித்து முன்னமே உரையாடப்பட்டுள்ளதாக நினைவு. ஒரு மேற்கோள் கூட இல்லாத எல்லாக் கட்டுரைகளிலும் மேற்கோள்கள் தரக்கோருவது என்பது நல்லதே. எனவே இதனைத் தானியங்கி கொண்டு செய்யலாம்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 18:56, 16 மார்ச் 2014 (UTC)
- வணக்கம் நக்கீரன் மற்றும் மரு. பெ. கார்த்திகேயன், ஏற்கனவே இதுகுறித்து நான் உரையாடியுள்ளேன். தற்போது unrefernece வார்ப்புரு இடப்பட்டுள்ள 99% கட்டுரைகள் 20 பிப்ரவரிக்கு பிறகு உருவாக்கப்பட்டவை. பழைய கட்டுரைகள் மேற்கோள்களின்றி பல உள்ளன, அவற்றையும் சரி செய்ய வேண்டும். பொதுத் தகவல்கள் உள்ள கட்டுரைகளுக்கும் மேற்கோள்கள் தேவை என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை. பிற மொழி இணைப்பு இருக்குமேயானால் மேற்கோள்கள்/சான்றுகள் சேர்ப்பது மிக எளியது. தானியங்கி கொண்டு செய்யலாம் கார்த்திகேயன்,
ஆனால் யார் தானியங்கி உருவாக்குவது? எனக்கு தானியங்கி உருவாக்குமளவு காலம் இல்லை :(தானியங்கி கோரியுள்ளேன் --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:39, 17 மார்ச் 2014 (UTC)- இந்தத் துப்புரவுப் பணி தேவையானது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இருப்பினும் சில நடைமுறைச் சிக்கல்களை கருத்தில் கொண்டு இயங்குவது நல்லது. நற்கீரன் கூறுவதுபோல அனைத்துக் கட்டுரைகளிலும் இந்த வார்ப்புருவை இடுவது எதிர்மறையாக முடியலாம்.
- மிகக் கூடிய அளவில் இங்கு கட்டுரைகள் சேர்ந்தால் திருத்த முயல்வோர் முன்வராது போகக்கூடும். இதனால் உங்களது (நமது) முதன்மை நோக்கம் நிறைவேறாது இருக்கும்.
- திருத்தப்பட்டக் கட்டுரைகளில் இந்த வார்ப்புருவை நீக்குவது ஒரு தனி துப்புரவுப் பணியாக அமையும்.
- எனவே முதற்கட்டத்தில் பொதுக் தகவல்கள் கண்ட கட்டுரைகளுக்கு, குறிப்பாக பிறமொழி இணைப்புக் கொண்ட கட்டுரைகளுக்கும் குறுங்கட்டுரைகளுக்கும் இந்த வார்ப்புருவை இடுவதைத் தவிர்க்கலாம் என்பது எனது தனிப்பட்டக் கருத்து.--மணியன் (பேச்சு) 03:50, 17 மார்ச் 2014 (UTC)
- இந்தத் துப்புரவுப் பணி தேவையானது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இருப்பினும் சில நடைமுறைச் சிக்கல்களை கருத்தில் கொண்டு இயங்குவது நல்லது. நற்கீரன் கூறுவதுபோல அனைத்துக் கட்டுரைகளிலும் இந்த வார்ப்புருவை இடுவது எதிர்மறையாக முடியலாம்.
- வணக்கம் நக்கீரன் மற்றும் மரு. பெ. கார்த்திகேயன், ஏற்கனவே இதுகுறித்து நான் உரையாடியுள்ளேன். தற்போது unrefernece வார்ப்புரு இடப்பட்டுள்ள 99% கட்டுரைகள் 20 பிப்ரவரிக்கு பிறகு உருவாக்கப்பட்டவை. பழைய கட்டுரைகள் மேற்கோள்களின்றி பல உள்ளன, அவற்றையும் சரி செய்ய வேண்டும். பொதுத் தகவல்கள் உள்ள கட்டுரைகளுக்கும் மேற்கோள்கள் தேவை என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை. பிற மொழி இணைப்பு இருக்குமேயானால் மேற்கோள்கள்/சான்றுகள் சேர்ப்பது மிக எளியது. தானியங்கி கொண்டு செய்யலாம் கார்த்திகேயன்,
- வணக்கம் மணியன், தங்களுடைய கருத்திற்கு நன்றி. தற்போது உள்ள நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டே புது கட்டுரைகளுக்கு மட்டும் இவ்வார்ப்புரு இடப்பட்டுள்ளது. நேற்று மற்றும் இன்று மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகளில் அதனை உருவாக்கியவர்கள் மற்றும் பங்களித்தவர்கள் ஆதாரங்களை இணைத்துள்ளனர். இது சரியான முறையாகவே எனக்குத் தோன்றுகிறது. எப்போதோ தொடங்கிய கட்டுரைகளில் இவ்வார்ப்புரு இடுவது பயனளிக்காது, ஏனெனில் அவர் தொடங்கிய போது இருந்த ஆதாரங்கள் அழிந்திருக்கலாம், தொலைந்திருக்கலாம், அல்லது அதனுடைய மூலத்தை மறந்திருக்கலாம். விரைந்து ஆதாரம் திரட்டும் பணியில் களமிறங்குகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:16, 17 மார்ச் 2014 (UTC)
- எந்த ஒரு ஆதாரமும் சேர்க்காமல் unreferenced வார்ப்புரு இட்ட தொகுப்புகளை மீளமை செய்வதைத் ([[2]], [[3]]) தவிர்க்க வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:49, 18 மார்ச் 2014 (UTC)
- தினேஷ்குமார், என்ன நீங்கள்? நான் மேலே சொன்னதற்கு எதிர்க்கருத்தைத் தருகிறீர்கள். இவ்வாறு ஏட்டிக்குப் போட்டியாகக் கதைப்பது ஆரோக்கியமானதல்ல. நீங்கள் செய்தது சரி என்று சொல்ல வருகிறீர்களா? நீங்கள் இம்மாதத்தில் எழுதப்பட்ட புதிய கட்டுரைகளுக்குத் தான் வார்ப்புரு இட்டீர்கள் என்று மேலே எழுதியிருக்கிறீர்கள். அப்படியிருக்கையில் நான் என்றோ எழுதிய கட்டுரைக்கு ஏன் வார்ப்புரு இட்டீர்கள்? நீங்கள் வார்ப்புரு இட்டதை நான் பெரிதாக எண்ணவில்லை. இப்போதும் அவ்வார்ப்புரு உள்ளது. அதை நான் மீண்டும் சேர்த்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:42, 18 மார்ச் 2014 (UTC)
