--MIMF 18:53, 28 ஆகத்து 2011 (UTC)என் பங்களிப்புக்களில் பேச்சு என்பது சிவப்பு நிறத்தில் காணப்படுவதன் காரணம் யாது? விடை கொடுக்கவும். - கலைமகன் பைரூஸ்

விக்கிப்பீடியாவில் எழுதப்படாமலிருக்கும் எந்த ஒரு பக்க இணைப்பும் சிவப்பு நிறத்தில் இருக்கும் எ.கா: தமிழிசை மூவர் எனும் இப்பக்கத்தை இன்றைக்குள் நான் எழுதலாம் என்று இருக்கிறேன். எழுதி முடித்ததும் இது நீல நிறமாகி விடும். தங்கள் கையொப்பத்தை இட தொகுப்புப்பட்டையில் நாலாம் இடத்தில் உள்ள கையொப்பக் குறியைப் பயன்படுத்தலாம். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 07:56, 4 ஏப்ரல் 2011 (UTC)

கட்டுரைகளில் கையொப்பம்

தொகு

கையொப்பமிடுவது பற்றி மேலே கூறிய நான் முக்கியமான ஒன்றகை் கூற மறந்து விட்டேன். ‌விக்கிப்பீடியா உரையாடல் பக்கங்கள், ஆலமரத்தடி போன்ற இடங்களில் மட்டுமே நாம் கையொப்பமிடலாம். கட்டுரைப் பக்கங்களில் கையொப்பமிடும் வழக்கமில்லை. எனவே அல்லாஹீ அக்பர் பக்கத்தில் இருந்த உங்கள் ‌கையொப்பத்தை நீக்கியிருக்கிறேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 09:45, 4 ஏப்ரல் 2011 (UTC)

கிரந்தம்

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் கூடியவரை கிரந்த எழுத்துகளைக் (ஷ, ஸ, ஹ, ஜ, ஸ்ரீ) குறைத்து எழுதுவது என்பது பொதுப்பரிந்துரை. எனவே கிரந்தமில்லாத சொற்களை மீண்டும் கிரந்தமாக மாற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 09:53, 4 ஏப்ரல் 2011 (UTC)

நிழற்படம் இயங்குவதில்லை

தொகு

எனது பங்களிப்பிலுள்ள த.சா. அப்துல் லதீப் எனும் தலைப்பிலான கட்டுரையில் உள்ள படிமம் சரிவர இயங்குவதில்லை. தயவுசெய்து சரிசெய்யவும். --MIMF 18:53, 28 ஆகத்து 2011 (UTC) எனது பங்களிப்பிலுள்ள ஆ.மு. சரிபுத்தீன் எனும் தலைப்பிலான கட்டுரையில் உள்ள படிமம் சரிவர இயங்குவதில்லை. தயவுசெய்து சரிசெய்யவும்.

படிமத்தை சரி செய்து புதிய பதிப்பை பதிவேற்றியிருக்கிறேன். எனக்கு சரியாக வருகிறது. சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 19:17, 28 ஆகத்து 2011 (UTC)Reply

ஈத் முபாரக்

தொகு

இம் மாதம் முழுவதும் நோன்பிருந்து பல்வேறுபட்ட நற்கருமங்களில் ஈடுபட்டு புனித ரமழான் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் அகமகிழ்வடைகின்றோம். விக்கி குடும்பத்தின் சார்பில்--P.M.Puniyameen 00:25, 31 ஆகத்து 2011 (UTC)Reply

என் இனிய வாழ்த்துகள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 00:52, 31 ஆகத்து 2011 (UTC)Reply
  அஸ்ஸலாமு அலைக்கும் Kalaimahan fairooz அவர்களே , எனது இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள் !
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்!
--சமீர்உரையாடுக!