- வணக்கம் கணக்ஸ், ஏட்டிக்குப்ப்போட்டி அல்ல, நீங்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி உள்ளேன். நான் செய்த தவறை ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் கூறிய கருத்தை ஏற்கும் விதமாகவே, குறிப்பிட்ட கட்டுரையில் நீங்கள் என்னுடைய வெளி இணைப்பை மீளமை செய்ததை அப்படியே விட்டிருக்கிறேன். நான் கூறிய கருத்துககளை நன்றாக பார்க்கவும்; 99% புதிய கட்டுரைகள் என்று சொல்லியிருந்தேன், பழைய கட்டுரைகளுக்கு இடமாட்டேன் நான் எப்போதும் சொல்லவில்லை. உங்களுடைய கட்டுரை, என்னுடைய கட்டுரை என்ற பேதம் எனக்கு இல்லை. (பார்க்க ஆதவரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே), நீங்கள் ஆதாரம் சேர்க்காமல் மீளமை செய்ததை மீள்வித்திருக்கிறேன். :)--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:05, 18 மார்ச் 2014 (UTC)
தினேசு, ஏற்கனவே தாங்களோடு இது குறித்து வேறோரிடத்தில் உரையாடியிருக்கிறேன். இங்கு நாம் இணைந்திருப்பது தமிழில் நல்லதொரு கலைக்களஞ்சியத்தை உருவாக்கவே. ”நான் செய்த தவறு நீ செய்த தவறு” என இறங்கும் போது எங்கே கலைக்களஞ்சியம் உருவாக்கும் பணி தடைப்படுமோ எனத் தோன்றுகிறது.மேற்கோள் தேவை தான் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. விக்கிப்பீடியாவில் நாம் எழுதும் எந்த ஒரு கட்டுரையும் நமதன்று. விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளைச் செம்மைப்படுத்தும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. கட்டுரைகளை உருவாக்கியவர் தான் மேற்கோள்களைத் தர வேண்டும் என்ற விதி இல்லை என்று தான் நினைக்கிறேன்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 14:19, 18 மார்ச் 2014 (UTC)
- தவறு சுட்டிக்காட்டப்பட்டதின் நோக்கம் திருத்திக்கொள்ள வேண்டுமென்பதே, கணக்ஸ் மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் உள்ளது. அவர் என்னுடைய தவறுகளை சுட்டிக்காட்ட முழு உரிமை உள்ளது. கட்டுரை உருவாக்கியவர்களே மேற்கோள் தர வேண்டும் என்று நான் கூறவில்லை, அவர்கள் சேர்ப்பது எளிமையாக இருக்கும் அவ்வளவே. நம் அனைவரின் நோக்கமும் நல்லதொரு தமிழ்க் கலைக்களஞ்சியம் உருவாக்கும் பணியே :) நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:09, 18 மார்ச் 2014 (UTC)
வணக்கம்! இந்தக் கட்டுரையினை நீங்கள் தொகுத்துக் கொண்டிருப்பதனை சரியாக கவனிக்காமல் ஒரு மாற்றத்தை செய்துவிட்டேன்; தவறாக நினைக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்! நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:43, 20 மார்ச் 2014 (UTC)
- தவறாக நினைக்க ஏதும் இல்லை :-) --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:09, 21 மார்ச் 2014 (UTC)
மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்
தொகுவணக்கம், Dineshkumar Ponnusamy/தொகுப்பு 4!
நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
--இரவி (பேச்சு) 11:15, 2 ஏப்ரல் 2014 (UTC)
தங்களின் உதவி தேவை...
தொகுவணக்கம்! கேரளாவில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014 எனும் கட்டுரையினை உருவாக்கி வளர்த்து வருகிறேன். இதற்கு இணையான ஆங்கிலக் கட்டுரை இதுவரை எழுதப்படவில்லை; மலையாளத்தில், இருக்கலாம். உங்களுக்கு மலையாளம் தெரியும் என அறிகிறேன். கொஞ்சம் தேடிப் பார்த்து wikidataவை இற்றை செய்து உதவ இயலுமா? நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:19, 4 ஏப்ரல் 2014 (UTC)
- நிச்சயமாக தேடித்தருகிறேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:24, 4 ஏப்ரல் 2014 (UTC)
- அக்கட்டுரை மலையாளத்திலும் உருவாக்கப்படவில்லை. ஆனால் | இவ்விணைப்பு தங்களுக்கு உதவலாம்.--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:39, 4 ஏப்ரல் 2014 (UTC)
தங்களின் நேரத்துக்கு நன்றி! மொழியிடை இணைப்பு (interwiki links) தருவதே எனது தேவை. அடுத்துவரும் நாட்களில் மலையாளத்தில் இக்கட்டுரை உருவாக்கப்படலாம். நீங்கள் அவ்வப்போது கவனித்து, உரிய நேரத்தில் மொழியிடை இணைப்பு வேலையினை முடித்துத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:58, 4 ஏப்ரல் 2014 (UTC)
- கண்டிப்பாக :) --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:37, 5 ஏப்ரல் 2014 (UTC)
இக்கட்டுரையை தற்போது ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர். எனவே நீங்கள் இதனை மேற்கொண்டு கவனிக்க வேண்டிய அவசியமில்லை; நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:28, 11 ஏப்ரல் 2014 (UTC)
- ) --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:40, 11 ஏப்ரல் 2014 (UTC)
உதவி
தொகுநான் பல்கலைகழக ஒப்படைக்காக இம்மொழிபெயர்பினை மேற்கொள்கின்றேன், ஒலிவர் தட்டச்சுபொறி நிறுவனம் https://ta.wikipedia.org/s/3t0e இதனை சரிபார்த்து தருமாரு கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் உதவியை இவ்விடயத்தில் எதிர்பார்த்து நிற்கின்றேன். நன்றி.
- நிச்சயமாக :) --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:41, 11 ஏப்ரல் 2014 (UTC)
நன்றி
உங்கள் பார்வைக்கு
தொகுபேச்சு:நினைத்து நினைத்து பார்த்தால் பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 15:49, 14 ஏப்ரல் 2014 (UTC)
- தேவையான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:22, 14 ஏப்ரல் 2014 (UTC)
அண்ணா மேற்கோள்களைச் சேர்ப்பது எப்படி?
தொகுமேற்கோள்களை இணைப்பது எப்படி என்று தெரியவில்லை. நான் பங்களித்த குழிய வன்கூடு கட்டுரைய
- உயிரியல் பாகம் 1- M.P.Sellavel
- Biology- Raven and Johnson
- Life
- English Wikipedia
ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதினேன். ஆனால் எப்படி மேற்கோள் இணைப்பது என விளங்கவில்லை. எனக்காக இவற்றை இணைத்து விடுவீர்களா? அதனைப் பார்த்து நான் கற்றுக்கொள்வேன்.--G.Kiruthikan (பேச்சு) 07:03, 15 ஏப்ரல் 2014 (UTC)
- விரைந்து சேர்க்கிறேன் கிருத்திகன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:04, 15 ஏப்ரல் 2014 (UTC)
- இரண்டு மேற்கோள் சேர்த்துள்ளேன், பார்க்கவும். மேற்கோள் பற்றிய மேலும் தகவல் பெற விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் பார்க்கவும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:21, 15 ஏப்ரல் 2014 (UTC)
நன்றி அண்ணா. --G.Kiruthikan (பேச்சு) 08:38, 16 ஏப்ரல் 2014 (UTC)
பாரட்டுக்கள்
தொகுவிக்கி கட்டுரைகளில் நீங்கள் மேற்கொள்ளும் சான்று சேர்க்கும் செயற்பாடுகளுக்கு பாராட்டுக்கள்! சான்று கேட்பது சிலருக்குப் பிடிப்பதில்லை. பல இடங்களில் உங்களுக்கு இது தொடர்பில் சங்கடங்கள் ஏற்பட்டபோதும், தொடர்ந்து ஓர் முக்கிய செயலில் ஈடுபடுவதற்கு வாழ்த்துக்கள். என்னால் முடியும்போதெல்லாம் உதவி செய்வேன். என்னைப்பொறுத்தவரை முறையான சான்று அற்று இருக்கும் கட்டுரைகள் இருப்பதைவிட நீக்கப்படுவதே மேல். குறிப்பு: அதிகளவில் செய்திகளை அனுப்ப தானியங்கி இயக்குபவர்களை நாடலாமே? விக்கிப்பீடியா:உசாத்துணை என்பதை விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் என்பதற்று வழிமாற்றாக்கிவிடலாமே? (Wikipedia:References = Wikipedia:Citing sources) --AntonTalk 04:20, 17 மே 2014 (UTC)
- பாராட்டுகளுக்கு நன்றி. தானியங்கியை ஏற்கனவே நாடியுள்ளேன். எனக்கு பரிச்சயமானவர்களுக்கு மட்டும் பேச்சுப்பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளேன். வழிமாற்றம் செய்துவிடலாம் ஆனாலும் அதிலுள்ள வேறுபாடுகளை காட்ட விரும்புகிறேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:24, 17 மே 2014 (UTC)
- {{சான்று சேர்க்கும் திட்டம்}} என்ற பகுதியை மட்டும் பயனர் பேச்சுப்பக்கத்தில் இடுங்கள். முன்னையது சிக்கலாகத் தெரிகிறது. --AntonTalk 04:51, 17 மே 2014 (UTC)
- திருத்தங்கள் செய்துள்ளேன். இவ்வாறான மாற்றத்தை முன்னர் செய்தியளித்த பயனர் பேச்சுப்பக்கத்தில் செய்துவிடுங்கள். மிகச் சிலவற்றிக்கு நான் செய்துள்ளேன். தொகுக்கும்போது முழுப் பேச்சுப்பக்கத்தையும் திறந்து தலைப்பிடுங்கள். --AntonTalk 05:07, 17 மே 2014 (UTC) விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:09, 17 மே 2014 (UTC)
இப்பணியை 4,5 பயனர்கள் இணைந்து செய்தாலே போதுமானதாக இருக்கும். அதற்கு மேல் விறுவிறுப்பாக செய்தால் விக்கிசமூகத்தின் உடனடி வேலைப்பளு கூடும். எனவே, அனைத்து பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் தானியங்கிச் செய்தி இடுவதைத் தவிர்க்கலாம்.--இரவி (பேச்சு) 05:25, 17 மே 2014 (UTC)
- சரி. அப்படியே ஆகட்டும். :D --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:29, 17 மே 2014 (UTC)
- வணக்கம். உங்களுக்கு, எனது பேச்சுப் பக்கத்தில் ஒரு செய்தி உள்ளது.--நந்தகுமார் (பேச்சு) 05:50, 17 மே 2014 (UTC)
பதக்கம்
தொகுவிடாமுயற்சியாளர் பதக்கம் | ||
தமிழ் விக்கிப்பீடியாவில் மேற்கோள் இடும் பண்பாட்டை விடாப்பிடியாக வலியுறுத்துவதைப் பாராட்டி இப்பதக்கம் :) இரவி (பேச்சு) 06:10, 17 மே 2014 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- விருப்பம்--AntonTalk 06:17, 17 மே 2014 (UTC)
- விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:24, 17 மே 2014 (UTC)
- விருப்பம்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 02:34, 18 மே 2014 (UTC)
- விருப்பம்--G.Kiruthikan (பேச்சு) 05:39, 20 மே 2014 (UTC)
விருப்பம்-- நி.மாதவன் ( பேச்சு ) 09:15, 20 மே 2014 (UTC)
- அனைவருக்கும் எனது நன்றிகள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவின் தரமுயர என்னால் முடிந்த முயற்சிகளை செய்வேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:32, 19 மே 2014 (UTC)
- விருப்பம் --நந்தினிகந்தசாமி (பேச்சு) 01:59, 22 மே 2014 (UTC)
துடுப்பாட்டக்காரர்கள் பற்றிய குறிப்பிடத்தக்கமை வரையறை
தொகுவணக்கம். விக்கிப்பீடியா துப்புரவுப் பணிகளில் ஆர்வம் உடையவர் என்ற முறையில், துடுப்பாட்டக்காரர்களின் குறிப்பிடத்தக்கமை வரையறை தொடர்பாக உங்கள் கருத்து தேவைப்படுகிறது. பார்க்க: விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை வாக்கெடுப்பு. பின்னணி உரையாடலுக்கு, பகுப்பு பேச்சு:துடுப்பாட்டக்காரர்கள் பார்க்கவும். நன்றி.--இரவி (பேச்சு) 13:16, 17 மே 2014 (UTC)
- வாக்களித்து விட்டேன். கவணத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:30, 19 மே 2014 (UTC)
சரிபார்க்கவும்...
தொகுவணக்கம்!
- படிமம்:Erode.jpg எனும் படிமத்தில் காப்புரிமை பிரச்சினை இருப்பதாக உணர்கிறேன். தேர்தல் ஆணையத்தின் பக்கத்தை அப்படியே image ஆக்கியிருப்பதாகத் தெரிகிறது. இது நமது ஆக்கமாகாது!
- ஈரோடு மக்களவைத் தொகுதி எனும் கட்டுரையில் இப்படிமத்தை சேரத்துள்ளீர்கள். இம்மாதிரியான முழுமையான ஆங்கில உள்ளடக்கம் நம் விக்கியில் ஏற்புடையதல்ல!