கட்டுரையை நீட்டிட அனுமதிக்க வேண்டாம்

தொகு

எனது பங்களிப்பிலுள்ள கலீல் அவ்ன் மெளலான எனும் கட்டுரை பக்கச்சார்பின்றி நடுநிலையாக எழுதப்பட்ட கட்டுரை. மெளலானா தற்போது ஆன்மீகத் தலைவர் என்று ஒருசிலர் வாதம்புரிகின்றனர். எனவே, அவர் பற்றி ஐ.பீ.எண்ணில் நிறையத் தகவல்கள் வந்துசேரலாம். தயவுசெய்து நிர்வாகத்தினர் எனது பங்களிப்பல்லாமல் வரும் எழுத்துக்களை முடக்குமாறு விநயமாக வேண்டுகிறேன். எனது மின்னஞ்சல் முகவரிக்கு அவரது புதிய நிழற்படத்தை இணைக்குமாறு படம் ஒன்று வந்துள்ளது. அது பிரச்சினைகள் உருவாக்கும் படம். விக்கிப்பீடியாவுக்கு வேண்டாத வேலை. நான் இணைத்துள்ள நிழற்படம் ஒன்றே போதுமானது. தயவுசெய்து கவனத்திற் கொள்ளவும். அந்த கட்டுரை அவ்வளவாக இருந்தாலே போதும். நீட்டி அனுமதிக்க வேண்டாம். நன்றி--கலைமகன் பைரூஸ் 11:28, 1 செப்டெம்பர் 2011 (UTC)

தலைப்பில் பட்டம்

தொகு

கலாநிதி, சேர் போன்ற பட்டங்கள் தலைப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.--Kanags \உரையாடுக 13:15, 1 செப்டெம்பர் 2011 (UTC)Reply

சூரபதுமன் எனும் கட்டுரையில் நீங்கள் செய்த ஒரு சிறு மாற்றம் குறித்து...

தொகு

இக்கட்டுரையில் 'மகன்கள்' என்பதை 'மகன்மார்' என்று திருத்தியிருக்கிறீர்கள். 'மகன்கள்' என்பதும் சரியான தமிழே என்பது எனது கருத்து. எனது எண்ணம் தவறு எனில் என்னை திருத்துங்கள். --Selvasivagurunathan mஉரையாடுக

மகன்கள் என்பது பொது வழக்கே. மகன்மார் என்பது பேச்சுவழக்கு என நினைக்கிறேன். மகன்கள் என மாற்றுவது நல்லது.--Kanags \உரையாடுக 21:07, 18 நவம்பர் 2011 (UTC)Reply
  • “கல்லொடு சிவனும் அவ்வியற் பெயரே“ என்பது இலக்கணச் சூத்திரம். ஆயினும், அதற்குரிய புறநடைகள் இலக்கணத்தில் அதிகம் உள. அஃறிணைக்குரிய பின்னொட்டு விகுதியாகப் பெரும்பாலும் கொள்ளப்படுவது “கள்“ ஒட்டு. உயர்திணைப் பலர்பால் படர்க்கையில் மட்டுமே உயர்திணைக்குச் சிறப்பாய் வருவது “மார்“ எனும் பின்னொட்டு. (முன்னிலைப் பன்மை விகுதிகள் - இர், ஈர், கள் : பலர்பால் படர்க்கை விகுதிகள் - அர், ஆர், ப, மார், கள் ஒட்டுக்கள்) 'மார்' என்பது பன்மை விகுதியாயும், வினைமுற்று விகுதியாயும் உளதைக் காண்க. இவ்வகையில் மகன் + மார் = மகன்மார், மகள் + மார் = மகள்மார் ..... எனப் புணரும் என்க. எனவே, ஒலியமைப்புக் கருதியும் “மார்“ எனும் பின்னொட்டுச் சேர்ப்பதே சாலச் சிறந்தது. இலங்கையில் மட்டுமன்றி இந்திய எழுத்தூடகங்களில் பெரும்பாலும் “மார்“ விகுதி ஒட்டப்படுவதை நோக்கலாம். “கள்“ என்பதில் பிழையில்லை. ஆயினும் “மக்கள் நரகர் தேவர் மூன்றும் உயர்திணை - ஏனை உயிருள்ளவும் அல்லவும் அஃறிணை“ என்பதற்கேற்ப “மார்“ என்பது சிறந்ததே. “தமிழுக்கு அமுதென்று பேர்“ - நன்றி!