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:09, 21 மே 2014 (UTC)
- நீக்கவிட்டோம் --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:41, 21 மே 2014 (UTC)
உடைந்த மேற்கோள்
தொகுஉடைந்த மேற்கோள் உள்ள பக்கங்களை எப்படி திருத்தம் செய்வது?.இங்கு நான் மேற்கோளில் உள்ள சிகப்பு இணைப்புகளை நீக்கிய பின்பும் அப்பகுப்பு அப்படியே உள்ளது. உதவவும்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 04:04, 22 மே 2014 (UTC)
- உடைந்த மேற்கோளுக்கு சிகப்பு இணைப்புகளுக்கும் எவ்வித இணைப்பும் கிடையாது. வெளியிணைப்புகளாக கொடுக்கப்பட்டுள்ள இரண்டு மற்றும் மூன்றாம் பக்கத்தினை உலாவியில் திறக்க முயற்சிக்கவும். அக்கட்டுரையில் உள்ள இணைப்புகளில் கீழுள்ளவை தற்போது உபயோகத்தில் இல்லை.
- இவ்விணைப்புகளை நீக்கிவிட்டு ஆர்க்கைவ் இணையத்தில் இப்பக்கங்களை பெற முயற்சி செய்யலாம். எ.கா. மூன்றாவதாக கொடுத்துள்ள பக்கத்தினுடைய இணைப்பு அர்க்கைவ் தளத்தில். மேலும் உதவி தேவையெனில் அனுகவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:36, 22 மே 2014 (UTC)
தொடுப்பிணைப்பி
தொகுநீங்கள் ஒரு நிரலாக்கர் என்பதைத் தங்கள் பயனர் பக்கத்தை வாச்த்து அறிந்துகொண்டேன். மிக்க மகிழ்ச்சி! நீங்கள் ஆலமரத்தடியில் கேட்ட கேள்விக்கு இங்கு பதிலளிக்கின்றேன்.
- தொடுப்பிணைப்பியை முழுமையாகத் தமிழாக்கம் செய்ய முனைந்தமைக்கு நன்றிகள்.
- ஆனால் நீங்கள் மாற்றியமைத்ததில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கின்றது. உங்கள் பயனர் வெளி js பக்கத்தில் நான் தொகுக்க முடியாது என்பதால் எனது பயனர்:Shrikarsan/தொடுப்பிணைப்பி.js இல் அம்மாற்றங்களைச் செய்துள்ளேன்.
- முதலில் இத்தொகுப்பில் உங்கள் நிரலை அவ்வாறே copy செய்து என்னிரலில் முழுமையாகப் paste செய்துள்ளேன்.
- இனிச் செய்யவேண்டிய மாற்றங்கள்
- முதலில் இத்தொகுப்பில் வாயிலாக என்பதும் சுருக்கத்தில் கருவியின் மூலம் உள்ளிடப்படும் வகையில் மாற்றியமைத்துள்ளேன்.
- அடுத்ததாக இத்தொகுப்பில் Other -> (Please give an edit summary as well) என்பது தமிழில் வரும்படி ஏனையவை -> (தயவுசெய்து தொகுப்புச் சுருக்கத்தையும் தருக) என மாற்றியுள்ளேன்.
- இதனை சோதனை செய்வதற்கு உங்களது விருப்பத்தேர்வில் கருவிகள் என்னும் பகுதியில் தொகுப்புதவிக் கருவிகள் என்ற உபதலைப்பின் கீழுள்ள தொடுப்பிணைப்பி என்பதன் முன்னுள்ள சரி அடையாளத்தை எடுத்துவிட்டு சேமியுங்கள். பின்னர் உங்களது பயனர்:Dineshkumar Ponnusamy/vector.js இன் கீழே
importScript('பயனர்:Dineshkumar Ponnusamy/தொடுப்பிணைப்பி.js');
என்ற வரியை வெட்டி ஒட்டுங்கள். அல்லது எனது நிரலைப் பயன்படுத்துவதாயின்
importScript('பயனர்:Shrikarsan/தொடுப்பிணைப்பி.js');
என்ற வரியை வெட்டி ஒட்டுங்கள். இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் வேலைசெய்யாது போகலாம். அதனாலேயே விருப்பத்தேர்வில் முதலிலேயே தொடுப்பிணைப்பியைச் செயலிழக்கச் செய்யும்படி கோரினேன். மேலதிகமாக ஏதாவது மாற்றங்கள் செய்யவேண்டுமா?!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:46, 27 மே 2014 (UTC)
- தற்போது நன்றாகவே வேலை செய்கிறது. நன்றி ஸ்ரீகர்சன் ! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:03, 27 மே 2014 (UTC)
திரைப்படங்களுக்கு சான்றுகள்
தொகுதிரைப்படங்கள் பற்றி மூவாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகள் ஒரே நிமிடத்தில் உருவானது. அதே வேகத்தில் சான்று வார்ப்புருக்களும் அந்த மூவாயிரம் கட்டுரைகளுக்கும் சேர்க்கிறீர்கள் போலும். முடிந்தால் நீங்களே இவற்றுக்கு சான்றுகள் சேர்க்க முடியும். வேகத்தைக் குறையுங்கள். ஒரு நாளைக்கு அதிக பட்ச வரம்பு ஒன்று வைத்தால் நல்லது.--Kanags \உரையாடுக 21:07, 27 மே 2014 (UTC)
- Kanags நிச்சயமாக முடியும்; கண்டிப்பாக சேர்க்கிறேன். என்னுடைய பங்களிப்புகள் ஜூலை-20 வரை நீங்கள் எதிர்ப்பாக்காத அளவில் இருக்கும். முதலில் ஆதாரம் தேவைப்படும் அனைத்துக் கட்டுரைகளையும் அடையாளம் காண வேண்டும். ஆதாரம் சேர்க்க ஏற்கனவே பல பயனர்களை உதவி கேட்டுள்ளேன், அவர்களும் தயாராக உள்ளார்கள். எவ்வாறு ஆதாரம் தேடுவது, எந்த இணைப்புகளை பயன்படுத்துவது, எவ்வாறு இணைப்பது என்பது குறித்த விளக்க நடையை உருவாக்கிக் கொண்டு வருகிறேன். //ஒரு நாளைக்கு அதிக பட்ச வரம்பு// செய்வது என்று இறங்கிய பின்னர் இன்று செய்தால் என்ன? நாளை செய்தால் என்ன? --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:11, 28 மே 2014 (UTC)
- //இன்று செய்தால் என்ன? நாளை செய்தால் என்ன?// ஒரே நாளில் நீங்கள் மூவாயிரம் கட்டுரைகளுக்கும் வார்ப்புரு இட்டாலும் பரவாயில்லை. ஆனால் அதற்காக நான் இதனைக் குறிப்பிடவில்லை. அண்மைய மாற்றங்கள் பகுதியில் உங்கள் தொகுப்புகளே மிதமிஞ்சிக் காணப்படுகின்றன. இதனால் நிருவாக அலுவல்களைக் கவனிக்க முடியாமல் உள்ளது. சிறு தொகுப்புகளை மறைத்துப் பார்க்கலாம் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்.--Kanags \உரையாடுக 08:07, 28 மே 2014 (UTC)
- //சிறு தொகுப்புகளை மறைத்துப் பார்க்கலாம் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்// உங்களுடைய கருத்தை படித்தவுடனே அது தான் என் மனதில் எழுந்தது. நிருவாக அலுவல்களாக கூறப்படுபவைகள் கட்டுரை நீக்கம், புதுப்பயனர் வரவேற்பு, புகுபதிகை செய்யாமல் விசம செயல்களை தண்டிப்பது போன்றவையா அல்லது வேறு ஏதாவதா?