--கலைமகன் பைரூஸ் 03:48, 19 நவம்பர் 2011 (UTC)

நீங்கள் வழங்கிய விளக்கத்திற்கு மிக்க நன்றி. விக்கிப்பீடியாவினால் கிடைக்கக்கூடிய நன்மைகளுள் இதுவும் ஒன்று... இலக்கண அறிவினை சீர் செய்து கொள்ள வாய்ப்பு! --Selvasivagurunathan mஉரையாடுக

நாணல் பற்றிய நாட்டார் பாடல்

தொகு

நாணல் பக்கத்தில் தாங்கள் விரிவாக்கம் செய்தமைக்கு நன்றி. இந்த பக்கத்தில் நாணல் பற்றிய நாட்டார் பாடல் தலைப்பில் எழுத்துரு பொருந்தவில்லை. அதை சரி செய்து தகுந்த விளக்கம் தரவும்.

உதவிக்கு யாழ் இணையம் --ஸ்ரீதர் (பேசுக) 03:28, 21 நவம்பர் 2011 (UTC) ஆச்சு.--கலைமகன் பைரூஸ் 04:05, 21 நவம்பர் 2011 (UTC)Reply

எனது பயனர் பக்கத்தை சரி செய்ய உதவியதற்கு நன்றி !

தொகு

எனது பயனர் பக்கத்தில் உள்ள எழுத்துப்பிழைகளை எனக்கு உணர்த்தியதற்கு அளப்பரிய நன்றிகள்! தவறுகளை திருத்திவிட்டேன். பிழைகளுடன் எழுதியதற்கு வருந்துகிறேன். பிழைகளுக்கு காரணங்கள் இரண்டு: 1 . பள்ளிப்படிப்புக்குப் பிறகு கல்லூரியில் தமிழ் கற்க இயலாமல் போனது. 2 . படிக்கும் வழக்கமும் எழுதும் வழக்கமும் குறைந்து போனது. செய்த தவறுகளுக்கு தீர்வு காணும் எண்ணத்தில் தற்சமயம் தமிழ் விக்கிபீடியாவில் பணியை ஆரம்பித்துள்ளேன். உங்களின் ஆதரவு எப்போதும் தேவை. தயங்காது எனது பிழைகளை எனக்கு உணர்த்துங்கள். --Selvasivagurunathan mஉரையாடுக

எனது பயனர் பக்கத்தில் உள்ள எழுத்துப்பிழைகளை திருத்தியதற்கு நன்றி!

தொகு

சாக்கு பக்கத்தில் தாங்கள் எழுத்துப்பிழை திருத்தியதற்கும், பாய் பக்கத்தில் தாங்கள் திருத்தியமைத்தற்கும் நன்றி! தங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்! சரி பொதுவான குழப்பம் இரண்டு தொடர்ந்த மெய் எழுத்து எங்கு அமையலாம் எங்கு கூடாது? (உ-ம்) உற்ப்பத்தி, வாழ்த்துக்கள்,தொடர்ந்த

தயவு செய்து உணர்த்துங்கள்.--ஸ்ரீதர் (பேசுக)