- //இன்று செய்தால் என்ன? நாளை செய்தால் என்ன?// ஒரே நாளில் நீங்கள் மூவாயிரம் கட்டுரைகளுக்கும் வார்ப்புரு இட்டாலும் பரவாயில்லை. ஆனால் அதற்காக நான் இதனைக் குறிப்பிடவில்லை. அண்மைய மாற்றங்கள் பகுதியில் உங்கள் தொகுப்புகளே மிதமிஞ்சிக் காணப்படுகின்றன. இதனால் நிருவாக அலுவல்களைக் கவனிக்க முடியாமல் உள்ளது. சிறு தொகுப்புகளை மறைத்துப் பார்க்கலாம் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்.--Kanags \உரையாடுக 08:07, 28 மே 2014 (UTC)
இன்றிலிருந்து 7-10 நாட்கள் வரை பழைய கட்டுரைகளுக்கு வார்ப்புரு இடுவதை நிறுத்துகிறேன். (வேறு பயனர்கள் இட்டால் நான் பொறுப்பில்லை ;)). இக்காலகட்டத்தில் வார்ப்புரு இடப்பட்ட கட்டுரைகளில் என்னால் முடிந்த அளவு வெளி இணைப்புகள், உசாத்துணை, சான்று, மேற்கோள் போன்றவற்றை இணைக்க முயல்கிறேன். எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு சேர்க்கிறேன். நிருவாக அலுவலுக்கு தடை நேர்ந்ததற்கு வருந்துகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:17, 28 மே 2014 (UTC)
- விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:22, 28 மே 2014 (UTC)
- //நிருவாக அலுவல்களாக கூறப்படுபவைகள் கட்டுரை நீக்கம், புதுப்பயனர் வரவேற்பு, புகுபதிகை செய்யாமல் விசம செயல்களை தண்டிப்பது போன்றவையா அல்லது வேறு ஏதாவதா?// நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இவை மட்டும் தானா அல்லது வேறு ஏதும் உள்ளதா? நான் பொதுவாக அனைத்துக் கட்டுரைத் தொகுப்புகளையும் மேலோட்டமாகக் கவனிப்பேன். ஒரு சில நிருவாகிகள் சிறு தொகுப்புகளை எப்போதுமே மறைத்து வைத்திருப்பார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை.--Kanags \உரையாடுக 08:38, 28 மே 2014 (UTC)
- நான் தெரிந்துகொள்ளவே கேட்டேன். நான் வழக்கமாக நீக்க வேண்டிய கட்டுரைகள், புதுப்பயனர் வரவேற்பு, புகுபதிகை செய்யாமல் யாரேனும் தொகுத்திருந்தால் என்ன செய்திருக்கிறார்கள், மற்றும் என் கவணிப்பு பட்டியலில் உள்ள கட்டுரைகளின் மாற்றம், புதிய கட்டுரைகள், சில சமயங்களில் பழைய ஏதாவதொரு கட்டுரை என பார்ப்பேன். தங்களுடைய மற்ற பணிகளுடன் என் கேள்விகளுக்கு நேரமளித்து பதிலளித்தமைக்கு நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:41, 28 மே 2014 (UTC)
- //நிருவாக அலுவல்களாக கூறப்படுபவைகள் கட்டுரை நீக்கம், புதுப்பயனர் வரவேற்பு, புகுபதிகை செய்யாமல் விசம செயல்களை தண்டிப்பது போன்றவையா அல்லது வேறு ஏதாவதா?// நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இவை மட்டும் தானா அல்லது வேறு ஏதும் உள்ளதா? நான் பொதுவாக அனைத்துக் கட்டுரைத் தொகுப்புகளையும் மேலோட்டமாகக் கவனிப்பேன். ஒரு சில நிருவாகிகள் சிறு தொகுப்புகளை எப்போதுமே மறைத்து வைத்திருப்பார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை.--Kanags \உரையாடுக 08:38, 28 மே 2014 (UTC)
சில பரிந்துரைகள்...
தொகுவணக்கம்! சான்று சேர்க்க நீங்களும் களத்தில் இறங்கியதற்கு பாராட்டுகள், நன்றி!
- பழைய திரைப்படங்கள் குறித்த அருமையான சான்றுகளைப் பெற இங்கு தேடுங்கள். ராண்டார் கை (Randor Guy) எனும் முதுபெரும் கட்டுரையாளர் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இந்த செய்தித்தாளின் அச்சுப் பதிப்பில் ஏதேனும் ஒரு பழைய திரைப்படம் குறித்து முழுமையாக எழுதுகிறார். பல ஆண்டுகளாக எழுதிவருகிறார். BLAST FROM THE PAST எனும் தலைப்பில் இந்தக் கட்டுரைகளை எழுதி வருகிறார். அனைத்துக் கட்டுரையும் இணையத்தள பதிப்பிலும் வெளியாகிறது. என்ன தேடுதலில் கொஞ்சம் பொறுமை வேண்டும். ஏனெனில் நாம் தேடும்போது Spelling வித்தியாசப்படலாம். உதாரணமாக devakanyaa என அடித்து தேடினேன்; No articles found என வந்தது. அடுத்து devakanya என அடித்து தேடினேன்; 39 Results Sorted by recent என வந்தது! இரண்டாவது பக்கத்தில் Devakanya 1943 என வந்துவிட்டது.
- வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் என்பதில் பார்த்தீர்கள் என்றால், 234 தொகுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. பெரும்பாலான தொகுதிகள் குறித்த கட்டுரைகளில் சான்று/மேற்கோள்/ஆதாரம் இல்லை. ஒவ்வொரு வாரமும் ஏதேனும் 2 கட்டுரைகளுக்கு சான்று தேவை வார்ப்புரு இட்டீர்கள் என்றால், அக்கட்டுரைகளை என்னால் முன்னேற்ற இயலும்; அக்கட்டுரைகளை விரிவுபடுத்தவும் இயலும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்! முடிந்தால் இந்தப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பினை இடுங்கள். வாரம் 2 என்பதே இந்த எறும்பால் (!) இயன்றது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:25, 29 மே 2014 (UTC)
- வாழ்த்துகளுக்கும் வழிகாட்டலுக்கும் நன்றி. ஏற்கனவே ராண்டார் கை எழுதிய கட்டுரைகளை ஆதாரமாக பல கட்டுரைகளில் சேர்த்துள்ளேன். எப்படியும் அனைத்துத் திரைப்படக் கட்டுரைகளுக்கும் ஆதாரம் சேர்த்துவிடுவேன். கூகிள் தேடுதலில் அதிக்கப்படியான அனுபவம் உள்ளதால் ஆதாரங்களை கண்டுபிடித்துவிடுவது மிக எளிது. தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் கட்டுரைகளுக்கு வர இன்னும் 6-9 நாட்கள் ஆகும். வந்தபின் எறும்பு விரைவாக செல்கிறதா அல்லது ஆமை விரைவாக செல்கிறதா என பார்த்துக்கொள்ளலாம்.--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:59, 29 மே 2014 (UTC)
ஆகா...! சிற்றெறும்பு (சிறியவன் - எளியவன்) எனும் அர்த்தத்திலேயே எழுதினேன். மற்றபடி எனக்கு சுறுசுறுப்பு போதாது! மே மாதத்தில் மட்டுமே எனது பங்களிப்பு அதிகமாக இருக்கும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:33, 29 மே 2014 (UTC)
- ஆமை எப்பொழுதும் அதனுடைய பணியை செய்து கொண்டே இருக்கும், மற்றவர்களை தாண்டி செல்லும் போதே அதனுடைய வேகம் தெரியவரும்.. :D :D இந்த ஜூலை 20 வரை என்னுடைய பங்களிப்புகள் அதிக்கப்படியாக இருக்கும். விரைந்து தமிழ் விக்கியை தரமுயரச் செய்வோம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:10, 29 மே 2014 (UTC)
நீங்கள் சேர்க்கும் ஆதாரங்களை மேற்கோள் எனும் தலைப்பிட்டு அதன்கீழேயே சேர்க்கலாமே? தேவகன்யாவில் இருப்பதைப் போன்றே! என்ன நினைக்கிறீங்க?! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:21, 31 மே 2014 (UTC)
- மேற்கோளை விட வெளி இணைப்புகள் சரியாக இருக்கும் என எண்ணுகிறேன். ஏனென்றால் நம் விக்கிப்பீடியா கட்டுரைகளை விட அதிக தகவல்கள் அங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கட்டுரையைப் பற்றிய அதிக தகவல்கள் தேடுபவர்களுக்கு அது உதவிகரமாக இருக்கும். ஒருவேளை இவற்றை உசாத்துணையாக கொடுக்கலாம் ஆனால் கட்டுரை எழுதியவருக்கே அதன் உண்மையான உசாத்துணைகள் தெரியும். :) --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:42, 31 மே 2014 (UTC)
மாதம் 1000 தொகுப்புகள்
தொகுவணக்கம், Dineshkumar Ponnusamy/தொகுப்பு 4!
நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
--இரவி (பேச்சு) 14:43, 3 சூன் 2014 (UTC) விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:14, 4 சூன் 2014 (UTC)
- விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:48, 4 சூன் 2014 (UTC)
வேண்டுகோள்:தொகுப்புச் சுருக்கம்
தொகுநிறைய தொகுப்பாளர்கள் மின்னஞ்சல் வழியே கட்டுரைகளை மேற்பார்வையிடுவது வழக்கம். எனவே, நீங்கள் தொகுக்கும் போது, தொகுப்பு மாற்றத்தை சுருக்கமாக, தொகுப்பானிலுள்ள சுருக்கப்பெட்டியில் தெரிவித்தால், அது மின்னஞ்சலில் கண்டுணர எளிமையாக இருக்கும். இல்லையெனில் ஒவ்வொரு முறையும். விக்கிப்பீடியாவிற்கு வந்து அம்மாற்றத்தை காண வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் இணைய இணைப்பிற்காக கணிசமான பணவிரயமும், மின்னாற்றலும், நேரமும் செலவிட நேருகிறது. எனவே, இனி சுருக்கப் பெட்டியை பயன்படுத்துக் கோருகிறேன். உங்களுக்கு உகப்பெனில் பலரும் இந்நடைமுறையை பின்பற்றக் கோருங்கள் அது பலருக்கும் பயன்படும்--≈ த♥உழவன் ( கூறுக ) 03:40, 10 சூன் 2014 (UTC)
- த♥உழவன், இதுவரையில் நான் தொகுத்த அனைத்துக்கட்டுரைகளிலும், பேச்சப்பக்கத்தில் இட்ட தகவல்களுக்கு உரித்த தொகுப்பு சுருக்கத்தை இட்டுள்ளேன், இனியும் தொடர்ந்து இடுவேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:17, 10 சூன் 2014 (UTC)
- த♥உழவன், மின்னஞ்சல் வழியாக எவ்வாறு, என்னென்ன மாற்றங்களைக் கண்காணிக்கிறீர்கள் என்று அறிய விரும்புகிறேன். தினேசு, தொகுப்புச் சுருக்கங்களை எந்த அளவு துல்லியமாக இட முடியுமோ நல்லது. உரை திருத்தம் என்ற பொதுவான குறிப்பை விட +imdb வெளியிணைப்பு என்று இடுவது இன்னும் உதவிகரமாக இருக்கும். ஒரே மாதிரியான தொகுப்புகளை அண்மைய மாற்றங்களைப் பார்த்தே கண்டு கொள்ள உதவும். நன்றி.--இரவி (பேச்சு) 17:17, 14 சூன் 2014 (UTC)
- //+imdb வெளியிணைப்பு என்று இடுவது இன்னும் உதவிகரமாக இருக்கும். // என்பது பற்றி சற்று விரிவாகக் கூறுங்கள். இரவி! --≈ த♥உழவன் ( கூறுக ) 05:43, 15 சூன் 2014 (UTC)