ஸ்ரீதர், தமிழ் இலக்கணத்தில் மெய்ம்மயக்கம் என்றொரு வகையுண்டு. அதற்கேற்ப, ர்,ழ் தவிர்ந்த ஏனைய மெய்யெழுத்துக்கள் தம்மோடு தாம் மயங்கும். (மயங்கும் - கூடும்) க்,ச்,த்,ப் தவிர்ந்த ஏனைய மெய்யெழுத்துக்கள் பிறமெய்யெழுத்துக்களுடன் கூடும். க்,ச்,த்,ப் எனும் மெய்யெழுத்துக்கள் தம்மோடு தாம் மட்டுமே மயங்கும். இது ஒரு வகை. நீங்கள் கேட்டதற்கான விளக்கம் அடுத்து... ““உடனிலை மெய்ம்மயக்கம்““ எடுத்துக்காட்டு: க் - அக்கா (க், க்) ச் - அச்சம் (ச், ச்) ட் - பட்டம் (ட், ட்) த் - அத்தான் (த், த்) ப் - அப்பா (ப், ப்) ற் - பற்று (ற், ற்) ய் - பொய்யா (ய், ய்) ல் - பல்லி (ல், ல்) வ் - தெவ்வர் (வ், வ்) - பகைவர் ள் - பள்ளம் (ள், ள்) ங் - அங்ஙனம் (ங், ங்) ஞ் - அஞ்ஞானம் (ஞ், ஞ்) ண் - அண்ணம் (ண், ண்) ன் - மன்னன் (ன், ன்) ம் - அம்மா (ம், ம்) ன் - கன்னன் (ன், ன்)

““வேற்றுநிலை மெய்ம்மயக்கம்““ எடுத்துக்காட்டு: ண்ட் - வேண்டுகோள் (ண், ட்) போல......

அடுத்த வகை. புணர்ச்சி சார்ந்தது. சில சொற்கள் இயற்சொற்களாக இருக்கின்றன. அவற்றைப் பிரிக்கும்போது அவற்றின் அடிச்சொல் பொருளற்றதாய் மாறும் என்க. அவற்றைப் பட்டறிவின் மூலமே அறிந்துகொள்ளலாம்.

நீங்கள் மெய்யெழுத்து அல்லது ஒற்றெழுத்து மிகும் இடங்கள் பற்றியே கேட்டிருந்தீர்கள். ““சில மெய்களின் முன் வல்லின மெய்கள் புணர்தல்== நிலைமொழி (புணர்ச்சியில் முதற்சொல்) ஈற்றில் ய், ர், ழ் என்னும் மெய்யெழுத்துக்கள் நின்று, வருமொழி (புணர்ச்சியின் சேர்க்கும் சொல்) முதலெழுத்து வல்லின மெய்யாக வரின், அவ்வல்லின மெய்கள் மிகும். எடுத்துக்காட்டு: நாய் + தலை = நாய்த்தலை தேர் + கால் = தேர்க்கால் தாழ் + கோல் = தாழ்க்கோல் எனப் புணரும்.

சில சொற்களில் வல்லின இனத்துக்கு இனமாகிய மெல்லின எழுத்துக்கள் புணரும். எடுத்துக்காட்டு: வேய் + குழல் = வேய்ங்குழல் (ங் - க்) ஆர் + கோடு = ஆர்ங்கோடு (ங் - க்)

இனி உங்கள் இரு சொற்களுக்கும் வருவோம். உற்பத்தி = உற்பத்தியை இரு வேறு சொற்களாகப் பிரிக்கும்போது உல் - பத்தி எனப் பிரியும். அதன் பொருள் மயக்கமுறும். அது ஒரு சொல் மட்டுமே. புணரவில்லை. எனவே உற்பத்தியை உற்ப்பத்தி என எழுதுவது மிகத் தவறு. வாழ்த்துக்கள் = வாழ்த்து பன்மையாகும் போது கள் ஒட்டும். இது உ எனும் நிலைமொழியீற்று உயிர் எழுத்துக்கு முன் வல்லின மெய் வர, அவ்வல்லினம் இரட்டிக்கும் என்பதற்கொப்ப புணர்ந்துள்ளது. இது சரியானது.--கலைமகன் பைரூஸ் 04:27, 23 நவம்பர் 2011 (UTC)

:படிமம்:Martin wickramsinga Kalai.jpg இன் காப்புரிமை என்ன?