- த♥உழவன், மின்னஞ்சல் வழியாக எவ்வாறு, என்னென்ன மாற்றங்களைக் கண்காணிக்கிறீர்கள் என்று அறிய விரும்புகிறேன். தினேசு, தொகுப்புச் சுருக்கங்களை எந்த அளவு துல்லியமாக இட முடியுமோ நல்லது. உரை திருத்தம் என்ற பொதுவான குறிப்பை விட +imdb வெளியிணைப்பு என்று இடுவது இன்னும் உதவிகரமாக இருக்கும். ஒரே மாதிரியான தொகுப்புகளை அண்மைய மாற்றங்களைப் பார்த்தே கண்டு கொள்ள உதவும். நன்றி.--இரவி (பேச்சு) 17:17, 14 சூன் 2014 (UTC)
- த♥உழவன், திரைப்படங்கள் குறித்த சில கட்டுரைகளில் தினேசு வெளியிணைப்புகள் பகுதியில் IMDB இணையத்தளத்துக்கு மட்டும் ஒரு இணைப்பு தந்து விட்டு தொகுப்புச் சுருக்கத்தில் உரை திருத்தம் என்று குறிப்பிட்டிருந்தார். பொத்தாம் பொதுவாக உரை திருத்தம் என்று கூறுவதை விட (ஏற்கனவே உள்ளதைத் திருத்துவது தான் உரை திருத்தம். இங்கு புதிதாக ஒரு வெளியிணைப்பு சேர்க்கப்பட்டுள்ளது) +imdb வெளியிணைப்பு என்று குறிப்பிட்டிருந்தால் இன்னும் துல்லியமாக இருக்கும். அண்மைய மாற்றங்களைப் பார்த்தே புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு கட்டுரையாக சரி பார்க்கத் தேவையிருக்காது. இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிட்டிருந்தேன். நன்றி.--இரவி (பேச்சு) 17:20, 15 சூன் 2014 (UTC)
- மிக்க நன்றி.இரவி!.ஏறத்தாழ4 வருடங்களுக்கு முன் தொகுப்புச்சுருக்கத்தில் இட வேண்டிய குறிப்புகளின் அவசியத்தை நீங்கள் எனக்கு விக்சனரியில் விளக்கியிருந்தீர்கள். அதன் மறுவடிவமே, இங்கு தினேசிடம் நான் வைத்த வேண்டுகோள். அவ்வாறு சுருக்கச்சாளரத்தில் இடும் குறிப்புகள் மின்னஞ்சல் வழியே, (கவனிக்கப்பட்டியல் கட்டுரைகளாக இருக்கும் போது மட்டும்) அறிவுறுத்தப்போது தெரிகிறது. அதனையே மேற்கண்ட வேண்டுகோளில் தெரிவித்திருந்தேன். மீண்டும், பிறிதொரு உரையாடலில் சந்திப்போம். வணக்கம்.--≈ த♥உழவன் ( கூறுக ) 17:35, 15 சூன் 2014 (UTC)
- த♥உழவன், திரைப்படங்கள் குறித்த சில கட்டுரைகளில் தினேசு வெளியிணைப்புகள் பகுதியில் IMDB இணையத்தளத்துக்கு மட்டும் ஒரு இணைப்பு தந்து விட்டு தொகுப்புச் சுருக்கத்தில் உரை திருத்தம் என்று குறிப்பிட்டிருந்தார். பொத்தாம் பொதுவாக உரை திருத்தம் என்று கூறுவதை விட (ஏற்கனவே உள்ளதைத் திருத்துவது தான் உரை திருத்தம். இங்கு புதிதாக ஒரு வெளியிணைப்பு சேர்க்கப்பட்டுள்ளது) +imdb வெளியிணைப்பு என்று குறிப்பிட்டிருந்தால் இன்னும் துல்லியமாக இருக்கும். அண்மைய மாற்றங்களைப் பார்த்தே புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு கட்டுரையாக சரி பார்க்கத் தேவையிருக்காது. இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிட்டிருந்தேன். நன்றி.--இரவி (பேச்சு) 17:20, 15 சூன் 2014 (UTC)
மொழிபெயர்ப்பு வார்ப்புரு
தொகுஇங்கு எதற்காக மொழிபெயர்ப்பு வார்ப்புரு இடப்பட்டது? மேலும் இன்னும் ஒரு கட்டுரையில் ஒரேயொரு சொல் ஆங்கிலத்தில் இருந்தது. அதனை நீங்களே தமிழில் பெயர்த்திருக்கலாம். எதற்காக மேலதிக வேலைப்பளு (அனைவருக்கும்)?--Kanags \உரையாடுக 06:21, 22 சூன் 2014 (UTC)
- மேலும் கட்டுரைகளில் பதிப்புரிமை கொண்ட உள்ளடக்கங்களைக் கண்டால் அவற்றை உடனடியாகவே நீக்கி விடலாம். வார்ப்புரு இட்டு வேறு ஒருவர் நீக்க வேண்டிய அவசியமில்லை.--Kanags \உரையாடுக 06:31, 22 சூன் 2014 (UTC)
- போட்டோ, போட்டோகிராபரான, பெருசு, அவுட் ஆஃப் போகஸில், பெரிசின் பேத்தி, டீப் போகஸில் போன்ற சொற்கள் தமிழா ?? சொல்லவே இல்லை!!! இன்னுமொரு கட்டுரையில் இதுவா அந்த ஒரே ஒரு ஆங்கிலச் சொல்?? வேலைப்பளு அதிகரிக்குமென்ற காரணத்தால் கண்டும் காணாமல் போவது என்னால் முடியவில்லை :(. தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், கட்டுரையில் பல்வேறு குறைகள் இருந்தமையாலே அவ்வார்ப்புருவை இட்டேன். நேரமிருக்கும் போது நிச்சயமாக நானே சரிசெய்கிறேன். பதிப்புரிமை கொண்ட உள்ளடக்கங்களை விரைந்து நீக்குகிறேன். தகவலுக்கு நன்றி Kanags! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:48, 23 சூன் 2014 (UTC)
மௌனசுவாமி மடம்
தொகுவணக்கம். மௌனசுவாமிகள் பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன்பு வந்த தஞ்சாவூர் டிஸ்டிரிக்ட் கேஜட்டீரிலிருந்து (F.R.Hemingway, Tanjore District Gazetteer, Government Press, Madras, 1906) மௌனசுவாமி மடம் பதிவில் தற்போது மேற்கோளாகத் தந்துள்ளேன். அன்புகூர்ந்து அதனைக் காணவேண்டுகிறேன். தற்போது பூஜைகள் நடைபெற்றுவருவதை நான் நேரில் பார்த்து வருகிறேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:07, 4 செப்டம்பர் 2014 (UTC)
- மௌனசுவாமி மடம் கட்டுரையில் ஆதாரத்தை இணைத்தமைக்கு நன்றி. கட்டுரைகளுக்கான ஆதாரம் கிடைக்கும்பொழுது அக்கட்டுரையில் இணைத்துவிடுங்கள். சான்று தேவை வார்ப்புரு இடுவதின் நோக்கம் வேறொருவருக்கு சான்று கிடைத்தால் அவரும் இணைக்கலாம் என்று தெரிவிப்பதற்காகவுமாகும். விக்கிப்பீடியாவின் கொள்கைகளை விரைந்து அறிந்து அவற்றை கடைபிடித்துவருகிறீர்கள் என்பதை அறிவதில் பெருமகிழ்ச்சி. மேலும் பல கட்டுரைகளை உருவாக்க வாழ்த்துக்கள் பா.ஜம்புலிங்கம் ! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:17, 4 செப்டம்பர் 2014 (UTC)