தொகு
 
Image Copyright problem

படிமம்:Martin wickramsinga Kalai.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். --சூர்யபிரகாசு உரையாடுக... 05:49, 4 திசம்பர் 2011 (UTC)Reply

கட்டுரை தலைப்பு

தொகு

தலைப்புகளில் “, ‘ போன்றவை இடுவது பொதுவாகத் தவிர்க்கப்படுகின்றன. உங்கள் கட்டுரை செலக் (அமைப்பு) என்ற தலைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 10:06, 14 திசம்பர் 2011 (UTC)Reply

உங்களுக்கு தெரியுமா அறிவிப்பு

தொகு




ஆங்கில விக்கியில்

தொகு

வணக்கம், ஆங்கில விக்கியில் notablilty மிக நுணுக்கமாகப் பார்ப்பார்கள். தேவையான மேற்கோள்கள் கொடுக்க வேண்டும். அவை உங்களைப் பற்றிய கட்டுரையில் குறைவாகவே உள்ளன. இதனால் என்னால் எழுத முடியாமல் உள்ளது. புரிந்தலுக்கு நன்றி.--Kanags \உரையாடுக 12:04, 7 ஏப்ரல் 2012 (UTC) நன்றி கனகு.--கலைமகன் பைரூஸ் (பேச்சு) 12:49, 7 ஏப்ரல் 2012 (UTC)

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், Kalaimahan fairooz!

 
நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--இரவி (பேச்சு) 12:09, 21 பெப்ரவரி 2013 (UTC)

நன்றி - இரவி -கலைமகன் பைரூஸ்

விக்கிப்பீடியர் சந்திப்பு ஏற்பாடுகள்

தொகு

கொழும்பில் வரும் ஏப்ரல் 27, 28 இல் நடைபெறும் தமிழ் ஆவண மாநாட்டில் பங்குபெற பல விக்கிப்பீடியர் வருவதாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தும்வகையில் விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை நடாத்துவது குறித்து சிந்தித்தோம். ஆலமரத்தடியில் இது குறித்த உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைப் பயனர்கள் இதனைப் பயன்படுத்தி சந்திப்பில் கலந்து கொள்ளுவதும் விக்கி குறித்த மேம்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி உரையாடுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கைப் பயனராகிய தங்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:50, 13 மார்ச் 2013 (UTC)

உதவி தேவை

தொகு

அண்மைய எனது பதிவேற்றமாகிய -ஈழக்கவி நவாஷ்- என்ற கட்டுரையை -ஈழக்கவி நவாஸ் என்று மாற்றிவிடுக. கலைமகன் பைரூஸ்

ஈழக்கவி நவாஸ்தொடர்பான ஆதாரங்களுக்காக வெளியிணைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன

தொகு

ஈழக்கவி நவாஸ் பற்றி ஆதாரங்கள் இணைக்குமாறு கோரப்பட்டுள்ளது. ஆதாரங்களுக்காக வெளியிணைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன. தயவு செய்து கவனத்திற்கொள்ளவும்.. கலைமகன் பைரூஸ்

உதவி தேவை

தொகு

எம்.ஏ. முகம்மது தொடர்புடைய கட்டுரைக்கு படம் உள்ளது. பதிவேற்றுவது எங்ஙனம்? கலைமகன் பைரூஸ்

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

தொகு
 
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:20, 14 சூலை 2015 (UTC)Reply

எனது கணக்கை மீட்டெடுத்துவிட்டேன்

தொகு

எனது கணக்கை மீட்டெடுத்துவிட்டேன். தயவுசெய்து, --கலைமகன் பைரூஸ்-- எனும் கணக்கை நீக்கிவிடவும்.

தயவுசெய்து கலைமகன் பைரூஸ் எனும் பக்கத்தில் உசாத்துணை என நூலக எண்: 1740 பக்கங்கள் 111-114 இனை இணைத்துவிடவும்.

தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1

தொகு

 


அறிவிப்பு

போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:59, 14 ஏப்ரல் 2017 (UTC)

தங்கள் மீள்வருகை சிறப்பாக அமையட்டும். வாழ்த்துகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:21, 15 ஏப்ரல் 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

தொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:12, 30 ஏப்ரல் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

தொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:11, 21 மே 2017 (UTC)Reply

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

தொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:59, 31 மே 2017 (UTC)Reply

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kalaimahan_fairooz&oldid=3184296" இலிருந்து மீள்விக்கப்பட்டது