வாழ்த்துக்கும், தகவலுக்கும் நன்றி. முடிந்தவரை நெறிமுறைகளை கடைபிடித்து எழுத முயற்சிப்பேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:59, 4 செப்டம்பர் 2014 (UTC) விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:04, 4 செப்டம்பர் 2014 (UTC)
மட்டுப்படுத்துங்கள்
தொகுஉங்கள் வார்ப்புரு சேர்க்கும் தொகுப்புகளை ஒரு நாளைக்கு இவ்வளவு (50 இற்கு மேற்படாமல்) என்று மட்டுப்படுத்துங்கள்.--Kanags \உரையாடுக 09:42, 4 செப்டம்பர் 2014 (UTC)
- குறைத்துவிடுகிறேன் Kanags! போதுமான ஆதாரமிணைப்பு பணிகளையும் சேர்ந்தே செய்கிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:06, 4 செப்டம்பர் 2014 (UTC)
உதவி தேவை
தொகுஇந்தக் கட்டுரையில் "இந்தக்கட்டுரையினை தற்பொழுது இன்னொருவர் 20 நிமிடங்கள் தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இடம் பெற்றிருக்கும் வரை நீங்கள் இதனைத் தொகுப்பதை தவிர்க்கவும்.இப்பக்கம் இறுதியாக 09:10, 5 செப்டம்பர் 2014 (ஒ.அ.நே) (61 நிமிடங்கள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே ""வேலை நடந்துகொண்டிருக்கிறது"" என பயன்படுத்துக." எப்படி இணைத்தீர்கள் ? --Commons sibi (பேச்சு) 10:15, 5 செப்டம்பர் 2014 (UTC)
- Commons sibi, {{inuse|20 நிமிடங்கள்}} என்ற வார்ப்புருவை பயன்படுத்தியிருந்தேன், காலம் எவ்வளவு தேவையோ அவ்வளவு இட்டால் போதும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:17, 5 செப்டம்பர் 2014 (UTC)
- தினேஷ்குமார் பொன்னுசாமி நன்றி . அந்த வார்ப்புரு "தொகு"வை சொடுக்கும் போது ஏன் தெரிவதில்லை .:(--Commons sibi (பேச்சு) 10:24, 5 செப்டம்பர் 2014 (UTC)
- தொகுவில் தெரியவில்லையா ஓ!!! இங்கு காட்டுகிறதே? --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:51, 5 செப்டம்பர் 2014 (UTC)
- தினேஷ்குமார் பொன்னுசாமி நன்றி . அந்த வார்ப்புரு "தொகு"வை சொடுக்கும் போது ஏன் தெரிவதில்லை .:(--Commons sibi (பேச்சு) 10:24, 5 செப்டம்பர் 2014 (UTC)
வேண்டுகோள்...
தொகுவணக்கம்! முக்தா சீனிவாசன் எனும் குறுங்கட்டுரையில் உரையினைத் திருத்தி, வழிமாற்று ஏற்படுத்தி, இயன்றளவு விரிவுபடுத்த முனைந்து கொண்டிருந்தபோது, குறித்த கால நீக்கல் வேண்டுகோள் இட்டு விட்டீர்கள்! முக்தா சீனிவாசன் என்பவர் குறிப்பிடத்தக்கவர் என்பதால் இக்கட்டுரை பயனர்களால் விரிவுபடுத்தப்படும் வாய்ப்பு இருந்தது; மேலும் தமிழ் விக்கியில் குறிப்பிட்ட சிலர், அனைத்துக் கட்டுரைகளையும் விரிவுபடுத்த தொடர்ந்து முனைகிறார்கள். முக்தா சீனிவாசன் எனும் கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தில் பார்த்தால், இதனை நன்கு உணர இயலும். எனவே Genuine கட்டுரைகளில் உள்ளடக்கம் போதாது என நினைத்தால், குறைந்தபட்சம் 1 நாள் காத்திருக்கலாம் என்பது எனது வேண்டுகோள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:56, 13 செப்டம்பர் 2014 (UTC)
- வணக்கம், இக்கட்டுரை நான் பார்க்கும் போது மூன்று வரி மட்டுமே இருந்தது. அதனால் குறித்த கால நீக்கல் வேண்டுகோள் விடுத்தேன். நீங்கள் கட்டுரையை விரிவுபடுத்த முயன்றது எனக்கு தெரியாது :-(. கட்டுரை உள்ளடக்கம் போதாது என்ற காரணத்தாலே ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது; ஒரு வேளை தேவையற்ற கட்டுரையாக இருந்திருந்தால் உடனடியாக நீக்க வார்ப்புரு இட்டிருப்பேன். அனைத்துக் கட்டுரைகளையும் விரிவுபடுத்த சிலர் முனைவது மகிழ்ச்சி அளிக்கிறது. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:51, 16 செப்டம்பர் 2014 (UTC)
பெண்ணியம் வலைவாசல்
தொகுவணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி--Commons sibi (பேச்சு) 18:16, 27 அக்டோபர் 2014 (UTC)
- வலைவாசல் உருவாக்க வாழ்த்துக்கள் Commons sibi! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:25, 28 அக்டோபர் 2014 (UTC)
விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு
தொகுவணக்கம் Dineshkumar Ponnusamy/தொகுப்பு 4!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
- அழைப்பிற்கு நன்றி ஆதவன். முடிந்தவரை பங்களிக்கிறேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:59, 30 திசம்பர் 2014 (UTC)
- கட்டாயம் வருக. :) :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:04, 30 திசம்பர் 2014 (UTC)
சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு:பிலிப்பீன்சு
தொகுசிகரம் திட்டத்தினூடாக விரிவாக்கப்பட்ட பிலிப்பீன்சு கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக நியமிப்பதற்கு இப்பக்கத்தில் முன்மொழிந்துள்ளேன். உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 12:10, 5 பெப்ரவரி 2015 (UTC)